Wednesday, May 09, 2007

குழந்தை வளர்ப்பு என்னும் Cheap and Un-Attractive job


ரண்டு பேர் வேலை பார்க்கும் இன்றைய நவநாகரீக குடும்பத்தில் இருந்து எதை out source செய்யாலாம் என்று கணவன் மனைவி உட்காந்து யோசிச்சாலோ அல்லது ரூம் போட்டு யோசிச்சாலோ இன்ஸ்டன்ட் ஆக வரும் பதில் "குழந்தை வளர்ப்பு". யாரவது " ஏன் இவர்களுக்கு அப்பா ,அம்மா இல்லையா? தாத்தா பாட்டயிடம் குழந்தையை விட வேண்டியதுதானே ? " என்று கேட்டால் நீங்கள் இன்னும் கற்காலத்தில் வாழ்கிறீகள் என்று அர்ததம்.

தாத்தா பாட்டி பராமரிப்பு (??) (ஆம் வீடு கார் போல இவர்களும் ஜடம்தான். ஜடப் பொருளை பராமரிக்காமல் என்ன செய்வார்கள்?) என்ற வேலையை ஏற்கனவே காப்பகங்களுக்கு out source செய்தாகி விட்டது.மிச்சம் இருப்பது குழந்தை வளர்ப்பு மட்டுமே.இதனையும் out source செய்துவிட்டால் கார்ப்பொரேட் லேடரில் வேகமாக ஏறிவிடலாம்.

அமெரிக்காவில் வாழும் மிகவும் விவரமான சில குடும்பங்கள் இப்போது ஒரு நல்ல பார்முலாவைப் பின் பற்றுகிறார்கள்.வாய்ப்பு இருந்தால் வெளிநாட்டில் வாழும் வரைக்கும் குழந்தையை இந்தியாவில் பாட்டி வீட்டில் விடுவது.ஏன் என்றால் வெளிநாட்டில் babay sitting என்பது காஸ்ட்லி. எனவே பிள்ளையை இந்தியாவில் தாத்தா,பாட்டி வீடுகளுக்கு out source ஆக அனுப்புவது ரொம்ப நல்லது.பிள்ளைகள் அது பாட்டுக்கு குறைந்த செலவில் வளர்ந்து வரும்.அவ்வப்போது டெலிபோனில் கொஞ்சிக் கொள்ளலாம்.


பச்சை அட்டை,குடியுரிமை எல்லாம் வாங்கியபின்னால்,ஒரு வேளை இந்தியா வந்தால் கூட,குழந்தை வளர்ப்பு போன்ற பிக்கல் பிடுங்கல் இல்லாமல், பாட்டிகளால் வளர்க்கப்பட்டு இப்போது வளர்ந்துவிட்ட "potty trained and portable" குழந்தைகளுடன் வாழலாம். அல்லது குழந்தைகள் நன்றாக வளர்ந்தவுடன் அழைத்துக் கொள்ளலாம்.

இந்தியாவிலேயே இருப்பவர்கள் ,இந்தியாவில் இப்போது கொட்டிக் கொடுக்கும் அதிகச் சம்பள வேலையை விட்டுவிட்டு, வீட்டில் இருந்து பிள்ளையை வளர்க்க யாரும் விரும்புவார்களா என்ன? வீட்டில் இருக்க வேண்டும் என்றால் யாராவது ஒருவர் வேலையைவிட வேண்டும் அல்லது குழந்தை வளர்ப்புக்கும் நேரம் அமையும் வகையில் வேறு வேலை தேட வேண்டும்.இதையெல்லாம் செய்வதற்கு இவர்கள் என்ன பைத்தியங்களா?

மாதம் சில ஆயிரம் கொடுத்தால் ஒரு வேலைக்காரப் பெண்களைப் பிடித்து விடலாம்.எல்லா வேலையையும் செய்ய சில ஆயிரம்தான் சம்பளமா என்று யாராவது துடுக்குத்தனமாக இங்கே பேசப்படாது.எனக்குத் தெரிந்து சில குடும்பங்களில் 3 வேலைக்காரிகள் உள்ளார்கள். ஒருவர் துடைத்தல்,கழுவல் வேலைகளுக்கு. இரண்டாமவர் சமையலுக்கு.மூன்றாமவர் பிள்ளை வளர்க்கும் தொழிலுக்கு.மூன்றாமவர் மட்டும் வீட்டிலேயே தங்கி இருப்பவர்.

இன்னும் இந்த மாதிரி ஹை-புரபைல் தம்பதிகளின் sex மட்டும் out source ஆக வில்லை.அதுவும் ரொம்பப்பேர் அதற்கெல்லாம் நேரம் இல்லை என்று சொல்லி விடுகிறார்கள்.இப்படி எல்லாம் வாழ்ந்து இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்? அப்படீன்னு கேட்குறீங்களா? அதெல்லாம் ரொம்ப சிம்பிள் ஜென்டில்மேன். ஒரு வீடு,ஒரு கார்,அதிகச் சம்பளம்தரும் வேலை அப்புறம் செல்போன்,iPOD,லொட்டு லொசுக்கு ..இப்படி பட்டியல் நீளும்.இதை யெல்லாம் அடைந்து விட்டால் அப்புறம் வாழ்க்கை வந்துவிடுமா என்ன? அதெப்படி வரும்? பணம் இருந்தால் வாழ்க்கை வந்துவிடும் என்று இருந்தால் அப்புறம் வாழும் கலை சிரி.சிரி.சிரி ரவிசங்கர பாபா என்ன பண்ணுவார்? அவருக்கும் பிஜினஸ் போனியாக வேண்டாமா?

