Thursday, June 10, 2010

வாங்க செத்து செத்து விளையாடுவோம்‍ ‍ - ஈழக்கனவு அழிந்தாலும் விழா :: கோவை 2010

மொழி என்பது ஒரு இனத்துக்கான அடையாளம். அல்லது ஒரு இனம் அவர்களுக்காக சமைத்துக்கொண்ட முதல் ஊடகம் மொழி.  மொழி ஒரு இடத்தில் தோன்றினாலும், காலப்போக்கில் அந்த மனிதர்களுடன் பயணித்து எல்லா இடங்களிலும் அவர்களுடன் வாழும். அப்படி புலம் பெயர்ந்தவர்கள் அந்த மொழியைப் பேணாவிடில் மொழி அதுபாட்டுக்கு செத்துப் போகும். 


மொழிவாழ , இனம் அதைப் பயன்படுத்த வேண்டும்.
இனம் வாழ மொழி என்பது ஒரு வரலாற்றுத் தொடர்பு.
இரட்டைக்கிளவி போல ஒன்று இல்லாமல் மற்ற ஒன்று இல்லை.  

தமிழ் மொழியானது , இந்தியாவில் பண்டைய தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்டாலும் அது மணப்பெண் சீர்போல குடும்பத்துடன் பயணித்து தமிழ்க் குடும்பத்துடன் எல்லா இடங்களிலும் நீக்கமற‌ நிறைந்து உள்ளது. தாய்வீட்டில் ஒரு விசேசம் என்றால் அது தாய்வீட்டிற்கு மட்டுமானது அல்ல. தாய்வீட்டில் வேர்விட்டு இன்று எல்லா இடங்களிலும் கிளைபரப்பி வாழும் அனைவருக்குமான ஒன்று. யாருக்கு அதிக பொறுப்பு அதிகம் என்று கேட்டால் தாய்வீட்டில் வாழபவர்களுக்கு.

பொங்கல் நாளை தமிழ் ஆண்டின் தொடக்கமாக அறிவித்ததை அனைத்து நாட்டு தமிழ் பிரதிநிதிகளுடன் தாய்வீட்டில் இருந்து அறிவித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே , என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் போது அடுத்து ஒரு வரலாற்றுத்தவறு.

மொழியையும் இனத்தையும் காரணம் காட்டி, ஒரு எதிரி நமது சகோதரன் வீட்டில் கொலைகளை நடத்திவிட்டு சினிமா விழா எடுக்கிறான். ஆனால் ஈழத்தில் சண்டையை நிறுத்த உண்ணாவிரதம் இருந்து தமிழர்களைக் காத்த(??) உலகத் தமிழ் தலைவர் (??) தலைமையில் விழா. மொழியாலும் ,இனத்தாலும் வேறுபட்ட காரண‌த்தால் ,இழவு நடந்து பல ஆயிரம் பேர் புதைக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகும் இந்த நாளில் அந்த துக்கம் , ரணம் ,வடு ஆறாமல் , அதே மொழிக்கு விழா எடுப்பேன் என்று தாய்வீட்டில் நடந்தால் என்ன சொல்வது?

வாங்க செத்து செத்து விளையாடலாம்  என்றுதான்.



இந்தக் களேபரத்திலும் ஞாநி வழக்கம் போல பரீட்சா நாடகம் நடத்திப் பார்க்கிறார். அவரவர் அரசியல் அவர்களுக்கு.

ஈழம் குறித்தான எனது புரிதல்கள் எனது அனுபவங்களில் தோன்றியவை. இரசினி போல மணிரத்னம் படம் பார்த்து மட்டும் தெரிந்து கொண்டதல்ல. ஈழத்து அரசியல் மற்றும் போராளிகள் அனைவரது செயல்களிலும் விமர்சன‌ங்கள் உண்டு.அது குறித்த விரிவாக ஒரு நாள்.


