Sunday, May 13, 2012

நித்தி பிள்ளை இல்லை முதலி : இலக்கியவியாதி நெல்லை கண்ணன் கவலை

மிழ்நாட்டில் எந்த இலக்கியவியாதிகளும் சமூகப்பணிகளில் நேரடிப்பங்கு கொள்வது இல்லை. கதைப்புத்தகம் எழுதுவது, அம்புலிமாமா வாசக வட்டத்தின் சொம்புக்கூட்டங்களில் கலந்துகொண்டு மயிர்பிளக்க விவாதிப்பது போன்ற உலகமாகப் பணிகளில் மட்டுமே கலந்துகொள்வார்கள். சமூகப்பிரசனைகள் இவர்களுக்கு தேவை அற்றது. முடிந்தால் அதில் பட்டும்படாமல் எதையாவது உருவி கதை சமைக்கப் பார்ப்பார்கள் (சுசாதா பாணி பிரச்சனைக்குள் போகாமல் மொக்கை கருத்துகளை கதையாக்குவது.) அல்லது வாய்கிழியப் பேசிவிட்டு கர கர சங்காரா என்று கடைசிக்காலத்தில் மடப்பிரச்சாரவாதிப்போல சமஸ்கிரகத்திற்கு சொம்பெடுப்பது (செயகாந்தன் பாணி) என்று மாறிவிடுவார்கள்.

நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ்ப்பற்று குறித்துபேச ஒன்றும் இல்லை. நல்ல தமிழ் ஆர்வலர். ஆனால் இவர் எந்த சாதி எந்த மடத்திற்கு நல்லது என்று சண்டைபோட வந்துள்ளார்.

http://tamil.oneindia.in/news/2012/05/13/tamilnadu-nellai-kannan-seeks-jaya-help-save-madurai-aadheenam-153902.html

பின்னர் குழுத் தலைவர் நெல்லை கண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"மதுரை ஆதீனமாக சைவ வேளாளரை நியமனம் செய்ய வேண்டும். ஆனால், அகமுடைய முதலியாரான நித்தியானந்தாவை, ஆதீனமாக நியமித்துள்ளது சைவத்திருமடங்களின் விதிகளுக்கும், மரபுகளுக்கும் புறம்பானது."

மடங்களுக்கு நல்ல மனிதர்கள் தேவை இல்லை. ஒருவேளை நித்தி சைவ வேளாளராக இருந்திருந்தால் பஞ்சாயத்து கண்ணன் ஒகே சொல்லியிருப்பார் என்றே நினைக்கிறேன்.

காஞ்சியாகட்டும் மதுரையாகட்டும் மடங்களுக்கு சாதிதான் முக்கியமே தவிர நல்ல மனிதர்கள் அல்ல. அதுக்கு சொம்பாக இப்படி இலக்கியவியாதிகளும் பேசுவது அதிர்ச்சியாக இல்லை........ஏன் என்றால் செயமோகனாகட்டும் செயகாந்தன் ஆகட்டும் சுசாதா ஆகட்டும் நெல்லை கண்ணன் ஆகட்டும் மதத்தில் திளைப்பவர்களே .அவர்களின் மதமே வர்ணாசிரம சாதியக் கட்டுமானம்தான் எனும்போது சொல்ல ஒன்றும் இல்லை.

நெல்லை கண்ணன் இனி பிள்ளை கண்ணன்.

தம்மைத்தாமே நக்கிக்கொள்ளும் நாய்கள்‍ யார் யார்? - விளக்கம் : கதைபுக் ரைட்டர் ஜெய‌காந்தன்
http://kalvetu.blogspot.com/2010/03/blog-post_31.html


"சைவம்" - என்பது மதம். அது "உணவுப் பழக்கம்" அல்ல‌
http://kalvetu.blogspot.com/2011/01/blog-post.html


7 comments:

  1. சமண பவுத்த மதங்களை மீறி சைவம் வளர்ந்தது என்பதே ஒரு வகையில் வெள்ளாளர்களுடைய எழுச்சி தான் என்பது ராஜராஜ சோழன் காலத்தில் இருந்தே தொடரும் நிலை! சைவ சமய ஆதீனங்கள் பெரும்பாலும் பிள்ளைமார் ஆதீனங்களாகவே இருந்ததும் வியப்புக்குரிய செய்தி இல்லை. அந்த அடிப்படையில், திரு நெல்லை கண்ணன் சொல்லியிருப்பதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. @ Krishna Moorthy

