Tuesday, March 17, 2020

SARS-CoV-2 கரோனா வைரசு & COVID-19 நோய் FAQ1

SARS-CoV-2  கரோனா வைரசு  & COVID-19 நோய் FAQ

பக்கவாட்டுக்குறிப்பு
நான் மருத்துவனோ அல்லது மருத்துவம்சார் ஆராய்ச்சியாளனோ இல்லை. அறிவியல் ஆர்வளன் அவ்வளவே. மதம்,ஆன்மீகம், சனாத வேதம், மாட்டு மூத்திரம், சோசியம், சித்தா, ஆயுர்வேதம் என்ற புண்ணாக்குகளை புனிதம் என்று கட்டி அழும் அதே சமுதாயத்தில் இருந்து வந்தவன் என்பதால், அந்த சமுதாயத்தின் கேடுகளை அறிந்தவன். எனது ஆர்வத்தாலும் பலரின் உதவியாலும் அறிவியல் என்னை தத்தெடுத்துக்கொண்டது. இன்று அறிவியலே எனது வயிற்றுக்கும் என் மூளைக்கும் தீனி போடுகிறது. அதனால், நான் அறிந்த தகவல்களை முடிந்தளவு இங்கே தமிழில் பகிர்கிறேன். 

எனது பாட்டன் வள்ளுவன் சொன்னது போல, உங்களின் அறிவுக்கு உகந்ததை ஆராய்ந்து ஏற்கவும். எது சரியன்று ஆராய உங்களுக்கு ஏற்கனவே சில தகவல்கள் இருக்கவேண்டும் அப்போதுதான் நான் சொல்வதி ஒப்பிட்டு சரி பார்க்க முடியும். அப்படி இல்லை என்றால், நான் சொன்ன பிறகாவது நீங்களாக மேலும் தேடி சரிபார்த்து சரியான பாதையை நீங்களாகவே அறியவும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு


(1) கரோனா வைரசு என்றால் என்ன?
கரோனாவைரசுகள் என்பவை பாலூட்டிகளிலும்(mammals), பறவைகளிலும்(birds) இருக்கும் ஒரு வைரசு குடும்பத்தைக் குறிக்கும் பொதுவான பெயர். இவை பாலூட்டிகளிலும், பறவைகளிலும் இருந்தாலும், அதனால் அந்தப் பறவைகளுக்கோ , விலங்குகளுக்கோ அவ்வளவாக பாதிப்பு உண்டாவது இல்லை. இந்த வைரசுகள் மனிதனுக்கு பர‌வும்போது, மனித இனம் அதை எதிர்கொள்ள முடியாமல் சிக்கலுக்கு உள்ளாகிறது.
நமக்கு அடிக்கடி வரும் common cold (சளி,தும்மல்) நோயை உண்டாக்குவதும் ஒரு வைரசுதான். பெரும்பாலும், அது ரிகினோ (rhinovirus)வைரசாக ஆக இருக்கும். இங்கு rhis என்பது கிரேக்கத்தில் மூக்கு எனப்படும். எனவே வைரசு என்பது நம்முடைய பங்காளிபோல. வந்து சண்டை போட்டுக்கொண்டே இருக்கும். நம் உடம்பில் குடியிருந்து நம்மை அழிக்கவும் செய்யும்.
கரோனா (Corona)
Latin corōna (“garland, crown”)Ancient Greek κορώνη (korṓnē, “garland, wreath”)இதன் பொருள் கிரீடம் /முடி (முடி தரிந்த வேந்தன்) என்பதாகும்.
வைரசு (virus)
வைரசு என்பதும் லத்தீன் சொல்தான். அதன் பொருள் நஞ்சு. நச்சுத்தன்மையுடையது. நோயை உண்டாக்கும் பொருள்

(2) கரோனா வைரசு (Corona Virus). இந்த குறிப்பிட்ட வைரசு குடும்பத்திற்கு ஏன் கரோனாவைரசு என்று பெயர் வைத்தார்கள்?
இந்த வைரசை நுண்ணோக்கியில் பார்த்தால், அது solar corona போல சுற்றிலும் crown-like ring of gasses இருப்பது போலவே இருக்கும். சுற்றிலும் கிரீடம்போன்ற ஒன்று நீட்டிக்கொண்டு இருப்பதால் இந்த வைரசு குடும்பத்திற்கு பெயர் கரோனாவைரசு.

