John Ashcroft
2004மார்ச் 2004
ஒரு இரவு நேரம். எல்லா இரவுகளையும் போலவே அந்த இரவும், கறுப்பாகவே இருந்தது. அமெரிக்காவில் George Washington Hospital அறை ஒன்றில் , அப்போதைய அமெரிக்க அட்டர்னி செனரல்(Attorney general) John Ashcroft அப்போதுதான் gallbladder அறுவை சிகிச்சை முடித்து ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு பாதுகாவலாக இருக்கும் அமெரிக்க (FBI) இரகசியப் பிரிவு போலிசாருக்கு, என்றும் போல அதுவும் ஒரு சாதரண இரவே. அமெரிக்க அட்டர்னி செனரல் திடீர் அறுவை சிகிச்சைக்கு உள்ளாகி , அதிகாரபூர்வமாக எந்த முடிவுகளும் எடுக்கமுடியாத சூழலில் உள்ளார். சுய நினைவுடன் இருந்தாலும் உட்கொள்ளும் அதிக சக்திவாய்ந்த மருந்துகள், அவரை ஒருவித மயக்கத்திலேயே வைத்து இருந்தது.
இரவு, சிறிது சிறிதாக அதிக கறுப்பு வண்ணம் ஊற்றிக்கொண்டிருந்தது அந்த மருத்துவமனையின் மீது. அட்டர்னி செனரல் John Ashcroft க்கு துணையாக அவர் மனைவி உடன் இருந்தார்.
2001
Robert Mueller
அமெரிக்காவின் வரலாற்றிலேயே அதிக முக்கியமான, பதட்டமான சூழ்நிலையில் , மத்திய உளவுத்துறை FBI க்கு பொறுப்பேற்கிறார் Robert Mueller. ஆம், 9/11 நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான், அதன் தலைமைப் பதவிக்கு அப்போதைய அதிபர் George W. Bush அவர்களால், நியமிக்கப்படுகிறார் Mueller. Mueller பதவியேற்ற காலத்தில், அந்த துறையின் கணனி தொழில் நுட்பம் , சராசரி அமெரிக்கனின் கணனிக்கும் குறைவாகவே இருந்தது என்றால் மிகையில்லை. 9/11 விபத்து நடப்பதற்குமுன், வேறு பல காரணங்களுக்காக அல்கொய்தாவை துரத்திக்கொண்டிருந்த FBI , கோப்புகளை கணனி வழியாக அனுப்பும் வழி தெரியாமல், அதை ஒரு floppy disk ல் சேமித்துக்கொண்டு, லாஃச் ஏஞ்சல்சிலிருந்து , நியூயார்க்கிற்கு விமானத்தில் வந்து கொடுத்துச் சென்றார்கள். 9/11 விபத்து நடந்தபின்னரும் கூட , குற்றவாளிகள் என்று சந்தேகப்படுபவர்களின் புகைப்படங்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வழியில்லாமல், கொரியர் (FedEx) வழியாக அனுப்பிக்கொண்டிருந்தார்கள் என்றால் , அவர்களின் கணனி 2001 ல் எந்த அளவில் இருந்தது என்று தெரியவரும்.
இப்படியான சூழலில் பதவியேற்ற Robert Mueller க்கு, FBI ன் கணனி கட்டமைப்பை மேம்படுத்துவது முதல் நோக்கமாக இருந்ததில் வியப்பில்லை.
9/11 துர்நிகழ்வு நடந்தவுடன் முல்லருக்கு கொடுக்கப்படும் முக்கிய வேலை, "இனிமேல் இப்படி ஒரு நிகழ்வு இந்த அமெரிக்க மண்ணில் நடக்கக்கூடாது" என்பதே. இதை திட்டவட்டமாக அதிபர் George W. Bush ம், அட்டர்னி செனரல் John Ashcroft ம், Mueller டம் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். அமெரிக்காவில் FBI இயக்குநர் பதவி , அமெரிக்காவின் அட்டனர்னி செனரலுக்கு கட்டுப்பட்ட பதவி.
2003
James Comey
இந்த ஆண்டில்தான் துணை அட்டர்னி செனரலாக பதவி ஏற்கிறார் James Comey என்பவர். இவர் சேர்ந்த நேரத்தில், "Stellar Wind" என்ற , வாரண்ட் தேவையற்ற சோதனைமுறை இரகசியமாக நடைமுறையில் இருந்தது. [ A warrant-less surveillance program known by the code name "Stellar Wind" began under the George W. Bush administration's President's Surveillance Program (PSP). ]இந்த திட்டத்தை அறியவரும் James Comey , அது குறித்து கவலை கொள்கிறார். அவரின் மனசாட்சி இதை ஏற்கவில்லை. அந்த திட்டம் ஒரு சட்டமீறல் என்று உறுதியாக நம்பும் James Comey , அதை அவரின் boss John Ashcroft அனுமதியோடு, வெள்ளை மாளிகை அதிகார வட்டத்திற்கு எடுத்துச் சொல்கிறார்.
