Wednesday, March 31, 2010

அகில வொலக டமில் வலைப்பதிவர் சங்கத் தலைவர் பேட்டி - நினைத்தாலே கொலைநடுங்குகிறது

 தே வையிலிருந்தே அமைப்புகள் உருவாகுகிறது. அமைப்புகள் தேவைகளை உருவாக்காது. ஏன் அமைப்பாக வேண்டும்? தேவை என்ன என்பது முக்கியம்.
-  ஜமாலன் .

பதிவர்களுக்கான குழுமம் / சங்கம் / அமைப்பு ஏன் தேவையில்லை?
http://pktpariarasu.blogspot.com/2010/03/blog-post_31.html



ரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளீர்கள் ஜமாலன்.
இந்த உப்புமா மட்டும் அல்ல பெட்னா என்ற xxxxx எந்த தேவைக்காக உருவாக்கப்பட்டது என்று கேட்டால் தெளிவான பதில் இருக்காது.

பார்க்க பழைய பெட்னா சண்டை:
http://thekkikattan.blogspot.com/2009/07/fetna-2009-ii.html


" னமகிழ் மன்றம்"  என்ற அளவிலோ அல்லது "ரோட்டரி" ,  "இரத்தக்காட்டேரி" என்ற அளவிலோ யாரும் எங்கும் செயல்படலாம். எதற்கு இல்லாதவர்கள் , சேராதவர்கள் என்று அனைவரையும் குறிக்கும் விதமாக அனைவருக்கும் பொதுவான அர்த்தம்தரும்  "வொலக டமிள் வலைப்பதிவர் சங்கம் - தலிமை சென்னை" பெயர் வைத்து அசிங்கப்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை.

தி கந்தசாமி ன்னு ஒருத்தர் அதற்குமுன் யார் யாரோ உலகின் எந்த எந்த மூலையிலோ அவர்கள் பாட்டுக்கு தமிழில் டப்பா தட்டிக்கிட்டு இருந்தார்கள். அவர்களில் ஆரம்பித்து நாளை வரப்போகும் எல்லாருக்கும் சேர்த்து "மன்னார் அன்ட் கம்பெனி"  தலைமை வகிக்கும் ( லெட்டர்பேட் அளவில் என்றாலும்)  என்று சொன்னால்..எப்படி?   ஏம்பா உங்களுக்கு மனச்சாட்சிதான் இல்லை வெட்கம் கூடவா இல்லை?
  • "அறுபத்தின்மூவர் அணி"
  • "சென்னை சிட்லப்பாக்கம் 4 ஆவது குறுக்குத்தெரு சேஷாமணி தவிர்த்த (இன்னும் ரங்கபாஷ்யம் சேரவில்லை)மற்ற 3 பேர் கொண்ட தமிழ் வலைப்பதிவர் அணி"
‍  என்று ஒரு வரையறைக்குள் பெயரை வைத்துக் கொண்டால் பிரச்சனை இருக்காது. தமிழில் எழுதுகிறோம் என்பதற்காக  "வொலக டமிள்" சங்கத் தலைவர் என்று  ஒரு 1000 பேர் அல்லது  இலட்சம்பேர்  அவர்களாகவே சொல்லிக்கொள்வது "உலக நாயகன்"  என்று நமக்கு நாமே திட்டம் போல் அல்லவா இருக்கிறது.

மிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தபோது மற்ற நாட்டில் உள்ள தமிழர்கள் கலந்து ஆலோசிக்கவில்லை என்று முணுமுணுத்தனர் . இது ஏற்கனவே பல பெரியோர்கள் எடுத்த முடிவு என்று சொல்லி கலைஞர் ஒதுங்கிவிட்டார். கனடா,ஈழம், சிங்கை,மலேசியா போன்ற நாட்டின் தமிழ்ப் பிரதிநிகளுடன் சேர்ந்து ஒரு மேடையில் அறிவித்து இருந்தால் ஒரு நல்ல அங்கீகாரமாய் இருந்து இருக்கும். அதைச் செய்ய கலைஞர் தவறிவிட்டார்.

