Monday, January 10, 2011

"சைவம்" - என்பது மதம். அது "உணவுப் பழக்கம்" அல்ல‌

கே ள்வியே கேட்காமல் திணிக்கப்பட்ட புத்தியில் மட்டும் உறைந்திருக்கும் நிலை மடச்சமாதி எனப்படும் நிலை. மடச்சமாதி மாக்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த மடச்சாமாதி (சாம்பிராணிகள்) அறிவியல் பேசும்போதுதான், அவர்களின் மீது விமர்சனம் வருகிறது.

அப்படிப்பட்ட  ஒன்று  "நான் சைவம். கறி திங்க மாட்டேன். காரணம் நான் உயிர்களைக் கொல்வது பாவம் என்று நினைப்பவன்" என்று சொல்லும் மொக்கைதனம்.

சை வம் என்றால் என்ன‌?
தமிழகத்தில் மற்றும் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களில், சாதி,மதம் பாராமல் பலரும் பயன்படுத்தும் வார்த்தை சைவம். புலால் மறுக்கும்  ஒருவர், தனது உணவுப் பழக்கத்தை குறிக்க,  "சைவம்" என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார். இது ஒருவகையில் துவைக்கப்பயன்படும் எல்லா  பிராண்ட் சோப்பையும் "ரின்" என்று அழைப்பது அல்லது காப்பி(Copy) மெசின் அனைத்தையும் ஜெராக்ஸ் என்று அழைப்பது போன்றது.

சைவம் என்பது ஒரு மதம். மேலும் 'சைவம்' அதே சைவ மத‌த்தினரின் உணவு முறையும் அல்ல. குழப்பம் கரணம் கச்சாமி.

அதாவது.....
  • சைவம் என்பது முதலில் ஒரு மதத்தின் பெயர்.
  • மேலும் அந்த சைவ மதத்தில் இருப்பவர்கள் புலால் உண்ணாதவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்ற சட்டம் ஏதும் இல்லை.
ந்தியாவில் தோன்றிய மதங்களில் பெளத்தமும்,ஜெயின் வகையறாவும் புலால் மறுத்தலை கொள்கையாகக் கொண்டுள்ளது எனலாம். சைவம் , வைணவம் போன்ற சனாதன பார்ப்பனீய மதங்கள் சாப்பாட்டு விசயத்தில் புலால் மறுத்தலை மதக் கொள்கையாகக் கொள்ளவில்லை.  சைவக் கடவுள் சிவனே சுடுகாட்டு ஆண்டியாகவும், அவனது பக்தர்கள் வேட்டுவர்களாகவும் இருக்கையில், சைவம் மதம் புலால் மறுக்கிறது என்பதை ஏற்க முடியாது. சைவ மததின் கொள்கைகள் என்று இனிமேல் யாராவது எழுதினால்தான் உண்டு.

எனவே புலால் மறுப்பவர்கள் தங்களை தாவர உண்ணியாகச் சொல்லலாமே தவிர, சம்பந்தமில்லாமல் சைவம் என்ற ஒரு சனாதனதர்ம வர்ணாசிரம மத‌த்தின் அடையாளத்தில் ஒதுங்க வேண்டியது இல்லை.

கொல்லாமை மற்றும் புலால் மறுத்தல் பற்றிப் பேசிய நம்ம பெருசு ( பெருசு - அன்பால் சொல்வது) ஒரு இடத்தில்கூட சைவம் பற்றிச் சொல்லவில்லை. மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்ற பெரிசு அவர் புக்கில் "சைவம்" என்ற மத‌த்தைப் பற்றிப் பேசி இருக்க மாட்டார் என்றே நம்புகிறேன். குறள் அறிந்த நண்பர்கள் சொல்லலாம்.

அறத்துப்பால் - துறவறவியல் - புலான்மறுத்தல்
http://www.thirukkural.com/2009/01/blog-post_9289.html

அறத்துப்பால் - துறவறவியல் - கொல்லாமை
http://www.thirukkural.com/2009/01/blog-post_4715.html

சா தியும் புலால் மறுத்தலும்

ருவன் எந்த சாதிக்கு நேர்ந்துவிடப்பட்டு இருந்தாலும், உணவுப்பழக்கத்தில் தாவர உண்ணியாகவோ அல்லது மாமிச உண்ணியாகவோ அல்லது இரண்டும் திங்கியாகவோ இருக்கலாம்.  அப்படி இருப்பதால் உங்களின் சனாதன வர்ணாசிரம பார்ப்பனீயக் கொள்கைக்கு எந்த பங்கமும் வராது.  வர்ணாசிரமக் கொள்கைப்படி உங்களுக்கு மேல் ஒரு சாதியையும், உங்களுக்கு கீழ் சில சாதிகளையும் வரித்துக் கொண்டு, அதன்படி வேறுபாடுகள் பாராட்டினாலே போதும்.  மற்றபடி புலால் மறுத்தல் என்பது சனாதன வருணதர்மக் கோட்பாடு அல்ல.  பிறப்பின் பெயரால் சாதி பார்த்து தீண்டாமையை கடைப்பிடிப்பது (கல்யாணத்தில் சாதி பார்ப்பது, அடுத்த சாதியில் குழந்தைகள மணமுடித்தால் அருவாள் தூக்குவது )  மற்றும் அது சார்ந்த அயோக்கியத்தனம் செய்தாலே போதும். நீங்கள் அக்மார்க் பார்ப்ஸ்

புலால் மறுத்தலுக்கும் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் சைவ அய்யர், அசைவ அய்யர், பீர் அடிக்கும் அய்யர், வோட்கா அடிக்கும் அய்யங்கார், சைவப் பிள்ளை, அசைவப் பிள்ளை , நரிப்பிள்ளை , கீரிப்பிள்ளை சாப்பிடும் அல்லது சாப்பிடாத பிள்ளை. காட்டு நாயக்கர் மற்றும் வேட்டுவ நாயக்கர், விரதத்தின் போது மட்டும்  "நோ கறி" நாயுடு....என்று சகட்டுமேனிக்கு சாதி + உணவுப்பழக்கத்தை வைத்து புதுச் சாதி வகையை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களை மன்னிப்போமாக.

யிர்க் கொல்லாமை மனிதனுக்கு சாத்தியமா?

தற்கு முதலில், உயிர் என்றால் என்ன? என்று தெரியவேண்டும். அதுபோல உயிர்- ‍க்கும் உயிரி- க்கும் உள்ள வித்திசாயமும் தெரியவேண்டும். உயிர் என்றால் என்ன என்று தெரியமலேயே "உயிர்க்கொல்லாமை" தான் சைவம் என்று சந்தில் சிந்து பாடக்கூடாது.  அது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதுடன் , அடுத்தவர் முன்னிலையில் உங்களை அசிங்கப்படுத்தும்.

உயிர், உயிரி பற்றி அடிப்படையை அறிந்துகொள்ள உங்களுக்கான கையேடு.

இறப்பு - உரையாடல் - I
http://kaiyedu.blogspot.com/2008/02/i.html
இறப்பு - உரையாடல் - II - உயிர்த் தோற்றம், செல்-அறிமுகம்
http://kaiyedu.blogspot.com/2008/02/ii.html
இறப்பு - உரையாடல் - III - நெக்ரோசிஸ் - சீரற்ற இறப்பு முறை
http://kaiyedu.blogspot.com/2008/02/iii.html

ஒரு உயிரியைக் கொன்றாலே அது உயிர்க்கொலை என்ற அளவில், மனிதன் என்ற சார்ந்து வாழும் ஒரு விலங்கினம் தனது வாழ்நாளில் உயிர்க்கொலை செய்யாமலேயே வாழமுடியுமா? என்றால் அது நிச்சயமாக இல்லை. 

மனிதன் மற்ற உயிரிகளைச் சார்ந்தே வாழமுடியும். சார்ந்து என்றால் ஏதோ தோளில் சாய்ந்து கொண்டு அல்ல, சாப்பிட்டும் வாழும் நிலை. இதற்காக குற்ற உணர்வு தேவை இல்லை. நமது அமைப்பு அப்படி. வயிற்றிலும் மூக்கிலும் பேட்டரி போட்டுகொண்டு வாழமுடியாது. ஒருவேளை நாளை இது மாறலாம். அதுதான் அறிவியல்.

உணவு என்பதே அடுத்த ஒரு உயிர் அல்லது உயிரி. உயிரற்ற ஒன்றை (பாறை, கல் , மண் )மனிதன் இதுவரை உணவாக உட்கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. உயிரிகளை வகை வகையாக சமைத்து நேரடியாக அல்லது மறைமுகமாகப் பயன்படுத்தி வருகிறான். எனவே தாவர உண்ணி என்பதும் உயிர்க்கொலைதான். தாவர உணவு எடுப்பவர்கள் " உயிர்க் கொலையா? நான் லேது "என்று சொல்ல முடியாது. வாங்க நீங்களும் உயிர்க்கொலையாளிகளின் பக்கம். எனவே தாவர உண்ணிகள் உயிர்க்கொலை செய்யாத புண்ணியாத்மாக்கள் என்று பிலிம் போட வேண்டாம். அது உயிர் என்றால் என்னவென்றே தெரியாத மடத்தனத்தால் வரும் பேதமை.

ன் மனிதனின் உணவுப் பழக்கத்தில் இந்த வேறுபாடு?

