Monday, April 11, 2011

பர்தா - பிரான்ஸ்

ர்தா என்பது மத அடையாளமன்று, மாறாக பெண் அடிமைத் தனத்தின் அடையாளம் - பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்கோஸி
http://thatstamil.oneindia.in/news/2011/04/11/france-bans-full-face-veil-aid0128.html


French senate approves burqa ban

http://articles.cnn.com/2010-09-14/world/france.burqa.ban_1_burqa-overt-religious-symbols-ban-last-year?_s=PM:WORLD




  • Burqas and Niqabs are banned in France due to reasons of national identity and equality of the sexes.
  • Hijabs (scarves around hair and neck) and chadors (dresses which cover the body but not the face) are still allowed.
"The ban does not target the wearing of a headscarf, head-gear, scarf or glasses, as long as the accessories do not prevent the person from being identified," state officials said.



இஸ்லாம் ஆண்கள் ஏன் அரேபியா பாணி ஆடைகளை தமிழகத்தில் அணிவது இல்லை?
http://kalvetu.blogspot.com/2010/01/blog-post.html


தமிழ்ப் பதிவர்களின் இஸ்லாம் விமர்சனம் ‍ - உங்களை நீங்களே சேதப்படுதிக் கொள்ளும் அபாயம் உள்ளது
http://kalvetu.blogspot.com/2010/07/blog-post_10.html



6 comments:

  1. அன்பின் கல்வெட்டு @ பலூன் மாமா,

    உண்மையில் பெண்களின் முகத்தை மறைக்கும் படி குர்ஆன் வசனமே, ஹதீஸ்களோ கிடையாது. தவிர இது போல முகத்தை மறைத்து உடையணிவித்து ஒரு விபச்சாரியை நான் என்னுடன் அழைத்து சென்றால், மிக நெருங்கியவர்களை தவிர மற்ற எவராலும் அடையாளம் காண இயலாது. மேலும் மற்றவர்கள் அந்த நிக்காபியை எனது மனைவி என்றே கருதி எனது மனைவிக்கு தரவேண்டிய மரியாதையையும் தர விழைவார்கள். இது அபாயமில்லையா? எனது மனைவியின் உரிமையை இது பாதிக்கவில்லையா?


    எனது மனைவி ஹிஜாபை தான் பேணுகிறார். காரணம் மனிதர்கள் பொதுவெளியில் வரும்போது கண்டிப்பாக அடையாளம் காணப்படுதல் மிக அவசியம். ஆகவே முகத்தை மறைக்கும் நிகாப் என்பது பெண்ணுரிமைக்கு எதிரானது தான். தவிர எனது தாயார் போன்ற மூத்த தலைமுறையினர் இந்த கருப்பு நிற ஆடைக்கு பதில் வெள்ளை நிற 'துப்பட்டி' அணிந்து முகத்தை மறைக்காமல் தான் வெளியே சென்று வருவார்கள்.அறிவியல் ரீதியாக வெள்ளை நிறம் வெயிலுக்கு ஏற்றதுதான். ஆனால் அரேபிய 'பெட்ரோ டாலர்கள்' இங்கே பாய ஆரம்பித்ததும் தான் இது போன்ற கருப்பு நிற ஆடைகள் உலா வர ஆரம்பித்தது. காரணம் அரபுகள் செய்வது தான் இஸ்லாம் என பலர் கருத ஆரம்பித்து விட்டனர். நானும் என் மனைவிக்கு வெள்ளை நிற ஹிஜாப் தேடி வெகு நாட்களாக அலைகிறேன். இன்னும் கிடைத்தபாடில்லை.


    நான் உங்களுக்கு இரு மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளேன். தற்போது அதில் நாங்கள் இது விஷயமாக பிரான்ஸ் அரசிற்க்கு ஆதரவாக அனுப்ப உள்ள படங்களையும் இணைத்துள்ளேன். பார்த்துவிட்டு உங்களின் கருத்தையும் கூறவும்.

    with care & love,

    Muhammad ISmail .H, PHD.,
    www.gnuismail.com


    வேண்டுகோள் : காரைக்கால் பக்கம் வருகிற வாய்ப்பு இருந்தால் முன்னரே தெரிவிக்கவும். இங்கே நாங்கள் வசிக்கும் காலனியில் நிறைய பொடிசுகள் உள்ளனர். இனி கோடை விடுமுறை தான். உங்களின் பலூன் கைவரிசையை அவர்களிடம் காட்டி சந்தோஷப்படுத்தலாம். நன்றி, வணக்கம்.

    ReplyDelete
  2. இந்தத் தடையைப் பற்றிய உங்களின் கருத்துகள் என்ன?

