Tuesday, January 30, 2007

லாக்கர் ரூம் அம்மணங்களும் பூணூல் விளக்கமும்


10 கிலோ மீட்டர் 20 கிலோ மீட்டர் என்று ஓடிக்கொண்டிருந்த காலங்கள் போய் சும்மா காரின் கண்ணாடிக் கதவின் வழியேயும்,கம்ப்யூட்டரின் திரை வழியேயும்,தொலைக்காட்சியின் செய்தி வழியேயும் மட்டுமே உலகத்தைப் பார்ப்பதாக ஆகிப்போன இந்த முட்டாள்தனமான வாழ்க்கைக்கு நண்பர் வழியே புது வழி பிறந்தது.அவர் ஒரு மாரத்தான் ரன்னர்.அவரது ஊக்கமும் பேச்சுக்களும் என்னை பழைய ட்ராகிற்கு கொண்டுவந்தது.

மதியம் 12 மணிப்போல் இருவரும் அலுவலகத்தில் உள்ள பிட்னஸ் சென்டரில் நுழைந்து விடுவோம்.பலதரப்பட்ட மக்கள் புது வருடத்தில் எடுத்த சில தீர்மானங்களுக்காகவும் பல உடலியியல் காரணங்களுக்காகவும் பல வித்தைகளை பிட்னஸ் சென்டரில் காட்டிக் கொண்டிருப்பார்கள்.எனக்கு ஓட்டம்தான் முக்கியம்.அதற்கு அடுத்து சைக்கிள் ஆனால் இரண்டையும் பிட்னஸ் சென்டரில் உள்ள மெசின்களில் செய்வது என்பது சுத்தமாகப்ப்டிக்காதது. அப்படியே தெருவில் இறங்கி இலக்கில்லாமல் ஓடுவதற்கு இணையான இன்பம் சும்மா டி.வி பார்த்துக் கொண்டு பிட்னஸ் சென்டரில் சைக்கிளை சவட்டிக் கொண்டு இருப்பதிலோ,பெல்ட்டின் மீது ஓடுவதிலோ வராது.


மழை,பனி,வெயில்,காற்று எல்லாக் காலங்களிலும் எல்லா சமயத்திலும் ஓடியுள்ளேன்.புதிதாக எந்த ஊர் சென்றாலும் அந்த ஊர் தெருக்களில், அதிகாலை வேளையில் ஓடினால் எப்படி இருக்கும்? எப்போது ஓட வாய்ப்புவரும்? என்றுதான் கணக்குப்போடுவேன்.டவுசரையும் சூவையும் போட்டுக்கொண்டு இயற்கையை பார்த்து இலக்கில்லாமல் ஒடுவதும் , அதிகாலை நேரங்களில் நகரங்களின் கட்டடங்களின் ஊடே காலை வேளையில் வேலை செய்யும் மக்களைப் பார்த்துக்கொண்டே ஓடுவதும் தனித்தனி அனுபவங்கள்.எனது நண்பர் 40 வயதைக் கடந்த அமெரிக்கர்.தீவிர கடவுள் (ஜீசஸ்) பற்றாளார்.சொல்லப்போனால் பழைய காலத்து அமெரிக்கர்.

எனது கொள்கைகளும் அவரது கொள்கைகளும் எதிர் எதிர் துருவங்கள் எனவே இந்தியா,இந்தியர்கள் என்று பல சுவராசியமான விவாதங்களுடன் தினமும் 3 மைல் ஓட்டம் நடந்து முடியும்.அலுவலகத்தில் ஆரம்பித்து மறுபடியும் அலுவலகத்தில் முடியுமாறு ஒரு 8 வழித்தடங்கள். அதில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு பாதையை தேர்ந்து எடுப்போம்.ஒரே பாதையில் ஒடினால் கொஞ்ச நாளில் அலுப்பு வந்துவிடும். தினமும் புதிய பாதையில் ஓடுவது புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

Unisex Restroom போல லாக்கர் ரூம்களில் எல்லாம் Unisex இன்னும் இல்லை. Unisex Restroom களிலும் பல பிரச்சனைகள் உண்டு(1). ஆனால் Unisex Restroom களில் கதவைப் பூட்டிக் கொள்வதால் பிரச்சனைகள் குறைவு. காரியம் முடித்து கதவைத் திறந்து வரும் போது ஒரு ஹலோ சொல்லிவிட்டுப் போய்விடலாம். Unisex லாக்கர் ரூம் என்பது ஒரு சிரமமான விசயம். உடை மாற்றுவது,குளிப்பது எல்லாமே திறந்த வெளியாய் இருப்பதால் நிறைய பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு(2).

