Friday, February 05, 2010

வரலாறு எழுதும் வெட்டி வேலையை விட்டுவிடுங்கள் எழுத்து வியாதிகளே!

திராவிடம் என்பது ஆரியம் என்பதற்கான எதிர்ப்பு.
ஆரியம் வினை என்றால் திராவிடம் எதிர்வினை. ஆரியம் என்ன செய்தது என்று தெரிந்தால் திராவிடம் ஏன்?  எதற்கு?  எப்படி ? அதற்கு எதிர்வினை செய்தது என்று தெரியும்.

http://www.jeyamohan.in/?p=5782


http://ravisrinivas.blogspot.com/2010/02/blog-post_05.html


"திராவிடம்" என்பது ஆரியத்துக்கு எதிராக வைக்கப்பட்ட கலகம். வர்ணாசிரமக் கொடுமையை அறியாதவர்கள் யாராலும் திராவிடத்தை புரிந்து கொள்ள முடியாது. திராவிடம் தமிழ் வளர்க்கவில்லை, திராவிடத் தலைவர்கள் கொள்ளை அடித்தார்கள்,  கதை எழுதவில்லை. நல்லதமிழ் பேசவில்லை ,அவர்கள் செத்து செத்து விளையாண்டார்கள் .....என்று எந்தக் குற்றச்சாட்டும் வைக்கலாம். தப்பேயில்லை.  இப்போது திராவிடம் பெரியாரை வைத்து கல்லா கட்டுபவர்கள் அப்படித்தான் உள்ளார்கள்.

ஆனால் "திராவிடம்" வர்ணாசிரமத்துக்கு அடித்த ஆப்புதான் அதன் வெற்றி.
அதன் நோக்கமும் அதுவே. மரத்தில் கிளை சரியில்லை, இலை சரியில்லை , வேர் சரியில்லை,காயைப் புடிங்கி சாப்பிடுகிறார்கள்.....ஆம்..ஆம் ..ஆம் ..ஆம் எல்லாம் சரியில்லைதான்.

ஆனால்,  வர்ணாசிரமப் புற்களின் மத்தியில் அது மரமாய் நிற்பதே ஒரு சாதனைதான். குத்துப்பட்டவனுக்கே அதன் வலி தெரியும். டைப்ரைட்டரில் நோகாமல் கதை எழுதினால் போதாது. இன்னும் வாயில் பீ ஊற்றப்படும் கதைகளும் தெரியவேண்டும் , அதன் வர்ணாசிரமப் பின்புலமும் தெரியவேண்டும்.

ஆதிக்க சாதி என்பது வர்ணாசிரமத்தின் அடுத்த கட்டம்தான். இன்று சிதம்பரமும் பிரச்சனையில் உள்ளது(தீட்சிதர்) .கண்டதேவி தேர் இழுப்பும் பிரச்சனையாய் உள்ளது(ஆதிக்க சாதி).

**

இந்தக்  கதையெழுதிகளில் எத்தனை பேர் இன்றும் பிரச்சனையாயிருக்கும்  பிரச்சனைகளை பொது வெளியில் பேசுகிறார்கள்? அல்லது களம் கண்டார்கள்? xxxxxxxx பெறாத கதைப்புத்தகங்களுக்கு விமர்சனம் என்ற‌ பெயரில் அடித்துக் கொள்ளுதல்  அல்லது புத்தகம் நன்றாக விற்க வேண்டும் , அமெரிக்காவில் மார்க்கெட்டிங்  பண்ண வேண்டும் என்று சாமியார்களுக்கு காவடி தூக்குதல்தான் இவர்களின் வேலை. 

இவர்கள், வர்ணாசிரமம் ரெக்கார்ட்டான்ஸ் ஆடிய காலத்தில், அதன் மீது சாணியடித்து பேயோட்டிய தலைவர்களின் செயல் நோக்கம் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். ஞான மரபுபரப்பியல் என்று ஜல்லி அடித்தால் போதாது. வர்ணாசிரமம் எதைப் பரப்பியது என்றும் தெரிய‌ வேண்டும்.