வாய்ச் சொல் வீரர்கள்
http://masivakumar.blogspot.com/2009/05/blog-post_21.html



"உலகத்" தமிழ்ச் செம்மொழி மாநாடு புறக்கணிப்பு - 1
http://masivakumar.blogspot.com/2010/06/1.html

Image courtesy:
http://sunshinedaydream.biz
http://www.stolaf.edu

கடுப்பைக் கிளப்பும் - FeTNA சேர்ந்தே டான்ஸ் பாக்கலாம் கவித வாசிக்கலாம் வாங்க ப்ளீஸ்

கும்மி பெட்னா விழா FeTNA

அடுத்ததா ஆர‌ம்பிச்சுட்டானுக இவனுக இம்சை தாங்க முடியவில்லை. உலகத்துல எவன் செத்தாலும் அல்லது எவன் வீட்டில் எழவு நடந்தாலும் சினிமாக்காரர்களைக் கூட்டிவந்து வருசத்து ஒருமுறை சொம்பு தூக்கவில்லை என்றால் இவர்களுக்கு ஜன்னி வந்துவிடும். 1988 ல் ஆரம்பித்த இந்த மனமகிழ் மன்றம் அல்லது வருத்தமில்லா வாலிபர் சங்கம்  இதுவரையில் என்ன செய்துள்ளது என்றால்  " நாங்கள் வருசா வருசம் கலர் கலரா டான்ஸ் ஆடுறோம்" என்று சொல்கிறார்கள். சரிதான் மனமகிழ் மன்றம் செய்ய வேண்டிய வேலைதான்.  தாத்தா கலைஞர் செய்யும் செம்மொழி மாநாடு கூத்தைப் போல , இவர்கள் விடும் அறைகூவலே இந்தப் பதிவிற்கு காரணம்.

செந்தமிழால் சேர்ந்திணைவோம்
சேர்ந்தே டான்ஸ் பாக்கலாம் கவித வாசிக்கலாம்
மாத்தி மாத்தி சொறிந்து கொள்ளலாம்  வாங்க ப்ளீஸ்

என்று அறைகூவல் விட்டு இருந்தால் என்னைப்போல் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் இவர்களின் அறைகூவல்தான் கடுப்பைக் கிளப்புது யுவர் ஆனர். இந்த வருட பெட்னா மனமகிழ் மன்றத்தின் அறைகூவல்.
செந்தமிழால் சேர்ந்திணைவோம்
செயல்பட்டே இனம் காப்போம்
ஏன்யா இம்சைப் படுத்துறீங்க?

  1. இனத்தைக் காக்கவென்று உங்களிடம் ஏதாவது செயல்திட்டம் உள்ளதா?
  2. 1988 ல் இருந்து இன்றுவரை என்றாவது இனம் காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று குறைந்த பட்ச செயல்திட்டத்திற்கு உட்கார்ந்து பேசியுள்ளீர்களா?
யாரைக் கூட்டிவந்து டான்ஸ் ஆடவைக்கலாம், டிக்கெட் எவ்வளவு விற்கவேண்டும்?  எப்படி கும்மியடிக்க வேண்டும்?  என்று போட்ட செயல்திட்டத்தில்,  கடுகளாவாவது  இனம் என்றால் யார் யார்? அவர்களின் பிரச்சனைகள் என்ன? இனத்தைக் காக்க என்ன திட்டம் என்று , என்றாவது செயல்பட்டது உண்டா?  மார்க்ஸ்-ம் எங்கெல்ஸும் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கான மேனிவெஸ்ட்தான் தொழிலார்களைக் காக்க வந்த பைபிள்.  திட்டம் வரையறுத்தபின்னால்தான் அவர்கள் தொழிலாளர்களை நோக்கி அறைகூவல் விட்டார்கள்.

இனம் காக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?  இனம் செத்து ஒருவருடம் ஆகவில்லை. இந்த மொன்னையிலும் விழாவுக்கு வாங்க என்று ஜிகினாக்களை வைத்து விளம்பரம்  , சொம்பு தூக்கிக் கொண்டுள்ளீர்கள் . ஆட்டம் பாட்டம் சினிமாவில் நடிக்கும் அட்டக்கத்தி வீரன்கள் எல்லாம் வருகிறார்கள். என்ன சாதிக்கப் போகிறீர்கள் ? அசிங்கமாக இல்லை?

