Tuesday, October 20, 2020

நவராத் கொலு என்ற சனாதன பொம்மைக்கடை & கீழடி தமிழர் கொலு


"நவ்/நவ" என்பதும் "ராத்/ராத்திரி" என்பதும் தமிழ் சொற்கள் அல்ல.

கொலு (Kolu) என்பது குடியிருக்கும்,தொகுப்பு,இருக்கும் என்று பல பொருளில் பயனாகும் தமிழ்ச்சொல்.

👉 "இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்"


👉"தங்க தேரோடும் அழகினிலே இந்த ராசாத்தி கொலுவிருந்தாள்"
👇👇

👉"வாடிப்பட்டி சமசுதான மன்னர் முனியாண்டி அவர்கள் , அமைச்சர்கள் சூழ அவையிலே கொலுவிருந்தார்"

இப்படி அழகு, அலங்காரம்,தொகுப்பு ,இருப்பு.. பலவாறு பயனாகும் தமிழ்ச்சொல் "கொலு" (Kolu not Golu).

இது எப்படி சமசுகெரக "நவ்ராத்" & சனாதன சடங்குக்கு மட்டும் உடைய idea of god பொம்மைகளின் கார்ட்டூன்களின் சடங்காகிப் போனது? எதையும் தின்று ஏப்பம் விடும் பிராமணன், தமிழகப் பண்பாடுகளை சனாதனமயமாக்குவதே தொழிலாகக் கொண்டவன். அவனின் அயோக்கியத்தனங்களில் ஒன்றே இந்த பண்பாட்டு படையெடுப்பு. கோவில் எனப்படும் சிலைகளை வைத்து குறி சொல்லும் அறிவியலுக்கு புறம்பான கருத்துகளை வளர்க்கும் இடங்களை எப்படி களவாடி கருவறைத் தீண்டாமையை வளர்த்தானோ அதுபோலவே கொலுவும் திருடப்பட்டது.

இப்படி பொம்மைகளை வைக்கும் மண்டகப்படி குப்பைகள் வடக்கில் காசுமீர் கிந்துவிடம் இல்லை. ஏன் கொலு என்ற தமிழ்ச்சொல்லே தெரியாது அங்குள்ளவர்களுக்கு. எனவே இது கிந்துக்களின் கல்ச்சுராம் என்று பொய் சொல்லவும் முடியாது பிராமிண் வர்ணத்தானுகளால். ஆனால் இது தமிழகத்தில் பிராமிண் வர்ணத்தானுகளாலே முன்னெடுக்கப்பட்டு , நவ்ராத்திரி சடங்காக முன்னெடுக்கப்படுகிறது.
**
கொலு (Kolu) என்பது தமிழ்ச்சொல்.
அதை மீட்டெடுக்க வேண்டும் சனாதனிகளிடம் இருந்து 💪. இது எந்த மதத்திற்கானதும் அல்ல. பொங்கல் போல, இது பொதுவான சொல். அனைத்து தமிழர்களுக்குமானது irrespective of their religion.

பொங்கல் பண்டிகையின் போது அலங்காரம் செய்வதே தமிழர்களின் கொலு. பொங்கல் பானையில் இருந்து வீடுகளை வெள்ளையடித்து கோலமிடுவது எல்லாம் அலங்காரமே. அதில் நம் பண்பாட்டு அடையாளங்களை, கீழடி அடையாளங்களை, ஆதிச்சநல்லூர் அடையாளங்களை காட்சிப்படுத்தலாம்.

இது மதம் தொடர்பற்ற , அனைத்து தமிழர்களுக்கும் பொதுவான, அனைவரும் கொண்டாடும் ஒன்றாக, பண்பாட்டு  அடையாளமாக இருக்கவேண்டும்.💪💐🖤❤️💙

அதற்கு பொங்கல் நாட்களே சிறந்தது. 

நவராத்ரி நாட்கள் என்று "ராத்ரி நேரத்து பூசையில்" சனாதனமாக , மதமாக ஆக்கிவிடவேண்டாம். நவ்ராத் கொலு என்பது சனாதனச் சனியன்கள் நம்மிடம் ஆட்டையப்போட்ட கொலு.அதை தமிழர்களின் விழா அல்ல. சனாதனத்தின் விழா. தவிர்ப்போம் அதை.

#கொலு
#Kolu