Friday, December 31, 2010

அரசியல் - கொள்கை மற்றும் இலக்கு மாறலாமா?

சமரசங்களற்ற வாழ்வு சாத்தியமா? பகுதி-2

சென்றபதிவில் அரசியல் கட்சிகளின் இலக்கு (நோக்கம்) , கொள்கை மற்றும் அதை அடையும் வழிகள் பற்றிப் பார்த்தோம். ஒரு இயக்கம் தீர்க்கமான இலக்கையும், அதை அடையும் வழியாக சில கொள்கைகளையும் தீர்மானித்து, அதை பொதுவில் வெளியிட்டுவிடுகிறது என்று கொள்வோம். அதில் இணையும் ஒவ்வொரு தொண்டரும், இயக்கத்தின் கொள்கைகளைப் பார்த்து, இயக்கம் சென்றடையும் இலக்கைச் சரிபார்த்து, அது தங்களின் தனிப்பட்ட கொள்கை, இலக்கு , விருப்பு வெறுப்புகளுக்கு இயைந்து வரும் பட்சத்தில் மட்டுமே அதில் இணைகிறார்கள் என்று கொள்வோம்.


சில காலம் கழித்து இயக்கம் நிர்ணயத்த இலக்கை, ஏற்றுக்கொண்ட கொள்கையின் (அடையும் வழி) மூலம் சென்று அடையமுடியவில்லை என்று கொள்வோம். இப்போது என்ன செய்யலாம்?


 
1. இலக்கை அப்படியே வைத்துக் கொண்டு அதை அடையும் வழியை(கொள்கை) மாற்ற‌லாம்.
2. இயக்கத்தின் கொள்கையை அப்படியே வைத்துக் கொண்டு இலக்கை மாற்றலாம்.
3. அல்லது கொள்கை மற்றும் இலக்கு இரண்டையுமே மாற்றலாம்.
இதில் 1 தேர்ந்தெடுத்தால் அது சமரசம்.  2 மற்றும் மூன்றாவதைத் தேர்ந்தெடுத்தால் அது சமரசம் அல்ல அது முற்றிலும் புதிய இயக்கம். இதற்கு இலக்கும் கொள்கையும் புதியதாக நிர்ணயிக்கப்படவேண்டும். சமரசம் என்பதை  மட்டும் இங்கே பார்ப்போம்.

கொள்கையில் சமரசம்

இலக்கு மாறவில்லை ஆனால் அதை அடையும் வழிகளில் மாற்றம் செய்து கொள்வது சமரசம். என்னளவில் சமரசங்கள் செய்வது தவறு அல்ல. ஆனால் எந்த மாதிரி சமரசங்கள் செய்கிறோம் அல்லது யாருக்காக (எதன் பொருட்டு) சமரசம் செய்கிறோம் என்பதில்தான் சூட்சுமம் உள்ளது. அரசியல்வாதிகள் குடும்ப‌ சொத்து மற்றும் கழக கண்மனிகளின் காண்ட்ராக்ட் கொள்ளை போன்ற சுயநலக் காரணங்களுக்காக மட்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டு அவர்களின் இயக்கத்தின் கொள்கை இலக்கு (உதாரணம் ஈழம், காவிரி, முல்லைப்பெரியார், சேது சமுத்திரம்) போன்றவற்றில் தினம் ஒரு நிலை எடுப்பது அல்லது சும்மா இருப்பது அதாவது நாடக‌ம் போடுவது சுயநலம் சார்ந்த சமரசம். 

இது கேவலமான செயல். அதாவது கட்சி,இலக்கு, கொள்கை எல்லாவற்றையும் தனக்காக வளைத்துக்கொள்வது. இது போன்ற செயல்களை கட்சியின் தலைமை செய்யும்போதே கட்சித் தலைமையின் நோக்கம் அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது. தலைமையை ஒன்றும் செய்ய முடியாது. ஏன் என்றால் அவர்கள் தெளிவான சுயநலப் போக்கை எடுத்துவிட்டார்கள். அதன் உண்மையான தொண்டன் தான் இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதே சிந்திக்க வேண்டிய பிரச்சனை.

தான் ஏற்றுக் கொண்ட கொள்கைகள் இலக்கு போன்றவற்றில் இயக்கம் சீராக பயணிக்காத போது அதன் தொண்டன் என்ன செய்ய வேண்டும்?
  • தலைமையைக் கேள்வி கேட்க வேண்டும்.
  • இயக்கத்தில் எந்த ஒரு தொண்டனும் கேள்வி கேட்டு , அதற்கான பதிலைப் பெற ஒரு அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை இருக்க வேண்டும்.
  • தலைமை, கட்டாயப் பதில் அனுப்ப ஒரு காலக்கெடு இருக்க வேண்டும்.
  • தலைமை அனுப்பும் பதில் தனக்கு ஒத்து வருகிறது என்றால், தொண்டனும் தலைமையின் வழியில் சமாதன சமரசங்களை ஏற்றுக் கொள்ளலாம். அது அவனின் தனிப்பட்ட உரிமை.
  • அப்படிக் கேள்வி கேட்டு , அந்தப்பதில் தனது தனிப்பட்ட எண்ணங்கள் , கொள்கைகளுக்கு ஒத்துவராதபோது இயக்கத்தைவிட்டு வெளியேறுவதே சூடுசொரணை, தன்மானம் உள்ளவன் செய்யும் செயல்.
  • தனக்கு ஒத்துவராத செயல்களில் இயக்கம் ஈடுபடும்போது, தொண்டன் கேள்வி எழுப்ப வேண்டும். இயக்கத் தலைமை கொடுக்கும் பதில் தனக்கு ஏற்புடையதாக இல்லாத போது இயக்கத்தை விடுவதே நல்லது.

அரசியல் கட்சிகளின் தேர்தல்கால கூட்டணிகள்

தேர்தல்காலக் கூட்டணி என்பது "ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டணி செயல்பாடுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சேர்ந்து இருக்கும் ஒரு ஒப்பந்தம்". இந்த ஒப்பந்தம் கட்சியின் இலக்கை மாற்றுவதாக இருக்கக்கூடாது. ஆனால் இலக்கை அடையும் நடைமுறையில் உள்ள சிக்கல்களை போக்கிக்கொள்ளும் விதமாக, கொள்கையில் தற்காலிகச் சமரசமாக இருக்ககலாம்.

உதாரணத்திற்கு ஒரு இயக்கம் ஈழம், காவிரி, முல்லைப் பெரியார், சேது பிரச்சனைகளில் ஒரு தெளிவான நிலையை எடுத்து அதை அறிவித்து ,அதற்காக அதாவது அந்த தெளிவான அறிவிக்கப்பட்ட இலக்கை அடைய வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக அரசியல் கூட்டணிகளில் சமரசம் செய்துகொள்வது (சொந்த வாழ்வில் கேவலப்பட்டாவது பொது நலன்சார்ந்த இலக்கை அடைவது) பொதுநலன் சார்ந்த சமரசம். இதை வரவேற்கலாம்.

ஓட்டரசியலில் இது தவிர்க்க முடியாதது. :-((  பெரும்பான்மை இல்லாத போது எடுத்துக்கொண்ட பொது நலன்களுக்காக, அரசியலில் தேர்தல் நேர கூட்டணிகளின் அடைப்படை இதுதான். அல்லது இப்படித்தான் அரசியல் தேர்தல்கால கூட்டணிகள் இருக்க வேண்டும்.

தேர்தல்காலக்கூட்டணிகள் , கொள்கை அல்லது இலக்கில் ஒட்டுமொத்த சமரசம் அல்ல. இடைக்கால குறுக்குவழி.

அதாவது இலக்கை அடைய, கொள்கையில் வளைந்து கொடுப்பது. ஆனால் ஸ்பெக்டரம் ஊழல்போல ஊழல் இலக்கை அடைய தேர்தல் கூட்டணி அமைத்து ,துறை தேர்ந்தெடுத்து, கூட்டுக்கொள்ளை அடித்து மாட்டிக் கொண்டபின்பும்,  இந்தக் அரசியல் கட்சித் தொண்டர்கள் "அவன் செய்யவில்லையா ? அவன் மட்டும் ஒழுங்கா?" என்று எதிராட்டம் ஆடிக் கொண்டிருப்பது "கூமுட்டைகள் மட்டுமே அரசியல் கட்சியில் தொண்டனாக இருக்க முடியும்" என்பதையே நிரூபிக்கிறார்கள்.

 அல்லது தலைமையின் வழியில் இலக்கு கொள்கைகளை கழற்றிவிட்டு சுயநலவாதிகளாக அம்மணமாக இருக்க தொண்டர்களும் தயங்கவில்லை என்றே எடுத்துக் கொள்ளலாம். கட்சியில் சேர்ந்துவிட்ட கொடுமைக்காக கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு ஆட்டு மந்தைபோல கட்டுப்படுபவன் சுயசிந்தனை உள்ளவன் கிடையாது.

பொதுவாக அரசியல் கட்சி ஆட்டுமந்தைகளிடமும், மதவாதக் கும்பல்களுடனும் உரையாடல் நிகழ்த்தவே முடியாது. இவர்கள் மூளையை அடகு வைத்தவர்கள்.  சுயமாகப் பேசவோ அல்லது தான் ஏற்றுக்கொண்ட தலைமை,கொள்கையை பொதுவில் விமர்சிக்கவோ திராணியற்றவர்கள்.

உதாரணத்திற்கு எனது அனுபவம்

ஒருமுறை தமிழ்ச்செல்வன் என்ற பதிவரிடம் (http://satamilselvan.blogspot.com) வரதராஜன் என்பவரின் தனிப்பட்ட பாலியல் சார்ந்த குற்றச்சாட்டுகளை கட்சி ரீதியாக விசாரித்தது சம்பந்தமான கேள்விகளைக் கேட்டேன் (http://satamilselvan.blogspot.com/2010/03/2.html) அவர் எதற்கும் பதில் சொல்லாமல் பின்னூட்டங்களை குப்பையில் போட்டுவிட்டார். பதில் சொவது அவரது உரிமை என்றால்கூட , கட்டற்ற சுதந்திரமும் மாற்றுக்கருத்துகளும் புழங்கும் இணைய வெளியில் , மாற்றுக் கேள்விகளை வெளியிடக்கூட தயங்கும் இவரை பதிவராகக்கூட என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை  . :-((  

கட்சித் தொண்டராக இருப்பது அவர் நேர்ந்துகொண்டது மேலும் ரின் சுய தேர்வு

இந்த போலிச்சமூகத்தில் ஒரு ஆண் அல்லது பெண் மீது சொல்லப்படும் பாலியல் குற்றச்சாட்டு மிகவும் தாக்கங்கள் கொண்டது. "அழகி" கைது என்று சொல்வதும் ரஞ்சிதாவா என்று கேட்கப்படுவதிலும் அதிக ஆர்வமுள்ள சமுதாயம். இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில் வரதராஜன் போன்றோரின் பாலியல் சம்பந்தமான விசயங்களை குடும்பமும் அவரும் மனநலம்/குடும்பநலம் சம்பந்த துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களின் உதவியை நாடாமல் கட்சி கட்டப்பஞ்சாயத்து செய்ததை இன்னும் கண்டிக்காதவர்கள்தான்  இவர் போன்றவர்கள்.(தற்கொலையில் முடிந்த துயரச் சம்பவம்.)

இவர்கள் சொல்லும் காரணம் "ஒரு அமைப்பில் இருக்கும் போது (இருப்பது வரை) அதன் கட்டுப்பாடுகளுக்கு அடங்கி இருக்கத்தானே வேண்டியிருக்கிறது. வெளியில் பேசமுடியாது"

ஒரு அமைப்பு ஒரு தொண்டனின் உண்மையான உணர்வுகளைப் பேச தடைவிதிக்கிற‌து என்றால்..ஏன் அந்த அமைப்பில் இருக்க வேண்டும்? வரதராஜனும் இவரும் ஒரு கட்சியில் இருக்கிறார்கள் என்பதற்காக , பாலியல் குறித்த தனிமனித உணர்வுகளை நிலைப்பாடுகளைப் பேசக்கூடாதா?

எனக்கு புரியாதது....
1.கட்சிக் கொள்கைகளை படித்துவிட்டு, தானே விரும்பித்தானே கட்சியில் சேர்கிறார்கள்? இல்லை வம்சாவழி தீட்சையா?

2.வெளிப்படையாக இருக்கும் கட்சிக்கொள்கைகளில் முரண் தெரியும்போது, அதை ஏன் வெளிப்படையாகப் பேசக்கூடாது?

3.கட்சியில் இருப்பதாலே தன்னை ஒரு அடிமை போல எண்ணிக் கொள்பவர்கள், ஏன் சமூகம் பற்றி சுய கருத்தைச் சொல்லவேண்டும்?
இதே தமிழ்ச்செல்வன்தான் நித்யானந்தாவிற்கு பாலியல் சுதந்திரம் உண்டு என்றார். http://satamilselvan.blogspot.com/2010/03/blog-post_03.html
//பாலுணர்வு என்கிற இயற்கையான ஒன்று சாமியார் வேசம் போட்டதால் அவனுக்கு மறுக்கப்படுவது நியாயமல்ல. //
அதாவது, இவர் ஒரு சாமியாரின் பாலியல் சம்பந்தமான பிரச்சனையில் பொதுவில் பேசலாம் , கேள்வி கேட்க‌லாம்,கருத்துச் சொல்லலாம் ஆனால் , இவராக விரும்பி ஏற்றுள்ள கட்சியின் பாலியல் பஞ்யாசத்துக்களை இவரிடம் கேட்கக்கூடாது. என்ன கொடுமை இது? இது தொடர்பான மா.சிவக்குமாரின் பதிவில் நடந்த உரையாடல் http://masivakumar.blogspot.com/2010/04/blog-post_23.html

கட்சி என்ன இவர் சம்பள‌ம் வாங்கும் கம்பெனியா? மக்கள் அமைப்பு அல்லவா?
அதன் கொள்கைக்கும் செயல்பாட்டுக்கும் முரண்வரும்போது விளக்கம் அளிக்கவேண்டியது கடமை அல்லவா? இது ஒரு உதாரணம்தான். இது போல பல அரசியல் மொக்கைகளிடம் உரையாடி அவர்களிடம் பேச ஒன்றும் இல்லை (கட்சி அனுமதி இல்லையாம்) என்று விலகிவிட்டேன்.