மெரிக்கத் தமிழர் அமைப்பு என்று சொல்லிக் கொள்ளும் இந்த பெட்னா மனமகிழ் மன்றம்  1988 ல் இருந்து இன்றுவரை 22  ஆண்டுகளாக அமெரிக்காவில் ஈழத்தமிழர்  அல்லது மலேசியத் தமிழர் அல்லது அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்காக என்ன அரசியல் அல்லது சமூகப் போராட்டங்களை முன்னெடுத்து உள்ளது? ஈழம் வெந்துகொண்டு இருந்த போது , இந்தக் கோமான்கள் அமெரிக்காவில் நடத்தியுள்ள அரசியல் மாநாடு,பேரணிகள் ஏதாவது உண்டா? அதாவது பெட்னா மனமகிழ் மன்றம் சார்பாக அல்லது அது முன்னின்று நடத்தியவை.

கதியாக வந்து அல்லது வேலைக்கான விசாவில் வந்து தங்கி இருப்பவர்களைக் குற்றம் சொல்ல முடியாது.  அவர்கள் அமெரிக்க அரசியல் அமைப்பை நோக்கி இது போன்ற போராட்டங்களை நடத்த முடியாது.   ஆனால், பெட்னாவில் பழம் தின்று கொட்டை போட்டு இன்று டான்ஸ் கச்சேரி நடத்தும் பொறுப்பில் இருக்கும் பலர் அமெரிக்க குடியிரிமை வாங்கியவர்கள். அமெரிக்க அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு இவர்கள் "இனம் காக்க" என்ன செய்தார்கள்?  பிச்சாத்து கிரீன்கார்டுக்காகவும் அதில் வந்த புராசஸ் தடங்கலை சரி செய்யவும் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளை கூட்டமாகச் சென்று  பார்த்தவர்களை நான் அறிவேன்.

சரி இந்த பெட்னா மனமகிழ் மன்றத்தின் கொள்கைகள் என்ன என்று பார்ப்போம்.

Why do they exist as a Sangam ?
என்று கேட்டால் இதுதான் அவர்கள் சொல்லும் காரணம்.

 http://www.fetna.org/index.php?option=com_content&view=article&id=47&Itemid=59
What is our objective?
To establish a centralized organization comprised of elected representatives of Tamil associations in North America and of individuals living in North America who have contributed to the objectives of the Federation and who join as Life Members.

ஒகே ... மெம்பர் சேர்த்தாகிவிட்டது. ஒரு குறிக்கோள் நிறைவேறிவிட்டது. அப்புறம் சார் ?

To cultivate, promote, foster, and develop the advancement of knowledge in Tamil language, literature and culture.

நெஜமாகவே இதில் என்ன நடந்துள்ளது என்று அறிய ஆவல்.
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழங்களில் சொற்ப அளவிலேயே தமிழ் உள்ளது. எத்தனை பல்கலை, தமிழ் மொழிக்கு துறைகளை ஒதுக்கியுள்ளது என்ற தகவலாவது உண்டா?

1.cultivate,
2.promote,
3.foster, and
4.develop

இதற்கு என்ன அஜெண்டா (action plan) உள்ளது ?


To cultivate, promote, and foster the exchange of ideas and understanding between the Tamil people and other cultures.
To promote better understanding and foster friendship among various Tamil associations in North America and to encourage the formation of new Tamil Sangams.


சங்கத்தை வைத்து என்ன செய்வது என்றே தெளிவில்லாதபோது நிறைய சங்கங்களை பெருக்கி ...அப்ப்புறம் சொல்லுங்க கேட்போம்??

To act upon charitable causes directly concerning the welfare of Tamil community living throughout the world.

காமெடி... மலேசியத் தமிழர்கள் அல்லது ஈழத் தமிழர்கள் அல்லது துபாய் தமிழர்கள் , கனடா தமிழர்கள் ...தமிழ் நாட்டுத் தமிழர்கள் ...இவர்களுக்காக செய்ய என்ன அஜெண்டா உள்ளது ?  என்ன **த்துக்கு வேர்ல்டு வைடு  என்று ப்லிம்?னமகிழ் மன்றம், வருத்தப்படாத வாலிபர் சங்கங்களுக்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை. சும்மா பொழுது போக்குச் சங்கங்களே இவை. கூட்டமாகச் சேர்ந்து பொழுதைப் போக்க நல்ல அமைப்பு.  மற்றபடி எதிர்பார்க்க ஒன்றும் இல்லை.  மனமகிழ் மன்றங்கள் என்ற அளவில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை.

