Tuesday, January 19, 2010

இஸ்லாம் ஆண்கள் ஏன் அரேபியா பாணி ஆடைகளை தமிழகத்தில் அணிவது இல்லை?


டை என்பது வாழும் இடத்தின் பருவநிலைகளுக்கு ஏற்ப இருக்கவேண்டிய ஒன்று. மேலும், அது அன்றாட வேலைகளை எளிதாகச்செய்யும் வண்ணம் இருக்க வேண்டும். நீச்சல் குள‌த்தில் பிகினி யில் இருப்பது சதாரண‌விசயம். ஆனால் பாவாடை போட்டுக்கொண்டு பாரசூட்டில் குதித்தால், அது விரசமாக பார்க்கப்படும்.  உடையின் வடிவமும் , தேவையின் அளவும்  ஒருவர் வாழும் இடம் , இயற்கைச் சூழ்நிலை போன்றவற்றால் மாறும் தன்மை கொண்டது.  மதம் சமூகம் விதிக்கும் கட்டளைகளுக்காக, பாலைவன உடையை ஆர்க்டிக்கில் அணிய முடியாது.
மதங்களின் கட்டுமானத்தில் , ஒவ்வொரு உடையின் பின்னாளும் உடல் சார்ந்த / சமூகம் சார்ந்த‌ அரசியல் மற்றும் வரலாறு உள்ளது. குழந்தைகளுக்கு செக்குமாடுபோல ஒரு பழக்கத்தையும் , பிறந்தவுடன் மதம் என்ற ஒரு சுமையையும்  ,  அந்த மதம் தோன்றிய இடத்தில் உள்ள புரியாத பழக்க வழக்கங்களை ஏற்றிவிட்டு , வளர்ந்தபின்  அவர்கள் அதைவிடமுடியாமல் கூச்சப்படும்போது அதை உரிமை,கண்ணியம்,நற்குடி   என்று நமக்கு நாமே சொல்லி , நம்மையும் சமூகத்தியும் ஏமாற்றிக் கொள்ளவேண்டாம்.

கண்ணியம் என்பது அணியும் மட்டும் உடையில் இல்லை. இடத்திற்கு தக்க உடை அணிவதும் , அந்த உடையில் எப்படி உடல் மொழியை வெளிப்படுத்துகிறோம் என்பதிலும்தான் உள்ளது. செவிலியர் பணியில் இருக்கும் பெண்கள் முழங்கால்வரை போடும் உடையில் இல்லாத கண்ணியம் , முழுக்க முழு சேலை கட்டிக் கொண்டு "வடுமாங்கா ஊறுது" என்று ஆடுவதில் இருக்கப்போவது இல்லை.  


ஆட்டம் தவறு என்று சொல்லவில்லை.  ஆட்டம், கொண்டாட்டங்களுக்கு எதிரானவனும் இல்லை நான். எந்த உடையிலும் உடல்மொழிதான் செய்தியைச் சொல்லும் என்று சொல்லவே இந்த உதாரணம்.  நிர்வாணமாக நின்று ஓவியத்திற்கு Model ஆக இருப்பதில் காமம் இல்லை. மார்பகத்தை கேன்சர் காரணங்களுக்காக பரிசோதனை செய்யும் மருத்துவரின் கையில் முழு மார்பகமும் இருந்தாலும், அவரின் உடல் மொழியிலோ அல்லது பரிசோதனைக்கு வந்த பெண்ணின் உடல் மொழியிலோ காமம் இருக்கப்போவது இல்லை.

குழந்தைகள் மீது மதம் மற்றும் உடைத் திணிப்பு
பெண்ணோ ஆணோ , வாழும் இடத்தில் உள்ள பருவ நிலைக்கு ஏற்ப ,பிறந்தது முதல் 18 வயது வரை எல்லா வகை ஆடைகளையும் அணிந்து வாழும் சுதந்திர சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். சேலை ,சுரிதார்,பேண்ட் சட்டை,ஸ்கர்ட் ‍ டாப்ஸ்,அரை டவுசர் டாப்ஸ்,பொது இடத்தில் குளிக்க‌ நீச்சல் உடை,இன்னபிற.மேலும், 18 வயது வரை குழந்தைகள் மதமற்று இருக்கட்டும். 18 வயது வரையில் அவர்கள் எல்லா மதத்தையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு தாருங்கள். அனைத்தையும் அறியட்டும்.  எதையும் தடை செய்யாதீர்கள்.

சேலைகட்டிக்கொண்டு முழங்காலுக்கு மேலே தொடை தெரிய தூக்கி ஆடுவது ஆபாசம். ஆனால் அரை டவுசர் போட்டுக்கொண்டு அதே தொடைகள் தெரிய டென்னிஸ் விளையாடுவதில்  எந்த ஆபாசமும் இல்லை.
ஆபாசமாக இருப்பதும் , கவர்ச்சியாக இருப்பதும் ஆடையில் இல்லை. உடல் மொழியில்தான் உள்ளது எனது கற்பிக்கப்படவேண்டும். How do you carry yourself and what signal you give to others  என்பதுதான் கண்ணியத்தை அளக்கும் அளவுகோல்.

இப்படிச் சுதந்திரத்தை கொடுத்து வளர்த்துவிட்டு,18 க்குப் பின்னர் அவர்கள் விரும்பி அணியும் உடையைத் தடை செய்யாதீர்கள். நிச்சயம் அவர்கள் நீச்சல் உடையுடன் ஷாப்பிங் போகப்போவது இல்லை. அல்லது சேலையுடன் நீச்சல்குளம் போகப்போவது இல்லை.  இதுதான் சுதந்திரம். இதற்கு பிறகு அவர்கள் அவர்களாக மதம் / உடை என்று எதையும் தேர்ந்தெடுப்பது அவர்களின் உரிமை. அதற்குப்பின் நீங்கள் அவர்களின் வாழ்க்கையில் உடை/மதம்/பழக்கத்தில் தலையிடவேண்டாம்.  வழிகாட்டல் இருக்காலாம், ஆனால் மதம் சார்ந்த அல்லது குடும்பம் சார்ந்த நிர்ப்பந்தமாக இருத்தல் கூடாது.

ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை கொண்டவர்கள் .ஒரே குடும்பத்தில் ஒரே பெற்றோரால் வளர்க்கப்படும் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்தபின் வெவ்வேறு பாதையை (உணவு ,உடை,பழக்கம்,கல்வி) தேர்ந்தெடுத்து வளரும் சாத்தியக் கூறுகள் அதிகம்.  எனவே, பெற்றோர்கள் " எங்களின் பழக்கம் இது , பின்னாளில் நீ  உனதை தேர்ந்தெடுத்துக்கொள் " என்ற விசயத்தை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அது அவர்களின் மனத்தடைகளைக் களையும். பெற்றோர்கள் நல்ல மென்டோராக இருக்க வேண்டும் சர்வதியாரியாக இருக்கக்கூடாது.

உடல் உடை அரசியல்

ஆடை என்பது நாகரீக சமுதாயத்தில் உடலின் தேவைகளுக்காக அணிவது. அணியும் ஆடையைத் தாண்டி , வெளிப்படுத்தும் உடல் மொழியில்தான் கண்ணியம் உள்ளது. யாரும் எப்போதும் எல்லா உடல்க‌ளையும் புணரும் நோக்கிலேயே அலைவது இல்லை.  கணுக்கால் தெரிந்தவுடன்  காமம் வரும்படி (அதாவது காதல்) செய்துவைத்துள்ள நம் திரைப்படங்களும் , நம் நாட்டில் உள்ள பாலியல் வறட்சியும் நமது மணக்கோணல்களுக்கு ஒரு காரணம். சேலை அல்லது பாவடை தாவணி அணியவைத்து, அந்த உடையிலேயே பெரும்பாலும் புணருதல்,மோகித்தல் வகையான‌ அசைவுகளை கொடுக்கும் நமது திரைப்படங்களைவிட, நீச்சல் குளத்தில் பிகினியுடன், நேரடியாக நம்மிடம் உரையாடும் ஒரு பெண்ணின் உடல் மொழி காமத்தை தூண்டுவது இல்லை. வளர்ந்த நாடுகளில் , நீச்சல் குளத்தில் எந்தப் பெண்ணும் அவர்கள் அணிந்துள்ள உடை குறித்து கவலை கொள்வது இல்லை. இயல்பாக நம்மிடம் பேசுவார்கள். அருகில் இருப்பார்கள். அமெரிக்க நீச்சல் குளங்களில் இதுவரை நடந்துள்ள வண்புணர்வு நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை , நமது நாட்டு கோவில் திருவிழாக்களிலும், பஸ்களிலும் உரசப்படும் பெண்களின் எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கும்.

முன் அறிமுகம் இல்லாத பெண்களுடன் உடல் ஆடை குறித்தான எனது அனுபவம்
நேரடியான பேச்சுக்கள் மனத்தடைகளைக் குறைக்கும். Life Guard இல்லாத நீச்சல் குளங்களில், பாதுகாப்பு காரணக்களுக்காக தனியாக‌ ஒருவர் மட்டும் இருக்க அனுமதியில்லை. மிகச்சாதரணமாக ,பிகினி உடையுடன் என்னிடம் வந்து "தனியாக நீச்சல் அடிக்கிறேன் , கொஞ்ச நேரம் எனக்காக இங்கேயே இருக்க முடியுமா" என்று ,என்றுமே பார்த்துப் பேசியிராத ஒரு அறிமுகம் இல்லாத, வெளிநாட்டுப்பெண் நேரிடையாக கேட்டதுண்டு.