எங்கள் பிட்னஸ் சென்டரிலும் ஆண்கள் பெண்கள் என்று தனித்தனி லாக்கர் ரூம்கள் இருக்கும்.உள்ளே நுழைந்தவுடன் நாங்கள் அலுவலக உடையில் இருந்து அரை டவுசருக்கு மாறி அன்றைய ஓட்டத்தை தொடங்குவோம். ஓட்டம் முடிந்து வந்தபின் அனைத்தும் களைந்து ஒரு சுகமான குளியல்.சமணச் சாமியர்களின் துறவு நிலையில் அனைவரும் உடல் மறந்து உலவிக் கொண்டிருக்கும் இடம் அது. இதில் எல்லாம் Unisex வந்தால் துறவு நிலை பாதிக்கப்படலாம்.

அது நியூஇயரின் முதலாவது வாரம். நாங்கள் இருவரும் பனிப் பொழிவினூடே 3 மைல்களை ஓடிக் கடந்துவிட்டு லாக்கர் ரூம் வந்தோம்.ஜனவரி 1ல் எடுத்த சபதங்களால் லாக்கர் ரூம் கறுப்பர்,வெள்ளையர்,ஆசியர்,சீனர் என்று பலதரப்பட்ட மக்களால் நிறைந்து இருந்தது.வழக்கமாக லாக்கர் ரூமில் தெரியும் பல நண்பர்களுடன் வேறு சில புது முகங்கள்.

ஓடி வந்த குளிருக்கு இதமாக சூடான நீரில் குளிக்க ,ஆடை களைந்து அலைந்து கொண்டிருந்த கூட்டதில் நானும் ஆடை களைந்து எந்த ஷவர் காலியாகும் என்று அம்மணமாய் காத்து இருந்தேன்.எனது நண்பரும் வேறு ஒரு ஷவர் அருகில் காத்து இருந்தார்.அப்போது அங்கே மற்ற ஒரு இந்தியர் வந்தார்.முதன் முதலாய் அவ்வளவு பெரிய அம்மணக்கூட்டத்தை பார்ப்பவர் போல் எதைப் பார்ப்பது எதை தவிர்ப்பது என்று குழம்பிப்போய் லாக்கர் ரூம் பெஞ்சில் அமர்ந்தார்.
லாக்கர் ரூமில் நான் பார்க்கும் முதலாவது இந்தியர் (என்னைத் தவிர்த்து).அவர் என்னை ஒரு புழுவைப் பார்ப்பதுபோல் பார்த்தாரா? அல்லது எனக்குத்தான் அப்படித் தோன்றியதா? தெரியாது. நான் பாட்டுக்கு "ஹாய்" என்று சொன்னேன். அவர் அதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.அதற்குள் ஒரு ஷவர் காலியாகிவிட்டது. நான் உள்ளே நுழந்துவிட்டேன்.

நான் குளித்து முடித்து வந்த போது அந்த நபர் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு உடை மாற்றிக் கொள்ள தயாராகிக் கொண்டு இருந்தார்.அவர் பேண்டில் இருந்து டவுசருக்கு மாறுகிறார்.துண்டு அவருக்கு பக்கபலமாக இருந்து உள்ளாடை வெளியில் தெரியாமல் உடை மாற்ற உதவியது.அந்த புதியவர் சில வாரங்கள் வந்து போனார்.
அவரால் எனக்குமுக்கியமான அடையாளப்படுத்தல் பிரச்சனை அவரின் பூணூல் வழியாக வந்தது . அவரின் பூணூலைக் கவனித்த என் அமெரிக்க நண்பர் என்னை பல நாட்களுக்கு பாடாய்ப் படுத்தி எடுத்தார். அவருக்கு என்னால் சரியான விளக்கம் சொல்ல முடியவில்லை.

ஒரு நாள் இவர் அந்த பூணூல் நண்பரிடம் பேசிக் கொண்டு இருந்தார்.என்ன பேசினாரோ தெரியாது. மறுநாள் ஓடும் போது என்னிடம் அவர் கேட்டது.

Are you from lower caste ?