"மானாட மசிராட"  போல டான்ஸ் காட்டுறோம் வாங்க பாசு நூறு ரூபாய்தான் என்றால் பிரச்சனை இல்லை. ஆனால்.....
கலாச்சாரம், தமிழ் வளர்ச்சி, உலகளாவிய தமிழ்த்தொண்டு, உலகத்தமிழர்நலன், என்ற அடிப்படை குறிக்கோள் ஜல்லியைத்தான் தாங்க முடியவில்லை. கடுப்பைகிளப்புகிறார்கள்


Why do they exist as a sangam ?

இதை நிர்ணயித்துவிட்டால். அதை எப்படி அடைவது என்பது பற்றி பேச வழி இருக்கும். இலக்கே சேர்ந்து கும்மி அடிப்பது என்றால் .....அதில் தவறே இல்லை. மனமகிழ் மன்றங்கள் அவசியம் தேவை. கொண்டாட்டங்கள் இல்லாத வாழ்க்கை சுவராசியமாக இருக்காது.

ஆனால் கூட்டம் வேண்டும் என்பதற்காக சினிமா xxxxக்களை வருடா வருடம் அழைத்தே தீருவோம் என்றால் அதற்கு ரிக்கார்டு டான்ஸ் நடத்தி கூட்டம்/பணம்/உறுப்பினர் சேர்க்கலாம்.  கூத்து நடத்துவதற்கும் வெட்டி அரட்டைகள் அடிப்பதற்கும் தமிழ் என்ற பெயரில் சங்கம் தேவை இல்லை. "மானட மசிராட சங்கம்" என்றே இருக்கலாம். அல்லது "நீயா? நாயா?" என்று அரட்டைக் கச்சேரி நடத்தலாம். சும்மா கூடி பேசி உண்டுகழிக்க வேறு பெயரில் சங்கம் நடத்தலாம்.

லகளாவிய தமிழர்நலன் ஜல்லி/சொம்புகளைவிட்டுவிடுங்கள். அது எல்லாம் ரொம்ப தூரம். சீசன் காலத்தில் அந்த சீசனுக்கு தகுந்த ஆட்களை கொண்டு வந்து பேசவைத்தால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன?  வட அமெரிக்காவில் ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸ் என்று வைத்துக் கொள்ளுங்கள்... அல்லது எந்த சொந்த பந்தமும் அமெரிக்காவில் இல்லாத புதிதாக அமெரிக்க பல்கலையில் வந்து சேரும் புத்தம் புதிய தமிழ் மாணவருக்கான‌ ( தமிழ்நாடு,இலங்கை,கனடா,மலேசியா...etc பின்னனி கொண்ட தமிழர்)  உதவி என்று வைத்துக் கொள்ளுங்கள் (பணம் அல்ல வழிகாட்டல்). இவர்களுக்கான எந்த உதவியாவது டமில் சங்கத்தில் இருந்து கிடைக்குமா?   தனிநபர்கள் செய்கிறார்கள் இல்லை என்று சொல்லவில்லை. சங்கமாக தமிழ்/தமிழர் வளர்ச்சிக்கு என்ன அஜெண்டா உள்ளது என்பதே கேள்வி?

சாதி,மத,பூகோளப் பாலிடிக்ஸ்.

செந்தமிழால் சேர்ந்திணைவோம் 

ஏன்யா விளையாடுறீங்களா? சாதிச் சங்கமாகச் செயல்பட்டுவரும் சங்கங்ககளையும்,  மத ரீதியாக பிரிந்து கும்மி அடிப்பதையும் என்ன செய்ய? வடக்கு கரோலைனாவில் சாதிக்கு ஒரு தமிழ்ச்சங்கம். xxx க்கு ஒன்று, மற்றவர்களுக்கு ஒன்று.  என்ன கொடுமை இது டமில்ஸ்?

