Wednesday, May 29, 2013

இணையம் குப்பை. நாந்தான் லார்டு லபக்கு - கத புக் வியபாரி & ரைட்டரு காத்தவராயன்

துறை சார்ந்த அறிவு (அறிந்து வைத்து இருத்தல்) என்பது அந்த துறையில் இருப்பவர்களுக்கு இருக்கும். எனக்கு நன்றாக பலூன் பொம்மைகள் செய்யத்தெரியும். அதற்காக எங்கள் கிராம கோவில் திருவிழாவில், பலூன் ஊதி விற்பவரிடம் போய்,  "நான் யார் தெரியுமா? வாழ்நாளில் நீ இப்படி செய்வது உண்டா?"  என்று சவால் விட்டுக் கொண்டு இருக்க மாட்டேன்.  அவரிடம் இருந்து என்ன கற்கலாம் என்றே பார்ப்பேன். என்னை அவர் தெரிந்திருக்க வேண்டிய தேவையே இல்லை. ஒருவேளை அவர் என்னை தெரிந்து,  என்னை கேவலப்படுத்த கேள்விகள் கேட்டால்கூட அவரை வெற்றி கொள்ளவேண்டும் என்று எண்ணம் வராது.

ஏன் என்றால், ஊதுவது பலூன் என்றாலும், இடம் பொருள் பார்த்து அவர் செய்யும் தொழில் நுட்பங்கள் என்னைவிட சிறப்பாகக இருக்கலாம்.

****

இணையத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறேன். பிரிண்டட் அண்டு பைண்டட் கதை புத்தக வியபாரிகள், பிளாக்கர்கள் ஆக அவதாரம் எடுக்கும் முன்பே என்னைபோல பலர் இங்கே இருக்கிறார்கள்.  100 பேர் படிக்கும் பத்திரிக்கைகளுக்கு எழுதிக்கொண்டு இருந்த இந்த கிணற்றுத்தவளைகள் சொன்னது,(சொல்வது)  அவர்களின் பக்த கோடிகளுக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம்.

இணையத்தில் அனைவரும் கருத்து கந்தசாமிகள். எதையும் பீடம் சொல்லி தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில் யாரும் இல்லை. இணையத்தில் பத்தோடு பதினொன்றாகத்தான் இருக்க முடியும். இதை தாங்க முடியாமல் "இணையம் குப்பை. நாந்தான் லார்டு லபக்கு" என்று சொன்னால் , பஜனை மடங்களோடு உங்களின் சேவையை நிறுத்திக்கொள்ளலாம்.

****

உன்னை சாமான்யனுக்கு தெரியவில்லை. அதனால சாமான்யன் முட்டாள் என்று குற்றம் சாட்டிக்கொண்டிருக்காமல் , சாமான்யன் உன்னைத் தெரிந்து வைத்துக்கொள்ளும் அள‌வில் நீ என்ன செய்ய மறந்தாய் என்று பார். இல்லை என்றால் உனது பீடங்களின் அடியில் மண்டியிட்டுக்கிடக்கும் அடிமைகளிடம் மட்டும் பேசலாம்.  இணையப் பக்கம் வரவேண்டாம்.

****

இந்த இலக்கியவியாதிகள் 40 ஆண்டுகளாக இயங்குகிறார்கள் என்று கொள்வோம். இதுவரை இவர்களால் சமுதாயத்தில் ஒரு கருத்து மாற்றைத்தைக்கூட கொண்டுவரமுடியவில்லை. மாற்றங்களைக் கொண்டுவருபவர்களைத்தான் மக்கள் நினைவில் கொள்வார்கள். (பெரியார், கலைஞர், காமராசர்....)

உங்களின் கதைப் பொஸ்தகங்கள் 1000 பேர் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வந்தால் அது சமூக மாற்றம் அல்ல. அதன் வீச்சு அவ்வளவுதான். பொழுதுபோக படித்துவிட்டு, அதை விவாதிக்க மண்டபம் கட்டி பேசிக்கொன்டு இருக்கலாம். பூனை டாக்டர் கதையை படித்த 6 ஆம் வகுப்பு மாணவன்  "என்ன இது 50 % ஆங்கில வார்த்தைகளா உள்ளதே" என்று துப்பி விட்டான். ஒரு மாணவியின் பெற்றோர்கள் "நல்ல தமிழ் கதையா குடுங்க. இதில் பாதி ஆங்கிலமாக இருக்கு" என்று மகளை படிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.  பாலைவன மனிதன் நல்லா இருக்கு என்று சொல்கிறார்கள். ஆனால் கதையைப் படித்துவிட்டு ஆசிரியருக்கு கடிதம் எழுதும் குழந்தைகள் இவர்கள். இப்படி தற்பெருமை தம்பிரான்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமா என்று கவலையாக உள்ளது.

****

கதைப் புத்தகங்கள் எழுதுவதால் நீங்கள் எல்லாம் தெரிந்தவர் அல்ல. அது போல கதபுக் எழுதும் வேலை செய்வதால் நீங்கள் யாரைவிடவும் குறைந்தவரும் அல்ல.  நீங்கள் எழுதிய "பீ" கதைக்கு பீடம் விருது கொடுத்துவிட்டார்கள் கொடுத்துவிட்டார்கள் என்பதற்காக , கக்கூஸ் காவலாளியிடம் அறிவுசார் விவாதங்கள் நடத்தி , "நாந்தான் லார்டு லபக்கு"  என்று சொல்லி அலைய வேண்டாமே.

குளத்தை விட்டு வந்தால் முதலையும் மொக்கைதான்.இப்படி பலபேர் இருக்காங்க.....
பாஸ்போர்ட்' மருதன் வெளியிடாத பின்னூட்டம்
http://etamil.blogspot.com/2009/01/blog-post.html

ஹாய் மதனுக்கு ஒரு பகிரங்கக கடிதம்
http://www.varalaaru.com/default.asp?articleid=482

**