ஒருவர் எந்த உணவு வகைகளைச் சாப்பிடுகிறார் என்பது ,அவரின் உணவுப்பழக்கம்.  அதைத்தாண்டி அதில் பாவம் , புண்ணியம், மதம் சாதி என்ற எந்தக் கண்றாவிகளையும் அள்ளிதெளித்து "கொல்லாமை" என்ற "குழு அடையாளம்" காட்டுவது முதலுக்கு மோசம். நீ எந்த உயிரியையும் கொல்லாமல் வாழ நினைத்தால் நீ உன்னையே கொல்கிறாய் என்று அர்த்தம். கொல்லாமை கடைபிடிக்க நீ உயிரியாக இருக்க மாட்டாய்.

மனிதனின் உணவுப் பழக்கம் என்பது அவன் இருக்கும் சூழல் சார்ந்தது.

இதற்கு பண்டைக்கால தமிழனின் வாழ்க்கை முறையை வகைப்படுத்தும் குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை போன்ற குறிப்புகளில் காணப்படும் , அவர்களின் உணவு முறையே சான்று.  எந்தக் காலத்திலும் மீன் தின்னும் ஒருவனை இழிவாகச் சொல்லவில்லை இந்தத்திணை. அது அவன் மண் சார்ந்த உணவுப்பழக்கம் அதைப் போற்ற வேண்டும். கள்ளுண்ணுவது, வாளைமீன் , விரால் மீன், தேன் , திணைமாவு, வேட்டையாடுதல் என்று அதகளப்படுத்தி இருக்கிறார்கள். இந்த 5 திணைகளில் எல்லாம் உழைக்கும் மக்களே காட்சிப்படுத்தப்பட்டு அவர்களுக்கான உணவு முறை இருக்கும். மணியாட்டும் நவீன பார்ப்பனீயக் கருத்தான சைவம் என்ற உணவுப் பழக்கத்தை குறிக்கும் வார்த்தை இருந்ததாக யாராவது சுட்டிக் காட்டினால் உதவியாய் இருக்கும்.

சங்ககாலத்து உணவும் உடையும்.
http://www.varalaaru.com/Default.asp?articleid=525

ண்ட மாற்றும் , பயண வசதியும் ஏற்பட்ட பின்னர்தான் அனைவரும் அனைத்து உணவு வகைகளையும் சாப்பிடும் வாய்ப்பு ஏற்பட்டது. அதுவரை அந்த  அந்த மண்ணின் மைந்தர்க்கு அந்த மண்ணில் கிடைக்கும் உயிர்களே உணவு. கடலின் அருகே வாழ்பவனுக்கு மீன்தான் பிரதான உணவு. அவனின் மீன் உணவு, குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களின் உணவைவிட எந்தவிதத்திலும் தாழ்ந்தது கிடையாது. அப்படி யாரும் சொன்னதும் இல்லை. இந்தக் கால பார்ப்பனீய சைவக் குஞ்சுகள், மீன் சாப்பிடுவதை மகா கேவலமாகப் பார்க்கிறதுகள்.

எல்லாம் மனிதன் வாழும் சூழல் சார்ந்த ஒன்று. எல்லா வாய்ப்புகளும் இருக்கும் போது , தெரிந்தெடுக்க முடியும். வாய்ப்பே இல்லாத சூழலில், இருப்பதைத்தான் திங்க வேண்டும். அதுதான் இயற்கை. இயற்கையின் பங்கை பயணமும் பண்ட மாற்றும் மாற்றியிருக்கிறது என்பது உண்மை.

உணவு என்பதே உயிர்க்கொலைதான். அதில் எந்த தாழ்ச்சியும் உயர்ச்சியும் இல்லை.

இன்னமும் பல மொக்கைகள் "நான் உயிர் கொல்லாமை கடைபிடிக்கும் டவுசர், உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை. அதனால்  என்று சைவ உணவு மட்டுமே உட்கொள்ளுகிறேன்" என்று கூறினால்......

1.கொல்லப்பட்ட விலங்குகளின் தோலால் ஆன பெல்ட் , பர்ஸ், சூ ... என்று ஏதேனும் உபயோகித்தாலும் நீங்கள் விலங்குகள் தோலைப் பயன்படுத்துவது மற்றும்  சார்ந்த அது கொலையையும், கொலை சார்ந்த வணிகத்தையும் ஊக்கிவிக்கும் செயல்.

2. மூச்சு விட்டாலும், தயிர் சாப்பிட்டாலும், பிரட், பன் சாப்பிட்டாலும் உயிர்க்கொலையே .எத்தனையோ பாக்டீரியாக்கள் காற்றில் இருந்து உடலுக்கு வருகிறது. தயிரில் பாக்டீடிரியா உள்ளது. பிரட், பன், பிச்சா, இட்லி ,தோசை என்று எல்லாவற்றிலும் நொதித்தல் உண்டு. அவை எல்லாம் உயிரிகளின் செயலே(ஈஸ்ட்).  சில டவுசர்பத்ரிக்கள் , நடு ரோட்டு நாராயண சாஸ்திரிகளும் (எத்தனை காலம் டவுசர்பாண்டி என்றே சொல்வது) முட்டை இல்லா கேக் மட்டும் சாப்பிடுவார்கள். பன் தலையர்களே பன்னிலும் பிச்சா மாவிலும் இட்லி ,தோசையிலும்  கூட நொதித்தல் உண்டே? என்ன செய்யலாம்?

3. ல அய்யர் மற்றும் அய்யங்கார் ஆத்து ஆண்/பெண் என்று எல்லா சகல குஞ்சு குளுமான்களும் பட்டுச்சேலை அல்லது அங்க வஸ்திரம் (??) போட்டு "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டியாக வலம் வருவார்கள். அவர்களின் கோமணம் &  வஸ்திரங்கள் பட்டுப்புழுக்களை கொன்று வந்தவை என்று மனதால் நினைக்கக்கூட அஞ்சுவார்கள்.

4. தைவிட காமெடி இந்த "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டி பெண்கள் அணியும் முத்தால் ஆன ஆபரணங்கள். சிப்பி என்பது உயிரற்ற வஸ்து இல்லை. அது ஒரு உயிரி அதைக் கொன்று பகட்டாக அணிகலன் செய்து போட்டுக் கொள்வார்கள்.

5. காலையில் நெய் இட்லியும் , மத்தியானம் நெய் சாம்பாரும் சாப்பிட்டுவிட்டு "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டி மக்கள் சபாக்களில் , மாட்டுத் தோல் அல்லது ஏதோ ஒரு விலங்கினைக் கொன்று , பக்குவப்படுத்தப்பட்ட தோலால் ஆன மிருதங்கத்தின் வாரை , இழுத்துக் கட்டிக் கொண்டு, அவா அவா சபா சாபாவாப் பாடுவா. ஆனால், அந்த தோல் எப்படி வந்தது என்று , அதே தோலின் வாரை இழுத்துக் கட்டும்போதுகூட யோசிக்க மாட்டா. என்ன கொடுமை இது "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டி?

6. "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டியில் உள்ள மக்கள் அனைவரும் , அவர்கள் வீட்டில் வரும் கொசு , மூட்டைப் பூச்சி, பூரன், பூச்சி வகைகளைக் கொல்லமாட்டார்கள். மிருகக்காட்சி சாலைக்கு போன் பண்ணி கொசுவை பத்திரமாக அனுப்பி வைப்பார்கள்.

என்ன மாதிரியான உயிர் கொல்லாமை இவர்கள் கடைபிடிப்பது?

சிப்பியைக் கொன்று அதில் செய்த முத்துக்களையும், பட்டுப்புழுக்களைக் கொன்று அதில் செய்த பட்டையும் அணிந்து கொண்டு, மாட்டின் தோலால் செய்யப்பட்ட மிருதங்கத்தில் இசை கேட்டுக் கொண்டிருக்கும் திருப்பதி வெங்கடவா போன்ற சாமிகளுக்கே வெளிச்சம்.

கொசுறு

கரிகரன் ஐயா, நீங்க சொல்லுவது தான் சரி
http://tbcd-tbcd.blogspot.com/2008/02/blog-post_19.html

என்னத்தைச் சொல்ல 4 - 1 - 2011
http://tbcd-tbcd.blogspot.com/2011/01/4-1-2011.html


Picture courtesy :  http://en.wikipedia.org

50 comments:

  1. //சைவப் பிள்ளை, அசைவப் பிள்ளை , நரிப்பிள்ளை , கீரிப்பிள்ளை//

    :))

    ReplyDelete
  2. //காலையில் நெய் இட்லியும் , மத்தியானம் நெய் சாம்பாரும் சாப்பிட்டுவிட்டு "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டி மக்கள் சபாக்களில் , மாட்டுத் தோல் அல்லது ஏதோ ஒரு விலங்கினைக் கொன்று , பக்குவப்படுத்தப்பட்ட தோலால் ஆன மிருதங்கத்தின் வாரை , இழுத்துக் கட்டிக் கொண்டு, அவா அவா சபா சாபாவாப் பாடுவா. ஆனால், அந்த தோல் எப்படி வந்தது என்று , அதே தோலின் வாரை இழுத்துக் கட்டும்போதுகூட யோசிக்க மாட்டா. என்ன கொடுமை இது "சுத்த அக்மார்க் உயிர்க்கொலை நோ" கமிட்டி?// இவாள் டங்குவாரை அத்துபுட்டேள் போங்கோ

    ReplyDelete
  3. மாட்டின் உடலிருந்து வரும் பால் சைவம் என்று சொல்லி கொள்கிறார்களே, அது தயிர் ஆவதற்கு முன்னரே அசைவம் தானே!

    ReplyDelete
  4. இதை எழுத தூண்டுதலாக எதாவது பதிவு இருக்கா தல!?

