Friday, November 09, 2018

அறங்களின் அரசியல்:நடு நிலை என்பது அயோக்கியத்தனம்

றங்களில் இரண்டு வகை. அகம் சார்ந்த அறம் மற்றும் புறம் சார்ந்த அறம்.

அகம் சார்ந்த அறம்
ஒருவர் அவர் குடும்பத்தில் நல்ல அப்பாவாக, கணவனாக, மனைவியாக, மகனாக,தாத்தாவாக, பாட்டியாக இப்படி பல வடிவங்களில் அவர்களுக்கு பிடித்த, நல்லவராக இருப்பார். அப்பா வாங்கும் கையூட்டு, அம்மா செய்யும் அலுவலக அரசியல்கள் ஏதும் குழந்தைகளுக்கு தெரியாது . அவர்கள் அளவில், குடும்பத்திற்காக உழைக்கும் அப்பா அல்லது அம்மா நல்லவர்கள்.

இந்த அகம் சார்ந்த அறத்தை என்ன நட‌க்கிறது என்று தெரிந்தவர்கள் தவிர, மற்றவர்கள் விமர்சிக்க முடியாது. இது அவர்களுக்கான அக‌ அறம் very personal. அலுவலத்தில் வாங்கிய கையூட்டுப் பணத்தை, கடவுள் படம் போட்ட பீரோவில் வைத்து பாதுகாத்து, அதில் இருந்து கடவுளுக்கும் காணிக்கை செலுத்தும் மனிதர்களைப் பார்த்துள்ளேன். இங்கே கையூட்டு வாங்குவது எல்லாரும் செய்வதால் அவர்களுக்கான அறமாக‌ அவர்கள் நியாயப்படுத்திக் கொள்ளலாம்.

இணையத்தில் திருடிப் பார்க்கும் திரைப்படங்களை ஒரு கையால் டீல் செய்து கொண்டு, மறு கையால் புனித சிலைகளின் படங்களுக்கு சலாம் வைத்து டீல் செய்வது அவர்களுக்கான அக அறம்.

புறம் சார்ந்த அறம்
இது ஒவ்வொருவரும் ,அவர்கள் யார் என்று சமூகத்திற்கு பொதுவெளியில் அறியத்தருவது. இதில்கூட இரண்டுவகை உண்டு. அறிந்தே அறியத் தருவது , அவர்களை அறியாமலேயே அறியத் தருவது. புற அறம் மட்டுமே விமர்சிக்கப்படுகிறது மற்றவர்களால். இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு , நடிகர் சிவக்குமார் அவர்களின் செல்போன் வன்முறை. அவர் யார் என்று பொதுவெளியில் அறியத் தருகிறார். அதுவே விமர்சிக்கப்படுகிறது. வீட்டில் அவர் பேரப்பிள்ளைகளுக்கு அருமையான தாத்தாவாக அவர் இருப்பது பொருட்டல்ல இங்கே.

செயமோகன்
செயமோகன் அவரின் சார்பு நிலைகள் வழியாக அவர் யார் என்று பொதுவெளியில் அறியத் தருகிறார்.  அன்னா கசாரே ஆதரவு, வங்கியில் பணம் எண்ணும் பெண் விமர்சனங்கள், இணையத்தில் இருப்பவன் மொண்ணை, கலைஞர்-திராவிடம், மகாபாரத ரீமேக் என்று பல தளங்களில் அறியத்தருகிறார்.

அது தாண்டி, காசுக்காக தொப்பி&திலகத்தை குப்பையில் போட்டுவிட்டு, அதே கோலிவுட்டில் வசனம் எழுதுகிறார். ஒருவேளைச் சோறுக்காக ஒருவன் ஓட்டலில் திருடுவது அவனுக்கான அறமாக இருக்கலாம். தனது வியாபாரத்தை விரிவாக்க செயமோகன் செய்யும் சமரசமும் முன்னதும் ஒன்றுதான் என்று நம்ப உங்களுக்கு உரிமை உள்ளது. நான் அதை அயோக்கியத்தனம் என்பேன்.

