Friday, December 03, 2021

ஆட்டுக்கார அலமேலும் அந்த ஆடும்: ரசினி என்ற நரி

"இதுதான் படத்தில் நடித்த ஆடு" என்று ஒரு ஆட்டை அழைத்து வந்தார்கள். எங்கள் ஊரில் இருந்த ஒரே தியேட்டர் "அசந்தா" தியேட்டர் மட்டுமே. "இன்று இப்படம் கடைசி" என்று இருக்கும் போசுட்டரில் குறுக்காக பட்டை ஒட்டிய காலம் அது.

மதுரை டவுனில் படம் ஓடி, ஃபிலிம் தேய்ந்தபிறகே எங்கள் ஊருக்கு வரும். இரண்டு வாரங்கள் தாண்டி ஓடினாலே அது எங்கள் ஊரில் "சில்வர் சூப்ளி".

இந்தப்படம் ஒரு மாதம் ஓடியது என்று நினைக்கிறேன். அப்போது, நான் எனது குண்டியின் பின்புறம் தெரியும் வண்ணம் "சன்னல்" வைத்த அரை டவுசரில் இருந்த காலம் என்று நினைக்கிறேன். என் சகாக்களும் அப்படியே. வேளாண்மை குடோனில் இருந்த சிமெண்ட் சறுக்கில், சறுக்கி சறுக்கியே எங்கள் டவுசரில் இயற்கையாகவே பின்னால் சன்னல் வந்திருக்கும். எங்கள் பெண் தோழிகள் அதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. சன்னல் வைத்த எங்கள் டவுசர்களுக்கு அவர்கள்  பழகி இருந்தார்கள்.

அன்று அந்த ஆட்டை மேள தாளங்களுடன் ஒவ்வொருதெருவாக அழைத்து வந்தார்கள்.எனது அம்மாகூட அந்த ஆடு அலமேலுவைக் காத்த கதையைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து கொண்டிருப்பார். அலமேலு வந்திருந்தால்கூட அவ்வளவு கூட்டம் கூடியிருக்குமா என்று தெரியாது. அவ்வளவு கூட்டம்.

ஆடு மதுரை திரும்பும் வரை என் போன்ற சன்னல் வைத்த டவுசர்கள் அதன்பின்னால் சுத்திக் கொண்டிருந்தோம். சந்தடி சாக்கில் ஆட்டின் கொம்பைத் தொட்ட ஒருவன் (முனியாண்டி என்று நினைக்கிறேன்) பேமசாகிவிட்டான். அடுத்தநாள் பள்ளியில் , பல பெண்கள் தங்கள் அழுக்குப் பாவாடையில் வைத்து காக்காய்கடி கடித்த கம்மர்கட்டை அவனுடன் பகிர்ந்தார்கள். சுமதி அவனுக்கு கொடுக்கவில்லை என்பது எனக்கு திருப்தி. அப்படிக் கொடுத்திருந்தால் அடுத்த நாள் அவளின் சைக்கிள் கடையில் அவளுக்காக நிற்கக்கூடாது என்று நினைத்து இருந்தேன்.

தியேட்டரில் கடலைமிட்டாய் விற்கும் அண்ணன் ஒருத்தன் எங்கள் பக்கத்து வீட்டுக்காரன். அவனுக்கு ஆட்டின் பின்னால் போகும் பாக்கியம் கிடைத்தது மதுரவரை.

சில வாரங்களுக்குப்பின் அவனிடம் , "எண்னே , இப்ப அந்த ஆடு எங்க இருக்கு? மெட்ராசுக்கு நடிக்கப் போயிருச்சா? என்றேன். "போடா வெண்ணை , அது அன்னிக்கே மிளகரணைப் பிரிவில் பிரியாணியாயிருச்சு" என்றான். மருத போகும் இடத்தில், 'குமாரம்' தாண்டி 'மிளகரணை'ப் பிரிவில் அதை பிரியாணியாக்கிட்டார்களாம்.

சாராயம் பிரியாணி என்று அலமேலுவின் ஆட்டைத் தின்று செரித்து விட்டார்கள்.

"அய்யோ! அப்போ அது சினிமா ஆடு இல்லையா? புதுப்பட்டித் தியேட்டருக்கு என்ன பண்ணுவாங்க?" என்றேன்.

