Thursday, June 03, 2010

பைத்தியக்காரன் - ஏன் இப்படி?

ன் இப்படி? 
உங்களுக்கு நர்சிம் நண்பரா? (அதாவது பூக்காரி புனைவிற்கு முன்னர்)


நட்பு என்பது ஒரு உறவு (Relationship). சும்மா பார்த்தவன் / போனவன் / வந்தவன் எல்லாம் நண்பர்களாக அறிவித்துக் கொள்ளமுடியாது. அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்(known people) அவ்வள‌வுதான்.


தோழமை என்பது என்ன ? நீங்கள்தான் சொல்ல வேண்டும்.


நர்சிம் தவறு செய்யும் பட்சத்தில் நேரிலேயே கேட்டுவிடலாமே? தவறு என்று அறியும் பட்சத்தில் உடன் இருந்து திருத்த வேண்டும். எல்லா முயற்சிகளையும் எடுத்துவிட்டேன் அடுத்து போலிசுக்குப் போவதைத் தவிர வழியில்லை என்ற நிலையிலா இப்படிச் செய்தீர்கள்? ஏன் இப்படி? 


புனைவு என்ற பெயரில் சுந்தர் அதீதன் கதைகள் எழுதினார். பாராட்டிக் கொண்டுதானே இருந்தீர்கள்? ஏன் அதில் வரும் பெண்கள் எல்லாம் யாரோ ஒரு முகமிலிகள் என்பதலா?  லீனாவின் குப்பைக் கவிதையை "அக்கம் பக்கம் கொடுப்போம்" என்று சொல்பவர்கள் உங்களின் கருத்தை ஒத்தவர்கள் என்றால் ,நீங்கள் சுந்தரின் கதைகளை அவர் வீட்டுக்குச் சென்றபோது ஏன் அக்கம் பக்கம் கொடுக்கவில்லை?  என்ன அரசியல் சார்போ ? இப்படி ஆகிப்போனீர்களே?


ரம்ப காலம் முதலே உங்களின் இலக்கியம்,புனைவு,பின் நவீனம் , புண்ணாக்கு , நீட்ஸே ... என்று எதுவுமே என்னைக் கவர்ந்தது இல்லை. பூக்கோ சொன்னால் என்ன? நீங்கள் வாழும் இடத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு பூக்கோ தத்துவம் உதவுமா? எல்லாவற்றையும் படித்து ஜன்னி வந்து சாமி கும்பிடும் சராசரி சினிமா இரசிகன் போலதான் இருந்தது எல்லாம். 


னால்..எல்லாவற்றையும் தாண்டி ஏதோ ஒன்றுதான் உங்கள் பதிவுகளை என்னை வாசிக்க வைத்தது. ஏன் இப்படி? இப்படி ஆகிப்போனீர்களே? 


ர்சிம் செய்தது தவறு. ஆனால், அவர் உங்களுக்கு நட்பு எனும் பட்சத்தில் அந்த தவற்றைச் சுட்டிக்காட்டி திருத்த வேண்டியது உங்கள் கடமை அல்லவா? அப்படி இல்லை என்றால், நட்பு என்று சொல்லக்கூடாது ( in that case ..I know him ..is a right word) . 


முன்னரே சொன்னது போல நட்பு என்பது ஒரு உறவு. திருமணம் போல , பிரிவதும் முறையாக இருக்க வேண்டும். அதற்காக நீங்கள் அவர் செய்யும் தவறுகளை மூடி மறைக்க வேண்டாம். நர்சிம் அப்படி ஒரு கேவலமான புனைவு (புண்ணாக்கு) போட்டவுடன் , நீங்கள் அவரின் நண்பர் எனும் பட்சத்தில் அவரிடம் கடும் சண்டை போட்டிருக்க வேண்டும். அவரை‌ உணர‌ வைத்து மன்னிப்பு கேட்க வைத்து இருக்க வேண்டும். 