டில்லியில் இருந்து ரிசிகேஷ்,ஹரித்துவார் போன்ற வரலாற்றுச் சிறப்பும் ,இயற்கையின் கொடையுமாக உள்ள இடங்களுக்கு பயணம் சென்றபோது , ஒரு இளம் தம்பதியினர் எனக்கு அறிமுகமானார்கள். அவர்கள் ஒருவயதில் குழந்தையுடன் வந்திருந்தார்கள். பஸ்பயண நேரமே பழக்கம்.

ஹரித்துவாரில் குளித்து முடித்தபின் பெரும்பாலும் கங்கைக் கரையிலேயே உடைமாற்றல் நடக்கும்.  ஆண்கள் நாங்கள் இருவரும் முதலில் குளித்துவிட்டோம்.  நான் மட்டும் அங்கேயே துண்டைக் கட்டி உடை மாற்றிவிட்டேன்.  நாங்கள் வந்தபின் குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணும் அவள் கணவனும் குளிக்கச் சென்றனர். ஆற்றின் அதிகவேகம் கருதி மனைவியின் பாதுகாப்புக்காக அந்தக் கணவன் இரண்டாவது முறைக் குளியல்.  இருவரும் குளித்து வந்தபின், அந்த கணவன் அங்கேயே துண்டைக் கட்டி உடை மாற்றிவிட்டார். அந்தப் பெண் இப்போது உடை மாற்றவேண்டும்.

அவர்கள் இருவரும் என்னையும் அழைத்து ஒரு சேலையை சுற்றிப்பிடிக்கச் சொன்னார்கள். நானும் , அவளது கணவரும் சேலையை வட்டமாகச் சுற்றிப்பிடித்து வெளிப்புறமாக நோக்கியிருந்தோம். குழந்தையை நடுவில் கிடத்திவிட்டு நாங்கள் பிடித்துக்கொண்ட 'சேலை வட்ட மறைப்புக்குள்' வேறு புதிய உடை மாற்றினாள் அந்தப் பெண்.  நான் அவர்களின் குடும்ப உறுப்பினர் கிடையாது. பஸ்நேரப் பழக்கம் மட்டுமே. இது இயல்பு மற்றும் நம்பிக்கை சார்ந்த நிலை.  நல்ல மனங்கள் உண்டு என்பதைச் சொல்லவே இது.
 மனிதனாக இருத்தலை அங்கீகரிக்க இதைவிட ஒரு அந்நியப் பெண்ணிடம் என்ன வேண்டும்?

தற்போது வழக்கத்தில் இருக்கும் பாலைவனப் பிரதேச மக்களின் உடைகள்

ஹிஜாப் (hijab ) அன்னும் வார்த்தை அரபியின் ஹஜபா ( hajaba) என்னும் வார்த்தையில் இருந்து வந்தது. ஹஜபா என்றால் பார்வையில் இருந்து உடல் கன பரிணாமங்களை (conceals a figure) மறைத்துக் கொள்வது என்ற பொருள்படும். ஹிஜாப் உடையில் பல இரகங்கள் உள்ளது.

பெண்களுக்கான உடைகள்

அபயா (Abaya) 


உடலை தளர்வான உடையால் போர்த்திக் கொள்வது போன்ற உடை. இந்த உடைக்குள் அணியும் பிரதான உடை குறித்த கட்டுப்பாடு இல்லை.பெண்கள் அவர்கள் விருப்பப்படு எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம்.


அமிரா (Amira‌) 

 தலையை மூடும் வண்ணம் அணியும், கைக்குட்டை போன்ற சிறிய துணி.  இது அபயாவுடன் சேர்ந்து அணியப்படுவது உண்டு. இன்றைய‌ தினத்தில் இதை இஸ்லாம் மத அடையாளமாக மட்டும்  அணியும் பெண்களும் உள்ளார்கள்.


பாஸியா (Boshiya / Niqab/ Yashmak) 

அமிராவை விட நீளமானது. முகத்தை முற்றிலும் மறைத்து கண்களுக்கு மட்டும் இடைவெளிவிட்டு தலையைச் சுற்றிஅணியப்படும் உடை (veil) .


புர்கா (Burqa) 

பாஸியாவைவிட அதிக நீளம்கொண்டது. கைகளையும் மறைக்கும் வண்ணம் நீளமாக இருக்கும். பல வண்ணங்களில் இருக்கும். கண்ணிற்கு சன்னல் போன்ற அமைப்பு இருக்கும்.சதார் (Chador) 


அபயா + புர்கா சேர்ந்த அமைப்பு.


ஆண்களுக்கான உடைகள்:

டெஜ்லாபா(Djellaba) / காலபியா(Galabiyah) :

பெண்களுக்கான அபயா போல இது ஆண்களுக்கானது. தளர்வான உடை. இதனுள் அணியும் பிரதான உடை எதுவாகவும் இருக்கலாம்.

குத்ரா (Ghutra) :

இது பெண்களின் அமிரா (Amira‌) போன்ற தலையை மூடி இருக்கும்

இஸ்லாம் மதத்தின் உடைக்கட்டுப்பாடு
மேலே சொன்னவையாவும் பாலைவனப்பிரதேசப் பழக்க வழக்கங்கள். இஸ்லாம் மதத்தில் இறைத்தூதர் என்று அறியப்படும் முகம்மது அவர்கள் பிறந்த காலமாக‌ நான் அறிவது: கி.பி 571 . அவருக்கு கடவுள் குரான் இறக்கியது கி.பி 610. வரலாறு தெரியாதவர்களால் மட்டுமே பர்தா (Burqa) இப்போது இஸ்லாம் மதத்தின் அடையாளமாக மட்டும் அறியப்படுகிறது. உண்மையில் இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்னரே கி.மு 5000 காலத்தில், பெண்கள் முகத்தை மறைக்கும்விதமாக உடை அணிந்து உள்ளார்கள். Assyrian empire, காலத்திற்கு முன்னரே இந்த வகை உடைகள் இருந்துள்ளது. Byzantine Empire காலங்களில் / ரோமன் பாகனிசம் காலத்திலும் இந்த வகை உடைகள் பெண்களுக்கு இருந்துள்ளது. இதன் காலமும் முகமதுவிற்கு முன் கி.பி 200 காலத்தியது.

இந்த‌ மாதிரியான உடலை மூடிய போர்த்திய வண்ணம் இருக்கும் உடைகள் , பெரும்பாலும் பாலைவன மண் பிரதேசங்களின் மண் புயலில் இருந்து முகத்தை மறைக்கும் விதமாக ஆண்/பெண் இருபாலராலும் அணியப்பட்டது.  ஆண்களுக்கு இருக்கும் தாடி மீசை அமைப்பு இயற்கையாக மண்புயலில் இருந்து சுவாசத்தைக் காத்தாலும் , பெரும் புயல் காலங்களில் முகத்தை மறைத்தல் தேவைப்பட்டது.  மேலும் முகத்தை மூடுவது பெண்களுக்கு சமூகக்கட்டுப்பாடாகவும், உயர்குலப்பெண்கள் என்ற அடையாளமாகவும் இருந்துள்ளது.  சின்னச் சின்ன குழுக்களுக்கு இடையேயான சண்டைகளில், பருவப் பெண்களை அபகரித்துச் செல்வது அந்தக்கால வழக்கில் இருந்தது. அது போன்ற காலங்களில், பெண்கள் முகம், மற்றும் முழு உடலையும் போர்த்திய வண்ணம் இருந்தால், வயது வித்தியாசங்கள் சட்டெனத் தெரியாமல் போக வாய்ப்பு உள்ளதால் இதை ஒரு பாதுகாப்பு உணர்வுக்காகவும் அணிந்தனர்.

                                                                                                                                                                     

ஹதீஸ்கள்,பத்வாக்கள் எல்லாத்தையும் விட்டுவிட்டு ஒரிஜினல் குரானை மட்டும் பார்த்தால், 24:31 மற்றும் 24:32 வசனங்கள் உடை குறித்தான சில கட்டுப்பாடுகளைச் சொல்கிறது.

[24:31] قُل لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ؕ ذٰلِكَ اَزْكٰى لَهُمْ‌ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَعُوْنَ‏
Say to the believing men that they restrain their eyes and guard their private parts. That is purer for them. Surely, Allah is well aware of what they do.

