Thursday, October 30, 2008

இதெல்லாம் ஒரு நாடா?

அந்தவகையில் ...
சிங்களவர் (01),
இலங்கை தமிழர் (2),
முஸ்லீம்கள் (3),
இந்திய தமிழர் (4)
ஏனையோர் (5) எனவும் பாகுபடுத்தப்பட்டுள்னர். அரச பொது படிவங்களில் ‘இனம்’ என ஒதுக்கப்ட்டிருக்கும் கூட்டில் நாம் (4) என பதிதல் வேண்டும்.

http://puthiyamalayagam.blogspot.com/2008/10/blog-post_30.html


இலங்கையில் உள்ள ஏனைய இனங்களில் இருந்து மலையகத்தமிழர்கள் வேறுபடுவது இவர்கள் இன்றும் குறித்த ஒரு சட்டத்தின் கீழ் இலங்கையில் வதிவிட பிரஜைகளாக ( By Registration) பதியப்பட்டிருப்பதுதான். குடியுரிமை (By Decent) உள்ளவர்களாக இல்லை. இவர்களின் பதிவுக்காக இவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அது கிழிந்தாலோ, தொலைந்தாலோ இம்மக்கள் கிழிந்த அல்லது தொலைந்த பிரஜைகள்தான். அதன் பின் தங்களை அடையாளப்படுத்த பல பிரயத்தனங்களை செய்யவேண்டியிருக்கும். அந்த பிரயத்தனங்களில் தோற்றுப்போன எத்தனையோ பாமரமக்கள் அவர்களின் பிள்ளைகள் அநாதைகளாக வாழ்கின்றனர்.



**

நேரம் கிடைக்கும் போது விரிவாக எழுத வேண்டும். தகவலுக்காக சுட்டிகளின் சேமிப்பு

http://www.tamilcanadian.com/page.php?cat=321&id=1443
http://www.malaiyagam.org/Articles/MalaiyagamIllam.aspx
http://www.tamilidpcrisis.org/media_news.html
http://www.sundayobserver.lk/2006/04/16/fea05.html
http://sangam.org/taraki/articles/2006/05-07_Tamil_Demography.php?uid=1722
http://www.tamilcanadian.com/tools/print.php?id=1443
http://www.sarinihar.org/Mellaththamilini.htm
http://www.vizhippu.net
http://tamilaffairs.com

Friday, August 15, 2008

Vanuatu - Happiest place on earth

From BBC News Magazine...

http://news.bbc.co.uk/2/hi/uk_news/magazine/5172254.stm

What's so great about living in Vanuatu?
By Denise Winterman
BBC News Magazine

The Pacific island nation of Vanuatu is the happiest place on earth, according to a new "happy planet index". Beside the palm trees and beaches, why is life so good there? Renowned psychologist Haim Ginott once said: "Happiness is not a destination." Well, it is now, so get down the travel agents and book a one-way ticket to Vanuatu. The archipelago of 83 islands in the western Pacific is the happiest place on the planet, according to a new "happy planet index" published by the New Economics Foundation (NEF). The UK languishes in 108th place, below Libya, Iran, and Palestine.

Ancient rite

Up until now Vanuatu's biggest claim to fame was the island of Tanna, where locals worship the Duke of Edinburgh as their divine leader. Why? Because local legend tells how their spiritual ancestor ended up in England and eventually married a queen.

It also invented bungee jumping. Naghol, or land diving, is an ancient rite of passage for boys, some as young as seven. But forget elastic ropes and safety helmets, this is done with vines and they jump off a 75-feet rickety wooden tower.

But surely happiness does not come down to Prince Philip and throwing yourself from a great height - so what makes it such a happy place?

It doesn't take a genius to work out what the island nation has going for it - the weather is good most of the year, it has paradise-style coastlines, unique rainforests and no income tax.

But it is far from paradise lost, with limited employment opportunities and poverty. Environmentally, climatic changes and rising sea levels threaten some islands, with many inhabitants already forced to move inland.

"It's not perfect, it is a third-world country," says Annica Parilongi, financial controller at the island nation's only telecoms company - Telecom Vanuatu Limited, based in the capital Port Vila.

Fertile land

"But if you don't have money in Vanuatu you can still live happily. Here you can grow everything you need to eat. If people have an opportunity to make money they will take it, but it is not their ultimate aim."

Norman Shackley, chair of the British Friends of Vanuatu and a former resident of the islands, agrees that while some people have little money, very few go hungry.

"However poor someone is in Vanuatu they always have food," he says. "The land is so fertile people can grow the food they need to survive or take it from the wild. It is not the grinding poverty of places like India where people are deprived of even the means to feed themselves."

The "happy planet index" works on a very particular definition of happiness, which - among other things - measures people's impact on the environment.

Land is very important to the indigenous ni-Vanuatus and a big part of their culture. This respect is a main factor in the country topping the index.

Life in harmony

"Land is in their blood," says Peter Robinson, a vet who recently returned from working as a volunteer in Vanuatu. "It is about closeness to their ancestors, the land is continuous spiritual contact and they have respect for it."

A long-running wrangle over ownership has also helped saved it from environmental damage. When the island nation gained independence from joint French and British control in 1980, all land was supposed to be returned to its original owners, but no one can agree who they are.

THE HAPPIEST PLACES
1. Vanuatu
2. Colombia
3. Costa Rica
4. Dominica
5. Panama
"This has prevented raping of the land, if just anyone could have bought the land it would probably be a very different place," says Mr Robinson. "As it is, there is an awful lot of land that is not being used."

But it is also the people that make Vanuatu such a happy place. Mrs Parilongi says history and culture link ni-Vanuatus, as well as a relaxed attitude to everyday life.

"Life is not lived at such a fast pace as places like the UK, things are done in the time they naturally take. We have 83 different islands, people speak many languages but we all live in harmony and feel a link to each other and our culture. Life is very peaceful."

Mr Shackley says he has travelled extensively and has never come across people quite like the ni-Vanuatus.

"They have a unique quality. There is no sloppy emotion, they are so genuine in welcoming you into their country, their lives and their homes. The country and the people really get under your skin, it is a magical place."

While living in Vanuatu, Mr Shackley was once stranded for three weeks on one of its most remote islands with his 10-year-old son, due to an airline dispute.

With no shops and nowhere to stay, they were looked after by local people. One day he came across a young local man who had just returned to the island after studying at Nottingham University.

"I asked him what he was going to do with his life now and he just pointed at his fishing rod and said 'this'. He could have been one of the top earners in Vanuatu if he wanted, but he was contented with his simple life and didn't want anything else.

"It was a real eye-opener for me and made me look at what life is really all about. It just sums up what the place is about."

**********

For more ...

http://aravinthan29.blogspot.com/2008/08/11.html

Wednesday, June 04, 2008

இலவசமாக நாப்கின் திட்டங்கள் தமிழகம் முன்னோடி !!!

டந்த 3 வருடங்களாக இதை யாராவது செய்ய மாட்டார்களா என்று காத்து இருந்தேன். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இது ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் அது ரூ. 2/- என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டே வந்தது. இருந்தாலும் அது ஒரு முன்னோடித்திட்டம். அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

அடுத்ததாக இப்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் சென்னை மாநகராட்சியின் இலவசத்திட்டம். பெண்களின் சுகாதாரத்தை முன்னிட்டு செய்யப்படும் இந்த திட்டத்தை செயல்படுத்த துணிந்த சென்னை மாநகராட்சிக்கு நன்றிகள்.

பி.கு: எனது முதல்வருக்கு கடிதம் விசயத்திற்கும் இந்த மாநகராட்சி திட்டத்துக்கும் நேரடித் தொடர்பு ஏதும் இல்லை. இது யாரோ ஒரு புண்ணியவானின் முயற்சி. வாழ்க நல்ல உள்ளங்கள் !!

கல்வெட்டின்-தமிழக முதல்வருக்கு கடிதம் (முதல் அமைச்சர் ஜெயலலிதா)
http://kalvetu.blogspot.com/2005/09/07.html

சானிடரி நாப்கின் தமிழக அரசு திட்டம்
http://kalvetu.blogspot.com/2005/10/08_06.html

தினமலரில் சானிடரி நாப்கின் விசயம்!
http://kalvetu.blogspot.com/2005/10/14.html

கல்வெட்டின்- தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம் (முதல் அமைச்சர் கலைஞர்)
http://kalvetu.blogspot.com/2006/05/blog-post_114913553794167251.html

They don't use ANYTHING during menses ..felt criminal
http://kalvetu.blogspot.com/2007/03/they-dont-use-anything-during-menses.html
********************

மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்ஸ் http://in.tamil.yahoo.com/Health/News/0806/03/1080603030_1.htm

சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 3 ஜூன் 2008 ( 14:58 IST )

சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின்கள் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகமாகிறது.
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் சுகாதாரத்தை பேணும் வகையில், மாணவிகளுக்கு இலவச நாப்கின்ஸ் வழங்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த கல்வி ஆண்டிலிருந்து இந்த திட்டத்தை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் 25 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு வழங்குவதற்காக கடந்த மாதம் டெண்டர் விடப்பட்டது. இந்த பணி முடிந்ததும் 3 மாதங்களுக்கு பின்னர் நாப்கின்ஸ் வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக, அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் பெயர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
மாணவிகளின் ஆரோக்கியத்தை காக்கும் வகையிலும், சுகாதாரத்தை பேணும் வகையிலும் அறிமுகப்படும் இந்த திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மாநகராட்சியில் அமல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின்ஸ் வழங்கப்படும்.
http://www.maalaisudar.com/newsindex.php?id=10661%20&%20section=1

மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்:
http://thatstamil.oneindia.mobi/news/2008/03/13/131774.html

**
கிருஷ்ணகிரி பள்ளி தொடர்பான செய்திகள்.....

அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் சானிடரி நாப்கின் வெண்டிங் மெஷின்
http://sambarvadai.blogspot.com/2008/03/blog-post_17.html

News coverage of sanitary napkin vending machine!
http://www.glolifecare.com/inthenews.htm

சாருமியின் பதிவில்
http://churumuri.wordpress.com/2007/12/18/good-girls-shouldnt-miss-their-school-periods

Friday, May 30, 2008

350 கோடி 200 கோடி 10 கோடி .. அப்புறம் அந்த Cornell பல்கலைக்கழகம் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் கொம்பனஹள்ளி என்ற இடத்தில் உள்ளது.

த்தனை மாநிலங்களும் விரல்சூப்பிக் கொண்டு இருக்கும் போது, தமிழ்நாடு SUCCESS திட்டப் பணிகளை முடித்துவிட்டது. S U C C E S S (Scheme for Universal Access and Quality Education at the Secondary Stage) comprehensive proposal for the Central project named 'envisaged to be implemented during the 11th five year plan. 2007-12 ) மேலும் 2008-09 க்கான ஆண்டுத் திட்டத்தையும் முடித்துவிட்டது. 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒரு மேல்நிலைப்பள்ளி இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் தமிழ்நாடு செயல்திட்டம் தீட்டியுள்ளது. மிகவும் பாராட்டத்தக்க விசயம்.

அரசியல்,கட்சி,குடும்பம் தாண்டி மக்களுக்காக அதிகாரிகளும், அமைச்சர்களும் கொஞ்சமாவது சிந்தித்தால் நல்ல விசயங்கள் நடக்கும். திட்டங்கள் தொய்வில்லாமல் மக்களை அடைய எல்லாம் வல்ல அரசியல்வாதிகள் உதவ வேண்டும்.

Govt to open one school every 5 km
http://timesofindia.indiatimes.com/Cities/Chennai/Govt_to_open_one_school_every_5_km/articleshow/3084170.cms

Scheme for Universalization of Access to Secondary Education (SUCCESS)
http://www.indiabudget.nic.in/es2007-08/chapt2008/chap105.pdf

Scheme for Universalization of Access to Secondary Education (SUCCESS) and improvement of quality at secondary stage during the Eleventh Five Year Plan. The main objective of the programme is to make secondary education of good quality available, accessible and affordable to all young students in the age group 15-16 years (classes IX and X).

The target of the scheme is (i) Universal access of Secondary level education to all students in the age group 15-16 years by 2015 and (ii) Universal retention by 2020. It envisages (i) provision of necessary infrastructure and resources in the secondary education sector to create higher capacity in secondary schools in the country and for improvement in quality of learning in the school; (ii) provision for filling the missing gaps in the existing secondary schools system (iii) provision of extra support for education of girls, rural children and students belonging to SC/ST, minority and other weaker sections of the society and (iv) a holistic convergent framework for implementation of various schemes in secondary education.