மிழ் என்ற அடையாளத்தை மட்டும் முன்னிருத்தி, மற்ற அடையாளங்களை (சாதி மத தமிழ் நாடு, ஈழம்) தற்காலிகமாக இரண்டாம்பட்சமாக்கி (துறந்து) தமிழுக்காக மட்டும் சங்கமிக்க‌அனைவரும் இணைந்து செயல்படுவது என்பது இன்னும் சாத்தியமகவில்லை. து காற்றில் வெண்ணெய் எடுப்பது போன்றது.  அப்படியே ஒரு பத்துப்பேரைச் சேர்த்துவிட்டாலும்... டான்ஸ் ,சினிமா, கவித, காய்ச்சல் என்று சிலர்  "அதெல்லாம் எதுக்கு ? ஆளுக வரமாட்டாங்க. பாட்டு டான்ஸ் வச்சுக்குவோம்.ஜிகினா சிரயையும் பேச்சுப்புயல் டாம்டூம் தகரடப்பாவையும் கூப்பிடுவோம்...கூட்டம் வரும்"    என்று நம்மை சொம்பாக்கிவிடுவார்கள்.

யுவர் ஆனர் ,காபரே டான்ஸ் போட்ட்டால்கூட நல்ல கூட்டம் வரும் .  அல்லது ஏதாவது சாமியார்ப் பயல்களைக் கூட்டி வந்தால் குடும்பம் குட்டியோடு நிறையக் கூட்டம் வரும்.

 சேர்ந்தே இனம் காப்போம் என்று சொல்லாதீர்கள் யுவர் ஆனர் .  இனம் காக்க நினைப்பவன் ஜிகினாஸ்ரீ வந்தால்தான் வருவேன்  என்று சொல்ல மாட்டான்.  இனம் காக்கும் உணர்வே போதும்.



னது விமர்சனங்கள் எல்லாம் இவர்களின் அடிப்படைக் கொள்கைகள் கொள்கைகள் குறித்தே.  அது (இலக்கு) தெளிவாகிவிட்டால் எப்படிச் செல்வது என்று பேசலாம். விழாக்காலக்கூத்துகள் மட்டுமே சங்கங்களின் அஜெண்டா என்றால் அதில் தவறு இல்லை. கிராமத்தில் விழாக்காலத்தில் மட்டும் கூடும் விழாக்கமெட்டியாக இருந்துவிட்டுப் போங்கள். இனம் காப்போம் என்று சொல்லி டான்ச் ஆட கூட்டம் சேர்க்காதீர்கள். 


வாய்ச் சொல் வீரர்கள்
http://masivakumar.blogspot.com/2009/05/blog-post_21.html

தமிழ் பெரும் விழா - தாமரை - வைரமுத்து: Fetna 2009 - II
http://thekkikattan.blogspot.com/2009/07/fetna-2009-ii.html


Image Courtesy: http://images.all-free-download.com

Thursday, June 03, 2010

பைத்தியக்காரன் - ஏன் இப்படி?

ன் இப்படி? 
உங்களுக்கு நர்சிம் நண்பரா? (அதாவது பூக்காரி புனைவிற்கு முன்னர்)


நட்பு என்பது ஒரு உறவு (Relationship). சும்மா பார்த்தவன் / போனவன் / வந்தவன் எல்லாம் நண்பர்களாக அறிவித்துக் கொள்ளமுடியாது. அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள்(known people) அவ்வள‌வுதான்.


தோழமை என்பது என்ன ? நீங்கள்தான் சொல்ல வேண்டும்.


நர்சிம் தவறு செய்யும் பட்சத்தில் நேரிலேயே கேட்டுவிடலாமே? தவறு என்று அறியும் பட்சத்தில் உடன் இருந்து திருத்த வேண்டும். எல்லா முயற்சிகளையும் எடுத்துவிட்டேன் அடுத்து போலிசுக்குப் போவதைத் தவிர வழியில்லை என்ற நிலையிலா இப்படிச் செய்தீர்கள்? ஏன் இப்படி? 