யாருப்பா அது குப்பத்துல இருந்து கொரல் கொடுக்குரது? நீயெல்லாம் வாழவே லாயக்கு கிடையாது. உன்ன மாதிரி ஆளுக்கெல்லாம் சிரி.சிரி ரவிசங்கரர் வந்து வாழும் கலையை சொல்லிக் கொடுக்கமாட்டார். அவரின் இலக்கே பிஜினஸ்மேன் அப்புறம் நல்லா சம்பாரிச்சு சம்பாரிச்சு சம்பாரிச்சே பணம் மட்டுமெ சேர்த்த இந்த மாதிரி நடுத்தரவர்க்க லூசுகள்தான்.நீ போடும் பிச்சைக்காசு உண்டியலுக்கு பகவான் திருப்பதியே அருள் கொடுக்க மாட்டார்.அப்புறம் சிரி.சிரி ரவிசங்கர பாபா எப்படி பாடம் எடுப்பார்? போ அப்பாலா.நீ வாழும் சேரிக்கு வந்து வாழும் கலையை சிரி.சிரி ரவிசங்கர பாபா சொல்லித்தரவே மாட்டார். வாழவே இலாயக்கில்லாத உன் போன்ற ஜந்துகளுக்கு இவர் வந்து பாடம் நடத்த இவர் என்ன களஞ்சியம் சின்னப்புள்ளையா? போ அப்பால.

முன்னயெல்லாம் புருசனும் பொஞ்சாதியும் எங்கவாது ஊருக்கு கிளம்பினால் பஸ்,இரயில் என்று ஏதாவது ஒன்னை பிடிக்க காத்திருக்கும் நேரத்தில அன்பாக கொஞ்சிக் கொள்ளாவிட்டாலும் ஊர்ப்பொரணி,உலகப்பொரணி பேசுவாங்க.அல்லது குறைந்த பட்சம் சண்டையாவது போடுவாங்க. ஏன் பெரியவனுக்கு இந்த சட்டை போட்ட. உன்னோட ஆததா இவன் பொறந்தப்ப எடுத்த இந்த பீத்த சட்டையை இப்ப மூணு வயசாகியும் போடனும்னு என்ன வேண்டுதலா....என்ற ரீதியில் ஏதேனும் ஒரு சண்டை போடலாம்.

இந்த நவ நாகரீக உலகத்தில் இப்ப எல்லாம் ரெண்டுபேரும் பக்கத்துல பக்கத்துல இருந்தாலும் ஆளுக்கொரு போனில் யாரவது ப்ரொஜக்ட் மேனஜரிடமோ அல்லது வேற்றுக்கிரக நண்பர்களிடமோ பேசிக்கொண்டு இருப்பார்கள்.இந்த வள்ளலில் இவர்கள் எப்படி குழந்தையை வளர்ப்பார்கள்? இந்தியாவில் குறைந்த செலவில் வேலையாட்கள் கிடைப்பதால் பெரும்பாலோனோரின் வாழ்க்கையை அவ்ர்களின் வேலையாட்கள்தான் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள். பணம் சம்பாதிப்பது மட்டுமே தம்பதிகள்.குழந்தையை குளிப்பாட்டுவது முதல் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துவந்து தூங்க வைப்பதுவரை வேலையாட்கள்தான்.குழந்தை வளர்ப்பில் மட்டுமல்ல கடைக்குச் சென்று பால் வாங்குவது போன்ற வேலைகளுக்கும் ஆள்தான்.

எல்லாம் சரி வாழ்தல் என்றால் என்ன ?

நுகர்வு மயமாகிப் போன வாழ்க்கையில் வாங்கிக் குவிப்பதே (சம்பளம் உட்பட) வாழ்க்கையின் குறிக்கோளாகப் போய்விட்டது.

சாப்பாட்டை மட்டும் நான் என் கையில் சாப்பிடுவேன் ஆனால் ஆசனவாயைத் துடைக்க வேலையாள் வைத்துக் கொள்வேன் என்று இருக்கமுடியுமா? அப்படித்தான் வாழ்கிறார்கள் பெரும்பாலனவர்கள்.

வாழ்வது என்பது அனைத்திலும் பங்கேற்பதுதான்.

(தொடரும்.....)


imageQE5.JPG Courtesy
http://www.cafcc.org/imageQE5.JPG





4 comments:

  1. வெறும் புலம்பலாகவே படுகிறது. மாறிவரும் சூழலை புரிந்துகொள்ளாத பத்தாம்பசலி பதிவு. இப்படி காரணம் காட்டிதான் பெண்களை வீட்டிற்குள் பூட்டிவைத்திருந்தார்கள். வேலையாட்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் என்ன தவறு? ஒருபக்கம் ஏழை ஏழையாகவே இருக்கிறான் என்று புழம்பல் வேறு. இதன் மூலம் மூன்று வேலைகள் உருவாக்கப்பட்டதை ஏன் நீங்கள் அறியவில்லை? ஏதோ முதலாளித்துவத்தை எதிர்க்க வேண்டும் என்ற முனைப்பும், சராசரி பாமர மக்களின் "The rich are bad" என்ற மனோபாவமுமே உங்கள் பதிவுகளில் தெரிகிறது!

    யு.எஸ்.தமிழன்

    ReplyDelete
  2. Thanks for sharing nice post. i like that post

    ReplyDelete
  3. wow great and well post. i am also looking such as blog . i like that post

    ReplyDelete