சர்க்கார்
முருகதாசு, நோலனின் கதையை அப்படியே திருடியது உலகம் அறிந்த உண்மை.  https://www.youtube.com/watch?v=ugMgEytkG70

அன்னா கசாரே போன்ற பிம்பங்களை தாங்கும் செயமோகன் இப்படியான ஒருவரிடம் காசுக்கு சமரசம் செய்வது, சப்பைக்கட்டு கட்டுவது எல்லாம் அவரின் பிழைப்பு சார்ந்த விசயம் என்று விட்டுவிடலாம்.  ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்பின் வழியாக அவர் அவரின் அகஅறமாக சர்க்கார் படத்தின் வழியே சிலவற்றை அறியத் தருகிறார்.

இது முதல் முறை அல்ல. அவரின் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வந்தால் தெரியும். அவரின் புறஅறம் என்னெவென்று. எனது விமர்சனங்கள் அவர் அறியத்தரும் பேசுபொருட்களில் இருந்தே.

செயமோகன் ஒரு விசம்
ஆம் விசமனிதர்தான். திராவிடம், திராவிடக் கருத்துகள் திராவிடத் திட்டங்கள் அனைத்திற்கும் எதிரி.பெரிய சங்கி கூட்டத்தை, இலக்கியம் என்ற பெயரில் வளர்த்து வருகிறார். இந்த சங்கிக்கூட்டம் பண மதிப்பிழப்பின்போதும் சரி, எந்தவிதமான தமிழ்/தமிழ்நாடு சார்ந்த நிலைப்பாடுகளாக இருந்தாலும் அவர்கள் எதிர்  நிலையில்தான் இருப்பார்கள். இந்த சங்கிக் கூட்டம்தான் குசராத் படுகொலைகளுக்குப் பிறகும், சனாதன பிசேபி அரசை, மோடி என்ற உருவில் மாய்ந்து மாய்ந்து ஆதரித்தார்கள்.

ஆம், இவர் நன்றாக கதை எழுதுபவர்தான். நல்லா கதை எழுதுகிறார் என்பதற்காக, அவரின் அயோக்கிய சங்கித் தனங்களை, இங்கே பேசாமல் இருக்க முடியாது. தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்திக் கொள்ள முடியாது.

அவருக்கு அரசியல் உள்ளது அது எதுவென்று அறியத்தருகிறார். ரஞ்சித்தோ அல்லது பரியேறும் பெருமாள் "மாரி செல்வராசோ" செயமோகனிடம் வசனத்திற்காக போக மாட்டார்கள். செயமோகனின் அரசியல் களம் அதுவல்ல. எதிர் நிலை.

அவரிடம் போவதும் இருப்பதும் விச மனிதர்கள் அல்லது கதை என்னும் மகுடிக்கு மயங்கிய எளியவர்கள். அவர்களைப் பயன்படுத்தி அவர் விசம் பரப்புகிறார். அவரைக் கொண்டாடுபவர்கள் மோடிக்கு ஓட்டுப் போட்டவர்கள், ஆதரித்தவர்கள் அனைவரின் கையும் இரத்தக் கறை படிந்ததே என்பது என் நிலை. சின்ன கூட்டத்தில் விசம் வளர்த்துக் கொண்டிருந்த அவர் இன்று பெரிய மீடியாவை தன் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறார். துயரமான நிலை

கடவுள் & மதம்
ஆகச் சிறந்த அயோக்கியத்தனம் மத நிறுவனம். நான் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒருவன். என்னைப் பாதித்தது சனாதன(aka இந்து)மதம்தான். அதைத்தான் என் எழுத்தில், என் கோபங்களில் பார்க்க முடியும். அதற்காக, நான் பிற மதத்தை ஆதரிக்கிறேன் என்பதல்ல. அடிவாங்கிய இடத்தில், அடித்தவர்களை நோக்கி அழுகிறேன் அவ்வளவே. பிற இடங்களில் பிறர் வாங்கிய  அடிகளையும் உணர்ந்தாலும், என் தாய் மொழியிலேயே ,என்னால் கதற முடிகிறது. என் சூழ்நிலைகளே வந்து விழுகிறது கண்ணீராக.

