Wednesday, February 28, 2018

அஞ்சலி:பிரபல சாதிச்சங்க தலைவரும், மட அதிபருமான‌ இருள்நீக்கி சுப்பிரமணியம் aka செயேந்திரர் சுவாமிகள் மரணம்

கொலைவழக்கில் விசாரணைக் கைதியாக உள்ளே போய் வந்தாலும், பெண்கள் பாலியல் புகார்கள் கொடுத்தாலும், வேலை பார்க்கும் இடத்தில் முதலாளியை தவிக்க விட்டுவிட்டு ஓடினாலும், இறப்பு என்பது அவர்களைச் சார்ந்த மக்களுக்கு இழப்பே.

அவர் சாதிக்காரார்கள் மற்றும் சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஞ்சாவூருக்கு அருகே, "இருள்நீக்கி" என்ற ஊரில் எல்லாரையும் போலவே சாதரணக் குழந்தையாக  July 18, 1935 அன்று பிறந்தவர் திரு.சுப்பிரமணியம் அவர்கள். இவருடைய தந்தை by the power vested in him by Sanathanam, இவரை "அய்யர் சாதி" குழந்தையாக்கி, அதற்கு அடையாளமாக பூணூலும்
, பட்டையும் போட்டுவிடுகிறார்.

ந்தக்குழந்தையாக இருந்தாலும், அவர்கள் வளர்ந்து கல்வி கற்று பெரிய நிலையை அடைய நிலைப்பார்கள் பெற்றோர்கள். பெரும்பாலான‌ குழந்தைகள் படித்து அரசுபதவிகளுக்கோ அல்லது தனியாரில் சிறப்பான பதவிகளுக்கோ போகும் காலத்தில், இவர் "வேதக் கல்வி" என்ற ஒன்றைப் படிக்கிறார். கோவில்களில் பூசை , புனசுகாரம், போன்றவற்றுக்கே பயன்படும் இந்தக் கல்வியால் , அதிக மணி(money)பார்க்க முடியாது என்பது உண்மை. தமிழ் பிடிக்காட்டியும், படிக்காட்டியும்கூட‌, ஆங்கிலம் நல்லாப் படித்து, அறிவாளியாகிவிடுவார்கள். சமசுகிரகம் வேலைக்காவாது என்று நன்கு புரிந்தவர்கள். இருந்தாலும் வேதம் சொல்லும் வர்ண‌ தீண்டாமையை அமுல்படுத்த வேதக் கல்வியின் அவசியத்தை உணர்ந்த இவர் அதை நன்றாக கற்கிறார்.


**
"வேதக் கல்வி" படித்து முடித்து  , அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கையில், காஞ்சியில் பிரபலமாக இருந்த அய்யர் சாதிச் சங்கமான‌ சங்கர மடத்தின் அப்போதைய மட‌அதிபர் திரு. சுவாமிநாதன் அவர்கள்( twitter handle போல காஞ்சிமட புனைபெயர் "சந்திரசேகர சர‌சுவதி") , தனக்கு கூடமாட உதவியாக இருக்க , தன் சாதிப் பையன் கிடைத்தால் நல்லது என்று தேடிக்கொண்டு இருந்தார். கேரளா நாயர் டீக்கடைக்கு அவர் சாதியில் இருந்து குழந்தைத் தொழிலாளர்களை அழைத்து வருவது போல, மளிகைக்கடை அண்ணாச்சி தூத்துக்குடி விருதுநகரில் இருந்து அவர் நாடார் சாதிப் பையன்களை வேலைக்கு வைப்பது போல,  காஞ்சி மடாதிபதி திரு . சந்திரசேகர சர‌சுவதி அவர்கள், தன் சாதிப் பையன் ஒருவனை மட வேலைக்குத் தேடிக்கொண்டு இருந்தார். அவரின் பார்வை எப்படியோ "இருள்நீக்கி சுப்பிரமணியம் அய்யர்" மீது பட்டுவிட்டது.