வர் கேட்கவில்லை என்றால் இப்படி மண்டபத்தில் எழுதிக் கொடுப்பதைவிட அவரின் மனைவியிடம் சொல்லி நர்சிம்மை வற்புறுத்தி இருக்கலாம். அதுதான் நட்பு.  நீங்கள் நண்பர் என்று சொல்லிக் கொள்ளும் பட்சத்தில் நர்சிமின் குடும்பத்துடன் உங்களுக்கு நல்ல உறவு இருந்திருக்க வேண்டும்.குடும்பத்திற்கு தெரியாமல் பழக்கம் இருக்கலாம் ஆனால் நட்பு இருக்காது.  எல்லாவற்றையும் முயன்று அவை ஏதும் நடக்காத பட்சத்தில் அவரின் நட்பை (நட்பு என்பது உறவு) முறையாக முறித்து ( சுந்தர் செய்தது ) உங்கள் பதிவிலேயே உங்களின் தரப்பைச் சொல்லி இருக்கலாம். 


ன் இப்படி? 


ப்படியும் நர்சிம் கேட்கவில்லை , அவர் ஒரு மூக வியாதியாக வளர்கிறார் என்று நம்பினால் நீங்கள் சமூகத்திற்காக தெருப்போராட்டங்களைத் தொடங்கலாம். தவறே இல்லை. ஆனால் ஏன் இப்படி மண்டபத்தில் எழுதிக் கொடுக்கும் வேலை? நர்சிம்மைக் கண்டிக்க ஏன் மற்ற பதிவர்களை பெயர் போட்டு கிசுகிசுவாக எழுத வேண்டும்? சந்தனமுல்லையும் உங்களுக்கு நண்பர் எனும் பட்சத்தில் இதை நீங்கள் இன்னும் நன்றாகவே கையாண்டிருக்கலாம். இன்னும் உங்களுக்கு உங்களின் தவறுகள் தெரியவில்லை. 


இன்னும் கெட்டுவிடவில்லை..
பெண்களை பாலியல் ரீதியாக அசிங்கப்படுத்துவது மாகாக் கேவலம். சந்தனமுல்லை , நர்சிம் மற்றும் நீங்கள் எடுக்கப்போகும் முடிவுகளில் மூவரின் காயங்களுக்கும் மருந்து இருக்கலாம். நீங்கள் நினைத்தால் , நீங்கள் , நர்சிம் ,சந்தனமுல்லை மூவரும் குடும்பத்துடன் சந்தித்து மனக்குறைகளைப் பேசலாம்.



தவலுக்காக‌... 
நர்சிம் வலைப்பதிவில்  ஒரு ஆண் , பெண்னை அழகாய் இருப்பதாகச் சொன்ன உரையாடலில் ,ஆண் ‍ பெண் உறவுகள் குறித்து நான் சொன்னது..

http://www.narsim.in/2010/04/blog-post.html?showComment=1270136662014#c6748579570615881194

http://www.narsim.in/2010/04/blog-post.html?showComment=1270137778114#c7387149994588144776



1. ஒரு 'ஆண்' ஒரு 'பெண்ணை' "அழகாக உள்ளீர்கள்" என்று சொல்வது கொலைக்குற்றம் அல்ல.
2. 'உங்களுக்கு இந்த உடை அழகாக உள்ளது'. 'இந்த சிகை அலங்காரத்தில் நன்றாக உள்ளீர்கள்'... என்று ஆணோ பெண்ணோ ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்வது ஆரோக்கியமான , போலித்தனம் இல்லாத சின்ன சின்ன காம்ப்ளிமெண்டுகள். மனித உறவை ஆரோக்கியமாகவும் அர்த்தமாகவும் வைத்து இருக்கும்.
3. தினம் ஒரு ஆண் அல்லது பெண்ணை (இதற்குமுன் சந்திக்காதவர்கள்)எப்படியாவது பாராட்டிவிடுவது என்றே குறிக்கோளுடன் உள்ளேன்.
4. WoW I like your shirt என்று சம்பந்தமே இல்லாத பெண்கள் சொன்னதுண்டு. நானும் பலருக்கு சொன்னதுண்டு. சொல்லவேண்டும். அதற்கு இப்படி சின்ன சின்ன காம்ப்ளிமெண்டுகள் உதவுகின்றது.
5. ஒருவேளை பர்தா/மதம்/சாதி/சங்கம்/இன்னபிற காரணங்களால் ...ஒரு ஆணோ பெண்ணோ இப்படி சொல்லப்படுவது தனக்கு பிடிக்கவில்லை என்றால்...உடனடியாக தெரிவித்துவிட வேண்டும்.