உலகம்  இனிமையானதே
பரியேறும் பெருமாள் படத்தில் வரும் நாயகி போல, உலகம்  இனிமையானதே என்று வாழ்பவர்கள் ஒரு வகை. அப்படி இருப்பது உங்கள் உரிமை. இரவும் பகலும் வந்து போகிறது என்று தெரிந்திருந்து, ஆனால் "பகலிலும் கண்ணை மூடி இருப்பதே சுகம்" என்று நீங்கள் இருங்கள் தவறே இல்லை. அதற்காக, "பகல் என்பதே இல்லை" (இப்பெல்லாம் யாரு சாதி பாக்குறாக‌ வகை) என்று சொல்லாதீர்கள். சாதி,மத,வர்க்க அரசியல் எல்லா இடத்திலும் உள்ளது. இந்த மெய்நிகர் உலகிலும்.

"அது இருக்கிறது. ஆனால், நான் அது இல்லாததுபோல அனைவருக்கும் நல்லவராக இருக்க நினைப்பதால் கண்ணை மூடிக்கொள்கிறேன்" என்று சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்.
"இல்லையே இல்லை உனது பார்வைதான் தவறு" என்றால், அது குறித்தான கவலைகள் எனக்கு இல்லை. உங்களுக்கும் இல்லை என்பது எனக்குத் தெரியும்.

உரையாடல் சாத்தியமா?

https://youtu.be/CHxmO5QdinY


தனது மூதாதையர் கருப்பின அடிமைகளை வைத்து இருந்தவர். அவர் வைத்திருந்த ஒரு கருப்பின அடிமையாலேயே கொல்லப்பட்டார் என்பதை "ஆன்டர்சன் கூப்பர்"( Anderson Cooper) டிஎன்ஏ சோதனைகள் மூலம் அறிய வருகிறார். பேட்டியாளர் "அது horrible way to die" என்று சொல்லிவிட்டு , ஆன்டர்சனிடம், "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் do you think he deserved it? " என்று கேட்கிறார்.

ஆன்டர்சன் cooper சொன்ன பதில் "yea, I have no doubt". அதற்கு மேல் ஒருபடி போய், "It is awesome and I feel bad for the man who killed him" என்கிறார். தனது முன்னோர்களே என்றாலும், தவறை தவறு என்று சொல்வது.நீதியின் பக்கம் நிற்பது.

வரலாற்றுத் தவறுகளை ஏற்றுக்கொண்டவர்களிடம் மட்டுமே, அதற்கு அடுத்து என்ன செய்யலாம் என்று உரையாட முடியும். பரியேறும் பெருமாள் மாரி செல்வராசு, இறுதிக் காட்சியில் உரையாடவே விரும்புகிறார். அங்கே ஒருவர் அவரின் தவறுகளை, அவரின் சமுதாயத் தவறுகளை உணர்ந்து கொண்டு உரையாட வருவதால்.

பார்ப்பனிசத்தில், "தங்கள் முன்னோர்கள் முட்டாள்கள்,கொடியவர்கள்" என்று ஒத்துக்கொண்ட ஒருவரைக் காட்டுங்கள்.

தங்கள் முன்னோர்கள் செய்தது தவறு என்று உணர்ந்தவர்கள், நிச்சயம் அவர்களைப் போல வாழ மாட்டார்கள் வலிந்து திணித்துக் கொண்ட புற அடையாளத்திலும் அக அடையாளத்திலும். அவர்களிடம் உரையாடுவது என்பது, அவர்கள் சொல்லும் "நான் கண்னை மூடிட்டேன், இப்ப இருட்டு. வா பேசுவோம்" என்பது போன்றது. அத்தகைய போலித்தனமான உரையாட‌ல்களின் அவசியம் குறைந்துவிட்டது.

Call a spade a spade

அமெரிக்காவில் கறுப்பின மக்களை, வெள்ளையினத்து மக்கள் அடிமையாக நடத்திய‌ வரலாறு, இன்று ஒரு வெள்ளை ஆசிரியையால் பள்ளியில் பாடமாகவே சொல்லிக் கொடுக்கப்படுகிறது. American Civil War குறித்து, அமரிக்காவில் உள்ள எல்லா இனக்குழந்தைகளும் தெரிந்து கொள்கிறார்கள். மறைக்கப்படுவது இல்லை. மறக்கப்படுவதும் இல்லை.

