Friday, November 10, 2017

கலாச்சார அடியாட்கள்

லாச்சாரம் தமிழில் பண்பாடு எனப்படும்.
பண்பாடு:
ஒரு குறிப்பிட்ட காலத்தில் , ஒரு குறிப்பிட்ட பகுதியில், ஒரு குறிப்பிட்ட மக்கள், ஒரு குறிப்பிட்ட தேவைகளுக்காக, அவர்களின் காலத்தில் மேற்கொண்ட‌ பழக்கம்.

அவர்களின் காலம் கடந்தபின், அந்த நிலப்பகுதியில் பிறந்த அடுத்த தலைமுறை மக்கள், "பழையவர்கள் இயல்பாக அவர்களின் அக்காலத் தேவைக்காக, அக்காலப் புரிதலுகு உட்பட்டு செய்தவற்றை, கலாச்சாரம்/பண்பாடு என்று அட்டவணைப்படுத்துவார்கள்.  அதாவது இன்று இருப்பவர்கள், பழைய வரலாற்று செயல்களை,  அந்த பழைய மக்களின் கலாச்சாரம்/பண்பாடு என்று அட்டவணைப்படுத்துவார்கள்.  picture from: http://buzzkenya.com/wp-content/uploads/2013/08/african_culture.jpg

இந்த தலைமுறை,  பழைய தலைமுறையின் சட்டகத்தில் வாழ நினைப்பது காருக்கு(Car) சாட்டை வாங்குதல் போன்றது. கண்ணகியோ அல்லது சீதையோ உங்களின் கலாச்சார அடையாளம் என்றால்,  என்ன வெங்காயத்துக்கு "சுரிதார்" போட வேண்டும்? ஆண்கள் என்ன வெங்காயத்திற்கு "பேன்ட்" போட வேண்டும் இப்போது?

எல்லாவற்றையும் பழைய புத்தகத்தில் இருந்து பின்பற்றலாமே?

***

இலட்சுமி என்ற குறும்படம். 
https://www.youtube.com/watch?v=vP5dOY42DKI

என்பார்வையில் மகா மொக்கையான படம் . பழையகால பலாசந்தர்வகை குப்பைகளில் இருந்து, சற்றும் மாறாமல் அதே கதை.

"கக்கூசு" ( https://www.youtube.com/watch?v=-UYWRoHUpkU ) போன்ற சமூக அவலங்களைத் தோலுரிக்கும் படங்களை பார்த்து விமர்சிக்க, ஏன் பார்க்கக்கூட திராணியில்லாத போலிச் சம்முவம் இந்தக் குப்பையை அரைக்கிறது.

விலங்கினங்களின் DNA வில் எழுதப்பட்டுள்ள முக்கிய கடமை பிரதியெடுத்து தன்னைப் போன்ற ஒன்றை விட்டுச்செல்லுதல். பல உயிரனங்கள் கலவிக்குப்பின் இறந்து விடுகின்றன. மனிதனின் வாழ்க்கையும்
 பிரதியெடுத்தலைச் சுற்றிப்பின்னப்பட்ட ஒன்றே.

உடல்கள் ஒன்று சேர்வது, பிரதி எடுத்தலில் முக்கியமான ஒன்று. இன்று அது மாறிவிட்டது. இருந்தாலும் , உடல்கள் ஒன்று சேர்வதற்கான காரணிகள் அப்படியேதான் உள்ளது.  இரு உடல்கள் எப்படிப் கவரப்படும் என்பது, அந்த அந்த மூளைகளின் செய்திகளில் உள்ள விசயம்.

சேகர் ‍என்ற ஒருவனும் இலட்சுமி என்ற ஒருத்தியும் அவர்களின் சம்முவப்படி, சந்ததி உருவாக்க சேர்த்து வைக்கப்படுகிறார்கள். ஒரு மனிதக் குழந்தையும் அவர்களுக்கு பிறந்துவிட்டது. அது மூளைக்குத் தெரியும். இருந்தாலும் ,மூளைக்கு உடலில் உண்டாகிக்கொண்டு இருக்கும் பிரதியெடுத்தலுக்கான திரவங்களை கடத்தியாகவேண்டிய கடமை உள்ளது. எனவே இவர்களுக்கு இடையே உடலுறவும் நடந்துகொண்டுள்ளது.

இன்னொரு பக்கம் பெயரில்லாத பெண் உள்ளார்.
  • அவருக்கு திருமணம் ஆகி இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். 
  • அவர் லேத் பட்டறையில் வேலை செய்யலாம் அல்லது IT நிறுவனத்தில் வேலை செய்யலாம். 
  • குழந்தைகள் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். 
  • சேகருக்கும் அந்தப் பெயரில்லாத பெண்ணிற்கும், வெறும் நட்பான உறவோ அல்லது அதனுடன் சேர்த்து உடல் ரீதியான உறவோ இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.
இதை இயகுநர் சொல்லவில்லை. பார்வையாளனின் யூகத்திற்கு விட்டுவிட்டார். இதுதான் சிக்கல். அந்தக் கதாபாத்திரம் குறித்து ஒரு பேச்சுகளும் இல்லை.