என்னளவில் ஒரு நல்ல அரசியல்வாதியை (தலைமை மற்றும் தொண்டன்) இப்போது காணமுடியவில்லை. அரசியல் என்றால் என்ன என்றே தெரியாத வம்சாவளி தீட்சை பெற்றவர்கள்  தலைமையில் , நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகளைத் தொண்டர்களாகக் கொண்ட‌ கட்சிகளே உள்ளது. இதை சபிக்கப்பட்ட தமிழகத்தின் தலைவிதி என்றுகொள்வோம்.

சமரசங்களற்ற வாழ்வு சாத்தியமா? பகுதி-1
http://kalvetu.blogspot.com/2010/11/1.html

கட்சிக்கு நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகள்
http://kalvetu.blogspot.com/2010/11/blog-post_20.html


தனிமனித கொள்கைகளும் சமரசங்களும் (போரம்களில் சேர்வது, குழுகளில் சேர்வது,சமரசங்கள் செய்வது,வாழ்க்கை மற்றும் பிழைப்பு ) அடுத்த பதிவில்.......
 
Picture courtesy www.politicsofhealth.org

Wednesday, November 24, 2010

சமரசங்களற்ற வாழ்வு சாத்தியமா? பகுதி-1

கொ ள்கை என்றால் என்ன?

எதையும் தெரிந்து கொள்வதற்குமுன்  அதைத் தெரிந்து கொள்வதற்கான அவசியம் அல்லது  அக/புறத்தூண்டல் வேண்டும். எனவே முதலில், "கொள்கை" எதற்கு? என்று பார்த்து விடுவோம்.

 அதானே, எதற்கு கொள்கை?  எனக்கு "கொள்கை" என்ற ஒன்று தேவையாய் இருக்கும் பட்சத்தில் மட்டுமே நான் அதைப்பற்றி சிந்தனை செய்யவேண்டும்.  தேவையே இல்லாதபோது அல்லது எனது அன்றாட வாழ்விற்கு அதனால் பாதிப்பு இல்லாதபோது அதன் தேவை எதற்கு? அமேசான் காட்டில், ஏதோ ஒரு மூலையில் ஒரு பாம்பு ஒருவனைக் கடித்துவிட்டதென்றால் எனக்கு என்ன ?  அது பாட்டுக்கு நடக்கும். எனக்கு அதனால் சாதக/பாதகம் என்றால் மட்டுமே அல்லது குறைந்த பட்சம் அறிந்து கொள்ளும் ஆவல் இருந்தால் மட்டுமே , அமேசான் என்றால் என்ன? பாம்பு என்றால் என்ன ?அது ஏன் கடித்தது? என்று தேட முயல்வேன்.

ப்படி கொள்கை என்பது எதற்கு? அது எனக்குத் தேவையா? என்று சிந்தித்தால் மட்டுமே , அதை வைத்துக் கொள்ள எனக்கு ஒரு அவசியம் வரும். இங்கேதான் "இலக்கு" என்ற ஒன்று வருகிறது. மதுரைக்கு காலை 4 மணிக்குள் போக வேண்டும் என்பது இலக்கு என்றால், அதற்கான வழிகளை , சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, எப்படி? ஏன்? ஒரு குறிப்பிட்ட வழியில் மட்டும் போகவேண்டும் என்பது கொள்கையாக வந்து நிற்கும்.

இலக்கே அற்றவர்களுக்கு கொள்கை எனபது இருக்காது. அதுபோல ஒரே இலக்கை அடைய, ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான கொள்கை இருக்கும். ஆட்சியைப் பிடிப்பதே (மக்கள் சேவை என்று கொள்க) எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இலக்கு. ஆனால் அதை அடையும் வழி மற்றும் வியூகங்கள் எல்லாம் சேர்ந்து அவரவருக்கான தனித்துவம் வாய்ந்த கொள்கையாக வந்து நிற்கும்.

எனவே, இலக்கு என்ற ஒன்று தெரிவானவுடன் , அதை அடையும் வழிகள் அதை அடைவதற்கு தான் நம்பும் முறைகள் என்று எல்லாம் சேர்ந்து கொள்கையாக உருப்பெறும். இலக்கை ஒட்டியே கொள்கை என்பதால் அல்லது இலக்குக்கான கொள்கை என்பதால் , ஒரே மனிதருக்கு பல கொள்கைகள் இருக்கலாம். ஒரே கொள்கையை அவரின் எல்லா இலக்குக்கிற்கும் தூக்கிக்கொண்டு தர நிர்ணயம் செய்ய இயலாது. ஆனால் எல்லா இலக்கிற்கும் பொருந்தக்கூடிய சில பொதுவான கொள்கைகள் இருக்கும் / இருக்கலாம்.  சட்டத்திற்கு புறம்பாக நடப்பது தவறு என்பது உனது பொதுவான கொள்கையானல், 50 ரூபாய் டவுசர் த ரோபோ அனுமதிச் சீட்டை 500 ரூபாய்க்கு வாங்கிப் பார்ப்பதும் தவறு.  இது போன்ற மொக்கைகள் 10000000000000 கோடி ஊழல் நடந்துவிட்டது என்று புலம்பக்கூடாது. ஏன் என்றால், உனக்குத் தேவையானபோது நீ  500 ரூபாய் தவறு செய்கிறாய் மற்றவர்கள்.... விரலுக்குத்தகுந்த வீக்கம். அது போல குடித்துவிட்டு பைக் ஓட்டுபவர்கள், குடித்துவிட்டு லாரி மற்றும் பஸ் ட்ரைவர்களால் ஆபத்து அதிகம் என்று வருத்தப்பட யோக்கியதை இல்லை.  ஏன் என்றால் குடிந்துவிட்டு வாகனம் ஓட்டுவது தவறு என்பது உனது கொள்கையானால் , குவார்ட்டர் குடித்த நீ ஆட்டோவில் வர வேண்டும். அப்படியே ஒரு குவாட்டரைப் போட்டுவிட்டு பைக்கில் வீடு திரும்பக்கூடாது. அபப்டி வந்துவிட்டு நாடு சரியில்லை என்று பிதற்றக்கூடாது. உன்னைப்போன்ற வெளாங்காவெட்டிகள் இருக்கும் நாடு இப்படித்தான் இருக்கும்.


இலக்கும்  கொள்கையும் முடிவானவுடன், "கொள்கை"ப்படி இலக்கை அடைகிறோமா அல்லது இலக்கை அடைவதே கொள்கையாகமாறி சமரசங்களை ஏற்றுக் கொள்கிறோமா?


---------------------------

அரசியல் கட்சிகளின் இலக்கு மற்றும் கொள்கை

னது 12 ஆம் வகுப்பு முதல் கல்லூரி முடியும் வரை ஊரில் உள்ள எல்லா அரசியல் கட்சியிலும், நான் எனக்கே தெரியாமல் உறுப்பினராக இருந்துள்ளேன். எனது அண்னன், "எதற்கும் இருக்கட்டும்" என்று அவனின் அரசியல் நட்புகள் மூலம் எல்லா கட்சியிலும், எனக்கும் சேர்த்து உறுப்பினர் அட்டை வாங்கிவிடுவான். கேட்டால் "நாள‌ப்பின்ன கலெக்டர் ஆபிஸ், தாசில்தார் என்று ஏதாவது சர்டிபிகேட் வேண்டும் என்றால், கட்சிக்காரர்கள் உதவுவார்கள்." என்று விளக்கம் கொடுப்பான்.

யார் , எந்தக்கட்சி , அவர்களின் கொள்கை என்ன என்று ஏதும் தெரியாமலே நான் என் அண்ணனால் நேர்ந்துவிடப்பட்டு இருந்தேன். சிறுவயதில் காய்ச்சல் தலைவலி தாண்டி , பெரிய வியாதிகள் வந்தால், பிள்ளைக்கு மொட்டை போடுவதாக தாய்மார்கள் தாங்களாகவே நேர்ந்து கொள்வார்கள். அதுபோல இதுவும்.

ன்றும் பல கட்சிகளில் உறுப்பினர்களாக இருப்பவர்களிடம்,
  1. ந்தக் கட்சியின் கொள்கைகள் என்ன?
  2. தற்கு உட்பட்டே நீங்கள் உறுப்பினர்களாக ஆனீர்களா?
  3. றுப்பினர் ஆவதற்குமுன் கொள்கைகளையும் , இலக்கையும்  அலசி ஆராய்ந்தீர்களா?
  4. து உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, ஆசை, கொள்கை  மற்றும் இலக்கிற்கு ஏற்றதா?
  5. Why they exists as political party?  என்பதை ஆராய்ந்தீர்களா?
  6. ந்தக் கட்சி அறிவித்துக்கொண்ட இலக்கிலும், கொள்கையிலும்  தடம் மாறும்போது உங்களின் நிலை என்ன?
  7. நீங்கள் இன்று சேர்ந்துள்ள கட்சியுன் தலைமை , அவர்களின் சுய நலனுக்காக கூட்டணிகள் மாறும் போது கட்சியில் இருந்து வெளியில் வந்துவிடுவீர்களா? அல்லது நேர்ந்துவிடப்பட்ட ஆடுபோல கட்சி விசயத்தை வெளியில் பேசமாட்டேன் என்று இருப்பீர்களா?

இப்படியான கேள்விகள் கேட்டால் , "குஷ்பூவிற்கே தெரிந்த திராவிட வரலாறும், கொள்கையும் எங்களுக்குத் தெரியாதா?" என்பார்கள். எல்லாம் சரி, உங்கள் கட்சியின் முதல் பத்து முக்கிய கொள்கைகளைக் கூறுங்கள். மேலும், அந்தக் கொள்கையில் இதுவரை எவ்வளவு தூரம் வந்துள்ளீர்கள்? அதில் உங்கள் பங்கு என்ன என்றால்..."ஆங்.... பிரியாணி மற்றும் காண்ட்ராக்ட் கட்டிங்" என்றே சொல்கிறார்கள்.

கட்சியின் கொள்கை ,இலக்கு என்ன என்று தெரியாதவர்கள், எப்படி இலக்கை நோக்கி செல்லும் ஒரு தலைமையின் தொண்டராக அறிவித்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

சாதி, மதம் போல , வாழையடிவாழையாக காங்கிரஸ் குடும்பம், திமுக குடும்பம் ,கம்யூனிஸ்ட் குடும்பம் என்று ஞானஸ்தானம் செய்து நேர்ந்துவிடபட்டவர்கள் தான் அதிகம். ஒரு கட்சியில் சேர்வதற்கு முன் , அதன் கொள்கை, இலக்கு என்ன என்று கேட்டு , அது தனக்கு ஏற்றதா? அதன் செயல்திட்டங்களுக்கு எந்த அளவில் நாம் பங்காற்ற முடியும் என்று பார்த்து யாரும் உறுப்பினராவது இல்லை.  அப்படி இருந்தால், கட்சி எடுக்கும் எல்லா முடிவிற்கும் இவர்கள் கட்டுப்படாமல் கலகவாதியாய் மாறிவிடுவார்கள்.  மண்டையாட்டும் மக்கள் மட்டுமே கட்சி செய்யும் எல்லா ஊழல்களுக்கும் வியாக்யானம் கொடுத்துக் கொண்டு இருப்பார்கள். உட்கட்சி ஜனநாயகம் என்ற ஒன்று இருந்தால், இன்று இந்தியாவில் ஏறக்குறைய‌ எல்லாக் கட்சிகளிலும் மன்னர் பரம்பரை வாரிசு அரசியல் வந்து இருக்காது.

எனவே கொள்கை சார்ந்து யாரும் அரசியல் கட்சிகளில் உறுப்பினராவது இல்லை. எனக்கு என் அண்ணன் செய்தது போல ஏதாவது ஒரு பலனை எதிர்பார்த்து உறுப்பினராக இருக்கிறார்கள்.  சாதி, மதம் விசயத்தில் திமுகவின் கொள்கை என்ன என்று யாருக்காவது தெரியுமா? அப்படி ஒன்று இருந்தால், அதன் உறுப்பினர்கள் அனைவரும் அதைக் கடைபிடிக்க வேண்டுமே. கொள்கையைக் கடைபிடிக்காதவன் எப்படி உறுப்பினர் / தொண்டன் என்று சொல்லிக் கொள்ளமுடியும்?  ஆளுக்கு ஒரு வழி என்றால் why they exists as a member of a party?


.

Friday, November 19, 2010

கட்சிக்கு நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகள்

ரசியல்வாதிகள் எல்லாம் சாக்கடை, குப்பை என்று சொல்லுபவர்கள்,  கல்லூரிப்ப‌டிப்பு படித்த சில கனவான்களை 'அறிவாளிகள்' ,  'திறமைசாலிகள்' என்று எளிதாக நம்பிவிடுவார்கள். மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் பள்ளியில் இங்கிலீஸ் மீடியத்துல படித்தவர் என்பதற்காகவே அவரை அறிவாளியாகப் பார்த்தவர்கள் நம்மக்கள். ‌அந்த வகையில், மாண்புமிகு மன்மோகன்சிங்கும் ஒருவர். ஆளைப்பார்த்து 'நல்லவர்', 'நியாயவாதி', 'சே சே அப்படி எல்லாம் தப்புச் செய்யமாட்டார்' 'அறிவாளி'   என்றே நினைக்கப்பட்டவர்.

னது பார்வையில் மக்களின் தலைவராக இருக்க சில அடிப்படைத் தகுதிகள் , பண்புகள் வேண்டும் .பாடப்புத்தக கல்வி நிச்சயம் அந்த அடிப்படைத்தேவை இல்லை. காமரசர் நல்ல உதாரணம்.

ல்லவன் படித்தால் நல்லது செய்வான்.
திருடன் படித்தால் நூதனமாக திருட தன் கல்வியைப் பயன்படுத்திக்கொள்வான்.
அடிப்படையில் நீ யார்? நீ என்னவாய் இருக்கிறாய் என்பதே முக்கியம் . கல்வி "அந்த" உன் அடிப்படையில் இருந்து அடுத்த நிலைக்கு இட்டுச் செல்லும்.

நாய் கல்வி கற்றால், அழகாக எப்படிக் குரைக்கலாம் என்பதற்குத்தான் அந்த கல்வி பயன்படுமே தவிர, கல்லூரிப்படிப்பு கற்றுவிட்ட ஒரே காரணத்திற்காக அந்த நாய் இனிமேல் பேண்ட் சட்டை போட்டுத்தான் வெளியே வரும்,கம்பத்தைக் கண்டால் காலைத் தூக்காது என்று எதிர்பார்க்கக்கூடாது.

