Sunday, February 11, 2007

தேன்கூடு திரட்டியின் சாகரன் (கல்யாண்) அவர்களுக்கு அஞசலி


குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.


சாகரன் யார் என்பதோ, இதுவரை எந்தவிதமான தொடர்போ அறிமுகங்களோ இல்லை.சமீபத்தில் படித்த செய்திகளில் இருந்து இவர்தான் தேன்கூட்டின் முயற்சியாளர் என்பதும் 29 வயதே உடைய இளைஞர் என்பதும் தெரிய வந்தது.

அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்ல.

இவரின் இழப்பு தமிழ் வலைப்பதிவு உலகத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது.

விடைபெறும் வேளையில் அன்பான வார்த்தைகளையே பேசுங்கள். ஒரு வேளை இதன்பிறகு நாம் இருவரும் வாழ்க்கையில் சந்திக்காமலேயே போய்விடக்கூடும். ---ஆழியூரான் வலைப்பதிவில் படித்தது.

10 comments:

  1. //விடைபெறும் வேளையில் அன்பான வார்த்தைகளையே பேசுங்கள். ஒரு வேளை இதன்பிறகு நாம் இருவரும் வாழ்க்கையில் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்//

    ஹ்ம்!

    ReplyDelete
  2. //விடைபெறும் வேளையில் அன்பான வார்த்தைகளையே பேசுங்கள். ஒரு வேளை இதன்பிறகு நாம் இருவரும் வாழ்க்கையில் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்//

    ஆழியூரான் தன் பதிவில் சொல்லி இருக்கிறார்.

    //அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்ல//

    உண்மை. :-(

    ReplyDelete
  3. // விடைபெறும் வேளையில் அன்பான வார்த்தைகளையே பேசுங்கள். ஒரு வேளை இதன்பிறகு நாம் இருவரும் வாழ்க்கையில் சந்திக்காமலேயே போய்விடக்கூடும். //

    மிக மிக சத்தியமான, உண்மையான வரிகள்.

    ReplyDelete
  4. பாலா, ஆழியூரான் பதிவு பற்றிய தகவலுக்கு நன்றி update செய்துவிட்டேன்.

    ReplyDelete
  5. சாகரன் தேன்கூடு திரட்டியை நிறுவியதன் மூலம் காட்டியது தமிழ்ப்பதிவர்கள் படைப்புக்கள் மூலம் சந்தித்துக் கொள்ள ஒரு தளம். சாகரனுக்கு தமிழ் மீதான அன்பின் அதீத வெளிப்பாடு தேன்கூடு.

    தமிழன்புடன் தன்னைப் பற்றிப் பலர் போற்றிப் பேசும்படி அவரது அன்பு தேன்கூடாக வெளிப்படுத்தி பிறர்க்கு உபயோகமாக இருந்து மறைந்திருக்கிறார்


    சாகரன் மறைவால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.

    முகம் அறியாமல் நான் தினம் பயன்படுத்தும் தேன்கூடு திரட்டியை துவக்கியவர்.

    சாகரன் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    சாகரனை இழந்து வாடும் அவர்க் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்களுடனான இரங்கல்களைத் தெரிவிக்கிறேன்.

    //விடைபெறும் வேளையில் அன்பான வார்த்தைகளையே பேசுங்கள். ஒரு வேளை இதன்பிறகு நாம் இருவரும் வாழ்க்கையில் சந்திக்காமலேயே போய்விடக்கூடும்//

    மிக மிக யோசிக்க வைக்க வைத்த வரிகள்.

    ReplyDelete
  6. எனக்கும் இதுவரை தேன்கூட்டின் அமைப்பாளர் இவர் என்று தெரியாது. தமிழ் பதிவுலகிற்கு அவர் ஆற்றியுள்ள பணி சொல்லிற்கடங்காது. இளவயதில் அவரைப் பறி கொடுத்த அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்!

    ReplyDelete
  7. ஆம், உண்மையில் சீரணிக்க இயலாததாக உள்ளது. சிறு வயது, அடக்கமாக தமிழுக்கு பங்களிப்பு.
    ஆச்சரியமாகவும் ஆழ்ந்த வருத்தத்தை தருவதாகவும் இருந்தது.

    அசுரன்

    ReplyDelete
  8. Hello!
    Very nice, tank you.
    Taste very of the INDIAN culture
    Tank you

    ReplyDelete
  9. தேன்கூட்டின் சுடரை தங்களுக்கு தர விழைந்து கேள்விகளை அளித்துள்ளேன்.

    ReplyDelete
  10. சாகரனுக்கான சுவிஸ் வானோலி அஞ்சலி இங்கே.....
    http://ajeevan.blogspot.com/
    or
    http://radio.ajeevan.com/

    ReplyDelete