நகைச்சுவைப் பகுதி:

கிரிக்கெட் கோமாளிகளை வைத்து சம்பாதித்ததில் BCCI richer by Rs 350 crore. இந்தப் புண்ணாக்குகள் இந்தக் காசில் அம்மணமாக ஆட மேல் நாட்டு பெண்களைக் கொண்டுவந்தால் அடுத்த போட்டிகளில் இதைவிட சம்பாரிக்கலாம்.
IPL doubles BCCI profit, set to top ad rates for T20 WC final
http://ipl.timesofindia.indiatimes.com/IPL_doubles_BCCI_profit/articleshow/3084001.cms

மிழர்களின் வியர்வைக் காசை வைத்து, கல்விச் சேவை செய்துவரும் சூப்பர் குடும்பம், வியர்க்காத மேனா மினுக்கி மக்களுக்காக மட்டுமே பள்ளி நடத்தி வருவது தெரிந்த விசயம். அடுத்த பிஸினசாக 10 கோடி அட்வான்ஸ் கொடுத்து கலைச்சேவை ஆரம்பம்.
http://thendralsankar.blogspot.com/2008/05/blog-post_29.html

ல்விக் கொடைகளிலேயே உலகத்தில் சிறந்த கொடை ஒன்று உள்ளது. நாரயணமூர்த்தி என்ற ஒரு இந்திய தொழிலதிபர், நிறையப் பணத்தை Cornell பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டர் துறைக்கு கொடுத்துள்ளார்.
Cornell பல்கலக்கழகம் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் கொம்பனஹள்ளி என்ற இடத்தில் உள்ளது. அதில் ஏழை மக்கள் மட்டுமே படிக்கிறார்கள். வாழ்க கல்விக் கொடை
Narayana Murthy as a Cornell Trustee
http://www.kamalsinha.com/iit/people/narayana-murthy/cornell.html

2007 - 2008 Board of Trustees Members
http://www.cornell.edu/trustees/members.cfm

Tuesday, April 29, 2008

ரெண்டு ஐட்டம் ஆட்டம் + நாலு சண்டை+கொஞ்சம் அழுகை + காமெடி (கிரிக்கெட்) = சூப்பர் எண்டெர்டெயின்மென்ட்

ண்டெர்டெயின்மென்ட் தான் நோக்கமுன்னு சொல்லியாச்சு. முழுசா நனைஞ்சபின்னால சும்மா எதுக்கு இன்னும் இது ஸ்போர்ட்ஸுன்னு சொல்லிக்கிட்டு இருக்கனும்? சினிமா பாணியில் நல்லா திட்டம்போட்டு ஐட்டம் சாங், சண்டை, டூயட், அதிரடி திருப்பம் அப்படின்னு வச்சா மல்லையா & கான் கோஸ்டி நல்ல விலைக்கு வாங்கிக்கும்.

எல்லாம் இருக்கு காமெடி இல்லையா? -ன்னு கேட்க வேண்டாம். இவனுக விளையாடுற ஆட்டம், அது பேரு என்ன கிரிக்கெட்டா? அதே பெரிய காமெடிதானே?

அப்புறம் மைக்கைப்பிடிச்சு பெனாத்திகிட்டு இருக்கும் ரிட்டையர்டு ஆசாமிகளுக்குப்பதிலா சின்னி ஜெயந்தை வச்சு மிமிக்ரி பண்ணலாம். அதுவும் நல்ல எண்டெர்டெயின்மென்ட் தான்.

Harbhajan Singh slapping Sri Sreesanth
http://www.timesonline.co.uk/tol/sport/cricket/article3835496.ece






பிக்கினி டான்ஸ் 20 பெல்லி டான்ஸ் 20 அப்புறம் கொஞ்சம் ஓவர் - கிரிக்கெட்
http://kalvetu.blogspot.com/2008/04/20-20.html












































படங்களுக்கு நன்றி:
http://www.chennaisuperkings4u.com/04/27/ipl-cheerleaders-photos-during-the-cricket-matches/

Sunday, April 27, 2008

நாரயணமூர்த்தி மன்மோகன்சிங் புனிதர்களா?

சென்றபதிவு நீளமான தலைப்பின் காரணமாக பிளாக்கரால் விழுங்கப்பட்டு விட்டது.மீள் பதிவு
****
ன்போசிஸ் நாரயணமூர்த்தி பொருளாதார மேதை மன்மோகன்சிங் புனிதர்களா?

Bad News India என்ற பதிவில் நாராயனமூர்த்தி,மன்மோகன் சிங்கைப் பற்றி உயர்வாக எழுதப்பட்து உள்ளது.எனக்கு இவர்கள் ஒன்றும் பெரிய புரட்சியாளர்களாகத் தெரியவில்லை.ஒருவர் சராசரி முதலாளி இன்னொருவர் சராசரி அரசியல்வாதி அவ்வளவே.

இவர்களை சும்மா இந்தியாவின் ரோல்மாடல்களாக சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.சினிமா காமடியில் செந்தில் சிறப்பாக நடிப்பதற்காக அவரை புரட்சியாளராகக்கருத முடியாது. ஒரு சிறந்த சினிமா காமெடியனாக வேண்டுமானால் அங்கீகரிக்கலாம்.

என்னளவில் துறை சார்ந்த வெற்றி என்பது வேறு, சமூக அக்கறை/முன்னேற்றம் எனபது வேறு.


நாராயணமூர்த்தி:
இவர் செய்தது என்ன?

தான் ஆரம்பித்த தொழிலை சிறப்பாக நடத்தி ஒரு சிறந்த நிறுவனமாக மாற்றியுள்ளார்.ஒரு மளிகைக் கடைக்காரர் அல்லது சரவணாஸ் ஸ்டோர்ஸ் அண்ணாச்சிகள் தெரு அல்லது ஊர் அளவில் செய்ததை இவர் உலக அளவில் செய்துள்ளார்.

சிறந்த முதலாளி!
சிறந்த நிர்வாகி!
சிறந்த மேலாளர்!

இதுபோல் இந்தியாவில் ஏற்கனவே பல முதலாளிகள் உள்ளனர்.பிரபலமான TATA,Birla, or Ambani நிறுவனங்களைக் கூறலாம்.

நாராயணமூர்த்தி இவர்களிடம் இருந்து எப்படி வேறுபடுகிறார்?

(வியாபார வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இவர் இனிமேல் என்ன செய்கிறார் என்பதை கவனிப்போம். அதைவைத்து வேண்டுமானால் புனிதர் பட்டம் கொடுக்கலாம்.)


மன்மோகன்சிங்:

மன்மோகன்சிங் தாராள வர்த்தகம் ,பன்னாட்டு முதலீடு போன்றவற்றிற்கு காரணமாகக் கூறலாம்.

அதனால் இந்தியாவில் இதுவரை என்ன பயன்?சும்மா GDP வளர்ச்சி இந்தியாவிற்கு உதவாது.இன்னும் குடிதண்ணீர்,ஆரம்ப சுகாதாரம்,கழிப்பிட வசதி..எண்ணற்ற விசயங்களில் நாம் சொரணையற்றவர்களாகவே இருக்கிறோம்.

IT வளர்ச்சிமட்டும் நாட்டுக்கு உதவாது.உடம்பின் ஒரு பகுதி (தொப்பை) மட்டும் வீங்குவது உடம்பிற்கு எப்படி அழகில்லையோ அதுபோலதான்.சமத்துவமான வளர்ச்சிக்கு நீண்டகால திட்டமிடல் தேவை.

இப்போ இதுதானய்யா பேஷன் என்று IT/GDP ல் மட்டுமே கண்ணாய் இருப்பது நாராயணமூர்த்திகளுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். நாட்டின் மூர்த்திகளுக்கு சரியல்ல.

இன்போசிஸ் நாரயணமூர்த்தி பொருளாதார மேதை மன்மோகன்களால் நாட்டுக்கு என்ன பயன்? பிட்சா சாப்பிடும் புது வர்க்கம் வந்துள்ளது வாழ்க. ஆனால் மாட்டுச்சாணியில் வறட்டி தட்டி விற்கும் கூட்டம் தண்ணீருக்கு இன்னும் கொலை வெறிச் சண்டை போட்டுக்கொண்டே உள்ளது.

வேண்டுமானால் இந்த கட்டுரைகளை வாசித்துப் பாருங்கள்:
Shift The Goalpost Obsession with GDP can cost India, China dear

இழிச்சவாயர்களும், இந்திய விவசாயமும்

விவசாயியும், SEZயும், அடிவருடிகளும்

கேடு கெட்ட இந்தியா... யானை கட்டியா போரடித்தோம்?







Friday, April 25, 2008

பிக்கினி டான்ஸ் 20 பெல்லி டான்ஸ் 20 அப்புறம் கொஞ்சம் ஓவர் - கிரிக்கெட்

ரம்பிச்சுட்டானுக அடுத்த ரவுண்டை. நல்ல நாள்யே இவனுக இம்சை தாங்க முடியாது. கக்கூசுல தனியா இருக்க நேரம் தவிர எந்தப்பக்கம் போனாலும் ஸ்கோர் என்ன ? , அவன் எவ்வளவு ரன்? போனவருசம் நடந்த மேட்சுல அவன் புடிச்ச கேட்ச் இருக்கே, எனக்கு பார்க்கறப்பவே ஒண்ணுக்கு வந்துருச்சுப்பா... அப்படி ஊரே பினாத்திக்கிட்டு இருக்கும். வேற எதையாவது டிவில பாத்தாலும் செய்தியை அடில ஓடவிட்டு இம்சை பண்றானுங்க. அம்மணமா இருக்க ஊருல கோவணம் கட்டிய கிறுக்குப்பயலா தேமேனு வேற நியூஸ்கள பேப்பரில் படிச்சுக்கிட்டு இருந்தாலும், சுத்தி இருக்கவனுக சும்மா இருக்க மாட்டானுக. "ஸ்கோர் பாக்கனும் பேப்பர் கொடு" என்பானுங்க. கிரிக்கெட் சும்மா ஒரு பொழுது போக்கு அயிட்டம் சார். இந்தக் கருமத்தை எல்லாம் ஸ்போர்ட்ஸ் பக்கத்தில் போட்டு நம்ம உயிரை வாங்குறானுக. இதெல்லாம் சினிமாக்கான பக்கத்தில் அல்லது "டைம்ஸ் ஆப் இந்தியா" பார்ட்டி போட்டோ பக்கத்தில் போட வேண்டிய சமாச்சாரம்.

கிரிக்கெட் எல்லாம் ஒரு விளையாடாய்யா? எந்த விளையாட்டிலாவது ஆட்டையில இருக்கவன் குண்டியை சொறிந்து கொண்டே பராக்கு பார்த்துக்கிட்டு இருக்குற கொடுமையைப் பார்க்க முடியுமா? கள்ளன்-போலிஸ் விளையாட்டில்தான் பயலுக அவனுகளுக்கு பிடிச்ச பிகர்களோட சேர்ந்து ஒளிஞ்சுக்கிட்டு கடலை போட்டுக்கிட்டே விளையாட முடியும். அதையெல்லாம் தூக்கி சாப்பிடுற ரெண்டு விளையாட்டு இருக்குன்னா அது கிரிக்கெட்டும் , கோல்ப்பும்-தான். அப்படியே சாவகாசமா விளையாடலாம். கனவான்களின் விளையாட்டாமில்ல இது. கொடுமைடா சாமி.

சினிமா,கரகாட்டம்,டான்ஸ்,மானாட-மசிராட போல கிரிக்கெட்டும் சும்மா பொழுது போக்குச் சமாச்சாரம்தான்னு ரொம்ப காலமா நான் சொல்லிக்கிட்டு வந்தாலும், ஒரு பயலும் நம்பல. பாவம் இவனுகளும் எத்தனை நாளைக்குத்தான் கோமணத்துல கரட்டாவண்டிய கட்டிக்கிட்டு இருக்க முடியும். இப்ப வெளில வந்துருச்சு இந்தப்பயல்களின் வண்டவாளம். அவன்க வாயாலெயே


Pakistan' all-rounder, Shahid Afridi, who is playing for the Deccan Chargers has said, "The girls in skimpy dresses should be removed from the ground as this is distracting the batsmen. Cricket itself is an entertainment. It does not require such cheerleaders to entertain." http://www.ibnlive.com/news/restrictions-imposed-on-ipl-cheerleaders/63889-3.html
நாமளே என்டர்டெயின் பண்ணுவமோ இல்ல, பொண்ணுங்கள ஜட்டி , டவுசர், அரைப்பாவடை அப்ஸ்கர்ட் கேமரா ன்னு ஆடவச்சு வச்சு கூட்டம் கூட்டி காசுபாக்கலாமான்றது தான் இப்ப இவனுக பிரச்சனையே. எப்படியோ போகட்டும். ஆனா, ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரிய விரட்டுன கதயா இவனுக பொழப்பு நாறாமா இருந்தாச்சரி.