      உங்கள் கருத்தில் இருந்து மாறுபடுகிறேன்

      //சமண பவுத்த மதங்களை மீறி சைவம் வளர்ந்தது என்பதே ஒரு வகையில் வெள்ளாளர்களுடைய எழுச்சி தான் என்பது ராஜராஜ சோழன் காலத்தில் இருந்தே தொடரும் நிலை!//

      சமணர்களை கழுவேற்றி கொத்து கொத்தாய் கொலை செய்து வளர்ந்தவை சைவம் என்பதும் வரலாறு.

      உங்களுக்கான கேள்வி:
      (1) இன்றும் அப்படி தொடரவேண்டுமா? அல்லது அப்படித் தொடர்ந்தால் அது காலம் காலமாய் வரும் வழிமுறை என்று சொல்லி ஏற்றுக்கொள்வீர்களா?

      ----

      //சைவ சமய ஆதீனங்கள் பெரும்பாலும் பிள்ளைமார் ஆதீனங்களாகவே இருந்ததும் வியப்புக்குரிய செய்தி இல்லை.//

      உங்களுக்கான கேள்வி:
      (2) எந்தக் காலத்தில் இருந்து எடுத்துக்காட்டுகிறீர்கள்...நீங்கள் சொல்லும் ராஜராஜ சோழன் காலத்தில் சைவ சமய ஆதீனங்களில் ஏசி வசதியோ லிப்ட் வசதியோ இருந்ததாக வரலாறு இல்லை. அதையெல்லாம் இன்று கடைபிடிக்க மாட்டார்கள் ஆனால் இத்துப்போன சாதியைமட்டும் கடைபிடிக்க வேண்டும் சரியா?

      ***

      அந்தக்கால வர்ணாசிரமம் வேண்டும் என்று சொல்பவர்கள் எல்லாவற்றிலும் அந்தக்காலத்தில் வாழமுயற்சிக்க வேண்டும். இந்தக்கால அறிவியல் கொடுக்கும் எல்லா வசதிகளையும் வெட்கமின்றி அனுபவித்துக்கொண்டு , வர்ணாசிரமம் என்று வந்துவிட்டால் மட்டும் சோழர்களின் பின்னால் ஒளிந்து கொள்வது என்ன விளையாட்டோ ? :-((((

      **

      சோழர்கள் காலத்தில் தேவதாசிமுறை இருந்தது.
      சோழர்கள் காலத்தில் தீண்டாமை தலைவிரித்து ஆடியது.
      இப்போதும் அது வேண்டும் என்று சொல்கிறாரா பிள்ளைக் கண்ணன்?

      **

      மடங்களின் தேவை மதம் சார்ந்தது என்றாலும் சாதி என்பது மதத்திற்குள் இருக்கும் தீண்டாமை. அதை முதலில் ஒழியுங்கள் மனிதம் வளர வாய்ப்பு உண்டு.

      Delete
  2. @கல்வெட்டு!உங்களுடைய கேள்விக்குப் பின் இருப்பது கலகமோ, ஆதங்கமோ எதுவாயினும் அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்!

    ஆனால்,வரலாற்றில் சில விஷயங்களைக் கற்றுக் கொண்டாக இருக்க வேண்டும்.அதுவரை அதன் தேவையும், பழையவை வேறு ஏதோ வடிவத்தில் திரும்பத் திரும்ப வருவதையும் தவிர்க்க இயலாது.

    முதல் கேள்விக்கு, சைவம் அரசு சார்ந்த மதமாக வளர்ந்தது, வெள்ளாளர் அல்லது பிள்ளைமார் அரசியலாக உருவெடுத்தது என்னுடைய ஆசை அல்லது உங்களின் விருப்பத்தின் பேரில் இல்லை. இன்று அதுதொடரவேண்டுமா, இல்லையா என்பதை முடிவு செய்வது நாமிருவர் மட்டும் இல்லை.சம்பந்தப்பட்ட தனிநபர்கள் மனமாற்றம் நிகழும் வரை பொறுத்திருந்தே ஆகவேண்டும்.வெறும் கலகக்குரல்கள், கல்வெட்டுக்களால் சாதிக்கப்படக் கூடியது அல்ல.ஆக, இங்கே நான் அல்லது நீங்கள் எதை ஏற்றுக்கொள்வது என்பது வெறும் பேச்சே.ஆனால், மாற்றத்தின் விதைகளாகத் தனிநபர்கள் இருக்க முடியும் என்பது வரை மட்டுமே சரி.

