Monday, January 10, 2011

"சைவம்" - என்பது மதம். அது "உணவுப் பழக்கம்" அல்ல‌

கே ள்வியே கேட்காமல் திணிக்கப்பட்ட புத்தியில் மட்டும் உறைந்திருக்கும் நிலை மடச்சமாதி எனப்படும் நிலை. மடச்சமாதி மாக்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த மடச்சாமாதி (சாம்பிராணிகள்) அறிவியல் பேசும்போதுதான், அவர்களின் மீது விமர்சனம் வருகிறது.

அப்படிப்பட்ட  ஒன்று  "நான் சைவம். கறி திங்க மாட்டேன். காரணம் நான் உயிர்களைக் கொல்வது பாவம் என்று நினைப்பவன்" என்று சொல்லும் மொக்கைதனம்.

சை வம் என்றால் என்ன‌?
தமிழகத்தில் மற்றும் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களில், சாதி,மதம் பாராமல் பலரும் பயன்படுத்தும் வார்த்தை சைவம். புலால் மறுக்கும்  ஒருவர், தனது உணவுப் பழக்கத்தை குறிக்க,  "சைவம்" என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார். இது ஒருவகையில் துவைக்கப்பயன்படும் எல்லா  பிராண்ட் சோப்பையும் "ரின்" என்று அழைப்பது அல்லது காப்பி(Copy) மெசின் அனைத்தையும் ஜெராக்ஸ் என்று அழைப்பது போன்றது.

சைவம் என்பது ஒரு மதம். மேலும் 'சைவம்' அதே சைவ மத‌த்தினரின் உணவு முறையும் அல்ல. குழப்பம் கரணம் கச்சாமி.

அதாவது.....
  • சைவம் என்பது முதலில் ஒரு மதத்தின் பெயர்.
  • மேலும் அந்த சைவ மதத்தில் இருப்பவர்கள் புலால் உண்ணாதவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்ற சட்டம் ஏதும் இல்லை.
ந்தியாவில் தோன்றிய மதங்களில் பெளத்தமும்,ஜெயின் வகையறாவும் புலால் மறுத்தலை கொள்கையாகக் கொண்டுள்ளது எனலாம். சைவம் , வைணவம் போன்ற சனாதன பார்ப்பனீய மதங்கள் சாப்பாட்டு விசயத்தில் புலால் மறுத்தலை மதக் கொள்கையாகக் கொள்ளவில்லை.  சைவக் கடவுள் சிவனே சுடுகாட்டு ஆண்டியாகவும், அவனது பக்தர்கள் வேட்டுவர்களாகவும் இருக்கையில், சைவம் மதம் புலால் மறுக்கிறது என்பதை ஏற்க முடியாது. சைவ மததின் கொள்கைகள் என்று இனிமேல் யாராவது எழுதினால்தான் உண்டு.

எனவே புலால் மறுப்பவர்கள் தங்களை தாவர உண்ணியாகச் சொல்லலாமே தவிர, சம்பந்தமில்லாமல் சைவம் என்ற ஒரு சனாதனதர்ம வர்ணாசிரம மத‌த்தின் அடையாளத்தில் ஒதுங்க வேண்டியது இல்லை.

கொல்லாமை மற்றும் புலால் மறுத்தல் பற்றிப் பேசிய நம்ம பெருசு ( பெருசு - அன்பால் சொல்வது) ஒரு இடத்தில்கூட சைவம் பற்றிச் சொல்லவில்லை. மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்ற பெரிசு அவர் புக்கில் "சைவம்" என்ற மத‌த்தைப் பற்றிப் பேசி இருக்க மாட்டார் என்றே நம்புகிறேன். குறள் அறிந்த நண்பர்கள் சொல்லலாம்.

அறத்துப்பால் - துறவறவியல் - புலான்மறுத்தல்
http://www.thirukkural.com/2009/01/blog-post_9289.html

அறத்துப்பால் - துறவறவியல் - கொல்லாமை
http://www.thirukkural.com/2009/01/blog-post_4715.html