"டிஃச்டிரிபூட்டர் வாடிப்பட்டி சந்தைல புது ஆடு வாங்கித்தருவார் அவுகளுக்கு. அதுவும் படம் ஒருவாரத்துக்கு மேலயாவது ஓடினாத்தான்" என்று சொன்னான் அந்த அண்ணன்.
**

காலம் முழுக்க சினிமா ஆடுகள் தெருவுக்கு வந்து போகிறது. ஆடுகளாவது பிரியாணியாகும். இந்த நரிகளால் என்ன பயன்?

நல்ல வேளை காந்தி செத்துட்டார். "எதற்கெடுத்தாலும் சாப்டாமா அழிச்சாட்டியம் உண்ணாவிரதம் செய்தா நாடு கெட்டுப்போயிடும்" என்று ஆன்மீகம் குருத்து சொல்லிருக்கும்.

G+ Post 05/30/2018

Sunday, November 14, 2021

சனாதனம்,பிராமணன்,பார்ப்பனியம், அந்தணர்,வர்ணம், சாதி: சொல்-பொருள் விளக்கம்

சனாதனம்:

சமசுகெரகச் சொல். அதன் பொருள் "என்றும் மாறாதது". அதாவது அதில் சொல்லப்பட்டவைகள் எக்காலத்திலும் யாராலும் மாற்றமுடியாதது. (இந்த விளக்கமே அறிவியலுக்கு முரணானது). மாற்றவே முடியாதது என்று சொல்வதன் நோக்கம், "இது உனக்கு விதிக்கப்பட்டது. அவ்ளோதான். நாங்க எழுதிவைத்ததைக் கேள்." என்ற அரசியலே.

(சனாதன்) வேதம்:

அப்படி மாற்றவே முடியாத(சனாதன்) ஒன்று எது? அதை எழுதினார்கள்?என்றால் அதுதான் வேதங்கள் எனப்படுபவை. இந்த வேதங்களை யார் எழுதினார்கள்? ஆரிய பிராமின்கள். ஏன் எழுதினார்கள்? கதைகளின் மூலம் வரலாற்றைக் திரிக்க & தங்களின் கருத்தை சமூக சட்டமாக்க.

கர்மா:

சமசுகெரக பொருள் விதிக்கப்பட்டது.

தர்மா/தர்மம்:

சனாதன தர்மத்தின் சுருக்கம்.

(தமிழில் அறம் மட்டுமே உள்ளது. அது பிறப்பால் வருவதும் இல்லை. பரிகாரம் செய்தால் போவதும் இல்லை. அது சமூக நன்னடத்தை அவ்வளவே)

எமதர்மன்: சனாதன தர்மத்தை execute செய்பவன்.

தர்மன்: எம தர்மனுக்கும் குந்திக்கும் பிறந்த யுதிச்தரனின் (Yudhishthira) டுவீட்டர் Handle.

வர்ணம்:

Literal meaning = Color

சனாதன வேதத்தில், மனிதர்களை பிறப்பால் தீண்டாமை பார்க்கும் ஒரு கோட்பாடு.  Birth based discrimination in the name of Varnam. (Similar to Racism, Fascism & Nazism)


சாதி:

Jati is a Sanskrit word meaning "birth.

சாதி என்பது தமிழ்ச்சொல்லே அல்ல. Jaன் Jaனனம் என்ற சமசுகெரம். Jaன் என்றாலே பிறப்புவழி.

பிராமணன்:

சனாதன வேத‌ நால் வருணத்தில் முதல் வருணமாகச் சொல்லப்படுவது.

Brahmin, Kshatriya, Vaishya & Shudra

பிராமணன் என்பது சாதி அல்ல அது வர்ணம். அய்யரன், அய்யங்காரன், சர்மான், பண்டிட்,நம்பூதிரியன்,தீட்சிதன் போன்றவைகளே சாதி. ஆனால், இவையாவும் ஒரே பிராமிண் வர்ணத்தில் வருபவை.

பிறப்பு வழியில் அய்யரன் அய்யங்க்காரனாக பிறந்த இந்த சாதி ஆண்கள், "யக்ஞோபவிதம்" என்ற  சடங்கு செய்து, பூணூல் போட்டு, அக்னி(தீ) வளர்த்து வழிபட்டு , மனிதனின் இயல்பான பெண் யோனி வழிப்பிறப்பை பாவயோனி என்று சொல்லி, இரண்டாம பிறப்பாக (கிறித்துவ பாப்டிசம் போல?)செய்து கொள்ளும் சடங்கே பூணூல் சடங்கு. இந்த அய்யரன் அய்ய‌ங்காரன் சாதியில் பிறந்தவகர்ளே என்றாலும் அந்தசாதிப் பெண்களுக்கு பூணூல் சடங்கு அதாவது இரண்டாம் பிறப்பு சடங்கு இல்லை. 