(3) COVID-19  என்று சொல்வதா அல்லது Corona Virus என்று சொல்வதா?
COVID-19 என்பது நோய்.இந்த நோயை ஏற்படுத்துவது SARS-CoV-2 என்ற கரோனா வைரசு (Corona Virus)
(4) இந்த நோய்க்கு எப்படி COVID-19 என்று பெயர் வைத்தார்கள்? ஏன்?
COVID-19 =  CO-rona-VI-rus D-isease first detected 2019
எப்படி நாம் புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களுக்கு பெயர் வைத்து, அதை சரியான முறையில் அடையாளப்படுத்தவும், அது குறித்த செய்திகளை மக்களுக்கு சேர்க்கவும் செய்கிறோமோ அது போலவே, இப்படியான நோய் பேரிடர்களுக்கும் பெயர் வைத்து அடையாளப்படுத்துவது அவசியமாகிது.
(5) இதற்குமுன் வந்த கரோனா வைரசுகளுக்கு என்ன பெயர் வைத்தார்கள்?
மனிதர்களிடம் பரவிய Corona Virus கள் இதுவரை ஏழு.

  1. Human Corona Virus 229E (HCoV-229E)
  2. Human Corona Virus OC43 (HCoV-OC43)
  3. Severe Acute Respiratory Syndrome CoronaVirus (SARS-CoV)
  4. Human CoronaVirus NL63 (HCoV-NL63, New Haven coronavirus)
  5. Human CoronaVirus HKU1
  6. Middle East Respiratory Syndrome-related CoronaVirus (MERS-CoV) (aka novel Coronavirus 2012 and HCoV-EMC)
  7. Severe Acute Respiratory Syndrome CoronaVirus 2 (SARS-CoV-2) (aka 2019-nCoV or "novel coronavirus 2019")
(6) COVID-19 இதற்கு தடுப்பு மருந்து அல்லது குணப்படுத்தும் மருந்து உள்ளதா?
இல்லை. இன்றுவரை இல்லை.
(7) பூண்டு இஞ்சி மஞ்சள் கடுக்காய் போன்ற பாட்டி வைத்திய முறைகளால் பயன் உண்டா?
தெரியாது.நான் அறிவியலாளன். Evidence based medicine மட்டுமே சரியானது. ஒருவேளை இத்தகைய உணவு முறைகள் நன்றாக வாழுபவர்களுக்கு ஒரு வாழ்வு முறையாக இருக்கலாம். Those are neither cure nor prevention medicine.
(8) நிலவேம்பு,பாலிடால், மாட்டு மூத்திரம், கொரங்கு விதை லேகியம், பிராண்யநாமம், அய்யரின் பிண்டம், அண்டாவுக்குள் தண்ணி, சக்கியின் யோகா, ராமுதேவு பதஞ்சலி, சாமியாரின் குரளிவித்தை, அய்யங்கார் மந்திரம், ஆண்டாள் பாவை  போன்றவை நோயை தீர்ப்பதாக வாட்சப்பில் வருகிறேதே உண்மையா?
இல்லை.இல்லவே இல்லை. உங்களின் போகாத பொழுதுகளை வாட்சப்பு பார்த்து சிரித்து மகிழவும். மறந்தும் எதையும் நம்பிவிடாதீர்கள்.
