Thursday, December 27, 2012

மந்தையில் இருந்து விலகிய ஆடு

நேற்று ஒரு விழாவிற்குச் சென்று இருந்தேன். எங்கள் வீட்டின் அருகே குடியிருக்கும் ஒருவர், புதியதாக வீடு வாங்கியுள்ளார். அதற்காக பால் காய்ச்ச அழைத்து இருந்தார். புது வீட்டில் பால் காய்ச்சுவது என்பது  சடங்கு. சின்ன வயதில் எங்கள் வீட்டிற்கு அருகில் குடி வருபவர்கள், பால் காய்ச்ச தவறாமல் எங்கள் அம்மாவை அழைப்பார்கள். உப்பு, சக்கரை, மஞ்சள் அரிசி என்று சில பொருட்கள் இருக்கும். சாணி வைத்து மொழுகிய அடுப்பில், கோலம் இட்டு, பால் காய்ச்சுவார்கள். ஆளுக்கு அரை டம்ளர் பால் கொடுப்பதுடன் அந்த விழா நிறைவு அடையும். பின்னாட்களில் சிலர்  நியூட்ரின் சாக்லட்டுகளையும் விழாவில் சேர்த்துக்கொண்டார்கள். நியூட்ரின் சாக்லட் கொடுப்பவர்கள் ஏதோ பெரிய பணக்காரர்கள் போல் எங்கள் பார்வையில் தெரிவார்கள். முறுக்கு , கல்கோணா, கடலை மிட்டாய், நெய்மிட்டாய் சிறுவர்களான எங்களுக்கு, நியூட்ரின் சாக்லட்டு ஒரு மேல்தட்டு பண்டமாகவே இருந்து வந்தது.

என்னுடன் படித்த மஞ்சுளா ஊரில் வசதியான குடும்ப பெண். எனக்கும் அவளுக்குமான நட்பில் அவள் வீட்டில் இருந்து கொண்டுவரும் நியூட்ரின் சாக்லட்டு முக்கிய பங்கு வகித்தது. மஞ்சுளா பற்றி நிறைய‌ பேசவேண்டும். அதை வேறு ஒரு நாள் பார்த்துக் கொள்வோம். இப்படியாக வெறும் பால் காய்ச்சுவது என்று இருந்த சின்ன சடங்கு என் கண் முன்னாலேயே கெரகப்பிரவேசம் என்று வேசம் கட்டியது. அப்படியான முதல் அனுபவம், எனக்கு எங்கள் வீட்டில் குடியிருந்து , பின்னர் தனியாக வீடு கட்டிச் சென்ற பொன்னையா ஆசிரியரால் வந்தது. அவர் விவசாயி கம் ஆசிரியர். மொசைக் தரையுடன் கட்டிய அந்த வீடு சினிமாவில் பார்க்கும் வீட்டை ஒத்ததாக இருந்தது என்று எண்ணிக்கொண்டேன். அங்கு நடந்த சில சடங்குகள் எனக்கு முற்றிலும் புதிதானது.

அய்யர் ஒருவர் வந்து எதோ மந்திரம் சொல்லி எதோ செய்து கொண்டிருந்தார். பெண்களாக (அம்மாக்கள் , அக்காமார்கள்) செய்யும் பால்காய்ச்சும் விழாவில் அன்க்கும் என் நண்பர்களுக்கும் இருந்த முக்கியத்துவம் இந்த விழாவில் இல்லை. விழாவில் கலந்து கொள்வதில் இருந்து மாறி, பார்வையாளர்களாகவே இருந்தோம். எல்லாம் முடிந்தவுடன் நல்ல உணவு பரிமாறப்பட்டது. அதற்குப்பிறகு புதுமனை புகுவிழா என்றும், கெரகப் பிரவேசம் என்றும் நடந்த இது போன்ற விழாக்களில் கலந்துகொள்ளுதல் இல்லாமல், பார்வையாளர்களாகவே வந்து செல்லும் நிலைமை , என்போன்ற சிறுவர்களுக்கு புதிய அனுபவமாகவே இருந்தது. என் நண்பன் முருகன், ஒரு காலத்தில் இது போன்ற விழாக்களுக்கு வருவதை நிறுத்திவிட்டான். அவன் அம்மா வராவிட்டாலும், எங்களுடன் வந்துபோகும் அவன், பத்திரிக்கை கலாச்சாரத்தில், பத்திரிக்கை கொடுக்காத வீட்டிற்கு போக வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டதால் வரவில்லை என்று பின்னாட்களில் தெரிந்தது.