சி ல வருடங்களுக்குமுன்னால் "தமிழில் பதிவு எழுத சொல்லிக் கொடுப்பது" என்ற ஒற்றை நோக்கத்துடன் சிலர் சில இடங்களில் பட்டறைகளை நடத்திக் களைந்துவிட்டனர். தலையும் இல்லை வாலும் இல்லை சங்கமும் இல்லை என்றே நினைக்கிறேன். தேவையின் பேரில் சேர்வது. நோக்கம் முடிந்தவுடன் அவரவர் வேலையைப் பார்ப்பது என்ற இருந்தார்கள். இணையத்தில் அந்தமுறைதான் நல்லது.
நோ க்கம், தேவையைப் பொறுத்து தேவைப்பட்டவர்கள் மட்டும் அந்த நிகழ்வில் மட்டும் இணைத்துக் கொண்டு அது முடிந்தவுடன் வேறு வேலையைப் பார்க்கலாம்.
மு ழுநேரத் தொழிலாகக் கொண்டவர்கள் வேண்டுமானால் "தமிழ் வலைப்பதிவு உழைப்பாளர் மற்றும் அவர்களுக்கு பின்னூட்டம் இடுவோர் சங்கம்" என்று வைத்துக் கொண்டு புத்தகத்தில் கழிவு மற்றும் வடைக்கு சாம்பார் பெறலாம். அல்லது பேட்டி கொடுக்கலாம்.  ஏன் அய்யா அப்புராணிகளுக்கும் தலைவன் நானே என்று பொருள் வரும்படி "வொலக டமிள் பதிவர் சங்கம்" என்று பேசி இம்சிக்கிறீர்கள்.

ல நேரங்களில் தொழில் நடத்த அல்லது அந்த இடத்தில் புள்ள குட்டிகளோடு வாழவேண்டி,  விரும்பினாலும் விரும்பாவிடாலும் சில சங்கங்களுக்கு சந்தா அழுது, அதன் தலைவர் என்ற சாம்பிராணிகளுக்கு சலாம் போடும் அவலம் வரும். ஆனால் இணையத்தில் எதற்கு?

ப்படியே இவர்கள் ஆரம்பித்து ஒரு நாள் தினத்த‌ந்தியில் "அகில வொலக டமில் வலைப்பதிவர் சங்கத் தலைவர்ஜி அண்ணன்ஜி டுபுக்குஜி  அவர்கள்......"........................"  இவ்வாறு சொன்னார் " ...என்று வந்து,   அதை  எந்த மாங்காயாவது பார்த்துவிட்டு "என்ன நீயும்தான தமிழில் எழுதுகிற?"  (ஆங் அப்படியா நானா?  )   என்று கேட்டு மறைமுகமாக   "அப்ப  நீயும் அந்த டுபுக்கிற்கு தொண்டன்தானடா"    என்று நாக்கில் பல்லுப்பட கேட்டுவிட்டால் என்ன ஆகும் . நினைத்தாலே கொலைநடுங்குகிறது.


.
படம் உதவி:
picture courtesy
apollo-magazine.com

.

தம்மைத்தாமே நக்கிக்கொள்ளும் நாய்கள்‍ யார் யார்? - விளக்கம் : கதைபுக் ரைட்டர் ஜெய‌காந்தன்

  ஆ ரம்பகாலத்தில் இருந்தே தமிழ் பொழுதுபோக்கு கதைப்புத்தகம் எழுதுபவர்களை ,  மொழிபெயர்க்கப்பட்ட "பின்னங்கால் நவீன பிரியாணி"  பொட்டலம் விற்பவர்களை  பொழுது போக்கு வித்தைக்கரர்களாகவே பார்த்து வந்துள்ளேன்.

எந்தவித நேரடி அனுபவமும் இல்லாமல் மேசையில் உட்கார்ந்தபடி அமிஞ்சிக்கரையில் ஆரம்பித்து அமெரிக்கா தாண்டி அரேபியா வரை எதையாவது , எங்கிருந்தாவது எடுத்து உருவி ,படித்து கிழித்து குடுவையில் போட்டு குலுக்கி கலக்கி சமைத்து ...புத்தகமாகப் போட்டு "பிரிண்ட்டட் அண்ட் பைண்டட்" சந்தையில் விற்க அனுப்பவில்லை என்றால் ஜன்னி வந்துவிடும் என்ற அளவிற்கு தகவல் தொகுப்பை கதையாக கட்டுரையாக வெட்கமில்லாமல் படைப்பு என்று சொல்லி விற்கும் வல்லவர்கள்.

