Tuesday, April 27, 2010

ஈராக், கம்யூனசம் கலந்த‌ யோனிக் கவிதைக்கு நாங்கள்தான் அத்தாரிட்டி.

திவுலகில் யோனி என்ற சொல் கலந்து  பலர் எழுதியுள்ளார்கள். அதைத்தாண்டி தற்போது அரசியல்வாதியாய் இருக்கும் சல்மா  மற்றும் நானறியாத‌ பலர் இருக்கலாம். 

இன்னும் பின்னே சென்றால் ஆண்டாள் அப்புறம் சவுந்தர்யலகிரி .

விருந்து,மருதம், சரோஜாதேவி பத்திரிக்கைகளும் உண்டு.நா ப்கின் இல்லாமல் , யோனிக்கு சுருட்டி வைக்கக்கூடத் துண்டுத் துணியில்லாமல் இருக்கும் மக்களுக்கு.....
They don't use ANYTHING during menses ..felt criminal
http://kalvetu.blogspot.com/2007/03/they-dont-use-anything-during-menses.html
..... இளக்கியவியாதிகளின் யோனி எழுத்துப்புண்ணாக்கு ஒரு வெங்காயமும் செய்யப்போவது இல்லை.  எதையோ எழுதி  எண்டரைத் தட்டி "கவி இன்பம்" ,  "வாசிப்பு அனுபவம்" ,  "சுய இன்பம்" என்று 10 இளக்கிய வியாதிகளுடன்,   பேப்பரில் அச்சடித்து பைண்டு செய்யப்பட்ட பொஸ்தகமாக விற்க மட்டும் உதவலாம். புரட்சியும் வரப்போவது இல்லை புண்ணாக்கும் வரப்போவது இல்லை.

இவர்களால் 10 இலக்கியப் புண்ணாக்குகளைத் தாண்டி யாருக்கும் பயன் இல்லை, பாதிப்பும் இல்லை.  கேட்டால் ,  "இலக்கியம் என்றால் மக்களுக்கு ஏதாவது செய்யத்தான் வேண்டுமா? "  என்று பக்கவாட்டு நவீனம் பேசுவார்கள். மக்களுக்கான ஒன்று என்றால் அது மக்களுக்கான ஒன்றைப் பேச வேண்டும். எளக்கிய இன்பமும், வாசிப்பு இன்பமும் பெறும் ஒரு சுய இன்பக் கூட்டத்திற்கு மட்டும் என்றால் நீங்கள் சொல்வது சரி. எதையாவது பிதற்றலாம்.

ஆடு புழுக்கை போடுவதும் மாடு சாணி போடுவதும் இயல்பானது. இவர்கள் எழுதுவது எனக்குப் பிரயோசனம் இல்லாதது என்றாலும் அதுதான் அவர்கள். அப்படி எழுதும் சுதந்திரம் யாருக்கும் உண்டு. அடிப்படையாக ஒரே விதி, வாழும் நாட்டின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு  இல்லையென்றால் சங்குதான்.  சட்டங்கள் இல்லாவிட்டாலும் கலாச்சாரக் காவலர்கள் சுயமாக சொம்பெடுத்து வருவார்கள். அவர்களை எதிர்கொள்ளத் துணிவு வேண்டும்.

ஆனால், கலாச்சாரக் காவலராக இல்லாமல் போராட்டக்காரராக அறியப்பட்ட பதிவர் வினவு (வினவு என்ற பதிவு எழுதுபவர்கள் ) மற்றும் அங்கு வரும் பின்னூட்டங்கள் பதிவுலகப் போலீஸ் போலச் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
அய்யனாரின் பதிவில்
//வினவு said...
இங்கே நாங்கள் ஈராக் மக்களின் பிரதிநிதிகள் என்பதை இலக்கிய முட்டாள் அய்யனார் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை பணிவாக இல்லை உத்தரவாக சொல்கிறோம். //

யாருக்கு யார் உத்தரவிடுகிறார்கள்?

     ஈராக்காகவே இருந்தாலும் அவரவருக்கு மாற்றுக் கருத்து இருக்கும்.
     மாற்றுக்கருத்து இருந்தால் .... ?

அது என்ன உத்தரவு?
    பாட்டாளி ,வர்க்கம் பாடப்புத்தகத்தில் உத்தரவு என்பது எந்த அர்த்தம்?

