பாடகர்கள்
(ஆண் / பெண்) என்பவர்கள் ஏற்கனவே உலகம் தைத்து வைத்துள்ள சட்டைக்குள்
அடங்கக்கூடிய உடல் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்பது போல் இசை உலகம்
மாறிவிட்டது. அவர்களின் குரல் வளம் தாண்டி உடல்வளமும் ஒரு தகுதியாக
மாறிவிட்டது. அல்லது அவர்களே உடல்வளத்தையும் மாற்றி அதையும் ஒரு அங்கமாக
குரல்வளத்துடன் சேர்த்து சந்தைப்படுத்துகிறார்கள்.
மனதை மகிழச்செய்யும் உடல்வளம் என்பது நல்லதுதான். பாடல் என்பதுதாண்டி சின்ன அளவு காமமும் சேரும்போது சொக்கத்தான் வைக்கிறது. ஆனால் அந்த உடல்வளம் எல்லாப் பாடகர்களுக்கும் வாய்த்துவிடுவது இல்லை. வெறுமனே கிராமபோன் , வானொலி என்ற அளவில் இருந்தால குரலுக்குபின்னால் இருக்கும் உடல் பற்றிய தேவைகள் இருந்திருக்காது. தொலைக்காட்சியும், காட்சிகளுடன் கூடிய ஒலி-ஒளி தட்டுகள் வந்தபிறகு குரலுக்குப்பின்னால் உள்ள உடல் அழகு ஒரு முக்கியவிசயமாகமாறி வருகிறது.
அம்பேரிக்காவில் நடக்கும் பாடல் போட்டி நிகழ்ச்சிகள் (அதை பிரதியெடுத்து நடக்கும் டமில் நிகழ்ச்சிகள்) எல்லாம் உடல் அழகும் ஒரு பொருளாக மாறிவிட்டது. Ray Charles ( http://www.youtube.com/watch?v=Q8Tiz6INF7I ) போன்று கண்தெரியாத பலர் உள்ளார்கள். அவர்கள் புகழ் பெறவும் செய்துள்ளார்கள். பாடகர் வரிசையில் Andrea Bocelli ( http://www.youtube.com/watch?v=L8RG-U1LAG0 ) போல் பலர் உள்ளார்கள்.
ஆனால் வெளிப்படையாக பளிச்சென்று தெரியும் ஒரு உடல் குறைபாட்டுடன் (அப்படிச் சொல்வதில் உவப்பில்லை என்றாலும் வேறுபடுத்திக் காட்ட இந்த வார்த்தை) கையில் ஒரு ஊன்றுகோலை வைத்துக்கொண்டு சாதித்துக் காட்டிவரும் Singer Chris Hendricks சாதனை மனிதர்தான். இரண்டு கிடார் வாசிப்பவர்கள், ஒரு ட்ரம்மர் கொண்டுள்ள இவரின் சின்ன இசைக்குழு பல சாதனைகளைச் செய்து வருகிறது. http://www.youtube.com/watch?v=B8Mv2ngrweM
Singer Chris Hendricks
Who Is Chris Hendricks? http://www.youtube.com/watch?v=8BoN2djjYY0
சின்ன வயதில் பலரின் கேலிக்கும், கிண்டலுக்கும்.உதாசீனப்படுத்தலுக்கும் ஆளான இவர் அதையே ஒரு சவாலாக்கி சாதித்து வருகிறார். முக்கியமாக இவர்கள் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக பேசி, இசை நிகழ்ச்சி நடத்தும் ஒன்று சிறப்பானது. Singer Chris Hendricks க்கும் அவரின் குழுவினருக்கும் எனது அன்பும் மரியாதையும்.
நேற்று எனது மகனின் பள்ளிக்கு வந்து இருந்தார்கள். அவர்களை அழைத்துவர உள்ளூர் வணிகநிறுவனங்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் நிதி உதவி செய்துள்ளது என்று நினைக்கிறேன்.
#அடுத்த பெட்னாவிற்கு ஆண்ட்ரியாவா? என்று சொல்லி முடிக்கிறேன்