 "பெரியாரிஸ்ட்""   திராவிடஸ்ட்"  என்று கூறிக்கொண்டு பெரியாரை வைத்து ஜல்லி அடிப்பவர்களும் பைசா பார்ப்பவர்களும் , அதே பெரியாரை "பொந்து ஞான மரபு" போன்ற சங்கங்களில் இருந்து வந்து திட்டுபவர்களும் பெரியாரைப் புரிந்து கொள்ளாதவர்களே.

**

நீங்க கதைப்புத்தகம் மட்டும் எழுதுங்கள் , எதற்கு வரலாறு உங்களுக்கு?

ஏன் திராவிடம் என்ற‌ வார்த்தைப் பயன்பாடு என்பதில் ஆரம்பித்து....
திராவிடம் மொழியியல்
திராவிடம் அரசியல்
திராவிடம் சமூகவியல்
திராவிடம் கலைகள்
..என்று பல பகுதியாக ஆராயவேண்டியது.
**

நீச்சல் குளத்தில் அமுங்கி எந்திரிப்பதைப்போல 100 ரூபாய் கொடுத்து கதைபடித்துவிட்டு ஜல்லி அடிக்கும் செயல் அல்ல மக்கள் இயக்கங்கள். விரும்பியோ விரும்பாமலோ இந்த நிகழ்வின் தாக்கத்தில் அனைவரும் மழையில் நனைவது போல நனைந்துள்ளோம்.

வீரமணியைப் பார்த்து பெரியாரை அறிந்து கொள்ள முயற்சிப்பதைப்போல , இக்கால அரசியல் நிலையை வைத்து முந்தைய காலத்தின் வரலாறுகளை மனம் போக்கில் சிதைக்கக்கூடாது. ஒரு நாளைக்கு 50 பக்கம் டைப் அடிக்கத்தெரியும் என்பதற்காக எல்லாவற்றிலும் சலசல என்று எதையாவது உளறக்கூடாது. நல்லவேளை நீங்கள் எல்லாம் வரலாற்று ஆசிரியர்களாக அடையாளம் காணப்படாமல் கதைப்புத்தகம் எழுதுபவர்களாகவே அடையாளம் காணப்படுகிறீர்கள் உங்கள் இரசிகர்களால்.

தீபாவளி அன்று நடிகர்கள் கருத்துச் சொல்வது போல , கதை எழுதுபவ‌ர்கள் எல்லா விசயத்திலும் கருத்துச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

மக்களை எண்டர்டெயின் செய்யவும் , அவர்களின் பொழுதைப் போக்கவும், என்ன செய்தாலும் வெட்டியாகப்  போக்க முடியாத அவர்களின் பொழுதுகளை உங்களின் வார்த்தைக் குவியலால் நிரப்புங்கள்.

தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரன் என்பது போல , கதைப்புத்தகம் எழுதும் எல்லாரும் வரலாறு சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். வந்தார்கள் தின்றார்கள், அரபிகளின்  ஆயில் ரேகை வரிசையில் உட்கார்ந்த இடத்தில் வரலாறு எழுதும் வெட்டி வேலையை விட்டுவிடுங்கள் எழுத்து வியாதிகளே!

என்ன கொடுமை இது சரவணா?





.

13 comments:

  1. இவர்களுக்கு சுயசிந்தனையோ, பட்டறிவோ இருப்பதில்லை. பெரியார் மீது சாணி அடிக்கவேண்டும். அவ்வளவு தான்... அதற்கு ஏதுவாக ஒரு வரலாறு சொல்லுவார்கள். ஒரு நாவல்பழத்திற்காக அம்பானியை ஆதரித்தவராயிற்றே.