சா தியும் புலால் மறுத்தலும்

ருவன் எந்த சாதிக்கு நேர்ந்துவிடப்பட்டு இருந்தாலும், உணவுப்பழக்கத்தில் தாவர உண்ணியாகவோ அல்லது மாமிச உண்ணியாகவோ அல்லது இரண்டும் திங்கியாகவோ இருக்கலாம்.  அப்படி இருப்பதால் உங்களின் சனாதன வர்ணாசிரம பார்ப்பனீயக் கொள்கைக்கு எந்த பங்கமும் வராது.  வர்ணாசிரமக் கொள்கைப்படி உங்களுக்கு மேல் ஒரு சாதியையும், உங்களுக்கு கீழ் சில சாதிகளையும் வரித்துக் கொண்டு, அதன்படி வேறுபாடுகள் பாராட்டினாலே போதும்.  மற்றபடி புலால் மறுத்தல் என்பது சனாதன வருணதர்மக் கோட்பாடு அல்ல.  பிறப்பின் பெயரால் சாதி பார்த்து தீண்டாமையை கடைப்பிடிப்பது (கல்யாணத்தில் சாதி பார்ப்பது, அடுத்த சாதியில் குழந்தைகள மணமுடித்தால் அருவாள் தூக்குவது )  மற்றும் அது சார்ந்த அயோக்கியத்தனம் செய்தாலே போதும். நீங்கள் அக்மார்க் பார்ப்ஸ்

புலால் மறுத்தலுக்கும் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் சைவ அய்யர், அசைவ அய்யர், பீர் அடிக்கும் அய்யர், வோட்கா அடிக்கும் அய்யங்கார், சைவப் பிள்ளை, அசைவப் பிள்ளை , நரிப்பிள்ளை , கீரிப்பிள்ளை சாப்பிடும் அல்லது சாப்பிடாத பிள்ளை. காட்டு நாயக்கர் மற்றும் வேட்டுவ நாயக்கர், விரதத்தின் போது மட்டும்  "நோ கறி" நாயுடு....என்று சகட்டுமேனிக்கு சாதி + உணவுப்பழக்கத்தை வைத்து புதுச் சாதி வகையை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களை மன்னிப்போமாக.

யிர்க் கொல்லாமை மனிதனுக்கு சாத்தியமா?

தற்கு முதலில், உயிர் என்றால் என்ன? என்று தெரியவேண்டும். அதுபோல உயிர்- ‍க்கும் உயிரி- க்கும் உள்ள வித்திசாயமும் தெரியவேண்டும். உயிர் என்றால் என்ன என்று தெரியமலேயே "உயிர்க்கொல்லாமை" தான் சைவம் என்று சந்தில் சிந்து பாடக்கூடாது.  அது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதுடன் , அடுத்தவர் முன்னிலையில் உங்களை அசிங்கப்படுத்தும்.

உயிர், உயிரி பற்றி அடிப்படையை அறிந்துகொள்ள உங்களுக்கான கையேடு.

இறப்பு - உரையாடல் - I
http://kaiyedu.blogspot.com/2008/02/i.html
இறப்பு - உரையாடல் - II - உயிர்த் தோற்றம், செல்-அறிமுகம்
http://kaiyedu.blogspot.com/2008/02/ii.html
இறப்பு - உரையாடல் - III - நெக்ரோசிஸ் - சீரற்ற இறப்பு முறை
http://kaiyedu.blogspot.com/2008/02/iii.html

ஒரு உயிரியைக் கொன்றாலே அது உயிர்க்கொலை என்ற அளவில், மனிதன் என்ற சார்ந்து வாழும் ஒரு விலங்கினம் தனது வாழ்நாளில் உயிர்க்கொலை செய்யாமலேயே வாழமுடியுமா? என்றால் அது நிச்சயமாக இல்லை. 

மனிதன் மற்ற உயிரிகளைச் சார்ந்தே வாழமுடியும். சார்ந்து என்றால் ஏதோ தோளில் சாய்ந்து கொண்டு அல்ல, சாப்பிட்டும் வாழும் நிலை. இதற்காக குற்ற உணர்வு தேவை இல்லை. நமது அமைப்பு அப்படி. வயிற்றிலும் மூக்கிலும் பேட்டரி போட்டுகொண்டு வாழமுடியாது. ஒருவேளை நாளை இது மாறலாம். அதுதான் அறிவியல்.

உணவு என்பதே அடுத்த ஒரு உயிர் அல்லது உயிரி. உயிரற்ற ஒன்றை (பாறை, கல் , மண் )மனிதன் இதுவரை உணவாக உட்கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. உயிரிகளை வகை வகையாக சமைத்து நேரடியாக அல்லது மறைமுகமாகப் பயன்படுத்தி வருகிறான். எனவே தாவர உண்ணி என்பதும் உயிர்க்கொலைதான். தாவர உணவு எடுப்பவர்கள் " உயிர்க் கொலையா? நான் லேது "என்று சொல்ல முடியாது. வாங்க நீங்களும் உயிர்க்கொலையாளிகளின் பக்கம். எனவே தாவர உண்ணிகள் உயிர்க்கொலை செய்யாத புண்ணியாத்மாக்கள் என்று பிலிம் போட வேண்டாம். அது உயிர் என்றால் என்னவென்றே தெரியாத மடத்தனத்தால் வரும் பேதமை.