தமிழகத்தில், இந்தியாவில் பார்ப்பனியம் செய்த கொடுமையை, முலை அறுப்பை, முலை வரியை, கோவில் தடையை,ஒரு தலைமுறையையே படிக்கவிடாமல் செய்ததை, வள்ளளாரும் நந்தனும் மறைந்ததை, ஆண்ட சாதிகள் கொடுமையை, உத்தப்புரச்சுவரை வரலாற்றுப் பாடமாக தமிழகத்தில் வைக்கவேண்டும். பிரச்சனைகளை, வரலாற்றை, வலியை சொல்லிக் கொடுக்கவேண்டியது அவசியம். இப்படிச் செய்ய மறந்ததால்தான் இன்இன்றைய‌ய சமுதாயம் பெரியாரை உடைக்கிறது.

வருடம் வருடம் நரகாசுரனை வதைத்து ஒன்றை எதையோ குழந்தைகளின் மனங்களில் நிறுவ முயல்கிறாரகள். இது  Continuous Reinforcement Dogmatism. இதையும் தாண்டி, வரலாறு சத்தமாக ஒலிக்கவேண்டியது அவசியம்.

வலிகள் வரலாறாக சொல்லித்தரப்படாவிட்டால் "இட ஒதுக்கீடு இல்லாட்டியும் நான் டாக்டராகி இருப்பேன்" என்று கிருட்டிணசாமிகள் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள்.
**

கீழே உள்ள உரைகளைக் கேளுங்கள். இதைப் பார்த்துவிட்டு ஒரு நிலையெடுங்கள். உங்களுடன் இருக்கும் நண்பர்களுடன் உரையாடுங்கள்.

கக்கூசு படம்
https://youtu.be/-UYWRoHUpkU


(கக்கூசு படத்தை என் குடும்பத்துடன் பார்த்தேன். என் குழந்தைகளின் கேள்விக்கு நான் சொன்ன ஒரே பதில்.  "ரேசிசம், பாசிசம், நாசிசம் போல பார்ப்பனிசம் இந்தியாவின் சாபக்கேடு" )

**
மறந்து போன வரலாற்றை மறுபடியும் நம் நினைவுகளில் துளிர்க்கச் செய்ய, அய்யா செந்தலை கவுதமன் அவர்களின் உரை

திராவிட இயக்கத்தை அழிக்க தமிழ்த்தேசியம் என்ற பெயரில் எட்டப்பர்கள்
https://youtu.be/IpayVYS938Iதிராவிட இயக்க வரலாறு - புலவர் செந்தலை கவுதமன்
https://www.youtube.com/watch?v=6wsfh5obNwE


கலைஞர் குறித்தும் திராவிடம் குறித்தும்
(Why Reservation Doctor Ezhilan Naganathan)
https://youtu.be/CAl4hdrlJ6o


பேசித் திரிந்த பழைய கதைகள்

இலக்கிய அடியாள்: செயமோகன்
http://kalvetu.blogspot.com/2017/03/blog-post_27.html

கதை விற்கும் டவுசர்களின் அட்டகாச வரலாற்று அறிவு மற்றும் சொம்பாய் மாறுதல்: செயமோகன் & மதன்
http://kalvetu.blogspot.com/2012/05/blog-post_17.html

பெரிய ஒலிபெருக்கியின் சப்தம்
http://kalvetu.blogspot.com/2016/08/blog-post.html

எளக்கிய மொக்கைகளே கீப் இட் அப்.
http://kalvetu.blogspot.com/2015/04/blog-post.html
*

Thursday, November 08, 2018

தாழப் பறக்கும் கொடி: இன்று நடந்த கொலைகள்

ழி நெடுக பல கொடிக் கம்பங்களைக் கடந்து செல்வேன். பள்ளிகள், கார் விற்பனை நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள் என்று. கடந்த சில வருடங்களாக, மாதங்களில் ஒருமுறையேனும் இந்தக் கொடி, தன்னை இறக்கிக் கொண்டு, யாருக்காவது அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும்.

இது வாடிக்கையாவிட்டத்து. Becoming a new normal.