    ReplyDelete
  5. http://umaiyanan.blogspot.com/2007/12/blog-post_30.html

    ReplyDelete
  6. photosynthesis போன்று தனக்குத் தானே உணவு சமைத்துக் கொள்ளும் உயிரிகளைத் தவிர அனைத்தும் சார்ந்திருப்பவையே. சரி தான். ஆனாலும் ஒரு கேள்வி. செடியினத்துக்கு வலி எனும் உணர்வு உண்டா? பழத்தைப் பறித்து உண்டாலோ இல்லை கிளையை வெட்டினாலோ வலிக்குமா? மாடு போன்ற மிருகங்கள் தம் கன்றைப் பிரிவதால் துடித்து கண்ணீர் வடிக்கும் மனவலி செடிகளுக்கும் ஏற்படுமா?

    வேகன் என்றொரு வெஜ் பிரிவினர் இருக்கிறார்கள். பால் சம்பந்தப்பட்ட எதையும் எடுத்துக் கொள்வதில்லை.

    ReplyDelete
  7. தனி காட்டு ராஜா, தியாகு ,வால்,உமையணன் ,redwithanger
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    **

    வால்,
    இது சமீபத்தில் டிபிசிடி யின் பதிவில் நடந்த ஒரு உரையாடலினால் வந்த ஒன்று.

    என்னத்தைச் சொல்ல 4 - 1 - 2011
    http://tbcd-tbcd.blogspot.com/2011/01/4-1-2011.html

    **

    redwithanger

    //..ஒரு கேள்வி. செடியினத்துக்கு வலி எனும் உணர்வு உண்டா? பழத்தைப் பறித்து உண்டாலோ இல்லை கிளையை வெட்டினாலோ வலிக்குமா?//

    செடிக்கு (தாவரங்கள்) வலியுணரும் நரம்பு மண்டலங்கள் கிடையாது.

    //மாடு போன்ற மிருகங்கள் தம் கன்றைப் பிரிவதால் துடித்து கண்ணீர் வடிக்கும் மனவலி செடிகளுக்கும் ஏற்படுமா?//

    செடிகள் (தாவரங்கள்) புறத்தூண்டலுக்கு எதிர்வினை செய்கின்றன. அவைகளுக்கு உயிர் உண்டு என்று நிரூபிப்பட்டுள்ளது. மனிதன் அல்லது மாடு போல Thought Process (மனம் என்பது ஒரு உறுப்பு அல்ல எனவே Thought sphere அல்லது Thought Process என்று கொள்வோம்) உண்டா என்பது எனக்குத் தெரியவில்லை.

    // வேகன் என்றொரு வெஜ் பிரிவினர் இருக்கிறார்கள். பால் சம்பந்தப்பட்ட எதையும் எடுத்துக் கொள்வதில்லை.//

    ஆம் உண்மையே

    ***


    உமையணன்,
    உங்களின் சுட்டியைப் படித்தேன். நன்றி

    ReplyDelete
  8. அண்ணே, உங்கள் விளக்கம் புரிகிறது. கொல்வது என்றால் அனைத்தையும் கொல்வது என்ற புரிதலில் தான் இதை எழுதி இருக்கிறீர்கள். உயிர் என்ற அளவில் யானையின் உயிரும், எறும்பின் உயிரும் ஒன்று தான், இருந்தாலும் அவற்றின் உற்பத்தித் தொகைதான் அவற்றின் மதிப்பை சொல்லுகின்றன. ஒரு யானை 50 வயது வரை வாழ்வதில் சந்திக்கும் போராட்டங்களும், எறும்பு ஒரு ஆண்டு வாழ எடுத்துக் கொள்ளும் வாழ்க்கைப் போராட்டங்களும் ஒன்று அல்ல. மேலும் யானைகளின் இனப் பெருக்கம் மற்றும் எறும்பின் இனப்பெருக்கம் ஒப்பிட்டுப் பாருங்கள். பத்து எறும்பை நசுக்கிக் கொன்றால் எறும்புக்கூட்டத்தில் பெரிதாக இழப்பு எதுவும் இல்லை, ஆனால் யானைக் கூட்டத்தில் பத்து யானை என்பது பேரிழப்பு. (ஜெயமோகனின் விளக்கத்தில் இருந்த ஒருசிலவரிகள் அவை, நான் ஜெ வை அப்படியே ஏற்றுக் கொள்பவன் அல்ல அதே சமயத்தில் அனைத்தையும் புறக்கணிப்பவனும் அல்ல)

    சகட்டுமேனிக்கு வேட்டையாடித் திண்ணும் மனிதன் விலங்குகளின் மறு உற்பத்திக்கு என்ன செய்துள்ளான் என்பதை நீங்கள் விளக்கி இருந்தால் உங்கள் கட்டுரை முழுமை பெற்றிருக்கும். மனிதனுக்கு ஆறாம் அறிவு இல்லை என்றால் வேட்டையாடுதலில் இருக்கும் ஞாயம் மற்றும் கட்டுப்பாடு தேவைக் குறித்தே இருக்கும். ஆனால் மனித இனத்தின் அகோரப்பசிக்கு எத்தனையோ விலங்கினங்கள் கூண்டோடு அழிந்துவிட்டது (டோலோ பறவை என்று இணையத்தில் தேடிப்பாருங்கள்)

    "கொள்வது பாவம்" என்பதாக இல்லாமல் "மறு உற்பத்திக்கு ஏற்பாடு செய்யாமல் உயிர்களைக் கொல்வது பாவம்" என்று சொன்னால் நான் அதை ஏற்றுக் கொள்வேன்.

    ஒரு கொள்கையை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அதன் தேவை அன்றிருந்தால் மட்டுமே முடியும். வள்ளுவர் காலத்திலோ, சமண / பவுத்த மதத் துவக்கத்திலோ கொல்லாமை வழியுறுத்தலின் நோக்கம் உயிர்களின் மதிப்பை உணராமல் மனிதன் உள்ளிட்டு அனைத்தையும் கொன்று குவித்திருக்க, அதனைத் தொடர்ந்து 'உயிர்களிடத்து அன்பு செலுத்துத்துங்கள்' என விலங்குகளை முதன்மையாக்கி அதையே மனிதர்களை நோக்கியும் நகர்த்த ஏற்படுத்தப்பட்டதே இந்தக் கொல்லாமை குறித்த குறள்கள், கொள்கைகள் என்றே நான் நினைக்கிறேன்.

    ****

    வெறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மட்டுமே கொல்லாமை வழியுறுத்தப்பட்டுள்ளது என்பதையும் பார்த்தால். 'விலங்குகளைப் படைத்ததே மனிதர்களுக்கு உணவாக்கத்தான்' என்னும் புற மதங்களின் கொள்கையைவிட சிறப்பாகவே உள்ளது. ஏனெனில் விலங்குகளின் ஒட்டுமொத்த இன அழிப்பு இந்தியாவின் சமய/மதங்களால் ஞாயப்படுத்தப்படவில்லை. இயற்கையின் சமச்சீரற்ற தன்மைக்கு மனிதன் மட்டுமே காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதன் வலியுறுத்தல் அதில் அடங்கி இருக்கிறது.

    கொல்வது பாவம் இல்லை என்றாலும் கூட, அரசுகளே குறிப்பிட்ட இனவகை மீன்களைப் பிடிக்கக் கூடாது என்று பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடு விதித்திருப்பது மட்டும் எதற்காக ?

    ReplyDelete
  9. கல்வெட்டு. செடியில நரம்பு மண்டலம் கிடையாதுன்னு எனக்கும் தெரியும். நானும் பொட்டானி படிச்சு வந்த ஆளு தான். நான் கேட்டது, அதற்கு அப்பாற்பட்டு வேறு ஏதாவது மெக்கானிசம் மூலமாக அவை வலியை உணர முடியுமா என்று.

    ஓர் உணரக் கூடிய மிருக உயிரினத்தைக் கொன்று அதற்கு வலி ஏற்படுத்துவதற்கு பதிலாக, செடி வகைகளை உணவாகக் கொண்டு தானும் உயிர் வாழ முடியும் என்றால் ஒரு பகுத்தறிவுவாதி வெஜ் ஆக இருப்பதில் தவறில்லையே?

    //அவைகளுக்கு உயிர் உண்டு என்று நிரூபிப்பட்டுள்ளது//

    :-) இல்லைன்னு யார் சொன்னது? இல்லாம தான் மண்ணுல போட்டதும் மொளை விட்டு வருதா?

    அதுசரி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்ன்னு சொன்னது எந்த மதம்? :-)

    ReplyDelete
  10. (1)

    கோவி,
    எனது இந்தப்பதிவானது உணவு என்பது உயிர்க்கொலையே என்ற அளவில் மட்டும் சொல்லப்பட்டது. புலால் மறுத்தல் என்பது பற்றி அல்ல.

    "உயிரைக் கொல்ல வேண்டாம் என்றே புலால் மறுக்கிறேன்" என்று சொல்பவர்களுக்காக மட்டுமே.

    **

    உணவு என்ற வகையில், மனித இனம் அந்த அந்த இடத்திற்கு ஏற்ப வாழ்ந்து வருகிறது. அதில் தனிமனிதன் ஒருவனின் சுவை சார்ந்த விருப்பங்கள் இருக்கும்.