நீங்கள் எந்த ஈராக் மக்களின் பிரதிநிதிகள்?
     சியா பிரிவிற்கா அல்லது ஷன்னி பிரிவிற்கா?

ஈராக் போர் என்பதே பெட்ரோல் சம்பந்தப்பட்டது.  அது தனி அரசியல். அதற்காக மாற்றுக் கருத்தே (உங்கள் பார்வையில் அது கேவலாமனதாக இருந்தாலும் ) இருக்கக்கூடாதா?  இராமன் என்ற மற்றவர்கள் புனிதமாக நம்பும் ஒரு உருவத்தை செருப்பால் அடிக்கக்கூடியவர் பெரியார். ஸ்டாலின் அல்லது மாவோ பற்றி எழுதினால் கோவம் வருவது, அவர்களின் "பிம்பம்" குலைக்கப்படுவதாலா? அல்லது அவர்களின் "இசங்கள்" சிதைக்கப்படுவதாலா? இசங்கள் சிதைக்கப்படுவதால் என்றால் , கொள்கை பற்றிக் கேட்காமல் ஏன் யோனி பற்றியே பொழுதுபோகிறது?

மக்கள் கலை இலக்கிய கழகம் (ம.க.இ.க) செய்துவரும் அல்லது முன்னெடுத்துவரும் சிதம்பரம் , இரட்டக்குவளைப் பிரச்சனைகள் போன்ற நாம் வாழும் சூழலில் களை எடுக்கப்பட வேண்டிய சமூகப்பிரச்சனைகள் பற்றிய புரிதலும் அதற்கான ஆதரவும் உண்டு. ஆனால் தலைவர்களைத் தொழுவது என்பது மதம் போன்றது என்பதனாலும், அதன் வழி வரும் அவர்களின் ஆக்ரோச அடக்குமுறைப் பேச்சுக்கள் பதிவுலகச் சுதந்திரத்தை கெடுக்கும் என்பதனாலும் கண்டிக்கப்பட வேண்டியது.

1. மக்கள் கலை இலக்கிய கழகம் (ம.க.இ.க) தின் அடிப்படைக் கொள்கைகள் என்ன?  ( தமிழ் மக்களின் கலை மற்றும் இலக்கியங்களை முன்னேற்ற / தொகுக்க/ காக்க / புதியவை செய்ய/ அல்லது கட்டுப்பாடு விதிக்க ??? )

2. ம.க.இ.க கம்யூனிச சார்பானதா?

3. ஆம் என்றால் , தமிழ் நாட்டில் தோன்றிய இந்த தமிழ் மக்கள் கலை இலக்கிய அமைப்புற்கும் கம்யூனசித்திற்கும் என்ன தொடர்பு? ( கம்யூனச அரசியல் சார்ந்த கலை இலக்கியதிற்கு மட்டும் ஆன அமைப்பா? அல்லது கம்யூனசக் கொள்கைகளை தமிழ் மக்களின் கலை இலக்கியம் வழியாக பரப்பவா )

3. புண்ணாக்கு கவிதைகளில் ,கதைகளில் ,கட்டுரைகளில்  "யோனி" என்று யாராவது எழுதினால் , ம.க.இ.க விடம் விளக்கவேண்டுமா? இவர்கள் என்ன கலை இலக்கிய யோனி அத்தாரிட்டியா?  ( ம.க.இ.க விடம்முன் அனுமதி அல்லது வீடுதேடி வந்து விளக்கம் கேட்டால் குடும்பம், பக்கத்துவீடு ஆரம்பித்து போலீஸ் , கோர்ட் வரை செல்ல ஆயத்தங்களுடன் "குஸ்பூ ‍ Vs திருமா/இராமதாஸ்"  போல இருக்க வேண்டுமா? )

4. அல்லது ஈராக், கம்யூனசிம் ,கம்யூனசித் தலைவர்கள் சம்பந்தமான  வார்த்தைகள் கலந்து வந்தால் மட்டும் விளக்க வேண்டுமா?


மன்மோகன் சிங்கை "கூட்டிக்கொடுக்கும் மாமா" என்று இவர்கள் சொல்வது போல (http://truetamilans.blogspot.com/2010/04/blog-post_17.html  ) மற்றவர்களும் மாவோ அல்லது யாரோ ஒருவரை விமர்சிக்கக்கூடும்.