[24:32] وَقُل لِّلۡمُؤۡمِنَـٰتِ يَغۡضُضۡنَ مِنۡ أَبۡصَـٰرِهِنَّ وَيَحۡفَظۡنَ فُرُوجَهُنَّ وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنۡهَا‌ۖ وَلۡيَضۡرِبۡنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِہِنَّ‌ۖ وَلَا يُبۡدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوۡ ءَابَآٮِٕهِنَّ أَوۡ ءَابَآءِ بُعُولَتِهِنَّ أَوۡ أَبۡنَآٮِٕهِنَّ أَوۡ أَبۡنَآءِ بُعُولَتِهِنَّ أَوۡ إِخۡوَٲنِهِنَّ أَوۡ بَنِىٓ إِخۡوَٲنِهِنَّ أَوۡ بَنِىٓ أَخَوَٲتِهِنَّ أَوۡ نِسَآٮِٕهِنَّ أَوۡ مَا مَلَكَتۡ أَيۡمَـٰنُهُنَّ أَوِ ٱلتَّـٰبِعِينَ غَيۡرِ أُوْلِى ٱلۡإِرۡبَةِ مِنَ ٱلرِّجَالِ أَوِ ٱلطِّفۡلِ ٱلَّذِينَ لَمۡ يَظۡهَرُواْ عَلَىٰ عَوۡرَٲتِ ٱلنِّسَآءِ‌ۖ وَلَا يَضۡرِبۡنَ بِأَرۡجُلِهِنَّ لِيُعۡلَمَ مَا يُخۡفِينَ مِن زِينَتِهِنَّ‌ۚ وَتُوبُوٓاْ إِلَى ٱللَّهِ جَمِيعًا أَيُّهَ ٱلۡمُؤۡمِنُونَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ

And say to the believing women that they restrain their eyes and guard their private parts, and that they disclose not their natural and artificial beauty except that which is apparent thereof, and that they draw their head-coverings over their bosoms, and that they disclose not their beauty save to their husbands, or to their fathers, or the fathers of their husbands or their sons or the sons of their husbands or their brothers, or the sons of their brothers, or the sons of their sisters, or their women, or what their right hands possess, or such of male attendants as have no sexual appetite, or young children who have no knowledge of the hidden parts of women. And they strike not their feet so that what they hide of their ornaments may become known. And turn ye to Allah all together, O believers, that you may succeed.குடும்ப உறுப்பினர்கள் தவிர்த்து மற்றவர்களிடம், பெண்கள் வெறும் மேல் சட்டையுடன் (ஜாக்கெட்) இருக்கக்கூடாது. தலையில் போடும் துணியை எடுத்து (draw their head-coverings over their bosoms, and that they disclose not their beauty) மேல் சட்டைக்குமேல் மார்பகத்தில் போர்த்தும் படி ( மாராப்பு) அணிய வேண்டும். அவ்வளவுதான் கட்டளை.

தமிழகத்தில்/ இந்தியாவில் இஸ்லாம் உடை

குரான் அந்தக்கால அரபியா பாணி "அபாயா" உடையை உதாரணமாகக் கொண்டு இந்த விளக்கம் கொடுத்து உள்ளது.  தமிழகத்தில்/இந்தியாவில் இது சேலை முந்தானையின் மூலமே சுலபமாக முடிந்துவிடும் விசயம். அல்லது சுரிதார் துப்பட்டா அதே வேலையைச் செய்கிறது. எனது புரிதலின்படி  இந்தியாவில் வாழும் ஒரு இஸ்லாமியப் பெண், சேலை அல்லது சுரிதார் (துப்பட்டாவுடன்) அணிந்தாலே அவர் குரான் கட்டளைக்கு ஏற்ப உடை அணிந்தவர் ஆவார். அல்லது பேண்ட் சட்டை போட்டு அதனுடன் நீள ஸ்கார்ப்போட்டு கழுத்தில் சுற்றி மார்பகங்களின்மீது படரும் வண்ணம் அணிந்தாலே போதும்.

எதற்கு பாலைவனப் பிரதேச அபயா உடைப்பாணி கட்டாயம் என்று தெரியவில்லை. அதுவும் இஸ்லாமியர் ஆண்கள் யாருமே , பாலைவனப் பிரதேச டெஜ்லாபா(Djellaba) / காலபியா(Galabiyah) குத்ரா (Ghutra)  பாணி உடைகளை அணியாத போது ஏன் பெண்கள் மட்டும் இப்படி இருக்கிறார்கள் என்பது புரியவில்லை.

இஸ்லாம் என்ற மதம் பாலைவனத்தில் உருவாகியது என்ற ஒரே காரணத்திற்காக பாளையங்கோட்டை வாசிகளும் அந்த நடையுடைகளைப் பின்பற்றுவது என்பது , மதத்தையும் வாழும் இடத்தையும் வேறுபடுத்த தெரியாத நிலை.

இஸ்லாம் இந்த மண்ணில் இருந்து தோன்றியது என்ற ஒரே காரணத்திற்காக இந்த பாணி உடைகளை ,  எல்லா நாடுகளிலும் இஸ்லாமியப் பெண்கள் அணிந்து மதத்தைக் காக்கும் போது, இஸ்லாம் ஆண்கள் ஏன் அரேபியா பாணி ஆடைகளை தமிழகத்தில் அணிவது இல்லை?

பர்தாவை விடுங்கள், இஸ்லாம் பிறந்த இடம் பாலைவனம். பலைவன விலங்கு ஒட்டகம். அதனால் இஸ்லாம் கதைகளில் ஒட்டகமும், அவர்களின் பிரதான மாமிச உணவாக அதன் இறைச்சியும் பயன்பட்டு வந்தது. சவூதியில் ஒட்டகம் சாப்பிட்டார்கள் என்று , ஜாம்பஜாரிலும் குர்பானிக்கு ஒட்டகம் கொண்டுவந்து மதக்கடமை ஆற்றுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

மதம் சார்ந்த உடைகளும் மற்றவர்களும்
உடை என்பது உடலின் மீதான அரசியல். இருபாலருக்கும் அதில் பங்கு உண்டு. சமுதாயத்திற்கும் அதில் பங்கு உண்டு. தான் அணியும் ஒரு உடையை, தான் பெருமையாக நினைப்பதும் , அதே கருத்தைக் கொண்டவர்கள் அதை ஆதரிப்பதும் அவர்களின் உரிமை. மதக் காரணக்களுக்காக எந்தவிதமான உடையையும் அணியும் உரிமை யாருக்கும் உள்ளது.

முகத்தை மூடிய பெண்களுடன்/ஆண்களுடன் நான் உரையாடும் போது

மனிதனின் இயல்பான சந்திப்புகள், உரையாடல், நம்பிக்கை  என்று  பொதுவாக இதை அணுகலாம். நான் கலந்து கொள்ளும் ஒரு விழாவில் ஒரு பெண் பர்தாவுடன் முகத்தை மூடிக்கொண்டு கலந்துகொண்டால், பர்தா அணியும் அவர்கள் உரிமையை நான் மதித்தாலும், ஆண்களின் பார்வையில் இருந்து தப்ப‌ ,பாலியல் சார்ந்த பாதுகாப்பின்மை காரணக்களுக்காகவே அவள் இப்படி என் முன் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளும்போது , ஆணாகிய நான் அதை எனக்கு ஏற்பட்ட அவமானமாய்த்தான் உணர்வேன்.   தன்னை பாதுகாக்க என்று எண்ணி , முகத்தை மறைத்து , என்னிடம்  பேசும்போது இந்த முகம் மறைத்தல் அடுத்த அடுத்த சந்திப்புகளில்கூட இது மாறாது என்று தெரியவரும்போது , உடல் அரசியல் மனிதனை எவ்வளவு கேவலப்படுத்துகிறது என்று  குறுகிப்போவேன் நான்.

பழகும் முன்னரே மதம் அல்லது அவர்களின் வாழும் சூழல் கற்பித்த முன் முடிவுகளுடன் ஒரு பெண் என்மீது கொண்ட நம்பிக்கியின்மை.  என்னளவில்  அது அவர் என்மீது பிரயோகிக்கும் சமுதாயப் புறக்கணிப்பு.
Tony Blair said wearing full face veils was a "mark of separation"
http://news.bbc.co.uk/1/hi/england/bradford/6066726.stm

உண்மையில் மதக்கடவுளும் மதம் சார்ந்த உடையும் பெண்களை ஆண்களின் கொடுமையில் இருந்து காக்கிறதா?

உண்மை என்னவென்றால் ,முகத்தைமறைத்தாலும் அல்லது உடல் முழுதும் மறைக்கும் அபயா பாணி உடை அணிந்தாலும் , மனித மிருகங்களிடம் இருந்து பெண்களுக்கு கடவுள் 100% பாதுகாப்பு கொடுக்கமுடியாது.