த்தி என்பது ஒரு ஆயுதம் அது சமையலுக்கு காய்வெட்டவும் பயன்படும் , அதே சமயம் தலையை வெட்டவும் பயன்படும். அதுபோலத்தான் கல்வியும். அது யாரிடம் உள்ளது என்பதைப் பொறுத்தே அதன்பயன்பாடு இருக்கும். பல நேரங்களில் "படிச்சவனா இப்படி?" என்று கேட்பார்கள். படிப்பிற்கும் "நீ யார்?" என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. படிப்பு என்பது,  நம்பர் "0" போன்றது. அதை "1" க்குப்பின்னால் போட்டால் "1" ஐ  -> பத்தாக்கும் , "5"  க்குப்பின்னால் போட்டல் "5" ஐ -> ஐம்பதாக்கும்.


சூட்சுமம் உன்னில் உள்ளதே தவிர கல்வியில் இல்லை.

மேலும் சொல்வதானால் கல்வி என்பது நீர் போல. கள்ளிச்செடிக்கு நீர் ஊற்றினால் அது மாங்காய் கொடுக்கப்போவது இல்லை.

The Radia Papers– Raja, Tata, Ambani connection
http://indiasreport.com/magazine/data/the-radia-papers-raja-tata-ambani-connection/

சந்திக்கு வந்த டாப் சீக்ரெட் - சட்டம் நம் கையில்.
http://lawforus.blogspot.com/2010/11/blog-post_313.html

Performance Audit Report on the by the Department of Telecommunications Ministry of Communications and Information Technology
http://www.scribd.com/doc/42774182/CAG-2GSpectrum-20101115

ன்னளவில் மதிபிற்குரிய மன்மோகன் அவர்கள்,  ஒரு குமாஸ்தாவாக இருக்கலாம். மற்றபடி மக்கள் தலைவராக இருக்க முடியாது. பல கோடி ரூபாய் கொடுத்தாலும் விண்ணப்பிக்காத‌  வேலைக்கு நான் போக மாட்டேன். அப்படியே ஒன்று வந்தாலும், அந்த வேலையில் எனது பங்கு, கடமை போன்றவை தெரிந்துதான் சேருவேன்.  அம்மா சொன்னார் , அப்பா கேட்டார் என்பதற்காக சும்மாகாச்சுக்கும் இருக்க நான் எதற்கு? டவுசர் த ரோபோவாக இருந்துவிட்டுப் போகலாமே?

இவர் இருக்கிறார் என்றால் ..அது ஏன்? என்ன அவசியம் என்ற கேள்வி வருகிறது. இவரைபற்றி நான் ஏற்கனவே எழுதிய சில.

நாரயணமூர்த்தி மன்மோகன்சிங் புனிதர்களா?
http://kalvetu.blogspot.com/2006/10/blog-post_09.html

மன்மோகன் சிங்கின் காமெடி..ஏம்பா லூசாப்பா நாங்க?
http://kalvetu.blogspot.com/2009/04/blog-post.html


தாரம் இல்லை அய்யா. உங்களுக்கு மனட்சாட்சி என்ற ஒன்று உண்டா? நாட்டை வன்புணர்ந்தவன் யாரென்று தெரியவில்லை. எங்களால் அடையாளம் காட்டமுடியவில்லை. நிரூபிக்க முடியவில்லை. ஆனால் நாங்கள் வன்புணரப்பட்டது என்னவோ உண்மை அய்யா.  அரசியல் புரிய ஆரம்பித்த நாளில் இருந்து எப்படியாவது , யாரவது நாட்டை வன்புணர்ந்து கொண்டுதான் உள்ளார்கள். போபார்ஸ் ஊழல், ஹர்சத் மேத்தா ஊழல், மாட்டுத்தீவன ஊழல், மருத்துவக் கல்லூரி பெர்மிசன் ஊழல்..இப்போது ஸ்பெட்ரம் ஊழல். என்ன செய்யலாம்? எங்களுக்கே வெக்கமாக உள்ளது.  எந்த நாட்டில் பிறக்க வேண்டும் என்பது எங்கள் முடிவு இல்லை.  பிறந்துவிட்டோம்.

ட்டா ,வரி சக‌லமும் சரியா உள்ள‌ உள்ள அக்மார்க் சுத்தகிரய வீட்டிற்கு , கக்கூஸ் இணைப்பு கொடுக்க முனிசிபாலிட்டிகளால் , எங்களின் டவுசர்வரை கிழிக்கப்படுகிறது. ஆனால் பலகோடி வியபாரச் சமாச்சாரங்கள் மிகச் சுலபமாக நடக்கிறது.  எப்பூடி இப்படி?


ங்கள் ஊரில் சைக்கிள் திருடி மாட்டினவன் , ஏட்டய்யாவின் ஒரு அதட்டலுக்கே டவுசரில் ஒன்னுக்குப்போவான். படித்த மேன்மக்கள் என்ன ஆனாலும் வெக்கப்பட்டதாகவே தெரியவில்லை. எப்பூடி இப்படி?

ம்பானி , டாட்டா போன்றவர்கள் பணம் செய்யும் மிசின்கள் அவர்களிடம் மக்கள் நலன் இல்லை என்று குற்றம்சாட்டுவது, ஆடு கசாப்புக்கடைக்காரனிடம் ஜீவகாருண்யம் இல்லை என்று சொல்வது போன்றது. அவர்களின் தொழில் பணம் செய்வது. ஒருமுறை ரத்தன் டாடாவின் பேட்டியைப் பார்த்து "கொஞ்சம் நல்லவரா இருக்காரே" என்று நினைத்தேன்.

Polyester Prince-The Real Story of Dhirubhai Ambani
http://www.scribd.com/doc/3924530/Polyester-PrinceThe-Real-Story-of-Dhirubhai-AmbaniBanned-in-India


சென்னையைத்தவிர எந்த மாவட்டத்திலும் அல்லது மாநிலத்திலும் ஒரு நாளைக்கூட தங்கி செலவழித்திராத மண்டூகங்கள், கட்சிக்கு நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகள், இன்னும் அதுஅதுகள் சார்ந்த கட்சிக்கு வக்கலாத்து வாங்கிக் கொண்டுள்ளது. எப்பூடி இப்படியெல்லாம்...? மூளையை எப்படி அடகு வைக்கிறீர்கள்?

சோ ற்றால் அடித்த பிண்டங்கள், அடுத்த தேர்தலில் யார் அதிக காசு கொடுப்பார்கள் ஓட்டுப்போடலாம் என்று இருக்கும். இவர்களுக்கு காசு கொடுப்பதற்காகவே அரசியல்வாதிகள் நிறைய தவறு செய்ய நேரும்போலத் தெரிகிறது. ( கலாச்சார கூமுட்டைகள் இதுக்கெல்லாம் வெட்கப்ப‌டுதுகளா என்று தெரியவில்லை. மதவாதிகளுக்கும் , கலாச்சார கூமுட்டைகளுக்கும் பொம்பளப்பிள்ளைகள் டவுசர் ஒழுங்காப்போடுதுகளா என்று பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கும் போல.)

பிழைத்திருப்பதற்கும் வாழ்வதற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்.


எதைப்படிப்பது எதைவிடுவது ?

Scam
 
http://news.outlookindia.com/item.aspx?701401

http://www.outlookindia.com/article.aspx?268064

http://www.outlookindia.com/article.aspx?268066

http://www.outlookindia.com/article.aspx?268068

http://www.outlookindia.com/article.aspx?268065




Monday, November 01, 2010

உங்களின் கனவுகளுக்கும் கற்பனைக்கும் எல்லையுண்டு

னவுகளுக்கு எல்லையில்லை. கனவுகாணுங்கள் இளைஞர்களே என்பது போன்ற கூக்குரல்களைக் கேட்டிருக்கலாம். ஆப்ரிக்காவின் அகண்ட காட்டுப்பகுதிகளில் நான் கேள்விப்பட்டிராத ஒரு இடம் ,செயல் , மக்களைப் பற்றி எனக்கு கனவு வ‌ந்ததே இல்லை.  கனவு என்பது காட்சி. அதற்கு ஒரு பிம்பம் வேண்டும். பிம்பத்தை கட்டமைக்க சில கட்டுமானப்பொருட்கள் வேண்டும். எங்காவது படித்த சில கதைகள் , செவிவழிக் கேட்ட கருத்துகள், கண்களால் கண்ட சில பிம்பங்கள் ...என்று ஏதாவது ஒன்று எனது மூளையின் டேட்டாபேஸில் இருந்தாக வேண்டும். அப்படி எனது மூளையில் இதுவரை புறவழி உணர்வுகளால் இன்னும் பதிவு செய்யப்படாத‌ ஒரு காட்சிப் பிம்பத்தை கனவாகக் காண்பது எனக்கு வாய்க்கவில்லை. உங்களுக்கு வாய்த்திருக்கிறதா?

சின்னவயதில் பேய்க்கனவு வாய்ப்பதற்கு முன் , பேய்க்கதைகள் என்னும் வடிவில் எனது மூளையில், பேய்க்கனவிற்கான கட்டுமானப் பொருட்கள் யார்மூலமோ ஏற்றப்பட்டு இருந்தது. அது இல்லாமல் பேய்க்கனவு சாத்தியமாகவில்லை.  "ஜகன் மோகினி" பார்த்தபின் பேய்க்கான ஒரு தெளிவான பிம்பம் விட்டலாச்சாரியின் தயவில் என் மூளையிள் வந்து உட்கார்ந்து கொண்டது.  அதற்குப்பின் வரும் பேய்கள் எல்லாம் சில காலம் "ஜகன் மோகினி"  பேய்களாகவே குட்டி குட்டியாக வெள்ளை டைட்சூட்டில் வந்தது.  இதுவே சில காலம் கழித்து அழகிய பெண்வடிவ மோகினியாக சேலை , மல்லிகை, வளையல்,கொலுசு  இத்யாதிகளுடன் அழகிய பேயாக மாறிவிட்டது.  ஒருவேளை ஆர்னிகா நாசர்  அல்லது ஜாவர் சீத்தாராமன் ?  கதை வழிவந்த உருவமோ? என்னமோ ஒன்று.  ஏதோ ஒரு புறவழி கதைகளால் என்னுள் பதியப்பட்ட‌  அழகிய பெண்வடிவ மோகினி அந்தக் கனவு பிம்பத்தை கட்டி எழுப்பியிருக்கிறது.

 கக்மக்சிக்பக்சிசுசா என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நான் கேள்விப்படவில்லை அதாவது அது எப்படி இருக்கும் என்ற காட்சியை யாரும் எனக்கு அறிமுகப்படுத்தவில்லை.  கக்மக்சிக்பக்சிசுசா என்று ஒரு கனவு வந்ததே இல்லை.  ஒருவேளை நாளை யாராவது ஒருவர் கக்மக்சிக்பக்சிசுசா கதை சொன்னால் நாளைய கனவில் அது வரலாம்.

கதைகளை மட்டுமே படித்த கதைபுத்தக வாசகர்கள் அதே கதை திரைப்படமாக வரும்போது மிகவும் ஏமாந்துவிடுவார்கள். கதையில் இருந்து திரைப்படத்தை உருவாக்கிய இயக்குனர், இவர்களின் கற்பனைகளை குலைத்து இருப்பார்.  ஒரு கதையில் வார்த்தைகளால் "அடர்ந்த காட்டில்  இருக்கும் அழகிய குளத்தின் அருகே இருக்கும் வீட்டில்... " என்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 

வாசகன்1:
அதிகபட்சம் கிராமக் தோப்புகளில் மட்டுமே சுற்றித்திரிந்த ஒருவன் காடு சம்பந்தமாக வேறு எதையும் தெரிந்து வைத்திருக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கதையைப்படிக்கும் அவன் "அடர்ந்த காடு" என்பதை அவன் அறிந்த கிராம தோப்புகளின் பிம்பததிற்கு உட்பட்டே கற்பனை செய்துகொள்ள முடியும். அவனால் அமேசான் காட்டினை இந்தக் கதையின் கற்பனைக்கு காட்சிப்படுத்திக் கொள்ளமுடியாது.
வாசகன்2:
வேடந்தாங்கல் மற்றும் டாப்சிலிப்ஸ் போன்ற காட்டுப்பகுதிகளைச் சுற்றிய ஒருவனுக்கு கதையாசிரியர் சொல்லும் "அடர்ந்த காடு"  என்பதை கற்பனை செய்துகொள்ள பல சாத்தியக்கூறுகள் உள்ளது. அவனால் மிகச்சிறந்த காட்டின் பிம்பத்தை கட்டிஎழுப்பி அதனில் கதையை நகர்த்த முடியும்.
வாசகன்3:
தமிழகத்தில் எழுதப்பட்ட கதை பெரு நாட்டில் வாசிக்கப்படும்போது அங்கே உள்ள ஒருவனுக்கு அமேசான் காட்டை "அடர்ந்த காடு"  என்பதற்கு இட்டு நிரப்பமுடியும்.

இயக்குனர்:
இந்தக் கதையால் கவரப்படும் ஈராக்கைச் சேர்ந்த ஒரு இயக்குனர் திரைப்படம் எடுக்கும்போது, அவரின் மண்சார்ந்த  பாலைவனச் சோலையை காடு என்பதாகக் காண்பிக்கிறார் / காட்சிப்படுத்துகிறார்.

முன்னரே பாலைவனச் சோலை பற்றிய அறிமுகம் இல்லாமல் , மேலே சொன்ன மூவரும் ஏமாற்றமாகிவிடுவார்கள். ஏன் என்றால் கதையைப் படிக்கும்போது  பாலைவனச் சோலையை அவர்களால் கற்பனைகூட செய்திருக்கமுடியாது.  அப்படியே தெரிந்து இருந்தாலும் கதையைப் படிக்கும்போது , அவர்கள் அவர்களின் வாழ்வோடு பொருந்திய / அறிமுகமான காட்டின் பிம்பத்தையே கதைக்காக எடுத்துக் கொள்வார்கள்.

அவர்களின் கற்பனையை மீறி திரைப்பட இயக்குனர் காட்சிப்படுத்தும்போது , "ஆகா இப்படியும் இருக்கலாம்" என்பதைமீறி , "நான் நினைத்ததுபோல இல்லையே" எனும்போது ஏமாற்றம் வருகிறது.