வாழ்க்கையில் சாதிக்கத்துடிக்கும் ஒரு 19 வயது இளைஞனாக‌ அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிக்கு , நல்ல காலத்தை நோக்கி பயணிக்கிறார் "இருள்நீக்கி சுப்பிரமணியம் அய்யர்". ஒரு விவசாயி வீட்டுக்கு  பண்ணைக்குப்போனால், கோவணம் கட்டி உழுவச் சொல்வார்கள், பரம்படிக்கச் சொல்லுவார்கள். "வன்னியர் சங்கம்" , "முக்குலத்தோர் சங்கம்" போல  காஞ்சி மடம், ஒரு சாதிச் சங்கம். அங்கே வேலைக்குப் போன திரு. சுப்பிரமணியம் அய்யருக்கு , ஒரு குச்சியும், அதில் கட்ட ஒரு துணியும், twitter handle போல ஒரு "செயேந்திரர்" என்ற‌ புனைப்பெயரும் கொடுத்து குச்சி சங்கரராக‌ உட்கார வைத்துவிட்டார்கள்.

**
19 வயதில் மடத்தில் குச்சிபிடித்த திரு. செயேந்திரர் அவர்கள், என்ன மன உளைச்சலுக்கு ஆளானாரோ தெரியவில்லை, 1987 ல் மடத்தைவிட்டு ஓடிவிடுகிறார். தன்னிடம் வேலைபார்த்த செயேந்திரர் ஓடிவிட்டதை அறிந்து பதறிப்போன மடாதிபர் , "சந்திரசேகர சர‌சுவதி" அவர்கள், நாடு தழுவிய தேடுதலுக்கு உத்தரவிடுகிறார். அதற்கிடையே தனக்கு உதவியாக "சங்கரநாரயணன்" என்ற குழந்தைப் பையனை,  "விசயேந்திர சரசுவதி" என்ற twitter handle போல புனைப்பெயர் & இன்னொரு குச்சி கொடுத்து வேலைக்கும் அமர்த்திக் கொள்கிறார்.

மூன்று நாட்களுக்குப்பிறகு ஒருவழியாக இருள்நீக்கி சுப்பிரமணியம் அய்யரை (ஓடிவிட்டதால் twitter handle போல புனைப்பெயர் செயேந்திரர் பட்டம் பறிக்கப்பட்டு பழைய பெயருக்கு வந்துவிடுகிறார்?? ) தலைக்காவிரிப்பக்கம் கண்டுபிடிக்கிறார்கள்.
அவரிடம் மறுபடியும் குச்சியைக் கொடுத்து, அழைத்து வருகிறார்கள்.

ஏதோ பிரச்சனைபோல இருள்நீக்கி சுப்பிரமணியம் அய்யர் அவர்களுக்கு. அப்போது அவர் ஆரம்பித்த‌ "சன கல்யாணம்" என்ற ஒரு அமைப்பை சரியாகப் போகவில்லை. அதற்குப்பின்னால் வந்த "கல்யாண மாலை" கூட பிரபலமாகிவிட்டது.
**

ப்போது மடத்தில் மூன்று பேர் "பெரியவா" வேலை பார்க்கிறார்கள். "பெரியவா" என்பது அய்யர் பாசை. மதுரை பாசை, கோயம்புத்தூர் பாசை, திருநெல்வேலி பாசை என்று ஊருக்கு ஒரு வட்டார வழக்கு இருந்தாலும், எல்லா ஊரிலும் அய்யர் சாதிக்கு என்று ஒரு ஒரே வழக்குத்தான். பொதுப்பணித்துறையில் இருக்கும் "எஞ்சினியர்" பதவியை தரம் பிரித்து Junior Engineer, Assistant Engineer and Senior Engineer அழைப்பதுபோல, "பெரியவா" என்ற பதவியை , "பெரிய பெரியவா", "நடுப் பெரியவா" & "பாலப் பெரியவா" என்று
அழைக்க பணிக்கப்பட்டார்கள் அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள்.