நம்ம பயலுக சும்மாவே அதிகமா ஜொள்ளுவிடுறவனுக. கணுக்கால் தெரிந்தாலே போர்னோ அளவில் உணர்ச்சிவசப்படக்கூடிய மக்கள்ஸ். சினிமா நடிகைகள் காட்டுற பிலிம் கவர்ச்சிக்கே கோவில் கட்டுறவனுக. இப்படி பிதுங்கிய மார்போட வெள்ளைப்பொண்ணுகள கண்ணு முன்னால இப்படி ஆடவிட்டா? கிரிக்கெட்டை விட்டுட்டு இவளுக பின்னாடி போயிருவானுக. சாக்கிரதையப்பு. அப்புறம் உங்களுக்கு சங்குதான்.

இந்தியாவில சினிமாக்காரப் பயல்களுக்கும், இந்த சோம்பேறி விளையாட்டு கிரிக்கெட்டுக்கும் இருக்கும் மருவாதி யாருக்கும் கிடையாது. பெரிய காமெடி என்னன்னா இந்த இரசிகப்பயலுக பன்ற அலும்புதேன். தோத்துப் போயிட்டானுகன்னா டோனி வீட்டை இடிக்கிறதும் , அதே மனுசன் எப்படியோ ஜெய்ச்சிட்டானா அவனுக்கு கவருமெண்டு வீடு கொடுக்கிறதும் காமெடியான விசயம். எல்லாத்துக்கும் மேலே ,தேசப்பற்றைக் காக்க இந்தியா விளையாடும் போது சப்போர்ட் பண்ணிய ஆக வேண்டும். ஒரு நா அப்படித்தான் சும்ம டீ குடிச்சுக்கிட்டு இருக்கும் போது , ஒருத்தன் வந்து ஸ்கோர் என்னனு கேட்டான். நான் எதுக்குன்னு சொன்னேன். அவ என்ன ஒரு மாதிரி டேப்பரா பார்த்துட்டு கிரிக்கெட்டுன்னு சொன்னான். சாரி பிரதர் எனக்கு அந்த கருமாந்திரத்த பாக்க நேரம் இல்லைன்னு சொன்னேன். இந்த மட சாம்பிராணிகளைப்போல நானும் பொழப்பத்தவன்னு நினைச்சுட்டானுக கிரிக்கெட்டைப் பார்த்து தேசப்பற்றை வளர்க்க.

கழுதைக்குன்னு ஒரு பிட்னஸ் உண்டு. அதாவது பொதி சுமக்க முடியுமா? அப்படீன்னு பாக்குறது. கழுதை அதில் பிட்ன்ஸ் ஆகிருச்சுன்னா , அதை குதிரையோட ரேசிலயா விட முடியும்? இந்த கிரிக்கட்காரப் பயலுகளுக்கும் பிட்னஸ் டெஸ்ட் உண்டு. அது என்ன கருமமோ இவனுக பிட்டா இருந்தாலும் மலையாளப்பட பிட்டில் வரும் குண்டு நடிகை போலத்தான் பெரும்பாலும் இருக்கானுக. தொந்தியோட உள்ள வாலிபால்,பேஸ்கட்பால அல்லது புட்பால் (சாக்கர்) வீரனைக் காட்டமுடியுமா? பேஸ்பாலில் அதிகம் தொந்திகளைப் பார்க்கலாம்.

கழுதை தேஞ்சு கட்டெறும்பா ஆன கதையா இவனுக இப்ப அயிட்டம் சாங் சேர்த்துருக்கானுக. ரொம்ப நல்ல விசயம். எத்தனை காலத்துக்குதான் இவனுக மொகரையையே பார்த்துக்கிட்டி இருக்கிறது? பிகர் ஆடுவதும் அதைப் பார்ப்பதும் தப்பே இல்லை. ஆனா, கூட்டம் சேக்கவே இப்படி அயிட்டம் சேர்க்கிறோம் என்றால் என்னா மசுருக்கு விளையாட்டு? சும்மா நூறு பிகர்களை வைத்து சினிமாக்காரர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சி போல அல்லது நாலு அல்லக்கைகளை வைத்து மானாட மசிராடன்னு எதோ ஒரு ஷோவை சோக்கா நடத்தலாமே.



கானும், மல்லையா கும்பலும் சேர்ந்தா இப்படித்தான் இருக்கும். மல்லையா சார் பிக்னி டான்ஸ் உண்டா? காலண்டருக்கு போஸ் கொடுக்கும் நாலு பிகர்களை பிக்னியில் வந்து போகச் சொல்லுங்கள் இன்னும் கூட்டம் வரும். அய்யா கானு , ஓம் சாந்தி ஓம் ரேஞ்சில் அப்படியே எல்லா சினிமா மக்களையும் வந்து ஒரு கூத்துக் கட்டச்சொல்லுங்க சார். நன்னா கூட்டம் வரும். பணத்தை அள்ளலாம்.

பிகர்கள் வந்து ஆடுவது தப்பே இல்லை. ஆனா தமிழ்சினிமாக்காரங்க அடுத்த மாநில பிகர்களைக் கொண்டு வந்து சேலை அவுக்கிற மாதிரி , நீங்க என்னண்ணா வேற நாட்டு பிகர்களை கொண்டுவந்து ஜட்டியோட ஆடவிடுறீக? அப்படியே பொண்ணுங்களை காட்டித்தான் கூட்டம் சேக்கனும்னா கரகாட்டம் போல நம்ம ஊரு டான்சை வச்சுக்கலாமே?

கரகாட்டம்: வயசு போனால், பவுசு போச்சு..!
http://nadaivandi.blogspot.com/2007/09/blog-post_19.html

அந்த கரகாட்டப் பயபுள்ளைக சோறு தண்ணியில்லாம பிறந்த கொடுமைக்கு ஆடிக்கிட்டு அலையுதுக. நீங்க அப்படிச் செஞ்சா புண்ணியமாப்போகும். கரகாட்டாமும் நீங்க எதிர்பாக்கூரமாதிரி இருக்கும். நீங்க கஸ்டப்பட்டு காலுக்கு கீழே கேமரா வச்சு படம் புடிக்க வேனாம். மைனருக்கு மட்டும் லைட்டா பாவடையை விசுறுரமாதிரி எங்களுக்கும் கொஞ்சம் செய்யுங்கன்னு கேமராக்காரர் சொன்னா போதும். கரகாட்டகோஷ்டில வர்ர ஆம்பளை ஆட்டக்காரர்களை எல்லாம் பந்து பொறுக்கச் சொல்லலாம். இரும்பு அடிக்கிற இடத்துல ஈ-க்கு என்னெ வேலை?
இதுவும் பத்தாதுன்னா, இருக்கவே இருக்கு சின்னத்திரை மழை-டான்ஸ். கிராமத்து ரெக்கார்ட் டான்ஸை எல்லாம் தூக்கிச் சாப்புடுறமதிரி செயற்கை மழையில் நனைந்து மக்களை மகிழ்விக்க ஒரு குருப்பே இருக்கு. மானாட மசிராட நீ வாடா பன்னாடைன்னு ஆட்டம் கட்டுவானுக.

Apparently, it was pretty disappointing to see that they were all
firangs(foreigners). It would be exciting to see some Indian
Cheerleaders.
http://digitallife.co.in/indian-cheerleaders-for-ipl/

தர்ம தொரை பவாரு அண்ணே ஒருத்தர் விவசாய அமைச்சரா இருந்துகிட்டு இருக்கார். ஆனா வேலை செய்ரது எல்லாம் கிரிக்கெட்டுக்கு. விவசாயி தினமும் தூக்குப்போடுச் சாகுறான். அதுக்கு ஏதாவது பண்ணுசாரே. IPL க்கு மட்டும் இப்படி சிந்திச்சு சிந்திச்சு பண்றீகளே பாவம் விவாசாயத்தையும் கொஞ்சம் பாருங்க தல. இல்ல, பேசாம ஒரு சியர் குருப்பை ஆரம்பித்து நடத்துங்க. தயவு பண்ணி விவசாய அமைச்சரா இருந்து உயிர வாங்காதீக.

கிரிக்கெட் பெரிய காமெடின்னா அதவிடப் பெரிய காம்டி கலாச்சாரக் காவலர்களுன்னு இருக்க ஒரு கூட்டம். இவனுங்க அளும்பு தாங்கல. எதோ கலாச்சாரம்னாலே பொம்பளனற மாதிரி ஆஜராயிடுவானுக. இந்திய சினிமால ஆடாத ஆட்டமாயா இந்தப் பிகருங்க ஆடுதுங்க? அதுகளுக்கு அதுதான் புரபசன். நீ ஒன்னோட கட்சி மாநாட்டுக்கு குப்பிட்டாக்கூட வந்து ஆடுங்க. என்ன சு.சாமிக்கு அதிமுக கொடுத்த சேலை டான்ஸ் போல இது இருக்காது.

ஆணும் பொண்ணும் இருக்க உலகத்துல , பொண்ணுகளை மனுசப்பய இரசிக்காம மாடா வந்து இரசிக்கும். கலாச்சாரம் கலாச்சாரம்னு சொல்லிக்கிட்டே சினிமாவுல ஜட்டியோட ஆடுறது மட்டும் தப்பில்லையாம், மல்லிகா கோஸ்டிகல் புது வருசத்துக்கு ஆடுறது தப்பில்லையாம்,மும்பை பார்ல வயித்து பொழப்புக்கு ஆடுனா தப்பாம்.

பணம் பாக்குறதுதான் நோக்கமுன்னு இந்தப்பயலுகள ஏலம்விட்டப்ப எல்லாம் எங்கே போயிருந்தீங்கப்பு. போட்ட பணத்தை அவுக எப்படி எடுப்பாக? வாழ்க்கையை கொண்டாடட்டும். போங்கப்ப்பு போயி பொழப்பப்பாருங்க.



Shatrughan Sinha:
"If you are so interested in deploying these cheer girls who dance
after hits of fours and sixes, it is better to give chance to the bar girls who
have been rendered unemployed after Maharashtra government put a ban on the
dance in bars,"

"I am afraid that cricket, which has been shortened from
five days to one day and now to the T 20 format, might be reduced to 'Toss-Toss'
in which the winner will be decided through toss," http://www.ibnlive.com/news/bjp-leaders-raise-stink-over-ipl-cheerleaders/63872-3.html


இவ்வளவு சொல்றயே வெண்ணை ஒனக்கு எந்த ஸ்போட்ஸ் பிடிக்கும் அப்படீன்னு சந்துல சிந்து பாட வேண்டாம். அதையும் நானே சொல்லீறேன். பேஸ்கட்பால்தான் நம்ம பேவரிட். எனக்கு விளையாடத் தெரியாட்டியும் அதுதான் நம்ம பேவரிட். அதுக்கு அப்புறம் வாலிபால்,புட்பால்ன்னு வரும். நிச்சயம் கிரிக்கெட் இல்லை. பிடிச்ச இன்னொன்னு ஜொள்ள மறந்துட்டேன் அது தான் பிகர் ஸ்கேட்டிங்.


கிரிக்கெட்டில் அடுத்து பெல்லி டான்ஸும் வரவேண்டும். அப்படியே காலப்போக்கில் பிக்கினி 20 பெல்லி 20 கிரிக்கெட் 1 ஓவர் என்றாக எல்லாம் வல்ல கான் & மல்லையாக்களை வேண்டிக் கொள்கிறேன்.

ஐட்டம் நம்பர், குத்துப்பாட்டு, கிரிக்கெட்டு அப்படிப்போடு ...

நான் கலாச்சாரக் காவலனா .....? :புதசெவி
http://tbcd-tbcd.blogspot.com/2008/04/blog-post_22.html

T20 கிரிக்கெட் - சியர் லீடர்ஸ் - டிபிசிடி
http://jyovramsundar.blogspot.com/2008/04/t20.html

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...)
http://pktpariarasu.blogspot.com/2008/04/blog-post_24.html

Top political agenda: ban IPL cheerleaders
http://www.ibnlive.com/news/restrictions-imposed-on-ipl-cheerleaders/63889-3.html

Sports Weds Entertainment
http://www.ibnlive.com/blogs/rohitkhilnani/1844/50939/sports-weds-entertainment.html

Indian Cheerleaders
http://digitallife.co.in/indian-cheerleaders-for-ipl/

IPL: Foreign cheerleaders shake India!
http://economictimes.indiatimes.com/News/IPL_Foreign_cheerleaders_shake_India/rssarticleshow/2979153.cms


Picture courtesy
digitallife.co.in
நடைவண்டி-ஆழியூரான்.


Video courtesy
YouTube

Tuesday, April 22, 2008

பார்ப்பனீயச் சுவர் - உத்தப்புரம்

டி அல்லது இடிப்போம் - கட்டுரையாளர் ஆதவன் தீட்சண்யா

நாய்,பன்னி,ஆடு,மாடு,எருமை,கழுதை,கோழி,கொக்கையெல்லாம் தீண்டுகிறவர்கள் எங்களை ஏன் தீண்டுவதில்லை என்று என்னிடம் புகாரேதும் இல்லை இனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால்.

நேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் அக்மார்க் இந்தியர்கள். அதிலும் ‘தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று கொண்டாடப்படுகிற தமிழர்களும்கூட. அப்படியானால் இந்த சுவர் எதற்காக? யார் எழுப்பியது?

ஒருதாய் பிள்ளையாக இருந்தவர்களுக்கிடையே பாகப்பிரிவினை ஏற்பட்டு கட்டப்பட்டதல்ல அந்த சுவர். கடவுளே காண்ட்ராக்ட் எடுத்து கல்லும் சிமெண்ட்டும் கலந்து கட்டிவைத்த தெய்வீகச்சுவருமல்ல அது. தலித்துகள் முகத்தில் விழித்துவிடக்கூடாது, தலித்துகள் எங்கள் பகுதிக்குள் நுழைந்துவிடக்கூடாது என்று தீட்டுப் பார்க்கிற பிறவிக் கொழுப்பும், சுவர் கட்டுமளவுக்கு ‘கோவணத்தில் மூனு காசு வைத்துக்கொண்டு கோழிகூப்பிடும்போதே எழுந்தாட்டுகிற’ பணக் கொழுப்பும் கொண்ட ஆதிக்க சாதியினர் எழுப்பிய சுவர் அது. கட்டப்பட்ட காலம் கி.பி.1990.


ஈயும் பீயும் போல இந்தியர்கள்- தமிழர்கள் ஒற்மையாய் வாழ்வதாக போலி முழக்கங்களை எழுப்பி செவிப்பறையை கிழித்துக் கொண்டிருக்கும் தேசிய- இனப்பற்றாளர்கள் இந்த சுவர் குறித்து இதுவரை எந்த விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் நல்கவில்லை. ஆனால் சுவர் என்னவோ நின்று கொண்டிருக்கிறது கி.பி 2008ம் ஆண்டிலும். அதுவும் கடந்த பத்துநாட்களாக சுவற்றுக்கு மேல் மின்சாரவேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இருநாட்டு எல்லைகளுக்கிடையிலும் கூட இல்லாத இந்த தடுப்பரணின் புகைப்படத்தோடு 2008 ஏப்ரல் 17 அன்று இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டதையடுத்து மின்சார ஒயர் பிடுங்கியெறியப்பட்டுள்ளது.

ஒயரைத்தான் புடுங்க முடிந்ததே தவிர வேறு ஒரு மயிரையும் புடுங்கமுடியாது என்ற கொக்கரிப்போடு நிற்கிறது சுவர்.

செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் மனசாட்சியை உலுக்கிவிட்டதாகவும், நாம் நாகரீகச் சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து தொந்தரவு செய்வதாகவும் சில அன்பர்கள் தமது மனநிலையைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால், தலித்தல்லாத ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றி விதவிதமாய் எழுப்பிக் கொண்டுள்ள மானசீகச் சுவர்களையும் நூல்வேலிகளையும் கண்டு வெதும்பி பழகிப்போன தலித்துகள் இந்த உத்தப்புரம் சுவர் இருப்பது குறித்து ஆச்சர்யப்படவோ அதிர்ச்சியடையவோ புதிதாக ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் மனதளவில் வைத்திருக்கும் சாதி, தீண்டாமையுணர்வின் வெளிப்படை வடிவம்தான் அந்த சுவர் என்றே புரிந்து கொண்டுள்ளனர். தலித்துகளைப் பொறுத்தவரை தீண்டாமையின் இன்னொரு வடிவம். அவ்வளவே.

ஒவ்வொரு கிராமத்துக்குள்ளும் ஒரு தென்னாப்பிரிக்காவை வைத்துக்கொண்டு நிறவெறியைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கென்ன யோக்கியதை இருக்கிறது என்று அன்று அம்பேத்கர் எழுப்பிய கேள்வி இன்றும் எதிர்கொள்ளப்படாமல் இருக்கிறது குறித்து யாரும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தியா ஒன்றல்ல, அது தீண்டத்தக்க இந்தியா, தீண்டத்தகாத இந்தியா என்று இரண்டாக பிளவுண்டிருக்கிறது என்று அவர் வைத்த குற்றச்சாட்டு இன்றளவும் உண்மையாக இருப்பது குறித்தும் யாருக்கும் கவலையில்லை.பக்கத்தில் இருக்கிற சேரிக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடுவோம் என்று அச்சமும் அசூயையும் ஆணவமும் கொண்டலைகிற இந்த சமூகத்தில், ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் வேற்று கிரகத்தில் குடியேறும் ஆராய்ச்சிகளைப் பற்றிய பெருமிதத்தில் பூமிக்குத் திரும்ப மறுக்கின்றனர். தலித்துகளுக்காக இயங்குவதாய் சொல்லிக்கொள்ளும் தலித் தலைவர்களோ திசைமாறி சினிமா புரஜக்டர் வழியாக புரட்சியை ஒவ்வொரு ஊரின் தியேட்டரிலும் ஓடவிட்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நம்பி கோடம்பாக்கத்திற்கு குடிபோகத் தொடங்கிவிட்டனர். அல்லது அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கிடைக்காமல் தடுப்பது எப்படி என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக் கிடக்கின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியுமே இந்த உத்தாபுரம் சுவர் பிரச்னையை பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளன. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டக் குழு, 2008 பிப்-9 அன்று இம்மாவட்டத்தின் 47 மையங்களில் 107 கள ஆய்வாளர்களைக் கொண்டு கள ஆய்வு நடத்தியது.

1.தீண்டாமை என்றதும் நம் நினைவுக்கு வருகிற - பழகிப் போன வடிவமான இரட்டைக்குவளை முறை பல்வேறு ரூபங்களை மாற்றிக் கொண்டு நிலைத்திருப்பதை இவ்வாய்வுக்குழு கண்டறிந்தது. தலித்துகளுக்கு தனி தம்ளர், புள்ளிவைத்த தம்ளர், சிரட்டை, தலித்துகள் குடித்த தம்ளர்களை அவர்களே கழுவி வைப்பது, ஒருமுறைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் யூஸ் அண்ட் த்ரோ கப்புகளை வழங்குவதால் தலித்துகளுக்கு ஐம்பது பைசா கூடுதல் விலையில் தேநீர் (ஒரு கப் ஐம்பது பைசாவா? தலித் தொட்டுக் கொடுக்கும் காசில் தீட்டு இருக்காதோ?), தேநீர்க்கடையின் பெஞ்சுகளில் சமமாக அமர்வதற்குத் தடை என்று இந்த கிராமங்களின் தேநீர்க்கடைகளில் தீண்டாமை நிலவுகிறது.

2. கிணறு, குளம் உள்ளிட்ட ஊரின் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதில் தலித்துகளுக்குத் தடை.

3. முடிதிருத்தகங்களிலோ சலவைக்கடைகளிலோ தலித்துகளை முடிந்தமட்டிலும் தவிர்க்கவேண்டும் என்பதே அத்தொழில் செய்வோருக்கு ஆதிக்கசாதியினரின் எச்சரிக்கை. எனவே தலித்துகள் முடிதிருத்திக்கொள்ள பக்கத்து நகரங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அப்படியே அனுமதித்தாலும் தனி இருக்கை. சலவைக்கடைகளில் ஆதிக்க சாதியினரின் துணிகளோடு கலந்துவிடாமல் தனியே ஒதுக்கி வைக்கவேண்டும். (கலந்துவிட்டால் ஏதாச்சும் புதுரகமான துணி பிறந்துவிடும் என்று பயப்படுகிறார்களாக்கும்.)

4. ன்னும் தலித்துகளுக்கு கோவிலில் நுழையத் தடை, சமுதாயக் கூடங்களில் அனுமதி மறுப்பு (சமுதாயம் என்பது இங்கு தலித்தல்லாதவர்கள் மட்டும்தான் போலும்), தூய்மைக்கேடான வேலைகளை செய்யுமாறு பணித்தல், சுயமரியாதைக்கு பங்கம் நேரும் வகையில் ஒருமையில் விளிப்பது, தலித் பெண்களிடம் பாலியல் வக்கிரங்களை வெளிப்படுத்தத் துணிவது, தலித் சுடுகாடுகளை அல்லது அதற்கான பாதைகளை ஆக்கிரமித்துக் கொள்வது, ரேஷன் பொருட்கள் விற்பனையிலும் வினியோகத்திலும் பாரபட்சம், குடிநீர், சாலை, கழிப்பறை போன்ற அடிப்படைத் தேவைகளில் புறக்கணிப்பு, தெருக்களில் தோளில் துண்டு போட்டுக் கொண்டோ, செருப்பணிந்தோ சைக்கிளிலோ செல்லத் தடை என தீண்டாமையின் வடிவப் பட்டியல் நீள்கிறது. கடைசியாக வந்த இலவச டி.வி, கேஸ் அடுப்பு போன்றவைகூட தலித்துகளுக்கு கிடைத்துவிடாமல் தடுப்பதற்கு பல உள்ளடி வேலைகள் உண்டு.

5. பிற மாணவர்களை பிரம்பால் அடிக்கிற ஆசிரியர்கள், தலித் மாணவர்களை தடியால் அடிப்பதற்கு பதிலாக சிறு கற்களையும் மண்ணாங்கட்டிகளையும் கொண்டே அடித்ததாகவும், அடித்தால் தலித் மாணவன்மீது படும் பிரம்பின் முனைவழியாகத் தீட்டு பாய்ந்து மறுமுனை வழியாக தம்மைத் தாக்கிவிடுவதைத் தவிர்க்கவே இத்தகைய உத்தியை ஆசிரியர்கள் கையாண்டனர் என்று அம்பேத்கர் தன் பள்ளிப்பருவத்தை நினைவுகூர்வார். மதுரை மாவட்ட ஆசிரியர்கள் அம்பேத்கர் காலத்து ஆசிரியர்களிலிருந்து பெரிதாக மாறிவிடவில்லை. பிற மாணவர்களை விட்டு தலித் மாணவர்களை அடிக்கச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிரம்பு கொடுக்கும் ஆசிரியர்தான் இங்கு தீண்டாமையைக் கடந்தவர்.

இப்படி, ‘ஒக்காந்து யோசிப்பாங்களோ’ என்று மலைப்பு கொள்ளுமளவுக்கு விதவிதமான வகைகளில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைகளில் ஒன்றுதான் உத்தப்புரம் சுவர். இங்கு சுவர் மட்டுமே பிரச்னையல்ல. தமது குடியிருப்புக்கு அருகில் பேருந்து நிறுத்தம் ஒன்று வேண்டும் என்பது தலித்துகளின் கோரிக்கை. பேருந்து நிறுத்தம் அமைந்தால் நிழற்குடைக்குள்ளிருக்கும் இருக்கைகளில் தலித்துகள் அமர்ந்திருப்பதை காண நேரிடுமாம். இந்த அவமானத்தை சந்திக்காமல் இருப்பதற்காக பேருந்து நிறுத்தமே வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆதிக்கசாதிக் கும்பல்.

தலித்துகள் தலைச்சுமையோடு நடந்துபோய் பஸ் பிடிக்க வேண்டும். போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தப்புரம் பிள்ளைமார் சாதியினர்தான் சம்பளம் தருகிறார்கள் போலும். அவர்களும் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள் கப்சிப்பென்று. இங்குள்ள தலித் பகுதியிலுள்ள சாக்குடைக் குழாய்களுக்கு மேல் கட்டப்படும் சிறுபாலங்கள் ஆதிக்கசாதியினரால் உடைக்கப்பட்டு விடுகின்றன. அவற்றின் மீது தலித்துகள் உட்கார்ந்துவிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாததே காரணம்.

இன்னும் ஆண்டார் கொட்டாரம், தணியாமங்கலம் போன்ற கிராமங்களில் தபால்காரர் தலித்துகளுக்கு வரும் தபால்களை அவர்களது வீடுகளுக்குப் போய் வினியோகிப்பதில்லை என்ற தகவலும் தெரிய வந்தது. கிராமப்புற தபால்காரர், சித்தாள் வேலைக்குப் போகிற ஒரு தலித்தின் வருமானத்தை விடவும் குறைவாகவே ஊதியம் பெறுகிறவராயிருந்தாலும் அவருக்குள்ள சாதிக்கொழுப்பின் டிகிரி குறையாமல் இருக்கிறதை உணரமுடியும்.

