Wednesday, August 31, 2005

பதிவு 01: வாஷிங்டனில் வளைகாப்பு






வாஷிங்டன் நான் இருக்குற ஊருல இருந்து கொஞ்சதூரம்தான் இருக்கும். ஆனா நான் இருக்கும் ஊருக்கும் அதுக்கும் எவ்வளவு வித்தியாசம்?

இங்கேயெல்லாம் பஸ் பிடிச்சு வேலைக்குப் போறதென்பது பெரிய விஷயம்.பஸ் எல்லா நேரத்துலயும் இருக்காது. peak hours என்று சொல்லப்படும் காலை 7 முதல் 9 வரையும், மாலை 4 முதல் 8 மணிவரைக்கும் இருக்கும். அத விடுங்க சொல்ல வந்தது அதுவா என்ன?

போன மாசம் நண்பரின் மனைவிக்கு வளைகாப்பு விழா வைத்து இருந்தார்கள். இதுதான் சாக்கு என்று இரண்டு குழந்தைகளுடன் நானும் என் மனைவியும் பொட்டியை கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டோம். இதுமாதிரி ஏதாவது சாக்கில்தான் நண்பர்கள் வட்டத்தை பார்த்து பேசி அளவளாவ முடியும்.

இந்தியாவில் இருந்தவரை கல்யாணம், காதுகுத்து எதுவும் விட்டதில்லை. அது என்னமோ மக்கள் கூடும் இடம் என்றால் எனக்கு அலாதி விருப்பம். அதுவும் சொந்தங்கள் நண்பர்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.

இந்தமுறை நண்பரின் வளைகாப்பு விழாவிற்கு எனது மற்றொரு நண்பரும் New Jersey யில் இருந்து வருவதாகக் கூறிவிட்டபடியால் இருவரும் ஒரே Hotel -ல் அறை எடுத்து தங்குவதாக முடிவு செய்து விட்டோம். எங்களின் கூட்டணி இதுபோல் முன்னரே Pittsburgh மற்றும் Niagara போன்ற இடங்களுக்கு சென்று வெற்றிவாகை(??) சூடியிருப்பதால் இந்தமுறையும் கட்சிதாவமல் கூட்டணி அமைத்துக் கொண்டோம்.

வளைகாப்பு நடத்தும் நண்பரின் வீடு "Montgomery Village" என்னும் இடத்தில் உள்ளது. நாங்கள் internet -ல் சல்லடையாய்த்தேடி சல்லிசாக "Germantown" என்னும் இடத்தில் "Home Stead" hotel -ல் அறை எடுத்து தங்கினோம். போய் இறங்கியவுடனேயே என்க்கு Germantown பிடித்து விட்டது.

தங்கியிருந்த இடத்திற்கும் நண்பரின் வீட்டிற்கும் 5 நிமிட தூரம்தான். இந்த ஊர்பாணியில் only 2 exits. அதைவிட முக்கியம் Germantown -ல் இருந்து Gaithersbur என்னும் இடத்தில் எனது மற்றொரு நண்பன் இருக்கிறான். சொல்லி வைத்தாற்போல் அவனது மனைவியும் கர்ப்பிணியாக இருக்கிறார். இது என்ன கர்ப்பிணி season னா என்னா?


அது என்னமோ தெரியலை நாங்கள் இருக்கும் apartment லும் சரி நான் வேலை பார்க்கும் அலுவலகத்திலும் சரி எப்போதும் ஏதாவது ஒரு பெண் கர்ப்பிணியாக வலம் வந்து கொண்டிருப்பார். மகராசிகள் வாழ்க.

Germantown ல் இருந்து Montgomery Village ம் Gaithersbur ம் கிட்ட கிட்ட.
சனிக்கிழமை வளைகாப்பு என்பதால் நாங்கள் வெள்ளிக்கிழமை இரவே வாஷிங்டன் சென்றுவிட்டோம்.......