"நடுப் பெரியவா" வின் "சன கல்யாணம்" அமைப்பைப் பார்த்த "பெரிய பெரியவா", நடுப் பெரியவாவிடம் "பெரியவாக்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளமுடியாது" என்று சொல்லி இருப்பார்போல. "நடுப் பெரியவாவும்" அதை ஏற்று, "சன கல்யாண" வேலைகளை தீவிரப்படுத்தாமல் விட்டுவிட்டு ,வேறு வழிகளைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
**

இந்த நேரத்தில் "அனுராதா ரமணன்" என்ற கதை எழுத்தாளர் ஒருவர், "நடுப் பெரியவா" தன்னிடம் காம இச்சையுடன் (lustful manner) பேசுகிறார் என்ற குற்றச்சாட்டை வைக்கிறார். அதற்கு ஒருபடி மேலே போய் "நீயெல்லாம் மனுசனா?" ("Are you human?") என்று கேட்டதாக பத்திரிக்கைச் செய்திகள் சொல்கிறது.

If You Cooperate, I Can Extend You All Benefits'
https://www.outlookindia.com/magazine/story/if-you-cooperate-i-can-extend-you-all-benefits/225947
//He then spoke in a lustful manner to me and expressed a desire for similar intimacy with me. I stood up, more shocked, and raised my voice and asked him, "Are you human?" //

**
பெரியவாக்களை "இப்படி மனுசனா?" என்று கேட்பது தவறு. அவர்கள் மனிதர்கள் அல்ல தெய்வங்கள். அய்யர் சங்க சங்கர தத்துவங்களின்படி, பெரியவாக்கள், அவர்களையே தெய்வம் என்று நம்புபவர்கள். அப்படியே நடந்துகொள்பவர்கள்.

"நானே கடவுள். சிலைகள் எல்லாம் சும்மா" என்று இவர்கள் நம்புவதாலேயே, இவர்கள் தலையில் பூக்களையும், சசுடியப் பூர்த்தி என்று தங்கக்காசுகளையும் கொட்டி,  இவர்களாகவே ஒருவருக்கொருவர் அர்ச்சனை செய்துகொள்வார்கள்.

அதற்கு ஒருபடி மேலே போய், இவர்கள் ஒரு காரியம் செய்வார்கள். அது நாத்திகவாதிகள்கூட செய்யாத ஒன்று.

ஒரு மனிதன் கோவிலுக்குப் போகிறான் என்றால், நடந்து போவான் அல்லது வசதிக்கு ஏற்றபடி காரில் போவான். என்ன வாகனத்தில் போனாலும், கோவிலுக்குள் நுழைவதற்குமுன் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பயபக்தியோடு கோவிலை அணுகுவான்.


கடவுள் பல்லக்கில்போக, மனிதன் அதைப் பார்த்து சாமி கும்பிடுவதுதான் வாடிக்கை. பெரியவாக்கள் அப்படியில்லை. கடவுளுக்கு தரிசனம் கொடுக்க இவர்கள் பல்லக்கில் போவார்கள். நாலு அப்பரண்டீசுகள் தூக்கிச் சுமக்க, இவர்கள் பகட்டாக கடவுளுக்கு தரிசனம் கொடுக்க கிளம்புவார்கள். கடவுளுக்கே கவுன்டர் கொடுக்கும் பெரியவாக்களே உண்மையான கடவுள் மறுப்பாளர்கள் என்று தோன்றும் சாமான்யனுக்கு.

***



பெரிய பெரியவா மரணத்திற்குப் பிறகு, நடுப்பெரியவா "பெரிய பெரியவாக" பொறுப்பேற்கிறார் March 22, 1994 ல்.

