இந்திய அமைப்பில் சனாதனம் என்பது ஒரு கொடிய நோய். அது வர்ணங்களை வகுத்து, மனிதனை பிறப்பால் தீண்டாமை அடுக்காக பிரிக்கிறது. நான்கு வர்ணங்கள் (பிராமணன்,சத்ரியன்,வைசியன் & சூத்திரர்) 'Varnam' defines the hereditary roots of a Newborn. இங்கு முக்கியமானது இது பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறது hereditary roots of a Newborn. மேலும் இது மாற்றக்கூடியதுமில்லை. வர்ணம் குணத்தால் வருவது என்று சொல்வது கயமை.
இன்று பிராமிண் என்று சொல்பவனின் குழந்தையின் குணத்தை, எந்த பல்கலைக்கழகம் ஆராய்ந்து, அந்தக் குழந்தைக்கு பூணூல் சான்றிதழ் கொடுக்கிறது? கிடையாது. அது ஒரு பிறப்புசார் சடங்கு. கிருச்ணசாமியோ அர்சூன் சம்பத்தோ தலைகீழாக நின்றாலும் தமிழ்நாடு பிராமிண் வர்ணச் சங்கத்தில் http://www.thambraas.com/ உறுப்பினராக முடியாது. வர்ணம் என்பது பிறப்பு வழித்தீண்டாமை.
ஒவ்வொரு வர்ணத்திலும் ஆயிரம் சாதிகள் உள்ளது. இது அடுத்த அடுக்கு. அய்யரன், அய்யங்காரன், சர்மா,பண்டிட், தீட்சிதன்,நம்பூதிரி எல்லாம் சாதிகள். ஆனால் அவையாவும் ஒரே பிராமிண் வர்ணம். வர்ணம் தாண்டி இந்த சாதி அடுக்கு உள்ளது. தில்லை "தீட்சிதன் சாதி" அய்யங்காரன் சாதியைவிட உயர்ந்தது. "நம்பூதிரியன் சாதி" அய்யரன் சாதியைவிட உயர்ந்தது. ஆனால் இவர்கள் அனைவரும் ஒரே பிராமின் வர்ணம். இந்த பிராமின் வர்ணம் வைசிய வர்ணத்தைவிட உயர்ந்தது. காந்தி வைசிய வர்ணம். இவரைக் கொன்ற கோட்சே பிராமின் வர்ணம். ஆனால் இருவரும் சனாதனிகள். கிந்து என்ற மதம் ஒரு மாய அடுக்குகளால் நிறைந்தது.பிராமிண் என்ற வர்ணம் அதை தினமும் கட்டிக்காத்து தீண்டாமைத் தீயைக் காக்கிறது அறிவுத் தளத்தில்.
இந்த வர்ணமும் சாதியும் மனதில் உள்ள ஒன்று. இது வெளியில் தெரியாது. ஆனால் அன்றாட வாழ்வியலில் இது கடுமையாக பின்பற்றப்படுகிறது. இன்றுவரை மீனாட்சி சிலைக்கோ, பழனி முருகன் சிலைக்கோ பிராமிண் வர்ணம் தவிர வேறு யாரும் கழுவி,குளிப்பட்டி அலங்காரம் செய்து சாம்பிராணி போட முடியாது. மற்ற வர்ணத்தினர் சிலையை வணங்கலாம். ஆனால், தொட முடியாது. தன்னை கிந்து என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் இதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஏற்றுக்கொண்டே சிலை பார்க்கச் செல்கிறார்கள். இதை ஏற்பது என்பது சனாதனத்த, வர்ணத்தை, சாதியை ஏற்பதே.
எனவே தன்னை கிந்து என்று நம்புபவர், அதை தன் வாழ்வில் நடைமுறைப்படுத்தி அதன் வழி செல்பவர் (those who practice) அனைவருமே சனாதன, வர்ண சாதிய ஆதரவாளர்களே. இது அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், இதுதான் உண்மை. இவர்களின் வாழ்வியல் பழக்கங்களால்தான் வர்ணமும் சாதியும் இருக்கிறதே தவிர இட ஒதுக்கிட்டு உரிமைக்கான சான்றிதழ்களால் அல்ல. இட ஒதுக்கிட்டு உரிமைக்கான சான்றிதழ் பாதிக்கப்பட்டவனுக்கு மருந்திடும் செயல்.
காதல் கம்யூனிட்டி
இப்படியான ஒரு சமூகத்தில் வாழும் ஒருவர் காதல் வயப்படுகிறார். அவர் சனாதன,வர்ண ,சாதி சித்தாந்தங்களை கேள்வி கேட்பவர்,விமர்சிப்பவர், கடைபிடிக்காதவர். ஆனால், அவர் வாழும் சூழலில், அவர் பார்த்துப் பழகும் மனிதர்களிடமே அவர் காதல் கொள்ள இயலும். தமிழ்நாட்டில் வாழ்பவர் அமெரிக்காவில் எதோ ஒரு நகரத்தில் இருக்கும் வெள்ளை இனத்தவருடன் பார்த்துப் பழக வாய்ப்பு கிடைப்பதில்லை.
காதலுக்கும் எல்லையுண்டு. உங்களால் நீங்கள் வாழுமிடம் தாண்டி யாரையும் காதலித்துவிட முடியாது. Love may not have emotional boundaries but it has geographic boundaries.
உங்களின் கனவுகளுக்கும் கற்பனைக்கும் எல்லையுண்டு
http://kalvetu.blogspot.com/2010/11/blog-post.html