    ReplyDelete
  2. //இவர்கள், வர்ணாசிரமம் ரெக்கார்ட்டான்ஸ் ஆடிய காலத்தில், அதன் மீது சாணியடித்து பேயோட்டிய தலைவர்களின் செயல் நோக்கம் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். ஞான மரபு, பரப்பியல் என்று ஜல்லி அடித்தால் போதாது. வர்ணாசிரமம் எதைப் பரப்பியது என்றும் தெரிய‌ வேண்டும்.//

    கல்வெட்டு அண்ணா சூப்பர்

    ReplyDelete
  3. கல்வெட்டு, ஜெயமோகனின் இந்த விவாதத்தை மிக மேலோட்டமாக தள்ளிவிட்டது சரியல்ல என்றே கருதுகிறேன்... ஜெயமோகன் செய்ய நினைப்பது ஷங்கர் படம் போல பல உண்மைகளின் நடுவே ஒரு பொய்யை சொறுகுவது, அதாவது இலஞ்சம் வாங்கும் ஆபிஸ் உண்மை, செருப்பு தைக்கும் தாத்தா உண்மை, அவருக்கு பின் இறப்பு சான்றிதழ் வாங்க துன்பப்படும் மனோரமா உண்மை, இதில் கொண்டுவது சொறுகும் இந்தியன் தாத்தா கற்பனை, மற்ற உண்மைகளை நம்பும்போது இந்தியன் தாத்தா என்ற கற்பனையை நம்ப வேண்டும், அது போல பெரியாருக்கு பிந்தைய நீர்த்துப்போன‌ திராவிட இயக்கத்தை குறிப்பிட்டு பெரியாரை திட்டுகிறார்...

    இந்த இடத்தில் நீர்த்துப்போன திராவிட இயக்க செயல்பாடுகள உண்மை இதில் பெரியாரை சாற்றியிருக்கும் குற்றச்சாட்டு பொய்... இம்மாதிரி மிக மேலோட்டமாக மொத்தமாக ஜெமோ விமர்சனத்தை தள்ளிவிடும் செயல் வரலாறு புரியாதவர்கள் திராவிட அனுதாபிகளே இப்படித்தான் என்று நாம் மொத்தமாக தள்ளியதை அவர்கள் மொத்தமாக நம்ப வாய்ப்பிருக்கிறது...

    ஜெமோ எழுதியிருப்பதில் பல கருத்துகள் சரியானவையே என்னளவில், அதே சமயம் ஜெமோ பெரியார் தமிழ்மொழி காட்டுமிராண்டி என்று சொன்னதும் சங்கராச்சாரி நீஷபாஷை என்று சொன்னதும் ஒன்றே என்று ஒரு கயவாளித்தனத்தை செய்கிறார்.. இது கண்டிக்கப்பட வேண்டும்... இது ஒரு வகையான உத்தி பல உண்மைகளின் நடுவே பொய்யை கலக்கும்போது இந்த பொய்யும் உண்மை என நம்ப வேண்டியிருக்கும்... அதை விடுத்து மொத்தத்தையும்(அதாவது உண்மைகளையும்) சேர்த்து எதிர்க்கும்போது நடுவில் இருந்து பார்ப்பவன் இவர்கள் உண்மைகளையும் சேர்த்து எதிர்க்கிறார்கள் அதனால் இவர்கள் எதிர்ப்பது பொய் என்று நினைக்கவரும்போது ஜெயமோகன் உண்மைகளின் நடுவில் கலந்துள்ள பொய் உண்மையாகிவிடும் அபாயம் உள்ளது...

    ஆனால் பெரியாருக்கு பிந்தைய திராவிட இயக்கங்கள் என்ன செய்துள்ளன என்று பார்க்க வேண்டும்... இன்னும் சொல்லப்போனால் தமிழர் நிலமீட்ப்பு, இடஒதுக்கீடு, இந்தி எதிர்ப்பு போராட்டம், சாதிய எதிர்ப்பு என எதிலுமே பெரியாருக்கு பிந்தைய திராவிட இயக்கம்(குறிப்பாக திமுக) பெயரை மட்டுமே சம்பாதித்துக்கொண்டதே தவிர வேறெதுவும் செய்யவில்லை...