பெரிய பெரியவா பெண்களை மட்டமாக நினைப்பவர். அதற்கு இரு உதாரணங்கள். இந்திராகாந்தியை மாட்டுக்கொட்டகையில் வைத்துப் பார்த்தது, வேலைக்குப் போகும் பெண்கள் விபச்சாரிகளுக்கு ஒப்பானவர்கள் என்று சொன்னது.

நடுப்பெரியவா அப்படியெல்லாம் இல்லை. பெரிய பெரியவாவைவிட பிராக்டிகலானவர். பல சீர்திருத்தங்களைச் செய்தவர். பெண்களிடம் வாஞ்சையானவர். அனுராதா ரமணனின் புகார் ஒரு உதாரணம்.

மேலும் இவரின் சமீபத்திய பேட்டியில்
பெண்கள் பற்றிப் பேசும்போது வாஞ்சையாகவே பேசியிருப்பார்.
https://youtu.be/1C5qW_nL8aA

நடிகை இரஞ்சிதாகூட இவர்மேல் வழக்கு போட்டிருந்தார்.
http://www.nithyananda.org/news/ma-ranjitha-files-criminal-defamation-against-kanchi-seer#gsc.tab=0
**
டுப்பெரியவா மற்ற சாதிச் சங்கத் தலைவர்களின் வழியைப் பின்பற்றி , கல்லூரி, பள்ளி என்று கட்டி அய்யர் சாதிச் சங்கமான சங்கரமடத்தை, பலவழிகளில் உயர்த்தியவர். அய்யங்கார் சீயர்கள் சோடாபாட்டில் கதை 2018ல் தான் சொல்கிறார்கள். ஆனால் இவர், பல வருடங்களுக்கு முன்னரே கொலைக்கேசில் உள்ளே போய் வந்தவர்.  "பெரியவா" என்ற சொல்லையே சிறப்பித்தவர். பகவான் அருளால் இவர்மேல் கயவர்கள் போட்ட‌ போட்ட‌ பொய் கேசு முடிவிற்கு வந்தது.
https://en.wikipedia.org/wiki/Sankararaman_murder_case

மேலும் , கடவுள்கள்னா கொலையும் செய்யலாம் என்பதை உறுதிப்படுத்தியவர்.
https://www.youtube.com/watch?v=iD9VHU-JCyU
**
பெரியவாக்கள் மட்டும் இப்படி இல்லை, இவர்களுடன் சகவாசம் வைத்துக்கொளும் மனிதர்களையும் வசியப்படுத்தி இவர்களின் குணங்களை பிரதிபலிக்கச் செய்வார்கள். செயகாந்தன் என்ற ஒரு எழுத்தாளர் இப்படித்தான் ஆனார். தமிழில் நல்ல கதைப் புத்தகங்களை எழுதிக்கொண்டு இருந்தவர், இவர்களின் சகவாசத்திற்குப் பிறகு "நக்கிப் பிழைக்கும் நாய்கள்" என்று தன்னை வளர்த்த தமிழைப் பார்த்தே சவுண்டு கொடுக்க ஆரம்பித்து "கர கர சங்கர" என்று புக் போட்டார். இன்னொரு உதாரணம் , எசு வீஈ சேகர் ஒரு பேட்டியில், "செயேந்திரர், மலத்தைச் சாப்பிடச் சொன்னா சாப்பிடுவேன்னு" சொன்னாரு.

பொதுவா விசுவசாத்தக்காட்ட "காலால் இட்ட வேலையை தலையால் முடிப்பேன்" என்றுதான் சொல்வார்கள். என்னமோ இந்தப்பக்கம் வந்தவர்கள் பலரை இப்படி "பீ",  "நக்கி பிழைப்பு" அளவில் திங் பண்ண வச்சிருக்கு.

**
ன்மீகவாதிகள் நிச்சயம் சொர்க்கம் போவார்கள்.
இவர் அய்யர் மட்டுமல்லாமல் சங்கர மடத்தில் CEO ஆக இருந்தவர். அவருக்கு இல்லாத சொர்க்கமா?

அவரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திப்போம். இவரைப்போல யாரும் இனிமேல் இப்படி 19 வயதில் வேலைக்குப் போய் இத்தனை இவ்வளவு சிரமப்படக்கூடாது.

பாவம் பகவான் படுத்தி எடுத்திட்டார் பெரியவாவை.

Image result for RIP

Friday, February 02, 2018

Stellar Wind | James Comey | Robert Mueller | Nunes Memo

John Ashcroft 
2004
மார்ச் 2004 
ஒரு இரவு நேரம். எல்லா இரவுகளையும் போலவே அந்த இரவும், கறுப்பாகவே இருந்தது. அமெரிக்காவில் George Washington Hospital அறை ஒன்றில் , அப்போதைய அமெரிக்க அட்டர்னி செனரல்(Attorney general)  John Ashcroft அப்போதுதான் gallbladder அறுவை சிகிச்சை முடித்து ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு பாதுகாவலாக இருக்கும் அமெரிக்க (FBI) இரகசியப் பிரிவு போலிசாருக்கு, என்றும் போல அதுவும் ஒரு சாதரண இரவே. அமெரிக்க அட்டர்னி செனரல் திடீர் அறுவை சிகிச்சைக்கு உள்ளாகி , அதிகாரபூர்வமாக எந்த முடிவுகளும் எடுக்கமுடியாத சூழலில் உள்ளார். சுய நினைவுடன் இருந்தாலும் உட்கொள்ளும் அதிக சக்திவாய்ந்த மருந்துகள், அவரை ஒருவித‌ மயக்கத்திலேயே வைத்து இருந்தது. 

இரவு, சிறிது சிறிதாக அதிக கறுப்பு வண்ணம் ஊற்றிக்கொண்டிருந்தது அந்த மருத்துவமனையின் மீது. அட்டர்னி செனரல் John Ashcroft க்கு துணையாக அவர் மனைவி உடன் இருந்தார்.

2001
Robert Mueller
அமெரிக்காவின் வரலாற்றிலேயே அதிக முக்கியமான, பதட்டமான சூழ்நிலையில் , மத்திய உளவுத்துறை FBI க்கு பொறுப்பேற்கிறார் Robert Mueller. ஆம், 9/11 நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான், அதன் தலைமைப் பதவிக்கு அப்போதைய அதிபர் George W. Bush அவர்களால், நியமிக்கப்படுகிறார் Mueller

Mueller பதவியேற்ற காலத்தில், அந்த துறையின் கணனி தொழில் நுட்பம் , சராசரி அமெரிக்கனின் கணனிக்கும் குறைவாகவே இருந்தது என்றால் மிகையில்லை. 9/11 விபத்து நடப்பதற்குமுன், வேறு பல காரணங்களுக்காக அல்கொய்தாவை துரத்திக்கொண்டிருந்த FBI , கோப்புகளை கணனி வழியாக அனுப்பும் வழி தெரியாமல், அதை ஒரு floppy disk  ல் சேமித்துக்கொண்டு, லாஃச் ஏஞ்சல்சிலிருந்து , நியூயார்க்கிற்கு விமானத்தில் வந்து கொடுத்துச் சென்றார்கள். 9/11 விபத்து நடந்தபின்னரும் கூட , குற்றவாளிகள் என்று சந்தேகப்படுபவர்களின் புகைப்படங்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வழியில்லாமல், கொரியர் (FedEx) வழியாக அனுப்பிக்கொண்டிருந்தார்கள் என்றால் , அவர்களின் கணனி 2001 ல் எந்த அளவில் இருந்தது என்று தெரியவரும். 

இப்படியான சூழலில் பதவியேற்ற‌ Robert Mueller க்கு, FBI ன் க‌ணனி கட்டமைப்பை மேம்படுத்துவது முதல் நோக்கமாக இருந்ததில் வியப்பில்லை. 