    **

    //உயிர் என்ற அளவில் யானையின் உயிரும், எறும்பின் உயிரும் ஒன்று தான், இருந்தாலும் அவற்றின் உற்பத்தித் தொகைதான் அவற்றின் மதிப்பை சொல்லுகின்றன. ஒரு யானை 50 வயது வரை வாழ்வதில் சந்திக்கும் போராட்டங்களும், எறும்பு ஒரு ஆண்டு வாழ எடுத்துக் கொள்ளும் வாழ்க்கைப் போராட்டங்களும் ஒன்று அல்ல. மேலும் யானைகளின் இனப் பெருக்கம் மற்றும் எறும்பின் இனப்பெருக்கம் ஒப்பிட்டுப் பாருங்கள். //

    எறும்பு , யானை உயிரிகளின் வாழ்க்கைமுறை வெவ்வேறானது. இதில் மறுக்க என்ன உள்ளது கோவி? நீங்களே சொன்னபடி, நான் சொல்வது உயிர் என்ற அளவில் மட்டுமே.

    உயிரியின் வலிமை, அளவு, இனப்பெருக்க‌த்திறன் சார்ந்து அல்ல.

    ...

    ReplyDelete
  11. கோவி, (2)
    //பத்து எறும்பை நசுக்கிக் கொன்றால் எறும்புக்கூட்டத்தில் பெரிதாக இழப்பு எதுவும் இல்லை, ஆனால் யானைக் கூட்டத்தில் பத்து யானை என்பது பேரிழப்பு....//

    இல்லை கோவி.
    ஒவ்வொரு கூட்டத்திற்கும் அதற்கே உரிய சில அடிப்படைக் குணங்களும், குழுச்செயல்பாடுகளும் உண்டு.

    எறும்பானாலும் , யானையானாலும் இழப்பு என்பது அந்த அந்த கூட்டத்திற்கு ஒருவித இழப்பே.

    என்னதான் 10 குழந்தை இருந்தாலும் ஒரு குழந்தை இழப்பதை ஒரு தாய் தாங்கிக் கொள்ளமாட்டாள். இரண்டு குழந்தை உள்ளவர்களின் ஒரு குழந்தை இழப்பே பெரியது என்பது நமது பார்வை.

    யானையும், எறும்பும் இழப்பை எப்படி எடுத்துக் கொள்ளும் என்பது நமது அனுமானங்களே.

    ***

    // சகட்டுமேனிக்கு வேட்டையாடித் திண்ணும் மனிதன் விலங்குகளின் மறு உற்பத்திக்கு என்ன செய்துள்ளான் என்பதை நீங்கள் விளக்கி இருந்தால் உங்கள் கட்டுரை முழுமை பெற்றிருக்கும். மனிதனுக்கு ஆறாம் அறிவு இல்லை என்றால் வேட்டையாடுதலில் இருக்கும் ஞாயம் மற்றும் கட்டுப்பாடு தேவைக் குறித்தே இருக்கும். ஆனால் மனித இனத்தின் அகோரப்பசிக்கு எத்தனையோ விலங்கினங்கள் கூண்டோடு அழிந்துவிட்டது (டோலோ பறவை என்று இணையத்தில் தேடிப்பாருங்கள்)

    "கொள்வது பாவம்" என்பதாக இல்லாமல் "மறு உற்பத்திக்கு ஏற்பாடு செய்யாமல் உயிர்களைக் கொல்வது பாவம்" என்று சொன்னால் நான் அதை ஏற்றுக் கொள்வேன்.//


    நான் கொல்வது பாவம் என்று பேச வரவில்லை கோவி. மேலும் உணவு உற்பத்தி குறித்தும் பேசவில்லை.

    நமக்கு ஒருவேளை சாப்பாடாக‌ இருக்கும் கோழி ஒரு 5 குழந்தைகளுக்கு தாயாக இருக்கலாம்.

    நான் குஞ்சுவின் பார்வையிலோ அல்லது கோழியின் பார்வையிலோ உரையாடவரவில்லை. உணவு -‍ உயிர் என்ற அளவில் மட்டுமே.

    ****

    ReplyDelete
  12. கோவி, (3)
    // ஒரு கொள்கையை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அதன் தேவை அன்றிருந்தால் மட்டுமே முடியும். வள்ளுவர் காலத்திலோ, சமண / பவுத்த மதத் துவக்கத்திலோ கொல்லாமை வழியுறுத்தலின் நோக்கம் உயிர்களின் மதிப்பை உணராமல் மனிதன் உள்ளிட்டு அனைத்தையும் கொன்று குவித்திருக்க, அதனைத் தொடர்ந்து 'உயிர்களிடத்து அன்பு செலுத்துத்துங்கள்' என விலங்குகளை முதன்மையாக்கி அதையே மனிதர்களை நோக்கியும் நகர்த்த ஏற்படுத்தப்பட்டதே இந்தக் கொல்லாமை குறித்த குறள்கள், கொள்கைகள் என்றே நான் நினைக்கிறேன்.//

    நீங்கள் சொல்வது உண்மையே. அண்டி வாழும் பிராணிகளை முன்னிருத்திப் பேசப்பட்டவையே பழைய காலத்து கொல்லாமை.

    பண்டைய காலத்தை நான் தொட்டது "சைவம் உணவுப் பழக்கம் இல்லை" என்று சொல்லவே.

    புலால் மறுத்தல் என்பதை கொல்லாமையுடன் தொடர்புபடுத்தினால், மிருந்தங்க தோல் பயன்படுத்தலிலும் கொல்லாமை வேண்டும் என்று சொல்லவே , சைவம் பற்றிய உரையாடல்.

    ****

    // வெறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மட்டுமே கொல்லாமை வழியுறுத்தப்பட்டுள்ளது என்பதையும் பார்த்தால். 'விலங்குகளைப் படைத்ததே மனிதர்களுக்கு உணவாக்கத்தான்' என்னும் புற மதங்களின் கொள்கையைவிட சிறப்பாகவே உள்ளது. ஏனெனில் விலங்குகளின் ஒட்டுமொத்த இன அழிப்பு இந்தியாவின் சமய/மதங்களால் ஞாயப்படுத்தப்படவில்லை. இயற்கையின் சமச்சீரற்ற தன்மைக்கு மனிதன் மட்டுமே காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பதன் வலியுறுத்தல் அதில் அடங்கி இருக்கிறது.//

    நானும் எதையும் ஞாயப்படுத்தவோ அல்லது தவறு என்று சொல்லவோ இல்லை.

    சைவம் என்பதை உயிர்க்கொலை தவிர்த்தலுடன் ஒப்பிட்டுப்பேசுவதால் , எல்லாம் உயிர்க்கொலையே என்று சொல்லியுள்ளேன்.

    ***

    // கொல்வது பாவம் இல்லை என்றாலும் கூட, அரசுகளே குறிப்பிட்ட இனவகை மீன்களைப் பிடிக்கக் கூடாது என்று பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடு விதித்திருப்பது மட்டும் எதற்காக ? //

    கோவி,
    (1)மீன் சாப்பிடுவது உயிர்க்கொலை என்று சொல்பவனுக்கும்....

    (2) ஒருவகை மீன் அருகிவிட்டதால் அதை பிடிக்கவேண்டாம் மற்றதைப் பிடிக்கலாம் என்று சொல்வதும் வேறு வேறு.

    இரண்டாவதில் மீன் பிடிப்பதே தவறு என்று சொல்லவில்லை அல்லது சாப்பிட மீன்பிடிப்பது தவறு என்று சொல்லவில்லை. குறிப்பிட்ட இனவகை அரிதாகிவிட்டதால் விட்டுவை என்கிறார்கள். அவ்வளவே. அதில் உணவு சார்ந்த பாவம் , புண்ணியம் இல்லை.

    ஆனால், சைவம் என்று சொல்லிக் கொள்பவர்கள், பாவம் புண்ணியம் மோட்சம் இரக்கம் கருணை என்று சொல்லி அடுத்தவர்களை குற்றயுணர்சிக்கு ஆளாக்கிவிட்டு மாட்டுத் தோல் மிருதங்கம் தட்டுவதைத்தான் அறியா நிலை என்று சொல்லுகிறேன்.

    * ========== *

    ReplyDelete
  13. //உயிரியின் வலிமை, அளவு, இனப்பெருக்க‌த்திறன் சார்ந்து அல்ல.//

    என்ன சொல்கிறீர்கள் நீங்கள், ஒரு கொசுக்கூட்டம் மற்றும் எறும்புக் கூட்டம் உற்பத்தியாகும் கால அளவும் ஒரு யானை உருவாக எடுத்துக் கொள்ளும் கால அளவும் ஒன்று அல்ல. இரண்டு கொசுக்களை வைத்து ஓராண்டில் ஊருக்கே நோய் பரப்பிவிட முடியும், இரண்டு யானைகள் ஒரு காட்டில் பல்கிப் பெருக எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

    ReplyDelete
  14. //என்னதான் 10 குழந்தை இருந்தாலும் ஒரு குழந்தை இழப்பதை ஒரு தாய் தாங்கிக் கொள்ளமாட்டாள். இரண்டு குழந்தை உள்ளவர்களின் ஒரு குழந்தை இழப்பே பெரியது என்பது நமது பார்வை.//


    நீங்கள் ஒரு புத்தராக போதனைக் சொல்கிறீர்கள்.

    நடைமுறையில் ஒரு நாட்டின் தலைவனை கொல்வதும், அந்த நாட்டின் 100 குடிமகன்களைக் கொல்வதும் ஒன்று அல்ல. எதனால் பிரச்சனைகள் ஆகிறது எது முக்கியம் என்பதை யார் முடிவு செய்கிறார்கள் ? எது ஏற்றுக் கொள்ளும் வாதம் ?

    ReplyDelete
  15. கோவி,

    //என்ன சொல்கிறீர்கள் நீங்கள், //


    நான் சொல்வது உயிர் என்ற அளவில் மட்டுமே தவிர அந்த உயிரின் வலிமை, அளவு, இனப்பெருக்க‌த்திறன் சார்ந்து அல்ல. என்று சொல்கிறேன்.