Stellar Wind திட்டத்தின் முக்கிய அம்சம், அதை 90 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கவேண்டும். அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் செயல்படும் திட்டமாக இருந்தாலும், அதைப் புதுப்பிக்க அமெரிக்க அட்டர்னி செனரலால் மட்டுமே முடியும். அப்படி புதுப்பிக்க முடியாமல் போனால், அது அந்த நொடியில் காலாவதியாகிவிடும்.
2004
Dick Cheney
அட்டர்னி செனரல் John Ashcroft மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,முடிவெடுக்க முடியாமல் இருக்கும் இந்த நேரத்தில், Stellar Wind திட்டத்தை புதுப்பிக்க வேண்டிய வேளை வருகிறது.அதைப் புதுப்பிக்க வேண்டிய பொறுப்பு துணை அட்டர்னி செனரல் James Comey க்கு வருகிறது. ஏற்கனவே இந்த திட்டம் குறித்து கவலையில் இருக்கும் அவர், இதை புதுப்பிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். அவருக்கும் அப்போது துணை அதிபராக இருந்த Dick Cheney , க்கும் நடந்த உரையாடலில் துணை அதிபர் "இந்த திட்டம் மிக முக்கியமானது, இதை நிறுத்தினால அமெரிக்கர்கள் உயிரிழப்பார்கள்" என்று சொல்லியபோதும், அதை புதுப்பிக்க முடியாது என்று James Comey நிராகரித்துவிடுகிறார்
அதே இரவு...
Andy Card
துணை அதிபரிடம் பேசிவிட்டு , James Comey அவரின் அதிகாரபூர்வ வாகனத்தில் அவரின் வீட்டுக்குச் சென்றுகொண்டுள்ளார். வாசிங்டன் மருந்துவமனையில் இருந்து John Ashcroft ன் மனைவி , James Comey யை அழைத்து ஒரு தகவலைச் சொல்கிறார். ஆம், Comey எதிர்ப்பினால், Stellar Wind திட்டம் காலாவதியாவிடாமல் இருக்க, அவருக்குத் தெரியாமல், அவரின் boss 'John Ashcroft ' டிடம் குறுக்கு வழியில் கையொப்பம் வாங்க, வெள்ளை மாளிகை திட்டமிடுகிறது.
Alberto Gonzales
John Ashcroft ன் மருத்துவ நிலையை நன்கு அறிந்திருந்தாலும், இப்போதைய Acting Attorney General "James Comey" என்பது தெரிந்திருந்தாலும், இப்படியான குறுக்கு வழியில் செல்ல வெள்ளை மாளிகை திட்டமிட்டு, அப்போதைய (தலைமைச் செயலாளர்) White House Chief of Staff "Andy Card" யும் ஆலோசகர் "Alberto Gonzales" யும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இந்த தகவல் அறிந்தவுடன், Comey தன் வாகனத்தின் சிகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு, சைரனுடன் , அதிவேகமாக தனது மேலதிகாரி John Ashcroft இருக்கும் மருத்துவமனையை நோக்கிச் செல்கிறார். அப்படிச் செல்லும்போதே அவருக்கு , மருத்துவமனையில் நடக்கப்போகும் அதிகாரப் போட்டியும், பாதுகாவலுக்கு இருக்கும் FBI ஆட்கள், என்ன நிலைப்பாடு எடுப்பார்கள் என்பதும் ஓரளவு கணிக்க முடிந்தது.
வெள்ளை மாளிகையில் இருந்து வரும் White House Chief of Staff "Andy Card" உடன் FBI ஆட்கள் , நிச்சயம் Comey மருத்துவமனையில் இருந்து அப்புறப்படுத்தி, John Ashcroft டிடம் தனிமையில் கையொப்பம் வாங்க முயலக்கூடும். அப்படி நடந்தால், என்னதான் acting attorney aeneral ஆக இருந்தாலும், சீருடை அணிந்த FBI ஆட்களிடம் எதையும் விளக்க முடியாது.
அந்த இரவில்தான் , அமெரிக்க வரலாற்றில் அதிகார வர்க்கங்களுக்கு இடையேயான உறவுகள், யார்? என்ன? எதை? எப்போது? செய்ய முடியும் என்ற சிக்கல்களை உண்டாக்கும் தொலைபேசி அழைப்புகள் நடக்கின்றன.
- Attorney General "John Ashcroft" சுயநினைவு இல்லாமல் அல்லது மருந்தின் வீரியத்தில் சரியான முடிவெடுக்கும் நிலையில் இல்லை.
- முடிவெடுக்கும் நிலையில் இருக்கும் Acting Attorney General "James Comey" அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருக்கும் Stellar Wind திட்டத்தை அமெரிக்க அதிபரே சொன்னாலும் நீட்டிக்க முடியாது என்ற நிலையை எடுத்துவிட்டார்.
