பெட்ரோல், டீசல்..எந்த விலை உயர்வாக இருந்தாலும் அதன் பயனாளிகளே ஏற்க வேண்டும். அனைவருக்கும் கும்ஸாக Petrol Cess என்று போடுவது என்ன பொருளாதார சிந்தனையோ?
வாகனம் வைத்து இருக்கும் CEO முதல், லாரி முட்ல கார் வரை வைத்து இருக்கும் வெல்ல மண்டி அண்ணாச்சி வரை அவர்கள் பயன்படுத்தும் பெட்ரோல் , டீசல் பொருட்களுக்குத் தேவையான நியாய விலையைக் கொடுக்க வேண்டும். பினாமியில் ட்ராவல்ஸ் நடத்தும் அண்ணாச்சியும், பல கார்களில் பவனிவரும் புண்ணாக்கு அரசியல்வாதிகளும் வரியே கட்டுவதில்லையாதலால் , இந்த வெங்காயங்கள் பயன்படுத்தும் பெட்ரோலுக்கு சம்பளம் வாங்கும் அனைத்துப் பன்னாடைகளும் வரி அழுக வேண்டுமா?
ஏறேகனவே 2% Education Cess என்று வாங்கி என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. நெல்லைப் பகுதியில் படிக்க தினமும் ஆற்றில் நீந்தி வருகிறார்கள் குழந்தைகள். அவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு பள்ளி அமைக்க யாருக்கும் துப்பில்லை. இதில் இன்னும் ஒரு Cess ஆ??
உலக அறிவாளி பெட்ரோல் துரை (Murli Deora ) அய்யா Cess பத்தி பேச ஆரம்பிச்சுட்டார், சூப்பர் மூளை சிதம்பரம் அய்யா என்ன சொல்றாருன்னு பாப்போம்.
Cess or surcharge on I-T to bail out oil cos
http://finance.indiainfo.com/2008/05/27/0805271156_ld_petrol_chng_slug.html
'Govt mulling oil cess on income tax'
http://timesofindia.indiatimes.com/Business/India_Business/Govt_mulling_oil_cess_on_income_tax_/articleshow/3075924.cms
Govt levies 2% education cess
http://www.rediff.com/money/2004/jul/08bud19.htm
பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும் -ஜெயசங்கர்
http://wethepeopleindia.blogspot.com/2006/06/blog-post_03.html
Education Cess and Petrol Cess - where’s the money going?
http://nitawriter.wordpress.com/2008/05/13/education-cess-and-petrol-cess-where-is-the-money-going
**
இந்தியாவின் பெருமைகளில் ஒன்று காமதேசமாக அது அறியப்படுவது. அதாவது காமசூத்திரம் பிறந்த நாடு. இதில் தான் இன்னும் ஜட்டி போடலாமா வேணாமான்னு ஆராய்ந்து கொண்டுள்ளார்கள். ஏற்கனவே ஒரு பொம்பிளை தொட்டுவிட்டதால் பேஜாராகிப்போன கடவுள், இப்போது இருக்கும் ஆண்களும் ஜட்டி போட்டால் மேலும் பேஜாராகிப் போவார்.
கடவுளுக்கு வந்த பணத்தையும், நகை, வைர வகையாறாக்களையும் எந்த பேமானியாது தூக்கிட்டுப்போனால் (1)அதை கடவுள் கண்டுபிடிக்க வேண்டும் அல்லது (2)பிரசன்னம் பார்த்து, பொம்பிளை அய்யப்பனை தொட்டத்தைக் கண்டுபிடிக்கும் மலையாள மாந்த்ரீகர்கள், எவன் எந்த ஜட்டிக்குள் எவ்வளவு லவட்டினான் என்று பிரசன்னத்தின் மூலம் சொல்ல வேண்டும். (3) எதுவுமே முடியலையா, எல்லாம் அவன் செயல், அவன் அன்றி ஒரு ஜட்டியும் பணம் எடுக்காது என்று விட்டுவிட வேண்டும்.
ஜட்டி போடாமல்தான் பணம் எண்ண வேண்டும், சட்டை போடாமல்தான் மணியாட்ட வேண்டும், யோனியில் இரத்தம் வராத நாளில்தான் பெண்கள் வர வேண்டும் என்று இன்னமும் எத்தனை சட்டங்கள் உள்ளதோ?
மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?
http://kalvetu.blogspot.com/2006/07/blog-post.html
Yes, you can keep your underwear dear- Lord Lapakku
http://news.bbc.co.uk/2/hi/south_asia/7415430.stm
http://www.telegraphindia.com/1080522/jsp/nation/story_9303205.jsp
http://www.reuters.com/article/oddlyEnoughNews/idUSPAT35410920080523

4 comments:
"பினாமியில் ட்ராவல்ஸ் நடத்தும் அண்ணாச்சியும், பல கார்களில் பவனிவரும் புண்ணாக்கு அரசியல்வாதிகளும் வரியே கட்டுவதில்லையாதலால் , இந்த வெங்காயங்கள் பயன்படுத்தும் பெட்ரோலுக்கு சம்பளம் வாங்கும் அனைத்துப் பன்னாடைகளும் வரி அழுக வேண்டுமா?"
கல்வெட்டு சிற்பியே,
தங்கள் கருத்துக்கள் யாவும் ஆணி அடித்தாற்போல் உள்ளன.
ஆனால் வர்த்தைகளைதேர்வு செய்யும் போது சற்று கவனமாக இருந்தால் நன்றாக இருக்கும்.
"பினாமியில் ட்ராவல்ஸ் நடத்தும் பன்னாடை அண்ணாச்சியும், பல கார்களில் பவனிவரும் புண்ணாக்கு அரசியல்வாதிகளும் வரியே கட்டுவதில்லையாதலால் , இந்த வெங்காயங்கள் பயன்படுத்தும் பெட்ரோலுக்கு சம்பளம் வாங்கும் அனைத்து அப்பாவிகளும் வரி அழுக வேண்டுமா?" என்று எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் .
Anbezhilan,
நானும் சம்பளம் வாங்கும் அந்த பன்னாடைகளில் ஒருவன். ஒன்றுமே செய்ய முடியாமல் சொரணையற்று இருக்கும் சமுதாயம் இந்த சம்பள சமுதாயம்தான். என்ன செய்வது, கோவத்தில் என்னையே நான் திட்டிக் கொண்டேன். மற்றபடி யாரையும் குறித்தான தனிப்பட்ட ஒன்று அல்ல.
சம்பளம் வாங்கறவன் மட்டும் தான் ஒழுங்கா வரி கட்டறாங்க. வேற யாருக்கும் அத பத்தி யோசனை கிடையவே கிடையாது.
Hi
Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond. Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com
Post a Comment