சரி அதை விடுங்கள். நீங்களே இந்தக் கதையின் வாசகன் என்று வைத்துக்கொள்ளுங்கள். கதைசொல்லி ""அடர்ந்த காட்டில்  இருக்கும் அழகிய குளத்தின் அருகே இருக்கும் வீட்டில்... " என்று சொல்லும்போது உங்களால் நீங்கள் இதுவரை அறிந்திராத ஒரு வீட்டை கற்பனை செய்யமுடியுமா? என்ன இருந்தாலும் உங்களுக்கு வீடு என்பதற்கான ஒரு அடிப்படை பிம்பம் ஏற்கனவே மனிதில் இருந்தாக வேண்டும்.

 பி ரச்சனைகளுக்கு எல்லாம் பெரிய பிரச்சனை நமது மூளையின் செயல்பாடு. எந்தப்புதிய தகவல் வந்தாலும் அதை ஏற்கனவே உள்ள ஒரு தகவல் கிடங்கில் அது இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்து அப்படி இருந்தால் அதனுடன் ஒப்பிட ஆரம்பித்துவிடும். அப்படி ஏதும் இல்லாவிட்டால், புதிய தகவல்களை அது எதிர்கொள்ளும்போது அது குறித்த சில விவரங்கள் மூளையில் புதிதாகப் பதிவாகிறது. பின்னாளில், அதுவே அடுத்து வரும் அது சார்ந்த தகவல்களை ஒப்பிடப் பயன்படுகிறது.

உங்களின் இன்றைய கனவு மற்றும் கற்பனையின் எல்லை, நீங்கள் நேற்றுவரை சேமித்த தகவல்களின் எல்லைக்கு உட்பட்டதே. புற உணர்வுகளால் ஏற்கனவே அறிமுகமாயிராத ஒன்றைப்பற்றி அகம் கனவுகாண முடியாது. அப்படி உங்களுக்கு நிகழ்ந்திருக்கிறதா? செவ்வாய் கிரகத்தில் உள்ள மனிதர்களின்(??) உருவங்களை இதுவரை புறவுணர்வுகளால் நீங்கள் அறிந்திராத ஒன்றாக கனவு காண , கற்பனை செய்ய முடிந்துள்ளதா?

உங்களின் புரிதலுக்கு அப்பால் அல்லது உங்களின் டேட்டாபேசை தாண்டிய தகவல்கள் உங்களை வந்து அடையும்போது அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?


Picture courtesy http://download-free-pictures.com

Thursday, October 28, 2010

கதை சொல்லிகளால் வரையப்படும் உங்கள் மனச்சித்திரங்கள்

வே கமாக ஓடிக்கொண்டிருந்தது அந்த இரண்டு மீன்கள். எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்ற வெறியில். பின்னால் ஒரு பெரிய சுறாமீன் போன்ற ஒன்று அதைப்பிடிக்க வந்து கொண்டிருந்தது. ஒருவழியாக எப்படியோ அந்த இரண்டு மீன்களும் தப்பிவிட்டன. நிம்மதியாக மூச்சுவிட்டாள் என் மகள்.

புதிதாக வந்துள்ள கரடிக்கு மீன் பிடிக்கவே தெரியவில்லை. அதனைச் சுற்றியுள்ள மற்ற கரடிகள் எல்லாம் சுலபமாக மீனைப்பிடித்துச் சாப்பிடும்போது இந்தக் கரடி மட்டும் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. எப்படியாவது ஒரு மீனைப் பிடித்து சாப்பிட்டுவிடாதா இந்தக் கரடி, என்று என் மகள் காத்து இருந்தாள். அவளின் முகத்தில் மகிழ்ச்சி. ஆம் ஒருவழியாக அந்தக்கரடி மீனைப் பிடித்துவிட்டது.

மீன் என்ற ஒரு உயிரி தப்ப வேண்டும் என்று Finding the Nemo வில் மீனின் வாழ்விற்காக காத்து இருக்கும் அதே மனம் , Brother Bear இல் வரும் கரடிக்கு மீன் உணவாக கிடைக்காதா என்று ஏங்குகிறது. எப்படி இது சாத்தியம்?

தை சொல்லிகள், ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் யார் பக்கம் இருக்க வேண்டும், யாருக்காக அழவேண்டும் என்பதை உங்களுக்காக அவர்கள் முடிவு செய்துவிடுவார்கள்.  கதை சொல்லியின் பார்வையின் வழியாகவே விரியும் காட்சிகள்,  உங்களின் மனதில் சித்திரங்களை வரையும். Brother Bear படத்தில் கரடி மீனைப்பிடித்து சாப்பிடும்போது "அய்யோ பாவம் மீன்" என்று சொல்லமுடியாத அளவிற்கு கரடியின் பசியின் நியாயம் முன்னரே உங்கள் மனதில் வரையப்பட்டு இருக்கும்.

ழத்தில் சாவு நிகழும்போது உங்கள் மனது வலிக்காத அளவிற்கு அதற்கு முன்னரே ஒரு கதையாடல் நிகழ்த்தப்பட்டு உங்களுக்கான சித்திரத்தை உங்கள் மனதில் வரைந்திருப்பார்கள் ஊடகங்கள். நீங்கள் மறந்தும் அழுதுவிடாத வண்ணம் கவனமாக கதையாடல் நடந்து இருக்கும். அதனால்தான் எந்த வெக்கமும் இல்லாமல் கிரிக்கெட்டை இலங்கையுடன் விளையாடவும் இரசிக்கவும் முடிகிறது உங்களால். கண்முன் நடந்த ஒன்றை நாம் வாழும் காலத்தில் நடந்த ஒன்றைப்பற்றி கொஞ்சமும் சிந்திக்கவிடாமல் உங்களைப் பண்படுத்தி ஊறுகாய் போட்டு இருப்பார்கள்.

யாருடைய பார்வையில் நீங்கள் இந்த உலகத்தைப் பார்க்கின்றீர்கள் என்பதைப் பொருத்தே உங்களுக்கான சார்பு நிலைகள் உண்டாகிறது. 

ம்பனின் பார்வையில் இராமயணத்தைப் படிக்கும்போது நிச்சயம் இராமன் சூப்பர்மேன்தான். ஏன் என்றால் இராமன் தான் கீரோ என்று முடிவு செய்து ஆரம்பிக்கப்பட்ட கதை அது.  இதே கதையை இலட்சுமணனின் மனைவியின் பார்வையில் காட்சிப்படுத்தினால் , அவள் கணவனைப் பிரிந்து வாழ்ந்த துயரம் அலசப்பட்டு , தன் கணவனைப் பிரித்த இராமன் ஒருவேளை வில்லனாக ஆக்கப்பட்டு  இருக்கலாம்.

பல கதையாடல்களால் குப்பையாக இருக்கும் கனவைக் கலைத்துவிட்டு,கதை சொல்லியின் பார்வையை கிழித்து எறிந்துவிட்டு, கதை சொல்லியை தூர நிறுத்திவிட்டு, உங்களுக்கான சித்திரத்தை நீங்களே தீட்டிக் கொள்ளும்போது ஆச்சர்யமான பக்கங்கள் தெரியவரும்.

அருந்ததிராய் பேசியுள்ளது அந்தவகைதான். தேச எழுச்சிப்பாடல்களிலும் , ஊடகங்களாலும் உங்கள் மனதில் வரையப்பட்டுள்ள பிம்பங்கள் நீங்கள் யாரை எதிரியாகப் பார்க்கவேண்டும் என்பதை புரோக்கிராம் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் கார்டுகள் போல ஏற்கனவே உங்கள் மனதில் பதித்துவிட்டன. அதை மாற்றி ஒருவன் தனக்கான‌ ஒரு ஓவியத்தை தன்னால் வரையமுடியாமல் போனதனால்தான் அருந்ததிராய் சொல்லும் எல்லாம் தேசவிரோதச் செயலாகத் தெரிகிறது.

கு ழந்தை பிறந்து வளரும் நாட்களில் அதற்கு மதம், சாதி, நாடு , இனம், எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பசி எடுத்தால் அம்மாவின் பால்வாசம் வீசும் முலையும், ஆய் வந்தால் அப்படியே போக வேண்டும் என்ற ஒன்றும்தான் தெரியும். அந்தக் குழந்தை வளர வளர , அது எந்தக்குடும்பத்தில் , நாட்டில் உள்ளதோ அதன் பழக்கவழக்கங்கள் சிறுகச் சிறுக நூதனக் கதையாடல்கள் மூலமாக அல்லது தன் குழந்தை என்ற ஒரே காரணத்தால் பிரயோகிக்கப்படும் சில அத்து மீறல்கள் , சடங்குகள் காரணமாக தனக்கான சித்திரத்தை அடுத்தவர்கள் மனதில் வரைய அனுமதிக்கிறது. இவ்வாறு திணிக்கப்பட்ட ஒன்றை , காலப்போக்கில் தான் தேர்ந்தெடுத்த ஒன்றாகவே நம்பவும் ஆரம்பித்துவிடும் அந்தக்குழந்தை.

 ஷிட் என்று சொல்வது நல்லது ஆனால் பீ என்று சொல்வது கெட்டது என்றுகூட உங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு இருக்கலாம். ஒரு நாளைக்கு பலமுறை "ஓ ஷிட்" என்று அங்கலாய்க்கும் டவுசர்பாலாஜிக்கள் "ஆ பீ" என்று சொல்ல மாட்டார்கள்.

எப்படி ஒரு வளர்ந்த குழந்தை டயப்பரைத் துறக்கிற‌தோ, அதுபோல குறைந்த பட்சம் ஒருவன் தனது 30 -  40 வயதுகளில் தன்மனதில் இதுவரை அடுத்தவர்களால் வரையப்பட்ட பிம்பங்களை, திணிக்கப்பட்ட சிந்தனைகளை தூர எறிந்துவிட்டு தனக்கான ஒன்றை கடும் தேடலுக்குப்பிறகு எடுத்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் செக்குமாட்டு வாழ்க்கையாகவே சாகும்வரை இருக்கும்.

பாக்சைட் தாதுவை விற்க பங்காளியைக் கொள்ளலாம். அவன் நிலத்தை அபகரிக்கலாம். அவனை சொந்த நாட்டில் அகதியாக்கலாம்.ஆனால் எவன் இந்த உண்மையைச் சொல்கிறானோ அவன் தேசத்துரோகி. தேசம் என்பதில் அவர்கள் இல்லையா?

அடுத்தவன் சொல்லும் கதையின் வழியாகவே நீங்கள் வாழ்க்கையில் சார்பு நிலைகளை எடுத்தால், உங்களுக்கான எதிரியையும் நண்பனையும் அவனே தீர்மானிக்கிறான். நீ என்ன சாப்பிட வேண்டும் , இந்த தீபாவளிக்கு என்ன ஜட்டி போட வேண்டும் என்பதைக்கூட‌  விளம்பரங்கள் என்ற ஹைக்கூ கதையாடல்மூலம் உன் மூளையில் திணிக்கிறார்கள்.

சுய சிந்தனையில்லாத உங்கள் மூளை எதற்கு? டவுசர் த ரோபோவாக இருந்துவிடலாமே?


India: Don't mine us out of existence: Bauxite mine and refinery devastate lives in India
http://www.amnesty.org/en/library/info/ASA20/001/2010/en

India is a corporate, Hindu state: Arundhati
http://ibnlive.in.com/news/india-is-a-corporate-hindu-state-arundhati/130817-3.html

India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா ?
http://kalvetu.blogspot.com/2007/02/india-inc-stinks-sez.html

There's a tribe in India that is getting pushed off its sacred mountain for a bauxite mine.
http://kalvetu.blogspot.com/2010/07/blog-post_08.html




Picture courtesy http://download-free-pictures.com

Tuesday, October 12, 2010

கலாச்சாரமும் பிரபலபதிவர் என்ற கூமுட்டைகளும்

லாச்சாரம் என்றால் என்ன என்று ஒருமுறை ஒரு பேராசியருக்கு பாடம் எடுக்கப்போய் அவர் அதில் இருந்து என்னிடம் இருந்து விலகிப்போய்விட்டார். நான் சொல்லும் பேராசிரியர் தமிழர் அல்ல வட இந்தியர் ஒருவர். கலாச்சாரம் என்பது எப்போதும் இறந்தகாலத்தைக் குறிக்கும்.  இறந்தகாலம் அல்லது கடந்தகாலம் என்பது எல்லை இல்லாதது. கி.பி என்று ஆரம்பித்து கடந்தகாலத்தை நோக்கிச் சென்றால் கிறித்துவின் பிறப்பில் நின்று அந்தர்பல்டி அடுத்து கி.மு என்றாகி எல்லையில்லாமல் விரியும்.

கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று புலம்பும் பெரிசுகளிடம் "எந்த காலகட்டத்திற்கான கலாச்சாரம் இப்போது இந்த ஆண்டில் கெட்டுவிட்டது?" என்று கேட்கலாம்.  ஒரு பேச்சுக்கு கண்ணகி காலத்தில் இருந்ததே அக்மார்க் கலாச்சாரம் என்றால், எல்லா ஊரிலும் பரத்தையர்கள் பகிரங்கமாக வாழ அதே பெரிசுகள் ஒத்துக்கொள்வார்களா? இல்லை, குறைந்த பட்சம் "கட்டைவண்டியில் மட்டும்தான் பயணம் செய்வேன்" என்று வாழ்வார்களா?  டயர் வண்டி வந்த காலத்தில் கட்டைவண்டிக்காரர்களும், கட்டை வண்டிக்கு சக்கரம் செய்யும் தச்சர் மற்றும் மேல் இரும்புப்பட்டை பட்டை செய்யும் கொல்லரும் "இதெல்லாம் அழிவுக்கான அறிகுறி . டயர் வயக்காடில் போனா நல்லதா?" என்றுகூட அலுத்துக் கொண்டார்கள். ட்ராக்டரே போகும் காலம் வரவில்லையா?  கூமுட்டைகள் பேசும் கலாச்சாரம் என்பது தனக்குத் தெரிந்த வரலாற்றில் இருந்து  வசதிப்படி செலக்ட் செய்து கொள்வது.

இதுதான் டமிளனின் கலாச்சாரம் என்று ஏதேனும் ஒரு காலத்தை மட்டும் குறிக்க முடியாது. ஒவ்வொரு காலத்திலும் அந்த அந்த சூழலுக்கு ஏற்ப ஒருவித பழக்கங்கள் இருந்து இருக்கும். அடுத்து வரும் காலங்களில் அது மாறிவிடும். கண்ணகியின் பாட்டிகூட கண்ணகியிடம் "அந்தக்காலத்தில் இருந்த மாதிரியா இருக்கு? காலம் கெட்டுப்போச்சு. சூதானமா இரு புள்ள‌" என்று சொல்லி இருக்கக்கூடும். அந்தப்பாட்டிக்கு அவரின் காலம் நல்ல கலாசாரம். நமக்கு?