    தமிழ் ஆர்வலர்களின் பங்களிப்பையும் தனிப்பட்ட ஆர்வலர்களின் சாதனைகளும் தற்போதைய திராவிட இயக்கங்களின்(பெரியாருக்கு பிந்தைய இயக்கத்தை மட்டும் குறிக்கிறேன்) என்றே நம்பிக்கொண்டிருந்தது என்(நம்?)பிழை மட்டுமல்ல‌ அது மாதிரியான ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது... தமிழ்நில மீட்பு, இந்தி எதிர்ப்பு போராட்டம்(கடைசியில் பந்தியில் வந்து கை நனைத்தது மட்டுமே திமுக) சாதியொழிப்பு போராட்டங்கள்( அதெல்லாம் பெரியாரின் தி.க. செய்தது) இடஒதுக்கீடு(ம.கோ.இராமச்சந்திரன், ஜெ.ஜெயலலிதா தங்கள் அதிகாரத்தை பயன்படுத்திய அளவுக்கு கூட திமுகவும் கருணாநிதியும் செய்யவில்லை)...

    தமிழ்நாடு என்று பெயர்வைத்தது அண்ணாதுரை என்றால் அது பெயர் வைத்தவன் பிள்ளைக்கு அப்பனாகிவிடுவான் என்பது போல... தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் போராட்டத்தை கடைசியில் வந்து கைநனைத்து கபளீகரம் செய்துவிட்டது திமுக.

    தலித் எழுச்சிக்கு திராவிட இயக்கங்கள்(பெரியாருக்கு பின்) தான் காரணம் என்று சொல்வது நகைப்புக்குறியது... திராவிட இயக்கங்கள்(பெரியாருக்கு பிரந்தைய திக மற்றும் திமுக) சொல்லிக்கொள்ளும் கொள்கைகளுக்கு நியாயமாக நடந்திருந்தால் தலித் இயக்கங்களே தேவைப்பட்டிருக்காது, ஓரளவுக்கு கம்யூனிஸ்ட்கள் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) இதை செய்தது... விசிக திருமாவும் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியும் தொடக்கத்தில் திமுகவில் இருந்தார்கள், அதில் நம்பிக்கை இழந்தே தலித் இயக்கங்கள் கட்டினர்...

    தமிழர் நில மீட்ப்பில் திமுக என்ன செய்தது, இடஒதுக்கீடு தொடர்பாக என்ன செய்தது(ஆட்சிக்கு வரும்முன் / வந்த பின்), தலித் பிரச்சினைகளை தீர்க்க குறைந்த பட்சமாகவேனும் என்ன செய்தது? இது மிக விரிவாக அலசவேண்டிய ஒன்று... தரவுகளோடும் ஆதாரங்களோடும்...

    மறுபரிசீலனை செய்வோம் வேதங்களை மட்டுமல்ல அனைத்தையும்... ஆரியத்தை மட்டுமல்ல திராவிடத்தையும் நாம் கற்றதையும் நமக்கு கற்பிக்கப்பட்டதையும் சேர்த்தே மறுபரிசீலனை செய்வோம்

    ReplyDelete
  4. குட்டிபிசாசு , D.R.Ashok ,கோவி, குழலி நன்றி !

    ReplyDelete
  5. குழலி,
    "திராவிடத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறேன்" என்ற தொனியில் சொல்லப்பட்ட கட்டுரைக்கு உடனடி எதிர்வினையாக பதியப்பட்டது இது.

    பெரியார் என்றால் 'கடவுள் எதிர்ப்பு' , திராவிடம் என்றால் 'கிந்தி எதிர்ப்பு' என்ற அளவில் மட்டுமே பொதுப்புத்தியில் உள்ளது. இவை தாண்டி திராவிடம் ஏன் தோன்றியது என்று பார்க்க முனைதல் அவசியம் என்று சொல்லவே இந்தப்பதிவு.