    இரண்டாது கேள்விக்கு, எந்த ஒரு மனிதனும் பிறக்கும்போதே மனிதனுக்குரிய சிறப்புத்தகுதியான ஆறாவது அறிவுடன் பிறப்பதில்லை.கூர்ந்து கவனித்தீர்களேயானால், அடிப்படை மிருக உணர்வுகளோடு தான் என்பதும், பகுத்தறிவு என்பதும் மனிதம் என்பதும் பிறப்போடு வருகிற ஒன்றில்லை, வளர்த்தெடுக்கப்படவேண்டியவை என்பதும் புரியும்,.மிருகவுணர்வுகளோடு இயங்குகிற சமுதாயத்தில், நீங்கள் சொல்கிற சாதிப் பிடிமானம் அல்லது வேறு ஒரு பிடிமானம் என்பதெல்லாம் மிருகவுணர்வுகளின் எச்சங்களே.

    யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட நிலையில் மட்டுமே தீர்வுகளுக்கான கதவுகள் திறக்கின்றன.

    ReplyDelete
  3. வர்ணாசிரமம் என்பது குணங்களின் அடிப்படையிலான பிரிவே அன்றி நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கும் விதத்தில் அல்ல! தவிர, நான் எதையும், தாங்கிப்பிடித்துக் கொண்டு இங்கே கருத்துச் சொல்ல வரவில்லை.

    ReplyDelete
    Replies
    1. //வர்ணாசிரமம் என்பது குணங்களின் அடிப்படையிலான பிரிவே அன்றி நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கும் விதத்தில் அல்ல! தவிர, நான் எதையும், தாங்கிப்பிடித்துக் கொண்டு இங்கே கருத்துச் சொல்ல வரவில்லை.//

      நீங்கள் எதையும் தாங்கிப்பிடிக்கவில்லை என்றால், உங்கள் கருத்துப்படி சனாதன வர்ணாசிரம கோட்பட்டின் படி எந்த ஒருவனும் குணம் மாறினால் காஞ்சி மடத்து சாமியராகவோ அல்லது ஆதீன மடத்து சாமியாராகவோ போகலாம். சரியா?

      ரொம்ப நன்றிங்க ..

      Q3: நித்தியின் எந்தக்குண‌ம் அவரை சைவைப் பிள்ளையாக அடையாளம் காட்டத் தவறுகிறது நமது பிள்ளைக் கண்ணனுக்கு? அல்லது உங்களுக்கு?

      Q4:இப்ப இருக்கும் ஆதினத்தின் எந்தக்குணம் அவரை சைவைப் பிள்ளையாக அடையாளப்படுத்தி அவரை ஆதினமாக இருக்க அனுமதிக்கிறது?

      Q5: பிறப்பை வைத்துச் சாதி இல்லை என்றால், 20 வயதில் எல்லாருக்கும் குணத்தேர்வு வைத்து மதிப்பெண் அடிப்படையில் சரியான சாதியில் சேர்த்துவிடும் வழிமுறைதான் நல்லது. என்ன சொல்றீங்க?

      Delete
  4. Inthaerumai soniakku kodiPidiththu kavithai eluthuvathai neengal

    ReplyDelete
  5. //வர்ணாசிரமம் என்பது குணங்களின் அடிப்படையிலான பிரிவே அன்றி நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கும் விதத்தில் அல்ல! தவிர, நான் எதையும், தாங்கிப்பிடித்துக் கொண்டு இங்கே கருத்துச் சொல்ல வரவில்லை.//

    திரு கிருட்டின மூர்த்தி அவர்களுக்கு, இது புதிய செய்தியாக/கருத்தாக இருக்கிறது.. இதை விரிவாக விளக்க முடியுமா, மனித குணங்கள் எப்படி வர்ணாசிரமத்திற்கு அடிப்படையாக இருக்கிறது.

    கல்வெட்டுவின் கேள்விகளுக்கும் பதிலளிப்பீர்கள் என்று நம்பிக் காத்திருக்கிறேன்.

    நன்றி..

    ReplyDelete