சாதியுணர்வால் பீடிக்கப்பட்ட தனிமனிதர்களின் தொகுப்பைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள அரசு நிர்வாகமும் சாதிமயப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

மதுரை மாவட்டத்தில் நிலவக்கூடிய இப்படியான தீண்டாமைக் கொடுமைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக 2008 பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விவரங்களை வெளியிட்டது. மாவட்ட நிர்வாகம் மசிந்துவிடுமா அவ்வளவு சீக்கிரம்? இந்த கிராமங்களில் நிலவக்கூடிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மார்ச்-25 அன்று மதுரையில் எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடத்தி, உத்தாபுரம் சுவரை நிர்வாகம் இடிக்கவில்லையானால் நாங்களே இடிப்போம் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) தலைவர்கள் அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரைப்பகுதி விடுதலை சிறுத்தை மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டது வரவேற்கக்கூடிய அம்சம்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியானதின் தொடர்ச்சியாக அஸ்ஸாமிலிருந்து வெளியாகும் சென்டினல் என்ற பத்திரிகையும் உத்தப்புரம் சுவர் பிரச்னையை வெளியிட்டதாகவும் அச்செய்தி தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்தை ஈர்த்ததாகவும் தெரியவருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் சுவர் பற்றிய விளக்கத்தைக் கோரி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தினமலர் நாளிதழ் (2008 மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளது.

சுவர் நீடிக்கக்கூடாது என்ற உணர்வு தலித்துகளிடம் ஒரு கொதிநிலையை எட்டிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவர்களின் கோயில் திருவிழா வந்துவிட்டது. தலித்துகளின் வீட்டு விசேஷங்களுக்கு தோரணம், வரவேற்பு வளைவு, அலங்காரம் செய்வது, வெடி வெடிப்பது போன்றவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடைகள் கோயில் திருவிழாவுக்கும் பொருந்தும். சாமியாயிருந்தாலும் தலித்துகளின் சாமிகள் கொஞ்சம் அடக்கியேதான் வாசிக்கனும் போல. இதற்காக எந்த சாமியும் இதுவரையிலும் யார் கண்ணையும் குத்தவில்லை என்பது வேறுவிசயம்.


ஆனபோதும் சாதியாணவத்தின் குரூரச் சின்னமாய் நிற்கிற சுவரின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் பதற்றமடைந்த ஆதிக்கசாதியினர் (பெரும்பாலும் பிள்ளைமார் சாதி) சுவற்றுக்கு மேலே கம்பிகள் பொருத்தி மின்சாரம் பாய்ச்சி சுவற்றை மின்சார தடுப்பரணாக மாற்றியுள்ளனர். இந்த மின்திருட்டை எப்படி மின்சார வாரியம் அனுமதித்தது என்பதெல்லாம் இனிமேல் வெளியாக வேண்டிய உண்மைகள். (தபால்காரருக்கு சாதியுணர்வு இருக்கும்போது மின் ஊழியருக்கு இருக்கக்கூடாதா என்பதுகூட காரணமாயிருக்கலாம்). திருட்டு வேலை செய்தாவது அவர்கள் காப்பாற்றத் துடிப்பது சுவற்றை அல்ல, சாதியைத்தான் என்பதில் நமக்கொன்றும் குழப்பமில்லை.

மின் கம்பிகளுடன் சுவர் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி இந்து நாளிதழில் 17.04.08 வெளியான நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.நன்மாறன் 17.04.08 காலை தமிழக முதல்வரைச் சந்தித்து சுவற்றை அகற்ற அரசு முன்வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அன்றே சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார் (தீக்கதிர் 18.04.08).

18.04.08 அன்று உத்தப்புரத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமாகிய தோழர் பி.சம்பத் மற்றும் மதுரை மாவட்டத் தலைவர்கள் சென்று இருதரப்பையும் சந்தித்துள்ளனர்.சுவரை உடனடியாக அகற்றுவது, தலித்துகள் புழங்க முடியாதவாறு அடைக்கப்பட்டுள்ள எல்லா பொதுப்பாதைகளையும் திறப்பது, தலித் குடியிருப்புக்கு அருகாமையில் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஆகியவை குறித்து சுவர் எழுப்பியுள்ளவர்கள் பேசும்போது 1990ல் பதினெட்டுப்பட்டி (தமிழ்ச் சினிமாவில் வருகிற அதே பதினெட்டுப்பட்டிகள் தான்) கூட்டம் போட்டு, சுவர் எழுப்புவதற்கு ஒப்புதல் தெரிவித்து தலித்துகளிடம் முத்திரைத்தாளில் கையெழுத்தும் பெற்றுள்ளனர். ஒரு சட்டவிரோதக் காரியத்தை சட்டப்பூர்வமானதுபோல் செய்யத் துணிந்திருக்கின்றனர். இந்த முடிவு காவல்துறைக்கும் தெரிந்தே எடுக்கப்பட்டது என்கிற ஜம்பம் வேறு. இங்கிருக்கிற காவல்துறையினர் அந்தரலோகத்திலிருந்து அவதாரமெடுத்து வந்தவர்களா என்ன? அவர்களும் காக்கிச்சட்டைக்குள் இருக்கிற ஏதோவொரு சாதிக்காரர்தானே?

இந்த சுவரை இடித்தவுடனே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பிரிந்திருந்த இருதரப்பும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் என்றோ கல்யாணம் கருமாதிகளில் ஒருசேர கலப்பார்கள் என்றோ நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தீண்டாமை ஒரு குற்றம் என்று அரசியல் சட்டம் சொல்கிற ஒரு நாட்டில், தலித்துகளை ஒதுக்கி வைக்க என்னமும் செய்யலாம் என்கிற சாதியகங்காரத்தின் குறியீடாய் இருக்கிற அந்த சுவர் தகர்த்தெறியப்பட வேண்டும். அது நீடிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு நாகரீக சமூகத்திற்கான கனவும் விழைவும் களங்கப்படுகிறது.

சகமனிதர்பால் அன்பும் கருணையும் சகோதரத்துவமும் பொழிகிற உன்னதமான பண்பை நோக்கி நகர விரும்புகிறவர்களின் முன்னே மறித்து நிற்பது உத்தப்புரம் சுவர் மட்டுமல்ல என்றாலும் இந்தச் சுவர் இடித்தகற்றப்பட வேண்டும். நியாய சிந்தனையுள்ள ஒரு குடிமக்கள் தமது மனதுக்குள் மறித்து நிற்கும் சுவர்களைத் தகர்த்து வெளியே வந்து இப்போது எழுப்ப வேண்டிய முழக்கம் ‘உத்தப்புரம் சுவற்றை இடி. அல்லது இடிப்போம்...’
(புகைப்படம் நன்றி: 'தி ஹிந்து' நாளிதழ்)

- ஆதவன் தீட்சண்யா

கட்டுரை கீற்றில் இருந்து பதியப்பட்டது.

http://www.keetru.com/literature/essays/aadhavan_9.php

******
தொடர்புடைய மற்ற செய்திகள்.


Dalits face discrimination in southern Tamil Nadu

http://news.webindia123.com/news/articles/India/20080227/895128.html


The dividing wall remains but loses its electric sting
http://www.hindu.com/2008/04/18/stories/2008041860891700.htm

Struggles On Dalit Issues Continue
http://pd.cpim.org/2008/0309_pd/03092008_tn.htm

Dividing wall -Opinion http://www.thehindu.com/2008/04/21/stories/2008042155391002.htm

Friday, April 11, 2008

நீ எழுதப் போகும் தேர்வைத் தானடா அவனும் எழுதப் போறான் புண்ணாக்கு

ரம் குறைஞ்சுரும்...தரம் குறைஞ்சுரும்...இன்றுவரை இதுதான் இந்த நாயவாதிகளின்(நாய்களின்) கூவல்...

கல்லூரியில் நுழைந்த பின்தான் பட்டப்படிப்பிற்கான முறையான கல்வி/பாடம் ஆரம்பாமாகிறது சரியா?

எந்தப் புண்ணாக்கு கோட்டாவில் வந்தாலும் அங்கே அனைவருக்கும் ஒரே மாதிரிதான் பாடத்திட்டம் சரியா மண்டூகங்களே?

அங்கே..

நீ எழுதப்போகும் அதே கொஸ்டின் பேப்பரைத்தானடா அவனுக்கும் தரப்போகிறார்கள்.
அவன் எழுதும் விடையையும், அதே ஆசிரியர்கள்தானடா திருத்தப்போகிறார்கள்.

அப்படி ,இருக்கையில் என்ன புண்ணாக்கு தரம் குறையும் அவன் வாங்கும் டிகிரிக்கும் நீ வாங்கும் புண்ணாக்கு டிகிரிக்கும்?

போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு மட்டுமே கோட்டாவில் கொடுக்கப்படுகிறது. கல்வித் தேர்ச்சியில் சலுகை அல்ல. அதுவும் இந்த வாய்ப்பு அவனின் உரிமை , சலுகை அல்ல.

**

வர்ணாசிரம வழியில் மேல்-கீழ் பிரித்தபோது ஒன்றும் பேசாமல் பல நூறு ஆண்டுகாலம் சுக வாழ்வு வாழ்ந்த, இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கும் மனித உண்ணிகள் , இன்னும் பிறப்பின் வழி வரும் சமூக ஏற்றத் தாழ்வை ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் , அதே அளவுகோலில் உரிமை கொடுத்தால் , கேஸ்ட் பேஸ்டு ரிசர்வேசன் கூடாது என்கின்றனர்.

முதலில் கேஸ்டு பேஸ்டு வர்ணாசிரமத்தையும் பூணூலையும் தூக்கி எறிந்துவிட்டு சிறிதுகாலம் பீயள்ளுங்கள் அப்புறம் பேசுவோம் பொருளாதார பேஸ்டு ரிசர்வேசன்."Do not divide us" என்று கோட்டாவிற்கு கொடிபிடிப்பதற்கு முன் வர்ணாசிரமத்தையும், பார்ப்பனீயத்தையும் எதிர்த்து கொடிபிடியுங்கள். Divide என்பது அங்கேதான் ஆரம்பித்தது.

இட ஒதுக்கீடு: நாய்கள்தான் அப்படி நாமளுமா?
http://kalvetu.blogspot.com/2006/05/blog-post_23.html

The great OBC myth has been busted!
http://kalvetu.blogspot.com/2006/10/great-obc-myth-has-been-busted.html

The reservation debate
http://sify.com/news/fullcover.php?event_id=14206451

Wednesday, February 13, 2008

Gabbeh -வானவில்லின் வண்ணங்களை போர்த்தியவள் அல்லது பூக்களில் இருந்து பறிக்கப்பட்ட நிறங்களின் மீது தூங்குபவள்.

படங்களின் கதாபாத்திரங்களைவிட அவர்கள் வாழ்ந்த இடம் சொல்லும் வரலாறுகளை , அந்தக் கதாபாத்திரங்கள் அவர்களுடன் என்னையும் கைபிடித்து அழைத்துச் சென்று அறியக் காட்டிய தருணங்கள் சில முறை வாய்த்தது உண்டு. கனவில் பல சமயம் ஆகாயத்தில் பறப்பது போலவும் , வானவில்லின் மேல் உரசிச் செல்வது போலவும் கண்டது உண்டு. அந்தக் கனவுகள் இன்னும் தொடர்கிறது என்பது தனிக்கதை.வாழ்க்கையில் எப்போதாவது திட்டமிடாமல் சொர்க்கங்களுக்குள் நுழைவதும் உண்டு.அப்படி நடந்த நிகழ்வுகளை பதிந்ததுவும் இல்லை. Spring,Summer,Fall,Winter...and Spring (http://www.sonyclassics.com/spring/shell.html) பார்த்துவிட்டு அந்த ஏரியில் சில மணி நேரம் அந்த கதாபாத்திரங்களுடன் தங்கியது போல உணர்வு ஏற்பட்டது உண்டு.

வெறுமனே கதாபாத்திரங்களை சுட்டிக் கொண்டு இருக்காமல் , அந்த கதா பாத்திரங்களின் வழியாக, அவர்கள் வாழும் இடம்,வாழ்க்கை முதலியவற்றை, அவர்களுடன் நானும் ஒரு சக பயணியாக மாறி , அவர்கள் என் கை கோர்த்து அந்த உலகிற்கு என்னையும் அழைத்துச் செல்லும் போதுதான் அந்த திரைப்படம் என்னளவில் நல்ல அனுபவமாக அமைகிறது அல்லது ஒன்றிப் பார்க்க முடிகிறது. படம் பார்த்து முடிந்தவுடன் எதோ ஒரு அதிசிய உலகுக்கு சென்று , உடனேயே சடாரென்று தூக்கி எறியப்பட்டு நிச வாழ்விற்கு வந்தது போன்ற உணர்வை பல படங்கள் எனக்கு கொடுத்து உள்ளன.

Gabbeh - என்பது ஒரு கார்பெட் என்று எளிதாகச் சொல்லிவிட்டு விலகிச் செல்ல முடியாது. மனிதர்களின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்தும் , மலர்களின் வண்ணங்களை தன்மீது பூசிக் கொண்டும், வரலாற்றை தன்னுள் தேக்கி வைத்து இருக்கும் ஒரு அழகிய Persian rug தான் Gabbeh - என்பது .ஒரு rug தனது கதையைச் சொல்வது போல் பின்னப்பட்டிருக்கும் , இந்த படத்தில் வரும் அந்த அழகிய பெண்ணின் பெயரும் Gabbeh .

