Wednesday, January 31, 2007

பாத்திமா நாச்சியாரும் ஷேக் மிரா ஷாகிப் பூஜாரியும்

ந்தோணியாருக்கு மொட்டை போடுவது,வேளாங்கன்னி ஆத்தாளுக்கு நேர்ந்து கொள்வது ,அந்தப்பக்கம் பிராமணப் பெரியவா வந்தாலும் அவருக்கு ஒரு நமஸ்காரம் வைத்துக்கொள்வது,இந்தப் பக்கம் எல்லா மதங்களுக்கும் பொதுவான பாபாக்கள் (ஆனால் எப்போதும் பார்ப்பனீய முறையில் மட்டுமே ) நடத்தும் ஹோமகுண்ட விழாக்களில் துன்னூறு(திரு நீறு) கொடுத்தாலும் வாங்கி வாயில் போட்டுக் கொண்டு கடைசி வரிசையில்(ஆமா இவர்களுக்கெல்லாம் பாபா மோதிரமா தருவார்?) இருந்து அந்தக்கூட்டதிற்கு வரும் வெளிநாட்டு மக்களையும் ,உள்ளூர் பணக்கார ஆசாமிகளையும், அரசியல்வதிகளையும் அண்ணாந்து பார்த்துவிட்டு, அங்கு நடக்கும் மந்திரங்களையும் ஓமக்குண்ட புகைகளையும் பல நாட்களுக்குப் நினைவில் வைக்காமல் தடாலடியாக கருப்புசாமிக்கு கெடாவெட்டி சொந்தத்துக்கு கறிச்சோறு போட்டு மாரியத்தாளகுக்கு தீச்சட்டி எடுத்து கடவுளோடு ஒன்றிப்போவார்கள்.

இவர்கள் உலகத்தில் உள்ள அனைத்து பக்தி மார்க்கங்களையும் கஞ்சிக் கலயத்தில் மொத்தமாக ஊற்றி ஒரே கல்ப்பில் அடிக்கும் வெள்ளந்தி மக்கள். இவர்கள் என்ன மதம்? என்ன சாதி? சிம்பிள்... நல்லது எங்கிருந்து வந்தாலும் ஒரு சலாம். எல்லாஞ்சாமிதான் கோஷ்டி இவர்கள்.

சத்தியமாய் இவர்களுக்கு சனாதனமும்,கீதையும்,பைபிளும்,குரானும்,பெரியாரின் கடவுள்மறுப்புக் கொள்கைகளும் தெரியாது. இவர்களை இப்படியே விட்டுவிடுவோம்.யாரும் சொந்தம் கொண்டாடவேண்டாம். நாளப்பின்ன இவர்கள் அம்மணச்சாமி Gomateshwara Statue வைப் பார்க்க நேர்ந்தாலும் இதுவும் நம்ம சாமிதான் என்று ஜெயினுக்கும் ஒரு ஜே போடுவார்கள்.

இவர்கள் கலந்துகட்டும் இந்த பக்திமிர்ச்சியில் இவர்களுக்கும், இவர்களுக்குத் துணைபோகும் பூஜாரிகளுக்கும் நிச்சயம் எந்த மதத்துக்கும் சொந்தமான சொர்க்கமும் கிடைக்காது.(அவுக அவுக அந்தந்த மதம் வாரியா சொர்க்கத்த தனித்தனியா கெரயம் போட்டு வச்சுருக்காகலாமே..நெசமா?) மினிமம் கேரண்டி நரகம்தான்.

இவர்கள் நரகத்துக்குப்போனாலும் நரகச்சாமிக்கு விழா எடுத்து பட்டையக் கெளப்பிவிடுவார்கள்.



பாத்திமா நாச்சியார்:

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையான நேற்று பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன் இந்துக்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
முதுவன் திடல் கிராமத்தினர் காவல் தெய்வமாக பாத்திமா நாச்சியாரை வழிபடுகின்றனர். இக்கிராம மக்கள் எந்த காரியத்தை துவங்குவதாக இருந்தாலும் பாத்திமா நாச்சியாருக்கு காணிக்கை செலுத்திவிட்டு துவக்குகின்றனர். பாத்திமா நாச்சியாரின் மகன்கள் அசேன், உசேன் இருவரும் போரில் இறந்த செய்தி கேட்டு பாத்திமா தீக்குளித்து இறந்ததாகவும், அவரது நினைவாக தீ மிதிக்கும் திருவிழா நடப்பதாகவும் ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர். அதன்படி அசேன் என்பவர் மூன்றுவிரல் கொண்ட உருவமாகவும், உசேன் என்பவருக்கு ஐந்துவிரல் கொண்ட உருவமாகவும் வடிவமைத்து சப்பரத்தில் வைத்து ஊரை வலம் வருகின்றனர்.


நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் இந்துக்கள் முறைப்படி காப்புக்கட்டி, விரதமிருந்து தீ மிதிக்கின்றனர். ஆண்கள் தீ மிதிப்பதும், பெண்கள் பூ மெழுகுதல் என தீக்கங்குகளை எடுத்து உடலில் கொட்டுவதுமாக விழா நடக்கிறது. இதனால் நோய் தாக்காது என நம்புகின்றனர்.
மொகரம் மாதத்தின் முதல் மூன்று நாள் தீ மிதிப்பதற்கு குழிகளை வெட்டுகின்றனர். ஐந்தாம் நாள் வரை குழிகளை காய வைக்கின்றனர். அடுத்த மூன்று நாள் குழிகளில் விறகுகளை காய வைத்து தீ மிதிப்பதற்கு தயார்படுத்துகின்றனர். ஒன்பதாம் நாள் நள்ளிரவு முடிந்து அதிகாலை 3 மணியளவில் தீ மிதி திருவிழா நடக்கிறது. 10ம் நாளான மொகரம் பண்டிகையில் தீமிதிக்கும் குழியை மூடி விழாவை நிறைவு செய்கின்றனர். பள்ளிவாசலை கோவிலாக வழிபடும் இந்துகளுக்கு பூசாரியாக முஸ்லிம் உள்ளார். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் இத் திருவிழாவைக்காண ஹாலந்து நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் ஜாங்க்பிரித், மனைவி ஹோடி வந்திருந்தனர்.


நன்றி: படம் செய்தி தினமலர்
http://www.dinamalar.com/2007jan31/specialnews1.asp?newsid=3





ஷேக் மிரா ஷாகிப் பூஜாரி

VISAKHAPATNAM: This is the essence of secular India. Respect and tolerance for all faiths. In a shining example of this, Payakaraopeta, a village in this district has a Muslim pujari at its Durga temple. He, like any other pujari , chants prayers in Sanskrit, helps visitors with their prayers and also carries out all the rituals.

What sets him apart is his name—Sheikh Mira Sahib. Payakaraopeta is located close to Tuni, a small town known for its betel leaf production. Every Monday, over a hundred people from several nearby villages climb the unpaved steps of Seethamma hill to pray to the goddess. Mira Sahib guides them all in performing various rites and the worshippers acknowledge him as their pujari .

With a shaven head, bare-chested and wearing a dhoti, Mira Sahib begins his day at the temple at 7 am and spends his time till late afternoon in saying prayers and helping the pilgrims.
He then returns home and attends to his chores. His earning is the dakshina that is given to him by devotees. "I used to herd buffalos about 25 years ago. I also used to help in weeding the path on this hill for archaeologists who were looking for some old relics and hidden caves," Mira reminisces.

"One day my gunapam (spearlike tool) hit something irregular. It was an idol of Goddess Durga. There were a few idols lying about uncared for, so I tossed this one also downhill. I came home and forgot about what I did. That night in my sleep the goddess appeared before me as my daughter. She demanded that I perform puja to her daily. Then she vanished. I was nonplussed and didn't know what to do for sometime. Then I made up my mind to follow her instructions," says he.

Next day Mira went back to the hill and installed the idol at the place he had found it. A few weeks later he began performing the puja to her. "I learned a few mantras by listening to other worshippers. Later, I learned them properly from my guru, Subramanya Sastry. He taught me in spite of opposition from some people," he recollects. Related Stories

செய்தி:
http://timesofindia.indiatimes.com/articleshow/1502860.cms

Villagers rally around Muslim priest
http://timesofindia.indiatimes.com/NEWS/Cities/Hyderabad/Villagers_rally_around_Muslim_priest/articleshow/1503047.cms




Wednesday, January 10, 2007

பொங்கல் வாழ்த்துகள்







படம் உதவி:
http://www.pongalfestival.org/the-harvest-festival.html


மிழர்களின் நன்றித் திருநாள் பொங்கல் வாழ்த்துகள் (சனவரி 15,2007)

இந்த வருடமும் உங்களுக்குச் சிறப்பாக அமைய உங்களின் முயற்சிகள் பலன்
கொடுக்கட்டும்.இந்த நாளில் எனக்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் ,பிறருக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயமே பிரதானமாக இருந்த காலத்தில் சூரியனுக்கும்,வயலுக்கும்,ஆடு மாடு கால்நடைகளுக்கும் நன்றி தெரிவித்து நடந்த, உலகின் முதல் நன்றித் திருவிழா இது. பொங்கல் இப்போது அவ்வளவு சிறப்பாக (பிற கொண்டாட்டங்களுடன் ஒப்பிடும் போது) கொண்டாடப்படுவது இல்லை. நீர்,காற்று,நெருப்பு மற்றும் அனைத்து இயற்கை சார்ந்த அமைப்புகள் மதம் சாதி பார்த்து மனிதனை தீண்டுவதும் இல்லை பயனளிப்பதும் இல்லை.தமிழர் அனைவரும் கொண்டாடுவோம் வாருங்கள்!

  • அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
  • பொங்கல் போல் உங்களது அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கிப் பெருகட்டும்.

அன்புடன்.
கல்வெட்டு (எ) பலூன் மாமா

பொங்கல் சம்பந்தமான எனது முந்தைய பதிவுகள்:


பொங்கல் கொண்டாட்டம் சிலரின் தயக்கங்கள்.
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_113294177394608479.html

கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
http://kalvetu.blogspot.com/2005/10/10.html

குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
http://kalvetu.blogspot.com/2005/10/12-thanks-giving-day.html

தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்
http://kalvetu.blogspot.com/2005/10/15.html

தீபாவளி தெரியும் Halloween தெரியுமா?
http://kalvetu.blogspot.com/2005/10/16-halloween.html

போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_15.html

பொங்கல் கொண்டாட்டம்- தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி.
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_21.html