Wednesday, April 07, 2021

காதல் கம்யூனிட்டி: என் ஊரில் உள்ளவரைக் காதலிக்கலாமா?

ந்திய அமைப்பில் சனாதனம் என்பது ஒரு கொடிய நோய். அது வர்ணங்களை வகுத்து, மனிதனை பிறப்பால் தீண்டாமை அடுக்காக பிரிக்கிறது. நான்கு வர்ணங்கள் (பிராமணன்,சத்ரியன்,வைசியன் & சூத்திரர்) 'Varnam' defines the hereditary roots of a Newborn. இங்கு முக்கியமானது இது பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறது hereditary roots of a Newborn. மேலும் இது மாற்றக்கூடியதுமில்லை. வர்ணம் குணத்தால் வருவது என்று சொல்வது கயமை. 

இன்று பிராமிண் என்று சொல்பவனின் குழந்தையின் குணத்தை, எந்த பல்கலைக்கழகம் ஆராய்ந்து, அந்தக் குழந்தைக்கு பூணூல் சான்றிதழ் கொடுக்கிறது? கிடையாது. அது ஒரு பிறப்புசார் சடங்கு. கிருச்ணசாமியோ அர்சூன் சம்பத்தோ தலைகீழாக நின்றாலும் தமிழ்நாடு பிராமிண் வர்ணச் சங்கத்தில் http://www.thambraas.com/ உறுப்பினராக முடியாது. வர்ணம் என்பது பிறப்பு வழித்தீண்டாமை. 

ஒவ்வொரு வர்ணத்திலும் ஆயிரம் சாதிகள் உள்ளது. இது அடுத்த அடுக்கு. அய்யரன், அய்யங்காரன், சர்மா,பண்டிட், தீட்சிதன்,நம்பூதிரி எல்லாம் சாதிகள். ஆனால் அவையாவும் ஒரே பிராமிண் வர்ணம். வர்ணம் தாண்டி இந்த சாதி அடுக்கு உள்ளது. தில்லை "தீட்சிதன் சாதி" அய்யங்காரன் சாதியைவிட உயர்ந்தது. "நம்பூதிரியன் சாதி" அய்யரன் சாதியைவிட உயர்ந்தது. ஆனால் இவர்கள் அனைவரும் ஒரே பிராமின் வர்ணம். இந்த பிராமின் வர்ணம் வைசிய வர்ணத்தைவிட உயர்ந்தது. காந்தி வைசிய வர்ணம். இவரைக் கொன்ற கோட்சே பிராமின் வர்ணம். ஆனால் இருவரும் சனாதனிகள். கிந்து என்ற மதம் ஒரு மாய அடுக்குகளால் நிறைந்தது.பிராமிண் என்ற வர்ணம் அதை தினமும் கட்டிக்காத்து தீண்டாமைத் தீயைக் காக்கிறது அறிவுத் தளத்தில். 

இந்த வர்ணமும் சாதியும் மனதில் உள்ள ஒன்று. இது வெளியில் தெரியாது. ஆனால் அன்றாட வாழ்வியலில் இது கடுமையாக பின்பற்றப்படுகிறது. இன்றுவரை மீனாட்சி சிலைக்கோ, பழனி முருகன் சிலைக்கோ பிராமிண் வர்ணம் தவிர வேறு யாரும் கழுவி,குளிப்பட்டி அலங்காரம் செய்து சாம்பிராணி போட முடியாது. மற்ற வர்ணத்தினர் சிலையை வணங்கலாம். ஆனால், தொட முடியாது. தன்னை கிந்து என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் இதை ஏற்றுக்கொள்கிறார்கள். ஏற்றுக்கொண்டே சிலை பார்க்கச் செல்கிறார்கள். இதை ஏற்பது என்பது சனாதனத்த, வர்ணத்தை, சாதியை ஏற்பதே.

எனவே தன்னை கிந்து என்று நம்புபவர், அதை தன் வாழ்வில் நடைமுறைப்படுத்தி அதன் வழி செல்பவர் (those who practice) அனைவருமே சனாதன, வர்ண சாதிய ஆதரவாள‌ர்களே. இது அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், இதுதான் உண்மை. இவர்களின் வாழ்வியல் பழக்கங்களால்தான் வர்ணமும் சாதியும் இருக்கிறதே தவிர இட ஒதுக்கிட்டு உரிமைக்கான சான்றிதழ்களால் அல்ல. இட ஒதுக்கிட்டு உரிமைக்கான சான்றிதழ் பாதிக்கப்பட்டவனுக்கு மருந்திடும் செயல்.‌

காதல் கம்யூனிட்டி
இப்படியான ஒரு சமூகத்தில் வாழும் ஒருவர் காதல் வயப்படுகிறார். அவர் சனாதன,வர்ண ,சாதி சித்தாந்தங்களை கேள்வி கேட்பவர்,விமர்சிப்பவர், கடைபிடிக்காதவர். ஆனால், அவர் வாழும் சூழலில், அவர் பார்த்துப் பழகும் மனிதர்களிடமே அவர் காதல் கொள்ள இயலும். தமிழ்நாட்டில் வாழ்பவர் அமெரிக்காவில் எதோ ஒரு நகரத்தில் இருக்கும் வெள்ளை இனத்தவருடன் பார்த்துப் பழக வாய்ப்பு கிடைப்பதில்லை. 