    அதாவது எனது பேசுபொருள் உயிர் என்ற அளவில் மட்டுமே.

    .

    ReplyDelete
  16. கோவி,
    //எதனால் பிரச்சனைகள் ஆகிறது எது முக்கியம் என்பதை யார் முடிவு செய்கிறார்கள் ? எது ஏற்றுக் கொள்ளும் வாதம் ?//

    அதை யானையும், எறும்பும் முடிவு செய்யட்டும் என்பதே எனது நிலை. அது போல அந்த அந்த தாயும்.

    .

    ReplyDelete
  17. .

    redwithanger ,

    //நான் கேட்டது, அதற்கு அப்பாற்பட்டு வேறு ஏதாவது மெக்கானிசம் மூலமாக அவை வலியை உணர முடியுமா என்று.//

    தெரியவில்லை

    //ஓர் உணரக் கூடிய மிருக உயிரினத்தைக் கொன்று அதற்கு வலி ஏற்படுத்துவதற்கு பதிலாக, செடி வகைகளை உணவாகக் கொண்டு தானும் உயிர் வாழ முடியும் என்றால் ஒரு பகுத்தறிவுவாதி வெஜ் ஆக இருப்பதில் தவறில்லையே?//

    ம்ம்.. நீங்கள் எங்கே வருகிறீர்கள் என்பது இப்போது புரிகிறது.

    நான் வலி உணரும் திறன் பற்றியோ , அது இல்லாததால் அது சரி என்றோ பேசவில்லை.

    வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவையும் ஒரு உயிரி உயிர் என்ற அளவில் மட்டுமே.

    வலி உணராவிட்டாலும் அது ஒரு உயிர் என்ற அளவில் மட்டுமே எனது உரையாடல்.

    // :-) இல்லைன்னு யார் சொன்னது? இல்லாம தான் மண்ணுல போட்டதும் மொளை விட்டு வருதா?//

    :‍-)))

    //அதுசரி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்ன்னு சொன்னது எந்த மதம்? :‍)//

    என்னது மதமா? அது மதப்புக்காக ஆகிவிட்டதா? ஆளைவிடுங்கள் . :-)))

    .

    ReplyDelete
  18. //எனது இந்தப்பதிவானது உணவு என்பது உயிர்க்கொலையே என்ற அளவில் மட்டும் சொல்லப்பட்டது.//

    அப்படிப் பொதுப்படுத்தமுடியாது என்பதையே நான் சுட்டிக்காட்ட விரும்பினேன். அழியக் கூடிய பொருள்கள் மட்டும் தான் உணவாகிறது, விலங்குகள், தாவிரவகைகள் அனைத்திலும் பாக்டீரியாக்கள் ஈஸ்டுகள் இருக்கும், உயிரின வளர்ச்சிக்கும், அழிவிற்கும் இவைதானே காரணம், ஆனாலும் பாக்டீரியா, ஈஸ்டுகள் இவை வாழ்க்கை என்னும் செயல்பாடு நிலைக்கு வருவதில்லை. இவற்றை உயிரி என்று வகைப்படுத்தலைத் தவிர்த்து அவற்றை உயிர் என்று கொள்ளக் காரணங்கள் எதுவும் இல்லை.

    நான் பிறர் குறிப்பிடும் பாவ புண்ணியம் ஆகிய காரணங்களை புறம் தள்ளுகிறேன். ஆனால் பிற உயிர்களுக்கான வாழும் உரிமை இவற்றை மனிதன் முடிவு செய்வதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது.

    ReplyDelete
  19. //எனது இந்தப்பதிவானது உணவு என்பது உயிர்க்கொலையே என்ற அளவில் மட்டும் சொல்லப்பட்டது//

    உங்கள் இடுகையில் கொல்லாமை கொள்கையாளர்களின் குளறுபடிகளைக் குறிப்பிடுவது போல், கொல்லும் வல்லமையாளர்களின் அடாவடிகள் எதுவும் சொல்லப்படவில்லை. மனிதன் தவிர்த்து அனைத்தும் கீழானவை, அவற்றை கொன்று உணவாக்கும் உரிமை மனிதனுக்கு உள்ளது என்று விலங்கின அழிப்புக்கு ஞாயம் கற்பிப்பவர்களுக்கு எந்த கருத்தும் இல்லை.

    ReplyDelete
  20. கோவி,
    //அப்படிப் பொதுப்படுத்தமுடியாது என்பதையே நான் சுட்டிக்காட்ட விரும்பினேன்.//

    எதையும் பொதுப்படுத்தாமல் இருக்கவே ஒரு பேசுபொருளில் இருந்து மட்டும் பேசுகிறேன்.

    //அழியக் கூடிய பொருள்கள் மட்டும் தான் உணவாகிறது, விலங்குகள், தாவிரவகைகள் அனைத்திலும் பாக்டீரியாக்கள் ஈஸ்டுகள் இருக்கும், உயிரின வளர்ச்சிக்கும், அழிவிற்கும் இவைதானே காரணம், ஆனாலும் பாக்டீரியா, ஈஸ்டுகள் இவை வாழ்க்கை என்னும் செயல்பாடு நிலைக்கு வருவதில்லை. இவற்றை உயிரி என்று வகைப்படுத்தலைத் தவிர்த்து அவற்றை உயிர் என்று கொள்ளக் காரணங்கள் எதுவும் இல்லை.//

    ம்ம்ம்..
    உயிர்க்கொலை என்றால் என்ன கோவி?

    எதைக் கொல்வது உயிர்க்கொலையாகும்?

    (எனது நிலை: உயிருள்ள ஒன்றைக் கொல்வது உயிர்க்கொலையாகும்)

    //ஆனால் பிற உயிர்களுக்கான வாழும் உரிமை இவற்றை மனிதன் முடிவு செய்வதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. //

    நான் எங்கே ஏற்றுக் கொண்டேன்?

    உணவுச் சூழல் / சுழற்ச்சியில் ஒரு உயிரியின் பசி அடுத்த உயிரியின் வாழும் உரிமையை தீர்மானிக்கும். அதுதான் இயற்கை.


    .

    ReplyDelete
  21. .

    கோவி,

    //உங்கள் இடுகையில் கொல்லாமை கொள்கையாளர்களின் குளறுபடிகளைக் குறிப்பிடுவது போல், கொல்லும் வல்லமையாளர்களின் அடாவடிகள் எதுவும் சொல்லப்படவில்லை. //


    எற்றுக் கொள்கிறேன்.

    எனது இந்தப் பதிவு கொல்லாமை பேசி ஆனால் செலக்டிவ் கொலை செய்து அதற்கு நியாயம் பேசுபவர்களுக்காகவே. அத்துடன் சைவம் என்ற‌ மதம், பண்டைய கால உணவுமுறை குறித்த புரிதல்களுக்காக‌ .

    //மனிதன் தவிர்த்து அனைத்தும் கீழானவை, அவற்றை கொன்று உணவாக்கும் உரிமை மனிதனுக்கு உள்ளது என்று விலங்கின அழிப்புக்கு ஞாயம் கற்பிப்பவர்களுக்கு எந்த கருத்தும் இல்லை.//

    சமச்சீரான உணவுச் சுழற்சி என்பதும் அதைச் சார்ந்த பிறகருத்துகளும், இயற்கைச் சூழல், நலம் பேணல் என்ற கருத்திற்குள் கொண்டால், நிச்சயம் நான் அதைப் பேசவில்லை இங்கே.

    அதுவும் பேசப்படவேண்டும் என்பது சரியே. ஆனால் அது தனியாக பேசப்படவேண்டும் என்பது எனது நிலை. இங்கேயே பேசவேண்டும் என்பது உங்கள் நிலை.

    .

    ReplyDelete
  22. //சை வம் என்றால் என்ன‌?//

    விண்ணு > விஷ்ணு > வைஷ்ணவம் என்று ஆகியதைப் போன்று தான்

    சிவம் > சைவம் ஆகிய திரிபும்.

    சங்ககாலத்தில் இந்த இருபிரிவுகள் இருந்ததாகக் குறிப்பு இல்லை. இவைத் தொடர்பான கடவுள்கள் மட்டுமே காணக் கிடைக்கின்றன. பக்தி இயக்கம் சிவனைச் சார்ந்து மதமாக வளர்ந்தது, இராமானுஜருக்கு பிறகு வைணவம் மதப்பிரிவானது. முழு முதல்கடவுள் யார் என்பதின் வேறுபாடுகள் தான் இவற்றின் வேறுபாடுகளும். ஏன் பார்பனர்கள் சைவ / வைணவமாக பிரிந்தார்கள் என்பதற்கு அவற்றின் தொண்மை வழிபாடுகளை தொழில் அடிப்படையில் எடுத்துச் செய்த தொடர்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். வட இந்தியாவில் சைவம் / வைணவம் பெரிய பிரிவாக இல்லை. இவற்றை உருவாக்கிய பார்பனர்களும் தென்னிந்தியாவிலேயே வாழ்ந்தார்கள்.

    இந்த இரு மதங்களுமே புலால் மறுத்தலை புத்த / சமண மதத்தில் இருந்தே எடுத்து வந்திருக்கின்றனர் என்பதால் இவை இருபிரிவாக ஆகும் முன்பே புலால் மறுத்தலை உள்வாங்கி இருப்பார்கள் என்றே கருதுகிறேன்.