இந்த சாதிப் பெண்கள் வர்ணத்தில் சூத்திரவர்ணமே. பிறப்பையும் பெண்ணையும் அசிங்கப்படுத்தும் "பாவயோனி" என்ற சொல் இவர்களிடம் உண்டு.
 
தமிழ்நாட்டில் சாதிச் சங்கம் உள்ளது. அது சாபக்கேடுதான்.
ஆனால் "வர்ணத்திற்கு" என சங்கம் வைத்துள்ள ஒரு வர்ணம் "பிராமிண்" வர்ணம்தான்.
Caution:
இவர்கள் தங்களை பிராமணன் என்று ஒவ்வொரு முறை சொல்லும் போதும், பிறரை மறைமுகமாக சூத்திரன் என்றே வசைபாடுகிறார்கள்.

When "they" say they are Brahmin, we must ask following questions to expose them.

  • How do you become Brahmin?
  • What makes you Brahmin?
  • Is that birth based discrimination?
  • If you are Brahmin what about millions of people in India, why they are not Brahmins?

பார்ப்பான்/பார்ப்பனிசம்:

சனாதன வேதத்தை practice செய்பவன் பார்ப்பான். பிறப்பு வழி தீண்டாமை பார்க்கும் அவனது செயல் பார்ப்பனிசம். Similar to Racism, Fascism & Nazism) 

Parpanism is ideology which discriminate people by birth.

மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

கவனியுங்கள் இங்கே பிறப்பின் வழி என்கிறார் வள்ளுவர். 

அந்தணர்:
அந்தணர் வேறு பார்ப்பான் வேறு!
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

அவ்ளோதன். அறத்தின் வழி நடக்கும் மனிதன் அந்தணன். கவனியுங்கள் இதில் பிறப்போ, வர்ணமோ, சாதியோ இல்லை. ஓரு பட்டம் போன்றது. அவ்வளவே.

Wednesday, April 07, 2021

காதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா?

ந்திய அமைப்பில் சனாதனம் என்பது ஒரு கொடிய நோய். அது வர்ணங்களை வகுத்து, மனிதனை பிறப்பால் தீண்டாமை அடுக்காக பிரிக்கிறது. நான்கு வர்ணங்கள் (பிராமணன்,சத்ரியன்,வைசியன் & சூத்திரர்) 'Varnam' defines the hereditary roots of a Newborn. இங்கு முக்கியமானது இது பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறது hereditary roots of a Newborn. மேலும் இது மாற்றக்கூடியதுமில்லை. வர்ணம் குணத்தால் வருவது என்று சொல்வது கயமை. 

இன்று பிராமிண் என்று சொல்பவனின் குழந்தையின் குணத்தை, எந்த பல்கலைக்கழகம் ஆராய்ந்து, அந்தக் குழந்தைக்கு பூணூல் சான்றிதழ் கொடுக்கிறது? கிடையாது. அது ஒரு பிறப்புசார் சடங்கு. கிருச்ணசாமியோ அர்சூன் சம்பத்தோ தலைகீழாக நின்றாலும் தமிழ்நாடு பிராமிண் வர்ணச் சங்கத்தில் http://www.thambraas.com/ உறுப்பினராக முடியாது. வர்ணம் என்பது பிறப்பு வழித்தீண்டாமை. 

