Thursday, January 26, 2006

காசி, முடிந்தால் இவைகளை விளக்கவும்

அன்புள்ள காசி,
முடிந்தால் இவைகளை விளக்கவும்

1.சின்னவன், நல்லடியார்,குசும்பன் போன்றவர்களின் பதிவுகளை பல காரணங்கள் காட்டி விலக்கி வைத்து இருந்தீர்கள். இப்போது அவர்களின் பதிவுகள் இங்கே காணக்கிடைக்கிறது.

அவர்கள் எல்லாம் திருந்தி விட்டார்களா?

அதாவது நீங்கள் எதிர்பார்த்த வண்ணம் எழுத்தத் தொடங்கி விட்டார்களா?

எந்த அடிப்படையில் மறுபடியும் அனுமதித்தீர்கள் என்பதை விளக்க முடியுமா?

நீங்கள் அப்போது இவர்களை விலக்கியது தவறு என்று சுட்டிக்காட்டியவர்களில் நானும் ஒருவன்.

பார்க்க: காசியின் தமிழ்மண அறிவிப்பு பற்றிhttp://kalvetu.blogspot.com/2005/10/13.html


சிலரை விலக்கும் போது வரும் அறிவிப்பும் அதற்குத் துணையாக நீங்கள் அடுக்கும் வாதங்களும் ஏன் மறுபடி சேர்க்கும் போது வரவில்லை. நீங்கள் செய்தது தவறு என்றால் நீங்கள் மன்னிப்பல்லவா கேட்டிருக்க வேண்டும்? ஒரு வேளை நீங்கள் அவ்வாறு அவர்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்டு இருக்கலாம். ஆனால் அனைவரும் அறியும்படி அவர்களின் பச்சை விளக்கை அணைத்த நீங்கள் அதே போல் அனைவரும் அறியும்படி அவர்களை மறுபடியும் சேர்த்த காரணத்தையும் சொல்லவேண்டும்.


2.போலிப் பின்னூட்டங்கள் பற்றி டோண்டு பல காலமாக புலம்பி வருகிறார். அப்போதெல்லாம் நீங்களும் ,பல எக்கியவாதிகளும் சொன்னது.

-பின்னூட்டத்தை கட்டுப்படுத்துவது பிளாக் வைத்திருப்பவரின் வேலை.

-தமிழ்மணம் ஒன்றும் செய்ய முடியாது. அது ஒரு திரட்டி மட்டுமே.


இப்போது மட்டும் ஏன் "comment moderation" ஐ கட்டாயப் படுத்த வேண்டும்?பாதிக்கப்பட்டது நீங்கள் என்று வரும்போது நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் அப்படித்தானே?

திரட்டி உங்களதாக இருந்தாலும்,என்னதான் இலவசமாக சேவைகள் வழங்கினாலும் உங்களின் இந்த செயல்கள் ஏற்புடையவை அல்ல.


திரட்டுவதில் இருந்து நீக்கப்பட்டுவிடும் என்பதற்குப் பயந்தும்,தமிழ்மணம் மிகவும் வசதியாய் இருபதாலும், எனக்கு வேறு தொழில் நுட்பங்கள் தெரியாததாலும்,சக பதிவாளர்களை திட்டி வரும் பின்னூட்டங்களைத் கண்காணிக்க முடியும் என்பதாலும் நானும் "comment moderation" செய்து விட்டேன்.

பி.கு:மேலே உள்ள கடிதம் "thamizmaNam. com" <adm@thamizmanam.com> க்கு மயில் வழியாக அனுப்பியாகிவிட்டது.



****************


****************