Thursday, April 23, 2015

எளக்கிய மொக்கைகளே கீப் இட் அப்.

(Image courtesy from :http://arablit.org/2012/06/20/syrias-war-literature/)
வரு பெட்னா (அட்லாண்டா) விழாவில் தேவர் புகழ் பாடினார். இவரு கலப்பில்லா தமிழை முயற்சி செய்பவர்களை நக்கிப்பிழைக்கும் நாய்கள் என்று பட்டம் கொடுத்தவர். இன்னொருவர் இணையத்தில் எழுதுபவர்களை மொண்ணைகள் என்றும் தமிழை ஆங்கில வரிவடித்தில் எழுதலாம் என்று சொல்லி இன்று வரை கரகம் எடுத்து ஆடிக்கொண்டு இருப்பவர். இன்னொருவர் "கேரளாவுல ரேக்ளா ரேசில்கூட மாட்டின் கழுத்தில் எழுத்தாளர் தொங்கிக்கொண்டு இருப்பார்" என்று சொல்லி வருபவர். முரண் என்னெவென்றால் இவர்கள் அனைவரும் எழுதிப் பிழைப்பது தமிழ். இப்படி பலர் ...சரி விடுங்கள் சாக்கைடையை கிளறினால் முத்தா வந்துவிடப்போகிறது எல்லாம் ஒரே குட்டையில் இருக்கும் மட்டைகள். என்ன மட்டைகளின் நீள அகலங்களில் வேறுபாடு உண்டு அவ்வளவே.

கத , கவிதை என்ற‌ தொழில் தாண்டி இவர்கள் அனைவரும் இயல்பு வாழ்வில் எல்லாரையும் போல சாதரண‌ர்களே. சாதிப் பாசம் அல்லது மதப் பாசம் அல்லது ஏதோ ஒரு மொழிப் பாசம் அல்லது சினிமா வாய்ப்பு , புகழ் என்ற பல நவரசங்களில் இருந்து இவர்களும் இரசம் சாப்பிட்டு அவர்களின் கருத்துகளை பொழிந்தவர்களே. இப்படி துறைரீதியாக சாதித்தவர்கள் பொதுவெளியில் (இயல்வாழ்வில்) எதையாவது சொல்லி/செய்து பல்ஃப் வாங்குவது புதியவிசயம் அல்ல.

எந்த சத்சங்கம் சிறந்தது? எந்த கத பொத்தகம் அக்மாரக் எளக்கியம்?

இரண்டு சினிமாக்களில் நடித்தவுடன் இரசிகர் மன்றம் வைக்கும் சினிமா கண்மணிகளைப்போல இவர்களும் இப்போது வட்டம் , சதுரம் என்று வரைந்து, அதற்குள் சில களப்போராளிகளை வைத்துள்ளார்கள். "எங்க ஆளு மேலாயாடா கைய வச்ச" என்று இவர்கள் கம்பு சுற்றுவார்கள். மடாதிபதி இவர்களுக்கு அவ்வப்போது சில பிச்சைகள் (காது குத்து நிகழ்வுகளில் முதல் வரிசை) போடுவார். வெளியில் இருந்து யாராவாது "இன்ன எங்க நடக்குது. இன்னும் புரியலையே" என்றால், "நாங்கள் வைத்துள்ள எள‌க்கிய யுனிவர்சிட்டியில் ,எங்கள் தல கையால் வாசக பட்ட டிப்ளமோ வாங்கி, சங்க மெம்பரானால்தான் படிமம் புரியும் அதுவரை பிகருகூட படியாது" என்று மொண்ணை வசனம் பேசுவார்கள்.

இப்படி கோமாளி சேர்த்த கூட்டமாய் இருக்கும் இவர்களுக்குள் எந்த சத்சங்கம் சிறந்தது? எந்த கத பொத்தகம் அக்மாரக் எளக்கியம்? புகழுக்காக எவன் அலையுறான்? என்று சண்டைகள் வேறு. இப்படி ஒரு மடம் அடுத்த மடத்தின்மீது போர் தொடுக்கும்போது , இவர்கள் பார்க்கும்/பார்த்த‌ தொழில் (கவிதை,கதை எழுதுவது) வழியாக வந்த இரசிகக் கண்மணிகள், அவர்களின் நம்பிக்கையின் பிம்பங்களின் வேர்கள் ஆட்டப்படும்போது பொங்குகிறார்கள்.

புகழுக்காக இப்படிச் செய்யலாம கண்மணி?

கார்பரேட் அடிமையுகத்தில் "மாப்ள ஒங்கூட வேலை செய்ததா இந்த தேதியில் இந்த நிறுவனத்தில் இந்த வேலை செய்ததாக போட்டுள்ளேன். தொலைபேசி வந்தா இப்படி இப்படி சொல்லிடுடா" என்று பிழைப்பிற்கும், அது தாண்டி அதிக சம்பளம், வசதி வாய்ப்புகளுக்கு பொய் சொல்லி பிழைத்தவர்கள் பலர். என்ன இதில் எல்லாம் சிபாரிசு செய்ததாகச் சொல்லப்படுபவனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு செய்வார்கள்.  அப்படி இல்லை என்றால் இழுத்து மூடிய மன்னார் அன்ட் கம்பெனியில் வேலை பார்த்ததாகச் சொல்லியும் வேலை பிடிப்பார்கள். அதுபோல ஒரு கவுச தொழிலாளி பொய்யான செய்திகளை போட்டு புகழ் ஏதோ ஒன்றை அடைய முயற்சித்துள்ளார். அவர் சொன்ன விசயம் எலக்கியவாதிகளின் அதிகாரபூர்வ Journal லில் வந்துவிட்டது. பொகழுக்காக இப்படிச் செய்யலாமா? என்ன இருந்தாலும் இவர் இப்படியா? என்று பொங்கித் தீர்த்துவிட்டார்கள்.