காதலுக்கும் எல்லையுண்டு. உங்களால் நீங்கள் வாழுமிடம் தாண்டி யாரையும் காதலித்துவிட முடியாது. Love may not have emotional boundaries but it has geographic boundaries.

உங்களின் கனவுகளுக்கும் கற்பனைக்கும் எல்லையுண்டு
http://kalvetu.blogspot.com/2010/11/blog-post.html

காதல் என்பது காமம்+அன்பு என்பதன் கூட்டமைப்பு. நேரில் பார்த்து பழகாமல் காதல் வராது. அது சினிமாவில் நடக்கலாம். அப்படி நேரில் பார்த்துப்பழகுவது என்பது வாழும் புவியியல் எல்லைகள் சார்ந்தது. தமிழ் நாட்டில் பிறந்த ஒருவர், காச்மீரிலிருந்து ஒருவரை காதலிக்க முடியாது. ஆசை இருந்தாலும். ஒவ்வொருவருக்கும் limited geographic boundaries availability தான் உள்ளது. இப்படியான சூழலில், உங்கள் ஊரில், நீங்கள் வாழும் இடத்தில், உங்களால் அங்கு இருப்பவர்களுடனே பழக முடியும். வேறு வழியே இல்லை. அல்லது நீங்கள் நாடு விட்டு நாடு மாறி வாழவேண்டும். அங்கு பழகி காதலிக்க வேண்டும்.

சாதி (Caste) &  சமூகம் (Community )
சாதி caste என்பதும் சமூகம் community என்பதும் ஒன்றல்ல. கம்யூன் (commune) என்ற commune French word ன் பொருள் a group of people living together and sharing possessions and responsibilities என்பதாகும். ஒரு ஊர் என்பது கம்யூன்/கம்யூனிட்டி. அந்த ஊருக்கு புதியதாக யார் வந்தாலும் அவர்களும் அந்த கம்யூன்/கம்யூனிட்டியில் ஒருவராவர். ஆனால், இந்திய சனாதன சாதி முறையில் , புதியதாக‌ ஒரு ஊருக்கு வருபவரின் caste மாறப்போவது இல்லை. எனவே caste என்பதை community உடன் குழ‌ப்பவேண்டாம். இந்தியாவில் மிகத்தவறான பொருளில் பயன்படும் சொல் community.

‌சாதியை (caste) மறுக்கும் ஒருவர் அதே சமூகம்/ஊர்/நகரம்/வாழுமிடம் (community) த்தில் உள்ள ஒருவரை காதலிக்கலாமா?
என்ன கேள்வி இது? 
காதல் என்பதே இருக்கும் இடத்தில் உள்ளவர்களின் மேல் வரும் காமம் கலந்த அன்புதான். மனிதர்கள் கந்தர்வக்காதல் என்று எங்கோ கனவுலகத்தில் உள்ள ஒருவரைக் காதலிக்க முடியாது. அது புராணக் கதைகளில் மட்டுமே சாத்தியம். மேலும் உங்கள் நண்பர்கள் விமர்சிக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் உங்கள் காதலை அணுக முடியாது. அது தவறானது. காதல் என்பதும் திருமணம் என்பதும் அந்த உறவில் உள்ள இருவருக்கு மட்டுமானது. முடிவெடுக்க வேண்டியவர்கள் அவர்களே. எனவே உங்கள் ஊரில் உங்களுக்கு எட்டும் தூரத்தில், நீங்கள் வாழும் இடத்தில், உங்களோடு பழகுபவர்கள், வாழ்பவர்களின் மீதுதான் காதல் சாத்தியம்.

ஆனால், இந்திய சூழலில் வர்ணம்&சாதி என்ற அடையாளங்களை நீங்கள் எப்படி முன்னெடுக்கிறீர்கள் என்பது வேறு தளம். நீங்கள் இருவரும் அதை விடுத்து சுயமரியதைத் திருமணம் செய்து, கிந்து மதம் மட்டுமல்ல எந்த மத அடையாளமும் இல்லாமல் வாழ முடிந்தால் வர்ணம்&சாதி அடையாளங்கள் போகலாம். ஆனால், அது இந்தியாவில் வாழும் ஒருவருக்கு சாத்தியமா என்றால் கடினமே.

சாதியை ஒழிப்பது என்பது அந்த சாதியாளராக தன்னை நினைக்காமல், அதை practice செய்யாமல் விடுவதில்தான் உள்ளது. குலதெய்வம் என்பதும் சாதித்தெய்வம் தான். என்ன செய்யப்போகிறீர்கள்? வாழ்வு சிக்கலனாது. நீஙகள் காதலை தவிர்த்தாலும் சிக்கல்கள் தொடரத்தான் போகிறது. உங்கள் காதலரிடம் சாதி/வர்ணம் உங்கள் நிலைப்பாடுகள் குறித்து பேசலாம். ஆனால், நண்பர்கள் சொல்கிறார்கள் என்று காதலைத் தொலைத்துவிடாதீர்கள்.
ஒருவரைக் காதலிப்பது அவரின் சாதிக்காக இல்லை எனும்போது அது சாதிக்கான காதல் அல்லவே? பிடித்தவரின் காதலை அவரின் சாதிக்காக ஒதுக்குவதும் சாதி பார்ப்பதே. காதலை உங்களுக்காக காதலியுங்கள். 

**
//I don't support caste but the same time I’m in love with a girl from my community. I get criticized for my choice. Is it double standard?// 
இப்படி ஒரு கேள்வி ஒரு தோழரிடம் இருந்து. அதற்கான விரிவான பதில்