நேற்று நடந்த விழாவை  கவுஸ் வார்மிங் (House Warming ) என்றார்கள். இதற்கு முன்னால் இந்த ஊரில் இப்படியான பல கவுஸ் வார்மிங் சென்றுள்ளேன். எல்லா இடத்திலும் பெரும்பாலும் அவரவர் இஸ்டதெய்வ கோவிலில் இருந்து கொண்டை, பூணூல் சகிதம் ஒரு அய்யரை அழைத்து பல சடங்குகளைச் செய்வார்கள். நான் சொன்ன கலந்து கொள்ளல் அனுபவம் இருக்காது. ஒருவேளை நீங்கள் அதே இஸ்டதெய்வ கோவிலில் முக்கியஸ்தராகவோ அல்லது வீட்டு உரிமையாள‌ரின் நெருங்கிய நட்பாக இருந்தால், அவர்கள் செய்யும் பூசையில் எடுபிடி வேலைகளைச் செய்யலாம். சில இடங்களில் நான் பந்தி வேலையை எடுத்துக்கொள்வேன். மற்றபடி மனம்விட்டு வாழ்த்தவோ அல்லது உணர்வுகளைப் பகிரவோ இடம் இருக்காது. எல்லாத்தையும் கடவுளும் அவரின் பூசாரியும் எடுத்துக் கொள்வார்கள். மற்றவர்கள் வெறும் பார்வையாளர்களே.

சின்ன வயதில் கலந்துகொண்ட பால்காய்ச்சும் சடங்கில், அதிகாரபூர்வ பூசாரி இல்லையாதலால், அம்மாக்கள், அக்காமார்கள் அவர்களுக்கு தோணியதைச் செய்வார்கள். இருப்பவர்கள் நம்மவர்கள் என்பதால் ஏதும் அந்நியமாகப்படமால் ஏதோ நம் விழா போன்ற அனுபவத்தை தந்தது. இப்போது அப்படி இல்லை. கடவுளின் பார்வையாளர்களாகிப்போனோம்.

நேற்று நடந்த விழா இதில் இருந்து வித்தியாசம் பட்ட ஒன்று. ஃசிருடி பாபா என்ற பெரியவரின் பக்தர்களுக்கு என்று ஒரு குழு உள்ளது. இவர்கள் மாதம் ஒருமுறை ஒருவீட்டில் கூடி பாட்டுக்களைப்பாடி சந்தோசித்துக்கொள்வார்கள். புதியதாக வீடு வாங்கியவர் இந்தக் குழுவில் ஒருவர். வீட்டின் நடுவில் பட்டு, தங்கம் ,வெள்ளி போன்ற விலை உயர்ந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பெட்டி போன்ற (பல்லக்கு??) ஒன்றில் எளிமையாக உள்ள ஃசிருடி பாபாவின் படம் இருந்தது. ஃசிருடி பாபா இஸ்லாம் மற்றும் சனாதன மதங்களின் கலவையில் சில கருத்துகளை கொண்ட சூபி ஞானி.  ஆனால் அவர் சனாதனத்தில் இருக்கும் சாதிகளை ஆதரித்ததாக எனக்கு தெரிந்து இல்லை. அதுபோல அவர் மிகவும் எளிமையானவராகவே அவரைக் காட்டிக்கொள்ள முனைந்தவர். மேலும் அவரின் வழி நடப்பவர்களையும் எளிமையான வாழக்கை வாழவே அறிவுறுத்தி உள்ளார். இஸ்லாம் சூபி வழியையும், சனாதனத்தையும் கலந்து ஒருவகையான புதிய வழிபடலை ஆரம்பித்து வைத்தவர்.

ஆனால், இவரின் வழிபாட்டுக்குழுவைச் சேர்ந்த அனைவரும் பகட்டான (பட்டு , தங்கம், வைரம் ) ஆடை அலங்காரத்துடனே இருந்தனர். பிச்சைக்காரர் போல இருந்தவன் நானாகத்தான் இருப்பேன். அந்த பாபா இருந்திருந்தால் என்னுடன் வந்து உட்கார்ந்து இருப்பார் என்றே நினைக்கிறேன். அவரின் வழி நடப்பவர்கள் என்று யாரையும் அவரின் குழுவில் பார்க்க முடியவில்லை. பலர் எனக்கு நண்பர்களாக இருந்தபடியால் அவர்களைப்பற்றி நன்கு அறிவேன். அனைவரும் உலகில் இருக்கும் அனைத்து செல்வங்களையும் வாங்கிப்போட உழைத்துக்கொண்டு இருப்பவர்கள். தங்கம்,வெள்ளி,பட்டு என்று காதல் கொண்டவர்கள். இவர்கள் எப்படி சூபி வழி ஞானியிடம் என்று வியந்து கொண்டு இருந்தேன்.