டமில் எளக்கிய வொலகில் அடுத்தவன் எழுதிய கடிதங்களை கதையாக்கி விற்பது, அடுத்தவன் எடுத்த/வரைந்த  படத்தை ஆட்டையைபோட்டு புத்தகத்தில் அட்டையாகபோட்டு விற்பது, அடுத்தவன் தொகுத்த ஒன்றை (அல்வாவை) தன் இலையில் வழித்து போட்டுக்கொள்வது போன்ற கேப்மாரிதனங்கள் நடந்துகொண்டே உள்ளது. அதுதாண்டி மார்க்கெட்டிங் என்ற ஒரு காதுகுத்து விழாக்கள் இப்போது நடக்கிறது. இந்த விழாக்களில் கதையை படிக்காமலே மேடையில் மைக்கைப்பிடித்து  "நான் இன்னும் இதப் படிக்கல ஆனால் பாருங்கள்...அந்த பனைமரத்தில் இந்த ஆடு கட்டப்பட்டுள்ள‌தால் ..." என்று ஒரு சான்றிதழை வழங்கிவிட்டுப் போவார்கள். எந்தவித வெட்கமும் இல்லாமல் அடுத்த காதுகுத்துவிழாவிற்கு இன்னொரு சினிமா சிகினாவை அழைப்பார்கள். இப்படியாக தொழில் போய்க்கொண்டு இருக்கும். இது எல்லாம் மார்க்கெடிங் என்றாலும் அடியில் ஒட்டும் இழைகள் புகழ், இருப்பைக் காட்டிக்கொளல் மற்றும் பிழைப்பு சார்ந்த ஒன்றாக இருக்கும்.

இந்த புகழ் போதை காதுகுத்துவிழாக்களில் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் சினிமா கீரோக்களையும், ஏப்பை சாப்பைகள் அவர்கள் அளவிற்கு ஒரு சினிமா போஃச்டர் ஒட்டிய‌வரையாவது அழைத்து வந்து பேச வைத்து நிம்மதியடைவார்கள்.  இந்த அக்கப்போர்களில் சாட்சியும் , வாதியும், பிரதிவாதியும் எல்லாம் எலக்கிய மொக்கைகளாகவே இருக்கும். எனவே யாரும் யாரையும் காட்டிக்கொடுத்துக்கொள்வது இல்லை.

இன்று கவுச தொழிலாளி மாட்டிக்கொண்டார்.  நாளைக்கே இந்த கவித கவுச தொழிலாளி பாட்டெழுத, அந்த மணி அய்யா இயக்க , அந்த இணைய மொண்ணை அய்யா வசனம் எழுத,  "எல்லாரும் வாங்க பழகலாம்" என்று அந்த சினிமா ஒலகம் ஒன்று சேர்ந்துவிடும்(காசு,பணம்,துட்டு).

இணைய மொண்ணைகளுக்கு எதுக்கு வம்பு?

பதிவுகள் எழுதி ரிட்டையர்ட் ஆன சம்முவத்தில் ஒரு காலத்தில் பலர் பின்னூட்டங்களை நமக்கு நாமே திட்டத்திலும், பிறருக்கு தொலைபேசி வலிந்து கேட்டு வாங்கியும் கணக்குகாட்டி பெருமையும் பட்டுக்கொண்டவர்கள் உண்டு. இத்தனை லைக்கு, இதனை ஃபாலோயர்ஃச் என்று இன்றுவரை ஏதோ ஒருவகையில் செய்தியைச் சொல்லிவிடுகிறார்கள் இங்கும். விடுங்க பாசு ..வாங்க பிள்ளைகளை படிக்க வைக்கலாம்.

எளக்கிய விருதுகளும் எருதுகளும்

அதிக பட்சம் 1000 பேர் படிக்கும் கத பொக் உற்பத்தி தொழில் துறையில் கதை, கவித புத்தகங்களை எழுதி விற்றுக்கொண்டு இருப்பவர்களுக்குள் இருக்கும் பல சண்டைகளில் முக்கியமானது விருதுச் சண்டை. தனக்கு கிடைக்காதவரை நோபல் பரிசே ஆனாலும் அது எனக்கு மசுறு என்று சொல்வார்கள். தனக்கு குச்சிமிட்டாய் கிடைத்தால்கூட அதுதான் "அக்மார்க் ஒரிசினல் மதுரை பாண்டியன் மார்க் அவார்டு" என்று சொல்லி குதிப்பார்கள்.

யாரும் சீந்தவில்லை என்றால் விஃசுணுவை அழைத்து சிறந்த படைப்புக்கான "வில்லாபுரம்" அவார்ட் கொடுத்து தங்களை நிலைநாட்டிக்கொள்ள முயற்சிப்பார்கள். இப்படி கடவுளுக்கே விருது கொடுத்த மொக்கராசு கமிட்டியில் இருந்த வண்டுமுருகன்கள் எல்லாம் அந்த போதையில் கொஞ்சகாலம் வந்தவன் போனவன் எல்லாரையும் "நீ எளக்கியம் படிச்சயா? படிமம் தெரியுமா? பரஞ்சோதி ஓட்டல் தெரியுமா ? மாஃச் ஓட்டல் மூளைக்கறி சுவை தெரியுமா? என்று கிண்டி கிட்னி எடுப்பார்கள்.

இவர்கள் மட்டும் இல்லாவிட்டால் தமிழ் இணைய வெட்டிப் பேச்சு பொரணிகள் சுவராசியம் இழந்து போயிருக்கும்.

எளக்கிய மொக்கைகளே கீப் இட் அப்.