(9) பேலியோ என்ற மதத்தில் சேர்ந்து அவர்களின் fakebook குழுமத்தில் உள்ளேன். நியாண்டர் சாமியார் அய்யா, "ஆதிமனிதனுக்கு கரோனா வைரசு வரவில்லை எனவே காண்டாமிருகம் சாப்பிடுங்கள்" என்கிறாரே சரியா?
ஆதி மனிதனுக்கு fakebook ம் இல்லை. எனவே எதை எடுத்தாலும் , ஆதிமனிதன் ஆட்டுக்குட்டி மேய்த்தான் என்று ஆரம்பிக்க வேண்டாம். சர்க்கரை வியாதிக்கு Carbohydrate குறைப்பது சரியாக இருக்கலாம். ஆனால், அதை சங்கிகளின் மாட்டு மூத்திரம் போல "சர்வ ரோக நிவாரணியாக" சந்தைப்படுத்தவேண்டாம்.. அவைகள் நல்ல உணவுமுறைகளாக இருக்கலாம். Just a food habit. May be a healthy life/food choice but it's  neither cure nor prevention medicine for COVID19
(10) அனுமாருக்கு வடை சாத்தினால்,COVID-19  வராது என்கிறார்களே?
நீங்கள் நம்பும் எந்த கார்ட்டூன் பொம்மைகளும் (aka idea of god) உங்களைக் காக்காது. அந்த பொம்மைகளைப் பார்க்க கூட்டமாகப் போய் , இந்த நோய் பெருக வழி செய்யாதீர்கள். வாடிகன் முதல் மெக்கா கட்டிடம் வரை கடையடைத்து சாமிகள் ஓடி ஒளிந்து கொண்டன. நீங்கள் சுகமாகி உங்கள் கையில் காசு புழங்கும்போது அவர்கள் மீண்டும் கடையைத் திறப்பார்கள். 
கடவுளை மற அறிவியல் பயில். Idea of god is a fantasy don’t kill yourself and others. கடவுள் என்பது Cunningly clever மக்களால் உங்களைப் போன்ற முட்டாள்களை ஏமாற்ற கண்டுபிடிக்கப்பட்ட அரசியல்.
(11) கிந்து மகா சபா என்று ஒரு கூட்டம் மாட்டு மூத்திரம் குடிக்கிறதே அது நல்லதா?
இல்லை.இல்லவே இல்லை.இப்படியான மதங்களில் நீஙகள் இருந்தால் உங்களை நீங்களே கேவலப்படுத்திக் கொள்கிறீர்கள் என்று பொருள். திராவிட, பெரியாரிய, அறிவியல் பாதையில் சமூக அறிவியலை கற்க‌வும்.
Hindu Group Offers Cow Urine in a Bid to Ward off Coronavirushttps://www.usnews.com/news/world/articles/2020-03-14/hindu-group-offers-cow-urine-in-a-bid-to-ward-off-coronavirus
(12) வேறு மதங்களில் மூத்திரம் விற்கிறார்களா? அது நல்ல மூத்திரமா?
ஏன்யா சாகடிக்குறீங்க? எந்த மூத்திரமும் உதவாது.
அமெரிக்காவில் ஏதோ ஒன்றை வித்த ஒரு சாமியார்ப்பயலை அரசு கவனிக்கிறது. பாவப்பட்ட இந்தியாவில் மூத்திரப் பார்ட்டி நடத்துறானுவ. 