- வெள்ளை மாளிகையில் இருந்து வரும் White House Chief of Staff "Andy Card" , acting attorney general ன் அதிகாரத்தை கேலிக்கிடமாக்கி, சிகிச்சையில் இருக்கும் Attorney General "John Ashcroft" இடம் கையொப்பம் வாங்க வந்துகொண்டு இருக்கிறார்.
James Comey மருத்துவமனைக்குச் சென்றாலும், அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் அதிகாரம் , அங்கு பாதுகாப்பிற்கு இருக்கும் FBI ஆட்களுக்கு உண்டு.Comey , Mueller ஐ தொலைபேசியில் அழைக்கிறார். அழைத்து விவரத்தைச் சொல்கிறார்.
Robert Mueller FBI Director
மருத்துவமனையில் காவலுக்கு இருக்கும் FBI அதிகாரிகளுக்கு , அவர்களின் இயக்குநரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அந்த இரவில் அப்படியொரு அழைப்பை , அதுவும் அவர்களின் இயக்குநரிடம் இருந்தே வரும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களை அழைத்த Mueller, "எக்காரணத்தைக் கொண்டும் , வெள்ளை மாளிகை FBI அதிகாரிகளால் , Comey க்கு எதுவும் நடக்கக்கூடாது" என்று கட்டளையிடுகிறார்.
அந்த நடு இரவில், அமெரிக்க தலைநகரில் மூன்று முக்கிய அதிகார நபர்கள், மருத்துமனையை நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டுள்ளார்கள். மருத்துவமனையை முதலில் அடைந்தது Comey. அவர் வந்த சிறிது நேரத்தில் Andy Card ம் ஆலோசகர் Alberto Gonzales வந்து சேர்கிறார்கள். அனைவரும் John Ashcroft அறைக்குச் செல்கிறார்கள்.
"Stellar Wind" திட்டத்தில் கையொப்பமிடுமாறு "Andy Card", "John Ashcroft" டிடம் கேட்கிறார். John Ashcroft "நான் இப்போது அட்டர்னி செனரல் கிடையாது. என்னுடைய அனுமதி என்பது இப்போது செல்லாத ஒன்று. நீங்கள் கேட்க வேண்டியது, என் துணை அட்டர்னி செனரல் கோமியிடம்" என்று James Comey நோக்கி கை காட்டுகிறார் , அவ்வளவு சிரமமான நிலையிலும்.
வெள்ளை மாளிகையில் இருந்து வந்தவர்கள், மறு பேச்சுப் பேசாமல் சென்று விட்டனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் அங்கே Mueller வருகிறார். Mueller ப் பார்த்த John Ashcroft , அவரிடம் " என்னதான் நடக்கிறது?" என்று கேட்கிறார்.
அதற்கு Mueller, "ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அவனுக்கான சத்திய சோதனைகள் வரும். இன்று இரவு நடந்த சத்திய சோதனையில், நீங்கள் வென்று விட்டீர்கள்" என்று சொல்கிறார்.
Mueller says, you know, John, there comes a time in every man's life when he's tested. And tonight, you passed the test.
இது நடந்து 48 மணி நேரத்தில் Comey ம் , Mueller ம், அவர்களுக்கான ராசினாமா கடிதங்களை அதிபருக்கு அனுப்ப தயாராகிறார்கள். அவர்களால் , இப்படியான, தேசத்தின் சட்டத்திற்கு எதிரான, அதிபரின் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பில் இருக்க முடியவில்லை.
விடியல்...
அவர்களின் ராசினாமா ஏற்கப்படவில்லை. மாறாக அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து அதன்படி செயல்பட்டார் அதிபர் George W. Bush .அவருக்குப்பின் வந்த அதிபர் Barack Obama காலத்திலும் தொடர்ந்து 12 வருடங்கள் Mueller FBI இயக்குநராக இருந்தார்.
பிற்காலம்..
பிற்காலத்தில் James Comey யே FBI இயக்குநராகிறார்.
2017
அதிபர் ட்ரம்பின் இரசியா விவகாரத்தில், FBI இயக்குநர் James Comey ன் பதவி பறிக்கபடுகிறது. ஓய்வு பெற்ற Mueller தலைமையில் அதே இரசிய விவாகரத்தை விசாரிக்கும் கமிசன் அமைக்கப்படுகிறது.நிகழ்காலம்..
2018
நாளை வெளியாக இருக்கும் Devin Nunes அறிக்கையானது , Mueller தலைமையில் நடந்து கொண்டிருக்கும் இரசியா விவாகரத்தை என்ன செய்யும்? அதை அவர் எப்படி எதிர் கொள்வார் என்பது அவருக்கான இன்னொரு சோதனை.
தகவல்கள் இந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
http://wunc.org/post/muellers-reputation-washington-stunningly-bipartisan-journalist-says#stream/0