அதுவும் முற்போக்கு முகமூடி போட்டு சந்தில் சிந்துபாடும் கதைவியாபாரிகள் பார்க்க படு காமெடியாக இருப்பார்கள். அப்படி ஒருவர் கதைபுக் ரைட்டர்  ஜெய‌காந்தன் அவர்கள்.  இவர் கடைசியாக எழுதியது கர கர சங்கரா என்று நினைக்கிறேன்.

அவரின் அறிசீவிப் பேச்சை எனது சுய தகவலுக்காக இங்கே சேமித்து வைக்கிறேன்.



------------------------------------

23.4.05 அன்று சென்னையில் சமஸ்கிருத சேவாசமிதியில் ஜெயகாந்தனுக்கு நடத்திய பாராட்டுக் கூட்டத்தில் ஜெயகாந்தன் பேசியது:

"வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். ‘தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது.’
பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும், பேசவேண்டும் என்கிற தமிழறிஞர்கள், தம்மைத் தாமே நக்கிக் கொள்கிற நாய்கள்.
சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி நுழைந்திருக்காது."
                                                                  - கதைபுக் ரைட்டர்  ஜெய‌காந்தன்

கல்வெட்டு:
சரிங்க கதைபுக் ரைட்டர்  ஜெய‌காந்தன் நீங்கள் மட்டும் சமஸ்கிரகத்தை மட்டும் சாப்பிட்டு நல்லா இருங்க. இன்னுமாயா உலகம் உங்கள நம்புது?


தகவல்கள் உதவி:

ஜெயகாந்தன் பத்மபூஷன் விருது
http://kattamanaku.blogspot.com/2009/01/blog-post_25.html

மறைவிலிருந்து வெளித்தோன்றும் மநுவாதிகள் -சு. வெங்கடேசன்
http://www.keetru.com/visai/aug05/su_venkatesan.php

ஜெயகாந்தனின் நாய் பேச்சின் பொழுது நெல்லை கண்ணன் அவர்கள் எழுதிய கடிதம்

அன்புள்ள அண்ணாச்சி,
வணக்கம்.

தமிழனாக, தமிழுக்காகவும், ஏழைகளுக்காகவும் வாழ்ந்து ஏழையாகவே மரணமடைந்த தோழர் ப. ஜீவானந்தம், தங்களைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ‘‘தமிழைப்படி; தவறில்லாமல் எழுதப்படி என்று கற்றுத்தந்த தமிழால், முழுமையாக இலக்கணம் கற்று ஒரு முழுமையான தமிழ்ப்புலவனுக்குரிய தகுதி பெற்றேன்’’ என்று நீங்கள் எழுதியிருக்கின்றீர்கள்.

ஆனால் இன்றோ, ‘‘தமிழ் ஒன்றும் சொத்தல்ல. நான்தான் தமிழுக்குச் சொத்து’’ என்கிறீர்கள். எந்தத் தமிழில் எழுதினீர்களோ, எந்தத் தமிழ் உங்களுக்கு உணவு தந்ததோ, நீங்கள் அம்மணமாகத் திரிந்துவிடாமல் இருக்க ஆடை தந்ததோ, அந்தத்தமிழ் சொத்தில்லையா?

அத்தனை தமிழறிவையும் உங்களுக்குத்தந்த தோழர் ஜீவாவின் வாழ்க்கை போன்றதா உங்கள் வாழ்க்கை? அதனால்தான் ஏற்றத்தாழ்வுகளும் வர்ணபேதங்களும் இருந்தால்தான் வாழ்க்கை சுவைக்கும் என்கிறீர்கள்!

உங்கள் பிரளயம் அம்மாசிக்கிழவனும், விழுதுகள் ஓங்கூர் சாமியாரும், ரிஷிமூலம் ராஜாராமனும், பாரீஸக்குப் போ சாரங்கனும், ஒருவீடு, ஒரு மனிதன் ஒரு உலகம் துரைக்கண்ணுப்பிள்ளையும், ஹென்றிப்பிள்ளையும், யாருக்காக அழுதான் ஜோசப்பும், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் கல்யாணியும் அக்னிப்பிரவேசமும், சிலநேரங்களில் சில மனிதர்கள் கங்காவும் சுமைதாங்கியும், அந்தரங்கம் புனிதமானது அக்ரஹாரத்துப்பூனையும், ஒருவீடு பூட்டிக்கிடக்கிறதும் படித்து மேடைகள் தோறும் அவைகுறித்துப் பேசி வருகின்ற என்னால் தாங்கமுடியவில்லை.

