Thursday, February 01, 2007

India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா ?

ந்தியாவின் முன்னேற்றம் என்பது வெறும் அந்நிய செலவாணி கையிறுப்பு அல்லது ஒரு குறிப்பிட்ட துறையின் முன்னேற்றம் அல்லது பங்குச் சந்தையில் பங்கு விற்கும் விலை என்ற அளவில்தான் பார்க்கப்படுகிறது.நான் பொருளாதார மேதை இல்லை.ஆனால் பொருளாதார மேதை இந்த நாட்டின் பிரதமராக இருக்கும் போது ஏன் விவசாயிகள் மாற்றாந்தாய் மனப்போக்கில் நடத்தப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.அரசாங்கம் எடுக்கும் எந்த முயற்சியும் Vidarbha பருத்தி விவசாயிகளை தற்கொலை முயற்சிகளில் இருந்து காப்பாற்றியதாகத் தெரியவில்லை.

11 farmers commit suicide in Vidarbha: NGO
Press Trust of IndiaNagpur, January 29, 2007
Eleven farmers have committed suicide in Vidarbha region of Maharasthra, an NGO working for farmers said Monday. The suicide cases were reported in the last two days from districts of Yavatmal, Washim (three each), Nagpur (two), Amaravati, Wardha and Chandrapur (one each), Vidarbha Jana Andolan Samiti President Kishore Tiwari said in a release in Nagpur. He said so far 62 farmers have committed suicide in the current month in the cotton-growing region in Eastern Maharasthra. Last year, about 1,050 farmers had committed suicide in Vidarbha which was visited by Prime Minister Manmohan Singh who announced a relief package for farmers reeling under bankruptcy and crop failure. The samiti has claimed the state government has paid compensation to 682 families of the deceased farmers.In addition to the Prime Minister's package, the state's Congress-NCP led government too had announced several relief measures for debt-ridden farmers but the spate of suicides continued.
http://www.hindustantimes.com/news/181_1914941,000900040001.htm


இந்த மாதத்தில் (ஜனவரி ,2007) மட்டும் 62 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள்.Google-ல் Vidarbha farmers என்று தேடினால் வரும் செய்திகள் மகிழ்ச்சிய்யூட்டுவதாக இல்லை.ஏன் இந்த நிலைமை? அரசாங்கம் ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் என்னதான் அரசாங்கம் செய்கிறதோ அது விதர்பா பருத்தி விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற முடியவில்லை எனபது மட்டும் நிச்சயம்.Bombay Stock Exchange இல் ஒரு சின்ன சத்தம் கேட்டால்கூட அன்று இரவே தொலைக்காட்சியில் தோன்றி புள்ளிவிபரங்கள் தரும் நிதி அமைச்சர் விதர்பா பற்றி ஏதும் சொன்னதாகத் தெரியவில்லை.


இந்தியா வளமான பாதையில் செல்கிறது என்று கூக்குரலிடும் கனவான்களின் கண்ணில் இந்த அவலங்கள் தெரிவது இல்லை.மக்களும் சில்ப்பா சிரித்தாளா ஐஸ்வர்யா ஆடினாளா என்ற உலகவிசயங்களிலேயே பெரும்பகுதி நேரத்தைச் செலவிடுவதால் இது போன்ற சில்லரை விசயங்கள் அவர்களுக்குப் பெரிதாகத்தெரிவது இல்லை.எங்கேயாவது மொத்தமாக ஒரு 100 பேர் செத்தால் அதற்காக கொஞ்சநேரம் வருத்தப்பட்டுவிட்டு அடுத்த நாள் வரும் அபிஷேக்-ஐஸ்வர்யா நிச்சயதார்த்த உடைகளின் தரத்தையும்,சாருக்கான் எவ்வாறு போட்டியாளரை குரோர்பதி ஆக்குகிறார் என்றும் விவாதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.



சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் இந்தியாவில் செல்போன் புழக்கத்தை நினைத்து பெருமிதம் கொண்டார்.அவரிடம் விதர்பா போன்ற சில்லரைச் சமாச்சாரங்களைச் சொன்ன போது, இந்தியாவில் பட்டினி/வறுமைச் சாவே கிடையாது என்று அடித்துச் சொன்னார்.விதர்பா பற்றியும் ,சில வருடங்களுக்கு முன்னால் தஞ்சையில் நடந்த எலிக்கறி சாப்பாடு பற்றிச் சொன்னால் அவர் அதற்கு முக்கியத்துவம் தராமல்,கிரிக்கட்டில் விளையாடும் வீரர்கள் நீளமான முடி வைப்பது நல்லதா கெட்டதா என்று விவாதத்தை ஆரம்பித்து விட்டார்.சராசரி மனிதனை சில குத்துப்பாட்டுகள்,சில்பா,ஷாருக்கான் என்ற அல்ப்பமான ரேஞ்சிலேயே ஊடகங்கள் வைத்து இருக்கிறது.விமானம் ஏறி பறந்து போய் கோக் (பெப்ஸி??)குடிப்பேன் என்று சொன்னவர்தான் இந்த கான்.மெத்தப்படித்த அறிவாளிகள்கூட விவசாயிக்கு மானியம் என்றால் நம்மை கேணையனாகப் பார்க்கும் போக்குதான் இங்கே உள்ளது.