வசைச்சொல் தாண்டி ஏன் அந்த வசைச் சொல் பயன்படுத்தப்படுகிறது? அந்த அளவிற்கு கொள்கைகளில் என்ன கேள்வி என்று கேட்காமல், யோனி என்ற வார்த்தையை வைத்து மல்லுக்கட்டுவது, நீங்களும் "கம்யூனச சாமிக்கூட்டம்" போல மனிதர்களை புனிதர்களாக்கிவிடும் வேலையை உங்களை அறியாமல் செய்கிறீர்கள்.   புனித பிம்பங்களின் மீதான காதலின் அடுத்த கட்டமாக "அடக்குமுறை" , "சர்வதிகாரம்" நோக்கிய திசையில் சரியாகவே அடியெடுத்து வைக்கிறீர்கள்.அய்யனார் ‍- யோனி நிலம்
http://www.ayyanaarv.com/2010/02/blog-post_16.html

லீனா -இரண்டு கவிதைகள்
http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2010/01/blog-post.html


தமிழச்சி - யோனிகளை ஏன் வெடி வைத்து சிதறடிக்க வேண்டும்?
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1884

ஓசை செல்லா- பெண்ணியம், ஆணியம், முலைகள், குட்டி ரேவதி

http://osaichella.blogspot.com/2009/03/blog-post_504.html


தகவலுக்கு:
நாரயணமூர்த்தி மன்மோகன்சிங் புனிதர்களா?
http://kalvetu.blogspot.com/2006/10/blog-post_09.html

மன்மோகன் சிங்கின் காமெடி..ஏம்பா லூசாப்பா நாங்க?
http://kalvetu.blogspot.com/2009/04/blog-post.html

கம்யூனிசம்-காந்தியம்-நாடி ஜோதிடம் மற்றும் பக்கவாட்டு நவீனத்துவம்
http://kalvetu.blogspot.com/2007/10/blog-post_26.html

India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா ?
http://kalvetu.blogspot.com/2007/02/india-inc-stinks-sez.html


Picture:
http://www.ezakwantu.com

Tuesday, April 13, 2010

"விக்ருதி", "விரோதி" என்ன கருமமய்யா இது ???
"விக்ருதி", "விரோதி" தமிழுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்?
மிழ்ப் புத்தாண்டு சித்திரைக்கு மாறியது எப்படி?
http://www.keetru.com/periyarmuzhakkam/apr07/tamil_new_year.php

தரணி ஆண்ட தமிழர்க்கு தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு
http://www.tamilwin.com/view.php?2aIWnJe0dHj060ecGG773b4F9EO4d2g2h2cc2DpY3d426QV3b02ZLu3e

வாருங்கள் சித்திரை புதுவருடத்தை கொண்டாடுவோம்… எமது இனத்தை அழித்த ஆரியர்களின் புதுவருடமாக…… இரா.துரைரத்தினம்
http://www.tamilwin.com/view.php?2b39VPe4b4cd94534beQHWU0e22m4DAdcd3EfuG2e0dJ0SpBce04c7G62cdbdevO30

தைப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை!
http://vovalpaarvai.blogspot.com/2008/01/blog-post_27.html

தை முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு
http://thirutamil.blogspot.com/2009/01/blog-post.html

தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!
http://vasanthanin.blogspot.com/2008/02/blog-post.html

பொங்கல்தான் புத்தாண்டா?
http://penathal.blogspot.com/2008/01/blog-post_24.html

http://penathal.blogspot.com/2008/04/blog-post_13.html

பொங்கல் சம்பந்தமான எனது முந்தைய பதிவுகள்:

பொங்கல் கொண்டாட்டம் சிலரின் தயக்கங்கள்.
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_113294177394608479.html

கேரளா ஓணமும் தமிழனுக்கு ஒரு கேள்வியும்
http://kalvetu.blogspot.com/2005/10/10.html

குற்றவுணர்வும் Thanks Giving Day யும்
http://kalvetu.blogspot.com/2005/10/12-thanks-giving-day.html

தீபாவளி பண்டிகையும் சில கேள்விகளும்
http://kalvetu.blogspot.com/2005/10/15.html

தீபாவளி தெரியும் Halloween தெரியுமா?
http://kalvetu.blogspot.com/2005/10/16-halloween.html

போகிப் பண்டிகை கொண்டாடும் முறை சரியா?
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_15.html

பொங்கல் கொண்டாட்டம்- தமிழக இஸ்லாம்,கிறித்துவ நண்பர்களுக்கு ஒரு கேள்வி.
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_21.html

Picture Courtesy:
http://www.randafricanart.com