நான் ‘சாதி’ பேசறதா நினைக்கக்கூடாது. ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்களில்’ நீங்கள் எழுதினீர்கள்’, எதிர்காலத்தில் என் பெயருக்குப் பின்னால் ஏதேனும் பட்டம் போட்டுக் கொள்ள ஆசைப்பட்டால் என் ஜாதிப்பெயரான ‘பிள்ளைமார்’ என்ற பட்டத்தையே போட்டுக்கொள்வேன்’ என்று. அந்தப் பிள்ளைமார்களில் ஒருவரான மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளைதான்,

‘‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து
சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே’’ என்கின்றார்.

வடலூர் இராமலிங்கம் பிள்ளையிடம் ஒரு துறவி ‘சமஸ்கிருதம்தான் எல்லா மொழிகட்கும் தாய்’ என்றாராம். வள்ளலாரோ ‘ஆமாம் ஆமாம்’ என்று சொல்லி, ‘தமிழ்தான் அனைத்து மொழிகளுக்கும் தந்தை மொழி’ என்றாராம்.

பிறமொழிகளைத் தூற்றுதல் கூடாது என்கின்ற தெளிவு எனக்கு உண்டு. ஆனால், எங்கேயும் வழக்கிலில்லாத மொழியன்றை தமிழைவிடச் சிறந்த மொழி என்று பேசுவதும், தமிழில் கலப்பின்றி பேசவேண்டும் _ எழுத வேண்டும் என்பவர்களை தங்களையே நக்கித்திரியும் நாய்கள் என்றும் சொல்லியிருக்கின்றீர்களே! ஆமாம். நாங்களெல்லாம் எங்கள் அன்னைத் தமிழுக்கு நன்றியுள்ள நாய்கள்தான்.

நீங்கள்..........?

தங்களின் ஞானத்தை பீடத்தில் அடகு வைத்துப் பெற்ற விருதிற்காகவா அன்னைத் தமிழைப் பழிப்பது? சாகித்ய அகாடமி விருது தந்த பொழுது ‘‘எனக்கு விருது தந்து சாகித்ய அகாடமி தன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டது’’ என்று பேசிய அந்த ஜெயகாந்தனா?  ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி எழுதிய கதையில், ஒருத்தி என்பதற்கு ஒருவள் என்று எழுதிய போது, இலக்கணத்தைப் படித்துவிட்டு, ‘‘இலக்கணத்தை மீறுங்கள். படிக்காமல் உடைக்காதீர்கள்’’ என்ற தாங்களா தமிழைப்பழிக்கின்றீர்கள்.

முன்பொருமுறை குமுதத்தில் ‘‘நான் முரண்பாடுகளில் மூட்டையாகிப்போனேன்’’ என்று எழுதினீர்கள். தங்களுக்கு வடமொழி நண்பர்கள் நிறைய உண்டு அறிவோம். அந்த வடமொழியும், வடமொழி நண்பர்களும் தங்களை வந்து சேர்ந்ததே _ அன்னைத் தமிழ் உங்களுக்கு அளித்த அளப்பரிய அறிவினாலும் எழுத்தாற்றலாலும்தான். இல்லையெனில் ஏது அந்த நட்பு?

நீங்களே எழுதியிருந்தீர்கள், ‘‘யாராவது வேண்டியவர்கள் உறவோ, நட்போ இறந்து போனால் அந்தச்சடலத்திற்கு மரியாதை செலுத்த வர வேண்டுமென்று அழைக்கக் கூடாது. ஏனென்றால் கம்பீரமான தோற்றத்தோடு பார்த்த அவர்களை பிணமாகப் பார்த்து அந்த உருவம் மனதில் பதிந்துவிடக் கூடாது’’ என்று.

எங்கள் நிலைமையைப் பாருங்கள். கம்பீரமாகப் பார்த்த உங்கள் உருவத்தை மறந்துபோக வேண்டிய சூழலை நீங்களே ஏற்படுத்தி விட்டீர்கள்.

பட்டினத்தார் சொல்வார் _ வயதானால் ‘‘செவி திமிர் வந்து, குழற மொழிந்து’’ என்று. திருநெல்வேலியில சாதாரணமா வயசானவங்க உளறுனா ‘‘போதங்கெட்டுப்போச்சு’’ம் பாங்க

உங்களுக்கு போதங்கெட்டுப்போச்சா?