இந்தியா இப்போது எப்படி உள்ளது?

2000 திற்குப்பின் நடந்த IT துறையின் வளர்ச்சியால் அதிகமான பணம் ஒரு பகுதி மக்களிடம் புழங்குகிறது.ஒரு குடும்பத்தில் ஒருவன் IT துறையில் இருந்துவிட்டாலே அவர்கள் ஒரு வருடத்தில் கார்,வீடு,கனவு என்று ஓரமாக ஒதுங்கிவிடுகிறார்கள்.தான் வாழும் இடத்தில் இருக்கும் நலிந்துபோன மக்களைப் பற்றிச் சிந்திப்பது பாவம் என்ற அளவில் அவர்கள் மாறிவிடுகிறார்கள்.இவர்களின் பணப்புழக்கத்துடன் போட்டி போட முடியாமல் சாமான்யன் மேலும் மேலும் கீழே போகிறான் அல்லது போட்டி போட முடியாமல் விரக்தியடைந்து விடுகிறான்.அரசாங்கமும் இதுதாண்டா வளர்ச்சி என்று இதன் பின்னாலேயே சுற்றுகிறது.இப்போதே சில நாடுகள் இந்தியாவைவிட குறைந்த விலையில் IT சேவைகளை வழங்கிவருகிறது.இலாபத்திற்காக தனது சொந்த நாட்டு மக்களின் வேலைகளுக்கே ஆப்பு வைத்த அமெரிக்கா ,அந்நியனான இந்தியனுக்கு தொடர்ந்து டாலரைக் கொட்டாது.ஒரு நாள் இந்த IT புயல் வேறு நாடுகளில் கரையேறும்.அப்போது இந்தியா பெரும் நெருக்கடியைச் சந்திக்கலாம்.கொஞ்சம் விவராமாகப் பார்க்கலாம்.




இந்தியா சுதந்திரம் வாங்கிவத்ற்கு முன்னாள் அல்லது சுதந்திரப் போராட்ட காலங்களில் "வக்கீல்" படிப்பு என்பதும் , பாரிஸ்டர் என்பதும்தான் அந்த தலைமுறைக்கு கனவாக இருந்தது.ஊரில் உள்ள பணக்காரன் ,செல்வாக்கு படைத்தவன் எல்லாம் ஜமீனாகவோ அல்லது வக்கீலாகவோ இருப்பார்கள்.
சுதந்திரத்திற்குப்பின்னால் வந்த கட்டுமானத் தொழில்கள் மற்றும் இயந்திரவியல் துறைகள் இந்த "பாரிஸ்டர்" பட்டாளங்களை முழுங்கி டாக்டர் , என்ஜினீயர் என்று அடுத்த கட்டதிற்கு சென்றுவிட்டது.டாகடர் அல்லது என்ஜினியர் ஆவதே அல்லது ஆக்குவதே குறிக்கோளாக இருந்த தலைமுறை அப்படியே IT க்கு டாப்கியரில் மாறிவிட்டது.இப்போது டாக்டர்களுக்கு மரியாதையே இல்லாமல் போய்விட்டது.

எனது உறவினர் ஒருவரின் பெண்ணுக்கு டாக்டர் மாப்பிள்ளை வந்தும் வேணாம் அமெரிக்க IT மாப்பிள்ளைதான் வேண்டும் என்று ஒத்தக்காலில் நின்றுகொண்டுள்ளார்.மருத்துவத்துறையிலும் இப்போது அவுட்சோர்ஸிங் ஆரம்பித்துவிட்டது.கிட்னி வியாபாரம் எல்லாம் கன ஜோராக நடப்பதும் அந்த வியபாரத்தில் புளங்கும் இலட்சக்கணக்கான பணமும் கிட்னி தாண்டி,கர்ப்பப்பை வாடகை என்ற அளவில் சென்றுள்ளது. இன்னும் பல கோரங்களையும் சந்திக்கும்.




இன்னும் 10-15 ஆண்டுகளில் இந்த IT வியபாரம் படுத்துவிடும்.சாதாரண மக்களும் சட்னியில் இருந்து கிட்னிவரை விற்றுவிட்டு பரதேசிகளாயிருப்பர்.வாங்கிய கடனைக் கட்டமுடியாமல் அதுவரை iPOD உடன் ஆட்டம் போட்ட கூட்டம் அடுத்து வேறு என்ன செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பிக்கும். ஒரு வேளை தாய்லாந்து ரேஞ்சில் செக்ஸ் அவுட்சோர்ஸிங் நடந்தாலும் ஆச்சரியப்படவேண்டாம்.