    -----------

    பெரியாரின் செயல்பாடுகள் சமூகம் சார்ந்தது. அதாவது சமூகப்பிரச்சனைகளை களைய அவரால் முடிந்த போராட்ட வழிகளை மேற்கொண்டார்.

    அதற்கடுத்து வந்த யாரும் அந்தப்பாதையில் செல்லவில்லை. உண்மையில் அதற்கடுத்து யாரும் வரவில்லை. :-((((((

    ------------------



    தி.க (வீரமணி) :
    ---------------
    ஒரு இலாபமான கம்பெனியாக மாறிவிட்டது. வாயில் பீயை ஊற்றினால் , ஓடிப்போய் போராட்டம் நடத்த வேண்டியது வீரமணியாய் இருக்க வேண்டும். மூத்திரச் சட்டியுடன் , கூட்டத்தில் இருந்து எறியப்படும் செருப்புகளுக்கு மத்தியில் விடாமல் கள‌ம் கண்டவர் பெரியார். அவர் பெயரைச் சொல்லக்கூட தகுதியில்லாதவர்கள்.

    பெரியார் தி.க:
    ---------
    இவர்கள் வீரமணியின் எதிரணி. இவர்கள் களத்தில் செயல்படுகிறார்கள். தி.க (வீரமணி) ஒப்பிடும்போது இவர்கள் உயிர்ப்புடன் உள்ளார்கள். ஆனால் இவர்களுக்கும் அரசியல் உண்டு.

    -----
    தி.மு.க:
    அண்ணா தொடங்கி இன்றுவரை சமூக இயக்கமாக இல்லை. வாக்குச் சேகரிக்கும் அரசியல் கட்சியாகவே உள்ளது.

    --

    மற்ற கட்சிகள் பற்றி திராவிடத்துடன் பேச ஒன்றும் இல்லை.

    ***************

    திராவிடத்தின் தோற்றம், நோக்கம் , வெற்றி என்பது பெரியாருடன் முடிந்து விட்ட ஒன்று. அதை நிராகரிக்க முடியாது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தமிழகத்தில் அனைவரும் அதன் சாதக/பாதகங்களில் நம்மை அறியாமல் பங்கெடுத்து உள்ளோம் அல்லது பயன் அடைந்து உள்ளோம்.

    தி.க (வீரமணி) அல்லது தி.மு.க (கருணாநிதி) வை வைத்து திராவிடம் வளர்ந்தது என்றோ அல்லது செத்தது என்றோ சொல்லமுடியாது. ஏன் என்றால் இவர்களுக்கு சமூகம் சார்ந்த நோக்கம் என்பதைவிட, அரசியல் வெற்றி சார்ந்த நோக்கம்தான் உள்ளது.

    பெரியாரின் வயக்காட்டில் அறுவடை செய்தவர்கள் இவர்க‌ள். ஏதும் புதிதாக விதைத்தவர்கள் இல்லை.

    **

    "திராவிடம்" என்ற ஆரியத்திற்கு எதிரான எதிர்வினையின் காலத்தைத் தாண்டி நாம் அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டோம்.

    இன்று தேவையான கொள்கைகளை உருவாக்கி அதனை நோக்கி செயல்பட யாரும் இல்லை.

    நல்ல அரசியல் தலைவர் ஒருவரைக் காட்டமுடியாது நம்மால்.

    **
    ஈழப்பிரச்சனையில் அனைவரும் அடித்த கூத்துகள் , தமிழ் மொழியை வைத்து அறுவடை , சாதி சங்கங்கள் கூட்டணி என்று எல்லாம் கேவலமாக நடந்து கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் எழுத்துவியாதிகள் அதில் இருந்து கல்லா கட்டத்தான் பார்க்கிறார்களே (கதை, உண்மை வரலாறு, சோகக் கவிதை) தவிர வேறு ஒன்றும் செய்வது இல்லை.

    அது அவர்களின் தொழில். அதைத்தாண்டி வரலாறு பேசும்போது வருத்தமும் எரிச்சலும் வருகிறது.