ஒவ்வொரு வர்ணத்திலும் ஆயிரம் சாதிகள் உள்ளது. இது அடுத்த அடுக்கு. அய்யரன், அய்யங்காரன், சர்மா,பண்டிட், தீட்சிதன்,நம்பூதிரி எல்லாம் சாதிகள். ஆனால் அவையாவும் ஒரே பிராமிண் வர்ணம். வர்ணம் தாண்டி இந்த சாதி அடுக்கு உள்ளது. தில்லை "தீட்சிதன் சாதி" அய்யங்காரன் சாதியைவிட உயர்ந்தது. "நம்பூதிரியன் சாதி" அய்யரன் சாதியைவிட உயர்ந்தது. ஆனால் இவர்கள் அனைவரும் ஒரே பிராமின் வர்ணம். இந்த பிராமின் வர்ணம் வைசிய வர்ணத்தைவிட உயர்ந்தது. காந்தி வைசிய வர்ணம். இவரைக் கொன்ற கோட்சே பிராமின் வர்ணம். ஆனால் இருவரும் சனாதனிகள். கிந்து என்ற மதம் ஒரு மாய அடுக்குகளால் நிறைந்தது.பிராமிண் என்ற வர்ணம் அதை தினமும் கட்டிக்காத்து தீண்டாமைத் தீயைக் காக்கிறது அறிவுத் தளத்தில். 

இந்த வர்ணமும் சாதியும் மனதில் உள்ள ஒன்று. இது வெளியில் தெரியாது. ஆனால் அன்றாட வாழ்வியலில் இது கடுமையாக பின்பற்றப்படுகிறது. இன்றுவரை மீனாட்சி சிலைக்கோ, பழனி முருகன் சிலைக்கோ பிராமிண் வர்ணம் தவிர வேறு யாரும் கழுவி,குளிப்பட்டி அலங்காரம் செய்து சாம்பிராணி போட முடியாது. மற்ற வர்ணத்தினர் சிலையை வணங்கலாம். ஆனால், தொட முடியாது. தன்னை கிந்து என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் இதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஏற்றுக்கொண்டே சிலை பார்க்கச் செல்கிறார்கள். இதை ஏற்பது என்பது சனாதனத்த, வர்ணத்தை, சாதியை ஏற்பதே.

எனவே தன்னை கிந்து என்று நம்புபவர், அதை தன் வாழ்வில் நடைமுறைப்படுத்தி அதன் வழி செல்பவர் (those who practice) அனைவருமே சனாதன, வர்ண சாதிய ஆதரவாள‌ர்களே. இது அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், இதுதான் உண்மை. இவர்களின் வாழ்வியல் பழக்கங்களால்தான் வர்ணமும் சாதியும் இருக்கிறதே தவிர இட ஒதுக்கிட்டு உரிமைக்கான சான்றிதழ்களால் அல்ல. இட ஒதுக்கிட்டு உரிமைக்கான சான்றிதழ் பாதிக்கப்பட்டவனுக்கு மருந்திடும் செயல்.‌

காதல் கம்யூனிட்டி
இப்படியான ஒரு சமூகத்தில் வாழும் ஒருவர் காதல் வயப்படுகிறார். அவர் சனாதன,வர்ண ,சாதி சித்தாந்தங்களை கேள்வி கேட்பவர்,விமர்சிப்பவர், கடைபிடிக்காதவர். ஆனால், அவர் வாழும் சூழலில், அவர் பார்த்துப் பழகும் மனிதர்களிடமே அவர் காதல் கொள்ள இயலும். தமிழ்நாட்டில் வாழ்பவர் அமெரிக்காவில் எதோ ஒரு நகரத்தில் இருக்கும் வெள்ளை இனத்தவருடன் பார்த்துப் பழக வாய்ப்பு கிடைப்பதில்லை. 

காதலுக்கும் எல்லையுண்டு. உங்களால் நீங்கள் வாழுமிடம் தாண்டி யாரையும் காதலித்துவிட முடியாது. Love may not have emotional boundaries but it has geographic boundaries.

உங்களின் கனவுகளுக்கும் கற்பனைக்கும் எல்லையுண்டு
http://kalvetu.blogspot.com/2010/11/blog-post.html

காதல் என்பது காமம்+அன்பு என்பதன் கூட்டமைப்பு. நேரில் பார்த்து பழகாமல் காதல் வராது. அது சினிமாவில் நடக்கலாம். அப்படி நேரில் பார்த்துப்பழகுவது என்பது வாழும் புவியியல் எல்லைகள் சார்ந்தது. தமிழ் நாட்டில் பிறந்த ஒருவர், காச்மீரிலிருந்து ஒருவரை காதலிக்க முடியாது. ஆசை இருந்தாலும். ஒவ்வொருவருக்கும் limited geographic boundaries availability தான் உள்ளது. இப்படியான சூழலில், உங்கள் ஊரில், நீங்கள் வாழும் இடத்தில், உங்களால் அங்கு இருப்பவர்களுடனே பழக முடியும். வேறு வழியே இல்லை. அல்லது நீங்கள் நாடு விட்டு நாடு மாறி வாழவேண்டும். அங்கு பழகி காதலிக்க வேண்டும்.