ஏற்கனவே அதிக AIDS கணக்கு கொண்ட நாம் செய்து கொண்டிருப்பதை ISO சர்ட்டிவிகேட்டுடன் சுத்தபத்தாமகச் செய்ய வேண்டும்.டாலராக வந்தால் காந்தி பிறந்த மண்ணிலேயே அதுவும் BJP ஆட்சியில் இருக்கும் போதே SEZ இல் சாராயம் விற்க அனுமதிக்கப்பட இருக்கிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம் டாலருக்காக.பாலியல் தொழில்கூட SEZ க்களில் சட்டபூர்வமாக அனுமதிக்கப்படலாம். பாலியல் தொழில் சட்டபூர்வமாக ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்படுவது நல்லதே. ஆனால் SEZ க்களுக்காகவே இவர்கள் செய்தால் அதன் நோக்கம் டாலர் அன்றி வேறு என்ன? இதுதான் முன்னேற்றப்பாதையா?

Adobe India வின் CEO வின் மகன் கடத்தப்பட்டபோது துரிதமாகச் செயல்பட்ட காவல்துறை அதே பகுதியில் அப்பாவி ஏழைகள் கொடுத்த பல புகார்களை பல நாட்களாக ,மாதங்களாக கிடப்பில் போட்டதால் தான் இப்போது பிணக்குவியல்கள்.ஏழைக்கு ஒரு நீதியும் பணக்காரனுக்கு ஒரு நீதியும், பணம் செல்வாக்கைப் பொறுத்து உயிர்கள் விலை பேசப்படுவதும் மனித குலத்திற்கு புதியதல்ல. ஆனால் இந்தியாவில் அது மட்டுமேதான் நடக்கிறது. அதுதான் கொடுமை.

நிச்சயம் இந்த IT என்ற bubble ம் ஒரு நாள் உடையும். அப்போது வேறு ஏதாவது ஒன்று வந்து நம்மை ஆளும். அது இதைவிடக் கொடுமையாய் இருந்துவிடக்கூடாது என்பதுதான் எனது பயம்.என்ன கிடைக்கிறதோ அதை வைத்து காலத்தை ஓட்டுவோம் என்று சராசரி மனிதன் யோசிக்கலாம். அரசாங்கமும் அப்படி இருந்தால் எப்படி?இப்படியே இருந்தால் எப்படி இந்தியா முன்னேறும்? நாட்டுக்கு என்ன தேவை என்பதில் அரசுக்கு தெளிவான பார்வை இருக்க வேண்டும்.

ஏற்கனவே வளர்ந்த நாடுகள் இப்போது நமக்கு அள்ளி இறைக்கும் காசுக்காக என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்ற நிலையை எடுத்தால் நாளை அவர்கள் மின்சாரம் அவுட்சோர்ஸ் செய்து 100 அணு உலைகளை இங்கே அரம்பித்து நமக்கு வேலை வாய்ப்புத் தருவார்கள். போனஸாக இங்கேயே அந்தக் அணுக்கழிவையும் புதைப்பார்கள். அல்லது சிங்கப்பூரில் இடப்பற்றாக்குறை நாங்கள் SEZ -இல் கொஞ்சப்பேரை குடிவைத்துக் கொள்கிறோம் என்று நாட்டையே அவுட்சோர்ஸிங் செய்வார்கள் நாமும் டாலருக்காக இடத்தை வாடகைக்கு விடலாம்.





அரசு அடிப்படைக் கல்வி,அடிப்படைச் சுகாதாரம்,அடிப்படைக் கட்டமைப்பு என்று திட்டமிடல் வேண்டும்.நான் படிக்கும் போது பள்ளியில் பரந்து விரிந்த விளையாட்டு மைதானங்கள் இருக்கும்.அதுவும் புட்பால்,ஹாக்கி,வாலிபால் என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு பெரிய தனி மைதானம் இருக்கும். இப்போது ?? அபார்ட்மெண்டில்தான் பள்ளிகள் நடக்கிறது சென்னை,பெங்களூர் போன்ற இடங்களில்.

மக்களும் சம்பாதிக்கும் நோக்குடனேயே இருக்கின்றனர்.எத்தனை பெற்றோர்கள் தனது குழந்தையை ஒரு நல்ல குடிமகனாக வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.யோகா படித்தவனும் சாமி கும்பிடுபவனும் இன்னும் ரோட்டில்தான் ஒண்ணுக்குப் போகிறான்.

படித்த பரதேசிகள் IT ல் வேலை பார்ததாலும் கேண்டீனிலோ அல்லது இரயிலிலோ வரிசையில் நிற்பது கிடையாது.அடிப்படை ஒழுக்கம் இல்லாத ஒரு சமுதாயம் என்னதான் படித்தாலும் ,என்னதான் பதவியில் இருந்தாலும் முன்னேறவே முடியாது.நாய்க்கு டை கட்டி விடுவதால் அது மாறிவிடாது (நாய் சார் ப்ளீஸ் மன்னிக்க) அது டை கட்டிய நாயாகவேதான் காலம் முழுவதும் இருக்கும்.சாத்தான்குளத்தாரின் பதிவில் வெளிநாட்டுவாழ் மக்கள் கொண்டாடிய பொங்கல் விழா நாம் திருந்தமாட்டோம் என்பதற்குச் சான்று.