    **

    'பொந்து ஞான மரபில்' நம்பிக்கையுள்ள யாரும் திராவிடம் பேச இயலாது. இரண்டும் வேறு வேறு நிலைகள்.

    .

    ReplyDelete
  6. //
    குழலி / Kuzhali said...

    மறுபரிசீலனை செய்வோம் வேதங்களை மட்டுமல்ல அனைத்தையும்... ஆரியத்தை மட்டுமல்ல திராவிடத்தையும் நாம் கற்றதையும் நமக்கு கற்பிக்கப்பட்டதையும் சேர்த்தே மறுபரிசீலனை செய்வோம்//


    இதே தான் எனது கருத்தும்.


    திராவிடம், பெரியாரிசம், கம்யூனசிம்..எதுவாக இருந்தாலும் அதை எல்லாக் காலத்திற்கும் தூக்கிக் கொண்டு அலைய முடியாது.


    தற்காலப் பிரச்சனைகளை அடையாளம் கண்டு அதைத் தீர்க்கும் புதிய‌ இசங்கள் வரவேண்டும்.

    அதே நேரத்தில் பழைய காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட இயக்கங்களின் நோக்கத்தை , பெயரளவில் மட்டுமே இருக்கும் இன்றைய தலைவர்களின் செயலை வைத்து கொச்சைப்படுத்தக்கூடாது.


    **


    சமூகம் சார்ந்த எண்ணங்கள் இன்று வாழும் அரசியல் தலைவர்கள், கட்சிகள் ,மதத்தலைவர்கள் யாரிடமும் இல்லை. இதுதான் என்னளவில் உண்மை.

    .

    ReplyDelete
  7. ஜெமோ பக்கா இந்துத்துவாவாதி என்பது எல்லோருக்கும் தெரியும், அவரது பெரியார் எதிர்ப்புக்காகவே கூஜா தூக்கம் பார்பனிய சிந்தனையாளர்கள் பலர் அறிவேன்!

    அவர்களுக்கு பெரியார் என்றாலே கீழ்வெண்மணி மட்டும் தான் தெரியும்!

    ReplyDelete
  8. மதி.இண்டியாMonday, February 15, 2010 12:02:00 AM

    வால் பையன் , ஏதோ விவரமானவங்க பேசறாங்க , நீங்க ஏன் இடையில ?

    உங்களுக்கு ஆரியமும் திராவிடமும் என்னமாவது தெரியுமா ?

    திராவிட இயக்கம் உதிர்த்த உதிர்ந்த முடிகளில் ஒருவர் , ஏன் இதெல்லாம் பேசுகிறீர்கள் ?

    பெரியாரின் கீழ் வெண்மணிக்கு விளக்கம் தரகூட உங்களால் முடியாது ,

    எல்லா ஆளுமைகளிடமும் தவறுகள் உண்டு , ஜெமோ பெரியாரை தெய்வமாக கட்டி எழுப்புவதைதான் தவறு என்கிறார் , குழலியை தவிர எல்லோரும் கட்டிதான் எழுப்ப முயல்கின்றனர்

    ReplyDelete
  9. எதாவது சொல்லலைனா பெருய மனுசனா ஒத்துக்க மாட்டாங்களே!
    அதனால எதாவது சொல்லனும்!

    பெரியார் செத்தப்ப நான் பிறந்துவிட்டேனேன்னு தெரியாது! எனக்கு கருத்துகள் மட்டுமே முக்கியம், பெரியார் அல்ல!

    ReplyDelete
    Replies
    1. வாலு பையன் இந்த பேரு நீங்களா வச்சுகிட்ட பேரா உங்க வயசன்ன இன்னும் பையன்ன உசிலம்பட்டியாமே முற்பொக்கை எழுத்தாளர்னு சொல்லிகிட்டாய்ங்க

      Delete
  10. //மதி.இண்டியா said...