உங்கள் தோழர் ஜீவாவும், ஞானத்தந்தை பாரதியும் நல்ல தமிழ் இருந்தும் வறுமையில்தான் செத்தார்கள்.

நீங்களோ வசதியாகி, வளமாகி, அதை வழங்கிய தமிழைப் பழிக்கின்றீர்கள்.

பொழச்சுப் போங்க அண்ணாச்சி!
அன்புடன்,
நெல்லை கண்ணன்...
கொறிக்க:
ஜெயகாந்தன் கோவை விழாவில் தகராறு
http://thoughtsintamil.blogspot.com/2005/06/blog-post_06.html

நன்றி கெட்ட ஜெயகாந்தன்

http://manikoondu.blogspot.com/2005/05/blog-post.html

ஜெயகாந்தனுக்குப் பொருத்தமான விருது ‘பத்ம பூஷன்’ மட்டுமல்ல ‘விபிஷணன்’ விருதும்தான்
http://mathimaran.wordpress.com/2009/01/29/


.......துணை வேந்தர் பொற்கோ "ஜெயகாந்தனின் பேச்சு பண்பற்றது, முறையற்றது என்று நாகரீகமாகச் சொல்லிவிட்டு பேச்சை முடித்துக் கொண்டார்"
http://njanapidam.blogspot.com/2005/04/blog-post.html

.

Wednesday, March 17, 2010

கடவுளைக் க‌ண்டேன் ‍- விமர்சனம்



பெ ரியாரிஸ்ட் என்றும் பெரியார்தாசன் என்றும் சொல்லிக்கொள்பவர்களை பார்த்தால் காமெடியாய் இருக்கிறது. பெரியார் சொல்லிக்கொடுக்க முயற்சித்தது பகுத்தறிவு. பகுத்தறிவின் ஒரு உப-விளைபொருள் கடவுள் என்பது பற்றிச் சிந்தித்து அவனவன் அவனுக்காக முடிவெடுப்பது. எதையும் புரிந்து கொள்ளாமல் சடாரென்று காலில் விழுவது, அல்லது எந்த தலைவனுக்காவது தன்னை ஒப்புக்கொடுத்து தாசன், இரசிகன், அல்லக்கை, சொம்பு என்று அலைந்து  திரிந்துவிட்டு; மறுநாள் இன்னொரு சமாச்சாரத்திற்கு தாசன்,இரசிகன்,அல்லக்கை,சொம்பு என்றாவது....அவர்களின் விருப்பம்.

விடாமல் சொம்பையும் முதுகில் கருத்துக் குப்பைகளையும் யாருக்காகவாது சுமந்துகொண்டு அலைவது என்பது தாசநோய் - க்கான அறிகுறி.


காட்சி1:
'சேசாஷலம்' என்ற ஒருவர் 'பெரியார்' என்ற ஒருவருக்கு , தன்னை ஒப்புக்கொடுத்தார். பெரியார்தாசன் ஆனார்

காட்சி2:
இடையில் அம்பேத்காரின் ஆசை வார்த்தைகளைக் கேட்டு புத்த மத சித்தாந்ததுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து சித்தார்த்தன் ஆனார்.

காட்சி3:
இப்போது சித்தார்த்தன் என்ற மனிதர் இஸ்லாத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து அப்துல்லாஹ் ஆகியுள்ளார்


சேசாஷலம்  என்ற ‌ பெரியார்தாசன் என்ற சித்தார்த்தன் என்ற அப்துல்லாஹ் - எப்போது? யாருக்கு? அடிமையாய் அல்லது தாசனாய் இருக்கிறார் என்று பார்த்தால் , அனைத்தும் கடவுள் என்ற ஒரு கான்செப்ட்டில் அவருக்கு விளைந்த மாற்றங்களாகவே இருக்கும்.  அவர் இதுவரை கடவுள் என்ற ஒரு கருத்தை ஒட்டியே வாழ்ந்துள்ளார். அதைத்தாண்டி அவர் பயணிக்கவே இல்லை. கடவுள் என்ற ஹருத்தை ஒட்டி அமைந்த ஆற்றில் ஒரு கரையில் இருந்தவர் மறு கரைக்குப் போய் உள்ளார் அவ்வளவே. 