மனிதனின் உடலில் தொப்பை மட்டுமே வளர்வதுபோல் ஒரு சமுதாயத்தின் ஒரு பகுதி மட்டுமே வளர்ந்து அனைத்து வளங்களையும் நுகரத்துடிப்பது மனித குலத்திற்கு நல்லதல்ல.

நண்பர்களே முதலில் உங்கள் குழந்தைகளுக்கு குப்பையை எங்கே, ஏன் போட வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுங்கள்.Community service என்ற நல்ல செயலை குழந்தைப்பருவத்திலேயே ஊட்டி வளர்க்க வேண்டும்.வரிசையில் நிற்க கற்றுக் கொடுங்கள். நீங்கள் உதாரணமாய் இருங்கள்.ஒரு நாளில் அல்லது ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் சில மணி நேரத்தை உங்கள் தெரு மேம்பாட்டுக்காக செலவழித்து சுத்தமாக வைத்து இருங்கள்.எங்கே சென்றாலும் வரிசையில் நிற்கப் பாருங்கள். மாற்றம் ஒரு நாளில் வந்துவிடாது.


iPOD,PIZZA,Jeans,Dating,Car,Sex இவைகள்தான் மேற்கிந்திய கலாச்சாரம் என்று எவன் சொல்லிக்கொடுத்தானோ இப்போதுள்ள இளைஞர்களுக்கு சமுதாயப் பார்வையே இல்லாமல் போய்விட்டது.சுனாமி போது காசு கொடுப்பதோடு கடமை முடிந்து விட்டதாக நினைத்துக் கொண்டு எருமை மாடாகிப் போய் விட்டார்கள். ஆற்றின் போக்கிலேயே ஐலசா போட்டுக்கொண்டு எந்த இலக்கும் இல்லாமல் ஜல்லியடித்துக்கொண்டு வாழ்வது எளிது.எதிர் நீச்சல் சிரமம்.அதுவும் எதற்கெடுத்தாலும் பொதுச்சொத்தை சேதமாக்கும் நம் சக ஜனங்களுடனும், அரசியல் கட்சிகளுடனும் கும்மியடிப்பது முடியாத காரியம். தாங்க முடியலப்பா ரொம்ப வலிக்குது. என்ன செய்வது ...இருந்தாலும் முயற்சியாவது செய்தோம் என்ற மன நிறைவையாவது அது தரும்.











--வேதனையுடனும் பல குழப்பங்களுடனும் தீர்வை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க நினைக்கும் சக இந்தியன்.


*******************


Planning Commission's Vidarbha report
http://planningcommission.nic.in/reports/genrep/rep_vidarbha.pdf

You can now booze in SEZs
http://timesofindia.indiatimes.com/articleshow/996289.cms

Common Problem in india??
http://indiarising.wordpress.com/2006/03/02/common-problem-in-india

நாரயணமூர்த்தி மன்மோகன்சிங் புனிதர்களா?
http://kalvetu.blogspot.com/2006/10/blog-post_09.html

Shift The Goalpost Obsession with GDP can cost India, China dear
http://timesofindia.indiatimes.com/articleshow/msid-2046411,curpg-1.cms

சாத்தான் குளத்தாரின் ஒரு விழாவும் ஒரு கேள்வியும்.
http://asifmeeran.blogspot.com/2007/01/blog-post_27.html

செல்வனின் ஹிந்து ஹ்ருதய சாம்ராட்
http://holyox.blogspot.com/2007/01/234.html

ஸ்டேஷன் பெஞ்ச் ராம்கியின் - கிராமத்தை மறைக்குது உல்லாச உலகம்!
http://stationbench.blogspot.com/2007/01/blog-post_29.html

அசுரனின்..

இழிச்சவாயர்களும், இந்திய விவசாயமும்
http://poar-parai.blogspot.com/2006/06/blog-post_115157825727252631.html

விவசாயியும், SEZயும், அடிவருடிகளும்
http://poar-parai.blogspot.com/2006/10/sez.html

கேடு கெட்ட இந்தியா... யானை கட்டியா போரடித்தோம்?
http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_14.html

அன்பான தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களே!
http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_14.html







15 comments:

  1. :(

    வேறெதும் சொல்லத் தெரியவில்லை :(

    ReplyDelete
  2. //படித்த பரதேசிகள் IT ல் வேலை பார்ததாலும் கேண்டீனிலோ அல்லது இரயிலிலோ வரிசையில் நிற்பது கிடையாது.அடிப்படை ஒழுக்கம் இல்லாத ஒரு சமுதாயம் என்னதான் படித்தாலும் ,என்னதான் பதவியில் இருந்தாலும் முன்னேறவே முடியாது.நாய்க்கு டை கட்டி விடுவதால் அது மாறிவிடாது (நாய் சார் ப்ளீஸ் மன்னிக்க) அது டை கட்டிய நாயாகவேதான் காலம் முழுவதும் இருக்கும்.//

    I completely agree with you.

