Thursday, February 01, 2007

India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா ?

ந்தியாவின் முன்னேற்றம் என்பது வெறும் அந்நிய செலவாணி கையிறுப்பு அல்லது ஒரு குறிப்பிட்ட துறையின் முன்னேற்றம் அல்லது பங்குச் சந்தையில் பங்கு விற்கும் விலை என்ற அளவில்தான் பார்க்கப்படுகிறது.நான் பொருளாதார மேதை இல்லை.ஆனால் பொருளாதார மேதை இந்த நாட்டின் பிரதமராக இருக்கும் போது ஏன் விவசாயிகள் மாற்றாந்தாய் மனப்போக்கில் நடத்தப்படுகிறார்கள் என்று தெரியவில்லை.அரசாங்கம் எடுக்கும் எந்த முயற்சியும் Vidarbha பருத்தி விவசாயிகளை தற்கொலை முயற்சிகளில் இருந்து காப்பாற்றியதாகத் தெரியவில்லை.

11 farmers commit suicide in Vidarbha: NGO
Press Trust of IndiaNagpur, January 29, 2007
Eleven farmers have committed suicide in Vidarbha region of Maharasthra, an NGO working for farmers said Monday. The suicide cases were reported in the last two days from districts of Yavatmal, Washim (three each), Nagpur (two), Amaravati, Wardha and Chandrapur (one each), Vidarbha Jana Andolan Samiti President Kishore Tiwari said in a release in Nagpur. He said so far 62 farmers have committed suicide in the current month in the cotton-growing region in Eastern Maharasthra. Last year, about 1,050 farmers had committed suicide in Vidarbha which was visited by Prime Minister Manmohan Singh who announced a relief package for farmers reeling under bankruptcy and crop failure. The samiti has claimed the state government has paid compensation to 682 families of the deceased farmers.In addition to the Prime Minister's package, the state's Congress-NCP led government too had announced several relief measures for debt-ridden farmers but the spate of suicides continued.
http://www.hindustantimes.com/news/181_1914941,000900040001.htm


இந்த மாதத்தில் (ஜனவரி ,2007) மட்டும் 62 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள்.Google-ல் Vidarbha farmers என்று தேடினால் வரும் செய்திகள் மகிழ்ச்சிய்யூட்டுவதாக இல்லை.ஏன் இந்த நிலைமை? அரசாங்கம் ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் என்னதான் அரசாங்கம் செய்கிறதோ அது விதர்பா பருத்தி விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற முடியவில்லை எனபது மட்டும் நிச்சயம்.Bombay Stock Exchange இல் ஒரு சின்ன சத்தம் கேட்டால்கூட அன்று இரவே தொலைக்காட்சியில் தோன்றி புள்ளிவிபரங்கள் தரும் நிதி அமைச்சர் விதர்பா பற்றி ஏதும் சொன்னதாகத் தெரியவில்லை.


இந்தியா வளமான பாதையில் செல்கிறது என்று கூக்குரலிடும் கனவான்களின் கண்ணில் இந்த அவலங்கள் தெரிவது இல்லை.மக்களும் சில்ப்பா சிரித்தாளா ஐஸ்வர்யா ஆடினாளா என்ற உலகவிசயங்களிலேயே பெரும்பகுதி நேரத்தைச் செலவிடுவதால் இது போன்ற சில்லரை விசயங்கள் அவர்களுக்குப் பெரிதாகத்தெரிவது இல்லை.எங்கேயாவது மொத்தமாக ஒரு 100 பேர் செத்தால் அதற்காக கொஞ்சநேரம் வருத்தப்பட்டுவிட்டு அடுத்த நாள் வரும் அபிஷேக்-ஐஸ்வர்யா நிச்சயதார்த்த உடைகளின் தரத்தையும்,சாருக்கான் எவ்வாறு போட்டியாளரை குரோர்பதி ஆக்குகிறார் என்றும் விவாதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.



சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் இந்தியாவில் செல்போன் புழக்கத்தை நினைத்து பெருமிதம் கொண்டார்.அவரிடம் விதர்பா போன்ற சில்லரைச் சமாச்சாரங்களைச் சொன்ன போது, இந்தியாவில் பட்டினி/வறுமைச் சாவே கிடையாது என்று அடித்துச் சொன்னார்.விதர்பா பற்றியும் ,சில வருடங்களுக்கு முன்னால் தஞ்சையில் நடந்த எலிக்கறி சாப்பாடு பற்றிச் சொன்னால் அவர் அதற்கு முக்கியத்துவம் தராமல்,கிரிக்கட்டில் விளையாடும் வீரர்கள் நீளமான முடி வைப்பது நல்லதா கெட்டதா என்று விவாதத்தை ஆரம்பித்து விட்டார்.சராசரி மனிதனை சில குத்துப்பாட்டுகள்,சில்பா,ஷாருக்கான் என்ற அல்ப்பமான ரேஞ்சிலேயே ஊடகங்கள் வைத்து இருக்கிறது.விமானம் ஏறி பறந்து போய் கோக் (பெப்ஸி??)குடிப்பேன் என்று சொன்னவர்தான் இந்த கான்.மெத்தப்படித்த அறிவாளிகள்கூட விவசாயிக்கு மானியம் என்றால் நம்மை கேணையனாகப் பார்க்கும் போக்குதான் இங்கே உள்ளது.


இந்தியா இப்போது எப்படி உள்ளது?

2000 திற்குப்பின் நடந்த IT துறையின் வளர்ச்சியால் அதிகமான பணம் ஒரு பகுதி மக்களிடம் புழங்குகிறது.ஒரு குடும்பத்தில் ஒருவன் IT துறையில் இருந்துவிட்டாலே அவர்கள் ஒரு வருடத்தில் கார்,வீடு,கனவு என்று ஓரமாக ஒதுங்கிவிடுகிறார்கள்.தான் வாழும் இடத்தில் இருக்கும் நலிந்துபோன மக்களைப் பற்றிச் சிந்திப்பது பாவம் என்ற அளவில் அவர்கள் மாறிவிடுகிறார்கள்.இவர்களின் பணப்புழக்கத்துடன் போட்டி போட முடியாமல் சாமான்யன் மேலும் மேலும் கீழே போகிறான் அல்லது போட்டி போட முடியாமல் விரக்தியடைந்து விடுகிறான்.அரசாங்கமும் இதுதாண்டா வளர்ச்சி என்று இதன் பின்னாலேயே சுற்றுகிறது.இப்போதே சில நாடுகள் இந்தியாவைவிட குறைந்த விலையில் IT சேவைகளை வழங்கிவருகிறது.இலாபத்திற்காக தனது சொந்த நாட்டு மக்களின் வேலைகளுக்கே ஆப்பு வைத்த அமெரிக்கா ,அந்நியனான இந்தியனுக்கு தொடர்ந்து டாலரைக் கொட்டாது.ஒரு நாள் இந்த IT புயல் வேறு நாடுகளில் கரையேறும்.அப்போது இந்தியா பெரும் நெருக்கடியைச் சந்திக்கலாம்.கொஞ்சம் விவராமாகப் பார்க்கலாம்.