மதங்கள் தாண்டிய பாபாவை, இவர்கள் ஹரி,ஓம், என்று சனாதன கடவுள் பெயரின் அழைத்து பாடிக்கொண்டு இருந்தார்கள். பல நேரம் பாபா பாபா என்று மந்திரம்போல அவரது பெயரைச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். புட்டபர்த்தி பாபாவின் குழுவும் இந்த ஊரில் உண்டு . ஆனால் அவர்களில் இருந்து யாரையும் இங்கே பார்க்க முடியவில்லை. என்னுடன் வேலை பார்ப்பவர்கள், ரியல் எஸ்டேட் மனிதர்கள், விலை மதிப்பு மிக்க கார்களை வைத்து உள்ள மனிதர்கள் என்று அனைவரும் எளிமையான பாபாவை தூக்கி தங்க பல்லக்கில் வைத்து ஆராத்தித்துக் கொண்டு இருந்தார்கள்.

இப்படியான இடங்களுக்குச் செல்லும்போது, செல்லும் இடத்தின் தன்மை அறிந்து, அவர்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளிப்பவன் நான். இருந்தாலும், பாட்டில் கலந்துகொள்ள என்னால் முடியவில்லை. பிச்சைக்கார உடையில் இருக்கும் பாபா என்னைப்பார்த்து , "நீயுமா என்னைப் புரிந்து கொள்ளவில்லை, விட்டு விலகி இரு" என்று சொல்வதைப்போல இருந்தது. ஞானிகளின் கொள்கைகளைப் பின்பற்றாவிட்டாலும், அவர்களை அவமதிப்பதுபோல அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை மறந்து, அவர்களுக்கு பட்டு,தங்கம் அணிவித்து மகிழ்வது என்ன மாதிரியான பக்தி என்று தெரியவில்லை.

இந்தக்கூட்டத்தைப் பார்க்கும்போது அவர்கள் அளவில் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்களின் பகட்டான வாழ்க்கைக்கு பாபாவையும் மாற்றிவிட்டார்கள். ஞானிகளை வழிபடாமல் திண்ணையில் அவர்களுடன் உட்கார்ந்து "அப்புறம் சொல்லுங்க வாழ்க்கை எப்படி" என்று கேட்டு இயல்பாக வாழ முயற்சிக்கும் நான் ஏதோ திருவிழாவில் தொலைந்த ஆடுபோலத்தான் பல நேரம் உணர்ந்தேன். பாபாவைப்பற்றி பலருக்கு தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. வழிபடலும் சடங்குகளுமே பிரதானமாய் இருந்தது.

நானும் மந்தையில் இருந்து விலகாமல் இவர்களுடன் இருந்து இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்து இருப்பேனோ என்னவோ? என்று எண்ணியபடியே விழா முடிந்து வெளியில் வந்தேன். பாபாவின் பக்தர்கள் இன்னும் பாடிக்கொண்டு இருந்தார்கள். அவர்களின் விலையுயர்ந்த கார்கள் வெளியில் மழையில் நனைந்து கொண்டு இருந்தது.

ஆடுகள் தங்களை ஆடுகள் என்று உணரும் போது மந்தையிலிருந்து விலகி விடுகின்றன - கலீல் ஜிப்ரான்

Wednesday, December 19, 2012

இட ஒதுக்கீடு பொருளாதர சமநிலைக்கல்ல

ட ஒதுக்கீடு பொருளாதர சமநிலைக்கல்ல.
சமூகச் சமநிலையை இப்படியாவது கொண்டுவரமுடியும் என்று எண்ணி கொண்டுவரப்பட்ட ஒன்று..

சாதி என்ற ஒன்றே பிறப்பால் சீதனம்போல் கொடுக்கப்படுகிறது. அதை வேண்டாம் என்று சொல்வதும் பிராக்டிஸ் செய்யாமல் இருப்பதும் அடையாளங்களை கங்கையில் முழுகி கரைத்து மனிதனாக இருப்பதும் அவரவர் விருப்பம்.

< - - - - அய்யர், அய்யங்கர், தேவர் ,மறவர் ,பிள்ளை, கள்ளர், பறையர் ,பள்ளர்கள் ,சக்கிலியர்கள்  - - - > R சாதி அடுக்கு என்று கொண்டால்....

பார்ப்பனியம் என்ற ஒன்று இந்த எல்லா சாதிகளுக்கு இடையிலும் உள்ளது என்பதே எனது நிலை.

அதாவது, இடது புறம் (L)உள்ளவர்களில் ஆரம்பித்து ஒவ்வொருவரும் அவருக்கு அடுத்த (R) வல‌து புறத்தில் உள்ள ஒரு அடுக்கை கீழ் நிலையில்தான் பார்க்கிறார். அப்படிப் பார்க்கும்போதே அவர்களும் பார்ப்பனீயம் பிராக்டிஸ் செய்பவர்கள் ஆகிறார்கள்.