    புலால் உணவு மறுப்பு குறித்த விழிப்புணர்வு முதலில் வழியுறுத்தப்பட்டு, பின்பு திணிக்க தண்டனையாக்கப்பட்டு இருக்க வேண்டும், இல்லை என்றால் ஒட்டுமொத்த பார்ப்பனர்களுமே புலால் உணவுக்கு மாறி இருக்க சாத்தியம் இல்லை (தென்னிந்தியாவில் மட்டும்தான், வட இந்திய பார்பனர்களுக்கு புலால் மறுத்தல் வெறும் கொள்கை தான்), புலால் உண்ணுபவர்களை தண்டிக்க அவர்களை தள்ளி வைத்திருந்திருப்பார்கள், அவை சாதிகளாகவும் திரிந்திருக்கின்றன, தொழில் அவர்களுக்கு சாதி அடையாளப் பெயரைத் தந்திருக்கிறது என்றே கருதுகிறேன்.

    ReplyDelete
  23. //அதுவும் பேசப்படவேண்டும் என்பது சரியே. ஆனால் அது தனியாக பேசப்படவேண்டும் என்பது எனது நிலை. இங்கேயே பேசவேண்டும் என்பது உங்கள் நிலை.
    //

    தொடர்ச்சி இருக்கனுமே.

    பொதுவாக மூட நம்பிக்கை குறித்து கண்டிக்கும் போது வெறும் இந்துமதம் மற்றும் கண்டிக்கப்பட்டால் செலக்ட்டீவ் பகுத்தறிவுவாதம் என்று வலைப்பதிவில் சொல்லுவார்களே, அதைப் போன்று தான்.

    கொல்லும் ஆமைகளுக்கான ஞாய அநியாயம் விவாதிக்கப்பட வேண்டும்

    ReplyDelete
  24. //வலி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவையும் ஒரு உயிரி உயிர் என்ற அளவில் மட்டுமே.

    வலி உணராவிட்டாலும் அது ஒரு உயிர் என்ற அளவில் மட்டுமே எனது உரையாடல்.//

    even a seventh standard child would know that a plant is a living being. :-)))) it is not upto kalvettu's standard.

    even a small mustard seed that you put in the hot oil for frying, a dhal or ulundhu piece - all have life that is dormant within them. as you said, it includes bacteria, fungi, yeast etc. Biotechnology makes ultimate use of these organisms, which may not be right from ethical point of view.

    i understand that you wanted to justify meat eaters against veggies who think that they do not kill at all.

    ok. given that silk sarees are made out of silk worms, how do you justify wearing cotton clothes made out of cotton plants?

    ReplyDelete
  25. .
    redwithanger said...

    //even a seventh standard child would know that a plant is a living being. :-)))) it is not upto kalvettu's standard.//

    எனக்கு எல்லாம் தெரியும் அல்லது எனக்கு என்று ஒரு தனி மதிப்பு or தனி நிலை (standard) உண்டு என்று நான் என்றும் நினைத்தது இல்லை.

    கற்றல் என்பது யாரிடம் இருந்தும் வரலாம்.

    எனவே, நிச்சயம் ஒரு 7 ஆம் வகுப்பு மாணவனுக்கு தெரிந்த எல்லாம் எனக்குத் தெரிந்திருக்கும் என்று என்றும் நான் நம்பவில்லை.

    **


    நீங்கள் இப்படிக் கேட்டதால்......

    //..ஒரு கேள்வி. செடியினத்துக்கு வலி எனும் உணர்வு உண்டா? பழத்தைப் பறித்து உண்டாலோ இல்லை கிளையை வெட்டினாலோ வலிக்குமா?//......

    அதற்கான பதிலாக நான் இப்படி .....

    //செடிக்கு (தாவரங்கள்) வலியுணரும் நரம்பு மண்டலங்கள் கிடையாது. // .....
    சொல்ல நேர்ந்தது.

    இது உங்களுக்குத் தெரியாத ஒன்று என்ற உணர்வில் அல்ல. எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன் அவ்வளவே.

    ****

    //ok. given that silk sarees are made out of silk worms, how do you justify wearing cotton clothes made out of cotton plants?//

    நான் ஏன் இதை ஜஸ்டிபை செய்ய வேண்டும்?

    எனது உரையாடலின் பேசு பொருளே, சார்ந்து வாழும் மனிதன் அவன் வாழ்நாளில் உயிர் என்ற ஒன்றைக் கொள்ளாமல் வாழ முடியாது என்பதே.

    எனவே உங்களின் பருத்தி - பஞ்சு எடுத்துக்காட்டு எனது பேசுபொருளுக்கு ஆதரவனாதே.

    ***
    முக்கியம்:

    1. இங்கே பருத்தி என்ற செடி ஒரு உயிர் உள்ள தாவரம்.

    2.அதன் இனப்பெருக்கத்தால் வரும் பலன் பருத்தி விதை.

    3.இந்த விதை அடுத்த பருத்தி தாவரத்திற்கான வித்து.

    4. இந்த வித்தை காற்றில் கடத்திச் செல்ல இயற்கை கொடுத்துள்ள வாகனம் அதைச் சுற்றியுள்ள பஞ்சு.

    5.இந்தப் பஞ்சு என்பது உயிர் அற்றது.

    இது உங்களுக்குத் தெரியாது என்ற நோக்கில் சொன்னது அல்ல. தகவலாக இங்கே பதியப்படும் நோக்கிலே.
    .

    ReplyDelete
  26. //எனது உரையாடலின் பேசு பொருளே, சார்ந்து வாழும் மனிதன் அவன் வாழ்நாளில் உயிர் என்ற ஒன்றைக் கொள்ளாமல் வாழ முடியாது என்பதே.//

    I totally agree with what you say. That is how we have been designed by genetics and nature.

    But, as of now, I think that a vegan way of living is less painful to other living beings. Ethically speaking, I find that better than a non vegetarian way of living, though both ways of life still involve killing something.

    I am actually a meat eater, but I do not try to justify my meat eating by saying that both plants and animals are living beings. I like the taste of chicken so I eat that.

    //1. இங்கே பருத்தி என்ற செடி ஒரு உயிர் உள்ள தாவரம்.

    2.அதன் இனப்பெருக்கத்தால் வரும் பலன் பருத்தி விதை.

    3.இந்த விதை அடுத்த பருத்தி தாவரத்திற்கான வித்து.

    4. இந்த வித்தை காற்றில் கடத்திச் செல்ல இயற்கை கொடுத்துள்ள வாகனம் அதைச் சுற்றியுள்ள பஞ்சு.

    5.இந்தப் பஞ்சு என்பது உயிர் அற்றது.//

    so someone who eats the pulp of mango fruit and throws the seed away is also doing a similar job for his living right?? and is that not better than killing and eating?

    ReplyDelete
  27. -------//..ஒரு கேள்வி. செடியினத்துக்கு வலி எனும் உணர்வு உண்டா? பழத்தைப் பறித்து உண்டாலோ இல்லை கிளையை வெட்டினாலோ வலிக்குமா?//......

    அதற்கான பதிலாக நான் இப்படி .....

    //செடிக்கு (தாவரங்கள்) வலியுணரும் நரம்பு மண்டலங்கள் கிடையாது. // .....
    சொல்ல நேர்ந்தது.

    இது உங்களுக்குத் தெரியாத ஒன்று என்ற உணர்வில் அல்ல. எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன் அவ்வளவே. ---------

    I just wanted to know more about this, thats why I posed this question. Thats fine.

    //எனக்கு என்று ஒரு தனி மதிப்பு or தனி நிலை (standard) உண்டு என்று நான் என்றும் நினைத்தது இல்லை//

    You are definitely a good questioner, thinker and analyzer - my opinion. Keep going.

    ReplyDelete
  28. .

    redwithanger,

    நான் எதையும் சரி தவறு என்று அடையாளப்படுத்த விரும்பவில்லை. அது எனது நோக்கமும் இல்லை.

    மனிதன் என்ற விலங்கின், உணவு மற்றும் வாழ்வதற்கான மற்ற தேவைகள் அவன் இருக்கும்(வாழும்) சூழலால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. யாரும் எதையும், இதைவிட அது சரி என்றோ இது நல்லது அது கெட்டது என்றோ தீர்மானிக்கமுடியாது.
    என்பது எனது நிலைப்பாடு.

    நான் வாழும் சூழலில் புலாலும் , காய் கறிகளும் , பேக்கேஜ் செய்யப்பட்ட சமைத்த உணவுகளும் கிடைக்கும் பட்சத்தில் எனக்குப் பிடித்த ஒன்றைத் தேர்வு செய்ய முடியும். ஆனால் அப்படி இல்லாத பட்சத்தில் இயற்கை எனக்கு அளித்துள்ள குறைந்த அளவு சாய்ஸ்ல் இருந்தே ஒன்றைத் தேர்வு செய்ய முடியும்.

    நானுக் இன மக்கள் பச்சை மாமிசம் சாப்பிட்டால் அது அவர்களின் சூழல் கொடுத்த உணவு. சமைத்துச் சாப்பிடுவது குறித்தான எனது நியாயங்களையும் கொல்லாமை குறித்த எனது வியாக்கியானக்களையும் அவர்களின் மீது செலுத்தி, அவர்களை நான் எடைபோடக் கூடாது என்பதும் எனது நிலைப்பாடு.

    தமிழ் நாட்டில் பசுவை குலமாதாவாகப் பார்த்தால் பலைவனப் பிரதேசங்களில் ஒட்டகம்தான் குலமாதா.