கலாச்சாரம் என்பது வரலாறு. மேலும் கலாச்சாரம் என்பது மற்றவர்களால் மதிப்பிடப்படும் ஒன்று. பண்பாடு, கலாச்சாரம் குறித்து விரிவாக எழுதும் போது நிறைய உரையாட வாய்ப்புண்டு.

மிழ்வலைப்பதிவை தமிழ்மணத்திற்கு முன் (த.மு) தமிழ்மணத்திற்குப் பின் (த.பி) என்று இரண்டுகாலங்களாகப் பிரிக்கலாம். எல்லாக் காலகட்டத்திலும் ஒரு வருடம் ஆனவர்கள் ஒருமாதம் ஆனவர்களைப் பார்த்து "எப்படி எழுதவேண்டும்  நாலேமுக்கால் விதிகள்" என்று சொம்பை எடுப்பது தொடரும் நிகழ்வு. 5 ஆண்டுகள் எழுதிய‌  பெரிசுகள் அனாதையாகி ரிடையராவதும் தொடரும் நிகழ்வு.

வலைப்பதிவுகளை பகிரங்கமாக சாடியவர்கள் அல்லது எப்படி எழுதவேண்டும் என்று 10 விதிகள் போட்ட பெரிசுகள் எல்லாம் இப்போது அதே பதிவர்களைக் கொண்டு கதைபுக் பிசினஸ் செய்கிறார்கள். வலைப்பதிவுகள் பெருகிய காலத்தில் "அச்சு ஊடகத்திற்கு இது இணையாகுமா?" , "இதில எழுதியெல்லாம் ஒன்னும் செய்யமுடியாது?" , "இணைய எழுத்துக்களில் இலக்கியப்புண்ணாக்கு இல்லை" என்று சலம்பிய இளக்கிய‌வியாதிகள் , வெளங்காவெட்டித்தனம் பேசிய டவுசர்கள் எல்லாம் இன்று ஆளுக்கொரு பதிவு என்று இணையத்தில் துண்டுபோட்டு எந்தவெக்கமும் இல்லாமல் வாழ்கிறார்கள்.

இது எப்படி என்றால் மாட்டுக்கறி  துன்னால் தீட்டு என்று சொல்லும் அதே அம்பிகள் , மாட்டின் தோல் பதமாக வந்தவுடன் "பேஷ் பேஷ் நன்னா இருக்கு" என்று சொல்லிக்கொண்டே மிருதங்கத்தில் வாரை இழுத்துக்கட்டுவது போன்றது. அறுவடையாகும் வரை நொள்ளை பேசிவிட்டு ஆட்டையப்போட்டுக்கொள்ளும் பார்ப்பனீயதனம். அம்பிகளும் மாமிகளும் தோல்பை , தோல் பர்ஸ், சிப்பியைக் கொன்று எடுக்கப்பட்ட முத்து (மாலை), பட்டுப்புழுவைக் கொன்று செய்யப்பட்ட பட்டுச்சேலை என்று எந்த வெக்கமும் இல்லாமல் வலம் வரும் அதே நேரத்தில் "உயிர்க்கொலை பாவம். நம்ம இருள்நீக்கு சுப்புடு சொல்ருக்கார்" என்று சொல்லித்திரிவார்கள்

கடந்த 10 ஆண்டுகளின் ஒவ்வொரு காலகட்டத்திலும், "யார் பிரபலபதிவர்?" என்று வலைப்பதிவுகளில் கலாச்சாரம் போலவே தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.  
  • இளைஞர்களால்தான் உலகம் இளமையாக இருக்கிறது.
  • எழுதுபவர்களால்தான் பதிவுகள் இயங்குகிறது.
  • ஒவ்வொருவரும் அன்றைய எழுதும் தினத்தில் புதிய பதிவர்.

நேற்றைய அடையாளங்களை குப்பையாகச் சேர்த்து முதுகில் கட்டிக்கொண்டு பிரபலபதிவர் , மூத்த பதிவர் என்று சொல்லிக்கொள்வது அல்லது அதன்பேரில் "எப்படி எழுதவேண்டும் ‍ நாலேமுக்கால் விதிகள்"  என்று சொம்பை எடுப்பது எல்லாம் இலக்கியவியாதி,எழுத்துவியாதி......என்பதுபோல அடையாளச்சிக்கல் உள்ளவர்களுக்கான பொம்மைக் கிரீடங்கள்.

நீ சொல்லும் விதிகளையே கடைபிடித்து இனிவருபவனும் எழுதினால் புதுமை எங்கே இருந்து வரும்? யாரையும் அவர்களாக இருக்கவிடுவதே நல்லது. பத்தி பத்தியாகதான் எழுத வேண்டும் என்றால் ட்விட்டர் வந்து இருக்காது. மாறுபட்ட சிந்தனைகளும் எழுதும் முறைகளும் நிறைய வரட்டும். சுவராசி**** இருக்கவேண்டும் என்ற கூத்திற்காக 10 விதிகள் டெம்பிளேட் எல்லாம் வேண்டாம்.

புதிய சிந்தனைகள் வளரவேண்டும்.


Picture courtesy
http://www.newzealand.com/travel/library

Friday, October 08, 2010

கொத்துபரோட்டாவும் கம்யூனிச வியாதிகளும்

 சி றையில் இருக்கும் Liu Xiaobo விற்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்து சீனாவிற்கு இனிமா(enema) கொடுத்துள்ளது நோபல் கமிட்டி.


China Angered By Selection of Dissident Liu Xiaobo for Nobel Peace Prize
http://abcnews.go.com/International/china-angry-nobel-peace-prize-dissident/story?id=11830948


நோபலின் அமைதிப்பரிசு என்பது அரசியல் சதுரங்கத்தில் நடத்தப்படும் காய்களின் நடவடிக்கை போன்றது. அதன் மர்மங்கள் விளையாடுபவர்களுக்கே வெளிச்சம்.   (பாலஸ்தீனம்-இலங்கை-திபெத் -- சீனா - இந்தியா- இஸ்ரேல்-அமெரிக்கா--- ஒபாமா ) சீனாவின் கம்யூனிசக் கொள்கைகளையும் அதன் மனித உரிமை அத்து மீறல்களையும் (இந்தியா ஒழுங்கா??  Don't mine us out of existence: Bauxite mine and refinery devastate lives in India) மறுபடியும் பேச இந்தப்பரிசு ஒரு களம் அமைத்துக் கொடுத்துள்ளது.

அதற்காக நோபல் கமிட்டிக்கு ஒரு "" போடலாம்.

மதங்கள் போல எல்லா இசங்களும் ஒரு பகுதியில் ஒரு கால கட்டத்தில் சூழ்நிலைகளின் நிர்பந்தங்களினால் தோற்றுவிக்கப்பட்டவைகளே.  இயேசு (Yahushua . Greek form for the common Hebrew name Joshua) என்று சொல்லப்படுபவர் கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர் கிடையாது(??) .  யூத மத பழக்க வழக்கங்களுக்கு எதிராக போராடிய ஒரு போராளி. அவர்காலத்தில் அவருக்குச் சரி என்று பட்டதை சொல்லத்துணிந்தவர் என்ற அளவிலேயே அவரை நான் பார்க்கிறேன்.  இன்று உள்ள கிறித்துவ மதமும் அது சார்ந்த பல  உட்பிரிவுகளும் தனது பெயரில் தோற்றுவிக்கப்படும் என்று கனவிலும் அவர் நினைத்திருக்கமாட்டார்.  அது போலவே புத்தனும். பொண்டாட்டி பிள்ளைகளை நடு இரவில் விட்டுவிட்டு ஓடிப்போன சித்தார்த்தன் எனது பார்வையில் எந்தச் சிறப்புத்தகுதியும் கொண்டவராகத் தெரியவில்லை. இருந்தாலும் அவரின் தேடலுக்காக அவர் சில சமரசங்களைச் செய்ய நேரிட்டது என்று கொள்ளலாம். அவரும் தனது பெயரில் ஒரு மதம் ஆரம்பிக்கப்பட்டு இப்படி தன்னை கடவுளாக்குவார்கள் , தனது பெயரிலேயே இலங்கையில் கொலை நடத்துவார்கள்  என்று தெரிந்திருக்கமாட்டார்.

உலக அளவில் இன்று நடக்கும் கம்யூனிச கருத்துரைகளும் இப்படித்தான் உள்ளது. தோற்றுவித்தவருக்குப்  பின்னால் மதமாகிப்போன இடியாப்ப சித்தாந்தங்கள் போல , கம்யூனிச கருத்துக்கள் கொத்துபரோட்டாவாக மாறிவிட்டது. இந்தியாவில் இருக்கும் அனைத்து சிகப்புக்கொடி கூட்டங்களும் குருடன் யானையைத் தடவிய கதையாக ஆளுக்கொரு காலையும் சிலர் வாலையும் பிடித்துக்கொண்டு சுயமிழந்த சொம்பாக அவர்களுக்கான சில அடையாளங்களை பூசிக்கொள்கிறார்கள்.

கம்யூனிச‌ அடிப்படையானது, தொழிலாளர்கள் அதாவது மூலதனம் என்ற‌ ஒன்று இல்லாமல் உடல் உழைப்பால் வாழ்பவர்களின் நலன் சார்ந்தது. இயந்திரங்களின் பங்கு பஞ்சாலைகளில் அதிகமான போது உண்டான சித்தாந்தம் இது. இந்த சித்தாந்தம் தோன்றிய கால‌கட்டத்தை ஆராய்வது  இதன் அடிப்படையைப் புரிந்து கொள்வதற்கு முக்கியமானது. கம்யூன் என்பது (நிலப்பிரபுக்களை எதிர்த்து உண்டான ..ஏறக்குறைய கம்யூனிட்டி என்ற அர்தத்தில்) கம்யூனசித்தின் முன்னோடி எனலாம்.

உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்ட தொழிலாளர்களின் நலனுக்காக உண்டாக்கப்பட்ட நல்லதொரு கோட்பாடு கம்யூனிசம். கம்யூனிச‌ சிற்பியான மார்க்ஸ் மற்றும் எங்க்கெல்ஸ் இணைந்து தோற்றுவித்த இந்த 68 பக்க மேனிவஸ்ட்தான் கம்யூனசத்தின் பைபிள் என்று சொல்லலாம்.

http://www.marxists.org/archive/marx/works/download/pdf/Manifesto.pdf

மார்க்ஸ் இறந்தபிறகு கூட , எங்கெல்ஸால் புதிய அடிக்குறிப்புகள் சேர்க்கப்பட்டது. ( ஒவ்வொரு பதிப்பு வரும் போதும் மார்க்ஸ் எங்கெல்ஸ் சரிபார்ப்பார்கள்) கம்யூனிச‌‌ம் பற்றித் தெரிந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள் வேறு எந்த புண்ணாக்க்கு கட்சிக் கொள்கைகளையும் பார்ப்பதற்குமுன் ,  ஆரம்பிக்க வேண்டிய இடம் இந்த மேனிவஸ்ட்தான்.

இந்த 68 பக்க அறிக்கைதான் உலகில் பலரால் பலவாறு அமுலாக்கம் செய்யப்பட்டது.
  1. லெனினின் கம்யூனிச‌‌ அமலாக்கம்
  2. மாவோவின் கம்யூனிச‌‌ அமலாக்கம்
  3. பிடலின் கம்யூனிச‌‌ அமலாக்கம்
  4. சேயின் கம்யூனிச‌‌ அமலாக்கம்
  5. கிம் (வட கொரியா) கம்யூனிச‌‌ அமலாக்கம்
இவை அனைத்திற்கும் ஒரே மூலம்தான். இந்த 68 பக்க அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே அவரவர் அவருக்கான சமையலை அவர்களின் வாய்ருசிக்கு ஏற்ப செய்தார்கள். அதில் எந்த அளவிற்கு மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது அவரவருக்கு வெளிச்சம். ஆனால் ஒவ்வொருவரின் அமுலாக்க அணுகுமுறையும் முற்றிலும் வேறு வேறானது. அதனால்தான் அது லெனினிசமாகம், மாவோசிசமாகவும் அறியப்படுகிறது.

இந்தியாவில் இருக்கும் கம்யூனிசம் என்பது ஒரு வகையான சாம்பார். யாரை எந்தக் கட்சியை எடுத்துக் கொண்டாலும் அவர்களின் கொள்கைகள் இந்த 68 பக்க அறிக்கையில் இருந்து எதைக் எடுத்துக் கொள்கிறது என்று பார்த்தால் தெளிவின்மைதான் இருக்கும்.

இந்தியாவிலும் பிரிவினை வர்க்கம் சார்ந்தது என்றாலும் அதைவிட முக்கிய மையம் வர்ணப்பிரச்சனை.

மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸின் 68 பக்க அறிக்கையில் தொழிலாளி வர்க்கம் இருக்குமே தவிர வர்ணம் இருக்காது. அவர்களுக்கு இந்தியாவில் இருந்த வர்ணம் சார்ந்த அடக்குமுறைகள் தெரிந்திருக்க நியாயம் இல்லை. மேலும் அவர்களின் சூழலும் இந்த அறிக்கை தோன்ற ஊக்கியாக இருந்த காரணிகளும் அன்றைய இந்தியச்சூழலுக்கு அந்நியமானவை. இந்திய சூழ்நிலைக்கான சித்தாந்தம் கம்யூனசித்தை அடிப்படையாகக் கொண்டாலும் இந்திய பிரச்சனைகளை பேசுவதற்காக இருக்க வேண்டும்.

அரேபியா பெண்கள் மணற்புயலில் இருந்து பாதுகாக்க போட ஆரம்பித்த (நபி மற்றும் இஸ்லாமிற்கு முன்னரே இருக்கும் பழக்கம்) முழுச்சொக்காயை தமிழகத்த்லும் போடுவது போல, 68 பக்க அறிக்கையை அப்படியே இந்தியாவில் அமுல்படுத்த முடியாது. எப்படி லெனின் அவரது நிலப்பரப்பிற்கு தோதாக அதை அமுல்படுத்தி லெனினிசமாக ஆக்கினாரோ (அது வெற்றியா தோல்வியா என்பது இப்போதைய விவாதம் அல்ல) அதுபோல இந்தியாவின் வர்ணப்பிரச்சனைகளையும் பேசக்கூடிய ஒன்றை உருவாக்க வேண்டும்.