புனைவு என்ற பெயரில் சுந்தர் அதீதன் கதைகள் எழுதினார். பாராட்டிக் கொண்டுதானே இருந்தீர்கள்? ஏன் அதில் வரும் பெண்கள் எல்லாம் யாரோ ஒரு முகமிலிகள் என்பதலா?  லீனாவின் குப்பைக் கவிதையை "அக்கம் பக்கம் கொடுப்போம்" என்று சொல்பவர்கள் உங்களின் கருத்தை ஒத்தவர்கள் என்றால் ,நீங்கள் சுந்தரின் கதைகளை அவர் வீட்டுக்குச் சென்றபோது ஏன் அக்கம் பக்கம் கொடுக்கவில்லை?  என்ன அரசியல் சார்போ ? இப்படி ஆகிப்போனீர்களே?


ரம்ப காலம் முதலே உங்களின் இலக்கியம்,புனைவு,பின் நவீனம் , புண்ணாக்கு , நீட்ஸே ... என்று எதுவுமே என்னைக் கவர்ந்தது இல்லை. பூக்கோ சொன்னால் என்ன? நீங்கள் வாழும் இடத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு பூக்கோ தத்துவம் உதவுமா? எல்லாவற்றையும் படித்து ஜன்னி வந்து சாமி கும்பிடும் சராசரி சினிமா இரசிகன் போலதான் இருந்தது எல்லாம். 


னால்..எல்லாவற்றையும் தாண்டி ஏதோ ஒன்றுதான் உங்கள் பதிவுகளை என்னை வாசிக்க வைத்தது. ஏன் இப்படி? இப்படி ஆகிப்போனீர்களே? 


ர்சிம் செய்தது தவறு. ஆனால், அவர் உங்களுக்கு நட்பு எனும் பட்சத்தில் அந்த தவற்றைச் சுட்டிக்காட்டி திருத்த வேண்டியது உங்கள் கடமை அல்லவா? அப்படி இல்லை என்றால், நட்பு என்று சொல்லக்கூடாது ( in that case ..I know him ..is a right word) . 


முன்னரே சொன்னது போல நட்பு என்பது ஒரு உறவு. திருமணம் போல , பிரிவதும் முறையாக இருக்க வேண்டும். அதற்காக நீங்கள் அவர் செய்யும் தவறுகளை மூடி மறைக்க வேண்டாம். நர்சிம் அப்படி ஒரு கேவலமான புனைவு (புண்ணாக்கு) போட்டவுடன் , நீங்கள் அவரின் நண்பர் எனும் பட்சத்தில் அவரிடம் கடும் சண்டை போட்டிருக்க வேண்டும். அவரை‌ உணர‌ வைத்து மன்னிப்பு கேட்க வைத்து இருக்க வேண்டும். 


வர் கேட்கவில்லை என்றால் இப்படி மண்டபத்தில் எழுதிக் கொடுப்பதைவிட அவரின் மனைவியிடம் சொல்லி நர்சிம்மை வற்புறுத்தி இருக்கலாம். அதுதான் நட்பு.  நீங்கள் நண்பர் என்று சொல்லிக் கொள்ளும் பட்சத்தில் நர்சிமின் குடும்பத்துடன் உங்களுக்கு நல்ல உறவு இருந்திருக்க வேண்டும்.குடும்பத்திற்கு தெரியாமல் பழக்கம் இருக்கலாம் ஆனால் நட்பு இருக்காது.  எல்லாவற்றையும் முயன்று அவை ஏதும் நடக்காத பட்சத்தில் அவரின் நட்பை (நட்பு என்பது உறவு) முறையாக முறித்து ( சுந்தர் செய்தது ) உங்கள் பதிவிலேயே உங்களின் தரப்பைச் சொல்லி இருக்கலாம். 


ன் இப்படி? 