எனது வாழ்நாளில் பெரும் பகுதியை இங்கே வாழ்ந்திருக்கிறேன், வாழ்ந்து கொண்டுள்ளேன். இந்த நாட்டின் அரசியலை, தேர்தலை புரிந்து கொள்ள வெகு நாளாயிற்று எனக்கு. அமெரிக்காவின் சட்டம், அது கொடுக்கும் சுதந்திரம் என்று பலமுறை அதிசியத்திருக்கிறேன். அதிகமாக கிராமங்கள் பக்கம் செலவழிப்பவன் என்ற முறையில், இவர்களின் துப்பாக்கித் தேவையின் அரசியல் அறிந்தவன். அதன் நியாயம் என்பது நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே.

அந்த சுதந்திரம், அந்த தேவையின் நியாயம், கணநேர கோப வெளிப்பாட்டின் கொலையாகவும், அரசியல் மதம் சார்ந்த பிரிவுகள் கொடுக்கும் அழுத்தங்களின் கொடுங்கொலைக்களமாகவும் மாறி வருகிறது.

பெரும்பான்மை மக்களின் ஓட்டுதான் அதிகாரத்தைக் கட்டமைக்கிறது. அந்த பெரும்பான்மை மக்களின் இதயங்கள் அழுகிவிடும் நிலையில், மனிதம் மாண்டுவிடுகிறது. துப்பாக்கிக்கான கட்டுப்பாடுகள், சட்டவடிவாக மாறும் என்பது என் நம்பிக்கை மற்றும் ஆசை.

கலிபோர்னியாவில் நேற்று இரவு நடந்த துப்பாக்கி சூட்டுக் கொலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி!

12 dead in California bar shooting
https://www.cnn.com/us/live-news/california-shooting-intl/index.html

Sunday, November 04, 2018

Irrational, victim shaming, dogmatism: They won’t be happy until all believe in that stupidity

தாழ்த்திக்கொண்ட மக்கள் அல்ல, தாழ்த்தப்பட்டவர்கள். ஒடுங்கிய மக்கள் அல்ல, ஒடுக்கப்பட்டவர்கள். 

சனாதன வேதமதம் (aka இந்து)  என்பது, அதன் பார்ப்பனிசத் தத்துவங்களை(வருண பேதம்) கடவுள் உருவாக்கியதாகச் சொல்கிறது. 

கீதை - அத்தியாயம் 4 சுலோகம் 13
------------------------------------------------------------
சதுர் வர்ணம் மயா சிருஃச்டம் (catur-varnyam maya srstam)
குண கர்ம விபாசக (guna-karma-vibhagasah)
தஃச்ய கர்த்ரம் அபிமாம் (tasya kartaram api mam)
வித்தய கர்த்தார அவ்யம் (viddhy akartaram avyayam)

இதன் பொருள்:
------------------------
நான்கு வர்ணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை. 
அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்ய வேண்டும்.அதனை மாற்றிச் செயல்பட வைக்க இந்த வர்ண தர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது.

இப்படிக்கு,
கிருட்டிணன் (கடவுள்)

**

இதைச் சொன்னால் பார்ப்பனிசம் கடைபிடிப்பவர்கள் (நவ பார்ப்பனர் உட்பட) இதன் பொருளை மாற்றி,  "அப்படியெல்லம் இல்லை. இது குணத்தால் வருவது.திராவிடம்தான் மாத்திச் சொல்கிறது" என்பார்கள். சரிதான் எந்த நூற்றாண்டிலாவது, அப்பா அம்மா அய்யர்/அய்யங்காரா இருந்து, அவர்களின் பிள்ளைகள் குணத்தால் வேறு வர்ணத்திற்கு மாறிய எடுத்துக்காட்டு உண்டா? அய்யர் அய்யங்காராக இருந்து அருந்ததி சாதிக்கு மாறிய, அல்லது அருந்ததி சமுதாயத்தில் இருந்து அய்யராக மாறிய ஒரு குடும்பத்தைக் காட்டுங்கள். ஏன் ஆயிரம் ஆண்டுகளாக குணத்தால் மாற்றம் நடக்கவில்லை வர்ணத்தில்.

இதைத்தான் மிசுடர் இந்துக் கடவுள் சொன்னார், "அதனை மாற்றிச் செயல்பட வைக்க இந்த வர்ண தர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது" என்று.

