Wednesday, November 24, 2010

சமரசங்களற்ற வாழ்வு சாத்தியமா? பகுதி-1

கொ ள்கை என்றால் என்ன?

எதையும் தெரிந்து கொள்வதற்குமுன்  அதைத் தெரிந்து கொள்வதற்கான அவசியம் அல்லது  அக/புறத்தூண்டல் வேண்டும். எனவே முதலில், "கொள்கை" எதற்கு? என்று பார்த்து விடுவோம்.

 அதானே, எதற்கு கொள்கை?  எனக்கு "கொள்கை" என்ற ஒன்று தேவையாய் இருக்கும் பட்சத்தில் மட்டுமே நான் அதைப்பற்றி சிந்தனை செய்யவேண்டும்.  தேவையே இல்லாதபோது அல்லது எனது அன்றாட வாழ்விற்கு அதனால் பாதிப்பு இல்லாதபோது அதன் தேவை எதற்கு? அமேசான் காட்டில், ஏதோ ஒரு மூலையில் ஒரு பாம்பு ஒருவனைக் கடித்துவிட்டதென்றால் எனக்கு என்ன ?  அது பாட்டுக்கு நடக்கும். எனக்கு அதனால் சாதக/பாதகம் என்றால் மட்டுமே அல்லது குறைந்த பட்சம் அறிந்து கொள்ளும் ஆவல் இருந்தால் மட்டுமே , அமேசான் என்றால் என்ன? பாம்பு என்றால் என்ன ?அது ஏன் கடித்தது? என்று தேட முயல்வேன்.

ப்படி கொள்கை என்பது எதற்கு? அது எனக்குத் தேவையா? என்று சிந்தித்தால் மட்டுமே , அதை வைத்துக் கொள்ள எனக்கு ஒரு அவசியம் வரும். இங்கேதான் "இலக்கு" என்ற ஒன்று வருகிறது. மதுரைக்கு காலை 4 மணிக்குள் போக வேண்டும் என்பது இலக்கு என்றால், அதற்கான வழிகளை , சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, எப்படி? ஏன்? ஒரு குறிப்பிட்ட வழியில் மட்டும் போகவேண்டும் என்பது கொள்கையாக வந்து நிற்கும்.

இலக்கே அற்றவர்களுக்கு கொள்கை எனபது இருக்காது. அதுபோல ஒரே இலக்கை அடைய, ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான கொள்கை இருக்கும். ஆட்சியைப் பிடிப்பதே (மக்கள் சேவை என்று கொள்க) எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இலக்கு. ஆனால் அதை அடையும் வழி மற்றும் வியூகங்கள் எல்லாம் சேர்ந்து அவரவருக்கான தனித்துவம் வாய்ந்த கொள்கையாக வந்து நிற்கும்.

எனவே, இலக்கு என்ற ஒன்று தெரிவானவுடன் , அதை அடையும் வழிகள் அதை அடைவதற்கு தான் நம்பும் முறைகள் என்று எல்லாம் சேர்ந்து கொள்கையாக உருப்பெறும். இலக்கை ஒட்டியே கொள்கை என்பதால் அல்லது இலக்குக்கான கொள்கை என்பதால் , ஒரே மனிதருக்கு பல கொள்கைகள் இருக்கலாம். ஒரே கொள்கையை அவரின் எல்லா இலக்குக்கிற்கும் தூக்கிக்கொண்டு தர நிர்ணயம் செய்ய இயலாது. ஆனால் எல்லா இலக்கிற்கும் பொருந்தக்கூடிய சில பொதுவான கொள்கைகள் இருக்கும் / இருக்கலாம்.  சட்டத்திற்கு புறம்பாக நடப்பது தவறு என்பது உனது பொதுவான கொள்கையானல், 50 ரூபாய் டவுசர் த ரோபோ அனுமதிச் சீட்டை 500 ரூபாய்க்கு வாங்கிப் பார்ப்பதும் தவறு.  இது போன்ற மொக்கைகள் 10000000000000 கோடி ஊழல் நடந்துவிட்டது என்று புலம்பக்கூடாது. ஏன் என்றால், உனக்குத் தேவையானபோது நீ  500 ரூபாய் தவறு செய்கிறாய் மற்றவர்கள்.... விரலுக்குத்தகுந்த வீக்கம். அது போல குடித்துவிட்டு பைக் ஓட்டுபவர்கள், குடித்துவிட்டு லாரி மற்றும் பஸ் ட்ரைவர்களால் ஆபத்து அதிகம் என்று வருத்தப்பட யோக்கியதை இல்லை.  ஏன் என்றால் குடிந்துவிட்டு வாகனம் ஓட்டுவது தவறு என்பது உனது கொள்கையானால் , குவார்ட்டர் குடித்த நீ ஆட்டோவில் வர வேண்டும். அப்படியே ஒரு குவாட்டரைப் போட்டுவிட்டு பைக்கில் வீடு திரும்பக்கூடாது. அபப்டி வந்துவிட்டு நாடு சரியில்லை என்று பிதற்றக்கூடாது. உன்னைப்போன்ற வெளாங்காவெட்டிகள் இருக்கும் நாடு இப்படித்தான் இருக்கும்.