வர்க்க பேதத்துடன் வர்ணபேதத்தையும் சேர்த்து மேலும் மற்ற மண் சார்ந்த பிரச்சனைகளையும் பேசும் இசம் வேண்டும் நமக்கு. இந்தியாவில் ஒரு கம்யூனிசத்திற்கு மற்ற ஒன்று போலி. :-(((( அப்படித்தான் அழைத்துக் கொள்கிறார்கள். பிழைப்புவாதக் கூட்டணிதான் பெரும்பாலும் இருக்கிறது. 68 பக்க அறிக்கை எந்தனை பேருக்கு இன்னும் பைபிளாக உள்ளது என்று தெரியாது. கட்சியில் சேர்ந்துவிட்ட கொடுமைக்காக கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு ஆட்டு மந்தைபோல கட்டுப்படுபவன் சுயசிந்தனை உள்ளவன் கிடையாது.

எந்த ஒரு அமைப்பும் "Why they exists as political party or an organization?"
என்று அவர்களுக்குள் கேட்டுக்கொள்ளல் அவசியம்.


தகவலுக்கு:
நாரயணமூர்த்தி மன்மோகன்சிங் புனிதர்களா?
http://kalvetu.blogspot.com/2006/10/blog-post_09.html

மன்மோகன் சிங்கின் காமெடி..ஏம்பா லூசாப்பா நாங்க?
http://kalvetu.blogspot.com/2009/04/blog-post.html


கம்யூனிசம்-காந்தியம்-நாடி ஜோதிடம் மற்றும் பக்கவாட்டு நவீனத்துவம்
http://kalvetu.blogspot.com/2007/10/blog-post_26.html

India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா ?
http://kalvetu.blogspot.com/2007/02/india-inc-stinks-sez.html

ஈராக், கம்யூனசம் கலந்த‌ யோனிக் கவிதைக்கு நாங்கள்தான் அத்தாரிட்டி.
http://kalvetu.blogspot.com/2010/04/blog-post_27.html

There's a tribe in India that is getting pushed off its sacred mountain for a bauxite mine.
http://kalvetu.blogspot.com/2010/07/blog-post_08.html

பாலஸ்தீனம்-இலங்கை-திபெத் -- சீனா - இந்தியா- இஸ்ரேல்-அமெரிக்கா--- ஒபாமா
http://kalvetu.blogspot.com/2009/11/blog-post_17.html

India: Don't mine us out of existence: Bauxite mine and refinery devastate lives in India
http://www.amnesty.org/en/library/info/ASA20/001/2010/en


.

Thursday, September 09, 2010

பதிவுகள் மூலம் உறவுகள்: ஏம்பா .... நீ லூசா? ‍ (பார்ட் 1)

 பே ருந்தில் காத்து இருக்கிறேன்.  என்னை இந்த நரகத்தில் இருந்து இரட்சித்து , ஏதோ ஒரு கடவுளின் சொர்க்க கம்பெனியில் சேர்க்க விரும்பும் ஒரு அன்பர் ஒரு பிட் நோட்டீஸ் கொடுக்கிறார்.  வேண்டாம் என்கிறேன். அவர் வலிந்து திணிக்கிறார். அல்லது பேருந்தில் சன்னலோர இருக்கையில் இருக்கும் போது நாய்க்கு பொறை போடுவது போல தூக்கி விசிறிவிட்டுச் செல்கிறார். எனது விருப்பம் ஏதும் கேட்கமலேயே.


நான் என்ன செய்யலாம்?

  1. எடுத்து அந்த ஆள் முகத்தில் எறியலாம்.
  2. எடுத்து குப்பையில் போடலாம்.
  3. காக்கா எச்சத்தை துடைக்கப் பயனப்டுத்தலாம்.
  4. என்ன இருக்கு என்று படிக்கலாம்.
  5. குழந்தை குட்டி உள்ள சக பயணியின் குழந்தை ஆய் போய்விட்டால் அதை துடைக்க அவருக்கு தந்து உதவலாம்.

ஆனால் கடவுளின் சொர்க்க கம்பெனியில் சேர வேண்டுமா அல்லது வேண்டாமா என்று முடிவெடுப்பது முழுக்க முழுக்க எனது முடிவு சார்ந்தது.

ஏதோ ஒரு ஆர்வத்தில் (Curiosity ) அல்லது வேறு வெலை வெட்டி இல்லாமல் சேர்ந்துவிட்டு , "பரம பிதா பிராண்டிவிட்டார்"  என்று மாத்து வாங்கிவிட்டு அதற்கு நீதி கேட்டு நான் பேருந்து ஓட்டுநரிடமும் என்னுடன் பயணித்த மற்ற பிரயாணிகளிடமும் முறையிட்டால் ..அவர்கள்....

"ஏம்பா ..நீ லூசா?"   என்று என்னைக் கேட்க எல்லா உரிமையும் உள்ளது.

ஏன் என்றால் இதுபோன்ற‌ கூமுட்டை கூட்டத்தில் சேர எல்லாருக்கும்தான் விளம்பரம் ஏதோ ஒருவிதத்தில் வருகிறது. அந்த பேருந்தில் சன்னோலோர இருக்கையில் இருந்த எல்லாப் பாவிகளுக்கும்  கடவுளின் சொர்க்க கம்பெனி நோட்டீஸ் வரத்தான் செய்தது. நான் ஏன் மட்டும் ஏன் சேர்ந்தேன்? நான் உண்மையில் லூசுதான்.

என்ன செய்யலாம்? அந்த பிட் நோட்டிஸ் கம்பெனியை சட்டபூர்வமாக அணுகலாம். ஏன் என்றால் எந்த "சொங்கி" "சோப்ளாங்கி" கம்பெனியாக இருந்தாலும் அது இருக்கும் நிலத்தின் (நாடு மாநிலம்) சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக சான்று அளித்து இருப்பார்கள்.

"எல்லாஞ் சரிதேன் , எவனாவது கண்டவன் வந்து கண்ட கம்பெனில சேருன்னு சொன்னா ஏண்டா சேருர? சுய புத்தி இல்லையா அல்லது வேலை வெட்டி இல்லையா?" என்று நீங்கள் கேட்டால். என்ன சொல்வேன் நான்?


Image from:  http://theblacksentinel.wordpress.com/2008/06/15/how-stupid-can-one-person-be/

Tuesday, August 17, 2010

உமாசங்கர் ( இந்திய ஆட்சிப் பணித்துறை) Vs தமிழக அரசு வழக்கு பிரச்சனைகள் - வருத்தம், கண்டனம்

நேர்மையான முறையில் வேலை பார்க்கும் அரசு அலுவலர்களைக் காண்பது என்பது அரிதாகி வருகிறது.  நான் அறிந்தவரையில் உமாசங்கர் ஒரு நேர்மையான அதிகாரியாகவே தெரிகிறார். நிச்சயம் இவர் பாராட்டப்படாவிட்டாலும் பழிவாங்கப்படமால் இருக்கவேண்டும்.

அரசு அலுவலர்களின் பணி சிவில் பணிதான். வழக்குகள் இருக்கலாம் ஆனால் அடக்குமுறை கூடாது.

உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

அரசு இது போன்ற அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இவ்விடுகை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
http://umashankarias.wordpress.com

Complaint filed by C.Umashankar IAS., against the State of Tamil Nadu
http://dharumi.blogspot.com/2010/08/424-complaint-filed-by-cumashankar-ias.html

உமாசங்கர் ஐ.ஏ.எஸ் -ஒரு நினைவு குறிப்பு
http://kusumbuonly.blogspot.com/2010/07/httpwww.html

முயற்சி எடுத்த, வேண்டுகோள் வைத்த, பதிவுகள் இட்ட அனைத்து பதிவர்களுக்கும் நன்றி

.


அறுக்கப்பட்ட நெற்கதிர்களை ரோட்டில் போட்டு வாகனங்கள் உதவியுடன் நெல்மணிகளை மேலும் உதிர்த்து எடுக்க ரோட்டில் வைக்கோல் காயப்போடுவதை  தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் தடாலடியாக தடை செய்தது தவிர இவரின்மீது குற்றச்சாட்டு என்று என்னளவில் இல்லை.  அப்படி மாற்று ஏற்பாடுகள் செய்துவிட்டுத்தான் தடை செய்தார் என்றால் அந்தக் குற்றச்சாட்டும் இல்லை. ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் வைத்து விவசாயம் பார்க்கும் விவசாயிகள் நெல் உலர்த்த களம் கிடைக்காமல் பட்ட அவதிகளை அறிந்ததால்  இவரின் இந்த தடாலடி முடிவிற்கு ஆதரவு இல்லை.

Friday, July 09, 2010

தமிழ்ப் பதிவர்களின் இஸ்லாம் விமர்சனம் ‍ - உங்களை நீங்களே சேதப்படுதிக் கொள்ளும் அபாயம் உள்ளது


தங்கள் , அதன் அடிப்படைக் கொள்கைகள், நோக்கங்கள் இவையாவும் தெரிந்தோ , தெரியாமலோ அதைப் பின்பற்றுபவர்கள் , மேலும் அவர்களின் பிரச்சனைகள் என்று எல்லாம் எப்படியோ போகட்டும் என்று இருந்துவிடலாம். ஆனால், மதத்தில் பிறந்துவிட்ட காரணத்தினாலேயே , சில மனித உயிர்கள் துன்பப்படும்போது , சின்னச் சின்ன நியாயங்கள், உரிமைகள் ,மறுக்கப்படும்போது , அவர்களுக்காக வரும் அனுதாபம் மற்றும்  ஆதங்கமானது மதம் மீதும் அதன் அடிப்படைக் கொள்கைகள் மீதும் விமர்சனமாக வந்துவிடுகிறது. சவூதி போன்ற நாடுகள் "முலைப்பால் கொடுத்தால் பெண்கள் இரத்த சம்பந்தம் இல்லாத ஆண்களுடன் இருக்கலாம்"   என்று சொல்லும் போது,  வருத்தமும் , கோபமும், இயலாமையும் வரத்தான் செய்கிறது.  ஒரு பெண் , யாருக்கு முலைப்பால் கொடுக்கலாம் என்பதையும் , கட்டாயம் அவர்களின் ஓட்டுனருக்கு முலைப்பால் நேரடியாக கொடுக்க வேண்டும்  என்பதையும் எப்படி ஒரு சில சமயங்களும் அதன் கொள்கைகளும் தீர்மானிப்பதாகச் சொல்ல முடிகிறது?

நாம்  உண்டு , உறங்கும், வாழும், பகிர்ந்து கொள்ளும் இதே உலகில் எத்தனையோ விசயங்கள் நடந்தாலும் , நமது பார்வைக்கு வரும் இப்படியான அத்துமீறல்கள், கொடுமைகள்மீது ஒரு சின்னக் கோபம்கூட வராமல் "அர்த்த ராத்திரி வேளையில் சனியனுடன் பீடி குடித்தேன், காத்து பிரிந்த போது சனியும் பிரிந்தது"   என்று எண்டர் கவிதைகளும் , கண்றாவிப் கதைகளும் எழுதிக் கொண்டிருக்க முடியவில்லை. தமிழ் வலைப்பதிவுகளில் மத விமர்சனங்களைச் செய்பவர்கள் சிலரே.  அப்படி இயங்குபவர்களுக்கு மதவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வருவது என்றும் வழக்கமாக  நடக்கும் ஒன்றுதான் என்றாலும் , சமீபகாலமாக  அது சிலருக்கு அதிகமாகவே நடக்கிறது.


ந்து மதத்திற்கு என்று எந்த சட்டதிட்டங்களும் இல்லை. யார் யார் இது இது இல்லையோ அவர்கள் எல்லாரும் இந்துக்கள் என்ற அளவில்தான் சைவம், சமணம், வைணவம் , சீக்கியம் என்று எல்லாவற்றையும் கொண்ட சாம்பாராக இந்துமதம் உள்ளது. THE CONSTITUTION OF INDIA  Article 25 (2)(b) அதன் பங்கிற்கு ஒரு குழப்பமான விளக்கத்தைச் சொல்லிச் செல்கிறது.
http://india.gov.in/govt/documents/english/coi_part_full.pdf
 
Fundamental Rights  Right to Freedom of Religion 
25.(1)Subject to public order, morality and health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practice and propagate religion.
(2)Nothing in this article shall affect the operation of any existing law or prevent the State from making any law. 
(a)regulating or restricting any economic, financial,political or other secular activity which may be associated with religious practice; 
(b)providing for social welfare and reform or the throwing open of Hindu religious institutions of a public character to all classes and sections of Hindus.
Explanation I.The wearing and carrying of kirpans shall be deemed to be included in the profession of the Sikh religion. 
Explanation II.—In sub-clause (b) of clause (2), the reference to Hindus shall be construed as including a reference to persons professing the Sikh, Jaina or Buddhist religion,and the reference to Hindu religious institutions shall be construed accordingly.

சுலபாகச் சொல்ல வேண்டும் என்றால்,  இந்தியாவில் பிறக்கும் எல்லாரும் இந்துக்களே அவர்கள் வேறு மதத்திற்கு மாறாதவரை. அப்படியே மதம் மாறினாலும் இந்தியாவில் தோன்றிய மதங்களுக்குள் மாறினாலும் இந்துவாகவே அறியப்படுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள முருகன் இரண்டு பொண்டாட்டி வைத்து இருப்பது நியாயமா? என்று கேட்டால் காஷ்மீரப் பண்டிட்களுக்கு ஒன்றும் கவலை இல்லை. முனியாண்டி சாமியைக் குற்றம் சொன்னால் மும்பை இராம வாலாக்களுக்கு ஒரு கவலையும் இல்லை. இந்த நிலையில், இந்து மதத்தின் மீது விமர்சனம் என்பது இலக்கில்லாமல் சாட்டப்படும் குற்றச்சாட்டு. பலர் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வது இல்லை.  வர்ணாசிரம விமர்சனங்களே இன்னும் இந்துமத விமர்சனமாக தமிழ்ப்பதிவுகளில் வலம் வந்து கொண்டு உள்ளது.