இந்தியா சுதந்திரம் வாங்கிவத்ற்கு முன்னாள் அல்லது சுதந்திரப் போராட்ட காலங்களில் "வக்கீல்" படிப்பு என்பதும் , பாரிஸ்டர் என்பதும்தான் அந்த தலைமுறைக்கு கனவாக இருந்தது.ஊரில் உள்ள பணக்காரன் ,செல்வாக்கு படைத்தவன் எல்லாம் ஜமீனாகவோ அல்லது வக்கீலாகவோ இருப்பார்கள்.
சுதந்திரத்திற்குப்பின்னால் வந்த கட்டுமானத் தொழில்கள் மற்றும் இயந்திரவியல் துறைகள் இந்த "பாரிஸ்டர்" பட்டாளங்களை முழுங்கி டாக்டர் , என்ஜினீயர் என்று அடுத்த கட்டதிற்கு சென்றுவிட்டது.டாகடர் அல்லது என்ஜினியர் ஆவதே அல்லது ஆக்குவதே குறிக்கோளாக இருந்த தலைமுறை அப்படியே IT க்கு டாப்கியரில் மாறிவிட்டது.இப்போது டாக்டர்களுக்கு மரியாதையே இல்லாமல் போய்விட்டது.

எனது உறவினர் ஒருவரின் பெண்ணுக்கு டாக்டர் மாப்பிள்ளை வந்தும் வேணாம் அமெரிக்க IT மாப்பிள்ளைதான் வேண்டும் என்று ஒத்தக்காலில் நின்றுகொண்டுள்ளார்.மருத்துவத்துறையிலும் இப்போது அவுட்சோர்ஸிங் ஆரம்பித்துவிட்டது.கிட்னி வியாபாரம் எல்லாம் கன ஜோராக நடப்பதும் அந்த வியபாரத்தில் புளங்கும் இலட்சக்கணக்கான பணமும் கிட்னி தாண்டி,கர்ப்பப்பை வாடகை என்ற அளவில் சென்றுள்ளது. இன்னும் பல கோரங்களையும் சந்திக்கும்.




இன்னும் 10-15 ஆண்டுகளில் இந்த IT வியபாரம் படுத்துவிடும்.சாதாரண மக்களும் சட்னியில் இருந்து கிட்னிவரை விற்றுவிட்டு பரதேசிகளாயிருப்பர்.வாங்கிய கடனைக் கட்டமுடியாமல் அதுவரை iPOD உடன் ஆட்டம் போட்ட கூட்டம் அடுத்து வேறு என்ன செய்யலாம் என்று சிந்திக்க ஆரம்பிக்கும். ஒரு வேளை தாய்லாந்து ரேஞ்சில் செக்ஸ் அவுட்சோர்ஸிங் நடந்தாலும் ஆச்சரியப்படவேண்டாம்.

ஏற்கனவே அதிக AIDS கணக்கு கொண்ட நாம் செய்து கொண்டிருப்பதை ISO சர்ட்டிவிகேட்டுடன் சுத்தபத்தாமகச் செய்ய வேண்டும்.டாலராக வந்தால் காந்தி பிறந்த மண்ணிலேயே அதுவும் BJP ஆட்சியில் இருக்கும் போதே SEZ இல் சாராயம் விற்க அனுமதிக்கப்பட இருக்கிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம் டாலருக்காக.பாலியல் தொழில்கூட SEZ க்களில் சட்டபூர்வமாக அனுமதிக்கப்படலாம். பாலியல் தொழில் சட்டபூர்வமாக ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்படுவது நல்லதே. ஆனால் SEZ க்களுக்காகவே இவர்கள் செய்தால் அதன் நோக்கம் டாலர் அன்றி வேறு என்ன? இதுதான் முன்னேற்றப்பாதையா?

Adobe India வின் CEO வின் மகன் கடத்தப்பட்டபோது துரிதமாகச் செயல்பட்ட காவல்துறை அதே பகுதியில் அப்பாவி ஏழைகள் கொடுத்த பல புகார்களை பல நாட்களாக ,மாதங்களாக கிடப்பில் போட்டதால் தான் இப்போது பிணக்குவியல்கள்.ஏழைக்கு ஒரு நீதியும் பணக்காரனுக்கு ஒரு நீதியும், பணம் செல்வாக்கைப் பொறுத்து உயிர்கள் விலை பேசப்படுவதும் மனித குலத்திற்கு புதியதல்ல. ஆனால் இந்தியாவில் அது மட்டுமேதான் நடக்கிறது. அதுதான் கொடுமை.