ப்படியும் நர்சிம் கேட்கவில்லை , அவர் ஒரு மூக வியாதியாக வளர்கிறார் என்று நம்பினால் நீங்கள் சமூகத்திற்காக தெருப்போராட்டங்களைத் தொடங்கலாம். தவறே இல்லை. ஆனால் ஏன் இப்படி மண்டபத்தில் எழுதிக் கொடுக்கும் வேலை? நர்சிம்மைக் கண்டிக்க ஏன் மற்ற பதிவர்களை பெயர் போட்டு கிசுகிசுவாக எழுத வேண்டும்? சந்தனமுல்லையும் உங்களுக்கு நண்பர் எனும் பட்சத்தில் இதை நீங்கள் இன்னும் நன்றாகவே கையாண்டிருக்கலாம். இன்னும் உங்களுக்கு உங்களின் தவறுகள் தெரியவில்லை. 


இன்னும் கெட்டுவிடவில்லை..
பெண்களை பாலியல் ரீதியாக அசிங்கப்படுத்துவது மாகாக் கேவலம். சந்தனமுல்லை , நர்சிம் மற்றும் நீங்கள் எடுக்கப்போகும் முடிவுகளில் மூவரின் காயங்களுக்கும் மருந்து இருக்கலாம். நீங்கள் நினைத்தால் , நீங்கள் , நர்சிம் ,சந்தனமுல்லை மூவரும் குடும்பத்துடன் சந்தித்து மனக்குறைகளைப் பேசலாம்.



தவலுக்காக‌... 
நர்சிம் வலைப்பதிவில்  ஒரு ஆண் , பெண்னை அழகாய் இருப்பதாகச் சொன்ன உரையாடலில் ,ஆண் ‍ பெண் உறவுகள் குறித்து நான் சொன்னது..

http://www.narsim.in/2010/04/blog-post.html?showComment=1270136662014#c6748579570615881194

http://www.narsim.in/2010/04/blog-post.html?showComment=1270137778114#c7387149994588144776



1. ஒரு 'ஆண்' ஒரு 'பெண்ணை' "அழகாக உள்ளீர்கள்" என்று சொல்வது கொலைக்குற்றம் அல்ல.
2. 'உங்களுக்கு இந்த உடை அழகாக உள்ளது'. 'இந்த சிகை அலங்காரத்தில் நன்றாக உள்ளீர்கள்'... என்று ஆணோ பெண்ணோ ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்வது ஆரோக்கியமான , போலித்தனம் இல்லாத சின்ன சின்ன காம்ப்ளிமெண்டுகள். மனித உறவை ஆரோக்கியமாகவும் அர்த்தமாகவும் வைத்து இருக்கும்.
3. தினம் ஒரு ஆண் அல்லது பெண்ணை (இதற்குமுன் சந்திக்காதவர்கள்)எப்படியாவது பாராட்டிவிடுவது என்றே குறிக்கோளுடன் உள்ளேன்.
4. WoW I like your shirt என்று சம்பந்தமே இல்லாத பெண்கள் சொன்னதுண்டு. நானும் பலருக்கு சொன்னதுண்டு. சொல்லவேண்டும். அதற்கு இப்படி சின்ன சின்ன காம்ப்ளிமெண்டுகள் உதவுகின்றது.
5. ஒருவேளை பர்தா/மதம்/சாதி/சங்கம்/இன்னபிற காரணங்களால் ...ஒரு ஆணோ பெண்ணோ இப்படி சொல்லப்படுவது தனக்கு பிடிக்கவில்லை என்றால்...உடனடியாக தெரிவித்துவிட வேண்டும்.

இல்லை என்றால் சொன்னவருக்கு உங்களின் உணர்வு புரியவே போவது இல்லை. பதிவின் வழியாக நடந்திருந்தால்கூட உடனடி மறுப்பு சொல்லவேண்டியது கடமை. இல்லை என்றால் தவறான புரிதல்களோடு சொன்னவரும் கேட்டவரும் சரிப்படுத்த வாயிப்பில்லாமல் இருக்க நேர்ந்துவிடும். சொல்பவர்களும் மற்றவர்களின் உணர்வுகளை சூழலை எடைபோட்டு பேசவேண்டும்.