ன் மனிதனின் உணவுப் பழக்கத்தில் இந்த வேறுபாடு?

ஒருவர் எந்த உணவு வகைகளைச் சாப்பிடுகிறார் என்பது ,அவரின் உணவுப்பழக்கம்.  அதைத்தாண்டி அதில் பாவம் , புண்ணியம், மதம் சாதி என்ற எந்தக் கண்றாவிகளையும் அள்ளிதெளித்து "கொல்லாமை" என்ற "குழு அடையாளம்" காட்டுவது முதலுக்கு மோசம். நீ எந்த உயிரியையும் கொல்லாமல் வாழ நினைத்தால் நீ உன்னையே கொல்கிறாய் என்று அர்த்தம். கொல்லாமை கடைபிடிக்க நீ உயிரியாக இருக்க மாட்டாய்.

மனிதனின் உணவுப் பழக்கம் என்பது அவன் இருக்கும் சூழல் சார்ந்தது.

இதற்கு பண்டைக்கால தமிழனின் வாழ்க்கை முறையை வகைப்படுத்தும் குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை போன்ற குறிப்புகளில் காணப்படும் , அவர்களின் உணவு முறையே சான்று.  எந்தக் காலத்திலும் மீன் தின்னும் ஒருவனை இழிவாகச் சொல்லவில்லை இந்தத்திணை. அது அவன் மண் சார்ந்த உணவுப்பழக்கம் அதைப் போற்ற வேண்டும். கள்ளுண்ணுவது, வாளைமீன் , விரால் மீன், தேன் , திணைமாவு, வேட்டையாடுதல் என்று அதகளப்படுத்தி இருக்கிறார்கள். இந்த 5 திணைகளில் எல்லாம் உழைக்கும் மக்களே காட்சிப்படுத்தப்பட்டு அவர்களுக்கான உணவு முறை இருக்கும். மணியாட்டும் நவீன பார்ப்பனீயக் கருத்தான சைவம் என்ற உணவுப் பழக்கத்தை குறிக்கும் வார்த்தை இருந்ததாக யாராவது சுட்டிக் காட்டினால் உதவியாய் இருக்கும்.

சங்ககாலத்து உணவும் உடையும்.
http://www.varalaaru.com/Default.asp?articleid=525

ண்ட மாற்றும் , பயண வசதியும் ஏற்பட்ட பின்னர்தான் அனைவரும் அனைத்து உணவு வகைகளையும் சாப்பிடும் வாய்ப்பு ஏற்பட்டது. அதுவரை அந்த  அந்த மண்ணின் மைந்தர்க்கு அந்த மண்ணில் கிடைக்கும் உயிர்களே உணவு. கடலின் அருகே வாழ்பவனுக்கு மீன்தான் பிரதான உணவு. அவனின் மீன் உணவு, குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களின் உணவைவிட எந்தவிதத்திலும் தாழ்ந்தது கிடையாது. அப்படி யாரும் சொன்னதும் இல்லை. இந்தக் கால பார்ப்பனீய சைவக் குஞ்சுகள், மீன் சாப்பிடுவதை மகா கேவலமாகப் பார்க்கிறதுகள்.

எல்லாம் மனிதன் வாழும் சூழல் சார்ந்த ஒன்று. எல்லா வாய்ப்புகளும் இருக்கும் போது , தெரிந்தெடுக்க முடியும். வாய்ப்பே இல்லாத சூழலில், இருப்பதைத்தான் திங்க வேண்டும். அதுதான் இயற்கை. இயற்கையின் பங்கை பயணமும் பண்ட மாற்றும் மாற்றியிருக்கிறது என்பது உண்மை.

உணவு என்பதே உயிர்க்கொலைதான். அதில் எந்த தாழ்ச்சியும் உயர்ச்சியும் இல்லை.

இன்னமும் பல மொக்கைகள் "நான் உயிர் கொல்லாமை கடைபிடிக்கும் டவுசர், உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை. அதனால்  என்று சைவ உணவு மட்டுமே உட்கொள்ளுகிறேன்" என்று கூறினால்......