9/11 துர்நிகழ்வு நடந்தவுடன் முல்லருக்கு கொடுக்கப்படும் முக்கிய வேலை, "இனிமேல் இப்படி ஒரு நிகழ்வு இந்த அமெரிக்க மண்ணில் நடக்கக்கூடாது" என்பதே. இதை திட்டவட்டமாக அதிபர் George W. Bush  ம், அட்டர்னி செனரல் John Ashcroft ம், Mueller டம் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். அமெரிக்காவில் FBI இயக்குநர் பதவி , அமெரிக்காவின் அட்டனர்னி செனரலுக்கு கட்டுப்பட்ட பதவி. 

2003
James Comey
இந்த ஆண்டில்தான் துணை அட்டர்னி செனரலாக பதவி ஏற்கிறார் James Comey என்பவர். இவர் சேர்ந்த நேரத்தில்,  "Stellar Wind" என்ற , வாரண்ட் தேவையற்ற சோதனைமுறை இரகசியமாக நடைமுறையில் இருந்தது. [ A warrant-less surveillance program known by the code name "Stellar Wind" began under the George W. Bush administration's President's Surveillance Program (PSP). ]

இந்த திட்டத்தை அறியவரும் James Comey , அது குறித்து கவலை கொள்கிறார். அவரின் மனசாட்சி இதை ஏற்கவில்லை. அந்த திட்டம் ஒரு சட்டமீறல் என்று உறுதியாக‌ நம்பும் James Comey , அதை அவரின் boss John Ashcroft அனுமதியோடு, வெள்ளை மாளிகை அதிகார வட்டத்திற்கு எடுத்துச் சொல்கிறார். 

Stellar Wind திட்டத்தின் முக்கிய அம்சம், அதை 90 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கவேண்டும். அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் செயல்படும் திட்டமாக‌ இருந்தாலும், அதைப் புதுப்பிக்க அமெரிக்க அட்டர்னி செனரலால் மட்டுமே முடியும். அப்படி புதுப்பிக்க முடியாமல் போனால், அது அந்த நொடியில் காலாவதியாகிவிடும். 

2004
Dick Cheney
அட்டர்னி செனரல் John Ashcroft  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,முடிவெடுக்க முடியாமல் இருக்கும் இந்த நேரத்தில், Stellar Wind திட்டத்தை புதுப்பிக்க வேண்டிய வேளை வருகிறது.அதைப் புதுப்பிக்க வேண்டிய பொறுப்பு  துணை அட்டர்னி செனரல் James Comey க்கு வருகிறது. ஏற்கனவே இந்த திட்டம் குறித்து கவலையில் இருக்கும் அவர், இதை புதுப்பிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். அவருக்கும் அப்போது துணை அதிபராக இருந்த Dick Cheney , க்கும் நடந்த உரையாடலில் துணை அதிபர்  "இந்த திட்டம் மிக முக்கியமானது, இதை நிறுத்தினால அமெரிக்கர்கள் உயிரிழப்பார்கள்" என்று சொல்லியபோதும், அதை புதுப்பிக்க முடியாது என்று  James Comey நிராகரித்துவிடுகிறார்

அதே இரவு...
Andy Card
துணை அதிபரிடம் பேசிவிட்டு , James Comey அவரின் அதிகாரபூர்வ வாகனத்தில் அவரின் வீட்டுக்குச் சென்றுகொண்டுள்ளார். வாசிங்டன் மருந்துவமனையில் இருந்து John Ashcroft ன் மனைவி , James Comey யை அழைத்து ஒரு தகவலைச் சொல்கிறார். ஆம், Comey எதிர்ப்பினால், Stellar Wind திட்டம் காலாவதியாவிடாமல் இருக்க, அவருக்குத் தெரியாமல், அவரின் boss  'John Ashcroft ' டிடம் குறுக்கு வழியில் கையொப்பம் வாங்க,  வெள்ளை மாளிகை திட்டமிடுகிறது.