இல்லை என்றால் சொன்னவருக்கு உங்களின் உணர்வு புரியவே போவது இல்லை. பதிவின் வழியாக நடந்திருந்தால்கூட உடனடி மறுப்பு சொல்லவேண்டியது கடமை. இல்லை என்றால் தவறான புரிதல்களோடு சொன்னவரும் கேட்டவரும் சரிப்படுத்த வாயிப்பில்லாமல் இருக்க நேர்ந்துவிடும். சொல்பவர்களும் மற்றவர்களின் உணர்வுகளை சூழலை எடைபோட்டு பேசவேண்டும்.

பாட்டி தானே என்று தடாலடியாக போய் பக்கத்தில் உக்காந்து கேவலப்பட்ட கதைகள் உண்டு. "எந்திரியிய்யா படிச்சவன் மாதிரி இருக்க இப்படி பொசுக்குன்னு பொம்பள பக்கத்துல வந்து உக்கார்ர " என்று மதுரைப்பக்கம் வாங்கிக் கட்டி சுண்ணாம்பான அனுபவமும் உண்டு. Can you please wait? I need to go to rest room என்று சொல்லிச் செல்லும் தோழிக்காக பெண்கள் ரூம் வாசலில் பையுடன் காத்து இருந்ததும் உண்டு.

6. குட் டச் பேட் டச் போல , பெண்களுக்கு இயற்கையிலேயே , ஒரு ஆணின் செயலுக்கான காரணம் அல்லது அந்த செயலின் நோக்கம் குறித்தான பல்புகள் எரியும் (ஆண்கள் போல மரமண்டைகள் இல்லை பெண்கள்). 

அப்படி இருக்கையில் .. "அழகாய் உள்ளீர்கள் " என்று சொன்னவரின் கண்ணைப் பார்த்தாலே அந்தக் கணத்தில் ஒரு "புன்னகை" (ஏற்பின் அடையாளம்) அல்லது "வழியாத இராசா" ( ஏற்கனவே அறிமுகமான நண்பரை காலாய்க்க) அல்லது இருக்கவே இருக்கிறது "எக்ஸ் குயூஸ் மீ" ( எனக்கு பிடிக்கவில்லை... How dare you to tell like that ?) என்று சொல்லி எண்ணத்தைப் பதிவு செய்யலாம். 

முதல் சந்திப்பில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை மனிதனாக மட்டும் பார்ப்பது அதாவது ஒரு ஆண் ஒரு பெண்ணை (அல்லது பெண் ஒரு ஆணை) அந்தப் பெண்பாலுக்கான உடலழகியல்கூறில் இருந்து தாண்டி ஒரு சக மனிதராய் முடியுமா என்றால், கஸ்டம்தான். அதற்கு பயிற்சியும் எதிர் பால் பற்றிய புரிதலும் அவசியம்.

ஆண் பதிவர்களுக்கும் பெண்பதிவர்களுக்கும் உடலரசியல் குறித்து ஷாலினியுடன் ஒரு கலந்துரையாடல் செய்வது அவசியம். நிச்சயம் நல்ல பயன் இருக்கும். இடைவெளிபோய் நல்ல புரிதல் வர வாய்ப்பு உள்ளது.
http://www.narsim.in/2010/04/blog-post.html?showComment=1270136662014#c6748579570615881194

http://www.narsim.in/2010/04/blog-post.html?showComment=1270137778114#c7387149994588144776



**
இது தற்காலிகமான பதிவு.  சில காலங்களில் அழிக்கப்பட்டுவிடும்.

நிகழ்கால (ஜீன் 03, 2010 ) தமிழ்ப்பதிவுகளின் அரசியல் தெரியாமல் யாராவது தெரியாமல் இதை வாசித்துவிட்டால்...

தமிழ் வலைப்பதிவர்கள் சிலருக்கு இடையே நடந்த மனவருத்தத்திற்கு எனது நாட்டாமைத்தனம் என்று கொள்ளலாம் . நர்சிம் ,பைத்தியக்காரன், சந்தனமுல்லை,சுந்தர் யாரையும் எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. வலைப்பதிவுகள் மூலம் தெரிந்தவர்கள்  அவ்வளவே.