    நிலப்பரப்புகளின் தன்மை , அந்த நிலம் கொடுத்துள்ள உணவுச் சங்கிலி பற்றித் தெரியாமல் , சைவம் கொல்லாமை என்ற த‌ங்களின் அரைகுறை புரிதலோடு , உலகில் உள்ள அனைவரையும் பாவ புண்ணிய எடை போட முயற்சிக்கும் கொல்லாமைச் சித்தாந்தவாதிகளுக்கு பதில் சொல்லும் முயற்சியே இந்தப் பதிவு. மற்றபடி எனது நம்பிக்கைகலை விற்கவோ அல்லது அடுத்தவர் உணவுப் பழக்கங்களைச் சரி என்றோ தவறு என்றோ தீர்மானிக்க அல்ல.

    பொத்தாம் பொதுவாக "உயிர்க்கொலை ‍பாவம் புண்ணியம் மதம்"-- என்ற நோக்கில், புலால் உண்ணுபவ‌ர்களை குற்றவுணர்விற்கும் ...

    புலால் மறுப்பவர்கள் நல்லவர்கள் அல்லது ஒரு பங்கு உயர்ந்தவர்கள் ..

    என்று சொல்லும் தத்துவ சித்தாந்தக் குப்பைகளை நம்புபவர்களுக்கு , அறிவியலின் பார்வையில் அவர்கள் செய்வதும் ஒரு வகை உயிர்க்கொலை என்று சுட்டிக் காட்டுவதே இந்தப் பதிவின் நோக்கம்.

    **

    பதிவுகளின் சிறப்பு அல்லது தனித்தன்மை என்பது இத்தகைய உரையாடல்கள்தான். உங்களிடம் உரையாடியது மகிழ்ச்சியே. நன்றி!

    .

    ReplyDelete
  29. யாரோ கொன்னு யாரோ சமைத்துக் கொடுப்பதை உண்பது தவறா? நான் தினமும் சாப்பிடுவது அதுதானே?

    தவளையின் கால் ரொம்ப டேஸ்டா இருக்கும். ஈசலை வறுத்து சாப்பிட்டா என்னா சுவை தெரியுமா? காட்டெலியைச் சுட்டு சாப்பிடணும்.

    நான் எப்போதும் கோவி கூறுவதைப் போல் சைவ உணவுகளையே உண்பேன், நான் பக்கா சைவர்,வீர சைவர்.
    நாய்,மான்,குயில்,பன்னி,கோழி,ஆடு,மாடு,மீன் என்று சுத்த சைவமாக்கும் நான்

    ReplyDelete
  30. கல்வெட்டின் அக்மார்க் இடுகை..

    தாவரங்களுக்கு வலிக்காது சரி.. ஆனால் தாவரங்கள் மனுசப் பயலுக்காக காய்க்கிறது, பழுக்கிறதுன்னு யார் சொன்னாங்கன்னு தெரியலை சில ஜீவகாருண்யர்களுக்கு.

    நான் திண்ணாத ஒரு மாம்பழத்தை ஒரு அணிலோ, குரங்கோ, ஒரு குருவியோ சாப்பிட்டிருக்கும். பாவம் அதன் சாப்பாட்டை பிடிங்கித்தான் நான் சாப்பிட வேண்டியிருக்கு.

    ஒரு தாவரயினத்தை (களை) அழிக்காமலோ அல்லது வளரவிடாமலோ தடுக்காத விவசாயம் முறை உண்டா? அதை உயிர்க்கொலையாகக் கொள்ள முடியாதா? அப்படிப் பார்த்தால், உணவு உற்பத்தியே நாம் உணவாக உட்கொள்ளாத தாவரத்தை கொன்று வேண்டிய ஒன்றை மட்டும் வளர்த்துக் கொள்வது போல ஆகுதே..

    அப்போ உயிரைக் கொல்லாமல் உணவுண்ணுபவர்கள், உணவு உற்பத்தியே வேண்டாமென்றும் சொல்லணுமே.. !! லாஜிக் இடிக்குதே..

    இன்னும் உயிர்க்கொல்லாமை குறித்து ஆழ்ந்து பேசினால் உணவு உட்கொள்ளுவதையே விட்டுடணுமே!!

    ReplyDelete
  31. சூரிய ஒளியையும், ஆக்ஸிசனையும் வைத்து நம் உடம்பிம் மூலம் ஸ்டார்ச் தயாரித்தால் ஒருவேளை நாம் பிற உயிர்களை கொல்லாமல் சாப்பிட முடியலாம்!.

    எல்லாம் வல்ல கடவுளுக்கு மனிதனை ஏன் அப்படி படைக்க முடியவில்லை!?

    உயிரினம் தலைத்தோங்க அதற்கு தேவையான புரதங்கள் பல்வேறு வடிவில் பரவி கிடக்கின்றன, அவைகள் அசைந்தும் சையாமலும் இருப்பது உயிர் உள்லவை, அற்றவை என புரித்து பார்க்கப்படுகிறது!

    சரியான புரிதலில் இங்கே விவாதிப்பவர்கள், சைவர்களை கோமாளியாகவோ, குற்றவாளியாகவோ உருவகப்படுத்தவில்லை, மாறாக அசைவபிரியர்களை குற்றவாளியாக பார்க்க வேண்டாம் என்றும், அதின் மூலம் இன்னொரு தீண்டாமையை உருவாக்க வேண்டாம் என்றும் சொல்ல வருகின்றனர்!

    பூண்டு வாசம் பிடிக்காத மனைவி, அதை தின்று முத்தம் கொடுக்க வந்த கணவனை விவாகரத்து செய்தாலாம், இங்கே எதுவும் நடக்கும் தான். நாம் ஊதுற சங்கை ஊதிகிட்டே இருப்போம்!

    ReplyDelete
  32. //தாவரங்களுக்கு வலிக்காது சரி.. ஆனால் தாவரங்கள் மனுசப் பயலுக்காக காய்க்கிறது, பழுக்கிறதுன்னு யார் சொன்னாங்கன்னு தெரியலை சில ஜீவகாருண்யர்களுக்கு.//

    Is this for me? Did I utter a word that plants are here for human beings? Every living being is on its own drive - not for you or me.

    //ஒரு தாவரயினத்தை (களை) அழிக்காமலோ அல்லது வளரவிடாமலோ தடுக்காத விவசாயம் முறை உண்டா? அதை உயிர்க்கொலையாகக் கொள்ள முடியாதா? அப்படிப் பார்த்தால், உணவு உற்பத்தியே நாம் உணவாக உட்கொள்ளாத தாவரத்தை கொன்று வேண்டிய ஒன்றை மட்டும் வளர்த்துக் கொள்வது போல ஆகுதே..//

    yes - you are right. we are interfering with their lives by doing agriculture (both plant and animal farms). we started agriculture by destroying forests. and by doing agriculture we are growing them for our own use - to eat them - not for their own life.

    ReplyDelete
  33. //இன்னும் உயிர்க்கொல்லாமை குறித்து ஆழ்ந்து பேசினால் உணவு உட்கொள்ளுவதையே விட்டுடணுமே!! //

    is this an all or none thing? can't someoone select a way with least ocmpromise?

    ReplyDelete
  34. //பூண்டு வாசம் பிடிக்காத மனைவி, அதை தின்று முத்தம் கொடுக்க வந்த கணவனை விவாகரத்து செய்தாலாம், இங்கே எதுவும் நடக்கும் தான். நாம் ஊதுற சங்கை ஊதிகிட்டே இருப்போம்!//

    it is that individual's choice.

    ReplyDelete
  35. //எல்லாம் வல்ல கடவுளுக்கு மனிதனை ஏன் அப்படி படைக்க முடியவில்லை!?//

    who was talking about god here? every creature has its own function to maintain the balance of nature. so herbivores eat plants, and carnivores eat herbivores. bacteria eat all these when their immune resistance decreases.

    man is omnivorous - it is his choice to go for whatever he wants. but because he can think and a find a reason, i think it is a good reason for someone to remain a vegan if they think it involves less pain.

    ReplyDelete
  36. and am not a jeeva karunyar - i eat plants, animals etc etc. i kill a cockroach if i find that in my home.

    just like kalvettu, i wanted to defend someone's choice of life.

    i am in search of knowledge and thats why i stepped here. not to argue for vegetarianism.

    // மாறாக அசைவபிரியர்களை குற்றவாளியாக பார்க்க வேண்டாம் என்றும், அதின் மூலம் இன்னொரு தீண்டாமையை உருவாக்க வேண்டாம் என்றும் சொல்ல வருகின்றனர்!//

    i never said anything like non vegetarians are kutravalis and should be treated differently.

    ReplyDelete
  37. a final word - there was a good dialogue in avatar movie - kill something only if there is a need for your own survival, and only that. thats what i am talking about. i do accept killing for food, not for leather bag or miruthangam.

    ReplyDelete
  38. //Is this for me?//

    //i eat plants, animals etc etc. i kill a cockroach if i find that in my home. //

    Iff so it was not for you.

    ReplyDelete
  39. நன்றாக எழுதியுள்ளீர்கள். உங்கள் கருத்துக்களுடன் முழுதாக உடன் படுகின்றேன். எம்மவர் வெள்ளிக்கிழமைகளில் தாவர‌வுண்ணிகள் என்று சொல்லிக் கொண்டு பலர் அந்நாட்களில் சாப்பிடக் கூட வேறு தட்டுகள் பயன் படுத்தி, ஆனால் தாம் உடுத்தும் உடைகளோ சப்பாத்துகளோ வீட்டில் sofa க்களோ செய்வதற்கு எதைப் பயன்படுத்தினர் என யோசித்தே பார்ப்பதில்லை.