1.கொல்லப்பட்ட விலங்குகளின் தோலால் ஆன பெல்ட் , பர்ஸ், சூ ... என்று ஏதேனும் உபயோகித்தாலும் நீங்கள் விலங்குகள் தோலைப் பயன்படுத்துவது மற்றும்  சார்ந்த அது கொலையையும், கொலை சார்ந்த வணிகத்தையும் ஊக்கிவிக்கும் செயல்.

2. மூச்சு விட்டாலும், தயிர் சாப்பிட்டாலும், பிரட், பன் சாப்பிட்டாலும் உயிர்க்கொலையே .எத்தனையோ பாக்டீரியாக்கள் காற்றில் இருந்து உடலுக்கு வருகிறது. தயிரில் பாக்டீடிரியா உள்ளது. பிரட், பன், பிச்சா, இட்லி ,தோசை என்று எல்லாவற்றிலும் நொதித்தல் உண்டு. அவை எல்லாம் உயிரிகளின் செயலே(ஈஸ்ட்).  சில டவுசர்பத்ரிக்கள் , நடு ரோட்டு நாராயண சாஸ்திரிகளும் (எத்தனை காலம் டவுசர்பாண்டி என்றே சொல்வது) முட்டை இல்லா கேக் மட்டும் சாப்பிடுவார்கள். பன் தலையர்களே பன்னிலும் பிச்சா மாவிலும் இட்லி ,தோசையிலும்  கூட நொதித்தல் உண்டே? என்ன செய்யலாம்?

3. ல அய்யர் மற்றும் அய்யங்கார் ஆத்து ஆண்/பெண் என்று எல்லா சகல குஞ்சு குளுமான்களும் பட்டுச்சேலை அல்லது அங்க வஸ்திரம் (??) போட்டு "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டியாக வலம் வருவார்கள். அவர்களின் கோமணம் &  வஸ்திரங்கள் பட்டுப்புழுக்களை கொன்று வந்தவை என்று மனதால் நினைக்கக்கூட அஞ்சுவார்கள்.

4. தைவிட காமெடி இந்த "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டி பெண்கள் அணியும் முத்தால் ஆன ஆபரணங்கள். சிப்பி என்பது உயிரற்ற வஸ்து இல்லை. அது ஒரு உயிரி அதைக் கொன்று பகட்டாக அணிகலன் செய்து போட்டுக் கொள்வார்கள்.

5. காலையில் நெய் இட்லியும் , மத்தியானம் நெய் சாம்பாரும் சாப்பிட்டுவிட்டு "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டி மக்கள் சபாக்களில் , மாட்டுத் தோல் அல்லது ஏதோ ஒரு விலங்கினைக் கொன்று , பக்குவப்படுத்தப்பட்ட தோலால் ஆன மிருதங்கத்தின் வாரை , இழுத்துக் கட்டிக் கொண்டு, அவா அவா சபா சாபாவாப் பாடுவா. ஆனால், அந்த தோல் எப்படி வந்தது என்று , அதே தோலின் வாரை இழுத்துக் கட்டும்போதுகூட யோசிக்க மாட்டா. என்ன கொடுமை இது "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டி?

6. "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டியில் உள்ள மக்கள் அனைவரும் , அவர்கள் வீட்டில் வரும் கொசு , மூட்டைப் பூச்சி, பூரன், பூச்சி வகைகளைக் கொல்லமாட்டார்கள். மிருகக்காட்சி சாலைக்கு போன் பண்ணி கொசுவை பத்திரமாக அனுப்பி வைப்பார்கள்.

என்ன மாதிரியான உயிர் கொல்லாமை இவர்கள் கடைபிடிப்பது?

சிப்பியைக் கொன்று அதில் செய்த முத்துக்களையும், பட்டுப்புழுக்களைக் கொன்று அதில் செய்த பட்டையும் அணிந்து கொண்டு, மாட்டின் தோலால் செய்யப்பட்ட மிருதங்கத்தில் இசை கேட்டுக் கொண்டிருக்கும் திருப்பதி வெங்கடவா போன்ற சாமிகளுக்கே வெளிச்சம்.

கொசுறு

கரிகரன் ஐயா, நீங்க சொல்லுவது தான் சரி
http://tbcd-tbcd.blogspot.com/2008/02/blog-post_19.html

என்னத்தைச் சொல்ல 4 - 1 - 2011
http://tbcd-tbcd.blogspot.com/2011/01/4-1-2011.html


Picture courtesy :  http://en.wikipedia.org