இந்த கதையும், இதில் நடித்தவர்களும், படம் பிடிக்கப்பட்ட இடத்தின் அழகை நெய்ய உதவும் நார்கள் போலத்தான் பயன்பட்டு இருகிறார்கள். வண்ணங்களே தங்களை முன்னிறுத்திக் கொள்கிறது. அழகும், வண்ணங்களின கலவையும் கிறங்கடிப்பவை. இயற்கை வண்ணங்களே இந்த படத்தின் நாயகர்கள்.

Nomadic Qashqai என்ற ஈரானிய பழங்குடியினரின் வாழ்க்கையில் முக்கிய அங்கம்தான் இந்த Gabbeh என்றழைக்கப்படும் கார்பெட் . ஒரு காலத்தில் பல மைல்கள் இடம் பெயருவது என்பது இவர்களுக்கு சர்வசாதரணம்.வெயில் காலங்களில் Shiraz வடக்குப் பகுதியிலும், குளிர்காலங்களில் தாழ்வான மற்றும் கதகதப்பான நிலங்களுக்கும் ( Persian Gulf- southwest of Shiraz) இடம் பெயர்ந்து கொண்டு இருந்தார்கள். இந்தப் பழங்குடியினரின் பின்னனியில் சொல்லப்படும் அழகான கதைதான் Gabbeh. இவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

பொறாமைப்படத்தக்க இயற்கைச் சூழலில், சிறிய ஓடையில் அமிழ்ந்து செல்லும் கார்பெட் (Rug) -ன் நீர்ப்பாதையில் படம் ஆரம்பிக்கிறது. அந்த நீரோடையையும், அதன் இயற்கைச் சூழலையும் காட்டிய வண்ணம் அருகில் உள்ள ஒரு குடிசையில் இருந்து வரும் இரண்டு முதியவர்களின் அறிமுகத்தோடு Gabbeh நமக்கும் அறிமுகமாகிறது. Gabbeh என்பதே Persian rug . இங்கே அதன் வழியாக வரும் கதையின் நாயகியின் பெயரும் Gabbeh.

Gabbeh(rug) யார் அன்று நீரில் அலசுவது ? என்ற சின்ன விவாதங்களில் அந்த முதியவர்களின் பரஸ்பர அன்பும், அவர்கள் அந்த Gabbeh(rug) வின் மேல் கொண்ட அன்பும் (?) நமக்கு புரியவைக்கப்படுகிறது. Gabbeh(rug) இல் இடம் பெற்றிருக்கும் குதிரைமேல் செல்லும் இரண்டு சின்ன உருவங்களை நோக்கி , அந்த முதிய பெண் பேசுவது போல காட்சிகள் நகர ஆரம்பிக்கின்றன. முதிய பெண் அணிந்திருக்கும் நீல நிற உடை அந்த Gabbeh(rug) இன் வண்ணத்தை ஒத்து இருக்கிறது. அது ஏன் என்று நாம் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, Gabbeh (Shaghayeh Djodat) என்ற அந்த அழகிய பெண்ணின் அறிமுகம்.

அவள் தன் கதையைச் சொல்லத் தொடங்குகிறாள். ஒநாயின் ஒலியின் வழியாகவே காதலன் அறிமுகப்படுத்தப்படுகிறான். எங்கோ ஒரு நிழலாக , ஒரு குதிரையின் மீது வரும் இந்த வாலிபன்தான் Gabbeh (Girl) -ன் உள்ளம் கவர்ந்த காதலன். ஓநாயின் ஒலியே இவர்களுக்கு இடையே இருக்கும் சங்கேத ஒலி. இவள் செல்லும் இடமெல்லாம் அவன் பின் தொடர்கிறான்.

இவர்களின் காதலை Gabbeh (Girl) அப்பா அங்கீகரித்தாலும், குடும்பத்தில் இருக்கும் 57 வயது uncle க்கு மணமான பின்னர்தான் இவளுக்கு திருமணம் என்றும் , அதை மீறினால் சுட்டுவிடுவதாகவும் சொல்லியுள்ளதால், அந்த ஓநாய் ஒலிக்கு இவளின் சிறு புன்னகையே பதிலாக இருக்கும். இவள் செல்லும் இடம் எல்லாம் அவன் வருகிறான் . படத்தின் இறுதிக்காட்சிகளில் இவள் , அவனைபோல சத்தமெழுப்ப முயற்சித்து விட்டுவிடுவது , இவள் சொல்ல நினைப்பதை சொல்லாமல் சொல்லும்.

இவளின் வழியாக காதல் கதையைச் சொல்லிக் கொண்டு போகும் போதே, நமக்கு இயற்கையையும் அதன் வண்ணங்களையும் 57 வயது உள்ள முதியவராக(Abbas Sayah ) வரும் கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர். இந்த uncle இன்னும் மணமுடிக்காத , மணம் முடிக்க பெண்ணைத் தேடிக் கொண்டிருக்கும் சுவராசியமான ஆள். இவர் அறிமுகம் ஆகும் இடம் நமக்கு வண்ணங்களை அறிமுகப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு வண்ணங்களைச் சொல்லிக் கொடுக்கும் இடமும், அந்த குழந்தைகள் ஆட்டின் கழுத்தில் கட்டி இருக்கும் மணியையே பள்ளிக்கு நேரம் அறிவிக்கப்பயன்படுத்துவதும் அழகை அழகாய்ச் சொல்லும் இடங்கள்.

இந்த uncle வழியாக Gabbeh(rug) தயாரிக்கப்படும் விதத்தை கவிதையாச் சொல்லி இருக்கிறார்கள் படத்தில். இயற்கையின் மலர்களில் இருந்து வண்ணம் எடுத்து , கொதிக்கவைத்து, wool க்கு வண்ணம் ஏற்றப்படும் காட்சிகளும், Gabbeh(rug) நெய்யப்படும் காட்சிகளும் படத்தின் பின்னனியை ஆக்ரமித்து நம்முடன் வந்து கொண்டே இருக்கும். ஒரு நீரோடையின் அருகில் , கவிதை பாடும் பெண்ணைக் கனவில் கண்டு , அவளைத் தேடி அலையும் uncle , ஒரு வழியாக அத்தகைய பெண்ணைக் கண்டு பிடிக்கிறார். அந்த இடத்தில் அவர்சொல்லும் கவிதைகள் எளிமையானவை இனிமையானவை.

இந்த நிகழ்வுகள் எல்லாம், Gabbeh (Girl) , முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட முதியவர்களுக்குச் சொல்லும் வண்ணமே கதை இயங்குகிறது. படம் முழுக்க ஈரானிய பாலைவனப் பகுதிகளையும் , மலர்களையும் நமக்கு யாராவது தந்து கொண்டே இருக்கிறார்கள். மலர்கள் இல்லாத , வண்ணங்கள் இல்லாத நிமிடம் கிடையாது.

57 வயது uncle க்கு மணம் ஆன பின்னாலும், தாயிற்கு பிறக்கப்போகும் குழந்தை மற்றும் பல காரணங்களால் Gabbeh (Girl) திருமணம் அவளின் தந்தையால் தள்ளிப்போடப்பட்டுக் கொண்டே இருப்பதில், அவள் பின்னால் அந்த குடும்பத்தைப் பிரிந்து, அந்த ஓநாய் ஒலி இளைஞனுடன் செல்லப் போவதற்கான காரணங்கள் கட்டமைக்கப்படுகிறது. தனது தாயால் தொடங்கப்பட்ட Gabbeh (rug) நெய்து முடித்தவுடன் மிகுந்த சந்தோசம் அடையும் uncle-ம் , அந்தப் பெண்ணின் காதலுக்கு ஆதரவாக மாறிவிடுகிறார்.

அடுத்த இடப் பெயர்வின் போது, தன்னைத் தொடரும் ஓநாய் ஒலி இளைஞனுடன் , அப்பாவிற்குத் தெரியாமல் சென்றுவிடுகிறாள் இவள். செல்லும் போது அவளுடன் எப்போதும் இருக்கும் ஒரு Gabbeh(rug) யையும் எடுத்துச்சொல்கிறாள். இந்த நிகழ்ச்சிக்கு முன்னே வரும் பாலைவன இரவுகள் கவிதையாய் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். குதிரையில் தப்பிச் செல்லும் இவர்களை, அப்பா உடனடியாகத் தேடிச் செல்வது நமக்கு , அந்த காதல் முடியப்போவதை உணர்த்தும்.

இரண்டு தோட்டாக்களின் சத்தத்தை அடுத்து, திரும்பி வரும் அப்பா, அவள் எடுத்துச் சென்ற rug -ஐ மட்டும் திரும்ப கொண்டுவருவார். அத்துடன் அந்த பாலைவனக் காட்சிகளும் , அந்த பழங்குடியினரின் கூட்டமும் மறைந்து, ஆரம்பித்த முதியவர்கள் இடத்திற்கு காட்சி மாறிவிடும்.

"அப்பா எங்களைக் கொல்லவில்லை, வேறு யாரும் இனிமேல் அவ்வாறு செய்யாவண்ணம் இருக்க சும்மா தோட்டாக்களை துப்பிவிட்டுச் சென்றுவிட்டார்" என்று Gabbeh (Girl) சொல்வதுடன் அந்த காதல் கதை முடியும்.

மறுபடியும், முதியவர்களிடம் வரும் கதை, அந்த முதியவர் ஒநாய் போல் கத்திக் கொண்டு அவரிடம் உள்ள Gabbeh(rug) ஐ அடித்துக் கொண்டு உனக்கு காதல் இல்லை என்று பேசுவது போல அமைக்கப்பட்டு இருக்கும்.


Gabbeh- Persian Movie இது டாக்குமெண்டரியாக , கார்பெட் (rug) துறை சார்ந்த நிதிஉதவியுடனும்,ஈரான் சுற்றுலா நோக்கிலும் எடுக்கப்பட்டது என்பது உபரித்தகவல்.

Gabbeh Script:
http://www.makhmalbaf.com/doc/gabbeh.doc

http://www.makhmalbaf.com/movies.php?m=7

IMDb- Gabbeh (1996)
http://www.imdb.com/title/tt0116384/

Gabbeh- Carpet
http://www.oldcarpet.com/gabbeh.htm

Spring,Summer,Fall,Winter...and Spring
http://naayakan.blogspot.com/2008/02/blog-post.html

Friday, February 08, 2008

வரும் வழியில் அந்த நீல நிற பூக்களைப் பார்த்தேன், நின்று நலம் விசாரிக்க முடியவில்லை

தி னமும் வரும் வழிதான். ஆனால் இன்று அதிசியமாய் அந்தப்பூக்களைப் பார்க்க நேர்ந்தது.சாலையின் நடுவே உள்ள மணல் திட்டுகளிலும், சாலையின் ஓரத்தில் உள்ள புதர்களிலும் நீல நிறப்பூக்கள். ஒரு வேளை அவை இன்றுதான் பூத்து இருக்கலாம். நாளையும் அது இருக்குமா என்று தெரியாது. வாகனத்தை மெதுவாக ஓட்டி , அதன் அழகை பார்க்கலாம் என்று நினைக்கையில் ,பின்னால் வந்தவரின் ஹாரன். திரும்பிக்கூட பார்க்காமல் அந்த பூக்களுக்கு விடை கொடுத்தேன். அவை நாளையும் இருக்குமா என்று தெரியாது.

வாழ்க்கை என்பது என்ன என்று தெரியாமலேயே வாழ்ந்து கொண்டு உள்ளேன்.

இப்படித்தான் நீண்ட தூர ஓட்டங்களின் போது நான் ஓடுவதும்,நிற்பதும் எனது கட்டுப்பாட்டில் இருந்தாலும், இலக்கை அடைய வேண்டும் என்ற வறட்டு குறிக்கோளில், சாலையோர மரங்களின் அடியில் நின்று போகும் சுகத்தை வலிய இழந்திருக்கிறேன்.

எல்லோரும்வென்று கீழிறங்கும் அருவியை பார்த்துக் கொண்டு இருந்த போது, இன்னும் சிறிது நேரத்தில் கீழே விழப்போவது தெரியாமல் அமைதியுடன் ,தொட்டுச்செல்லும் கரையைக் கடக்கும் நதியை பார்ப்பதில்தான் நேரம் செலவழித்தேன், நாயகராவிலும் ஒக்கனேகலிலும்.

பிடித்ததை தேர்ந்தெடுத்து வாழ்வது என்பது எல்லாக் கணங்களி்லும் வாய்ப்பதில்லை.

நாளை அந்தப் பூக்களை விசாரிக்க வேண்டும. எப்படி இருக்கிறீர்கள? என்று.

Monday, January 28, 2008

குடியரசுதின நிகழ்ச்சி சென்னை/டெல்லி

சென்னையில் சனவரி,26, 2008 இல் நடந்த குடியரசுதின நிகழ்ச்சி


1.அனைத்து பள்ளி /கல்லூரி குழந்தைகளும் பாரதியின் "ஒளி படைத்த கண்ணினாய் வா வா" என்றே ஒரே பாடலையே பின்னனியாகக் கொண்டு நடனமாடினார்கள். வேறு வேறு பாடல்களைக் கொண்டு நடனம் அமைத்து இருக்கலாம்.