Alberto Gonzales
John Ashcroft ன் மருத்துவ நிலையை நன்கு அறிந்திருந்தாலும், இப்போதைய Acting Attorney General "James Comey"  என்பது தெரிந்திருந்தாலும், இப்படியான குறுக்கு வழியில் செல்ல வெள்ளை மாளிகை திட்டமிட்டு, அப்போதைய (தலைமைச் செயலாளர்) White House Chief of Staff "Andy Card" யும் ஆலோசகர் "Alberto Gonzales" யும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

இந்த தகவல் அறிந்தவுடன், Comey தன் வாகனத்தின் சிகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு, சைரனுடன் , அதிவேகமாக தனது மேலதிகாரி  John Ashcroft இருக்கும் மருத்துவமனையை நோக்கிச் செல்கிறார். அப்படிச் செல்லும்போதே அவருக்கு , மருத்துவமனையில் நடக்கப்போகும் அதிகாரப் போட்டியும், பாதுகாவலுக்கு இருக்கும் FBI ஆட்கள், என்ன நிலைப்பாடு எடுப்பார்கள் என்பதும் ஓரளவு கணிக்க முடிந்தது.

வெள்ளை மாளிகையில் இருந்து வரும் White House Chief of Staff "Andy Card" உடன்  FBI ஆட்கள் , நிச்சயம் Comey  மருத்துவமனையில் இருந்து அப்புறப்படுத்தி, John Ashcroft  டிடம் தனிமையில் கையொப்பம் வாங்க‌ முயலக்கூடும். அப்படி நடந்தால், என்னதான்  acting attorney aeneral  ஆக இருந்தாலும், சீருடை அணிந்த FBI ஆட்களிடம் எதையும் விளக்க முடியாது. 

அந்த இரவில்தான் , அமெரிக்க வரலாற்றில் அதிகார வர்க்கங்களுக்கு இடையேயான உறவுகள், யார்? என்ன? எதை? எப்போது? செய்ய முடியும் என்ற சிக்கல்களை உண்டாக்கும் தொலைபேசி அழைப்புகள் நடக்கின்றன. 
  • Attorney General  "John Ashcroft" சுயநினைவு இல்லாமல் அல்லது மருந்தின் வீரியத்தில் சரியான முடிவெடுக்கும் நிலையில் இல்லை.
  • முடிவெடுக்கும் நிலையில் இருக்கும் Acting Attorney General  "James Comey" அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருக்கும் Stellar Wind திட்டத்தை அமெரிக்க அதிபரே சொன்னாலும் நீட்டிக்க முடியாது என்ற நிலையை எடுத்துவிட்டார்.
  • வெள்ளை மாளிகையில் இருந்து வரும் White House Chief of Staff "Andy Card" , acting attorney general  ன் அதிகாரத்தை கேலிக்கிடமாக்கி, சிகிச்சையில் இருக்கும் Attorney General  "John Ashcroft"  இடம் கையொப்பம் வாங்க வந்துகொண்டு இருக்கிறார்.
அதே இரவின் அந்த நேரத்தில் ,வாசிங்டனின் ன்னொரு மூலையில் FBI இயக்குநர் Robert Mueller , அவரின் Georgetown வீட்டில் இரவு உணவிற்கு அமர்ந்துள்ளார். 

James Comey  மருத்துவமனைக்குச் சென்றாலும், அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் அதிகாரம் , அங்கு பாதுகாப்பிற்கு இருக்கும்   FBI ஆட்களுக்கு உண்டு.Comey , Mueller ஐ தொலைபேசியில் அழைக்கிறார். அழைத்து விவரத்தைச் சொல்கிறார். 