அமிலப் பெண்கள்
http://rishansharif.blogspot.com/2009/01/blog-post_08.html
(பெரிய அளவுபடங்கள்:இளகிய மனமுடையவர்கள் இப் பதிவைத் தவிர்க்கவும் )


இப்படங்களில் இருப்பவர்கள், அமிலத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண்கள். இதைச் செய்தவர்கள் ஆண்கள். குடும்ப உறுப்பினர்கள், உறவுக்காரர்களே இப்படிச் செய்துள்ளார்கள்.  மதங்களாலும் அது சொல்லும் கடவுளாலும் மனிதமிருகங்களிடம் இருந்து ஆபத்து வரும்முன் பெண்களைக் காக்கவே முடியாது. பின்னே எதற்கு பெண்களுக்கு மதம் சார்ந்த உடைக்கட்டுப்பாடு?
 • ஒருவன்/ஒருத்தி  ஏதோ ஒரு மதத்தில் சேர்ந்து வாழலாம்/பொழுதைப் போக்கலாம்.
 • மதத்தில் சேர்ந்து, மதப்புத்தம படித்து, மதச்சட்டை அணிந்து, மதக் கடவுள் தொழுது, மதக் கடவுளுக்கும் தூதருக்கும் விசுவாசமாய் இருந்தால் மட்டும் அவன் நல்லவனாகிவிட முடியாது.
 • சாத்தானை இறைவனாலும் விரட்டமுடியாது.
 • ஆடையோ அல்லது எல்லாம் வல்ல இறைவனோ பெண்களை எக்காலத்திலும் காக்க முடியாது.
 • சமூகமும், சரியான புரிதலுமே பெண்களை மட்டும் அல்ல அனைவரையும் ஒரே இடத்தில் புரிதலுடன் வாழவைக்க முடியும்.

மதப்புத்தகத்தில் சொல்லாததைச் செய்யலாமா?  
பிரா கண்டுபிடிக்கப்பட்டது 1913 ல் by a New York socialite named Mary Phelps Jacob. மார்பகங்கள் வளர்ச்சியடையத் துவங்கியவுடன், பெண்களுக்கு இது ஒரு உடல் சார்ந்த உடை. இப்போது இது எல்லா மதப் பெண்களாலும் பயன்படுத்தப்படுகிறது. 1913 முன்னரே எழுதப்பட்ட மதப்புத்தகங்கள் இதைச் அணியச் சொல்லவில்லை. என்ன செய்யலாம்? இப்படி எல்லாம் ஒன்று கண்டுபிடிக்கப்படும் என்று அந்தக்கால மதத்தூதர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அவர்களைச் சொல்லியும் குற்றம் இல்லை.

 • மதப்புத்தகம் சொல்லாததை காலத்திற்கு ஏற்ப ஏற்கும்போது,
 • மதப்புத்தகம் சொல்லியதை காலம்/ வாழும் சூழல் / பருவ நிலை/ கருதி மாற்றிக்கொள்ளலாம்.
 • மதப்புத்தகம் சொல்லிவிட்டது என்பதற்காக விடாமல் அணிவது  தனிப்பட்ட உரிமை.


France புதிய சட்டம் பரிசீலனை.

http://www.telegraph.co.uk/news/worldnews/europe/france/6946579/Women-who-wear-burkas-in-France-face-700-fine.html

* France passed a law in 2004 banning students and staff from wearing "conspicuous" religious symbols in schools – including veils – to defend secularism.
* Women who wear the burka in public will be fined £700 under laws being considered in France.
* MPs will vote on the proposal this month after a long impassioned debate over the merits of outlawing the burka and niqab.


 Tens of Thousands of Women Arrested Because of Their Clothingபர்தா ஆவணப்படம்Vijay TV:

விஜய் டிவீ பர்தா நிகழ்ச்சி விள‌ம்பரம்
(கடைசி 1:40 நிமிட கிளிப்பிங்ஸில் பர்தா நிகழ்ச்சியின் முன்னோட்டம் உள்ளது)
விஜய் டிவி அலுவலக முற்றுகை அறிவிப்பு
(இஸ்லாத்தில் உள்ள இஸ்லாம் பெண்கள், அதுவும் அவர்கள் அணியும் பர்தா பற்றி அவர்களே ஒரு டிவியில் பேச இஸ்லாம் சங்க பொறுப்பாள‌ர்களின் அனுமதி வேண்டும்)
http://www.tntj.net/?p=9594

விஜய் டிவி நிகழ்ச்சி வாபஸ்
http://www.tntj.net/?p=9622

விளக்கங்கள் :முற்றுகை இல்லை.
http://www.onlinepj.com/vimarsanangal/vijay_tv/


உடல் , உடை , மதம் அரசியல் விமர்சனங்கள்

சில தமிழ்ப்பதிவுகளின் சுட்டிகள்

தருமி சமூகம்
http://dharumi.blogspot.com/search/label/சமூகம்

வால்பையன் இறை நம்பிக்கை
http://valpaiyan.blogspot.com/search/label/இறை நம்பிக்கை

தெகா
http://thekkikattan.blogspot.com/search/label/சமூகம்

செங்கொடி
http://senkodi.wordpress.com/
http://ta.wordpress.com/tag/இஸ்லாம்-கற்பனைக்கோட்டை/

ஓசை செல்லா -லயலோ கல்லூரி லீனா மணிமேகலை உடை சர்ச்சை!
http://osaichella.blogspot.com/2007/12/blog-post_4567.html

I didn't post this video to teach you how to beat your wife. I posted because it is interesting how different cultures do things differently. -TheDavidPoeShow

Wife Beating  - The Rules
http://www.youtube.com/watch?v=mr-vt2DTCFw

http://www.youtube.com/watch?v=Wp3Eam5FX58

Sudan women face 20 lashes for 'indecent' clothes
http://www.google.com/hostednews/afp/article/ALeqM5jV5NUROkttGGjhb_YX78gm4KJXqg

SUDAN: Female journalist faces 40 lashes for choice of clothes
http://latimesblogs.latimes.com/babylonbeyond/2009/07/sudanese-journalist-taken-to-court-for-sensational-clothing.html

Trouser wearing Woman jailed in sudan
http://www.youtube.com/watch?v=bGq5UrDJdNA

Unbelievable gore violence Kurdish Girl Stoned to Death
http://www.youtube.com/watch?v=2rgSH0h45Eo

Picture and  other resources are from web and subject to respective site copyright:

http://en.wikipedia.org/wiki/Byzantine_dress
http://en.wikipedia.org/wiki/Assyria
http://lexicorient.com/e.o/assyria.htm
http://karenswhimsy.com/assyrian-empire.shtm
http://www.suppressedhistories.net/articles/veil.html
http://www.fashion-era.com/ancient_costume/assyrian_clothing_pictures_assur.htm
http://www.odysseyadventures.ca/articles/layard_assyria/layard_text.htm
http://middleeasternaffairs.suite101.com/article.cfm/the_burqa_controversy#ixzz0chDLtvqC
http://middleeasternaffairs.suite101.com/article.cfm/the_burqa_controversy
http://www.mysticalpublishing.com/garb_of_middleeast.asp

52 comments:

 1. எல்லா மதத்திலும் ஆண்களுக்கு மட்டும் விதிவிலக்கு இருக்கிறது, பெண்கள் எப்போதும் அடிமைகளாகவே பார்க்கபடுகிறார்கள்!

  ReplyDelete
 2. தலைப்பே எல்லாம் சொல்லிவிட்டது, உள்ளேயும் விஷயம் பல.

  ReplyDelete
 3. தகவல் களஞ்சியமாய் இருந்ததுங்க கல்வெட்டு..

  எதை கோடிட்டு காட்டுவதுன்னு தெரியலை பல கருத்துகள் சிறப்பா சொல்லியிருக்கீங்க..

  ReplyDelete
 4. எவ்வளவு உழைப்பு தேவைப்பட்டிருக்கும் இநத ஆராய்ச்சிக்கு. சிறந்த ஒரு படைப்பு.

  ReplyDelete
 5. பொறுமையுடனும், அக்கறையுடனும், கருத்தை வலியுறுத்தி இருக்கிறீர்கள் நண்பரே..

  வாழ்த்துகள்

  ReplyDelete
 6. //பெற்றோர்கள் நல்ல மென்டோராக இருக்க வேண்டும் சர்வதியாரியாக இருக்கக்கூடாது.//

  இந்த அளவு நாம் எல்லோரும் 'முன்னேற' முடியுமா?

  ReplyDelete
 7. மதத்தின் அடையாளமாக கருதப்படும் உடைகளை விடுங்கள். இன்னமும் சுட்டெரிக்கும் வெயிலில் நாம் கிரிகெட் விளையாடுவதும், கான்வென்ட் என்று சொல்லக்கூடிய பள்ளிகளில் கழுத்துக்கு டையும், காலுக்கு பூட்சும் போட சொல்லுகிறார்களே அதை என்னவென்று சொல்வது.

  இவை எல்லாமே மேலை நாடுகளில் அங்குள்ள தட்ப வெட்ப நிலைகளுக்காக உருவாக்கப்பட்டது.

  ReplyDelete
 8. நல்ல பதிவு

  //பெற்றோர்கள் நல்ல மென்டோராக இருக்க வேண்டும்.//

  இருப்பார்களா !

  ReplyDelete
 9. As you said, a man rules his family.
  If a man understands his wife's /daughter's clothing choice, problems will reduce.

  Only a man needs to do this in his home. Only he needs correct mental setup to accept their family members right-to-clothing.

  ReplyDelete
 10. வால்பையன் , D.R.Ashok ,கையேடு ,புபட்டியன்,சுரேஷ் கண்ணன் , நிகழ்காலத்தில்,ஆதி மனிதன், ரமேஷ் கார்த்திகேயன்,தருமி ,Anonymous நன்றி!

