Sunday, April 27, 2008

நாரயணமூர்த்தி மன்மோகன்சிங் புனிதர்களா?

சென்றபதிவு நீளமான தலைப்பின் காரணமாக பிளாக்கரால் விழுங்கப்பட்டு விட்டது.மீள் பதிவு
****
ன்போசிஸ் நாரயணமூர்த்தி பொருளாதார மேதை மன்மோகன்சிங் புனிதர்களா?

Bad News India என்ற பதிவில் நாராயனமூர்த்தி,மன்மோகன் சிங்கைப் பற்றி உயர்வாக எழுதப்பட்து உள்ளது.எனக்கு இவர்கள் ஒன்றும் பெரிய புரட்சியாளர்களாகத் தெரியவில்லை.ஒருவர் சராசரி முதலாளி இன்னொருவர் சராசரி அரசியல்வாதி அவ்வளவே.

இவர்களை சும்மா இந்தியாவின் ரோல்மாடல்களாக சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.சினிமா காமடியில் செந்தில் சிறப்பாக நடிப்பதற்காக அவரை புரட்சியாளராகக்கருத முடியாது. ஒரு சிறந்த சினிமா காமெடியனாக வேண்டுமானால் அங்கீகரிக்கலாம்.

என்னளவில் துறை சார்ந்த வெற்றி என்பது வேறு, சமூக அக்கறை/முன்னேற்றம் எனபது வேறு.


நாராயணமூர்த்தி:
இவர் செய்தது என்ன?

தான் ஆரம்பித்த தொழிலை சிறப்பாக நடத்தி ஒரு சிறந்த நிறுவனமாக மாற்றியுள்ளார்.ஒரு மளிகைக் கடைக்காரர் அல்லது சரவணாஸ் ஸ்டோர்ஸ் அண்ணாச்சிகள் தெரு அல்லது ஊர் அளவில் செய்ததை இவர் உலக அளவில் செய்துள்ளார்.

சிறந்த முதலாளி!
சிறந்த நிர்வாகி!
சிறந்த மேலாளர்!

இதுபோல் இந்தியாவில் ஏற்கனவே பல முதலாளிகள் உள்ளனர்.பிரபலமான TATA,Birla, or Ambani நிறுவனங்களைக் கூறலாம்.

நாராயணமூர்த்தி இவர்களிடம் இருந்து எப்படி வேறுபடுகிறார்?

(வியாபார வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இவர் இனிமேல் என்ன செய்கிறார் என்பதை கவனிப்போம். அதைவைத்து வேண்டுமானால் புனிதர் பட்டம் கொடுக்கலாம்.)


மன்மோகன்சிங்:

மன்மோகன்சிங் தாராள வர்த்தகம் ,பன்னாட்டு முதலீடு போன்றவற்றிற்கு காரணமாகக் கூறலாம்.

அதனால் இந்தியாவில் இதுவரை என்ன பயன்?சும்மா GDP வளர்ச்சி இந்தியாவிற்கு உதவாது.இன்னும் குடிதண்ணீர்,ஆரம்ப சுகாதாரம்,கழிப்பிட வசதி..எண்ணற்ற விசயங்களில் நாம் சொரணையற்றவர்களாகவே இருக்கிறோம்.

IT வளர்ச்சிமட்டும் நாட்டுக்கு உதவாது.உடம்பின் ஒரு பகுதி (தொப்பை) மட்டும் வீங்குவது உடம்பிற்கு எப்படி அழகில்லையோ அதுபோலதான்.சமத்துவமான வளர்ச்சிக்கு நீண்டகால திட்டமிடல் தேவை.

இப்போ இதுதானய்யா பேஷன் என்று IT/GDP ல் மட்டுமே கண்ணாய் இருப்பது நாராயணமூர்த்திகளுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். நாட்டின் மூர்த்திகளுக்கு சரியல்ல.

இன்போசிஸ் நாரயணமூர்த்தி பொருளாதார மேதை மன்மோகன்களால் நாட்டுக்கு என்ன பயன்? பிட்சா சாப்பிடும் புது வர்க்கம் வந்துள்ளது வாழ்க. ஆனால் மாட்டுச்சாணியில் வறட்டி தட்டி விற்கும் கூட்டம் தண்ணீருக்கு இன்னும் கொலை வெறிச் சண்டை போட்டுக்கொண்டே உள்ளது.

வேண்டுமானால் இந்த கட்டுரைகளை வாசித்துப் பாருங்கள்:
Shift The Goalpost Obsession with GDP can cost India, China dear

இழிச்சவாயர்களும், இந்திய விவசாயமும்

விவசாயியும், SEZயும், அடிவருடிகளும்

கேடு கெட்ட இந்தியா... யானை கட்டியா போரடித்தோம்?4 comments:

 1. Kalvettu Sir,

  My point is not that they are 'punidhargal' - I am just highlighting that they are doing so much good for the nation. The whole IT phenomenon which has placed our nation in the top gear, is kick started by Mr.Murthi and Manmohan is noted for all his reforms and his selfless zeal.
  Though they are just good entrepreneurs and good leaders they are also being selfless and are being good role models for the new comers - We need more of these people to up-bring our nation as a whole.

  TATAs, Birlas, Ambanis, Mr. M.S.Swaminathan, Udavum Karangal Vidyakar, .... fall in the same category - some of these guys are not selfless as Mr.Murthi is :)

  (sorry, i had to post it in English - have tech. issues )

  ReplyDelete
 2. உங்களுக்கு தெரிந்தது அவ்வுளவுதான்

  ReplyDelete
 3. கலாமும், மூர்தியும், சிங்கும் அவர்கள் வேலையை மிகவும் திறமையாக (முடிந்தவரை செய்து), நமது நாடு நலமும் வளமும் பெற வழி செய்கிறார்கள்.

  அவர்கள் முற்றிலும் புனிதர்கள் அல்ல - கருணாநிதி, ஜெ போன்ற சுயநல கூட்டத்தில் கலாம்களும், சிங்குகளும்,மூர்த்திகளும் அவ்வப்போது தோன்றாவிட்டால், நமது நாட்டை எப்பொழுதோ கூறு போட்டு விற்று இருப்பார்கள். நானும் நீங்களும் அகதிகள் முகாமில் வான் நோக்கி வாய் பிளந்து கிடந்திருப்போம்.

  ReplyDelete
 4. Great Post Man. I share your views.

  ReplyDelete