நர்சிமின் , சுந்தர் பதிவுகளில் சிலவற்றில் பின்னூட்டம் இட்டு உள்ளேன்.
பைத்தியக்காரனின்  பதிவுகளில் சிலவற்றில் பின்னூட்டம் இட்டு உள்ளேன். அதைத்தாண்டி சினிமா மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழ்ப்படங்கள் தேவை குறித்து 2 முறை மின்மடல் செய்துள்ளேன்.
சந்தனமுல்லை பதிவுகளைப் படித்துள்ளேனா என்று தெரியவில்லை. நான் அறியாதவர் என்றாலும் அவரின் மீதான பாலியல் புனைவை கண்டிக்கும் நோக்குடன் அவரின் பெயரை செர்த்துள்ளேன்.





Picture from: http://xprezz.dk/
.

5 comments:

  1. WELL WRITTEN.
    அவருக்கு நர்சிம் கடன் வேறு வாங்கி கொடுத்தாராம் என்று எங்கோ சொல்லி இருந்தார். அப்படியாயின் கொஞ்சமாவது நெருக்கம் இருந்திருக்கத்தானே வேணும். சொல்லி திருத்தி இருக்கலாம்.

    நண்பனுக்காக பிழையை சரி என்று வாதாட வேண்டாம். மச்சான் நீ செய்தது தப்புடா அந்த பதிவரிடம் மன்னிப்பு கேள் என்று வற்புறுத்தி இருக்கலாம். நீங்கள் சொன்னது போல மனைவியிடம் கூட சொல்லி கொஞ்சம் பேசி இருக்கலாம். கோழைத்தனமானது வினவிற்கு எழுதி கொடுத்தது.

    ReplyDelete
  2. அனாமிகா,
    கணவன்/மனைவி அல்லது அப்பா/அம்மா மன்னிக்கும் பட்சத்தில் அவர்களின் ஆதரவு மற்றவ‌ர்களின் நம்பிக்கியைப் பெற்றுத்தரும்.

    நர்சிம்-ன் மனைவி அவரை மன்னித்து, இருவரும் சேர்ந்தே பாதிக்கப்படவரை சந்தித்து இருக்கலாம்.

    கல்யாணத்திற்கு தனிக்கட்டையாய் போவதற்கும் , கணவன் + மனைவியாய் போவதற்கும் , கணவன் + மனைவி + குழந்தைகளுடன் போவதற்கும் வேறு வேறு வரவேற்பு கிடைக்கும். அது போலத்தான்.

    **

    பைத்தியக்காரன் செய்தது என்ன மாதிரியான அறச்சீற்றம் என்று தெரியவில்லை. அவர் அடிக்கடை தோழமை தோழமை என்கிறார் அதன் அர்த்தம் அவரது அகராதியில் என்னவோ. :-((

    ReplyDelete
  3. //முதல் சந்திப்பில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை மனிதனாக மட்டும் பார்ப்பது அதாவது ஒரு ஆண் ஒரு பெண்ணை (அல்லது பெண் ஒரு ஆணை) அந்தப் பெண்பாலுக்கான உடலழகியல்கூறில் இருந்து தாண்டி ஒரு சக மனிதராய் முடியுமா என்றால், கஸ்டம்தான். அதற்கு பயிற்சியும் எதிர் பால் பற்றிய புரிதலும் அவசியம்.//

    Well Said........பெண் என்பவள் அன்னியமாக தோன்றும் போது முதலில் பாலியல் ரீதியாகத்தான் எதாவது தோன்றும்.? ஏன்? உடல் உருவாக்கமே காமத்தில் தான் நிகழ்கிறது.
    ஓஷோ -வின் "காமத்திலிருந்து கடவுளுக்கு " புத்தகத்தில் நன்றாக விளக்கப்பட்டுள்ளது ...............

    ReplyDelete
  4. கூடவே பல தவறான தகவல்களை பகிர்ந்துள்ளார், மங்களூர் சிவாவின் கேள்விக்கு இன்னும் பதிலில்லை!

    ReplyDelete
  5. அருமையாக எடுத்தியம்பி உள்ளீர்கள்!

    ReplyDelete