Missouri Sues Televangelist Jim Bakker For Selling Fake Coronavirus Cure https://www.npr.org/2020/03/11/814550474/missouri-sues-televangelist-jim-bakker-for-selling-fake-coronavirus-cure
(13) சத்குரு சக்கி, சிரி சிரி ரவி சங்கரன், பதஞ்சலி ராமு தேவு போன்றவர்கள் ஏன் பேசாமல் இருக்கிறார்கள்?
கூட்டம் கூடாமல் பிழைப்பு ஓடாது என்பதால், வாயை மூடிக்கொண்டு உள்ளார்கள். கூட்டம் கூட்டினால் COVID-19 வந்து ஆப்படித்து தங்களின் பிராடு பிசினசை காட்டிக்கொடுத்து விடும் என்பதால் தலைமறைவாக இருக்கிறார்கள். இந்தியாவில் சனாதன இந்து கலாச்சார வைத்திய முறை என்று மாட்டு மூத்திரம், மாட்டு பீ (சாணி) களை பரிந்துரை செய்பவர்களை உடனே ஒதுக்கிவிடுங்கள். அவர்கள் #COVID19 ஐ விட கொடிய வைரசு.
(14) பகவான் அத்தி அல்லது ஏதாவது அவதாரம் வந்து எங்களைக் காக்குமா?
இல்லை.எந்த பொம்மையும் காக்காது.எல்லாம் முடிந்தபிறகு ஏதாவது ஒரு பார்ப்பான் ஒரு கதை எழுதி "கலியுக கரோனாப்பெருமாள்" என்று கதைவிட வாய்ப்புள்ளது.
(15) கீலர் பாசுகர் மற்றும் நாதக கூட்டம் இயற்கை வைத்தியம் இலுமினாட்டி என்று கதை விடுகிறார்களே?
இவர்கள் நடமாடும் வைரசுகள். இவர்களிடம் ஒதுங்கியே இருங்கள். இவனுகளுக்கும் அறிவியலுக்கும் தொடர்பே இல்லை. இவர்கள் வேற்றுகிரகவாசிகள். விட்டுவிடுங்கள்.
(16) இப்படி பீதியக் கெளப்பி எங்க நம்பிக்கையை புண்ணாக்கிட்ட. சரி எங்களை யார் தான் காப்பாத்துவது?
அறிவியல்.அறிவியல் அறிவியல் மட்டுமே.
அனுமாருக்கு வடை சாத்துவது, அல்லாவுக்கு பாட்டுப்பாடுவது ஏசப்பாவுக்கு அப்பளம் சுட்டுக்கொடுப்பது போன்ற வேலைகளை பிறர் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அறிவிலாளர்கள் ஏற்கனவே சில வேலைகளைச் செய்துவிட்டார்கள்.
COVID-19  நோயை உண்டாக்கும் ஒரு முக்கிய காரணியை பிரித்து அடையாளம் கண்டுவிட்டார்கள் ஆராய்ச்சியாளர்கள். (உங்கள் மதங்களின் பூசாரிகள் அல்ல)
Research team has isolated the COVID-19 virushttps://sunnybrook.ca/research/media/item.asp?c=2&i=2069&f=covid-19-isolated-2020//isolated severe acute respiratory syndrome coronavirus 2 (SARS-CoV-2), the agent responsible for the ongoing outbreak of COVID-19// 
மேலும் இன்றைய தகவலின்படி தடுப்பு மருந்து ஒன்றை பரிசோதனையாக சிலரிடம் சோதித்துப் பார்க்கவும் ஆரம்பித்து விட்டார்கள். இதுவே சரியானது என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், இது பொதுப்பயன்பாட்டுக்கு பயன்பாட்டுக்குவர ஒருவருடம் கூட ஆகலாம்.Coronavirus latest: First vaccine clinical trials begin in United Stateshttps://www.nature.com/articles/d41586-020-00154-w
இவை எல்லாம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் அயோத்தி ராமு இருக்கும் இந்தியாவிலோ, அல்லது அல்லா வாடகைக்கு இருக்கும் சவுதியிலோ,ஏசப்பா பொறந்த செருசலத்திலோ அல்ல. எனவே உங்களின் கடவுள் பொம்மைகளை கடாசிவிடுங்கள்.
(17) அப்படியெல்லாம் சும்மா குற்றம் சொல்லாதீர்கள். பிரதமர் அய்யா #COVID19 ஐ அழிக்க யோசனை சொல்பவர்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பதாகச் சொல்லியுள்ளார்.
https://inc42.com/buzz/narendra-modi-invites-ideas-from-startups-to-fight-coronavirus-pandemic/
சும்மா இருங்க தோழர். ஒரு ஆராய்ச்சிக் குடுவையும் டேபிளும் வாங்க முடியாது இந்த காசில். மாட்டு மூத்திரம்தான் கிடைக்கும். இந்தியாவில் IIT , IIMS போன்ற அறிவாளிகள் என்ன செய்றாய்ங்க?
(18) ஒரு அரசு இப்படி அறிவித்தால் குற்றமா என்ன? என்னதான் செய்வது?
யோவ் லூசாப்பா நீங்க?இது என்ன இன்ச்டன்ட் காபியா? உலகத்தில் பல ஆண்டுகளாக தொடர் ஆராய்ச்சி நடைபெறுகிறது. இதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நன்கொடை அளித்து பல அறிவியலாளர்களை , ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கிறது. எடுத்துக்காட்டாக நான் இருக்கும் North Carolina மாநிலத்தின் பல்கலைக்கழகம் ஒன்று இந்த ஆராய்ச்சியில் முன்னணியில் இருப்பது தெரியுமா?  
https://sph.unc.edu/adv_profile/ralph-s-baric-phd///Most of the research in the Baric Lab uses coronaviruses as models to study the genetics of RNA virus transcription, replication, persistence and cross-species transmission. Dr. Baric also has used alphavirus vaccine vectors to develop novel candidate vaccines.//
சும்மா லாட்டரி பணம் பிச்சாத்து ஒரு இலட்சம் கொடுத்து , மந்திரத்தால் மாங்காய் வரவழைக்கும் வித்தை அல்ல இது. இந்தியாவில் அம்பானியோ அதானியோ ஏன் அரசாங்கமோ இப்படியான ஆராயச்சிகளுக்கு முன்கூட்டியே திட்டமிடுவது இல்லை.
போங்க பாசு போயி பிள்ளைகுட்டிய படிக்க வைங்க.

