Friday, February 05, 2010

வரலாறு எழுதும் வெட்டி வேலையை விட்டுவிடுங்கள் எழுத்து வியாதிகளே!

திராவிடம் என்பது ஆரியம் என்பதற்கான எதிர்ப்பு.
ஆரியம் வினை என்றால் திராவிடம் எதிர்வினை. ஆரியம் என்ன செய்தது என்று தெரிந்தால் திராவிடம் ஏன்?  எதற்கு?  எப்படி ? அதற்கு எதிர்வினை செய்தது என்று தெரியும்.

http://www.jeyamohan.in/?p=5782


http://ravisrinivas.blogspot.com/2010/02/blog-post_05.html


"திராவிடம்" என்பது ஆரியத்துக்கு எதிராக வைக்கப்பட்ட கலகம். வர்ணாசிரமக் கொடுமையை அறியாதவர்கள் யாராலும் திராவிடத்தை புரிந்து கொள்ள முடியாது. திராவிடம் தமிழ் வளர்க்கவில்லை, திராவிடத் தலைவர்கள் கொள்ளை அடித்தார்கள்,  கதை எழுதவில்லை. நல்லதமிழ் பேசவில்லை ,அவர்கள் செத்து செத்து விளையாண்டார்கள் .....என்று எந்தக் குற்றச்சாட்டும் வைக்கலாம். தப்பேயில்லை.  இப்போது திராவிடம் பெரியாரை வைத்து கல்லா கட்டுபவர்கள் அப்படித்தான் உள்ளார்கள்.

ஆனால் "திராவிடம்" வர்ணாசிரமத்துக்கு அடித்த ஆப்புதான் அதன் வெற்றி.
அதன் நோக்கமும் அதுவே. மரத்தில் கிளை சரியில்லை, இலை சரியில்லை , வேர் சரியில்லை,காயைப் புடிங்கி சாப்பிடுகிறார்கள்.....ஆம்..ஆம் ..ஆம் ..ஆம் எல்லாம் சரியில்லைதான்.

ஆனால்,  வர்ணாசிரமப் புற்களின் மத்தியில் அது மரமாய் நிற்பதே ஒரு சாதனைதான். குத்துப்பட்டவனுக்கே அதன் வலி தெரியும். டைப்ரைட்டரில் நோகாமல் கதை எழுதினால் போதாது. இன்னும் வாயில் பீ ஊற்றப்படும் கதைகளும் தெரியவேண்டும் , அதன் வர்ணாசிரமப் பின்புலமும் தெரியவேண்டும்.

ஆதிக்க சாதி என்பது வர்ணாசிரமத்தின் அடுத்த கட்டம்தான். இன்று சிதம்பரமும் பிரச்சனையில் உள்ளது(தீட்சிதர்) .கண்டதேவி தேர் இழுப்பும் பிரச்சனையாய் உள்ளது(ஆதிக்க சாதி).

**

இந்தக்  கதையெழுதிகளில் எத்தனை பேர் இன்றும் பிரச்சனையாயிருக்கும்  பிரச்சனைகளை பொது வெளியில் பேசுகிறார்கள்? அல்லது களம் கண்டார்கள்? xxxxxxxx பெறாத கதைப்புத்தகங்களுக்கு விமர்சனம் என்ற‌ பெயரில் அடித்துக் கொள்ளுதல்  அல்லது புத்தகம் நன்றாக விற்க வேண்டும் , அமெரிக்காவில் மார்க்கெட்டிங்  பண்ண வேண்டும் என்று சாமியார்களுக்கு காவடி தூக்குதல்தான் இவர்களின் வேலை. 

இவர்கள், வர்ணாசிரமம் ரெக்கார்ட்டான்ஸ் ஆடிய காலத்தில், அதன் மீது சாணியடித்து பேயோட்டிய தலைவர்களின் செயல் நோக்கம் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். ஞான மரபுபரப்பியல் என்று ஜல்லி அடித்தால் போதாது. வர்ணாசிரமம் எதைப் பரப்பியது என்றும் தெரிய‌ வேண்டும்.

 "பெரியாரிஸ்ட்""   திராவிடஸ்ட்"  என்று கூறிக்கொண்டு பெரியாரை வைத்து ஜல்லி அடிப்பவர்களும் பைசா பார்ப்பவர்களும் , அதே பெரியாரை "பொந்து ஞான மரபு" போன்ற சங்கங்களில் இருந்து வந்து திட்டுபவர்களும் பெரியாரைப் புரிந்து கொள்ளாதவர்களே.

**

நீங்க கதைப்புத்தகம் மட்டும் எழுதுங்கள் , எதற்கு வரலாறு உங்களுக்கு?

ஏன் திராவிடம் என்ற‌ வார்த்தைப் பயன்பாடு என்பதில் ஆரம்பித்து....
திராவிடம் மொழியியல்
திராவிடம் அரசியல்
திராவிடம் சமூகவியல்
திராவிடம் கலைகள்
..என்று பல பகுதியாக ஆராயவேண்டியது.
**

நீச்சல் குளத்தில் அமுங்கி எந்திரிப்பதைப்போல 100 ரூபாய் கொடுத்து கதைபடித்துவிட்டு ஜல்லி அடிக்கும் செயல் அல்ல மக்கள் இயக்கங்கள். விரும்பியோ விரும்பாமலோ இந்த நிகழ்வின் தாக்கத்தில் அனைவரும் மழையில் நனைவது போல நனைந்துள்ளோம்.

வீரமணியைப் பார்த்து பெரியாரை அறிந்து கொள்ள முயற்சிப்பதைப்போல , இக்கால அரசியல் நிலையை வைத்து முந்தைய காலத்தின் வரலாறுகளை மனம் போக்கில் சிதைக்கக்கூடாது. ஒரு நாளைக்கு 50 பக்கம் டைப் அடிக்கத்தெரியும் என்பதற்காக எல்லாவற்றிலும் சலசல என்று எதையாவது உளறக்கூடாது. நல்லவேளை நீங்கள் எல்லாம் வரலாற்று ஆசிரியர்களாக அடையாளம் காணப்படாமல் கதைப்புத்தகம் எழுதுபவர்களாகவே அடையாளம் காணப்படுகிறீர்கள் உங்கள் இரசிகர்களால்.

தீபாவளி அன்று நடிகர்கள் கருத்துச் சொல்வது போல , கதை எழுதுபவ‌ர்கள் எல்லா விசயத்திலும் கருத்துச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

மக்களை எண்டர்டெயின் செய்யவும் , அவர்களின் பொழுதைப் போக்கவும், என்ன செய்தாலும் வெட்டியாகப்  போக்க முடியாத அவர்களின் பொழுதுகளை உங்களின் வார்த்தைக் குவியலால் நிரப்புங்கள்.

தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரன் என்பது போல , கதைப்புத்தகம் எழுதும் எல்லாரும் வரலாறு சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். வந்தார்கள் தின்றார்கள், அரபிகளின்  ஆயில் ரேகை வரிசையில் உட்கார்ந்த இடத்தில் வரலாறு எழுதும் வெட்டி வேலையை விட்டுவிடுங்கள் எழுத்து வியாதிகளே!

என்ன கொடுமை இது சரவணா?





.