என்ன சொல்வது. நான் மதங்களில் நம்பிக்கை இல்லாதவன் என்று அவருக்கு ஏற்கனவே தெரியும். இப்போது சாதியைப் பற்றிய கேள்வி.ஒரு வழியாக சாதி,பிராமணீயம்,கடவுள்,இந்து,ஆசாரி,குயவன்,பிரம்மா என்று எல்லாவற்றையும் கலந்து கட்டி "Poonuul in a Nutshell" ஆக கொடுத்தபிறகே விட்டார்.


(1)
http://www.sfgate.com/cgi-bin/article.cgi?file=/chronicle/archive/2006/04/09/INGNSGU2JB1.DTL

http://emerginghorizons.com/expert/question.php?id=60

(2)
http://www.americasdebate.com/forums/index.php?showtopic=5118

http://en.wikipedia.org/wiki/Gender-neutral_bathrooms




12 comments:

BadNewsIndia said...

கல்வெட்டு சார்,

சுந்தரவேலின்(?) ஒரு பதிவை ஞாபகப் படுத்துகிறது.

I sincerely hope you are not putting words into the white-mans mouth.

நான் உங்கள் நிலையில் இருந்திருந்தால், அந்த வெள்ளைக்கார நண்பரிடம் முழு விவரமும் கேட்டறிந்து, பூநூல் நபரை அழைத்து ஒரு சின்ன 'interview' செய்வேன்.

பூநூல் நபர் தன்னை 'உயர்' ஜாதியாக நினைத்துக் கொண்டு உங்களை மட்டம் தட்டியிருந்தால், அவர் நாணும் படி ரெண்டு கேள்வி கேட்டு, அவரை திருத்த முயற்சிக்கலாம். அவர் சந்ததியாவது ஒழுங்காய் வளர்க்க இது பயன்படும்.

திருந்துவது போல் தெரியவில்லை என்றால், தூ என்று துப்பிவிட்டு நடையை கட்டலாம்.

திருந்தட்டும் ஜென்மங்கள்!

Babble said...

காலம் மாறி போச்சு, எதுக்கெடுத்தாலும் பூணூல் ஆசாமிகளை பழிக்க வேண்டாம்னு நினைச்சா, இது மாதிரி ஏதாவது பண்ணிக்கிட்டே தான் இருக்காங்க. என் கூட வேல பார்க்கிற அமெரிக்கரிடம் இப்படித்தான் யாரோ சைவ உணவ சாப்பிடறவங்களை பத்தி சொல்லி வச்சிருந்தாங்க. என் கூட வேல பார்க்கிற இன்னோரு தமிழ் பிராமன அம்மணி டின்னர் போகும்போது ஒரு 6 - 7 முறையாவது கேட்டிருப்பாங்க நான் என்ன சாதின்னு (நானும் பதில் சொல்றத தவிர்த்துட்டேன்). இதனால என்ன சொல்ல/செய்ய வர்றாங்கன்னு புரிய மாட்டேங்குது.

G.Ragavan said...

வெளிநாடுகளில் இப்படிக் குளியலறைகள் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

பூணூல் இன் நட்ஷெல்...தலைப்பு நன்றாகத்தான் இருக்கிறது.

ஒருவேளை நான் வந்திருந்தால்...இந்த ஆள் நெற்றியில் என்ன வைத்திருக்கிறார் என்று உங்களைக் கேட்டிருப்பார். பிறகு நீங்கள் ஏன் வைக்கவில்லை என்று கேள்வி வரும். பிறகு நீங்கள் சந்தனப் பொட்டு இன் நட்ஷெல் என்று பாடம் எடுத்திருக்க வேண்டும். :-)

விடாதுகருப்பு said...

தங்களை தாழ்த்தப்பட்டவர் என்று சொன்ன அந்த பார்ப்பன மூதேவியை சும்மாவா விட்டீர்கள்? முகரையை உடைத்திருக்க வேண்டாமோ?

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

அய்ய்ய்... புதிய ப்ளாக்கருக்கு மாறிவிட்டீர்கள் போல,, நல்லது. வாழ்த்துக்கள்.
-----
எனக்கும் கூட நன்பர்கள் கூட்டத்துடன் அம்மணமாய் குளித்த அனுபவம் உண்டு! அதை விடுங்க..

அந்த அறிவுஜீவி அப்படி செய்தது தவறானதாக என்னால் ஏற்க முடியவில்லை. அவர்கள் இங்கேயே அப்படித்தான் அலையுறாங்க.. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று தான் ஏற்றுக்கொள்ள வேண்டியதிருக்கு.

அவனுங்க மட்டுமல்ல தலிவா, சாதியை தூக்கிக்கொண்டு அலையும் மற்றவர்களும் கூட, தங்களை விட அடுத்தவனை மோசமானவனாக நினைக்கும்/நடத்தும் கொடுமை நடந்து தான் வருகிறது.