    பர்தா போடுவதில் எனக்குக் கொஞ்சம் கூட உடன்பாடில்லாவிடினும் இப்படித் தடை செய்வது மிகப்பிழையான முடிவென்றே கருதுகின்றேன். பெண்கள் இப்படித்தான் ஒரு உடை உடுத்தவேண்டுமெனக் கட்டாயப்படுத்தும் இஸ்லாமிற்கும் பிரான்ஸ் அரசின் இந்த முடிவிற்கும் என்னைப் பொருத்தவரையில் பெரிய‌ வித்தியாசமில்லை. இரண்டும் பெண்கள் என்ன போடலாம்/போடக்கூடதெனவே கட்டளையிடுகின்றன. பெண் என்ன உடுத்தலாம்/உடுத்தக்கூடதென்பது ஒவ்வொரு பெண்ணுமே முடிவு செய்யவேண்டும்.

    புர்கா அணியும் பெண்களில் சிலர் குரானில் கட்டாயப்படுத்தப்படாவிட்டாலும் அதை அணிவதால் அல்லாவிடம் bonus points வாங்கலாமென நினைத்துத் தாமே 'விரும்பி' அணிகின்றனர். சிலர் அணியுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு கட்டாயப்படுத்தப்படுபவர்களுக்கு இந்தச் சட்டம் எந்த நன்மையையும் கொடுக்கப்போவதில்லை. ஏனெனில் இவ்வாறு புர்கா போட்டாலே அவள் வெளியில் செல்லலாமென்பவர்கள், இனி அவளை வீட்டையே இரு என்று சொல்லவே தூண்டப்படுவார்கள். முதலில் கிடைத்த சிறு வெளியுலக வாழ்க்கையும் இல்லாமற் போக சந்தர்ப்பங்கள் அதிகம். இந்த முடிவால் சமத்துவம் நிச்சயம் வரப்போவதில்லை.

    உங்களின் கருத்தை அறிய ஆவல்.

    ReplyDelete
  3. .

    அன்னா,
    உடை அரசியல் என்பது உடல்மீதான அரசியல். இஸ்லாத்தில் இருக்கும் உடை அரசியல் என்பது பெண்களின்மேல் மட்டும் ஏவிவிடப்பட்ட ஒரு அரசியல்.

    இதனை இந்தியாவில் சனாதனம் ஏவிவிடப்பட்ட உடல் அரசியல் வன்முறைகளோடு ஒப்பிடலாம்..

    உடன்கட்டை ஏறுதல், கைம்பெண்களை மொட்டை அடித்தல், வெள்ளை உடை கட்டுதல், கோவிலில் கட்டாய தேவதாசி முறை, முலைகளை மறைத்துக் கொள்ளும் உரிமை மறுத்தல் என்று பெண்கள் மீது சனாதனம் ஏவிவிடப்பட்ட உடல் அரசியல் வன்முறைகளோடு ஒப்பிடலாம்.

    FYI:
    தோள் சேலை தொடக்க உரிமைப் போராட்டம்
    http://deviyar-illam.blogspot.com/2011/02/blog-post_17.html

    கைம்பெண்களை மொட்டை அடித்து வெள்ளை உடை கட்டுதல்கூட ஏதோ அவர்களின் நலனுக்காக (அடுத்தவன் பார்க்கமாட்டான) செய்யும் உபகாரம் என்ற அளவிலேயே அவர்களுக்கு போதிக்கப்பட்டு இருந்தது.


    அதையும் மீறி, அதாவது அடிமையாக இருக்க அடிமைகள் நினைத்தாலும் அதை தவறு என்று சொல்லி அவர்களை வெளிக்கொணர ஒரு மாற்றுப்பார்வையாலேயே முடியும்.

    மேற்சொன்ன எல்லாவற்றையுமே ஒரு காலகட்டத்தில் போராடித்தான் அழித்தொழிக்கப்பட்டது.

    மதத்திற்கும் சாமிக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களால் சிந்திக்க முடிந்தால் ஏன் இன்னும் மதத்தில் இருக்கிறார்கள்? மதத்தில் வெளியில் உள்ளவர்கள்தான் வழியும் புத்தியும் சொல்லவேண்டியுள்ளது.

    1. சதி என்னும் உடன்கட்டை ஏறுதலை தடுக்கமும் போராட்டத்தை , உடன் கட்டை ஏறும் பெண்தான் முன்னெடுக்கவேண்டும் என்று “ராஜா ராம் மோகன்ராய்” இருக்கவில்லை.

    2. தீண்டாமை என்பது பாதிக்கப்பட்டவனின் பிரச்சனை நமக்கு என்ன என்று மிட்டா மிராசு பணக்காடர காங்கிரஸ் ஸ்தாபன உறுப்பினர் பெரியார் சும்மா இருக்கவில்லை.

    3. கறுப்பின அடிமைகள் திட்டத்தை ஒழிக்க கறுப்பின பிரசிடென்ட் வரட்டும் என்று அமெரிக்க பிரசிடென்ட் லிங்கன் இருக்கவில்லை.

    -----------------------------


    மாற்றம் என்பது ஏதாவது ஒரு புள்ளியில் இருந்து தொடங்கப்படவேண்டும். அப்படித் தொடங்கப்படும்போது அந்தப் புள்ளியில் இருப்பவர்களுக்கு சில சிக்கல்கள் ஏற்படும்.