கிறித்துவம்,  பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, கருவைக் கலைக்க போப் எதிர்ப்பு ஆனால் ஒன்னொரு பிரிவு ஆதரவு , ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு ஆதரவு , ஓரினச்சேர்க்கையாளரே மத போதகராக இருக்க ஆதரவு, எதிர்ப்பு என்று
கிறித்துவ மதவாதிகளே பரிசோதனைகள் செய்து கொள்வதால் சிலுவைப் போர் காலங்களைப் போல பெரும் சண்டைகள் வருவது இல்லை. ஒரிசாவில் நடந்த விசயங்கள் நினைவில் வந்து போகிறது .( More Christian homes set on fire, three bodies fished out of river http://www.asianews.it/news-en/Orissa:-More-Christian-homes-set-on-fire,-three-bodies-fished-out-of-river-13342.html  ) இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில்,  கிறித்துவத்தால் பெரும் சண்டைகள் இல்லை. அது பாட்டுக்கு முட்டை போட்டு குஞ்சு பொறித்துக்கொண்டுள்ளது என்றே சொல்லாம். கிறித்துவம் ஓரளவிற்கு இயல்பை ஏற்று, மாற்றங்களைப் பரிசோதித்து ஏற்பவர்கள்,  எதிர்ப்பவர்கள் என்று அணுக்களைப் போல ஒன்று இரண்டாகி , இரண்டு நான்காகி அது பாட்டுக்கு தன்னை பெருக்கிக் கொள்கிறது. 

ன்றுவரை என்னால் விளங்கிக்கொள்ள முடியாத , இன்னும் புரிந்து கொள்ளமுடியாத ஒன்று இஸ்லாமியர்களின் உலகளாவிய செயல்பாடுகள். ஒவ்வொரு இஸ்லாமியரும் கீழ்க்கண்டவற்றை ஏற்றுக்கொள்கிறார்கள். இதை ஏற்காவிட்டால் அவர்கள் இஸ்லாமியர் இல்லை என்பது எனது புரிதல்.
  1. ஒரே இறைவன் (அரபியில் அல்லா எனப்படும் வார்த்தை தரும் பொருளை தமிழில் இறைவன்  அல்லது கடவுள் என்று கொள்ளலாம்)
  2. அந்த இறைவனின் நேரடி வேதம் என்று அவர்களால் நம்பப்படும் புனித குரான்.   http://www.alislam.org/quran/search2/ 
  3. அதை உலகுக்குச் சொல்லிய முகம்மது அவர்களை இறுதி இறைத்தூதராக (நபி) ஏற்றுக் கொள்வது.
  4. மேலும் முகம்மது அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் அல்லது அவரின் வாழ்க்கையின் வழியாக எப்படி வாழ வேண்டும் என்று அறியப்படும் ஹதீஸ்கள்.  http://iknowledge.islamicnature.com/hadith/
இவை எல்லாம் இஸ்லாமியர் என்பதற்கான அடிப்படை. இதில் ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும் அவர்கள் இஸ்லாமியர் கிடையாது. அதாவது , குரானை மட்டும் ஏற்று , முகம்மது அவர்களை இறுதி இறைத்தூதராக (நபி) ஏற்றுக் கொள்ளாவிட்டால், நிறுவனப்படுத்தப்பட்ட இஸ்லாம் மதத்தில் இடம் இல்லை. (1) புனித குரான், (2) இறுதித் தூதர், (3) தூதரின் வாழ்க்கையாக பதியப்பட்டுள்ள ஹதீஸ்கள் மூன்றும் பிரிக்க முடியாதவை.

குரானின் மூல மொழி அரபி . அதில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு பல மொழிகளில் அது கிடைக்கிறது. அரபி வார்த்தையில் இருக்கும் அர்த்தங்களை விளக்குகிறேன் என்று மொழிபெயர்ப்பாளர்கள் அடைப்புக்குறிக்குள் தங்களின் கவித்துவ வர்ணனைகளையும் அவர்களின் அதீத கற்பனைகளையும் சேர்த்தே சொல்லுவார்கள்.  உதாரணமாக திருக்குறளுக்கான கலைஞரின் உரையையும் , சாலமன் பாப்பையாவின் உரையையும் படித்தால், அதில் அவர் அவரின் தனித்துவம் தெரியும் http://www.thirukkural.com . அதுபோல குரானின் மொழிபெயர்ப்புகளின் அடைப்புக்குறி வசனங்கள். உண்மையான விசயத்தை வளைத்து, திரித்து புதிய கருத்தை திணிக்கும். இது மொழிபெயர்பாளர்களின் ஆர்வத்தாலும் சில உள் நோக்கங்களாலும் வருவது.


 தேடுதல் மற்றும் ஆர்வம் உள்ள ஒருவரால் குரானின் மொழிபெயர்ப்பு பிரச்சனையை  சுலபமாக கடந்துவிடலாம். ஏன் என்றால் அரபியில் மூலம் உள்ளது. அரபியும் ஆங்கிலமும் தெரிந்த , இரண்டு கலாச்சாரங்களையும் அறிந்த ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் இதைக் கடக்க முடியும்.

அதிகமனா குழப்பங்கள் , பத்வாக்கள் போன்றவை குரானை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அவை எல்லாம் ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டது. ஹதீஸ்கள் என்பவை இறைவனின் நேரடி வார்த்தைகளோ அல்லது முகம்மது நபியின் நேரடி வார்த்தைகளோ அல்ல. இவை யாவும் மற்றவர்களால் சொல்லப்பட்டவை.  அதாவது முகம்மது நபியின்(0) அருகில் இருந்தவர்(1) அடுத்தவருக்குச் (2) சொல்லி அந்த அடுத்தவர் (3) இன்னொருவருக்குச்(4) சொல்லி இந்த நான்காமவர் பதிந்து வைத்தது.  இந்த வரிசை இன்னும் நீளலாம். 0 முதல் 4 வரை நான் சொல்வது ஒரு உதாரணமே. ஒருவர் ஹதீஸ் என்று ஒன்றைச் சொன்னால் , அதைச் சரிபார்க்க அவரில் இருந்து 4‍ --> 3 --> 2 -->1-->0  முகம்மது நபி தொடர்பைச் சரிபார்த்து அது சரியாக இருந்தால் மட்டுமே அதிகார பூர்வ ஹதீசாக ஏற்றுக் கொள்ளப்படும்.

மொழி பெயர்ப்புச் சிக்கலுடன் , எது அதிகார பூர்வமானது?  என்பதும் ஹதீஸ் விசயத்தில் சேர்ந்து கொள்கிறது. பிரச்சனை என்னவென்றால் "எந்த ஹதீஸ் சரி?" என்பதும் அப்படி அது சரியானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் மூலம் அரபி என்பதால் மற்ற நாடுகளில் "அதற்கான யாருடைய‌ மொழி பெயர்ப்பு சரி?"   என்பதும் அதன் வழி வரும் நடைமுறைச் சட்டங்கள்  அரபு நாடுகளின் நடைமுறைககளில் இருந்து வேறுபடுவதும் உண்டு.  இவை இன்னும் விடையில்லாத விசயங்கள்.சவூதியில் சரி என்று சொல்லப்படும் (அவர்கள் மொழிதான் மூலம்) அதே ஹதீசை தமிழ்நாட்டில் மேற்கோள்காட்டிப் பேசக்கூட முடியாது. அது ம‌த துவேசமாக கட்டம் கட்டப்படும். இது நடைமுறைச் சிக்கல். 

பிகளைப் பற்றி யாரவது இருக்கும் ஒரு ஹதீஸை வைத்து விமர்சித்தால்
இஸ்லாமியர்கள் சொல்வது "  அது சரியான ஹதீஸ் அல்ல" என்பதும் அல்லது "    அந்த ஹதீஸ்ற்கான அர்த்தம் அதுவல்ல " என்று சொல்வதும் வாடிக்கையான ஒன்று.  மேலும் அப்படிச் சொல்பவரை "  விவாதத்திற்கு வா "   என்பதும் , யாராவது  ஒரு மதப்பிரச்சாரகரைக் காட்டி "அவரிடம் பேசு" என்று சொல்வதும் வாடிக்கையான ஒன்று.  உலக அளவில் நபி அவமதிப்பு அல்லது அவரின் வாழ்க்கையான ஹதீஸ் குறிப்புகள் குறித்த சண்டைகள் பெரிய வன்முறையாக கொலை, குத்து சண்டை , போராட்டம் என்று நடந்து கொண்டே உள்ளது ஏதாவது ஒரு மூலையில். இப்படியான குரான், இஸ்லாம்  பிரச்சனைகளில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விசயம் சவூதி,ஈரான்,தாலிபான்கலின் நடைமுறைகள். குரான் , ஹதீஸ் மற்றும் இறைவனின் பெயரில் இவர்கள் செய்யும் தனிமனித வன்முறைகள், சுதந்திரங்கள் பெரும்பாலும் மாமியார் உடைத்த சட்டிபோல மற்ற நாடுகளில் உள்ள இஸ்லாமியர்களால் கண்டுகொள்ளாமல் விடப்படும்.  

லகில் உள்ள எல்லா இஸ்லாமியரைவிட, சவூதியில் வாழும் இஸ்லாமியருக்கு ஒரு சிறப்பு உள்ளது. அது அவர்கள் நாட்டில் உள்ள இஸ்லாம் வரலாற்றுப் பாரம்பரியமும் , அந்த நாட்டில் மெக்காவில் உள்ள காபா என்ற புனித இடமும். இந்தக் காரணங்களாலேயே சவூதி அரசு தனது அரசியல் அமைப்புச் சட்டமாக குரானைக் கொண்டுள்ளது. மேலும் முகம்மது அவர்களின் வாழ்க்கை குறிப்பான ஹதீஸ்களை தனது சட்ட விதிகள் தீர்ப்புகளுக்கு நேரடியாப்  பயன்படுத்துகிறது.


குரான் தான் சவூதியின் சட்ட அடிப்படை.
http://www.saudiembassy.net/about/country-information/laws/The_Basic_Law_Of_Governance.aspx


Article 1:
---------
The Kingdom of Saudi Arabia is a sovereign Arab Islamic State. Its religion is Islam. Its constitution is Almighty God's Book, The Holy Qur'an, and the Sunna (Traditions) of the Prophet (PBUH). Arabic is the language of the Kingdom. The City of Riyadh is the capital.

Article 45:
-----------
The Holy Qur'an and the Sunna (Traditions) of God's Messenger shall be the source for fatwas (religious advisory rulings).

Article 48:
----------
The Courts shall apply rules of the Islamic Sharia in cases that are brought before them, according to the Holy Qur'an and the Sunna, and according to laws which are decreed by the ruler in agreement with the Holy Qur'an and the Sunna.
 

இப்படி குரானையும், இறைத்தூதர் நபி அவர்களின் வாழ்க்கை முறையையும் கடைபிடிப்பதாகச் சொல்லும் இவர்கள் "பெண்கள் கார் ஓட்டக்கூடாது" என்று இன்றுவரை பிடிவாதமாக உள்ளார்கள். கேட்டால் அதற்கு சில ஹதீஸ்களை காட்டுகிறார்கள்.   மேலும் பெண்களை அடுத்தவருக்கு முலைப்பால் கொடுப்பதன்மூலம் அவர்கள் அடுத்த நாட்டு ஓட்டுநர்களை குடும்ப உறவாக‌க் கொள்ளாம் என்று "Shaikh Abdul Mohsin Bin Nasser Al Obaikan" ( member of Saudi Council of Senior Scholars and adviser to the king)  சொல்லியிருக்கிறார்.
"A woman can breastfeed a mature man so that he becomes her son. In this way, he can mix with her and her daughters without violating the teachings of Islam," the scholar said.
http://gulfnews.com/news/gulf/saudi-arabia/saudi-women-use-fatwa-in-driving-bid-1.643431
SAUDI ARABIA: Women threaten to breastfeed drivers if they aren't allowed to drive
http://latimesblogs.latimes.com/babylonbeyond/2010/06/saudi-women-use-fatwa-in-driving-bid.html



இஸ்லாமியராக அடையாளம் காட்டிக் கொள்ளும் தமிழ் பதிவர்களுக்கு......                         

விமர்சனம் என்ற‌ பெயரில் மற்றவர்கள்/பதிவர்கள் உங்களின் மத‌ நம்பிக்கையை கேலி செய்வது , சொற்களை வீசுவது தவறு. இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் நீங்கள் எப்படி இந்த சவூதி அறிவிப்புகளையெல்லாம் சத்தமில்லாமல் கடந்து போகிறீர்கள் என்று தெரியவில்லை. அதுதான் ஆச்சர்யமாக உள்ளது.  முன்னாள் பெரியார்தாசன் அல்லது மறைந்த பாடகர் மைக்கேல் ஜாக்சன் இப்படி யாராவது இஸ்லாத்தில் சேர்ந்தால் , அதை இஸ்லாத்திற்கு மக்கள் வரும் ஒரு குறியீடாக வைத்துக் கொண்டு பதிவுபோடுகிறீர்கள்.

ஹதீசாக இருக்கட்டும் குரானாக இருக்கட்டும் சவூதியாக இருக்கட்டும் இப்படி பெண்களைச் செய்யச் சொல்வது சரியா?   மனிதர்களாக , சுயமரியாதை உள்ள யாருக்கும்  இப்படியான செயலைக் கண்டால் " என்ன கொடுமை? கார் ஓட்டக்கூடாது....சரி அதற்காக ஓட்டுனர் வைத்துக் கொண்டால் அவருக்கு பால் கொடுக்க வேண்டுமா? கிறுக்குத்தனமாக இல்லை"   என்றுதான் கேட்கத் தோன்றும்.

புனித நூல் குரானை அடிப்படையாகக் கொண்டது என்று அறிவித்துக் கொள்ளும் ஒரு நாடு (constitution is Almighty God's Book, The Holy Qur'an, and the Sunna (Traditions) of the Prophet (PBUH) உலக இஸ்லாமியர் அனைவரும் ஒருமித்து ஒருதிசை நோக்கி தொழ குறியீடாக இருக்கும் காபா (மெக்கா) வைத் தன்னுள் கொண்ட நாடு  இப்படி செய்வது குரானிற்கும் இஸ்லாத்திற்கும் களங்கம் இல்லையா?