2.தப்பாட்டம் ஆடிய குழு மட்டுமே , திண்டுக்கல் பகுதியில் இருந்து வந்தவர்கள், மற்ற அனைத்துப் பள்ளிகளும் சென்னை என்றுதான் நினைக்கிறேன்.


3. தஞ்சாவூர் கலை பண்பாட்டு மையம் - ஏற்பாடுசெய்திருந்த வெளி மாநிலத்தவரின் நடனங்கள் மிகச் சிறப்பாக இருந்தது. ஒரு வேளை , ஒரே பாடலை (ஒளி படைத்த கண்ணினாய் வா வா) கேட்டுக் கொண்டிருந்த போது இவர்கள் வந்து கலக்கிய கலக்கல் தனித்து தெரிந்து இருக்கலாம்.


அ.அஸ்ஸாம் மாநில குழு ஆடிய "பிகு" நடனம்

ஆ.நாகலாந்து குழு ஆடிய "டாரா" நடனம்

இ.ஒரிசா குழு ஆடிய "சம்பல்புரி" நடனம்

...உள்ளத்தை கொள்ளை கொண்டது.
நாகலாந்து ஒருமுறை சென்றுவர வேண்டும். மைய நீரோட்டத்தில் இல்லாத இவர்களின் வாழ்வியல் அறிய.


4.பார்வையாளர்கள் பகுதியில் , பொது மக்களை பொதிகை காட்டவில்லை. பொது மக்களையும் காட்டுவது நல்லது.


5.குடியரசு விழாவிலும் , பிரச்சார வாடையில் முதல்வர் படம் பொறித்த துறை சார் ஊர்திகள். முதல்வர் படங்களை தவிர்க்கலாம். மாற்றுக் கட்சியினரை நிச்சயம் இது கவராது.


6.எதிர்கட்சித்தலைவர் அல்லது மற்ற கட்சித் தலைவர்களைக் காணவில்லை. (தமிழர் பண்பாடு? ). யார் ஆட்சியில் வந்தாலும் இனிமேல் இது மாறப்போவது இல்லை என்றே நினைக்கிறேன். அரசியல் சாசன அடிப்படையில் அமைந்த கட்சிகளின் தலைவர்கள், குறைந்த பட்சம் குடியரசுதின நிகழ்சியில் ஒரே மேடையில் கலந்து கொள்வது நல்லது. மக்களுக்கு ஒரு நம்பிக்கையை தரலாம்.


7.பொதிகை தவிர யாரும் இதை ஒளிபரப்பினார்களா தெரியாது. பல தமிழ்ச்சேனல்களை மாற்றி மாற்றி பார்த்தேன். அந்த நேரத்தில் அனைவரும் சினிமா-கலைஞர்களிடம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.


புது டெல்லி சனவரி,26, 2008 இல் நடந்த குடியரசுதின நிகழ்ச்சி


1.எதிர்கட்சித் தலைவர் அத்வானி இருந்தது மகிழ்ச்சியைத் தந்தது. சேது,இராமர்,குஜராத் பிரச்சனைகள் எல்லாவற்றையும் தாண்டி தமிழகத் தலைவர்களிடம் இல்லாத ஒரு நல்ல பண்பு. ஒரு வேளை தமிழகத்தில் இந்தப் பண்பு இல்லாமல் போய்விட்டதால், சாதாரணமான ஒரு விசயம் கூட "நல்ல பண்பு" என்ற ரேஞ்சுக்குப் போய்விட்டதோ? :-(


2.தனியார் தொலைக்காட்சிகளில் "ஆஜ்தக்" மட்டுமே இந்த நிகழ்ச்சியை கவர் செய்து கொண்டு இருந்தது.


3 .நிகழ்ச்சி ஆரம்பம் முதல் முடியும்வரை,குடியரசுத் தலைவர் சிரித்து நான் பார்க்கவே இல்லை. இறுக்கத்துடனே இருந்தார் (அதுதான் இயல்போ?). இராணுவ அணிவகுப்பில் சல்யூட் எப்படி அவசியமோ, அது போல் குழந்தைகளின் நிகழ்ச்சியில், ஒரு சின்ன கைதட்டலாவது அவசியம். தேமே என்று இருப்பதுதான் இந்திய ஸ்டைலா? :-( .


4. பிரான்ஸ் அதிபர் ஆர்வத்துடனும் , மகிழ்ச்சியுடனும் காணப்பட்டார்.


5.துணை ஜனாதிபதி அன்சாரி மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.


6.பக்கத்தில் கவுடா இருந்த காரணத்தினால் என்னவோ, சோனியா ஒருவித இருக்கத்துடனே காணப்பட்டார்.



****
குறைந்த பட்சம், மாநில , மத்திய கொடியேற்ற நிகழ்ச்சிகளின் முதல் 10 நிமிடமாவது அனைத்து தொலைக்காட்சிகளாலும் காட்டப்ப்படவேண்டும் என்ற கட்டாயச் சட்டம் வந்தால் நல்லது. இல்லை என்றால் இது ஏதோ பக்கத்து ஊர் சமாச்சாரம்போல் , இவர்கள் சினிமா பின்னாலேயே குடியரைசைத் தேடுவார்கள்.



Wednesday, January 09, 2008

மதங்களின் மூத்திரச் சந்துகளின் வழியாக வரும் கோர்வையற்ற நாற்றம்

டவுளின் நம்பிக்கை பெயரில் சமுதாயத்தை இரண்டாப் பிரித்தால் வருவது இரண்டே இரண்டு பிரிவுகள்.

ஒன்று கடவுள் இருக்கிறார்- என்ற "நம்பிக்கை" உடையவர்கள்.

மற்றொன்று கடவுள் இல்லை- என்ற "நம்பிக்கை" உடையவர்கள். ஆக, இரண்டு குழுவுமே தாங்கள் சரியென்று நம்பும் ஒரு கருத்தின் நம்பிக்கையாளர்கள்.எப்படி "கடவுள் இல்லை" என்று நம்புவர்களின் பேச்சும், செயலும் "கடவுள் உள்ளார்" என்று நம்புவர்களை புண்படுத்துகிறதோ அதுபோலவே, ஆன்மீகம் அல்லது மதம் என்ற பெயரில், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் பேச்சு,எழுத்து,செயல்கள்,கூச்சல்கள் எல்லாம் கடவுள் இல்லை என்று நம்புபவர்களின் நம்பிக்கையை காயப்படுத்துகிறது.

பெரும்பான்மையினர் கடவுள் இருக்கிறார் என்று நம்புவதால், கடவுள் இல்லை என்று நம்புபவர்களின் மனம் புண்பட்டாலும் மருந்துபோட சட்டங்கள் இல்லை.

கடவுளை விமர்சித்து எழுதப்படும் எழுத்துக்கள், பேச்சுகள் எப்படி "கடவுள் இருக்கிறார் என்று நம்புபவர்களின்" மனதைப் புண்படுத்துகிறதோ அது போலவே, பக்திப் பாடல்களும்,பத்தி இலக்கியங்களும், புராணங்களும் "கடவுள் இல்லை என்று நம்புபவ்ர்களின்" மனத்தையும் புண்படுத்துகிறது.ஆனால், இதை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.பெரும்பான்மை அரசியல் என்பது இதுதான்.


அவர்கள் ("கடவுள் இருக்கிறர்" என்ற "நம்பிக்கை" உடையவர்கள்) உன்னைக் ("கடவுள் இல்லை" என்ற "நம்பிக்கை" உடையவர்களை) குட்டினால் வரும் 'வலி'க்கு நீ அழுகக்கூடாது, அதே சமயம் நீ அவர்களைக் குட்டினால் வரும் 'வலி'க்கு அவர்கள் அழுகலாம், ஆர்ப்பாட்டம் செய்யலாம்,அதற்கும் மேலாக அரசாங்கத்தால் அவர்களுக்கு மருந்தும் தடவப்படும். போனசாக, உன்னை மத நம்பிக்கையைப் புண்படுத்திய காரணத்திற்காக சிறையில் தள்ள சட்டமும் உண்டு.

அடிபட்டவன் அழுவதற்கு உரிமை வேண்டும் என்று கேட்பதே கேவலமாக உள்ளது. கருத்துக்களை சொல்வதற்கும், சொல்லப்பட்ட கருத்துக்களின் மீது விமர்சனமாக மற்றொருவர் அவரின் பார்வையை பதிவு செய்வதற்கும் முழுச் சுதந்திரம் இருக்க வேண்டும். எந்த ஒரு மனிதனுக்கும் தான் நம்பும் விசயங்கள்தாண்டி , மாற்றுப் பார்வையில் எளிதாக சிந்திக்க முடியாது. அதற்கு நிறைய பக்குவமும் , மன முதிர்ச்சியும் வேண்டும். பல நேரங்களில் கருத்துக்களை சொல்ல முடியாமல் (சமுதாயத்தில் வாழ்வியல் காரணங்களுக்காக) சில சமயம் ஊமையாய் வேடம் போட வேண்டியுள்ளது.

உலகம் தட்டையானது என்று நம்பிக்கொண்டிருந்த பழமைவாதிகளின் கற்பனையை உடைக்க அந்தக் காலத்தில் எவ்வளவு சிரமங்கள் இருந்ததோ, அதே அளவிற்கு சற்றும் குறையாமல் இப்போதும் பழமைவாதிகளின் எதிர்ப்பு எல்லா விசயங்களிலும் இருக்கிறது. நீராவி எஞ்சின் கண்டுபிடிக்கப்பட்டபோது அதைப் "பேய்" என்றவர்களும் உண்டு.அறிவியலும், வரலாறும் எப்போதும் கடவுள்/மதம் சார்ந்த நம்பிக்கைகளை எதிர் நீச்சல் போட்டே வளர்ந்து இருக்கிறது. அது இன்னும் வளரும் அவர்களை எதிர்த்து. சூரியன் ஒரு நட்சத்திரம் என்று அறிவியல் சொன்னால், சூரியன் ஒரு கிரகம் என்று மற்ற நம்பிக்கைகள் சொல்லலாம் ஆனால் இரண்டும் ஒன்றாகாது.

எல்லா மதங்களிலும் கடவுள் நம்பிக்கையைத் தாண்டி, சடங்குகளும் புனிதப்புத்தகங்களின் புனைவுகளுமே பிரதான இடம் வகிக்கிறது. அந்தப் புனிதத்தன்மையில் மயங்கியே இருக்க மக்களும் விரும்புகிறார்கள். கடவுளர்களின் /மத குருக்களின்/ அவதாரங்களின் புனிதத்தை உடைத்து "அவர்களும் குசு விடுவார்கள்" என்று சாதரணமனிதனால் நம்பமுடியவில்லை. கடவுளர் அவதாரங்களின்/மத குருக்களின் கற்பனைகளை சிலாகிக்கும் இவர்கள், அவர்களும் கக்கூஸ் போனார்கள், கையால் கழுவினார்கள் என்ற சராசரி உண்மைகளை சிந்திக்க அஞ்சுகிறார்கள்.

அவதாரங்களும் ஆய் போவார்கள்!

கதாநாயகன் ஒரே அடியில் 10 பேரை சாய்ப்பது புனைவு என்று அறிந்து அதனை இரசிப்பது பிரச்சனையில்லை.ஆனால், அதன் புனைவுத்தன்மையில் மயங்கி, தன்னை மறந்து இரசிகர் மன்றம் வைப்பது வரை போவது என்பது, சுய புத்தியை இழந்தவர்களின் செயல். அது போலத்தான் மத நம்பிக்கையாளர்களும்.

மனிதர்களில் பெரும்பாலானவர்கள் புனைவுத்தன்மையில் மயங்கியே இருக்க விரும்புகிறபடியால் தங்களை, கேள்வி கேட்க முடியாத ஒரு புனிதத்திற்கு ஒப்புக்கொடுகக வரிசையில் நிற்கிறார்கள். இவர்களால் ஒப்புக்கொடுக்கமுடிய்யாமல் நிற்க முடியாது.

வெற்றிடத்தில் நிற்கப்பயந்தவனுக்கு எப்போதும் சாய்ந்துகொள்ள ஒரு சுவர் வேண்டும்.மதம்/கடவுள் நம்பிக்கைகள் களைப்புற்ற ஒருவனுக்கு சாய்ந்துகொள்ள உதவும் ஒரு குட்டிசுவராக இருக்கலாம்.எல்லாம் இழந்த ஒருவனுக்கு அந்த கணத்தில் சாய்ந்து கொள்ள மத/தெய்வம் ஒரு குட்டிச்சுவராக இருந்தால் அதனால் சமூகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனால் அந்தச் சுவர், அவனுக்கு கண நேர ஓய்வு தந்தது என்பதற்காக அங்கேயே தங்கி விடுவதும் , அது சார்ந்த கதைகளைப் மேலும் மேலும் புனைவதும் சமூகத்திற்கு நல்லதல்ல. களைப்பு நீங்கியவுடன் குட்டிச்சுவரை விட்டு விலகி நடக்கத் தெரிந்து இருக்க வேண்டும். ஆனால், மதவாதிகள்/மதப்பிரியர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு குட்டிச் சுவரைப் பிடித்து, தொங்கிக்கொண்டு இருக்கவே விரும்புகிறார்கள்.