அவர்களுக்கெதியாக நாம் நடத்தும் போராட்டம் உச்சத்திற்கு வரும் போது தான் இப்படியான விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

விடுங்க தலைவா..
இனி அவர்(கள்) பற்றி உங்கள் எல்லா பிற நாட்டு நண்பர்களிடம் நீங்கள் சொல்ல ஆரம்பியுங்கள். அவர்களின் வரலாறு வெளியாகும் போது தான் நம் தலை நிமிரமுடியும்.

நன்றி

தோழன்
பாலா

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

விடாதுகருப்பு,
அவர்(பூணூல் போட்டவர்) என்னை தாழ்த்தப்பட்டவர் என்று நேரிடையகச் சொல்லவில்லை.ஒரு வேலை பூணூல் போடுபவர்கள் எல்லாம் இந்தியாவில் உயர் சாதியினர் என்று சொல்லி இருக்கலாம்.அவரும் எனது அமெரிக்க நண்பரும் என்ன பேசினார்கள் என்பதை அருகில் இருந்து கவனித்து இருந்தால் என்னால் ஆன சில விளக்கங்களைக் கொடுத்து இருப்பேன்.நான் இல்லாத நேரத்தில் நடந்த பேச்சு இது.

பூணூல் போடுபவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் (பிறப்பால்) என்பதில் உடன்பாடு இல்லை.தான் சுய அறிவு பெற்ற பின்பும் பெற்றோர் கொடுத்த சாதி/மத அடையாளத்தை கேள்வியே கேட்காமல் தொங்கிக்கொண்டிருப்பதும் அடுத்தவனை பாவகாரனாக நினைப்பதுதான் பார்ப்பனீயம்.இது எல்லா மதங்களிலும் எல்லா நாடுகலில்லும் வேறு வேறு பெயர்களில் உள்ளது.

நான் அறிந்த வரையில் ஐயர்,அய்யங்கார்,ஆசாரி(விஷ்வகர்மா),குயவர் (வேளாளர் *வெள்ளாளர் அல்ல*) என்று பலர் இந்த பூணூலை அணிகிறார்கள்.இவர்கள் அனைவரும் ஒருவகையில் தான் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்னும் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

சாதி,மத அடையாளங்கள் ஒருவித குழுமனப்பான்மையின் வெளிப்பாடு.உலகம் உள்ளவரை இருக்கும். :-((


ராகவன்,

ஆம் வெளிநாடுகளில் பல நல்ல unisex விசயங்கள் உண்டு.பீச் அருகில் சில திறந்தவெளி குளிக்கும் இடங்கள் இருக்கும்.பீச்சில் சுற்றியபின் உடலில் உள்ள மண்ணைக்கழுவ ஆண்,பெண் அனைவரும் ஒரே இடத்தில் நின்று water hose மூலம் குளியல் நடத்துவார்கள்.

இந்தியா ஒரு ஆன்மீக நாடு. இந்துக்கள் புனிதர்கள்.பொட்டு,சந்தனம்,பூணூல்,சைவம் etc..உயர்ந்த பண்புகள் என்று பல ஜல்லிகள் உண்டு.

சந்தனமும் , குங்கும பொட்டும் ஒருவித வழிபாட்டு அடையாளங்கள்.பக்தர்கள் சைக்கிள்,கார்,பானை,அடுப்பு என்று சகட்டுமேனிக்கு எல்லா பொருட்களிலும் இந்த அடையாளம் இடுவார்கள். ஆனால் பூணூல் அப்படியல்ல.

அரைஞான்(அரணாக்கயிறு,அரணாக்குண்டிக் கயிறு) கயிற்றில்கூட சாதி உண்டு தெரியுமா?

Bable,
சாதி/மதம் என்பது மட்டுமே சிலருக்கு அடையாளம்.அவர்களால் அதைக் கடந்து தன்னை தானாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது.
பெயர் ஊரைச் சொன்னாலே என்ன சாதி என்று கணித்து விடுவார்கள் சிலர்.