(19) இது சைனாக்காரன் கண்டுபிடித்த வைரசா?
இல்லை.இல்லவே இல்லை.விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவிய ஒன்று. அவ்வளவே. அது சைனாவில் ஆரம்பமானது என்பதைத் தவிர வேறு எந்தப் பாவத்தையும் சீனர்கள் செய்யவில்லை. தயவு செய்து இதை "சைனா வைரசு" என்று சொல்லாதீர்கள். அப்படிச் சொல்வது "ரேசிசம்".
(20) அமெரிக்காதான் இதை உருவாக்கிய இலுமினாட்டி என்று கீலர் பாசுகரன் சொல்வது உண்மையா?
இதுவரை இப்படியான பேரழிவு வைரசுகளை எந்த சோதனைச் சாலையிலும் உருவாக்கிவிடவில்லை. எல்லாம் இயற்கையாக விலங்குகளோ பறவைகளிடம் இருந்தோ வந்ததே. எனவே கீலர் பாசுகரனை கீழே போட்டு மிதிங்க.
(21) இல்லையே அவர்கள்தான் வவ்வால் சாப்பிடுகிறார்கள். இது வவ்வாலில் இருந்துதான் வந்ததாமே?
முட்டாளா நீங்கள?2018 ல் கேரள நாட்டில் (இந்திய‌ ஒன்றியம்) நிப்பா வைரசு (Nipah virus) என்ற ஒன்று வந்தது. அதுவும் வவ்வாலுடன் தொடர்புடையதே. அது என்ன வவ்வால் கறியில் இருந்து வந்ததா என்ன? அப்படியே வந்தாலும் அய்யப்பன் என்ன ஆடா மேய்த்துக்கொண்டிருந்தார் மக்களைக் காக்காமல்?2018 Nipah virus outbreak in Keralahttps://en.wikipedia.org/wiki/2018_Nipah_virus_outbreak_in_Kerala
தமிழகத்தில் கோவில் எனப்படும் கட்டிடங்களில் அதிக வவ்வால் இருக்கும். சாமி என்ன வவ்வாலா சாப்பிடுகிறார்? சிலைக்கு அர்ச்சனை செய்துவிட்டு, அங்கிருக்கும் கடையில் பொங்கல் வாங்கி தின்னும்போது வவ்வாலின் எச்சம் விழுந்து உங்கள் வழியாக ஒரு நோய் வந்தால், அதற்காக "திருமால் பொங்கல் வைரசு " என்பீர்களா?
குசராத்தில் 1994 ல் பிளேக் வந்தது நினைவிருக்கலாம். அதற்காக அம்பானியும் மோடியும் அமித்துசாவும் எலி சாப்பிடும் ஊர்க்காரர்கள் என்பீர்களா?
(22) கறி (meat based diet) உண்பதால்தான் இது பரவுகிறது என்று பக்கத்து ஆத்து மாமி சொல்றாளே?
ஆத்து மாமியை ஒரு அப்பு அப்பவும்.குசராத்தில் எலி சாப்பிடுவதாலா பிளேக் நோய் வந்தது? சிலைகளையும், கார்ட்டூன்களையும், கட்டடங்களையும் வணங்கும் கூட்டம் உள்ளது. அதற்காக அந்த இடங்கள்தான் காரணமா என்ன?
The Shortest Route to God: Why religious pilgrimages are incredibly dangerous.https://slate.com/technology/2014/06/dangers-of-the-hajj-kumbh-mela-and-other-religious-gatherings-fire-mers-disease-drownings-stampedes.html
