Tuesday, August 02, 2011

நீ என்ன ஒழுங்கா? மற்றும் எப்படி சகித்துக் கொள்கிறீர்கள் நீங்கள்?

டுத்தவர்கள்மீது விமர்சனம் வைக்கும் எவர்மீதும் வைக்கப்படும் கேள்வி இது. இதன் உள்ளார்ந்த அர்த்தம் "ஆமா நான் செய்தேன் (அல்லது செய்யவில்லை) கேள்வி கேட்கும் நீ செய்தாயா (அல்லது செய்யவில்லையா) ? என்பதே.  இந்தவகை உரையாடலில் கேள்விக்கான பதில் யாருக்கும் கிடைக்கப்போவது இல்லை. கேள்விக்கு அடுத்த ஒரு கேள்வியே பதிலாய் வரும். தமிழக அரசியல் சூழலில் இது மிகவும் சர்வசாதரணம். "அய்யா உங்க ஆட்சியில் பொதுமக்கள் டவுசர் ஏன் கிழியுது?" என்றால் அதற்கான பதில்:

கிழிந்திருந்தால்:
ஆம் என்று சொல்லி அதற்கான காரணத்தைச் சொல்லுதல் . "ஆம்,  அதற்குத்தான் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள்"  (அல்லது வேறு ஒரு காரணம்)

கிழியாவிட்டால்:
"இல்லை. எங்கே யாரைக் கிழித்தார்கள்?". என்று கேட்பது.

தமிழகத்தில் இது நடக்கவே நடக்காது. பதிலுக்கு ஒரு புது கேள்வி வரும். உதாரண‌த்திற்கு...

கேள்வி: "அய்யா உங்க ஆட்சியில் பொதுமக்கள் டவுசர் ஏன் கிழியுது?" அதற்கான பதில்: போன ஆட்சியில் ஜட்டிவர கிழித்தார்களே?

என்னமாதிரியான பதில் இது?  அமெரிக்க வெள்ளை மாளிகை பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடக்கும் கேள்வி பதிலில் அல்லது அமெரிக்க ஜனாதிபதியுடன் முக்கிய விசயங்களுக்காக நடக்கும் கேள்வி பதிலில் இந்தமாதிரி அபத்தமுறையில் பதிலுக்கு "இந்தாபிடி உனக்கொரு கேள்வி" என்று இருக்காது. ஆம்/  இல்லை என்று சொல்லிவிட்டு அதற்கான விளக்கம் இருக்கும். ஒற்றைவரியில் ஆம்/ இல்லை என்று பதில் சொல்லமுடியாத கேள்விகளுக்கு சற்று சுற்றி வளைத்த அதில் வரும். அவன் மட்டும் ஒழுங்கா? என்ற ரீதியில் பதில் இருக்காது.

என்ன சாபமோ தெரியவில்லை தமிழக‌ அரசியல் கட்சி தலைவர்களும் சரி தொண்டர்களும் சரி இப்படியேதான் இருக்கிறார்கள். நேர்ந்துவிடப்பட தொண்டர்களிடம் பேசவே பயமாய் இருக்கிறது. எந்த விமர்சனம் என்றாலும் "நீ ஒழுங்கா? அவன் ஒழுங்கா? அது ஒழுங்கா?" என்றே பதில் வரும்.

சரிதான் அய்யா. அந்தக் கட்சியும் ஒழுங்கில்லை. அல்லது எந்தக் கட்சியும் ஒழுங்கில்லை. பின்ன என்னதுக்கு நீங்கள் வேறு தனியாகக் கட்சி நடத்துகிறீர்கள்? எல்லாம் ஒன்றுதான் எதற்கு வேறு வேறு கட்சி?

"நீ என்ன ஒழுங்கா?" Chapter

ஒழுக்கம் என்பது ஏதோ உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் பொதுவான ஒரே ஒரு அர்த்தம் உள்ள ஒரே ஒரு அகராதி என்று நினைத்துக்கொண்டு கேட்கப்படுவது இது. முதலில் ஒழுக்கம் என்பது வீடு, தெரு, மாநிலம்,நாடு, கண்டம் , இனம்,மொழி ,பண்பாடு என்று பலவகைகள் கொண்ட ஒன்று. ஒரு இடத்தில் சரியெனப்படுவது மற்றொரு இடத்தில் தவறாக இருக்கும். எனவே இப்படி ஒரு ஓப்பன் சோர்ஸ் கேள்வியைக் கேட்கும்முன் , கேள்விக்கான சூழலை வரையறுத்துக் கேட்கப்படவேண்டும்.