என்ன இதன் வீரியம் இடமிருந்து வலமாக மாறிச் செல்லும்.

இடப்புறம் ஒருவித கண்ணுக்குத் தெரியாத விலக்கல்கள் இருக்கும் நுட்பமான சீண்டல்கள் (அசைவத்திற்கு வீடு இல்லை என்பது போல) வலம் செல்லச்செல்ல அடிதடி என்று வரும்.

முதல்வரிசையில் உள்ளவர்கள் ஆணிவேராக அதைப் பற்றி இருப்பதால் அது வளருகிறது என்று நான் நம்புகிறேன்.

தலை முதல் வால் வரை ஒரே பார்ப்பனிய இரத்தம் என்றாலும் வாலை வெட்டுவதால் இது ஒழியாது, தலை நறுக்கப்படவேண்டும்.

தொப்பிகளை அனைவரும் கழற்ற வேண்டும் என்றால் , தொப்பி வியபாரி முதலில் அதை தூர எறிய வேண்டும். காஞ்சி மடாதிபதிகள் போன்றோர் சாதிய அடையாளங்களை அழித்து, மீன் விற்கும் சேரியில் இருந்து ஒருவரை அடுத்த வாரிசாக அறிவித்தால், அது ஆக்க பூர்வமானது என்பேன்.

**

இதை நான் சொல்லும்போது மற்ற ஒன்றையும் சேர்த்தே சொல்ல வேண்டியுள்ளது. "அப்ப ஏன் சாதி வாரி இட ஒதுக்கீடு?"  என்று கேட்கலாம்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட‌ குடும்பங்களை,  "சுனாமி victim யார் யார்?" என்று தேட அதே சுனாமி என்ற சொல்லைக் கொண்டுதான் வகைப்படுத்த முடியும். எனவே, பல்லாயிரம் ஆண்டுகள் சாதி என்ற ஒன்றினை மூலமாக வைத்து ஒடுக்கப்பட்டவர்களை, அந்தப் பெயரில் தேடிதான் நிவாரணம் வழங்க முடியும். எனவேதான்.... அதாவது தொலைத்த இடத்தில் தேடுவது ...அல்லது காயத்தை  மருந்திட காயம் பெயர் சொல்லி தேட வேண்டிய நிர்ப்பந்தம். :((

மேலும் சாதி வாரியான இட ஒதுக்கீட்டின் நோக்கம் பொருளாதார சமநிலை அல்ல, சமூகச் சமநிலை.

அதாவது "படித்து நாலு காசு சம்பாரிச்சாலாவது சமூகம் இவர்களையும் சமமாக நடத்தும்" என்று எண்ணியே இது அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கலெக்டரானாலும் இன்னும் சமூகச் ச‌மநிலை வரவில்லை என்பது உண்மை.  :((

சமூகச் சமநிலைக்கு என்ன தீர்வு?


உதாரணம் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ன சம்பளம் கம்மியான் வேலை என்பது போல நடக்க வேண்டும். எல்லா வேதத்தையும் கரைத்து குடித்தாலும், விஜய் மல்லையா போல பணம் இருந்தாலும் திருப்பதியில் அர்ச்சகராக இருக்க அனைவருக்கும் வழியில்லை ..எனும்போது சமுதாயச் சமநிலை என்பது கேள்விக்குறியே.

அமெரிக்காவில் இருக்கும் கோவிலுக்குகூட சாதி பார்த்துதான் அர்ச்சகர் இறக்குமதி எனும்போது எப்படி தமிழகத்தில்/ இந்தியாவில் சமூகச் சமநிலை வரும்? "நல்லா பாட்டுப்பாட, சாமியை அலங்காரம் செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம்" என்று சொல்ல அம்ரிக்கவாசிகளால்கூட முடியவில்லை. அர்ச்சகர் படிப்பு படித்துவிட்டு பல சாதியினர் உள்ளார்கள் வேலை செய்ய.
  • நான் பிறப்பால் ஒருவனை மேல்/கீழ் என்று பார்த்தால் நானும் பார்ப்பனீயன்.
  • நான் என்னை வேறுபடுத்திக்கொள்ள சில சாதி அடையாளங்களை அணிந்தால் (or some other way) நான் எனது சாதியை பிராக்டீஸ் செய்கிறேன்.
  • நான் என்னை வேறுபடுத்திக்கொள்ள சில மத அடையாளங்களை அணிந்தால் (or some other way ) நான் மதத்தை பிராக்டீஸ் செய்கிறேன்.
  • நான் தமிழை எழுதி /வாசித்து/ பேசி வந்தால் தமிழை பிராக்டீஸ் செய்கிறேன்.
  • எப்போது பிராக்டீஸ் நிற்கிறதோ அப்பபோது நான் அதுவல்ல. நான் அந்த வழியில் வந்தவன் அவ்வளவே.
Image Courtesy
http://online.wsj.com/article/SB118256120981545474-search.html