கறி உணவு காரணம் அல்ல. அதனால் இந்த நோய் பரவப்போவதும் இல்லை. அதற்காக நீங்கள், சிரி ரங்கத்தில் ஒரு ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒரு அய்யங்காரன் வைத்த புளியோதரையை, அவன் கைப்பட வாங்கி தின்றால் நோய் வரலாம். அது புளியோதரையின் குற்றமா என்ன? இதுவரை உணவுப் பழக்கத்திற்கும் இந்த நோயிற்கும் தொடர்பு இருப்பதாக கண்டறியப்படவில்லை. கறி உணவோ (meat based diet) அகறி (non meat based diet) உணவோ எதுவானாலும் சுத்தமான முறையில் இருந்தால் சரியே.
(23) மூஞ்சிக்கு mask போடுவதால் நோயைத் தவிர்க்கலாமா?
பொதுவாக இந்தியர்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. படு சிறப்பாக வெளியில் உடை அணிந்திருப்பான், ஆனால் ரெண்டு சட்டியை வருடம் முழுக்க கிழியக் கிழிய‌ மாற்றி மாற்றி போடுவான். 
சிலைகள், கார்ட்டூன் படங்கள், மெக்கா கட்டிடப் படங்கள், ஏசப்பா தொங்கிய மரக்கட்டை இப்படியான பொருட்கள் உள்ள இடங்களை (பூசை அறையாம்) அலப்பரையாக, ஆடம்பரமாக வைத்து இருப்பார்கள். ஆனால், அன்றாடம் பயன்படும் கக்கூசில் ஒரு இத்துப்போன வெளக்கமாறும், கறைபிடித்த பிளாச்டிக் டப்பாவுமே இருக்கும்.
எதை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற அறிவற்ற பெரும்பான்மையினரைக் கொண்ட நாடு நம்மது.
இவர்கள், ஒரு முறை வாங்கிய mask க்கை ஒரு வாரத்திற்கு போடலாம். அல்லது அதை கையால் பல முறை தொட்டு கழட்டலாம். இப்படிச் செய்தால் அதனால் பயன் இல்லை.
நீங்கள் COVID-19 க்கு பாசிடிவ் என்று அறிந்தால் மட்டும் இதைப் போடலாம். அதுவும் மருத்துவரைக் கேட்கவும். அவர்கள் சொல்வதைச் செய்யவும். வெட்டியாக வாயை மூடும் ஏதாவது ஒரு mask க்கை போடாதீர்கள். எதற்கும் உதவாது. நோயாளிகளை பரிசோதிக்கும் மருத்துவர்கள் & அந்த துறையில் இருப்பவர்களுக்கு அதற்கென இருக்கும் ஒன்றை நீங்கள் தேவையற்று வாங்கி குவித்து, தேவையானவர்களுக்கு short supply ஏற்படுத்தவேண்டாம்.
(24) சென்னை வெயிலுக்கு கரோனா வைரைசு வராதுன்னு மாரிதாசு சொல்றானே உண்மையா? 
இந்த வைரசு மனித உடம்பில் 37° C வெப்ப சூழ்நிலையில் வளரக்கூடியது. ஏன் சென்னை வெயிலுக்கு பயப்படப்போகுது? மாரிதாசு மாதிரி கூமுட்டைகளை கண்டுகொள்ளாதீர்கள். உங்களுக்கும் வரலாம் இந்த நோய்.
(25) இந்த வைரசு வராமல் எப்படி காத்துக்கொள்வது?
Soap (20 sec) போட்டு கையை கழுவுவது மட்டுமே இப்போதைக்கு உள்ள வழி. உங்களின் வாய்,மூக்கு,கண் இப்படி உடலுக்குள் கிருமி செல்லும் வாய்ப்பை குறைக்கவும் உங்களால் பிறருக்கோ பிறரால் உங்களுக்கோ பரவும் வாய்ப்பை இது குறைக்கும். 