இது எல்லாம் அவரின் சுய உரிமை என்றாலும், பப்ளிக்கில் எதையாவது மேடை கட்டி உளறிவிட்டு , கொஞ்சம்காலம் கழித்து அந்தர் பல்டி அடிக்கும் 'நித்தியானந்தாதனத்திற்கு'  விமர்சனம் தான்.  அதைத்தாண்டி,  'யாருக்கு சொம்பெடுப்பது' என்பது ஒருவரின் தனிமனித உரிமை.

அவர் இதுநாள் வரை வருணாசிரமத்தைத்தான் எதிர்த்தார் என்றால் அது உண்மையல்ல. இஸ்லாம் என்ற மதத்தையும், கிறித்துவம் என்ற மதத்தையும்  கலந்துகட்டித்தான் கேசட் போட்டார். அவருக்கு இருந்தது மதவிமர்சனம்.

இன்று கடவுளைக்கண்டுவிட்டார் . எப்படி? அதே மதங்களின் மூலமாக.

இது போன்ற தாச/இரசிக/தொண்ட/வாசக/ அடிமைகள் யாருக்காவது அடிமையாகவே இருப்பார்கள். சுயமாக இருக்கமுடியாத ஒரு வித ஜன்னிசார்ந்த மோன நிலை.  பாவம் இவரை வைத்து கேசட் போட்டு சம்பாரித்த மக்களும் இவருக்கு கைத்தட்டி இரசித்தவர்களும்.

குத்து அறியும் திறன் கொண்டவன்,  நாத்திகவாதியாகவோ அல்லது ஆத்திகவாதியகவோ இருக்க முடியாது. மிகச்சுலபமாக கடவுள் என்ற கோட்பாட்டைக் கடந்து செல்ல முடியும்.  நிச்சயம் அதை ஆதரித்து, அதற்கு 'சொம்பு தூக்கும் ஆத்திகவாதியாகவோ' அல்லது அதை எதிர்த்து 'தெருமுனையில் சொம்புவிற்கும் நாத்திகவதியாகவோ' இருக்க முடியாது.   அப்படி இல்லாமல் ஆத்திகம் அல்லது நாத்திகம் என்ற ஏதாவது ஒரு கட்சியில் இருந்தால், ஒன்றிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது என்பது சகஜம்.

"சின்ன வயசில் இரசினி இரசிகனா இருந்தேன் , இப்ப கமலுக்கு மாறிட்டேன்" என்பது போன்றது ஆத்திக <- ->நாத்திக கட்சி மாற்றம்.

ஆத்திகத்திற்குள் ஏற்கனவே இருக்கும் ஒருவர், ஒரு மதத்தில் இருந்து அடுத்த மதம் போவதும் இப்படித்தான். ஆனால் அது, கட்சிக்குள் அணி மாறுவது போன்ற ஒரு செயல். ஜானகி அணியில் இருந்து ஜெயலலிதா அணிக்குப் போவது போன்றது

பகுத்து அறிய முடிந்தவன் , கடவுள் என்ற ஒரு கான்செப்ட்டை (சித்தாந்தம்,/கருத்து)  ஒன்றைக் கடந்தவனாகவே இருப்பான்.
கடவுள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?

சுயம் இழந்தவர்ககளுக்கு  " யாருக்காவது அல்லது எந்த இசத்திற்காவது சொம்புதூக்காவிட்டால்" ஜன்னி வந்துவிடும் . சுயமாக இருக்கமுடியாது.

பகுத்தறிவு என்பது இசமா?
அதுவும் ஒரு இசம்தான்,  எல்லாவற்றையும் (பகுத்தறிவு  என்ற இசம் உட்பட) அலசி ஆராய்ந்து , பிறர் சொன்னதையும் அறிந்து, தாண்டி , கடந்து .... பயணித்துக் கொண்டே இருப்பதுஒன்றைப் பார்த்தவுடன் அல்லது படித்தவுடன் அல்லது அறிந்தவுடன் ஜன்னி வந்து சொம்பெடுப்பது அல்ல. 

.
மதங்களின் மூத்திரச் சந்துகளின் வழியாக வரும் கோர்வையற்ற நாற்றம்
http://kalvetu.blogspot.com/2007/12/blog-post.html

 .
Picture courtesy
When I Saw God in Valparai...
http://radz-cookiespensieve.blogspot.com/2009/07/when-i-saw-god-in-valparai.html

Thursday, March 04, 2010

தில்லு துர யாரு?





படம் உதவி
http://www.vinavu.com/2010/03/04/dillu-durai/