    ஜெமோ பெரியாரை தெய்வமாக கட்டி எழுப்புவதைதான் தவறு என்கிறார் , குழலியை தவிர எல்லோரும் கட்டிதான் எழுப்ப முயல்கின்றனர் //


    மதி ,
    இது என்னை நோக்கிய விமர்சனமாகவும் எனக்குப்படுவதால் விளக்கம்..


    பெரியார் என்பவர் மனிதர். காலையில் ஒண்ணுக்குபோவது முதல் ஆய் போவது வரை நம்மைப்போல தினமும் செய்தவர். மூத்திரச்சட்டியை தூக்கிக் கொண்டே அலைந்தவர்.

    தெய்வங்கள் ஆய்போகுமா என்று தெய்வத்திடம்தான் கேட்க வேண்டும். எனவே, பெரியாரை "மற்றவர்கள் தெய்வமாக கட்டி எழுப்பிகிறார்கள்" என்று யாராவது சொன்னால் அவர்கள் கடவுள் பெரியார்போல மூத்திரம் போவாரா என்று விளக்க வேண்டும்.

    தொடர்பற்ற இரண்டை ஒப்பிடுவது சரியல்ல.

    ****

    எழுத்தாளருக்கு இரசிகர் கூட்டம் , வாசகர் வட்டம் என்று ப(க்)தர்கள் இருப்பதுபோல பெரியாருக்கும் ப(க்)தர்கள் உள்ளார்கள் (பெரியாரிஸ்ட்).

    இவர்கள் பெரியாரை வைத்து கல்லா கட்டுபவர்களே தவிர , பெரியாரைப்போல சமூகம் சார்ந்த இன்றைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பவர்கள் அல்லர்.

    பெரியாரின் வரலாற்றைத் தெரிந்து கொண்டு, இன்றைய பிரச்சனைகளுக்கு இன்றைக்கு தேவையான வழியில் தீர்வுகாண முயலவேண்டும். அப்படிச் செய்ய விழையும் தலைவர்கள் யாரும் இல்லை.

    ****

    பெரியாரின் சமூகம் சார்ந்த செயல்பாடுகளை மட்டுமே இங்கே பேச விழைகிறேன். அவர் ஏன் கல்யாணம் செய்தார், அவரை யார் கடவுளாகப் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லாதது.

    **

    கடவுள் என்ற கண்றாவியையே (கண்ணிற்கு புலப்படாத ஆவி ரூபம் ???) நான் சட்டை செய்யாதபோது எனக்கு பெரியாரும் அப்படித்தான். அவரை என்னைக் கவர்ந்த ஆளுமையாகக்கூட நான் நினைப்பது இல்லை. என்னைக் கவர்ந்த ஆளுமை என்றால் அது எனது தந்தையே . நான் யாருக்கும் இரசிகனும் இல்லை.

    ***

    ஆனால் அதற்காக பெரியாரின் சமுதாயப் பங்களிப்பை மறுக்க முடியாது. விரும்பியோ விரும்பாமலோ அதன் பாதிப்பு அனைவருக்கும் உண்டு. அதை திரிப்பதைத்தான் தவறு என்று சொல்கிறேன்.

    .

    ReplyDelete
  11. தங்கள தளத்துக்கு முத‌ல் முறை வருகின்றேன். ஒவ்வொரு பழைய கட்டுரையையும் தேடி,தேடி படித்து வருகின்றேன். உங்கள் தளத்தில் பல கட்டுரைகள் (குறிப்பாக பரிணாமம்) பிரமிப்பாக இருக்கின்றன. ஒவ்வொரு விஷயமும் மேலோட்டமாக இல்லாமல் ஆழ்ந்து வேர்தேடி செல்கின்றன.

    ReplyDelete
  12. //வரலாறு எழுதும் வெட்டி வேலையை விட்டுவிடுங்கள் எழுத்து வியாதிகளே!
    அப்போ நீங்க தான் ஒவ்வொரு தளமா படிச்சு நொந்து வரலாறு எழுதக்கூடாதுன்னு வரலாறு எழுதுரீங்க நீங்க தான் உங்க கைய மிஷின்ல குடுக்கனும்

    ReplyDelete