    ReplyDelete
  3. அருமையான பதிவு.

    சுலப வாழ்க்கை வாழ என்ன வேண்டுமானாலும் செய்வதும் (லஞ்சம், கயமை, மெத்தனம்), வரிசையில் நிற்காமல் முட்டி மோதி வருவதும், ஊரை அசுத்தம் பண்ணுவதும், நம் இரத்தத்திலே ஊறிடுச்சு சார்.

    முதுகுல ஒண்ணு சுளீர்னு ஒவ்வொரு தப்புக்கும் போட்டாதான் திருந்துவோம் (உங்க முதுகுல நானும், என் முதுகுல நீங்களும்).

    நீங்கள் சொல்வது போல், நம் வருங்கால சந்ததியை ஒழுங்கா வளர்க்க முயற்ச்சி செய்ய வேண்டும். நாம் ஒழுங்கா இருக்கவும் விடாமுயற்ச்சி செய்யவேண்டும்.

    IT வளர்ச்சி தொப்பை மாதிரி ஒரு பக்க வளர்ச்சி தான். நம் நாராயண மூர்த்திகள், ப்ரேம்ஜீக்கள், தொப்பையை வளர்த்துவிட்டு அப்படியே நின்று விடாமல், ஒரு நிலையான வளர்ச்சியை உருவாக்க பாடு படணும்.
    உதாரணத்துக்கு, நம் engineersஇன் ஆள் பலத்தைக் கொண்டு out-sourcingல் சம்பாதிப்பது போல், நல்ல திடமான PRODUCTS உருவாக்கி வருங்கால வருமானத்துக்கும் வித்திடணும்.

    China, Argentina ஆளுங்கெல்லாம் படிச்சு ரெடி ஆயாச்சுன்னா, பெங்களூரும், சென்னையும், ஹைதராபாத்தும் கசந்துடும் தொரைக்கு. China காரன் நம்மள out-sourcingல தூக்கி போட்டு சாப்பிடும் நாள் இன்னும் 10 வருஷத்துல வந்துடும்.

    அரசாங்கம், ITயால் ஏற்படும் நல்ல முன்னேற்றத்தை பயன் படுத்தி, மற்ற துறையில் இருப்பவரை முன்னேற்ற திட்டங்கள் வகுக்க வேண்டும். முக்கியமா விவசாயத்தை மேலே தூக்கி விடணும்.

    ஜப்பான்ல, Hitachi, Sony, Panasonic போன்ற தொழில்துறை நிறுவனங்கள் வளர்ந்த மாதிரி, agricultureம் சேர்ந்தே வளர்ந்தது. நல்ல திட்டங்கள் தான் காரணம்.

    சிங்கப்பூரில், IT கிடையாது, விவசாயம் கிடையாது, வேறு பெரிய தொழிலும் கிடையாது. இருக்கும் ஒரு துரைமுகத்தை வைத்துக் கொண்டு அவர்கள் வளர்ந்த விதம் உலகுக்கே நல்ல பாடம்.

    தனி மனிதன் ஒவ்வொருவனும், வருங்காலத்தை மனதில் கொண்டு, ஒழுக்கமான திட்டமிட்ட வாழ்வை வாழ முடிவு செய்யவேண்டும்.

    அரசாங்கத்தை நல்லவைகளை செய்யத் தூண்டும் குரல் எழுப்ப இந்த மாதிரி பல பல பதிவுகள் வர வேண்டும்.

    Well Written!

    ReplyDelete
  4. இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, கல்வெட்டாக எல்லா SEZ முன்னாலும் வைக்கலாமா?....அட்லிஸ்ட், மெயிலில் எலோருக்கும் அனுப்பலாம் என தோன்றுகிறது...

    ReplyDelete
  5. சன் டி.வி, ஜெயா டி.வி - இந்த ரெண்டு டி.வி பாத்துதான், நம்ம ஊர்ல 90% ஆளுங்க அவங்க 90% 'முழித்துக்' கொண்டிருக்கும் நேரத்தை செலவு செய்றாங்க.

    ரெண்டும், மஹா மட்டமான நிகழ்ச்சிகளை 24 மணி நேரமும் போட்டு மக்களை முட்டாளாவே வச்சிருக்கு.

    ஜெயா செய்தில தினமும் சொல்றான் "அம்மா ஆட்சிதாங்க சூப்பர். தி.மு.க ஆட்சில இலவச அரிசி கொடுக்கறேன்னு கொடுத்தாங்க. புழு பூச்சி நாறுதுங்க. கருணாநிதி இத சாப்டுவாராங்க"

    சன் டிவில காட்ரான் "ஜெயலலிதா ஆட்சியில் கொடுத்த டெண்டரில் முறைகேடு. கலைஞர் blah blah blah". இது தவிர இல்லத்தரசிகள் பகல்ல பாக்க டடடாங் னு ஒரே இரைச்சலுடன், இவன் குடும்பத்த அவன் கெடுக்கறது, அவன இவன் கெடுக்கரதுன்னு கதை அம்சம் உள்ள சீரியல் சிங்காரிகள்.