ஒரு எதிர்ப்புக்குறியீடாக இதையெல்லாம் கண்டிக்கவே மாட்டீர்களா?  மாநாடுகளில் அல்லது மெக்கா செல்லும்போது ஒரு சின்ன போராட்டம் என்று எப்படியாவது ஒரு எதிர்ப்பைக் காட்டமுடியாதா? அவர்களும் நீங்கள் நம்பும் மதத்தைத்தானே அவமதிக்கிறார்கள்?
  • ங்களின் அரசியல் சட்டமே குரான் என்று சொல்லிக் கொண்டு இப்படிச் செய்யும் சவூதியை அரசை எத்தனை தமிழ் இஸ்லாமியர் புறக்கணிக்கிறார்கள்?
  • எத்தனை தமிழ் பதிவர்கள் (இஸ்லாமியராக அடையாளம் காட்டும் பதிவர்கள்) ,  சவூதி இஸ்லாமிய அறிஞர்களை விவாதத்திற்கு அழைத்து இருக்கிறார்கள்?‌
  • தமிழ்ப்பதிவர்கள் செய்யும் அவமதிப்பிற்கு மல்லுக்கட்ட தயாராக இருப்பவர்கள்,  ஏன் இது போன்ற‌ சவூதி இஸ்லாம் அறிஞர்களையும் நேரடி விவாதத்திற்கு அழைக்கக்கூடாது?
  •  அப்படி அழைத்து  சவூதி இஸ்லாம் அறிஞர்களுக்கு உண்மையான ஹதீஸ்களை எடுத்துக் காட்டி விளக்கலாமே? அல்லது சவூதியைப் புறக்கணிக்கலாமே?
  • Islam - sin  of ‘khulwa’ (staying alone with a stranger) என்று கூகிளில் தேடினாலே பல ஆச்சர்யங்கள் வரும். இவைகளை எல்லாம் வாதம் செய்து இஸ்லாத்தை அவமதிக்கும் சவூதி அடிப்படைவாதிகளை எதிர்த்து மற்ற இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டங்கள் விவாத அழைப்புகள் உண்டா?
  • வலைப்பதிவில் மல்லுக்கு நிற்கும் யாரும் இதுவரை ச‌வூதியை ஒரு எதிர்ப்பிற்காகவேனும் ,இஸ்லாம் அவமதிப்பிற்காக விவாதத்திற்கு வா என்று அழைப்புவிட்டதாகத் தெரியவில்லை.

தமிழில் வலைப்பதிவு செய்து கொண்டு இஸ்லாம் மதத்தை விமர்சிப்பவர்களுக்கு...


விமர்சனத்திற்கும் அவதூறுக்கும் உள்ள வித்தியாசம் , கவர்ச்சிக்கும் ஆபாசத்திற்கும் உள்ள வித்தியாசம் போன்றது. ஒரு பெண் தொடை தெரியும் அளவிற்கு டவுசர் அல்லது குட்டைப்பாவடை போட்டால் அது கவர்ச்சி. ஆனால் அதே பெண், சேலையைக் கட்டிக்கொண்டு, கவன ஈர்ப்பிற்காக முழங்கால்வரை உயர்த்தினாலே ஆபாசமாக இருக்கும். கவனிக்க...இந்த நிலையிலும் டவுசரைவிட, சேலையே பெரும்பகுதியை மறைக்கிறது இருந்தாலும், அது ஆபசமாகவே இருக்கும். கடுமையான கருத்துக்களையும் எளிதாகச் சொல்லலாம். 


குரான் வழி நடப்பதாகச் சொல்லிக் கொண்டு பெண்களை அவமதிக்கும் பேச்சுக்களை ஏதோ ஒரு ஹதீஸைக் காட்டி பேசும் சவூதி இஸ்லாமிய அறிஞர்களைக்    கண்டிக்காதவர்கள், உங்களையும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்று நினைக்காதீர்கள். இது பெரிய பிரச்சனையாக வாய்ப்புள்ளது.

நீங்கள் இணையத்தில் எதோ ஒரு மூலையில் இருக்கும் ஏதோ ஒரு ஹதீஸை சுட்டி என்னவோ பேசுகிறீர்கள். அந்த தொடுப்பு இணையத்தில் இருப்பதே  ஒத்துக் கொள்கிறேன் . நீங்களோ  அல்லது எந்த தமிழ் வலைபதிவரும் உருவாக்கியது அல்ல. பிரச்சனை என்ன  என்றால் உங்கள் பதிவில் வெளியிட்ட குற்றத்திற்காக (??) நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டி வரலாம். இறைத்தூதர் முகமது நபி அவர்களின் படங்கள் இணையத்தில் உள்ளது. ஆனால் அதை குமுதம் போன்ற பத்திரிக்கைகள், "தகவலாக" வெளியிட்டால்கூட சங்குதான். 


தயவுசெய்து ஹதீஸ்களைத் தொடாதீர்கள். எது சரியானது ? எது உண்மை ? எந்த மொழிபெயர்ப்பு உண்மை?  யார் சொல்வது சரி ? என்று யாருக்கும் தெரியாது.

உயிர்ப்பயம் அல்லது வாழ்வியல் காரணங்கள் என்று எப்படி வேண்டுமானலும் அடுத்தவர்கள் சொல்லட்டும் , இதில் இருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. உங்கள் செயல் உங்களின் உரிமை. ஆனால் தக்க சமயத்தில் இடித்துரைக்காவிட்டால் நான் உங்களிடம் இணையத்தில் பேசிக்கொள்வதும் பின்னூட்டங்கள் பகிர்ந்து கொள்வதிலும் அர்த்தம் இல்லை.

சவூதி இஸ்லாம் அறிஞர்ககளுக்கு இருக்கும் சலுகைகள் உங்களுக்கு கிடைக்காது. அப்படியே பேச வேண்டும் என்றால் குரானை மட்டும் மேற்கோள் காட்டுங்கள். குரானைத்தாண்டி விவாதங்கள் ஹதீஸ் பக்கம் சென்றால்..." அய்யா, நான் கடவுளின் வார்த்தைகளை மட்டுமே நம்புகிறேன். குரான் சொன்னதாக குரானில் இருந்து மேற்கோள் காட்டுங்கள். மேலே பேசுவோம் " என்று சொல்லி நகர்ந்து விடுங்கள். ஆப்பில் நீங்களே போய் உட்கார்ந்து கொள்ளாதீர்கள்.

அப்படியே அவர்கள் குரானைக் கொண்டுவந்தாலும் எந்த தமிழ் மொழிபெயர்ப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு வாதம் செய்ய முயற்சிக்காதீர்கள். அவர்களிடம் , அதிகார, வசன எண்ணை மட்டும் வாங்கிக் கொண்டு முடிந்தவரை ஆங்கில வசனங்களைச் சரிபார்த்து (http://www.alislam.org/quran/search2/) அதைப்பற்றி மட்டுமே பேசுங்கள். தமிழ் மொழிபெயர்ப்புகளில் இருக்கும் மேலதிக விளக்கங்கள் மத நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே.

அது போல எக்காரணம் கொண்டும் அவர்கள் மதிக்கும் இறைத்தூதரை எதுவும் சொல்லாதீர்கள். நீங்கள் சொல்வது எதோ ஒரு ஹதீஸில் இருந்தால் கூட.


வலைப்பதிவில் உங்களின் பதிவின் தேவையைவிட உங்களின் குடும்பத்திற்கு உங்களின் இருப்பும் உங்களின் ஆரோக்கியமும் குழப்பமற்ற மனமும்  அவசியம்.



இஸ்லாம் ஆண்கள் ஏன் அரேபியா பாணி ஆடைகளை தமிழகத்தில் அணிவது இல்லை?
http://kalvetu.blogspot.com/2010/01/blog-post.html

Picture courtesy
http://www.freeimages.co.uk/

Wednesday, July 07, 2010

ஜேம்ஸ் கேமரூன் அப்புறம் இந்த மணிரத்னம் போன்றவர்களும் இயக்குனர் என்றே அழைக்கப்படுகிறார்கள்.


ஜேம்ஸ் கேமரூனின் அவதார் என்ற திரைப்படம் சொல்லும் முக்கிய விசயம்   வளத்திற்காக கொள்ளையிடப்படும் இடமும் அதனைச் சமாளிக்க பாதிக்கப்பட்டவர்கள்  முன்னெடுக்கும் போராட்டமும்"    என்று ஒருவரியில் உள்ளடக்கத்தைச் சொல்லலாம். இந்தப் பிரச்சனையை மனிதர் வாழும் எல்லா நாடுகளிலும் (இடங்களில்) பொருத்திப் பார்க்கலாம். எதோ ஒரு வகையில் இந்த பிரச்சனை எல்லா நாடுகளிலும் இருக்கும்.

ஆச்சர்யமான ஒன்று என்னெவென்றால், ஜேம்ஸ் கேமரூனுக்கு இந்தியாவில் நடக்கும் பிரச்சனையும் தெரிந்து இருக்கிறது. அதை அவர் வெளிப்படையாகவும் சொல்கிறார்.


Is Avatar a Native American story?

என்ற கேள்விக்கு பதில் சொல்லும் ஜேம்ஸ் கேமரூன் , இப்படிச் சொல்கிறார்.

Not exclusively. I think Americans locate the story there most quickly. But Avatar's now the No. 1 movie in Brazil, and Brazil has a lot of issues with the displacement of indigenous populations and deforestation. There's a tribe in India that is getting pushed off its sacred mountain for a bauxite mine. The film is hugely popular in China, and people there are getting displaced by the government to build dams. So people are relating to it from all these different perspectives.

Read more:
10 Questions for James Cameron
http://www.time.com/time/magazine/article/0,9171,1969722,00.html

காணொளியாக‌ (வீடியோப் பதிவாக ) பேட்டி
http://www.time.com/time/video/player/0,32068,69997107001_1969700,00.html




இந்தப்பிரச்சனை குறித்த amnesty.org யின் விரிவான அறிக்கை.
India: Don't mine us out of existence: Bauxite mine and refinery devastate lives in India
http://www.amnesty.org/en/library/info/ASA20/001/2010/en


தமிழில் நாகர்ஜுனன் -திணை இசை சமிக்ஞை
http://nagarjunan.blogspot.com/2010/04/6.html

இதனைப் படிக்கும் போது மணிரத்னம் போன்றவர்களும் "ச‌னியனுடன் பீடி குடித்தேன். அதனோடு உரையாடிய போது டவுசர் கிழிந்தது" என்று எதையாவது கிறுக்கி உலகத்து பிரச்சனைகளில் இருந்து தன்னைத் துண்டித்து கனவில் வாழ்ந்து வரும் பின் நவீன புனைவு பதிவர்களும் நினைவில் வந்து போகிறார்கள்.

மணிரத்னம் போன்றவர்களும் இயக்குனர் என்றே அழைக்கப்படுகிறார்கள். அவர்களும் படம் எடுக்கிறார்கள். அவரையும் அறிவாளி என்கிறார்கள். மக்களின் பிரச்சனையைச் சொல்லதா கலை என்ன கலை?  கோமாளிகள் எழுதும் கருமாந்திரப் புனைவுகள் நினைவிற்கு வந்து தொலைக்கிறது. கேட்டால்,  "கலை ஏதாவது ஒன்றைச் சொல்லத்தான் வேண்டுமா?" என்கிறார்கள் புனையும் பின் நவீனப் புண்ணாக்குப் பதிவர்கள்.

---
தொடர்புடைய பதிவு...
உண்மைத்தமிழன்
இராவணன் - மணிரத்னம் சொன்னதும், சொல்லாமல்விட்டதும்..!
http://truetamilans.blogspot.com/2010/06/blog-post_20.html

தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் உச்சக்கட்ட வெறியில் ஆட்டமோ ஆட்டம் என்று ஆடிக் கொண்டிருக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.பழங்குடியினர், மலைவாழ் மக்களின் பூர்விகச் சொத்தான காடுகள், மலைகள், இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் விதமாக எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் செயல்படும் இந்த அதிகார வர்க்கத்தின்  ஒரே குறிக்கோள்.. சட்டம், நீதிமன்றம் என்ற ஒன்றையே இந்த அப்பாவி மக்களின் கண்களில் காட்டாமல் இவர்களைக் கொன்றொழிப்பதுதான்..!
.....
எத்தனை நல்ல சந்தர்ப்பம் மணிக்கு..? இன்றைய யதார்த்த நிலைமையை சுட்டிக் காட்டுவதைப் போல தான் செய்தது தன்னைச் சார்ந்த மக்களுக்காகவும், அந்த மக்களை பாராமுகம் காட்டி புறக்கணிக்கும் ஏகாதிபத்திய அதிகார வார்க்கத்தை எதிர்த்தும்தான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருந்தால் இத்திரைப்படம் இந்திய அரசியல் சினிமாவில் மிக முக்கியப் பங்கை அளித்திருக்கும்..!




.
Picture Source: time.com

Friday, July 02, 2010

தமிழ் நாட்டில் பள்ளிகளில் சாதி, சமயம் (மதம்) கட்டாயம் இல்லை : தமிழக‌ அரசாணையை தரவிறக்கம் செய்து கொள்ள‌

மிழ் நாட்டில் , பள்ளி விண்ணப்ப படிவங்களில்  சாதி , சமயம் (மதம்) குறிப்பிடுவது கட்டாயம் இல்லை. அரசாணை 1210    2.7.1973

 து தமிழக அரசின் அதிகாரபூர்வதளம்.  இந்த தளத்தில் அரசாணை உள்‌ளது.
http://www.tn.gov.in/tamiltngov/tamilgos/sed/sedums205.htm

நேரடியாகப் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் முதலில் தமிழக அரசு பயன்படுத்தும் கம்பன் எழுத்துருவை உங்கள் கணனியில் நிறுவ வேண்டும். அது கிடைக்கும் இடம்.http://www.tn.gov.in/tamiltngov/misc/fontdload.htm அரசாணையை தரவிறக்கம் செய்து இங்கே சேமித்து உள்ளேன். இங்கே உள்ள பிடிஎஃப் கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 ==> G.O.1210_From_TamilNadu_Gov.pdf






மேலும் கீழ்வேளூர் வட்டாரம் - நாகை மாவட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு  ஆசிரியர் , மாணவர்களுக்குத் தேவையான பல அரசாணைகளை தொகுத்து வைத்துள்ளது. http://koottanigo.blogspot.com/  இங்கேயும் அனைத்து படிவங்களும் பள்ளி சம்பந்தப்பட்ட அரசாணைகளும் கிடைக்கும். இவர்கள் தளத்திலும் மேற்கண்ட அரசாணை வண்ணத்தில்  கிடைக்கிறது. அதையும் பிடிஎஃப் கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 ==>  G.O.1210_From_Teacher_Website.pdf



***



சாதி உங்கள் சாய்ஸ !
http://kalvetu.blogspot.com/2007/09/blog-post.html


அரசாணை 1210    2.7.1973
TamilNadu G.O  1210 Dated     2.7.1973