  ******

  தருமி & ரமேஷ் கார்த்திகேயன்,

  "அடே நல்லாயிருக்கே! செய்யாலாம்" என்ற் எண்ணமே ஆரம்பம். முயற்சி செய்ய விரும்புவதே நல்ல ஆரம்பம் இல்லையா?

  பெற்றோர் ஒரு வழியில்போனல் குழந்தைகளும் அதே வழியில் போவார்கள் என்று சொல்ல முடியாது.

  ஒரு கட்டத்திற்குபின் அவர்கள் சமூகத்தின் தாக்கத்திற்கு ஆளாகிறார்கள். உதாரணம்: பள்ளி,கல்லூரி,நண்பர்கள் ...

  ஆரம்ப காலங்களில் "சேட்டை பண்ணினா சாமி கண்ணைக் குத்திடும்" என்ற அளவில் பெற்றோர் நம்பும் மத/கடவுளைச் சொல்லி பயமுறுத்தலாம். ஆனால் 10 வயதிற்குள் அவர்களுக்கு உணமையைச் சொல்லிவிட வேண்டும்.

  இது மதம்/கடவுள் தாண்டி பாலியல்,பணச்சேமிப்பு,உடல் அக்கறை பராமரிப்பு என்று எல்லா விசயமும் சொல்லப்படவேண்டும்.

  ***********

  ஆதி மனிதன்,
  கிரிக்கெட் பெரிய காமடியானது. அதை விட்டுவிடுவோம் அது பற்றி தனியே ஒரு பதிவே எழுதலாம்.
  மற்றபடி. டை,கோட்டு என்பது நாகரீகமாக நம்பப்படுகிறது. நிச்சயம் வெயில் பிரெதேசங்களுக்கான உடை அல்ல. கான்வென்ட் ஆடைகள் சமூகம் சார்ந்த (மதம் தாண்டிய)ஒரு பொது கருத்து. ஆங்கிலம் பேசினால் அறிவாளி என்பது போல விதைக்கப்பட்ட ஒன்று.

  *********
  அனானி @ (Thursday, January 21, 2010 12:44:00)
  ஆண்களை மட்டும் குறை சொல்ல விரும்பவில்லை. பெண்களும் இதில் அடக்கம்.

  ஆண்கள் (குடும்பத் தலைவன்)தன்வீட்டுப் பெண்கள் மறைத்து இருக்க வேண்டும் என்பதற்கு மதத்தைக் காரணமாகக் கொள்வதும், பெண்கள் (குடும்பத் தலைவி)அதையே பாதுகாப்பு என்று கருதியும், மதம் சொன்னது என்று பழைய கருத்துக்களின் அடிப்படையிலும் வாரிசுகளின் மேல் சுமத்துகிறார்கள்.

  நிச்சயம் பாட்டியை சுரிதார் போடச் போடச் சொல்ல முடியாது. அல்லது அம்மாவை பேண்ட் போடச் சொல்ல முடியாது. அவர்கள் அப்படி வளர்ந்துவிட்டவர்கள். ஆனால் இன்றைய தலைமுறை குழந்தைகளின் மீது மதங்களைத் திணிப்பது வன்முறை.

  ReplyDelete
 11. எதிர்கருத்து இங்கு எதுவும் வராமல் இருப்பதற்கு நீங்கள் கொடுத்துள்ள பெருமளவிலான தரவுகளே காரணம்.
  *******************************

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. அருமையான பதிவு. நன்றி

  ReplyDelete
 13. வேலையிடத்தில் சிறிது நேரம் பிரேக் கிடைத்தது, பாதி தான் படித்தேன்.

  "அமெரிக்க நீச்சல் குளங்களில் இதுவரை நடந்துள்ள வண்புணர்வு நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை , நமது நாட்டு கோவில் திருவிழாக்களிலும், பஸ்களிலும் உரசப்படும் பெண்களின் எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கும்."

  - என்னா சொல்ல வர்ரீங்கன்னு எனக்கு புரியலை,
  வைரமுத்து ஒரு கவிதை எழுதினார் அயல்நாட்டில் உள்ளவர்களுக்கு தன் மனைவியின் கற்பை விட காரின் கற்பு தான் ரொம்ப முக்கியம் என்று படித்ததாக நினைவு.

  அங்கே உரசல் எல்லாம் ஒரு மேட்டரே அல்ல, தவிர, வன்புணர்வை தூண்டுவது எது என்று மட்டும் சொல்லுங்கள்..?

  ReplyDelete
 14. ஆனாலும் "கடவுள்" ஏன் இப்படி ஆண் - பெண் ஈடுபாட்டை வைத்து விட்டு, இப்படி வேறு ஆணைகள் கொடுத்திட்டாரு .. ?

  ReplyDelete
 15. //nagoreismail said...
  வைரமுத்து ஒரு கவிதை எழுதினார் அயல்நாட்டில் உள்ளவர்களுக்கு தன் மனைவியின் கற்பை விட காரின் கற்பு தான் ரொம்ப முக்கியம் என்று படித்ததாக நினைவு.//

  வைரமுத்து, கார் , கற்பு .... மன்னிக்கவும் இவை வைரமுத்து சொன்னதைப் பற்றி அல்ல. கற்பு என்று நீங்களும் வைரமுத்துவும் எதை நினைக்கிறீர்கள் என்று தெரியாது. மதம், உடை, உடல் மொழி அதன் அரசியல் பற்றியே இந்தப்பதிவில் பேச விரும்புகிறேன்.
  ...

  // அங்கே உரசல் எல்லாம் ஒரு மேட்டரே அல்ல, தவிர, வன்புணர்வை தூண்டுவது எது என்று மட்டும் சொல்லுங்கள்..?//

  எங்கே உரசல் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை? அமெரிக்காவிலா? பெண்களையோ அல்லது ஆண்களையோ தமிழ்நாட்டில் நடப்பதுபோல பஸ்ஸில் உரசலாம் என்கிறீர்களா? இல்லை உங்கள் கருத்து தவறு. அப்படியே உங்கள் கருத்து சரியென்று நீங்கள் நினைத்தாலும். அது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தும் சரியா. அப்படி எனில் இஸ்லாம் பெண்களும் அடக்கம். உடையோ அவர்களின் கடவுளோ அவர்களைக் காக்காது சரியா? அதுதான் நான் சொல்லவருவதும்.

  .....
  வன்புணர்வை எது தூண்டுகிறது ?

  நிச்சயம் எனக்குத் தெரியவில்லை.
  Rape has nothing to do with sex. Rape is purely an act of violence and control. ஆடையோ கடவுளோ காக்கமுடியாது என்பது எனது புரிதல்.
  ஏன் நடக்கிறது என ப‌ல அறிவியல் விளக்கங்களுடன் ரேப்பிஸ்ட் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு வருகிறது.

  சில உதாரணங்கள். கூகிளில் நிறையத் தகவல்கள் உள்ளது.


  A Natural History of Rape: Biological Bases of Sexual Coercion
  http://www.medscape.com/viewarticle/418839
  --

  Types of rape
  http://en.wikipedia.org/wiki/Types_of_rape
  --

  Myth: Men can't be raped.
  TRUTH: Approximately 92,700 men are raped each year in the U.S.


  The TRUTH About Rape
  http://www.medicinenet.com/script/main/art.asp?articlekey=46850

  --
  Rape is not an act of sex and will never be an act of sex.
  http://www.womensweb.ca/violence/rape/index.php

  ReplyDelete
 16. //TRUTH: Approximately 92,700 men are raped each year in the U.S.//


  முக்காலமும் உணர்ந்த அல்லாவுக்கு இது மட்டும் தெரியாம போச்சு, தெரிஞ்சிருந்தா பெண்களுக்கு பர்தா மாதிரி, ஆண்களுக்கு குர்தா போட சொல்லியிருப்பார்!

  சுயநினைவுள்ள ஒரு பெண்ணை ஒரு ஆணால் கற்பழிக்க முடியாது என்பது தான் மருத்துவ உண்மை.

  ReplyDelete
 17. இஸ்மாயில்,
  வன்புணர்வை தடுப்பது குறித்தான பாடங்கள் / சுற்றறிக்கைகள்.
  இவை யாவும் அமெரிக்காவின் Rape Prevention and Education (RPE) Program

  1.Sexual Violence Prevention: Beginning the Dialogue
  http://www.cdc.gov/violenceprevention/pdf/SVPrevention-a.pdf

  2.Rape Prevention and Education Grant Program: At A Glance
  http://www.cdc.gov/ncipc/pub-res/RPE.htm
  http://www.cdc.gov/ncipc/pub-res/pdf/RPE%20AAG.pdf

  ReplyDelete
 18. உங்கள் தலைப்பை ஏன் இஸ்லாமிய ஆண்கள் அரேபியா ஆடையை தமிழகத்தில் அணிவது இல்லை.?

  - நீங்கள் ஆதாரமாக காட்டியிருக்கும் குரான் வசனங்களை படித்து பார்ப்போம்.

  24:31ல் ஆண்களின் பார்வைகளை பற்றியும்
  24:32ல் பெண்களின் உடையையும் பற்றியும்
  பேசுகிறது.