Monday, September 17, 2012

Innocence of Muslims திரைப்படம் சில எண்ணங்கள்

1.அமெரிக்காவில் திரைப்பட தணிக்கை என்பது அரசாங்கத்தால் செய்யப்படுவது அல்ல. அது ஒரு தனியார் அமைப்பு. திரைப்பட தயாரிப்பாளர்கள் ,தயாரிப்பு அரங்க உரிமையாளர்கள் என்ற பலர் சேர்ந்த கூட்டமைப்பு.
http://www.mpaa.org

2.ஒரு படம் நல்ல படமா அல்லது கெட்ட படமா என்று சொல்வது அவர்கள் வேலை அல்ல. ஆனால் அது எந்த வயது பார்வையாளர்களுக்கானது என்ற ஒன்றைச் சொல்லும் அமைப்பு.

3.அமெரிக்க காங்கிரஸ் சபை மற்றும் ஜனாதிபதி இதில் தலையிடமுடியாது. அமெரிக்க அரசின் திட்டங்கள் மற்றும் வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்களை கடுமையாக விமர்சித்து பல ஆவணப்படங்கள் இதே அமெரிக்காவில் வருகிறது. Michael Moore ன் படங்கள் ஒரு எடுத்துக்காட்டு. பேச்சு சுதந்திரம் உள்ள அமெரிக்காவில் இவை எல்லாம் தடை செய்ய இயலாதது.

4.இதன் காரணத்தாலேயே கூகுள் இன்னும் திரைப்பட முன்னோட்டத்தை அவர்களின் இணையத்தில் இருந்து எடுக்க முடியாது என்று அமெரிக்க அரசாங்கத்திற்கு சொல்லிவிட்டது. (வேண்டும் என்றால், கூகுளுடனான தொடர்பை அல்லது தேவைப்பட்டவர்கள் துண்டித்துக் கொள்ளலாம். அது ஒரு எதிர்ப்பாக இருக்கும்)

5.எனவே அமெரிக்க தூதரகங்களை தாக்குவது ஒரு அடையாள  எதிர்ப்பாக , உணர்விற்கு வடிகாலாக இருக்கலாமேதவிர , திருமா போல " ஒபாமா மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று சொல்வது எல்லாம் என்ன புரிதலில் என்று தெரியவில்லை.
http://tamil.oneindia.in/news/2012/09/17/tamilnadu-ban-the-controversial-anti-islam-movie-thirumavalavan-161612.html

படம் குறித்து
7.இந்தப்படம் ஆலன் இராபர்ட் என்பவரால் இயக்கப்பட்டாலும் அவரும் இதில் நடித்த மற்றவர்களும் , தயாரிப்பாளரின் சூழ்ச்சிக்குப் பழியானவர்கள் என்றே சொல்லி வருகிறார்கள்.

8.அமெரிக்காவில் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே இது திரையிடப்பட்டுள்ளது "Vine Theater, Hollywood CA.  அதுவும் 10 பேர் மட்டுமே முதல் காட்சிக்கு வந்துள்ளதாகச் செய்தி. அந்த ஒரு காட்சியைத் தவிர இதுவரை இது அமெரிக்காவில் எங்கும் திரையிடப்படவில்லை.

9.படத்தை தயாரித்த Sam Bacile என்பவர் வங்கி தொடர்பான குற்றங்களுக்காக சிறைதண்டனை பெற்றவர்.

மதங்களும் வன்முறையும்

குஜராத் இரயில் எரிப்பு, பாபர் மசூதி இடிப்பு, ஒரிசாவில் பாதிரி எரிப்பு என்று பல சம்பவங்கள் மட்டும் அல்லாமல் “War of the Cross,” or Crusade,
என்பவைகள்கூட மதத்தொடர்பு சண்டைகளே. இது அந்த அட்டவணையில் மற்ற ஒன்று.

எந்த மதமும் மற்ற ஒரு மதத்தின் இருப்பை அங்கீகரிக்காது.
மதங்களும் அதைப் பின்பற்றுபவர்களும் ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்வார்களே தவிர ஒரு போதும் "நான் நம்பும் கடவுள், நான் படிக்கும் மதப்புத்தகம்,  நான் நம்பும் தூதுவரைப் போல , உனது கடவுளும் , உனது தூதுவரும், உனது மதப்புத்தகமும் உயர்வானதே" என்று சொல்லாது.