    ரெண்டையும் பாத்து பாத்து brain-wash ஆகிப் போயிருக்கான் நம்மவன்.

    யார் காப்பாத்துவா?

    மன வேதனையுடன்,
    BNI

    ReplyDelete
  6. பொன்ஸ்,
    என்ன செய்வது காலத்தின் கொடுமை.எங்கே போகிறோம் என்பதே தெரியாமல் பெரிய கூட்டம் போய்க்கொண்டு இருக்கிறது.

    ******

    உதயகுமார்,
    படித்த அதுவும் பங்களா,கார் வைத்துள்ள பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தினமும் அந்தப் பள்ளியின் பஸ்ஸில் அனுப்புவார்கள்.எப்படி பஸ் வந்தவுடன் ஓடிப்போய் கர்ச்சீப்,துண்டி,டிபன் பாக்ஸை பஸ்சுக்குள் தூக்கி எறிந்து பிள்ளைகளுக்காக இடம் போடுவார்கள்.பஸ்ஸில் அனைத்து குழந்தைகளுக்கும் இடம் இருக்கும்.வரிசையில் நின்று ஏறச்சொல்லி குழந்தகளுக்கு கற்றுக் கொடுங்கள் என்றால் கேட்க ய்யரும் இல்லை. மொத்தம் 20 பெற்றோர்கள்தான். இவர்களை இதுவரை மாற்ற முடியவில்லை.கோவில்,குளம்,பக்தி,எல்லாம் இருந்து என்ன செய்ய அடிப்படை அறிவு இவர்களுக்கும் இல்லை. இவர்கள் அடுத்த தலைமுறையையும் அப்படியே வளர்க்கிறார்கள். :-((

    ******

    BNI,
    20 ஆண்டுகளில் நாம் நிச்சயம் மாறலாம். எப்படி?
    இன்றிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் நல்ல வகையில் அவர்களின் பெற்றோர்கள் வளர்ததால்.
    காசு மட்டுமே குறியாகிப்போன வாழ்க்கையில் நல்ல பண்புகள் கற்றுக் கொடுக்கப்படுவது இல்லை. :-(((

    எல்லா ஊடகங்களும் அரசியல் தலைகளும் இப்படியே :-((

    ******

    அனானி (Friday, February 02, 2007 1:04:00 AM)
    தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.மேலும் இது மாதிரி பல கட்டுரைகள் ஆங்கிலத்தில் ஏற்கனவே இருக்கலாம்.பலர் புலம்பியிருக்கக்கூடும்.ஆனால் இது போன்ற கருத்துக்களை எந்த பெரிய ஊடகமும் பிரசுரிக்காது.அவர்களுக்குத்தேவை ஜிகினாச் செய்திகளே.

    ReplyDelete
  7. Very nice blog..However i see a biased approach here.

    //யோகா படித்தவனும் சாமி கும்பிடுபவனும் இன்னும் ரோட்டில்தான் ஒண்ணுக்குப் போகிறான்//

    Even "Pagutharivu Sirpigalum", "Communist Thozhargalum" do the same thing.

    Otherwise I fully agree with your thoughts

    ReplyDelete
  8. It is a BLASTING arcticle with load of TRUTH. NICE article.

    ReplyDelete
  9. அற்புதமான பதிவு. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
    ஆனாலும், இதில் ஒரு positive இருக்கிறது. IT என்பது வராமல் இருந்த்திருந்தால், இப்பொழுது உள்ள மேல் நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் வறுமைக்கோட்டிற்க்கோ அல்லது அதற்கும் கீழேயோ சென்றிருப்பர். ITக்கு டாக்டர், இஞ்சினியர் படிப்புகளுக்கு வேண்டிய அறிவோ, நியாபத்திறனோ தேவையில்லை. தாங்கள் சொல்வது போல் சுலபமாக வந்தது, இன்னும் 10 - 15 வருடங்களில் காணாமல் போய்விடும்.

    ReplyDelete
  10. //இந்தியாவின் முன்னேற்றம் என்பது வெறும் அந்நிய செலவாணி கையிறுப்பு அல்லது ஒரு குறிப்பிட்ட துறையின் முன்னேற்றம் அல்லது பங்குச் சந்தையில் பங்கு விற்கும் விலை என்ற அளவில்தான் பார்க்கப்படுகிறது.நான் பொருளாதார மேதை இல்லை.ஆனால் பொருளாதார மேதை இந்த நாட்டின் பிரதமராக இருக்கும் போது ஏன் விவசாயிகள் மாற்றாந்தாய் மனப்போக்கில் நடத்தப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.அரசாங்கம் எடுக்கும் எந்த முயற்சியும் Vidarbha பருத்தி விவசாயிகளை தற்கொலை முயற்சிகளில் இருந்து காப்பாற்றியதாகத் தெரியவில்லை.
    ///