இதில் யாருடைய குட்டிச்சுவர் தரமானது என்று நீள,அகல .உயர வேறுபாடுகள் குறித்து சண்டைகள் வேறு.மத/சாதி அடையாளங்களைத் துறந்தால் இவர்களிடம் ஏதும் இல்லை.தனக்கென்று ஒரு அடையாளம் உருவாக்கத் தெரியாதவன் பிறர் ஏற்படுத்திய அடையாளங்களில் ஒழிந்து கொள்கிறான்.அதுவே அவனின் கேள்வி கேட்கும் திறனை இழக்கச் செய்கிறது.

நான் அறிந்த வரையில் உலகில் 90 சதவீதத்து மேலான மக்கள் ஏதோ ஒரு மதம் சார்ந்த தெய்வ நம்பிக்கை உடையவர்களாகவே இருக்கிறார்கள். இந்தியாவை மட்டும் எடுத்துக் கொண்டால், தெய்வ நம்பிக்கை அற்றவர்கள் 1% கூட இருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். 99% தெய்வ நம்பிக்கை உடைய இந்த நாடு எப்படி இருக்கவேண்டும்? இவர்களின் தெய்வமும் , அந்த நம்பிக்கையும் , அது சார்ந்த விசயங்களாலும் நாட்டிற்கு ஏதாவது பயன் உண்டா? ஒருவன் தெய்வ நம்பிக்கை உடையவன் என்பதற்காக அவன் ரோட்டில் குப்பை போடாமலோ அல்லது சமுதாயக் குற்றங்களில் ஈடுபடாமலோ இல்லை. அய்யப்ப சாமிக்கு மாலை போட்டவனும், சிலுவையை கழுத்தில் தொங்கவிட்டவனும், தொப்பி போட்டவனும் , அவன் நம்பும் மத அடையாளங்களைத் தாங்கி இருப்பதற்காக ரோட்டின் ஓரத்தில் ஒண்ணுக்குப்போக தயங்குவதே இல்லை.

எந்த மதமும் நல்ல குடிமகனை உருவாக்குவதை குறிக்கோளாகக் கொண்டது இல்லை. நல்ல மதவாதியை மட்டுமே உருவாக்குகின்றன. ஒரு நாட்டிற்குத் தேவை நல்ல குடிமகன்களே தவிர , மதவாதிகள் அல்ல. மதங்களின் பின்னால் அணிவகுப்பவர் யாரும் நல்ல மனிதராக இருக்கவே முடியாது.ஒரு மதத்தை சார்ந்தவன் அடுத்த மதத்தை "சகித்துக்"கொள்ளமுடியுமே தவிர போற்ற முடியாது. மதங்களுக்கு இடையே "சகிப்புத்தன்மை" என்பதே, பிடிக்காத ஒன்றை அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றை "சகித்துக்கொள்" என்றுதான் அர்த்தம் வரும். சகித்துக்கொள் என்பது , சுயமிழத்தல் என்பதாகும். சாவும்,உயிரின் இருப்பும் ஒரே சமயத்தில் ஒரு உடலின் அடையாளமாக இருக்க முடியாது.

எந்த மதத்தையும் சாராமல் இருக்கும் போது சகிப்புத்தன்மை என்ற போலி ஓடிவிடும். மதங்களைப் பார்த்து நகைத்துவிட்டுப் போக நம்மால் சுலபமாக முடியும்.

கடவுள் நம்பிக்கை உடையவனும், நம்பிக்கை இல்லாதவனும் ரோட்டில் ஒண்ணுக்குப்போவதில் இருந்து கொலை செய்வதுவரை ஒரே மாதிரியாகவே இருக்கிறார்கள். கட்சிகளை மாற்றிக் கொள்ளும் அரசியல்வாதிகளைப்போல, இவர்கள் எந்தக் கூடாரத்தில் இருந்தாலும் அவர்களாகவே,அப்படியே இருக்கிறார்கள். 99 % மத நம்பிக்கையாளர்கள் உள்ள இந்த நாடு ஏன் இப்படிச் இலஞ்சம்,AIDS,Civic Sense போன்றவற்றில் சீரழிந்து கிடக்கிறது. மத நம்பிக்கை ஆசாமிகள் சாமி கும்பிடுவதன் முதல் காரணம் (அல்லது subtext ஆக உள்ள காரணம்)..."என்னைக் காப்பாற்று " என்பதே தவிர " நான் இன்று ட்ராபிக்கில் சரியானவிதிகளைக் கடைபிடிக்காவிட்டால் போலீஸ் வரும் வரை காத்திராமல் , நீயே எனக்கு தண்டனை வழங்கு" என்றோ "இன்று முழுக்க குப்பை போடாமல் இருக்க உதவு" என்றோ அல்லது எந்த ஒரு சமூகக் காரணிகளைக் குறித்தோ அல்ல.சிறைச்சாலைகளில் இருப்பவர்களும் 99% தெய்வ நம்பிக்கையாளர்களே.

சாமி கும்பிடுபவன் செய்யும் தவறுகளுக்கு சாமி பொறுப்பில்லை என்றால், உங்கள் சாமி எதற்குத்தான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார்?

மதம் சார்ந்த தவறுகள் அல்லது மதத்தை முன்னிலைப்படுத்தி நடக்கும் கொலைகள், அட்டூழியங்களுக்கு எல்லாம் யார் பொறுப்பு?

இவைகள் நடக்கும்போதெல்லாம் , மதவாதிகள் "இது தனிமனிதனின் அல்லது குழுவின் செயல்" என்று விலகிப் போய்விடுவார்கள். தனிமனிதனுக்கு சமுதாயத்தில் இணைந்து வாழும் அடிப்படை ஒழுங்கை/தகுதியைக்கூட கற்றுத்தராத மதம் என்ன மதம்? அதனால் என்ன பயன்?

மதங்கள் ஒரு அரசியல் கட்டமைப்பு. மதங்களில் நல்ல மதம் கெட்ட மதம் அல்லது சிறப்பான மதம் என்ற ஒன்றும் கிடையாது. பெண்களின் யோனி சுத்தமாக ,இரத்தப்போக்கு இல்லாமல் இருக்கிறதா என்று பார்க்கும் தெய்வ நம்பிக்கைகளை என்ன செய்வது? பூசாரியில் இருந்து கோவிலுக்குப்போகும் அனைவரும் குசுவிடவே செய்கிறார்கள். தெய்வம் இருக்கும் இடம் என்று யாரும் குசுவிடாமல் இருப்பது இல்லை.சிறுவயதில் எல்லாப் புனைவுகளும் , நம்பிக்கைகளும் ஆச்சர்யமாகவே இருக்கும். ஆனால் ஒரு காலத்தில் புனைவையும்,உண்மையையும் பகுத்தாராயத் தெரியவேண்டும். எத்தனை காலம்தான் குழந்தைகளாகவே நம்மை கற்பனை செய்துகொண்டு இன்னும் தவழ்ந்து கொண்டே இருப்பது? ஒரு நிலையில் நாம் நம்மைச் சுற்றியுள்ள விசயங்களை கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.நாம் வாழும் இந்தக் காலத்தில், நமது கண்முன்னால் நடக்கும் சிதைவுகளையும், திரிபுகளையும் எதிர்த்துக் கேள்வி கேட்கவிட்டாலும், எது புனைவு என்ற குறைந்தபட்ச புரிதலாவது இருக்க வேண்டும்.

கடவுள் இருக்கிறாரா? இல்லையா ?

இருந்துவிட்டுப் போகட்டும் அதனால் என்ன?

இவ்வளவு மதங்கள்/கடவுள்கள் இருந்தே இந்தியாவில் Civic Sense மற்றும் சமுதாயக் குற்றங்கள் இந்த இலட்சணத்தில் உள்ளது.இவர்கள் இல்லாவிட்டால் ஒன்றும் குறைந்துவிடப்போவதும் இல்லை.இவர்கள் இருப்பதினால் நான் வாழும் சமுதாயம் ஒன்றும் திருந்திவிடப் போவதும் இல்லை. எனவே, இவர்களின் இருப்பு குறித்தான கவலைகள் எனக்கு இல்லை.

என்னளவில் , மதம்/கடவுள் என்பது என்பது ஒரு சாதாரண பொழுது போக்குச்சாதனம். அது ஒரு குழு சார்ந்த entertainment அதைத்தாண்டி ஒன்றும் இல்லை.அதனை ஒட்டி கொண்டாடப்படும் விழாக்கள் அதுசார்ந்த கூட்டத்தை குஷிப்படுத்துகிறது. One-Way யில் போய்விட்டு அதற்கு பரிகாரம் செய்தால் சரி, வேறு தண்டனை எதுவும் வேண்டாம் என்று இவர்கள் சொல்லாத வரைக்கும்தான் நான் இங்கே வாழமுடியும் அதுவும் வந்துவிட்டால் காட்டிற்குள் போய்விட வேண்டியதுதான்.

ஒருவர் தன்னை மதப்பற்றாளராக அடையாளம் காண்பிக்கும்போது அவரிடம் மதம் பற்றிய நமது மாற்றுக் கருத்துக்களை அவராக நம்மிடம் கேட்டால் தவிர பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை.அதுவே சாதிக்கும். பூணூல் உடன் ஒருவன் அழையும்போது அவனிடம் போய் பார்ப்பனீயம் பற்றிப் பேசினால் ஒரு புண்ணியமும் இல்லை.

இவர்கள் நம்பிக்கையாளர்கள். தனது நம்பிக்கையை அடையாளமாக தெரிந்தே வெளியில் வெளிப்படுத்துகிறார்கள்.இவர்கள், தங்களின் நம்பிக்கையை தாங்கள் வரித்துக்கொண்ட அடையாளங்களால் தெளிவாக உங்களுக்குச் சொல்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை மதித்து விலகிப் போக வேண்டும்.விவாதிப்பது /உரையாடுவது நேர விரயம்.

குறைந்த பட்சம் தங்களின் நம்பிக்கையை தாங்களே கேள்விக்கு உட்படுத்தாதவர்களின் (மத/சாதி/அதிமுக வின் இரத்தின் இரத்தங்கள்/தி.மு.கவின் உடன் பிறப்புகள்/ரஜினியின் இரசிகர்/சுஜாதாவின் விசிறி.. etc.... போன்றோரின் நம்பிக்கைகள்) நம்பிக்கையை நேரடியாக அவர்களிடமே விவாதிப்பதால் ஒரு பயனும் இல்லை.
அவர்களின் நம்பிக்கை அவர்களை சந்தோசமாக வைத்து இருக்கிறதா?

பொழுதைப் போக்க உதவுகிறதா? விழாக்காலக் கொண்டாட்டங்களைத் தருகிறதா? அதுவே போதும் அவர்களுக்கு. அதன்மீது கேள்வி எழுப்புவது அவர்களையே அசைத்துவிடும் என்பதால், அப்படியே இருக்கவே விரும்புகிறார்கள்.

கடவுள் நம்பிக்கை மட்டும் அல்ல. அதீத இரசிகத்தன்மையால் தன்னை ஒரு அடையாளத்துக்கு ஒப்புக்கொடுத்த யாரும் இவ்வாறே செயல்படுகிறார்கள். ரஜினி இரசிகனாய் ஆன ஒருவன், ரஜினி என்ன சொன்னாலும் அல்லது என்ன நடித்தாலும் இரசிக்க வேண்டிய அல்லது ஆதரித்துப் பேசவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறான். அது போலவே அரசியல் கட்சிகளின் தொண்டர்களும், எழுத்தாளர்களின் வாசகர்களும்.

"ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது மந்தையிலிருந்து விலகி விடுகின்றன - கலீல் கிப்ரான்" (நன்றி : உருப்படாத நாரயண்)

மனிதன் கடவுளை அடைய, மதங்கள் தேவையாய் இருக்கலாம்.

ஆனால், கடவுள் மனிதனை வந்து அடைய,
மதங்கள் தேவை இல்லை.

நல்ல மனமே போதும்


மதங்கள் நிலைத்து இருக்க மனிதனின் உதவி தேவை. ஆனால்,ஒரு நல்ல சமூகப்பார்வையுள்ள மனிதனாக இருப்பதற்கு மதமோ அல்லது தெய்வத்தின் துணையோ தேவை இல்லை , அவசியமும் இல்லை.