இலக்கும்  கொள்கையும் முடிவானவுடன், "கொள்கை"ப்படி இலக்கை அடைகிறோமா அல்லது இலக்கை அடைவதே கொள்கையாகமாறி சமரசங்களை ஏற்றுக் கொள்கிறோமா?


---------------------------

அரசியல் கட்சிகளின் இலக்கு மற்றும் கொள்கை

னது 12 ஆம் வகுப்பு முதல் கல்லூரி முடியும் வரை ஊரில் உள்ள எல்லா அரசியல் கட்சியிலும், நான் எனக்கே தெரியாமல் உறுப்பினராக இருந்துள்ளேன். எனது அண்னன், "எதற்கும் இருக்கட்டும்" என்று அவனின் அரசியல் நட்புகள் மூலம் எல்லா கட்சியிலும், எனக்கும் சேர்த்து உறுப்பினர் அட்டை வாங்கிவிடுவான். கேட்டால் "நாள‌ப்பின்ன கலெக்டர் ஆபிஸ், தாசில்தார் என்று ஏதாவது சர்டிபிகேட் வேண்டும் என்றால், கட்சிக்காரர்கள் உதவுவார்கள்." என்று விளக்கம் கொடுப்பான்.

யார் , எந்தக்கட்சி , அவர்களின் கொள்கை என்ன என்று ஏதும் தெரியாமலே நான் என் அண்ணனால் நேர்ந்துவிடப்பட்டு இருந்தேன். சிறுவயதில் காய்ச்சல் தலைவலி தாண்டி , பெரிய வியாதிகள் வந்தால், பிள்ளைக்கு மொட்டை போடுவதாக தாய்மார்கள் தாங்களாகவே நேர்ந்து கொள்வார்கள். அதுபோல இதுவும்.

ன்றும் பல கட்சிகளில் உறுப்பினர்களாக இருப்பவர்களிடம்,
  1. ந்தக் கட்சியின் கொள்கைகள் என்ன?
  2. தற்கு உட்பட்டே நீங்கள் உறுப்பினர்களாக ஆனீர்களா?
  3. றுப்பினர் ஆவதற்குமுன் கொள்கைகளையும் , இலக்கையும்  அலசி ஆராய்ந்தீர்களா?
  4. து உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, ஆசை, கொள்கை  மற்றும் இலக்கிற்கு ஏற்றதா?
  5. Why they exists as political party?  என்பதை ஆராய்ந்தீர்களா?
  6. ந்தக் கட்சி அறிவித்துக்கொண்ட இலக்கிலும், கொள்கையிலும்  தடம் மாறும்போது உங்களின் நிலை என்ன?
  7. நீங்கள் இன்று சேர்ந்துள்ள கட்சியுன் தலைமை , அவர்களின் சுய நலனுக்காக கூட்டணிகள் மாறும் போது கட்சியில் இருந்து வெளியில் வந்துவிடுவீர்களா? அல்லது நேர்ந்துவிடப்பட்ட ஆடுபோல கட்சி விசயத்தை வெளியில் பேசமாட்டேன் என்று இருப்பீர்களா?