    பார்ப்பனர்களல்லாத ஆனால் தாவரவுண்ணிகளாக இருப்பவர்களை யாழ்ப்பாணத்தில் பிறவிச்சைவர் என அழைப்பர். :) அவ்வாறான ஒரு குடும்பத்தில் பிறந்து அவ்வாறே வளர்க்கப்பட்டதனால் நான் இன்னும் தாவரவுண்ணியாகவே உள்ளேன், மாமிசம் உண்பதை கற்பனை செய்து கூடப் பார்க்க முடிவதில்லை (it's purely psychological). However, I completely do not agree with people who say they are somehow superior because of it. இது சொன்னதிற்குக் காரணம், சில வேளைகளில் நான் சொல்லும் கருத்துகளில் இதனால் எனக்குத் தெரியாமல் ஏதும் bias இருப்பின் சுட்டிக் காட்டப்படுவற்காகவே. எனக்குத் தெரிந்த முழுதான தாவரவுண்ணிகளோ, Part-time தாவரவுண்ணிகள் அநேகமானோர் சாப்பாட்டில் தவிர்ப்பதைத் தவிர‌ வேறு எதிலும் விலங்குகளில் அக்கறை காட்டியதில்லை. மனிதன் இயற்கையிலேயே ஒரு அனைத்துமுண்ணி, அதில் தவறென்று எதுவும் இல்லை. In fact, என் துணைவனுக்கு மாமிசம் நானே சமைத்துக் கொடுக்கிறனான்.

    மாமிசம் சாப்பிடுவதைவிட எமது மற்றைய தேவைகளுக்குத் (such as leather shoes, sofas, etc) தேவையில்லாமல் விலங்குகளைப் பயன்படுத்துவது தான் unethics என நான் கருதுகின்றேன். What do you think?

    I also believe that, விலங்குகள் உயிரோடிருக்கும் போது அவற்றின் வாழ்க்கை, இனப்பெருக்கம் பின் கொல்வது என்பவற்றை மனிதாபிமானமுறையில் செய்ய வேண்டுமென்று. அதனால் நான் எனக்குத் தெரிந்தவர்களை freerange meat, eggs வாங்குமாறு சொல்லிறனான்.

    அதோடு அறிவியலுக்கும் தேவையான நேரங்களில் விலங்குகளை உபயோகிப்பது அவசியமாகின்றது.

    ReplyDelete
  40. நண்பா என் தளத்தில் என்னுடைய மின் அஞ்சல் உள்ளது. தொடர்பு கொள்ள வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  41. இங்கு பலர் அதிகம் படித்ததாக எண்ணி கொள்கிறரர்கள். புத்தர் பிறந்தது கபிலவஸ்து நேபாளம். இன்று உலகில் உள்ள ஒரே ஒரு இந்து நாடு, மற்றும் சைவத்திலிருந்து தான் புத்த மதம் வந்தது. இஸ்லாம் சும்மார் ௧௫௦௦(1500 ) ஆண்டுகளுக்கு முன்பு வந்தது என்பது வரலாறு. கிருஸ்தவம் அதற்கு ௫௦௦ (500 ) ஆண்டுகளுக்கு முன்பு வந்தது என்பது வரலாறு. , பௌத்தம் அதற்கு ௫௦௦ (௫௦௦(500 ) ஆண்டுகளுக்கு முன்பு வந்தது என்பது வரலாறு. சைவம் ஆரியர் வருகைக்கு முன்பே இருந்தது. காரணம் மொகெஞ்சதாரோ - ஹரப்பா சைவம் பற்றி அகழ்வாராய்ச்சிகளிலிருந்து கண்டு பிடிக்கபட்டுள்ளதாக படித்ததாகஞாபகம், இப்போது உங்களின் கருத்துக்கு வருவோம் . மிருகங்களை கொல்லுவது என்று சைவம் மட்டும் சொல்லவில்லை. தமிழர் தம் பெருமை என்று சொல்லும் ௨௦௦௦(2000 ) ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நுல் திருக்குறளும் இதையே சொல்கிறது கொல்லாமை, புலான்மறுத்தல்
    என்ற அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது "எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்." பொருள் எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.

    தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
    எங்ஙனம் ஆளும் அருள்.
    தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.
    நீங்கள் இந்தியரா ??
    அப்படி என்றால் உங்கள் தேசப்பிதா காந்தியும் இதையே சொன்னார்கள்.
    ஒரு மதத்தை குறைசொல்பவர்க்கள் முதலில் அந்த மதத்தை அறியவேண்டும். அறியவேண்டும் (நான் சில மதங்கள் செய்வதை சரி என்று சொல்ல வரவில்லை.) அடுத்தது சைவ உணவு (மரக்கறி ) உண்பவர்களுக்கு பல விதமான நோய்கள் வராது, ஏனென்றால் இதனுள் அதிகமான கொழுப்பு இல்லை. அடுத்தது முன்பு வாழ்ந்தவர்கள் மாமிசம் சாப்பிட்டார்கள் ஆனாலும்நாம் இருப்பது இருபத்தி ஓராம் நுற்றாண்டில் நாம் அசை வம் சாப்பிடுவதை நியாயடுத்த முடியாது. முன்பு பெண்களுக்கு உரிமை மறக்கப்பட்டது என் என்றால் ஆண்கள் என்ற அதிகாரத்தால். தற்போது மிருகங்களை வேட்டை ஆடுகின்றோம் மனிதன் என்ற ஆணவத்தால். சர்வாதிகாரியை போன்று நாமும் நடக்கின்றோம். மனிதனை கொண்டால் கொலை என்று எடுக்கும் அரசாங்கம் மிருகத்தை கொண்டால் குற்றம் என்று சொல்ல வேண்டும். பலருக்கு ஒரு கேள்வி வரலாம் நாம் மிருகத்தை கொல்லவிட்டல் அது பெருகி விடும் என்று, இந்த உலகில் எழு கோடி மனிதன் உண்டு என் நாம் அவற்றை பற்றி யோசிக்க வில்லை. ஒரு வாதம் நடந்தால் நானும் உங்களை போல் பக்கம் பக்கம் மாக பேசுவேன். இன்னும் பல உண்டு எழுத நேரமில்லை ( உங்களை போல ஒரு bolgger திறந்து வெட்டி பேச்சு பேசுவது என் வேலை யும் இல்லை உங்களுக்கு இந்த கருத்து ஏற்க படாமலும் போகலாம் ஆனாலும் இதை பார்ப்பவர்களுக்கு எது உண்மை என்று புரியும்)(நான் இந்து மதத்தை பற்றி குறிப்பிடவில்லை )மிருகங்களுக்கும் இந்த உலகில் மனிதரை போல் வாழ சம உரிமை உண்டு. ஆகவே மாமிசத்தை வெறுப்போம் மனிதத்தை வளப்போம்: தமிழரசன்

    ReplyDelete
    Replies
    1. Anonymous மிகச்சரியாக சொன்னீர்கள் (மிருகங்களுக்கும் வாழ உரிமை உண்டு) கல்வெட்டு போன்றவர்கள் இன்னும் சில காலங்களில் சக மனிதனையே கொன்று தின்பார்கள். பின் அதற்கும் நியாயம் கற்பித்து தங்கள் blogugalil எழுது வார்கள்!

      Delete
  42. நீங்கள் மிருகத்தை கொல்லுகிறீகளோ இல்லையோ தமிழை நன்றாக கொன்று உள்ளீர்கள்

    ReplyDelete
  43. saivam enbathu oru matham. aanal avargal non-veg sabdatharku karanam athai sappital naam rajasa kunathirku vayapaduvom. ithanal namaku udal ubathaigal pala eadpada vaaipu undu. saiva unavaal naam saathveega kunathil irupom. so kadavulai nimmathiyaga valipada mudiyum. pira uyirgalidathil anbu eadpadum. athanaalthaan saivam aruntha vendum. nanri...

    ReplyDelete
  44. saiva unavu undaal manam amaithiyaga irukum. sirappaga kadavul vazhipadu seiyalam . aanal asaivam namaku koba kunathai kodukum. pira uyirgalidathi (ungal uravinargalidathu) anbu eatpadathu . anbae sivam enbathu saiva samayam . sinthipeer...NANRI.

    ReplyDelete
  45. saivam enbathu oru matham. aanal avargal non-veg sabdatharku karanam athai sappital naam rajasa kunathirku vayapaduvom. ithanal namaku udal ubathaigal pala eadpada vaaipu undu. saiva unavaal naam saathveega kunathil irupom. so kadavulai nimmathiyaga valipada mudiyum. pira uyirgalidathil anbu eadpadum. athanaalthaan saivam aruntha vendum. nanri...

    ReplyDelete
  46. "சைவம் , வைணவம் போன்ற சனாதன பார்ப்பனீய மதங்கள் சாப்பாட்டு விசயத்தில் புலால் மறுத்தலை மதக் கொள்கையாகக் கொள்ளவில்லை". சைவத்தைப்பார்ப்பனியம் என்று சிறுமைப்படுத்தும் உம்முடைய விளக்கம் சைவருக்குத்தேவையில்லை.சைவம் மதம் சமயம் அது ரிலிஜியன் அல்ல. அது பார்ப்பனியம் அல்ல. காரணம் பெரும்பாலான சைவர்கள் பார்ப்பனர்கள் அல்லர். பார்ப்பனர்கள் மட்டுமே குருவாகவேண்டும் என்ற கட்டாயமும் சைவத்தில் இல்லை. வர்ணாசிரமத்தை கடைப்படிக்கவேண்டிய அவசியமும் சைவருக்கு கிடையாது. சைவர்கள் அதிவர்ணாசிரமிகள். சில சைவர்கள் வர்ணாசிரமத்தை ஏற்றுக்கொள்கின்றார்கள் என்பதற்காக சைவத்தைப்பார்ப்பனியமாக புனைவதை ஏற்க இயலாது.

    ReplyDelete