BNI,
விடாதுகருப்புக்குச் சொன்ன பதில்தான்.
சாதி,மத அடையாளங்கள் ஒருவித குழுமனப்பான்மையின் வெளிப்பாடு.உலகம் உள்ளவரை இருக்கும். :-((

யெஸ்.பாலபாரதி,
என்னத்தைச் சொல்ல. நேரிடையாகக் கேட்டால் நீயும் போட்டுக்க ஒன்னை யாரு வேணாம்முன்னு சொன்னான்றானுக :-((

மழித்தல்,நீட்டல்,வெட்டல்,பூணூல்,தொப்பி என்று பல சாதி/மத அடையாளங்கள். இது எதுவுமே இல்லாமல் நாம் அலைந்தால் நம்மை ஏதாவது ஒரு கூட்டத்தில் வம்படியாக இணைத்தே பார்ப்பேன் என்று அடம் பிடிக்கிறார்கள்.

//அவனுங்க மட்டுமல்ல தலிவா, சாதியை தூக்கிக்கொண்டு அலையும் மற்றவர்களும் கூட, தங்களை விட அடுத்தவனை மோசமானவனாக நினைக்கும்/நடத்தும் கொடுமை நடந்து தான் வருகிறது.//

உண்மைதான். பார்ப்பனீயம் என்னும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் நமது சாபக் கேடு.நமது அடுத்த தலைமுறைக்கு நாம் அதைக் கொடுக்க வேண்டாம்.

G.Ragavan said...

// ராகவன்,

ஆம் வெளிநாடுகளில் பல நல்ல unisex விசயங்கள் உண்டு.பீச் அருகில் சில திறந்தவெளி குளிக்கும் இடங்கள் இருக்கும்.பீச்சில் சுற்றியபின் உடலில் உள்ள மண்ணைக்கழுவ ஆண்,பெண் அனைவரும் ஒரே இடத்தில் நின்று water hose மூலம் குளியல் நடத்துவார்கள். //

ஆனா ஒன்னு...அவங்க கூடக் குளிக்கிற பொண்ண உத்து உத்துப் பாக்க மாட்டாங்கன்னு நெனைக்கிறேன். நம்மூர்ல துணிய மூடி அனுப்புனாலும் பாக்குறாங்க. மூடாம பிரியா விட்டாலும் பாக்குறாங்க. அப்புறம் எதையாவது செஞ்சிட்டு மூடாம இருந்ததுன்னு பழியை வேற போடுவாங்க. படுபாவிப் பயலுக. நம்மூருக்கு இது சரி வராதுன்னு நெனைக்கிறேன். ஆனா நம்மாளுக வெளிநாட்டுக்குப் போனா செய்வாங்க.

// இந்தியா ஒரு ஆன்மீக நாடு. இந்துக்கள் புனிதர்கள்.பொட்டு,சந்தனம்,பூணூல்,சைவம் etc..உயர்ந்த பண்புகள் என்று பல ஜல்லிகள் உண்டு.//

பூசுவதும் உயர்ந்த பண்பும் பூசாமை தாழ்ந்த பண்பும்னு சொல்றது தவறுதான். நான் கோயிலுக்குப் போனா துன்னூரு, குங்குமம், சந்தனம்...எதெல்லாம் குடுக்குறாங்களோ..அதெல்லாம் பூசிக்கிறதுல எந்தக் கஷ்டமும் இல்லை. ஆனா தெனமும் கோயிலுக்குப் போறதில்லையே. ஆகையால கொஞ்சோல சங்கரங்கோயில் புத்துமண்ணக் கொழச்சி லேசா வெச்சிக்கிருவேன். இது இருந்தாத்தான் பக்தின்னு இல்லை. சின்ன வயசுப் பழக்கம். அது இல்லாம என்னோட மொகத்தப் பாக்க எனக்கே பிடிக்காது. அத்தோட கொஞ்சோல பக்தியும் கூட. அவ்வளவுதாங்க.

// சந்தனமும் , குங்கும பொட்டும் ஒருவித வழிபாட்டு அடையாளங்கள்.பக்தர்கள் சைக்கிள்,கார்,பானை,அடுப்பு என்று சகட்டுமேனிக்கு எல்லா பொருட்களிலும் இந்த அடையாளம் இடுவார்கள். ஆனால் பூணூல் அப்படியல்ல. //

உண்மை. பூணூல் அணிவது அவரவர் விருப்பம். ஆனால் அணியாதது சிறுமை என்று சொல்ல முடியாது. அவ்வளவுதான்.

// அரைஞான்(அரணாக்கயிறு,அரணாக்குண்டிக் கயிறு) கயிற்றில்கூட சாதி உண்டு தெரியுமா? //

என்னது? காத்துட்டு கருப்புக் கயித்துல சாதியா? அதென்னங்க அது? கருப்புக் கயிற வாங்கி இடுப்புல சுத்துறதுலயுமா சாதி?