***

இந்தப்படத்திற்கு ஆதரவு எதிர்ப்பு என்று இருதரப்பினரும், இணையத்தில்  பேசும் பேச்சுகள் சிரிப்பாக இருப்பதால் , அதைப் பற்றிப் பேச வேண்டியுள்ளது .
  •  "சேகர் அடுத்த பெண்ணுடன் உடலுறவு தொடர்பில் இருப்பதால்தான் இலட்சுமியும் இப்படிச் செய்கிறார். ஆண்தான் முதலில் திருமண விதிகளை மீறினான்" என்று சப்பைக்கட்டு கட்டுபவர்களுக்கு.
அந்தப் பெயரில்லாத பெண்ணும் , IT யில் வேலை பார்க்கும் அவளின் கணவனின் செயல்களால் சலிப்படைந்து,  "லேத் சேகரின்" பக்கம் வந்திருக்கலாமே? இது ஏன் சேகரின் குற்றமாகப் பார்க்கப்படுகிறது? உங்களுக்கு வசதி என்பதாலா? அல்லது இயக்குநர் அந்தப் பெண்பற்றிச் சொல்லவில்லை எனவே ஆண்தான் நிச்சயம் அழுகுணி ஆட்டக்காரன் என்ற முன்முடிவா?இரண்டு உடல்களில் ஒரு உடலை மற்றும் குற்றம் சொல்வது ஏன்?
  • "லேத்" பட்டறையில் எப்படி  பெண்கள் இருக்கலாம்?  என்று பிரிண்டிங் பிரசில் வேலை செய்யும் இலட்சுமி கேட்கிறாள். 
இயக்குநர் அல்லது வசனம் எழுதியவர் கண்ணகி காலத்தில் இருப்பவர் என்று சொல்லமுடியாது. ஆனால் ஏன் இலட்சுமிக்கு ஒரு நீதி, அந்தப் பெயரில்லாத பெண்ணிற்கு ஒரு நீதி என்று வைக்கிறார் என்று தெரியவில்லை. பிரிண்ட்டிங்க் பிரசில் ஒரு பெண் கதாபாத்திரம் வேலை செய்யும்போது , இன்னொரு பெண் கதாபாத்திரம் லேத்தில் வேலை செய்யக்கூடாதா என்ன?
  • சில‌ அறிவாளி இந்துத்துவவியாதிகள்  "ஏன் இலட்சுமி என்று பெயர்?" என்று கேட்கிறார்கள்.
"ரீட்டா"ன்னு பெயர் வைச்சா உங்க சம்முவம் நிம்மதியா இருக்குமா டியர்? பழைய படங்களில் "ரீட்டா"தானே உங்கள் கதாநாயகிகளின் கலாச்சாரத்தைக் காத்து, தன்னுடலை உங்களுக்கு இரசிக்கத்தந்தவர்கள். அப்படித்தான் இன்னும் இருக்கணும் அதுதான் உங்கள் கவலை சரியா?  உடல் உறவில் ஈடுபடும்  ஈடுபட்டதாகவே கொண்டாலும், இரண்டு உடல்களில் ஒன்றின் பெயர் "இலட்சுமி" மற்ற ஒன்றின் பெயர் "கதிர்".  இன்னொரு சோடியில் ஒன்றின் பெயர் "சேகர்" மற்ற ஒன்றிற்கு பெயரே வைக்கவில்லை இயக்குநர்.
இவர்களுக்கு "இலட்சுமி" என்ற பெயர் தேர்வுதான் கவலை. "கதிர்" என்ற ஆணின் பெயர் "இலட்சுமி" என்ற பெண்ணின் பெயரோடு உறவாடினாலும், "கதிர்" இதில் தப்பிக்கிறார். இந்த சம்முவத்திற்கு கதிர்களின் குறிச்சுத்தம் குறித்து கவலை இல்லை.
  • சில மொண்ணைகள் ஏன் பாரதியார் பாட்டு என்று கேட்கிறார்கள்.
சரி உங்களுக்காக, பின்னணியில் "சவுந்தர்ய லகரி" பக்திப்பாடல் போட்டா ஓக்காவே டியர்?
***

எல்லா உடல் உறவுகளிலும் இரண்டு உடல்கள் பங்கேற்கிறது. அவை விரும்பியே பங்கேற்கும்போது மற்ற உடல்கள் அவர்களின் நியாயத்தராசுகளை வைத்து இந்த உடல்களை அளக்க முற்படுகின்றன.
தேவையின் பொருட்டு இரண்டு உடல்கள் செய்யும் உறவில் எந்த உடலைக் குற்றம் சொல்வீர்கள்?

தினத்தந்தியில் தினம் ஓடிப்போகும் ஒரு ஆணுடன் ஓடுவது ஒரு பெண். எல்லா கள்ளக்காதல்களிலும் ஆணும் உண்டு பெண்ணும் உண்டு.

ஒரு உடல் மட்டுமே கள்ளக்காதலில் ஈடுபடமுடியாது. அதற்குப் பெய‌ர் சுய இன்பம்.

***
தவளைகளுக்கு கிணற்றின் அளவே புரிதல். அதனால்தான் "பறவை என்றால் பறக்கோணும்" என்று இலக்கணம் சொல்கிறார்கள்.

Is marriage becoming totally outdated in Iceland?
http://www.cnn.com/travel/article/wonder-list-bill-weir-iceland/index.html

//Bryndis has three kids with two partners and not a drop of shame or regret.
She explains that since few Icelanders are religious, there is no moral stigma attached to unwed pregnancy. And her country guarantees some of the most generous parental leave in the world: nine months at 80% pay (three months for mom, three for dad and another three to be divvied up).//

**
பழைய கலாச்சாரப் பொங்கல்
கலாச்சாரமும் பிரபலபதிவர் என்ற கூமுட்டைகளும்
http://kalvetu.blogspot.com/2010/10/blog-post_13.html

.