யாரிடம் அதிக மக்கள் உள்ளார்கள் , யார் சொர்க்கத்திற்கு வழிகாட்டுவார்கள் யார் அக்மார்க் நல்லவர்கள் என்பதில் உள்ள போட்டியானது, தனியார் நிறுவன தொழிற்போட்டியைவிட அதிக வன்மம் கொண்டது.

One religion may tolerate the existence of other religion but never agree that all religion has equal value like the one they practice. If they believe so why they promote conversion from one to other?

மதங்கள் அற்ற உலகு என்பது பகல்கனவு என்றாலும், மதங்களைப் புரிந்துகொண்டு அதையும் தாண்டி பயணப்பட கற்றுக்கொள்ள வேண்டும். இந்த உலகத்தை அறிவியல் பார்வையாலும் , மனிதத்தை அன்பாலும் பார்க்க கற்றுக்கொள்வது அவசியம்.

லிபியா நாட்டில் அமெரிக்க தூதரகத்தில் இறந்த நால்வருக்கு எனது அஞ்சலி. நம்பிக்கைகள் மற்றும் அரசியல்சார்பு என்று எல்லாவற்றையும் தாண்டி மதத்தின் பெயரால் மனிதர்கள் கொல்லப்படுவது கடவுளுக்கே பிடிக்காது என்றே நினைக்கிறேன்.

Wednesday, September 12, 2012

பொய் சொல்லும் கலைஞர்..நீங்களுமா அய்யா?

"ன் தலைவன் உண்டு தூங்கினால் சரி.  பொதுசனம் எப்படியோ போகட்டும்.
நல்லா வேண்டும் உங்களுக்கு" என்ற ரீதியில் சொல்லுதிர்க்கும் அரசியல் அடிமைகளின் கருத்தையும் தாண்டி, கலைஞர் அவர்கள் அவரது கருத்தாக சிலவற்றைச் சொல்லியுள்ளார்.
அதை வரவேற்கிறேன். அதற்காக நன்றி.

http://tamil.oneindia.in/news/2012/09/12/tamilnadu-why-did-jayalalithaa-supported-anti-161306.html

பலமுறை முதல்வராக இருந்தவர் ஒரு பெரிய கட்சியின் தலைமைப் பொறுப்பில் இன்றுவரை இருப்பவர், அவர் கண்முன் நடைபெறும் ஒரு நிகழ்வை புறந்தள்ளிவிட முடியாது.  ஆனால் அதில் அவர் சொல்லியுள்ள பொய்தான் வருத்தம் கொள்ளச் செய்கிறது.

புள்ளிவிவரப்புலியான நீங்களுமா அய்யா?  :-(((

கலைஞர் சொன்னது:
//போராட்டம் நடத்துவோரும் நமது மக்கள்தான். அவர்களை ஏதோ விரோதிகள் என்பதைப்போல இந்த அரசு நினைக்கக் கூடாது.//

மிக்க நன்றி


கலைஞர் சொன்னது:
// போராட்டம் நடத்துவோரும், அந்த அணு உலை தொடங்குவதற்கு முன்பாகவே தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தால், இத்தனை கோடி ரூபாய்களை செலவழித்திருக்கத் தேவையில்லை.//

இது பொய்.
இந்த போராட்டம் எப்போது தொடங்கியது என்பதை பூவுலகின் நண்பர்கள் தொகுத்துள்ளார்கள். இதில் தகவல்பிழை இருந்தால் சுட்டலாம் .

http://www.poovulagu.net/2012/01/25.html

1.கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு எதிரான போராட்டம் 1986 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது. இது திடீரென இப்போது தொடங்கியது அல்ல.

2.கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து 1987 இல் மீனவக் கிராமங்களின் தலைவர்கள் கூட்டம் திருச்செந்தூரில் நடந்தது. 1987 செப்.22 அன்று இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை எதிர்த்து ஒரு மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடந்தது.

3. 1988 இல் நெல்லையில் மிகப் பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது. 1989 இல் நாகர்கோவிலில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட ஊர்வலம்.

4. 1989 மார்ச் 20 அன்று தூத்துக்குடியில் ஊர்வலம். இதில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாலபிரஜாதிபதி அடிகள் உட்பட பல அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கலைஞர் சொன்னது:
//.........., இத்தனை கோடி ரூபாய்களை செலவழித்திருக்கத் தேவையில்லை.//

எத்தனை கோடி செலவழித்தாலும் மக்கள் சொன்னதற்காக நிறுத்தப்பட்ட பல அணு உலைகளின் பட்டியல்.

http://www.poovulagu.net/2012/02/30.html

உலகின் பல இடங்களில் கட்டுமான பணிகள் நடக்கும் போதோ ,அல்லது நடந்து முடிந்த பிறகோ ,பல அணு உலைகள் மூடப்பட்டுள்ளன .
  