நிச்சயம் இந்த IT என்ற bubble ம் ஒரு நாள் உடையும். அப்போது வேறு ஏதாவது ஒன்று வந்து நம்மை ஆளும். அது இதைவிடக் கொடுமையாய் இருந்துவிடக்கூடாது என்பதுதான் எனது பயம்.என்ன கிடைக்கிறதோ அதை வைத்து காலத்தை ஓட்டுவோம் என்று சராசரி மனிதன் யோசிக்கலாம். அரசாங்கமும் அப்படி இருந்தால் எப்படி?இப்படியே இருந்தால் எப்படி இந்தியா முன்னேறும்? நாட்டுக்கு என்ன தேவை என்பதில் அரசுக்கு தெளிவான பார்வை இருக்க வேண்டும்.

ஏற்கனவே வளர்ந்த நாடுகள் இப்போது நமக்கு அள்ளி இறைக்கும் காசுக்காக என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்ற நிலையை எடுத்தால் நாளை அவர்கள் மின்சாரம் அவுட்சோர்ஸ் செய்து 100 அணு உலைகளை இங்கே அரம்பித்து நமக்கு வேலை வாய்ப்புத் தருவார்கள். போனஸாக இங்கேயே அந்தக் அணுக்கழிவையும் புதைப்பார்கள். அல்லது சிங்கப்பூரில் இடப்பற்றாக்குறை நாங்கள் SEZ -இல் கொஞ்சப்பேரை குடிவைத்துக் கொள்கிறோம் என்று நாட்டையே அவுட்சோர்ஸிங் செய்வார்கள் நாமும் டாலருக்காக இடத்தை வாடகைக்கு விடலாம்.





அரசு அடிப்படைக் கல்வி,அடிப்படைச் சுகாதாரம்,அடிப்படைக் கட்டமைப்பு என்று திட்டமிடல் வேண்டும்.நான் படிக்கும் போது பள்ளியில் பரந்து விரிந்த விளையாட்டு மைதானங்கள் இருக்கும்.அதுவும் புட்பால்,ஹாக்கி,வாலிபால் என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு பெரிய தனி மைதானம் இருக்கும். இப்போது ?? அபார்ட்மெண்டில்தான் பள்ளிகள் நடக்கிறது சென்னை,பெங்களூர் போன்ற இடங்களில்.

மக்களும் சம்பாதிக்கும் நோக்குடனேயே இருக்கின்றனர்.எத்தனை பெற்றோர்கள் தனது குழந்தையை ஒரு நல்ல குடிமகனாக வளர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.யோகா படித்தவனும் சாமி கும்பிடுபவனும் இன்னும் ரோட்டில்தான் ஒண்ணுக்குப் போகிறான்.

படித்த பரதேசிகள் IT ல் வேலை பார்ததாலும் கேண்டீனிலோ அல்லது இரயிலிலோ வரிசையில் நிற்பது கிடையாது.அடிப்படை ஒழுக்கம் இல்லாத ஒரு சமுதாயம் என்னதான் படித்தாலும் ,என்னதான் பதவியில் இருந்தாலும் முன்னேறவே முடியாது.நாய்க்கு டை கட்டி விடுவதால் அது மாறிவிடாது (நாய் சார் ப்ளீஸ் மன்னிக்க) அது டை கட்டிய நாயாகவேதான் காலம் முழுவதும் இருக்கும்.சாத்தான்குளத்தாரின் பதிவில் வெளிநாட்டுவாழ் மக்கள் கொண்டாடிய பொங்கல் விழா நாம் திருந்தமாட்டோம் என்பதற்குச் சான்று.

மனிதனின் உடலில் தொப்பை மட்டுமே வளர்வதுபோல் ஒரு சமுதாயத்தின் ஒரு பகுதி மட்டுமே வளர்ந்து அனைத்து வளங்களையும் நுகரத்துடிப்பது மனித குலத்திற்கு நல்லதல்ல.