  ஆண்களுக்கு உடையை பற்றி வரவே இல்லை. ஆனால் அதற்காக அவர்களுக்கு கட்டுபாடுகள் இல்லாமல் இல்லை. அவர்களுக்கு கட்டுப்பாடு அவர்களது பார்வையில் இருக்கிறது, அதாவது அவர்களுக்கு பர்தாவோ குர்தாவோ அவர்களின் கண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

  இன்னும் சொல்லப் போனால் பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பர்தாவை விட ஆண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பர்தா (பார்வையை தாழ்த்திக் கொள்வது) என்பது ஃபாலோ பண்ணுவதற்கு மிகவும் கடினமானது என்று கருதுகிறேன்.

  பர்தாவை கடையில் வாங்கி போட்டுக் கொண்டால் போச்சு. என் மனைவியே கூட எனக்கு வெளியே போகும் போது எல்லாம் பர்தா தான் நல்ல வசதி என்று சொல்கிறார்.

  ஆனால் ஆண்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ளுவது என்பது பர்தா போடுவதை விட கடினமானது.


  நான் வேண்டுமென்றால் இப்படி சொல்கிறேன், அரேபிய பாணி ஆடைகள் அரேபிய கலாச்சாரம்.அதாவது அரேபிய கிறிஸ்தவர்களும் கூட இதே போல் உடை அணிந்து வருவார்கள்.

  ஆனால் 24:32 வசனம் வந்த பிறகு பர்தா அல்லது ஹிஜாப் என்பது அரேபிய பெண்களின் கலாச்சாரம் மட்டுமல்ல, இது இஸ்லாமிய கலாச்சாரமாகவும் ஆகி விட்டது.
  அதாவது நீங்கள் பாகிஸ்தானுக்கோ இந்தியாவுக்கோ சென்றாலும் அங்குள்ள பெண்கள் நிச்சயமாக அரேபியர்கள் இல்லை என்றாலும் அவர்கள் ஹிஜாபை அணிவார்கள்.

  அடுத்து, நீங்கள் சொல்வது போல் சேலை அணிந்து முந்தானையை தலையை போட்டுக் கொள்வதை விட சுடிதார் அணிந்து துப்பட்டாவை தலையில் அணிந்து மார்பை மூடிக் கொண்டாலும் அது மறைப்பு ஆடை தான்.

  அது தாராளமாக ஹிஜாப் என்று அழைக்கலாம் என்பது என்னளவில் உள்ள கருத்து.

  உங்களை நம்பாமல் ஒரு பெண் பர்தா அணிகிறாள் என்பதால் உங்கள் உள்ளம் கூனி குருகுவதாக சொல்வது என்னளவில் உச்சகட்ட நகைச்சுவை

  நேரமின்மையால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்

  ReplyDelete
 19. //ஆண்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ளுவது என்பது பர்தா போடுவதை விட கடினமானது.//

  முகமது காலத்தில் யாரும் கண்னை பார்த்து பேசமாட்டார்கள் போல!

  ஆண்களின் கண்னை திறந்து விட்டு மூளையை மழுக்கிவிட்டாரோ அல்லா!

  ஏங்க இஸ்மாயில் லாஜிக்குன்னா என்னான்னு உங்களுக்கு தெரியவே தெரியாதா!?

  பர்தா அணிந்த பெண்களை விட பர்தா அணியாத பெண்கள் தான் உலகில் அதிகம், அவர்களெல்லாம் தினம் தினம் வன்முறையில் அவதிபடுகிறார்களா என்ன!?


  //உங்களை நம்பாமல் ஒரு பெண் பர்தா அணிகிறாள் என்பதால் உங்கள் உள்ளம் கூனி குருகுவதாக சொல்வது என்னளவில் உச்சகட்ட நகைச்சுவை//

  உங்களிடம் நான் நேரில் பேசும் போது பாதுகாப்புக்கு இரண்டு போலிஸ்காரர்களை வைத்து கொண்டால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் நண்பரே!

  ReplyDelete
 20. கல்வெட்டு சார், உண்மையிலேயே உங்கள் எழுத்துக்களை எனக்கு பிடிக்கும்

  என் கருத்துக்கு என் நம்பிக்கைக்கு என் மதத்துக்கு எதிரான கருத்துக்களை சொன்னாலும் உங்கள் எழுத்துக்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.

  நன்றி, நண்பர் வால்பையனின் நியாயமான கேள்விக்கு ஏனோ பதில் எனக்கு பிடிக்காமல் போனதற்காக வருந்துகிறேன்

  ReplyDelete
 21. good research, my thinking taken next level. Thank u

  ReplyDelete
 22. //வால்பையனின் நியாயமான கேள்விக்கு ஏனோ பதில் எனக்கு பிடிக்காமல் போனதற்காக வருந்துகிறேன்//

  அதே வருத்தத்தை தான் அவரும் தெரிவித்திருந்தார்!

  ReplyDelete
 23. //என்பது ஃபாலோ பண்ணுவதற்கு மிகவும் கடினமானது என்று கருதுகிறேன். //

  ஹா ஹா ஹா ! நீங்க தான் நிஜ இஸ்லாமியர் ! ! !

  ReplyDelete
 24. //நேரமின்மையால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்//

  இதுதாங்க உச்ச கட்ட காமெடி

  ReplyDelete
 25. //உங்களிடம் நான் நேரில் பேசும் போது பாதுகாப்புக்கு இரண்டு போலிஸ்காரர்களை வைத்து கொண்டால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் நண்பரே//

  உசாராயிட்டீங்கன்னு நெனப்போம் !

  ReplyDelete
 26. //சுயநினைவுள்ள ஒரு பெண்ணை ஒரு ஆணால் கற்பழிக்க முடியாது என்பது தான் மருத்துவ உண்மை.//

  எந்த மருத்துவம் தல ! சேலம் சித்த மருத்துவமா !!

  ReplyDelete
 27. //வன்புணர்வை தூண்டுவது எது என்று மட்டும் சொல்லுங்கள்..?//

  அதுதான் !

  ReplyDelete
 28. //எல்லா மதத்திலும் ஆண்களுக்கு மட்டும் விதிவிலக்கு இருக்கிறது//
  விதி
  விலக்கு இருக்கலாம் மாத விலக்கு இருந்தாதான் பிரச்சன

  ReplyDelete
 29. //முக்காலமும் உணர்ந்த அல்லாவுக்கு இது மட்டும் தெரியாம போச்சு, தெரிஞ்சிருந்தா பெண்களுக்கு பர்தா மாதிரி, ஆண்களுக்கு குர்தா போட சொல்லியிருப்பார்//

  அவன் சொல்றான் இவன் சொல்றான்னு கண்டதையும் வாங்கிப் போடாதீங்க ! ஒரிஜினல் 420 ஜர்தா வாங்கிப் போடுங்க

  ReplyDelete
 30. .

  nagoreismail , rajan RADHAMANALAN, அனானி, செல்வன், minsarakannan நன்றி!


  .

  ReplyDelete
 31. .

  நாகூர்ஸ்மாயில்,
  கணவன் மனைவியை அடிக்கலாம் . அது இறைவனின் கட்டளை என்றும், எவ்வாறு அடிப்பது என்றும் பல you tube படங்கள் உள்ளது.


  Wife Beating - The Rules

  http://www.youtube.com/watch?v=mr-vt2DTCFw

  http://www.youtube.com/watch?v=Wp3Eam5FX58

  ...இது ஒரு நிகழ்ச்சி. இதை பலர் பார்க்கிறார்கள். பார்த்த ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணம் உருவாகும்.


  1. என்ன கொடுமை சரவணா இது?
  2. அட பிக்காலிபயலுகலா.
  3. அட இப்படியும் அடிக்கலாமா?
  4. இதில் என்ன வியப்பு உள்ளது கடவுள்தான் சொல்லியுள்ளார், அதை மீற‌க்கூடாது.

  ...இப்படிப்பல கருத்துகள் வரும் சரியா?

  முகம் மறைத்துப் பேசுதல் என்பது என்னளவில் எனக்கு act of insult
  இது உங்களுக்கு நகைச்சுவையாக தெரிவது உங்களின் உணர்வு.

  ஒரே நிகழ்வு பலருக்கும் பலவிதாமன உணர்வுகளைத் தோற்றுவிக்கும். இது இயல்பானது வியப்பேதும் இல்லை.

  .

  ReplyDelete
 32. //நாகூர்ஸ்மாயில்....

  அடுத்து, நீங்கள் சொல்வது போல் சேலை அணிந்து முந்தானையை தலையை போட்டுக் கொள்வதை விட சுடிதார் அணிந்து துப்பட்டாவை தலையில் அணிந்து மார்பை மூடிக் கொண்டாலும் அது மறைப்பு ஆடை தான்.
  அது தாராளமாக ஹிஜாப் என்று அழைக்கலாம் என்பது என்னளவில் உள்ள கருத்து. //


  உங்களுக்கு சேலையைவிட துப்பட்டா ஒகே. சிலருக்கு அபயா தான் ஓகே. எல்லாம் அவரவர் புரிதல்.

