Friday, July 08, 2011

சமச்சீர் நோ நோ- நேக்கு வர்ணாசிரம பாணியில் உயர்வு தாழ்வு வேண்டும்.

 சமச்சீர் கல்வி என்றாலே என்ன என்று தெரியாமல் "அது நன்னா இல்லை, நேக்கு வர்ணாசிரம பாணியில் உயர்வு தாழ்வு வேண்டும்.

சம்ச்சீர் கல்வி என்றாலே என்ன என்று தெரியாமல் "அது நன்னா இல்லை, நேக்கு வர்ணாசிரம பாணியில் உயர்வு தாழ்வு வேண்டும். அப்பத்தான் சமூகம் நன்னா இருக்கும்" என்று பேசும் மக்கள் (மக்குகள்) புத்தகத்தைப் படித்து இருப்பார்களா?

வினவு தளத்தில் இருந்து இங்கு பகிரப்படுகிறது......

.....இந்த சமச்சீர் கல்வி எப்படி தயாரிக்கப்பட்டிருக்கிறது, அதில் என்ன இருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாது. இங்கு தோழர் இரணியன் சமச்சீர் கல்வி குறித்த பாடத்திட்டங்களை விரிவாக படித்து விட்டு தனது கருத்துக்களை இங்கே பகிர்ந்திருக்கிறார். 

மச்சீர்கல்வி பற்றிய விவாதங்களில் ஒன்றைக் கவனிக்க முடிந்தது. சமச்சீர் கல்வி வேண்டாம் எனச் சொன்னவர்கள் ‘சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களின் தரம் குறைவானது’ எனச் சொன்னார்கள். குறைந்தது 10 பேராவது இதனை என்னிடம் சொல்லியுள்ளனர். அவர்களிடம் அந்த நூல்களை வாசித்தீர்களா எனக்கேட்டேன். ஒருவரும் இல்லை என்றார்கள். மேலும் தரம் குறைவானதென எல்லோரும் சொல்கின்றனர் என்பதால் அவர்களும் அவ்வாறு சொல்வதாக ஒப்புக் கொண்டனர். அப்படி என்றால் சமச்சீர் கல்விப்பாட நூல்களில் என்ன சொல்லப்பட்டுள்ளன என்பதை அறிவதுதான் முதன்மையானதெனக் கருதி அரசின் இணையதளத்தில் போய்ப் பார்த்தேன். அதிலிருந்து பாடநூல்கள் எடுக்கப்பட்டு விட்டன. கூகிளில் தேடி ஒரு தனிநபரது இணையதளத்தில் இருந்து 5,7,8,9,10 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களை மட்டுமே எடுத்துப் படிக்க முடிந்தது. அவற்றில் கணக்குப் பாடங்களைத் தவிர பிறநூல்கள் அனைத்தையும் வாசித்ததில் இருந்து சில அம்சங்களைச் சொல்லலாம் எனக் கருதுகிறேன்.
பாடத்திட்டங்களை அனைத்துத் தரப்பினரின் பங்கெடுப்போடுதான் நூல்களாக்கி உள்ளனர். மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்துதான் நூல்களை உருவாக்கி உள்ளனர். பல நூல்களின் ஆசிரியர் குழுக்களில் தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளின் பேராசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு அறிவியல் நூலுக்கு தலைமை வகித்தவர் சென்னை ஐஐடி பேராசிரியர் ஆவார்.
பாடப்புத்தகங்கள் மனப்பாடம் செய்ய என இல்லாமல் சிந்திக்க, கலந்துரையாட, சுகமான வாசிப்புக்கு எனும் நோக்கில் வண்ணப்படங்கள், எளிய வரைபடங்கள் மூலம் அழகிய லே-அவுட்டில் அருமையாக இருந்தது.
பாட வாரியாக அவற்றில் நான் கண்ட நிறை குறைகளை இனி பார்ப்போம்.

மேலும் வாசிக்க கலந்துரையாட வினவு தளத்திற்கு......

மச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு!
http://www.vinavu.com/2011/07/08/samacheer-kalvi-syllabus/


***********************************************


மிகவும் அருமையான பதிவு. வினவிற்கும் , தோழர் இரணியனுக்கும் நன்றி!

கலந்துரையாடல்களை ஒரே இடத்தில் நிகழ்த்த வேண்டும் என்ற நோக்குடன் , பிற தளத்தில் இருந்து பகிரப்பட்ட இந்தப் பதிவிற்கு மட்டும் பின்னூட்ட வசதி நீக்கப்படுகிறது. உங்களின் கருத்துகளை வினவு தளத்தில் பகிரலாம்.




**