பாட்டி தானே என்று தடாலடியாக போய் பக்கத்தில் உக்காந்து கேவலப்பட்ட கதைகள் உண்டு. "எந்திரியிய்யா படிச்சவன் மாதிரி இருக்க இப்படி பொசுக்குன்னு பொம்பள பக்கத்துல வந்து உக்கார்ர " என்று மதுரைப்பக்கம் வாங்கிக் கட்டி சுண்ணாம்பான அனுபவமும் உண்டு. Can you please wait? I need to go to rest room என்று சொல்லிச் செல்லும் தோழிக்காக பெண்கள் ரூம் வாசலில் பையுடன் காத்து இருந்ததும் உண்டு.

6. குட் டச் பேட் டச் போல , பெண்களுக்கு இயற்கையிலேயே , ஒரு ஆணின் செயலுக்கான காரணம் அல்லது அந்த செயலின் நோக்கம் குறித்தான பல்புகள் எரியும் (ஆண்கள் போல மரமண்டைகள் இல்லை பெண்கள்). 

அப்படி இருக்கையில் .. "அழகாய் உள்ளீர்கள் " என்று சொன்னவரின் கண்ணைப் பார்த்தாலே அந்தக் கணத்தில் ஒரு "புன்னகை" (ஏற்பின் அடையாளம்) அல்லது "வழியாத இராசா" ( ஏற்கனவே அறிமுகமான நண்பரை காலாய்க்க) அல்லது இருக்கவே இருக்கிறது "எக்ஸ் குயூஸ் மீ" ( எனக்கு பிடிக்கவில்லை... How dare you to tell like that ?) என்று சொல்லி எண்ணத்தைப் பதிவு செய்யலாம். 

முதல் சந்திப்பில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை மனிதனாக மட்டும் பார்ப்பது அதாவது ஒரு ஆண் ஒரு பெண்ணை (அல்லது பெண் ஒரு ஆணை) அந்தப் பெண்பாலுக்கான உடலழகியல்கூறில் இருந்து தாண்டி ஒரு சக மனிதராய் முடியுமா என்றால், கஸ்டம்தான். அதற்கு பயிற்சியும் எதிர் பால் பற்றிய புரிதலும் அவசியம்.

ஆண் பதிவர்களுக்கும் பெண்பதிவர்களுக்கும் உடலரசியல் குறித்து ஷாலினியுடன் ஒரு கலந்துரையாடல் செய்வது அவசியம். நிச்சயம் நல்ல பயன் இருக்கும். இடைவெளிபோய் நல்ல புரிதல் வர வாய்ப்பு உள்ளது.
http://www.narsim.in/2010/04/blog-post.html?showComment=1270136662014#c6748579570615881194

http://www.narsim.in/2010/04/blog-post.html?showComment=1270137778114#c7387149994588144776



**
இது தற்காலிகமான பதிவு.  சில காலங்களில் அழிக்கப்பட்டுவிடும்.

நிகழ்கால (ஜீன் 03, 2010 ) தமிழ்ப்பதிவுகளின் அரசியல் தெரியாமல் யாராவது தெரியாமல் இதை வாசித்துவிட்டால்...

தமிழ் வலைப்பதிவர்கள் சிலருக்கு இடையே நடந்த மனவருத்தத்திற்கு எனது நாட்டாமைத்தனம் என்று கொள்ளலாம் . நர்சிம் ,பைத்தியக்காரன், சந்தனமுல்லை,சுந்தர் யாரையும் எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியாது. வலைப்பதிவுகள் மூலம் தெரிந்தவர்கள்  அவ்வளவே.

நர்சிமின் , சுந்தர் பதிவுகளில் சிலவற்றில் பின்னூட்டம் இட்டு உள்ளேன்.
பைத்தியக்காரனின்  பதிவுகளில் சிலவற்றில் பின்னூட்டம் இட்டு உள்ளேன். அதைத்தாண்டி சினிமா மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழ்ப்படங்கள் தேவை குறித்து 2 முறை மின்மடல் செய்துள்ளேன்.
சந்தனமுல்லை பதிவுகளைப் படித்துள்ளேனா என்று தெரியவில்லை. நான் அறியாதவர் என்றாலும் அவரின் மீதான பாலியல் புனைவை கண்டிக்கும் நோக்குடன் அவரின் பெயரை செர்த்துள்ளேன்.





Picture from: http://xprezz.dk/
.