  ReplyDelete
 33. //நாகூர்ஸ்மாயில்,...
  24:31ல் ஆண்களின் பார்வைகளை பற்றியும்
  24:32ல் பெண்களின் உடையையும் பற்றியும் பேசுகிறது.

  ஆண்களுக்கு உடையை பற்றி வரவே இல்லை. //


  24:31 ல் restrain their eyes and guard their private parts என்றும் வருகிறது. இங்கே guard their private parts ஆடைகுறித்தானது என்பது எனது புரிதல்
  ....

  குரானில் பெண்களுக்கு மார்பகத்தை மறைக்கும்விதமாக (மாராப்பு) துணி இருக்கவேண்டும் என்றுதான் சொல்கிறது. இஸ்லாமியப் பெண்கள் அரேபிய அபயா உடை அணியுங்கள் என்று எங்கும் சொல்லவில்லை.

  இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

  (A) நீங்கள் ஏற்றுக் கொண்டால்...... உங்களுக்கான கேள்வி.
  "கடவுளு"க்கான அரேபியச் சொல்லான "அல்லா"வை ஆண்களும் பெண்களும் பயன்படுத்தும்போது , உடைவிசயத்தில் ஏன் பெண்களுக்கு மட்டும் அரேபிய பாணி?
  இஸ்லாம் பெண்கள் பெண்கள் அரேபிய அபயா உடை அணியும்போது , ஆண்கள் ஏன் அரேபிய உடைகளை அணிவது இல்லை?

  (B) நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால்......குரானில் "பெண்கள் அரேபிய அபயா உடை அணியவேண்டும்" என்ற‌ கட்டளை இருக்கிறது என்றால் எனக்கு அந்த அதிகார வரிசை எண்களை மட்டும் தாருங்கள். மொழிபெயர்ப்புகள் தேவை இல்லை. அது போல தயவு செய்து ஹ‌தீஸ்,பத்வாக்களைச் சுட்டவேண்டாம்

  .

  ReplyDelete
 34. இந்து மதத்தில் எப்படி தாலி என்பது பெண்ணுக்கு மட்டுமே உரியதாகிவிட்டதோ, அதைவிட கொடுமையானது பர்தா விடயம். 10 வயது குழந்தை கூட பர்தா போட்டுக்கொண்டு போகிறது.

  இதுபற்றி பொதுவான இஸ்லாமியர்களின் கருத்து "பெண்களுக்கு பர்தா கண்ணியமாக இருக்கிறது, வசதியாகத் தான் இருக்கிறது". இந்த வட்டத்தைத் தாண்டி அவர்களால் யோசிக்கவே முடியாது.

  ReplyDelete
  Replies
  1. //10 வயது குழந்தை கூட பர்தா போட்டுக்கொண்டு போகிறது.//
   இஸ்லாமிய சட்டங்களை முழுமையாக நீங்கள் தெரிந்து கொண்டால் இந்த பிரச்சினையே இல்லை..!!

   வயது வந்த பெண்கள் தங்கள் அங்கங்களை மறைக்க வேண்டும் என்றுதான் கட்டளை இடப்பட்டு உள்ளது சகோ..!!!


   //இதுபற்றி பொதுவான இஸ்லாமியர்களின் கருத்து "பெண்களுக்கு பர்தா கண்ணியமாக இருக்கிறது, வசதியாகத் தான் இருக்கிறது". இந்த வட்டத்தைத் தாண்டி அவர்களால் யோசிக்கவே முடியாது.///

   ஹிஜாப் பெண்களை அடிமைப்படுத்துகிறது, அடக்கி ஆள்கிறது, இந்த வட்டத்தை தாண்டி உங்களாலும் யோசிக்க முடியாது போலிருக்கிறது...!!!!

   நேரம் கிடைத்தால் ஹிஜாப் பற்றிய இஸ்லாமியர் அல்லாத மாற்று மத சகோதரிகளின் பதிவுகளை பாருங்கள்...!

   http://vanjoor-vanjoor.blogspot.com/2008/09/blog-post_09.html

   http://vannathuli.blogspot.com/2012/03/blog-post_29.html

   http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_06.html

   Delete
 35. //இதுபற்றி பொதுவான இஸ்லாமியர்களின் கருத்து "பெண்களுக்கு பர்தா கண்ணியமாக இருக்கிறது, வசதியாகத் தான் இருக்கிறது". இந்த வட்டத்தைத் தாண்டி அவர்களால் யோசிக்கவே முடியாது.//

  எந்த மதம் தான் மனிதர்களை சுயமாக யோசிக்க சொல்லுது!
  அப்படி யோசிச்சா அவுங்க நற்குடியில் சேர முடியாதே!

  ReplyDelete
 36. .
  //இந்த வட்டத்தைத் தாண்டி அவர்களால் யோசிக்கவே முடியாது.//

  குட்டிப்பிசாசு,
  மதம் சொல்லிக்கொடுத்த வட்டத்தை தாண்டி யோசித்தால் அவர்கள் அந்த மதத்தில் இல்லை என்று அர்த்தம்.

  உதாரணம்:
  அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள்..ஜெயலலிதாவை தாண்டி யோசித்தால்(யோசிக்க நினைத்தாலே) அவர்கள் அதிமுக வில் இல்லை. ஆப்பு எப்போதும் தலைக்குமேலே இருக்கும்.

  .

  இஸ்லாத்தில் ஒருவர் குரானை கேள்வி கேட்டாலே(கேள்வி என்ன கேள்வி சந்தேகித்தாலே) ஆட்டோமெடிக்காக இஸ்லாம் அல்லதாவ‌ர் ஆகிவிடுவார்.

  1.குரானை வரிக்கு வரி அப்படியே நம்புவதும்.
  2.தூதர் முகம்மதுவை கடைசித்தூதராக ஏற்பதும்
  ஒருவர் இஸ்லாமியர் என்ப‌தற்கான மத அடையாளம்.

  இதைத்தாண்டி

  3.ஹதீஸ்
  4.பத்வா
  5.லோக்கல் ஜமாத்

  போன்ற சமூகம் சார்ந்த நிர்ப்பந்தங்களும் உண்டு.

  ReplyDelete
 37. குட்டிபிசாசு said.....
  இந்து மதத்தில் எப்படி தாலி ..


  தாலி தமிழகத்தில் சில இஸ்லாமிய மக்களிடம் உண்டு. கருகுமணி போன்ற ஒன்று. ஆனால் குரான் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்

  http://www.youtube.com/watch?v=kH8mhEzVeK4

  இந்து, தாலி தனியாகப் பேசவேண்டிய அளவிற்கு நிறைய விசயங்கள் உண்டு. தனியாகப் பதிவு செய்யலாம் அதை.

  .

  ReplyDelete
 38. //Wife Beating - The Rules

  http://www.youtube.com/watch?v=mr-vt2DTCFw

  http://www.youtube.com/watch?v=Wp3Eam5FX58
  //

  எப்டீங்க இப்படி கண்டுபிடிக்கிறீங்க !!

  ReplyDelete
 39. / தருமி,
  எப்டீங்க இப்படி கண்டுபிடிக்கிறீங்க !!//

  வேற வேலை? :-)))))

  இதைவிட பல விசயங்கள் you tube ல கிடைக்கும்.

  .

  http://www.youtube.com/watch?v=mr-vt2DTCFw

  அதுல அவர் "இதுக்கெல்லாம் நாம் வெட்கப்படக்கூடாது", "நல்ல ப்ராக்டீஸ் பண்ணுங்க" (ஆங்கில் பொழி பெயர்பின் படி நான் புரிந்து கொண்டது)என்று காமடி பண்ணுவார்.
  இதெல்லாம் அவங்க அராபியா வழக்கம் நமெக்குதுக்கு வம்பு.
  .

  இஸ்லாமின் அடிப்படைக் கருத்துகள் என்பது குரானை , ஹதீஸ்,ஷரியா ,பத்வா ,ஜமாத் என்று பலவற்றை உள்ளடக்கியது. ஏதோ ஒரு புள்ளியில் தேடினால் அது எங்கோ இட்டுச் செல்கிறது. குரானை மட்டும் நான் பயன்படுத்துகிறேன்.

  .

  ReplyDelete
 40. "ஹா ஹா ஹா ! நீங்க தான் நிஜ இஸ்லாமியர் ! ! !"

  - செல்லாது, செல்லாது - உங்க சாட்சியை சொன்னேன்

  "இதுதாங்க உச்ச கட்ட காமெடி"

  - என் பொழப்பு அப்டி தான் இருக்கிது,நான் என்னா செய்யட்டும்..?
  -----------------------

  யார் யாருக்கோ பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

  ------------------------
  "நாகூர்ஸ்மாயில்,
  கணவன் மனைவியை அடிக்கலாம் . அது இறைவனின் கட்டளை என்றும், எவ்வாறு அடிப்பது என்றும் பல you tube படங்கள் உள்ளது."

  - என்ன சார் இது? , ஹதீஸையே வேண்டாங்குறீங்க, யுடியுபை ஏத்துக்குறீங்க?

