Monday, January 07, 2013

விந்துதானம் கொடுத்தவர் எப்படி தந்தையானார்?

வி ந்து தானம் செய்து விட்டாலும், அது மருத்துவர் மூலம் உட்செலுத்தப்படுகிறதா என்று கவனித்துக் கொள்ளவும்.

அமெரிக்கா கான்சாஸ் ( Kansas ) மாநிலத்தில் உள்ள பெண்தம்பதிகள் (lesbian couple) குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார்கள். இதற்காக இவரகள் கிரெக் லிஸ்டில் ( Craig list ) ஒரு விளம்பரம் கொடுக்கின்றனர்.  சேர்,கார், தட்டுமுட்டு சாமான் தொடங்கி, காதலன் தேவை வரை அனைத்து விளம்பரங்களுக்கும் இடமளிக்கும் கிரெக் லிஸ்டில் ,விந்து தானம் கேட்டு விளம்பரம் கொடுக்கின்றனர் இந்த பெண்தம்பதிகள். இந்த விளம்பரத்திப் பார்த்த வில்லியம் என்பவர்   ( William Marotta  )  இவர்களுக்கு விந்துதானம் செய்ய முன்வந்துள்ளார். இவர் திருமணம் ஆனவர்.

விந்துதானம் கொடுப்பதற்குமுன்னால், பிறக்கப்போகும் குழந்தைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் முழுமையான பெற்றோர் உரிமை அந்த பெண்தம்பதிகளுக்கே (lesbian couple)  என்றும், எந்தவிதமான பணம் சார்ந்த உதவியும் (Child support ) தன்னால் கொடுக்கப்படமாட்டாது என்று ஒப்பந்தம் போட்டபின்னரே இவர் விந்துதானம் செய்கிறார். இது நடந்தது 2009 ல். இதற்குப்பிறகு இவர் இதை மறந்துவிட்டார்.

அப்படி இவர் கொடுத்த விந்துமூலம் அந்த பெண்தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த மூன்றாண்டுகளில் அந்த பெண்தம்பதிகள் இருவரும் பிரிந்துவிட்டனர்.  சட்டப்படி கான்சஸ் மாநிலத்தில் பெண் + பெண் திருமணம் (lesbian marriage ) செல்லாது அல்லது இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. அவர்களாக சேர்ந்து வாழ்ந்துள்ளனர், இபோது பிரிந்துவிட்டனர். பிரிந்தபிறகு அந்தக் குழந்தை ஒரு பெண்ணின் பாதுகாப்பில் ( custody ) வருகிறது. இப்போது அந்தப்பெண் குழந்தையை வளர்க்க அரசாங்க உதவியை ( child support ) நாடுகிறார்.

குழந்தையை வளர்க்க அரசாங்க உதவியை நாடுபவர்களின் பொருளாதர நிலைமை மற்றும், அந்த குழந்தையின் தந்தையின் பொருளாதார நிலைமை , போன்ற எல்லா ஜாதகத்தையும் அரசாங்கம் விரிவாக அலசியே உதவி செய்ய முடிவு எடுக்கும். அனைத்தையும் விசாரித்த மாநில அரசாங்கம் , இப்போது வில்லியம்தான் குழந்தையின் தந்தை , அவர் குழந்தை வளர்ப்பிற்கு மாதம் மாதம் பணம் கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பளிக்கிற‌து.

விந்துதானம் கொடுத்தவர் எப்படி தந்தையானார்?

பெண்தம்பதிகளுக்கும், வில்லியத்திற்கும் இடையே ஒப்பந்தம் இருந்தாலும், இவர் கொடுத்தவிந்தை அந்தப் பெண் அவராக உட்செலுத்திக்கொண்டார். இது வில்லியத்திற்கு தெரியாது. இவர் சும்மா மூன்று கப் நிறைய விந்தை கொடுத்துவிட்டார். விந்தை வாங்கிய பெண் மருத்துவரை நாடாமல் அவராக உட்செலுத்திக்கொண்டுவிட்டார். மருத்துவரின் மேற்பார்வையில் நடக்காதல் , மாநில அரசாங்கம் இதை ஒரு இயற்கையான புணர்வில் வந்த கருத்தரிப்பு என்றே கருதுகிறது. இவர்களுக்கு இடையே ஒப்பந்தம் இருந்தாலும், கொடுக்கப்பட்ட விந்தை மருத்துவர் செலுத்தாததால், இவர்கள் இயற்கையாக புணர்வில் குழந்தை பெற்று இருக்கலாம் என்று கருதுகிறது.

Under a 1994 Kansas law, a sperm donor isn't considered the father only when a donor provides sperm to a licensed physician for artificial insemination of a woman who isn't the donor's wife.

தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்து பார்ப்பது போல, விந்துதானம் செய்தவரின் , பணத்தையும் பிடுங்கிக்கொள்ளும் நிலை வந்துள்ளது.

நீங்கள் விந்துதானம் செய்வது என்றால், தானம் செய்யப்பட்ட விந்து ஒரு மருத்துவரின் மேற்பார்வையில் பெண்ணின் உடலில் செலுத்தப்படுகிறாதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். இல்லையென்ரால், நீங்கள் அந்தப் பென்ணிடம் இயற்கையான முறையில் உடலுறவு கொண்டு, கருத்தரிக்க வைத்ததாகவே கருத இடமுள்ளது.

நீதி:
சுயமைதுனத்தில் வெளியேறும் விந்துகளை பாதுகாப்பாக அழித்துவிடுங்கள். தானம் கொடுப்பதாக இருந்தால் மருத்துவர் , சட்டவல்லுனர்  என்று கலந்து ஆலோசித்துவிட்டுச் செய்யுங்கள். தகர டப்பாக்களை விற்பதுபோல கிரெக் லிஸ்டில் விற்க அல்லது தானம் செய்ய வேண்டாம்.

செய்தி உதவி:
http://www.cnn.com/2013/01/04/us/kansas-sperm-donation/index.html
http://www.keyc.tv/story/20482751/state-trying-to-make-sperm-donor-pay-child-support

1 comment:

  1. // இவர் சும்மா மூன்று கப் நிறைய விந்தை கொடுத்துவிட்டார். //

    அன்பின் கல்வெட்டு, நிஜமாலுமே மூன்று கப் நிறைய அவுட்புட் எடுத்தாரா அந்த வில்லியம் ? சாதாரணமாக ஒரு ஸ்பூன் அளவு தானே அவுட்புட் வரும். இப்படி கப் கப்பாக எடுத்தும் ஆள் அவுட்டாக வில்லையா ? அந்த கப் சைஸ் என்னவாக இருக்கும் ? ;-)

    ReplyDelete