Robert Mueller FBI Director
மருத்துவமனையில் காவலுக்கு இருக்கும் FBI அதிகாரிகளுக்கு , அவர்களின் இயக்குநரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அந்த இரவில் அப்படியொரு அழைப்பை , அதுவும் அவர்களின் இயக்குநரிடம் இருந்தே வரும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களை அழைத்த Mueller, "எக்காரணத்தைக் கொண்டும் , வெள்ளை மாளிகை FBI அதிகாரிகளால் , Comey க்கு எதுவும் நடக்கக்கூடாது" என்று கட்டளையிடுகிறார்.

அந்த நடு இரவில், அமெரிக்க தலைநகரில் மூன்று முக்கிய அதிகார நபர்கள், மருத்துமனையை நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டுள்ளார்கள். மருத்துவமனையை முதலில் அடைந்தது Comey. அவர் வந்த சிறிது நேரத்தில்  Andy Card ம் ஆலோசகர் Alberto Gonzales  வந்து சேர்கிறார்கள். அனைவரும் John Ashcroft அறைக்குச் செல்கிறார்கள். 

"Stellar Wind" திட்டத்தில் கையொப்பமிடுமாறு "Andy Card",  "John Ashcroft"  டிடம் கேட்கிறார். John Ashcroft   "நான் இப்போது அட்டர்னி செனரல் கிடையாது. என்னுடைய அனுமதி என்பது இப்போது செல்லாத ஒன்று. நீங்கள் கேட்க வேண்டியது, என் துணை அட்டர்னி செனரல் கோமியிடம்" என்று  James Comey நோக்கி கை காட்டுகிறார் , அவ்வளவு சிரமமான நிலையிலும்.

வெள்ளை மாளிகையில் இருந்து வந்தவர்கள், மறு பேச்சுப் பேசாமல் சென்று விட்டனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் அங்கே Mueller வருகிறார். Mueller ப் பார்த்த John Ashcroft , அவரிடம் " என்னதான் நடக்கிறது?" என்று கேட்கிறார். 

அதற்கு Mueller, "ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அவனுக்கான சத்திய சோதனைகள் வரும். இன்று இரவு நடந்த சத்திய சோதனையில், நீங்கள் வென்று விட்டீர்கள்" என்று சொல்கிறார். 

Mueller says, you know, John, there comes a time in every man's life when he's tested. And tonight, you passed the test.

இது நடந்து 48 மணி நேரத்தில் Comey ம் , Mueller ம், அவர்களுக்கான ராசினாமா கடிதங்களை அதிபருக்கு அனுப்ப தயாராகிறார்கள். அவர்களால் , இப்படியான, தேசத்தின் சட்டத்திற்கு எதிரான, அதிபரின் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பில் இருக்க முடியவில்லை.

விடியல்...
அவர்களின் ராசினாமா ஏற்கப்படவில்லை. மாறாக அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து அதன்படி செயல்பட்டார் அதிபர் George W. Bush .அவருக்குப்பின் வந்த அதிபர் Barack Obama காலத்திலும் தொடர்ந்து 12 வருடங்கள் Mueller FBI இயக்குநராக இருந்தார்.

பிற்காலம்..
பிற்காலத்தில் James Comey யே FBI இயக்குநராகிறார்.

2017
அதிபர் ட்ரம்பின் இரசியா விவகாரத்தில், FBI இயக்குநர் James Comey  ன் பதவி பறிக்கபடுகிற‌து. ஓய்வு பெற்ற Mueller  தலைமையில் அதே இரசிய விவாகரத்தை விசாரிக்கும் கமிசன் அமைக்கப்படுகிறது.

நிகழ்காலம்..
2018
நாளை வெளியாக இருக்கும் Devin Nunes அறிக்கையானது , Mueller  தலைமையில் நடந்து கொண்டிருக்கும் இரசியா விவாகரத்தை என்ன செய்யும்? அதை அவர் எப்படி எதிர் கொள்வார் என்பது அவருக்கான இன்னொரு சோதனை.

தகவல்கள் இந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
http://wunc.org/post/muellers-reputation-washington-stunningly-bipartisan-journalist-says#stream/0