  "24:31 ல் restrain their eyes and guard their private parts என்றும் வருகிறது. இங்கே guard their private parts ஆடைகுறித்தானது என்பது எனது புரிதல்"

  - பார்வையை கட்டுபடுத்தி அதாவது உதாரணமாக ஒரு பெண்ணை பார்த்து பேசினால் முகத்தை மட்டும் பார்ப்பது, கண்ணை பார்த்து பேசுவது தனிப்பட்ட உறுப்புகளை (அதாவது குறிப்பாக மர்ம ஸ்தானங்களை)பாதுகாத்து கொள்வது - இதை விட அழகா ஒழுக்கத்தை போதிக்க முடியாது என்பது எனது புரிதல்


  "குரானில் பெண்களுக்கு மார்பகத்தை மறைக்கும்விதமாக (மாராப்பு) துணி இருக்கவேண்டும் என்றுதான் சொல்கிறது. இஸ்லாமியப் பெண்கள் அரேபிய அபயா உடை அணியுங்கள் என்று எங்கும் சொல்லவில்லை."

  - நீங்க ஏன் சுரிதார் துப்பட்டா அல்லது சேலை தலைப்பு என்று போட்டு மறைத்தாலே போதும் என்று எதிர்பார்க்கிறீர்கள். பர்தா மறைப்பதற்கு நல்லதொரு வசதியான ஆடை, அவ்வளவு தான். உதாரணமாக, நழுவும் சேலை தலைப்பை சரி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.

  "நீங்கள் ஏற்றுக் கொண்டால்...... உங்களுக்கான கேள்வி.
  "கடவுளு"க்கான அரேபியச் சொல்லான "அல்லா"வை ஆண்களும் பெண்களும் பயன்படுத்தும்போது , உடைவிசயத்தில் ஏன் பெண்களுக்கு மட்டும் அரேபிய பாணி?"

  - அல்லாஹ் என்பது ஒரு அரேபிய வார்த்தை சார், அரேபிய மொழி பேசுகிற கிறிஸ்தவர்கள் கூட அல்லாஹ் என்று தான் சார் அழைப்பார்கள்.

  ஆனால் உடை என்பது ஆண்களுக்கு கட்டாயமாக்கப்பட வில்லை என்பது பெரும்பாலான இஸ்லாமியர்களின் புரிதல் சார்.

  மேலே வரும் குரான் ஷரீஃப் வசனங்களுக்கு தனிப்பட்ட உறுப்புகளை பாதுகாத்து கொள்ளுங்கள் என்று இறைவனை நம்புகின்ற ஆண்களுக்கு போதனை செய்வதற்கும்,

  தலை துணியை மார்பையும் சேர்த்து மறைத்து கொள்ளுங்கள் என்று இறைவனை நம்புகின்ற இஸ்லாமிய பெண்களுக்கு போதிப்பதில் ஆடை முக்கியத்துவம் பெறுகிறது என்று பெரும்பாலான இஸ்லாமிய உலகம் புரிந்து வைத்திருக்கிறது.

  ஒவ்வொருத்தருக்கும் ஒரு புரிதல்

  ReplyDelete
 41. யப்ப்ப்ப்ப்பா........எழுத்து வியப்பளிக்கிறது.

  வெல்டன் கல்வெட்டு

  ReplyDelete
 42. சரவெடிப்பதிவு கல்வெட்டு. முழுதுமாய் ஒத்துப் போக முடிகின்றது. Hats off.

  ReplyDelete
 43. கோவி, நந்தா ‍‍நன்றி

  ReplyDelete
 44. அருமை..
  உடல் மொழி மிக முக்கியம்...

  பார்க்கும் பார்வையிலேயே சொல்லிடலாம்..

  பல சிறப்பு தகவல்கள்.

  நித்தி சாம்இயார் பற்றி வால்பையன் பதிவிலும் அருமை..

  என் கருத்து போலவே...

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 45. http://seasonsali.blogspot.com/2010/03/questions-about-women-in-islam-hijab.html

  ReplyDelete
 46. //இந்த வட்டத்தைத் தாண்டி அவர்களால் யோசிக்கவே முடியாது.//
  இது ஒரு வகை பிரசார உத்தி .
  பிரச்சாரத்தில் இரு வகை உண்டு .புத்தியை மட்டும் ஊடுருவும் பிரச்சாரம்
  ஆன்மாவையும் புத்தியையும் சேர்த்து கட்டுபடுத்தும் பிரச்சாரம் .
  முதல் வகை அரசியல் பிரச்சாரம் போல .உதாரணம் பனி வெள்ளை என்று நமக்கு தெரியும் .
  அதை கருப்பு என்று நம்பவைக்க எந்த பிரச்சாரம் பயன் தரும் .
  முதல் வகை பிரச்சாரத்தில் பனி வெண்மை அல்ல அது கருப்பு .அனால் வெள்ளை போல்
  நமக்கு தெரிகிறது .இந்த வகை பிரச்சாரம் சிறிது காலம் மட்டும் தாக்கு பிடிக்கும் .
  காலத்தை தாண்டி நிற்கவேண்டும் என்றால் .பனி கருப்பு நிறம் அதை வெண்மை என்று நினைப்பது பாவம் .
  அந்த மாதிரி சொல்பவர்களிடம் பேசுவது .பெரும் குற்றம் .அவர்கள் சாத்தானின் பிள்ளைகள் .என்று சி ருவயதில்
  இருந்தே சொல்லிகுடுக்கலாம் .இது காலத்திற்கும் நிற்கும் . இஸ்லாம் மாதிரி .

  ReplyDelete
 47. This comment has been removed by the author.

  ReplyDelete
 48. ஹிஜாப் பற்றி இஸ்லாம் அல்லாத ஒரு பெண்ணின் பார்வை....!!


  http://vannathuli.blogspot.com/2012/03/blog-post_29.html?showComment=1335228753912#c3584403508741840536

  ReplyDelete
 49. எந்த இஸ்லாமிய சட்டத்திலும்... பெண்கள் பர்தா தான் அணிய வேண்டும் என்று இடம்பெறவில்லை...
  அது இஸ்லாமிய பெண்களின் சீருடையும் இல்லை...
  அது போல தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது..சகோ...
  கண்ணை உறுத்தாத....
  உடம்பை இறுக்கி பிடித்து ஒரு பெண்ணின் அங்கங்களை வெளிபடுத்தாத...
  கண்ணாடி போல உடம்பை காட்டகூடியதாக இல்லாமல்... உடலை முழுவதும் மறைக்க கூடிய எந்த உடையும் இஸ்லாத்தில் தடை செய்யப்படவில்லை.......!!!

  உடல் தெரிய உடை அணிவதுதான் உங்கள் கருத்து படி சுதந்திரம் என்றால் அதை எந்த ஒழுக்கமான பெண்ணும் விரும்புவதில்லை.....
  சுதந்திரம் என்பது நம் கருத்தை சொல்வதிலும்,
  நமது அறிவை வளர்த்து கொள்வதிலும் இருக்கிறது....!!!
  அதற்கு இஸ்லாமிய பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.....உடலையும்., தன அலங்காரத்தையும் அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்பது எவ்வளவு கீழ்த்தரமான எண்ணம்????
  நாகரீக உடைகள் அனைத்தும் தன் உடலை, தன் அழகை விளம்பரபடுதும் பெண்களுக்கானது.....!!!!!! இதை யாரும் மறுக்க முடியாது....
  எங்களுக்கு எங்கள் ஹிஜாப் போதும்....!! எங்களை கண்ணியமான பெண்களாக காட்டி கொள்வது எங்களை பொறுத்த மட்டில் எங்களுக்கு சுதந்திரம் தான்....!!!!

  ஒரு உண்மையான முஸ்லிம் ஆண் அந்நிய பெண்ணை பார்த்தால் தன் பார்வையை தாழ்த்திக்கொள்ளுவான் .... அப்படிதான் இஸ்லாமிய ஆண்களுக்கு போதிக்கப்பட்டுளது....!!

  மேலும் அறிவியல் வளர்ச்சி அதிகரித்து விட்ட இந்த காலகட்டத்தில் அந்நிய பெண்களை செல்போன் கேமரா மூலம் படம் பிடிப்பது, அதை வக்கிரமாக மார்பிங் செய்து இணையதளங்களில் உலாவர விடுவது என்று எத்தனை விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.....எந்த சுயமரியாதை உடைய ஆணும தன குடும்ப பெண்ணின் படம் இது போன்ற வலைதளங்களில் வருவதை விரும்ப மாட்டான்...!!

  இது போன்ற வக்கிர புத்தி கொண்ட ஆண்களிடம் இருந்து தற்காத்து கொள்வதற்கான அருமையான கேடயம் தான் இந்த ஹிஜாப்...!!!

  ஹிஜாப் பெண்களின் அடைத்து வைக்கும் சிறை அல்ல... எங்களை தற்காத்து கொள்ள இஸ்லாம் அளித்துள்ள கேடயம்!!!!!!
  பின்குறிப்பு.ஹிஜாப் அணிய சொல்லி என்னை யாரும் வற்புறுத்தவில்லை... இது என் சொந்த முடிவு.....!!
  ஹிஜாப் பற்றி மேலும் தகவல்கள் பெற.....
  http://ariviyalputhaiyalalquran.blogspot.com/2012/04/blog-post_18.html

  ReplyDelete