வேலைக்குப் போகும் பெண்களை விலைமாதர்கள் என்று சொன்ன ஒரு சாமியாரை அய்யர் இனத்தில் இருந்து விலக்கியா வைத்தார்கள்? பெண்கள் படுத்துதான் முன்னேறுகிறார்கள் என்று சொன்ன சிரிப்பு நடிகர் ஒருவர் இன்றும் அய்யராகவே உள்ளார். அவரின் குணத்தால், "தம்பிராசு சங்கம்" அவரை வேறு வர்ணத்திற்கு மாற்றி அறிவுப்பு வெளியிட்டுவிட்டதா என்ன?

**
சனாதன வேதம் என்பது, அய்யர் அய்யங்கார்களுக்காக அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மதம். அய்யர் அய்யங்கார்களின் உளவியல் அடக்குமுறை என்பது, கடவுள் என்ற கான்செப்டை ஒட்டியது. அவர்களின் அனைத்துச் சித்தாந்தங்களும் கடவுள் என்னும் ஒன்றைக் கற்பித்து, அதற்கு அருகில் தாம் மட்டுமே இருக்க  தகுதியானவர்கள் என்று சொல்லி, சாமான்ய மனிதனை நம்பவைத்து, காலம் காலமாக செய்துவரும் உளவியல் ஒடுக்குமுறை. Yes , continuous reinforcement of dogmatism.

இப்படியான ஒடுக்குமுறைகளில் இருந்து மக்கள் வெளியே வரவேண்டும் என்று சொல்லி கேள்வி கேட்டால், இத்தகைய செயல்களை விமர்சிப்பது மற்றவர்களின் தாழ்வுமனப்பான்மை என்று சுலபமாகச் சொல்லிச் செல்கிறார்கள்.

சாசுதிரம், சடங்கு மற்றும் பயமுறுத்தல் போன்றவை இத்தகைய‌ irrational behavior களை மக்களிடம் ஊக்குவிக்கிறது. சாதரண மக்களை ஆட்டுவிக்கும் உளவியல் சுமைகள் அதிகம். ஒரு காணொளியில், (https://twitter.com/_karunai_malar/status/1058957980878557185?s=09) அய்யர் அய்யங்கார்கள் தின்ற எச்சில் இலையில் அடுத்தவர்கள் உருள்கிறார்கள். இதை தாழ்வு மனப்பான்மையால் அவர்கள் செய்கிறார்கள் என்றால் அதைவிட மனித குரூர சிந்தனை இருக்க முடியாது. 
**

கோவிலில் பூசை செய்யும் அய்யர் அய்யங்கார் போல, தானும் கருவறைக்குள் நுழைய, சக "பறைய இந்து" போராடினால், அது அவர்களின் தாழ்வு மனப்பான்மையா? அல்லது எல்லா இந்துக்குமான உரிமை கோரலா?

வெள்ளையர்களைப் (white race) பார்த்து கருப்பின மக்களுக்கு தாழ்வுமனப்பான்மை என்று racism த்திற்கு சப்பைக்கட்டு கட்ட முடியுமா? அமெரிக்க கருப்பின அடிமைக்காலத்தில், அம்மக்களின் போராட்டம் அவர்களின் தாழ்வு மனப்பான்மையால் வந்ததா? அடிமைத்தனத்தை உயர்வா எடுத்து அப்படியே வாழ்ந்திருக்கனும் அதுதான் சரிபோல‌. 
**
அய்யர் அய்யங்கார் எச்சிலில் மற்ற மக்கள் உருளும்  இப்படியானதொரு இழிநிலையில் அவர்களை வைத்துள்ள  வேத சனாதனமதம்(aka இந்து) எப்படி அன்பே உருவானதொரு கடவுளின் மதமாக முடியும்? உருள்பவர்களைவிட, அப்படி உருள்வார்கள் என்று இப்படி எச்சில் இலை விழாக்களில் உட்கார்ந்து சாப்பிடும் மனிதர்களை என்ன செய்வது?