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

//நம்மூர்ல துணிய மூடி அனுப்புனாலும் பாக்குறாங்க. மூடாம பிரியா விட்டாலும் பாக்குறாங்க. அப்புறம் எதையாவது செஞ்சிட்டு மூடாம இருந்ததுன்னு பழியை வேற போடுவாங்க. படுபாவிப் பயலுக. நம்மூருக்கு இது சரி வராதுன்னு நெனைக்கிறேன்.//

:-))))

//இது இருந்தாத்தான் பக்தின்னு இல்லை. சின்ன வயசுப் பழக்கம். அது இல்லாம என்னோட மொகத்தப் பாக்க எனக்கே பிடிக்காது. //

:-))

//உண்மை. பூணூல் அணிவது அவரவர் விருப்பம். ஆனால் அணியாதது சிறுமை என்று சொல்ல முடியாது. அவ்வளவுதான்.//

ராகவன்,
அடுத்தவனை புண்படுத்தாத,இழிவு செய்யாத,தாழ்மைப்படுத்தாத எந்த செயலும் தவறு இல்லை.என்ன விளக்கம் சொல்லும் போது எனது நம்பிக்கை என்று சொல்லவேண்டுமே தவிர இதைச் செய்யாதவன் ஒரு வேஸ்டு என்று சொல்லுதல் கூடாது.இங்கே நிறைய பிரச்சனையே என் மதம்/சாதிதான் பெரியது என்பதால்தான்.

எல்லாம் ஒன்றும் என்பவனாலும் எதுவும் இல்லை என்பவனாலும் சமூகத்திற்கு தீங்கு இல்லை அல்லது அப்படியே இருந்தாலும் குறைந்த அளவில் இருக்கும்.

//என்னது? காத்துட்டு கருப்புக் கயித்துல சாதியா? அதென்னங்க அது? கருப்புக் கயிற வாங்கி இடுப்புல சுத்துறதுலயுமா சாதி?//

:-))
சுத்துவதில் சாதி இல்லை. என்ன கலர் கயிறு எனபதில் மெலிதான சாதீய அடையாளங்கள் உண்டு.அரைஞான் கயிற்றில் சிகப்பும் உண்டு.

ராகவன் ஐயங்கார் said...

கல்வெட்டு,

பூணூல் போட்டதால் மட்டுமே ஒருவன் உயர்ந்த குடி என்று நினைப்பதும் அதனை மற்றவர்களிடம் பேசித்திரிவதும் வெட்கக் கேடான செயல். இதுபோன்ற மிருகங்களை இப்படியே விடக் கூடாது!

நக்கைப் பிடுங்கும்படி நான்கு கேள்விகள் கேட்டிருக்க வேண்டும் நீங்கள்!

பொன்ஸ்~~Poorna said...

//சுத்துவதில் சாதி இல்லை. என்ன கலர் கயிறு எனபதில் மெலிதான சாதீய அடையாளங்கள் உண்டு.//
இப்படி எல்லாம் வேற இருக்கா? கஷ்டம்! :(((

பீட்டா மாறினதில், பழையபடி முந்தைய பதிவுகள் போய்டிச்சு :) எடுத்து விட்டுருங்க.. ஆர்க்கைவோட விட்டுடுவோம்.. என்ன சொல்றீங்க?

Anonymous said...

அடடா, என்னிடமும் நம்ம தமிழ் மக்கள் "நீங்க veg-அ, Non-veg-அ" கேள்வி கேட்டிருக்கிறார்கள்.அதில் மேலும் விளக்கம் வேறு, நீங்க மட்டும் Veg-அ இல்லை Non-veg வீட்டில் சமைக்க மாட்டீங்களா?"(Unfortunately I stopped eating meat because of health reasons). I really asked them what is your problem...
seriously i don't know that they are going to do by knowing this.Really really irritating.By the way it happened here in US and not once or twice
..aadhi

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

பொன்ஸ்,
முந்தைய பதிவுக்கான இணைப்பை எடுத்தாச்சு :-)

ராகவன் ஐயங்கார் (??)
நாம் கேட்கும் கேள்விகளால் இவர்கள் மாறமாட்டார்கள்.

ஆதி (அனானி)
ஒரு சதாரண உணவுப்பழக்கம்.அதை ஆன்மிகம்/சாதியுடன் சேர்த்து இவர்கள் அடிக்கும் ஜல்லிகள் தாங்க முடியாது.