அணு உலை                                        
நாடு    
மூடப்பட்ட நிலை
ரோச்டோவ்      
ரஷ்யா 
90 சதவீத வேலைகள் முடிந்திருந்த நிலையில்                        பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக 1997           -இல் நிறுத்தப்பட்டது .
மொச்சொவ்சீ
ஸ்லோவாகியா   
1994 டிசம்பரில் ஐரோப்பா முழுவதும் மக்கள் பலமாக எதிர்த்ததால் 1995 மார்ச் மாதம் அரசு ரத்து  செய்தது .
பட்டான்
பிலிப்பைன்ஸ் 
உபகரணங்கள் திருப்திகரமாக இல்லாததால் 1985 -ஆம் ஆண்டு கைவிடப்பட்டது .
ஸ்வட்டண்டார்ப்   
ஆஸ்திரியா 
உபகரணங்கள் திருப்திகரமாக இல்லாததால் 1985 -ஆம் ஆண்டு கைவிடப்பட்டது .
என்லியாவோ  
தைவான்  
96 .2 சதவீத மக்கள் எதிராக வாக்களித்ததால் ,1994 -ஆம் இரண்டு அணுஉலை வேலைகள்  நிறுத்தப்பட்டன

Monday, September 10, 2012

நீங்க நாசமாப் போவிங்கப்பா....

யாரை நோக்கித் தூற்றப்படும் மண் இது?



கலைஞராக இருந்தாலும் புரட்சித்தலைவியாக இருந்தாலும் ஆளும் வர்க்கம் என்ற மனப்பானமையே உள்ளது. யாரும் மக்கள் தலைவர்களாக இல்லை.

இவர்களுக்கும் தொண்டர்கள் உள்ளார்கள் எனும்போது .....

எந்தக் கட்சிக்கும் இது ஒரு பெரிய பிரச்சனையாகத் தெரியவில்லை.

குறைந்த பட்சம் கூடங்குளத்திற்காக பொது கடை அடைப்பு நடத்தியிருக்க வேண்டும் அனைத்து கட்சிகளும்.

***

ஒரு ஊரில் என்னமாதிரியான தொழிற்சாலை வரவேண்டும் என்பதை அந்த ஊர்தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு ஊரே போராடும்போது ...

முள்ளிவாய்க்கால் மற்றும் கூடங்குளத்திற்கு கலங்காத மக்கள்...

உனக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக அடுத்தவன் தலையில் தீ வைக்க முயலக்கூடாது. உங்களுக்கு மின்சாரம் வேண்டும் என்பதற்காக சொந்த சகோதரன் சீரழிந்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக பொதுசனம்.

Monday, August 20, 2012

Please wish for "Legitimate வன்புணர்வு"

ஒரு பெண்ணை ஏதோ ஒரு பொறம்போக்கு வன்புணர்வு செய்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம்...

1. அந்த வன்புணர்வானது  legitimate  ஆனா வன்புணர்வு என்றால், பெண்களின் வெஜினாவானது குழந்தை பிறக்கவிடாமல் தடுத்துவிடும்.

2.ஆனால் அதுவே legitimate  ஆனா வன்புணர்வு இல்லை என்றால் , (அதாவது சும்மா வேண்டுமென்றே மோகித்துவிட்டு அப்பாலிக்கா அதை வன்புணர்வு என்று கதை கட்டும் பெண்கள்) குழந்தை பிறக்கலாம்.

3.எனவே legitimate  ஆனா வன்புணர்வில் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை.

4.உங்களை யாரவாது வன்புணரும்போது அதை legitimate  ஆனா வன்புணர்வாக வைத்துக்கொள்ளுங்கள், குழந்தை பிறக்காது.

5.அப்படியே ஒருகால் legitimate  ஆனா வன்புணர்வில் கூட குழந்தை வந்துவிட்டால், நீங்கள் குழந்தையை பெற்று வளர்க்க வேண்டுமே தவிர , அதைக் கலைத்து அந்த கருவிற்கு தண்டனை கொடுக்கக்கூடாது.

6.உங்களுக்கு  legitimate  ஆனா வன்புணர்வு நடந்து கொண்டு இருக்கும்போது கடவுள் தூங்கிவிட்டார். ஆனால் அந்த  legitimate  ஆனா வன்புணர்வில் செலுத்தப்பட்ட் விந்து உங்களின் கருப்பையை அடையும்போது விழ்த்துக்கொண்டு உயிரைப் படைத்துவிட்டார். எனவே ...கடவுள் கொடுத்த உயிரைக் நீங்கள் கலைக்கக்கூடாது.