    ///.Bombay Stock Exchange இல் ஒரு சின்ன சத்தம் கேட்டால்கூட அன்று இரவே தொலைக்காட்சியில் தோன்றி புள்ளிவிபரங்கள் தரும் நிதி அமைச்சர் விதர்பா பற்றி ஏதும் சொன்னதாகத் தெரியவில்லை.
    ///

    ///2000 திற்குப்பின் நடந்த IT துறையின் வளர்ச்சியால் அதிகமான பணம் ஒரு பகுதி மக்களிடம் புழங்குகிறது.ஒரு குடும்பத்தில் ஒருவன் IT துறையில் இருந்துவிட்டாலே அவர்கள் ஒரு வருடத்தில் கார்,வீடு,கனவு என்று ஓரமாக ஒதுங்கிவிடுகிறார்கள்.தான் வாழும் இடத்தில் இருக்கும் நலிந்துபோன மக்களைப் பற்றிச் சிந்திப்பது பாவம் என்ற அளவில் அவர்கள் மாறிவிடுகிறார்கள்.இவர்களின் பணப்புழக்கத்துடன் போட்டி போட முடியாமல் சாமான்யன் மேலும் மேலும் கீழே போகிறான் அல்லது போட்டி போட முடியாமல் விரக்தியடைந்து விடுகிறான்.அரசாங்கமும் இதுதாண்டா வளர்ச்சி என்று இதன் பின்னாலேயே சுற்றுகிறது.இப்போதே சில நாடுகள் இந்தியாவைவிட குறைந்த விலையில் IT சேவைகளை வழங்கிவருகிறது.இலாபத்திற்காக தனது சொந்த நாட்டு மக்களின் வேலைகளுக்கே ஆப்பு வைத்த அமெரிக்கா ,அந்நியனான இந்தியனுக்கு தொடர்ந்து டாலரைக் கொட்டாது.ஒரு நாள் இந்த IT புயல் வேறு நாடுகளில் கரையேறும்.அப்போது இந்தியா பெரும் நெருக்கடியைச் சந்திக்கலாம்.கொஞ்சம் விவராமாகப் பார்க்கலாம்.
    ///


    ////
    ஏற்கனவே வளர்ந்த நாடுகள் இப்போது நமக்கு அள்ளி இறைக்கும் காசுக்காக என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்ற நிலையை எடுத்தால் நாளை அவர்கள் மின்சாரம் அவுட்சோர்ஸ் செய்து 100 அணு உலைகளை இங்கே அரம்பித்து நமக்கு வேலை வாய்ப்புத் தருவார்கள். போனஸாக இங்கேயே அந்தக் அணுக்கழிவையும் புதைப்பார்கள். அல்லது சிங்கப்பூரில் இடப்பற்றாக்குறை நாங்கள் SEZ -இல் கொஞ்சப்பேரை குடிவைத்துக் கொள்கிறோம் என்று நாட்டையே அவுட்சோர்ஸிங் செய்வார்கள் நாமும் டாலருக்காக இடத்தை வாடகைக்கு விடலாம்////


    ////மனிதனின் உடலில் தொப்பை மட்டுமே வளர்வதுபோல் ஒரு சமுதாயத்தின் ஒரு பகுதி மட்டுமே வளர்ந்து அனைத்து வளங்களையும் நுகரத்துடிப்பது மனித குலத்திற்கு நல்லதல்ல.///

    I don't know How I missed this Post....

    Please let me know whenever you publish articles on Problems of India.

    This is very very good one. I don't need your permission to forward this to everybody. :-))

    One reservation in your article is about 'Common Disceplene'.

    You forgot that India is still Half feudalist country. Thus India is not a Democratic country. So the kind of Mental attitude will not be of Discipleaned one.

    If you like to disceplene the whole mass you should democratise them. That could be done by revolution against feudal setup.

    This could be achieved by the following,
    land to tillers, right to decide price on Agri Products, Co-operative Farming method with hifi Tech and Full utilisation of Human resources, And centralised planning of Agriculture for whole India.

    Apart from this - the error in analysing Socio Economic Charater- Yur article has left a Strong dent in the readers mind about India Deprived..

    Good Job.....

    I personally invite yuo to Tamil Makhal Ishai Vizha.... Please visit my Page to know more about this....

    Asuran

    ReplyDelete
  11. //மனிதனின் உடலில் தொப்பை மட்டுமே வளர்வதுபோல் ஒரு சமுதாயத்தின் ஒரு பகுதி மட்டுமே வளர்ந்து அனைத்து வளங்களையும் நுகரத்துடிப்பது மனித குலத்திற்கு நல்லதல்ல.
    //

    இன்றைய நிலையினை உணர்த்தும் தங்கள் படி பதிவு அமைந்து உள்ளது.