இப்படியான கேள்விகள் கேட்டால் , "குஷ்பூவிற்கே தெரிந்த திராவிட வரலாறும், கொள்கையும் எங்களுக்குத் தெரியாதா?" என்பார்கள். எல்லாம் சரி, உங்கள் கட்சியின் முதல் பத்து முக்கிய கொள்கைகளைக் கூறுங்கள். மேலும், அந்தக் கொள்கையில் இதுவரை எவ்வளவு தூரம் வந்துள்ளீர்கள்? அதில் உங்கள் பங்கு என்ன என்றால்..."ஆங்.... பிரியாணி மற்றும் காண்ட்ராக்ட் கட்டிங்" என்றே சொல்கிறார்கள்.

கட்சியின் கொள்கை ,இலக்கு என்ன என்று தெரியாதவர்கள், எப்படி இலக்கை நோக்கி செல்லும் ஒரு தலைமையின் தொண்டராக அறிவித்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

சாதி, மதம் போல , வாழையடிவாழையாக காங்கிரஸ் குடும்பம், திமுக குடும்பம் ,கம்யூனிஸ்ட் குடும்பம் என்று ஞானஸ்தானம் செய்து நேர்ந்துவிடபட்டவர்கள் தான் அதிகம். ஒரு கட்சியில் சேர்வதற்கு முன் , அதன் கொள்கை, இலக்கு என்ன என்று கேட்டு , அது தனக்கு ஏற்றதா? அதன் செயல்திட்டங்களுக்கு எந்த அளவில் நாம் பங்காற்ற முடியும் என்று பார்த்து யாரும் உறுப்பினராவது இல்லை.  அப்படி இருந்தால், கட்சி எடுக்கும் எல்லா முடிவிற்கும் இவர்கள் கட்டுப்படாமல் கலகவாதியாய் மாறிவிடுவார்கள்.  மண்டையாட்டும் மக்கள் மட்டுமே கட்சி செய்யும் எல்லா ஊழல்களுக்கும் வியாக்யானம் கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். உட்கட்சி ஜனநாயகம் என்ற ஒன்று இருந்தால், இன்று இந்தியாவில் ஏறக்குறைய‌ எல்லாக் கட்சிகளிலும் மன்னர் பரம்பரை வாரிசு அரசியல் வந்து இருக்காது.

எனவே கொள்கை சார்ந்து யாரும் அரசியல் கட்சிகளில் உறுப்பினராவது இல்லை. எனக்கு என் அண்ணன் செய்தது போல ஏதாவது ஒரு பலனை எதிர்பார்த்து உறுப்பினராக இருக்கிறார்கள்.  சாதி, மதம் விசயத்தில் திமுகவின் கொள்கை என்ன என்று யாருக்காவது தெரியுமா? அப்படி ஒன்று இருந்தால், அதன் உறுப்பினர்கள் அனைவரும் அதைக் கடைபிடிக்க வேண்டுமே. கொள்கையைக் கடைபிடிக்காதவன் எப்படி உறுப்பினர் / தொண்டன் என்று சொல்லிக் கொள்ளமுடியும்?  ஆளுக்கு ஒரு வழி என்றால் why they exists as a member of a party?


.

11 comments:

  1. இங்கயும் பகுதி ஒன்னா... ஐய்யோ... சரி எழுதி முடிங்க... மொத்தமா படிச்சுக்கறேன்...

    ReplyDelete
  2. நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அருமை..கொள்கைக்காக யாரும் கட்சிகளில் சேர்வதில்லை..ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்துதான் சேர்கிறார்கள்..

    தெளிவான விளக்கங்கள்..நன்றி..

    ReplyDelete
  3. யேய்! வாங்கப்பா உட்கார்ந்து யோசிப்போங்கிறீங்க... நாங்க எப்படிடா இந்த அடிதடி நாள்ல பொழச்சிக்கெடந்து நாலு காசு பார்க்கிறதுன்னு ‘இலக்கை அடைவதே கொள்கை’னு வாழறோம்.

    கல்வெட்டு இதில என்னத் தெரியுமா பெரும் கொடுமை நீங்களாவது உங்களுக்கு விவரம் தெரியாத வயசில அப்படி அண்ணனால நேர்ந்து விடப்பட்டு உங்கள மீட்டெடுத்திட்டீங்க, ஆனா, எத்தனை ’படித்த’ புண்ணாக்குகள் விபரமறிந்தே இப்படி பல்டி அடித்தே வாழ்ந்து வருகிறது ... as young as starting from 18 on :((

    அருமையான அலசல்... தொடருங்க!