நண்பர்களே முதலில் உங்கள் குழந்தைகளுக்கு குப்பையை எங்கே, ஏன் போட வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுங்கள்.Community service என்ற நல்ல செயலை குழந்தைப்பருவத்திலேயே ஊட்டி வளர்க்க வேண்டும்.வரிசையில் நிற்க கற்றுக் கொடுங்கள். நீங்கள் உதாரணமாய் இருங்கள்.ஒரு நாளில் அல்லது ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் சில மணி நேரத்தை உங்கள் தெரு மேம்பாட்டுக்காக செலவழித்து சுத்தமாக வைத்து இருங்கள்.எங்கே சென்றாலும் வரிசையில் நிற்கப் பாருங்கள். மாற்றம் ஒரு நாளில் வந்துவிடாது.


iPOD,PIZZA,Jeans,Dating,Car,Sex இவைகள்தான் மேற்கிந்திய கலாச்சாரம் என்று எவன் சொல்லிக்கொடுத்தானோ இப்போதுள்ள இளைஞர்களுக்கு சமுதாயப் பார்வையே இல்லாமல் போய்விட்டது.சுனாமி போது காசு கொடுப்பதோடு கடமை முடிந்து விட்டதாக நினைத்துக் கொண்டு எருமை மாடாகிப் போய் விட்டார்கள். ஆற்றின் போக்கிலேயே ஐலசா போட்டுக்கொண்டு எந்த இலக்கும் இல்லாமல் ஜல்லியடித்துக்கொண்டு வாழ்வது எளிது.எதிர் நீச்சல் சிரமம்.அதுவும் எதற்கெடுத்தாலும் பொதுச்சொத்தை சேதமாக்கும் நம் சக ஜனங்களுடனும், அரசியல் கட்சிகளுடனும் கும்மியடிப்பது முடியாத காரியம். தாங்க முடியலப்பா ரொம்ப வலிக்குது. என்ன செய்வது ...இருந்தாலும் முயற்சியாவது செய்தோம் என்ற மன நிறைவையாவது அது தரும்.











--வேதனையுடனும் பல குழப்பங்களுடனும் தீர்வை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க நினைக்கும் சக இந்தியன்.


*******************


Planning Commission's Vidarbha report
http://planningcommission.nic.in/reports/genrep/rep_vidarbha.pdf

You can now booze in SEZs
http://timesofindia.indiatimes.com/articleshow/996289.cms

Common Problem in india??
http://indiarising.wordpress.com/2006/03/02/common-problem-in-india

நாரயணமூர்த்தி மன்மோகன்சிங் புனிதர்களா?
http://kalvetu.blogspot.com/2006/10/blog-post_09.html

Shift The Goalpost Obsession with GDP can cost India, China dear
http://timesofindia.indiatimes.com/articleshow/msid-2046411,curpg-1.cms

சாத்தான் குளத்தாரின் ஒரு விழாவும் ஒரு கேள்வியும்.
http://asifmeeran.blogspot.com/2007/01/blog-post_27.html

செல்வனின் ஹிந்து ஹ்ருதய சாம்ராட்
http://holyox.blogspot.com/2007/01/234.html

ஸ்டேஷன் பெஞ்ச் ராம்கியின் - கிராமத்தை மறைக்குது உல்லாச உலகம்!
http://stationbench.blogspot.com/2007/01/blog-post_29.html

அசுரனின்..

இழிச்சவாயர்களும், இந்திய விவசாயமும்
http://poar-parai.blogspot.com/2006/06/blog-post_115157825727252631.html

விவசாயியும், SEZயும், அடிவருடிகளும்
http://poar-parai.blogspot.com/2006/10/sez.html

கேடு கெட்ட இந்தியா... யானை கட்டியா போரடித்தோம்?
http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_14.html

அன்பான தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களே!
http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_14.html