சாதி (Caste) &  சமூகம் (Community )
சாதி caste என்பதும் சமூகம் community என்பதும் ஒன்றல்ல. கம்யூன் (commune) என்ற commune French word ன் பொருள் a group of people living together and sharing possessions and responsibilities என்பதாகும். ஒரு ஊர் என்பது கம்யூன்/கம்யூனிட்டி. அந்த ஊருக்கு புதியதாக யார் வந்தாலும் அவர்களும் அந்த கம்யூன்/கம்யூனிட்டியில் ஒருவராவர். ஆனால், இந்திய சனாதன சாதி முறையில் , புதியதாக‌ ஒரு ஊருக்கு வருபவரின் caste மாறப்போவது இல்லை. எனவே caste என்பதை community உடன் குழ‌ப்பவேண்டாம். இந்தியாவில் மிகத்தவறான பொருளில் பயன்படும் சொல் community.

‌சாதியை (caste) மறுக்கும் ஒருவர் அதே சமூகம்/ஊர்/நகரம்/வாழுமிடம் (community) த்தில் உள்ள ஒருவரை காதலிக்கலாமா?
என்ன கேள்வி இது? 
காதல் என்பதே இருக்கும் இடத்தில் உள்ளவர்களின் மேல் வரும் காமம் கலந்த அன்புதான். மனிதர்கள் கந்தர்வக்காதல் என்று எங்கோ கனவுலகத்தில் உள்ள ஒருவரைக் காதலிக்க முடியாது. அது புராணக் கதைகளில் மட்டுமே சாத்தியம். மேலும் உங்கள் நண்பர்கள் விமர்சிக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் உங்கள் காதலை அணுக முடியாது. அது தவறானது. காதல் என்பதும் திருமணம் என்பதும் அந்த உறவில் உள்ள இருவருக்கு மட்டுமானது. முடிவெடுக்க வேண்டியவர்கள் அவர்களே. எனவே உங்கள் ஊரில் உங்களுக்கு எட்டும் தூரத்தில், நீங்கள் வாழும் இடத்தில், உங்களோடு பழகுபவர்கள், வாழ்பவர்களின் மீதுதான் காதல் சாத்தியம்.

ஆனால், இந்திய சூழலில் வர்ணம்&சாதி என்ற அடையாளங்களை நீங்கள் எப்படி முன்னெடுக்கிறீர்கள் என்பது வேறு தளம். நீங்கள் இருவரும் அதை விடுத்து சுயமரியதைத் திருமணம் செய்து, கிந்து மதம் மட்டுமல்ல எந்த மத அடையாளமும் இல்லாமல் வாழ முடிந்தால் வர்ணம்&சாதி அடையாளங்கள் போகலாம். ஆனால், அது இந்தியாவில் வாழும் ஒருவருக்கு சாத்தியமா என்றால் கடினமே.

சாதியை ஒழிப்பது என்பது அந்த சாதியாளராக தன்னை நினைக்காமல், அதை practice செய்யாமல் விடுவதில்தான் உள்ளது. குலதெய்வம் என்பதும் சாதித்தெய்வம் தான். என்ன செய்யப்போகிறீர்கள்? வாழ்வு சிக்கலனாது. நீஙகள் காதலை தவிர்த்தாலும் சிக்கல்கள் தொடரத்தான் போகிறது. உங்கள் காதலரிடம் சாதி/வர்ணம் உங்கள் நிலைப்பாடுகள் குறித்து பேசலாம். ஆனால், நண்பர்கள் சொல்கிறார்கள் என்று காதலைத் தொலைத்துவிடாதீர்கள்.
ஒருவரைக் காதலிப்பது அவரின் சாதிக்காக இல்லை எனும்போது அது சாதிக்கான காதல் அல்லவே? பிடித்தவரின் காதலை அவரின் சாதிக்காக ஒதுக்குவதும் சாதி பார்ப்பதே. காதலை உங்களுக்காக காதலியுங்கள். 

**
//I don't support caste but the same time I’m in love with a girl from my community. I get criticized for my choice. Is it double standard?// 
இப்படி ஒரு கேள்வி ஒரு தோழரிடம் இருந்து. அதற்கான விரிவான பதில்