    ReplyDelete
  4. கொள்ளை அடிப்பதையே கொள்கையாக கொண்டவர்கள் கட்சி தலைமை,எதிர்த்து கேட்க நாதியற்ற தொண்டர் கூட்டம்,எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பொதுஜனம். என்ன பண்ண சொல்றீங்க.

    ReplyDelete
  5. இனியவன், ”எதிர்த்து கேட்க நாதியற்ற தொண்டர் கூட்டம்” இன்றும் இருகக என்ன? பீடிக்கும் அரை கிளாஸ் டீக்கும் வாழ்க்கையையே அடகு வைத்த தொண்டர் கூட்டம் எல்லாம் காலாவதி ஆகிவிட்டது. எல்லாம் அரசியல் பிசினசு என்றுக் கண்டுக் கொண்டு விட்டது.

    ReplyDelete
  6. கம்யூனிஸ்ட் கட்சி இன்றைக்கும் கூட,மற்றவைகளில் இருந்து வித்தியாசப்பட்டு, கட்சியின் முடிவுகளை, அப்படி முடிவெடுக்க வேண்டி வந்த சூழ்நிலையைத் தன்னுடைய உறுப்பினர்களுக்கு ரிபோர்ட் செய்து கொண்டு இருக்கிறது. அதே நேரம், உறுப்பினர்கள் தங்களுடைய புரிந்து கொண்டு செயலாற்றும் தன்மையை மேம்படுத்திக் கொள்கிறார்களா என்று பார்த்தால், கம்யூனிஸ்ட் கட்சி கூட அதில் தோற்றுக் கொண்டிருப்பதை நான் அறிவேன்.

    படியளப்பேன் என்று பாராள வந்தவன் தடிஎடுத்தானடி முத்தமா!
    ......
    தனதந்தித் தனதந்தித் தானோ! இந்த சதிகாரப் பாவிக்கு அதிகாரம் ஏனோ?
    இப்படி, குறவஞ்சி என்ற படத்திற்காக, கலைஞர்,வசனத்தோடு பாடலையும் எழுதினார். சிதம்பரம் ஜெயராமன் பாடினார். காங்கிரஸ் கட்சியை சாடும் விதத்தில் இருந்த அந்தப் பாடல், காங்கிரசை விட அவருக்கே, எதிராகத்திரும்பியதை, பொருத்தமாக இருந்ததைப் பழைய அரசியல் நினைவுகள் சொல்கின்றன.

    கொள்கை என்பது ஒரு நீண்ட கால இலக்கு! இப்போது எவரும் அப்படி நீண்ட கால இலக்கை முடிவு செய்வதில்லை. இன்றைய பிழைப்பிற்கு என்ன செய்யலாம் என்ற அளவிலேயே குறுகிப் போய் விட்ட பிறகு,அதை சமரசங்கள் என்று மட்டுமே சொல்ல முடியாது! பச்சையான சந்தர்ப்ப வாதம்!

    ReplyDelete
  7. நல்ல களம் ..நிறைய கேள்விகள் ..ஒரு இயக்கமோ ,கொள்கையோ நம் வாழ்க்கையை ஒரு படியாவாது நம் இலக்கை நோக்கி நகர்த்தி செல்ல வேண்டும் ,இலக்கு எது என்று நிர்ணயிப்பது ? பொதுவாகவே எல்லோர் இலக்கும் ஒரு முன்மாதிரி விஷயமாக இருக்கும் ,நடைமுறை சாத்தியங்களுக்கும் அதற்க்கும் தூரம் இருக்கும் ...மேலும் வாசிக்கணும்

    ReplyDelete
  8. உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. உஷா,
    ரொம்பநாள் கழித்து பார்க்கிறேன். நலமா?

    ReplyDelete
  10. கலகலப்ரியா,ஹரிஸ்,பிரசன்னா,தெகா,இனியவன், உஷா, எஸ்.கிருஸ்ணமூர்த்தி, சுனில் கிருஷ்ணன்.

    உங்கள் அனைவரின் வருகைக்கும் , கருத்துப் பகிர்விற்கும் நன்றி!

    ReplyDelete