    நன்பர் rajavanaj அவர்களின் பதிவில் சில....
    "மறுகாலனியாதிக்கம் - மயக்கத்தில் மக்கள் "

    எதிரி யாரென்றும் தெரிந்து விட்டது. துரோகிகள் வேஷமும் கலைந்து விட்டது.. ஆனால் இன்னும் உங்களில் சிலர் மட்டும் உறக்கத்தில், நுகர்வுக் கலாச்சார களிவெறியாட்டத்தில் திளைத்துக் கிடக்கிறீர்கள். நம் தலைக்கு மேல் வெள்ளமல்ல ஒரு கடலே நகர்ந்து போய்க் கொண்டிருக்கிறது.

    http://vanajaraj.blogspot.com/2006/11/blog-post_26.html

    ReplyDelete
  12. //மனிதனின் உடலில் தொப்பை மட்டுமே வளர்வதுபோல் ஒரு சமுதாயத்தின் ஒரு பகுதி மட்டுமே வளர்ந்து அனைத்து வளங்களையும் நுகரத்துடிப்பது மனித குலத்திற்கு நல்லதல்ல.//

    Excellent Post!! நன்றி கல்வெட்டு.

    எனக்கும் இதே சிந்தனை தான்.. களித்து காசை கறியாக்கும் கூட்டம் ஒரு பக்கம்.. அன்றாடம் காய்ச்சிகளும், இந்த பணக்காரர்களோடு போட்டியிட முடியாத மனிதர்கள் மறுபக்கமும்...

    எல்லோரும் பொருளாதார ரீதியாக சமமாக..எப்போது மாறுவோம் என்று தினம் தினம் என் மனதில் கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கிறது..... என்று நடக்குமோ..???

    ReplyDelete
  13. அருமையான பதிவு. ஐடி தலைமுறையினர் பாக்கெட்டில் பணம் நிரம்பினால் போதும், அத்தனையும் வசப்படும். வாழ்க்கை இனிக்கும்; வசந்தம் மலரும்; அத்தனை பேரும் வாலாட்டி நிற்பார்கள் என்ற எண்ணத்தில் மேம்போக்காக வாழ்ந்து வருகிறார்கள். எளிமையான வாழ்க்கை என்பது அவர்களைப் பொறுத்த வரை வறுமையான வாழ்க்கை என்று எண்ணுகிறார்கள்.

    மேம்போக்கான எண்ணத்தில் வாழும் இவர்கள் எளிதாக ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்பது தான் உண்மை. தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்களிடம் சுமூக உறவுமுறை இருப்பதில்லை; சமூகத்துடன் கலந்துரையாடும் தன்மையும், பெரியவர்களை மதிக்கும் தன்மையும் குறைந்து வருகின்றன. இவர்கள் மிகுந்த பய உணர்வுடன் வாழ்வை நடத்தி வருகிறார்கள் என்பது தான் உண்மை.

    பெண்களை தொலைக்காட்சிகளும், மாணவர்களை திரைப்படங்களும், படித்த பரதேசிகளை பிஜ்ஜா கார்னர்களும் கட்டி போட்டு வருகிறது.

    கொஞ்சம் ஆழ்ந்து சிந்திப்பவர்கள் தான் மனம் தளராமல் இவர்களின் தூக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக கலைக்க வேண்டும்.

    ReplyDelete
  14. //எனது உறவினர் ஒருவரின் பெண்ணுக்கு டாக்டர் மாப்பிள்ளை வந்தும் வேணாம் அமெரிக்க IT மாப்பிள்ளைதான் வேண்டும் என்று ஒத்தக்காலில் நின்றுகொண்டுள்ளார்//

    அமெரிக்க -வில் சம்பாதித்து அமெரிக்க -விலேயே குசு போடுபவனைதான் பெண்கள் கூட விரும்புகிறார்கள்......



    //தான் வாழும் இடத்தில் இருக்கும் நலிந்துபோன மக்களைப் பற்றிச் சிந்திப்பது பாவம் என்ற அளவில் அவர்கள் மாறிவிடுகிறார்கள்//

    1cr வைதிருப்பவன் 10% வது சமூக நலனுக்கு செலவிட முன்வர வேண்டும் ....அதே போல் 10 ரூபாவை வைதிருபவனும் 1 ரூபாய் சமூக நலனுக்கு செலவிட முன்வர வேண்டும் ............
    ஏழை என்று சொல்லி கொள்ளும் மனிதர்களும் ...பணம் சம்பாதிக்க கற்று கொண்டால் IT பயல்கள் போல தான் வாழ்வார்கள் ........

    //நாய்க்கு டை கட்டி விடுவதால் அது மாறிவிடாது (நாய் சார் ப்ளீஸ் மன்னிக்க) அது டை கட்டிய நாயாகவேதான் காலம் முழுவதும் இருக்கும்.//

    எல்லா பயலுகளும் ஒரே மாதிரி தான் இருகறாணுக ....... விவசாய நாயும் IT நாயும் ஒரே மாதிரி தான் இருகராணுக ........ டை தான் different ...

    ReplyDelete