அய்யர் அய்யங்கார்களை முன்னிலைப்படுத்தும் Irrational சடங்குகளின் உளவியலில் இருந்து எப்படி சாமான்ய மனிதனை  விடுவிப்பது என்பதே பேச்சாக இருக்க வேண்டும். பெரியார் அம்பேத்கர் போன்றவர்கள் அதற்குத்தான் உழைத்தார்கள். அவர்களின் ஒடுக்கப்பட்ட நிலையை "அவர்களின் தாழ்வுமனப்பான்மை" என்று கார்பெட்டுக்கு அடியில் தள்ளிவிடுவது victim shaming.

**
பாசிய , ரேசிச, நாசிச வரிசயில் உலகிற்கு இந்துமதம் கொடுத்த கொடை பிறப்பால் இழிவு அட்டவணை தயாரிக்கும் பார்ப்பனிசம். 

அய்யர் அய்யங்கார் எச்சில் இலையோடு நிற்கவில்லை.
-------------------------------------------------------
இந்த பார்ப்பனியத்தனம் அய்யர் அய்யங்கார் எச்சில் இலையோடு நிற்கவில்லை. 

ஆணிவேர் வரை எல்லா சாதிகளிலும் உள்ளது.. திருப்பூரை அடுத்துள்ள அலகுமலை கிராமத்தில் சக இந்து (தாழ்த்தப்பட்ட) சமூகத்தினர் ஈசுவரன் கோயில்(??) வழியாகச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்ற நோக்கத்துக்காக சக இந்து ஆதிக்கசாதி மக்கள் (அது என்ன சாதி??) கம்பிவேலியை அமைத்திருக்கிறார்கள். இது இன்று நடப்பது.
https://www.vikatan.com/news/tamilnadu/141413-untouchability-issue-at-a-village-in-tirupur-district.html

"உங்களுக்கு வேணுமின்னா தனிக்கிணறு வெட்டிக்கோங்க" என்பது போல‌, "இந்தச் சாலை வழியேதான் போகனுமா என்ன?" என்றும் கேட்கலாம். இப்படி ஆதிக்க சாதியைப் பார்த்து போராடுவது, இந்தக் குழந்தைகளின் தாழ்வு மனப்பான்மை என்று கூட சொல்லலாம். அப்படிச் சொல்பவர்கள் நிச்சயம் கடவுள்கள்.
**

ஈசுவரன் கோயில் வழியாகச் செல்ல குழந்தைகளைத் தடுத்து வைத்துள்ளார்கள். இப்படியான கொடுமைகளைப் பார்த்தும் அந்த ஈசுவரன் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். எல்லாத்துக்கும் காரணமான, அனைத்தையும் அறிந்த, நம் தலைவிதியை ஏற்கனவே தீர்மானித்த, நம் துயரங்களையும டிசைன் செய்த, ஆர்க்கிடட்டான ஈசுவரனிடம் முறையிடமுடியாது. அப்படிச் செய்வது, மலேரியா குறித்து கொசுவிடம் பேசுவது போன்றது. "You cannot discuss your Malaria with the Mosquito!". 

Rational thought process கொண்ட மனிதர்கள்தான் சத்தம் எழுப்ப வேண்டும்.
**

Rational thought process கொண்ட மனிதர்களுக்கு  moral (ஒழுக்கம்) கிடையாது, அவர்கள் ஏன் இதைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள், அவஅறிவிலார்கள் (irrational people) . அல்லது,  "அறிவியலார்கள் இரகசியமாக கடவுளை ஏற்கிறார்கள்" என்ற சந்தேகம் அவர்களுக்கு. 

இது எப்படி உள்ளது என்றால், "தள்ளுவண்டி வச்சு நடக்கும் குழந்தை, அப்பா அம்மாவும் இரகசியமாக தள்ளுவண்டி வைத்துள்ளார்கள். இல்லாட்டி அவர்களால் நடக்க முடியாது" என்று நம்புவது போன்றது. மதக் கதைப்புத்தங்களை மறைத்து வைத்துவிட்டால், நீங்கள் (irrational people) உங்களின் moral (ஒழுக்கம்) value களை இழந்து, திருடனாக, கொள்ளைக்காரனக மாறிவிடுவீர்களா என்ன?  

Irrational people can be happy with their stupidity but looks like they won’t be happy until all believe in that stupidity.
*