Wednesday, September 12, 2012

பொய் சொல்லும் கலைஞர்..நீங்களுமா அய்யா?

"ன் தலைவன் உண்டு தூங்கினால் சரி.  பொதுசனம் எப்படியோ போகட்டும்.
நல்லா வேண்டும் உங்களுக்கு" என்ற ரீதியில் சொல்லுதிர்க்கும் அரசியல் அடிமைகளின் கருத்தையும் தாண்டி, கலைஞர் அவர்கள் அவரது கருத்தாக சிலவற்றைச் சொல்லியுள்ளார்.
அதை வரவேற்கிறேன். அதற்காக நன்றி.

http://tamil.oneindia.in/news/2012/09/12/tamilnadu-why-did-jayalalithaa-supported-anti-161306.html

பலமுறை முதல்வராக இருந்தவர் ஒரு பெரிய கட்சியின் தலைமைப் பொறுப்பில் இன்றுவரை இருப்பவர், அவர் கண்முன் நடைபெறும் ஒரு நிகழ்வை புறந்தள்ளிவிட முடியாது.  ஆனால் அதில் அவர் சொல்லியுள்ள பொய்தான் வருத்தம் கொள்ளச் செய்கிறது.

புள்ளிவிவரப்புலியான நீங்களுமா அய்யா?  :-(((

கலைஞர் சொன்னது:
//போராட்டம் நடத்துவோரும் நமது மக்கள்தான். அவர்களை ஏதோ விரோதிகள் என்பதைப்போல இந்த அரசு நினைக்கக் கூடாது.//

மிக்க நன்றி


கலைஞர் சொன்னது:
// போராட்டம் நடத்துவோரும், அந்த அணு உலை தொடங்குவதற்கு முன்பாகவே தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தால், இத்தனை கோடி ரூபாய்களை செலவழித்திருக்கத் தேவையில்லை.//

இது பொய்.
இந்த போராட்டம் எப்போது தொடங்கியது என்பதை பூவுலகின் நண்பர்கள் தொகுத்துள்ளார்கள். இதில் தகவல்பிழை இருந்தால் சுட்டலாம் .

http://www.poovulagu.net/2012/01/25.html

1.கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிரான போராட்டம் 1986 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. இது திடீரென இப்போது தொடங்கியது அல்ல.

2.கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து 1987 இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. 1987 செப்.22 அன்று இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை எதிர்த்து ஒரு மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடந்தது.

3. 1988 இல் நெல்லையில் மிகப் பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது. 1989 இல் நாகர்கோவிலில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம்.

4. 1989 மார்ச் 20 அன்று தூத்துக்குடியில் ஊர்வலம். இதில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாலபிரஜாதிபதி அடிகள் உட்பட பல அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கலைஞர் சொன்னது:
//.........., இத்தனை கோடி ரூபாய்களை செலவழித்திருக்கத் தேவையில்லை.//

எத்தனை கோடி செலவழித்தாலும் மக்கள் சொன்னதற்காக நிறுத்தப்பட்ட பல அணு உலைகளின் பட்டியல்.

http://www.poovulagu.net/2012/02/30.html

உலகின் பல இடங்களில் கட்டுமான பணிகள் நடக்கும் போதோ ,அல்லது நடந்து முடிந்த பிறகோ ,பல அணு உலைகள் மூடப்பட்டுள்ளன .
  
அணு உலை                                        
நாடு    
மூடப்பட்ட நிலை
ரோச்டோவ்      
ரஷ்யா 
90 சதவீத வேலைகள் முடிந்திருந்த நிலையில்                        பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக 1997           -இல் நிறுத்தப்பட்டது .
மொச்சொவ்சீ
ஸ்லோவாகியா   
1994 டிசம்பரில் ஐரோப்பா முழுவதும் மக்கள் பலமாக எதிர்த்ததால் 1995 மார்ச் மாதம் அரசு ரத்து  செய்தது .
பட்டான்
பிலிப்பைன்ஸ் 
உபகரணங்கள் திருப்திகரமாக இல்லாததால் 1985 -ஆம் ஆண்டு கைவிடப்பட்டது .
ஸ்வட்டண்டார்ப்   
ஆஸ்திரியா 
உபகரணங்கள் திருப்திகரமாக இல்லாததால் 1985 -ஆம் ஆண்டு கைவிடப்பட்டது .
என்லியாவோ  
தைவான்  
96 .2 சதவீத மக்கள் எதிராக வாக்களித்ததால் ,1994 -ஆம் இரண்டு அணுஉலை வேலைகள்  நிறுத்தப்பட்டன