உதாரண‌த்திற்கு சில.

1. பஸ்ஸில் பொம்பள பக்கத்தில் ஆம்பளை
 உட்காருவது சரியா?


மும்பையில் சரி ஆனால் உசிலப்பட்டியில் உசிலப்பட்டிபெண்குட்டி செருப்பால் அடிக்க வாய்ப்புள்ளது. எனவே இடம் பொருள் காலம் அனைத்துடனும் கேள்வி இருக்க வேண்டும்.

2. ஆபிஸ் வேலைக்கு டவுசரில் வரலாமா?

உசிலப்பட்டியில் உனது ஆபிஸ் வயக்காடு என்றால் வண்டிப்பட்டை அன்ட்ராய‌ரோடு என்ன கோவண‌த்துடன்கூட வரலாம். ஆனால் அதே உசிலப்பட்டியில் தாசில்தார் ஆபிசில் குமாஸ்தாகவாக இருந்தால் வண்டிப்பட்டை அன்ட்ராய‌ரோடு வேலை செய்ய முடியாது.

3. சித்தப்பா பொண்ணைக் கட்டிக்கலாமா? அக்கா பொண்ணைக் கட்டிக்கலாமா? (கட்டிக்கிற‌து = திருமணம்)
-ஒரு மதத்தில் சித்தப்பா பொண்ணைக் கட்டிக்கிற‌து சரி.
-வேறு மதத்தில் அக்கா பொண்ணைக் கட்டிகிறது சரி. இந்த மதத்திலேயே சில மாவட்டங்களில் ஒருசில இனக்குழுக்களில் அக்கா பெண்ணைக் கட்டுவது தவறு.

எனவே "நீ என்ன ஒழுங்கா" என்று கேட்கும்முன் நீங்கள் "இதுதான் ஒழுக்கம்" என்று நம்பும் உங்களின் விதிகளைச் சொல்லி, எங்கே அது கடைபிடிக்கப்படவேண்டும் என்றும் சொல்லி தெளிவாகக் கேள்வி எழுப்பினால் பதில் சொல்ல சுலபமாய் இருக்கும்.

அரசியல் கட்சி என்பது சில கொள்கைகளுக்காக இயங்கும் அமைப்பு. அதன் தொண்டர்கள் அந்தக்கொள்கையை ஏற்று , அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஒரே நோக்கத்தோடு உழைப்பவர்கள்.

காங்கிரஸ் ,திமுக, அதிமுக, க‌ம்யூனிஸ்ட் etc.,  போன்ற‌ கட்சிகளில் சேர, தானாக விண்ணப்பம் வாங்கி, உறுப்பினர் கட்டணம் கொடுத்து, கட்சியின் கொள்கைகளுக்காக மட்டுமே உழைக்கும் தொண்டர்களிடமும் , அதன் தலைவர்களிடமும்  "உங்களின் கொள்கை என்ன?" என்று கேட்டு, அன்றாடப் பிரச்சனைகளில் அவர்களின் (கட்சிக்கொள்கையுடன் பொறுந்தும்) சார்புநிலை என்ன என்று கேட்டு தெளிவான பதில் கிடைத்துவிட்டால் பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.





எப்படி சகித்துக் கொள்கிறீர்கள் நீங்கள்?
https://plus.google.com/102460823121199383626/posts/WJUEQydfe6j



சீட்டுக்காக மானம், மரியாதை, கொள்கை எல்லாவற்றையும் அடகுவைக்க வேண்டுமா என்ன?
http://kalvetu.blogspot.com/2011/03/blog-post.html

கட்சிக்கு நேர்ந்துவிடப்பட்ட மொக்கைகள்
http://kalvetu.blogspot.com/2010/11/blog-post_20.html

அரசியல் - கொள்கை மற்றும் இலக்கு மாறலாமா?
http://kalvetu.blogspot.com/2010/12/blog-post.html

ஏண்டா உனக்கு அறிவில்லையா? சொரணை இல்லையா?
http://kalvetu.blogspot.com/2011/01/blog-post_25.html

picture from:
http://www.negotiationlawblog.com/blawgs/guilty-of-betraying-niche-posting-politics-on-another-blog/