அதுபோல social isolation. முடிந்தவரை கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்லாதீர்கள். உங்கள் நாட்டில் , மாநிலத்தில் அரசு அறிவிக்கும் red zone &  quarantine போன்றவற்றை அவர்கள் சொன்னபடி கடைபிடியுங்கள். சிக்னலில் சிவப்பு விளக்கை தாண்டுவது போலஇதையும் மீறித் தொலைக்காதீர்கள். நீங்கள் உங்களையும், உங்கள் ஊரையும், உங்கள் நாட்டையும் அபாயத்தில் தள்ளுகிறீர்கள்.

காய்ச்சல், இருமல், சளி மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள், மற்ற நுரையீரல் சுவாசம் தொடர்பான நோய்களுக்கு வருவது போலவே இதற்கும் வரும். அப்படி இருந்தால், பாட்டி வைத்தியம் சனாதன மாட்டு மூத்திரம் என்று இருக்காமல் மருத்துவரை பார்க்கவும்.

முடிந்தவரை நேரடி human contact, வெளியில் சாப்பிடுவது, கூட்டமான இடங்களை தவிர்ப்பது/குறைப்பது போன்றவையே செய்ய முடிந்த ஒன்று.

Don't panic but be aware and don't be stupid.
Always check with your Dr & Govt Health Dept for info.

(26) கரோனா பீர் குடித்தால் இது சரியாகுமா?
நல்ல கேள்வி தோழர். உங்களுக்கு தெரியுமா, கரோனா பீர் மட்டும்தான் லெமன் அல்லதுது லைம் உடன் பருக வேண்டிய பார்ம்பரியம் உள்ள ஒரு பீர். அந்த பீர் பாட்டிலில் லெமன்/லைம் வைத்து குடிப்பது ஒரு ritual போன்ற ஒன்று. வாங்கிட்டு வாங்க குடித்துப் பார்ப்போம். அந்த கம்பெனிக்காரன் இந்த கரோனா வைரசு பீதியால வருத்தமாக இருக்காய்க. அவுக லோகோவும் கிரீடம்தான். ஆம் கரோனா என்றால் லத்தீன் மொழியில் கிரீடம். 
'Corona Beer Virus?' The Global Epidemic Is Taking a Real-Life Toll on the Beverage https://time.com/5792470/corona-beer-virus/
தகவல்கள் பட இடங்களில் இருந்து பெறப்பட்ட தொகுப்பு.
https://cdc.gov/coronavirus/2019-ncov/about/symptoms.html
https://cdc.gov/handwashing/fact-sheets.html
https://cdc.gov/coronavirus/2019-ncov/summary.html
https://www.youtube.com/watch?v=6VY80jtcx2Y