    ----------------------

    The Analyst said...
    //இவ்வாறு புர்கா போட்டாலே அவள் வெளியில் செல்லலாமென்பவர்கள், இனி அவளை வீட்டையே இரு என்று சொல்லவே தூண்டப்படுவார்கள். முதலில் கிடைத்த சிறு வெளியுலக வாழ்க்கையும் இல்லாமற் போக சந்தர்ப்பங்கள் அதிகம்.
    //



    நீங்கள் சொல்வதுபடி "புர்கா போட்டு (Burqas and Niqabs) போனால் வெளியே போ அல்லது வீட்டுக்குள்ளேயே இரு" என்று சொல்லும் மதவாத குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு அவர்களுக்கான குறந்தை பட்ச வெளிச்சுவாசமும் தடைபட்டுவிடும் வாய்ப்பு உள்ளது. :-(((

    உண்மைதான் யாரை நோவது? அப்படி ஒரு சமூகத்தில் பிறந்தமைக்கா?

    *********

    The Analyst said...
    //பெண்கள் இப்படித்தான் ஒரு உடை உடுத்தவேண்டுமெனக் கட்டாயப்படுத்தும் இஸ்லாமிற்கும் பிரான்ஸ் அரசின் இந்த முடிவிற்கும் என்னைப் பொருத்தவரையில் பெரிய‌ வித்தியாசமில்லை. இரண்டும் பெண்கள் என்ன போடலாம்/போடக்கூடதெனவே கட்டளையிடுகின்றன. பெண் என்ன உடுத்தலாம்/உடுத்தக்கூடதென்பது ஒவ்வொரு பெண்ணுமே முடிவு செய்யவேண்டும்.//




    பெண்ணின் உடல் என்பது ஆண்களின் ,மதங்களின் விளையாட்டுக்களமாகவே இருந்து வந்துள்ளது.

    (1)இஸ்லாம் பேரைச் சொல்லி முகத்தை மூடுவது என்பதும்,

    (2)எல்லோரும் புழங்கும் சமுதயத்தில் குறைந்தபட்ச மனித அடையாளமான முகத்தையாவது காட்டவேண்டும் என்பதும்

    ..... ஒரே அளவில் எடை போட வேண்டிய ஒன்று அல்ல.

    அருவாளை வைத்து ஆட்டையும் வெட்டலாம். அதே அருவாளை வைத்து ஆட்டுக்கு புல்லும் அருத்துக் கொடுக்கலாம்.

    இரண்டின் நோக்கமும் வேறு.

    இரண்டாவதில் அடுத்த தலைமுறையாவது மாறும் வாய்ப்பு உள்ளது.

    **

    நான் Burqas and Niqabs தடைசெய்யும் பிரான்சின் சட்டத்தை ஆதரிக்கிறேன். இது Hijabs (scarves around hair and neck) and chadors (dresses which cover the body but not the face)
    தடை செய்யவில்லை.


    ஆதே சமயம் "புர்கா போட்டு போனால் (Burqas and Niqabs) வெளியே போ அல்லது வீட்டுக்குள்ளேயே இரு" என்று சொல்வபர்களைக் கண்டறிந்து டொமஸ்டிக் வயலன்ஸ் சட்டாங்களில் தண்டிக்கவேண்டும். அல்லது அவர்கள் நம்பும் கடவுள் என்ன சொன்னார் என்றாவது புரியவைக்க வேண்டும். அதுவே நல்லது.

    அவர்களின் விருப்பங்களை அப்படியே தொடர்ந்தால் அடுத்த தலைமுறைக்கும் விடிவு இருக்காது.

    .

    ReplyDelete
  4. .
    Muhammad Ismail .H, PHD,

    நன்றி.
    படங்களை நிச்சயம் பயன்படுத்திக் கொள்கிறேன். பிரான்சின் சட்ட நோக்கத்தை சரியாகப் புரிந்துகொண்டுள்ள பலரில் நீங்களும் ஒருவர்.

    பலூன்:
    உங்களின் அழைப்பிற்கு நன்றி.
    நிச்சயம் குழந்தைகளை மகிழ்விப்போம். அதைவிட என்ன இன்பங்கள் உள்ளது இங்கே?

    .

    ReplyDelete
  5. அருள்,
    சினிமா போஸ்டர் போல வந்து சம்பந்தமில்லாத சுட்டிகளைக் கொடுக்கவேண்டாம். பதிவிற்குச் சம்பந்தம் இல்லாத சுட்டிகளைக் கொடுக்க வேண்டாம்.

    விளம்பரம் வேணும் என்றால் தமிழ்மணத்தின் கட்டணச்சேவையை அணுகலாமே?

    ReplyDelete
  6. பெண்களைக் “காப்பாற்ற” பர்கா/ ஹிஜாப் ... இப்படியாக. ஆனால் ஒன்று புரியவில்லை;ஹிஜாபை சரியென்று சொல்பவர்கள் எப்படி பெண்களைக் “காப்பாற்றுகிறார்கள்”? முகத்தை மட்டும் பார்த்தாலேயே காதலோ காமமோ வராதா?

    ReplyDelete