7.அடுத்த முறை  உங்களுக்கு வன்புணர்வு என்ற ஒன்று நடந்தால் ,குழந்தையும் பிறக்காமல் இருக்கும் வண்ணம் நல்ல அக்மாரக்  legitimate  ஆனா வன்புணர்வைக் கொடுக்குமாறு உங்கள் இறைவனிடம் கேளுங்கள்

http://politicalticker.blogs.cnn.com/2012/08/19/missouri-republican-claims-legitimate-rape-rarely-results-in-pregnancy/?hpt=hp_t1

"If it's a legitimate rape, the female body has ways to try to shut that whole thing down," Akin continued. He did not provide an explanation for what constituted "legitimate rape."

He added: "But let's assume that maybe that didn't work or something. You know I think there should be some punishment, but the punishment ought to be on the rapist and not attacking the child."
http://www.latimes.com/health/la-na-rape-candidate-20120820,0,2471862.story



Friday, July 20, 2012

Sex-slave would protect decent, devout and 'virile' Kuwaiti men from adultery

குவைத் என்ற ஒரு நாடு இருக்கிறது. அந்த நாட்டில் இஸ்லாம் என்ற மதம் கடைபிடிக்கப்படுகிறது.அந்த‌ நாட்டில் உள்ள கண்ணியமான ஆண்கள் அந்த நாட்டில் உள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் அல்லது அந்த நட்டில் உள்ள பெண்களை மோகிக்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டாலும் அடுத்த பெண்களை மோகிக்கிறார்கள். இதற்கு தீர்வு என்ன? அந்த கண்ணியமான ஆண்கள் இப்படி தவறு செய்யாமல இருக்க , அடுத்த நாடுகளில் சிறையில் இருக்கும் பெண்களை விலைக்கு வாங்கி , புணர்வதற்காக வைத்துக்கொள்ளலாம். இதில் தவறு ஏதும் இல்லை. இப்படி செய்வதால் காமம் தலைக்கு ஏறி கட்டுப்படுத்த இயலாமல் இருக்கும் இந்த நாட்டின் கண்ணியமான ஆண்கள் அவர்கள் புணர்வதற்கு என்று உடல்கள் கிடைக்கும். மேலும் இப்படிச்செய்வதால் , இவர்கள் வாழும் நாட்டில் உள்ள பெண்களால் இவர்கள் காமம் உந்துதல் ஆக மாட்டார்கள்.

"sex-slave would protect decent, devout and 'virile' Kuwaiti men from adultery " இப்படிச் சொல்பவர், குவைத்தில் இருக்கும் ஒரு அரசியல்வாதி பெண். இவர் ஒருமுறை குவைத் பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டவர். இவரது பெயர் "சல்வா அல் முட்ரி" (Salwa al Mutairi )

1. மிகவும் நல்ல திட்டம். இப்படி புணர்வதற்காக எங்கே பெண்களை வாங்குவது?
நிச்சயம் இப்படி வாங்கப்படும் பெண்கள் குவைத்தில் இருக்கும் இஸ்லாமியராக இருக்கக்கூடாது. குவைத்தில் உள்ள கண்ணியமான இஸ்லாமிய ஆண்கள் புணருவதற்கு என்று வேறு நாட்டில் இருக்கும் போர்க்குற்றாவாளிகளான பெண்களை வாங்கிக்கொள்ளலாம். வேறு மதத்தில் உள்ள பெண்களைத்தான் வாங்க வேண்டும்.

இப்படிக் போர்க்குற்றவாளிகளை விலைக்கு வாங்குவதால், குவைத்தில் உள்ள கண்ணியமான இஸ்லாம் ஆண்களுக்கு புணருவதற்கு பெண்கள் கிடைக்கிறார்கள். அதே சமயம் இந்த போர்க்குற்றவ்வாளிகளுக்கு சோறு கிடைக்கிரது. இல்லை என்றால் இவர்கள் சிறையில் பசியால் வாடி செத்துவிடுவார்கள்.
2. ஆகா அருமை. இதற்கு இஸ்லாம் என்ற மதம் என்ன சொல்கிறது?
"சல்வா அல் முட்ரி" இவரது மெக்கா பயணத்தின்போது அங்குள்ள இஸ்லாம் குருமார்களிடம் கருத்து கேட்டுள்ளார். அவர்கள் இஸ்லாம் ஷரியத் சட்டப்படி இது தவறே இல்லை என்று ஆசி வழங்கியுள்ளார்கள்.
3. இதற்கு ஏதாவது முன்னோடி திட்டங்கள் உள்ளதா?
ஏன் இல்லை? 8 ஆவது நூற்றாண்டில் "ஹாரவுனல் ராஸ்தி" என்ற இஸ்லாமிய தலைவர் குவைத்தௌ ஆட்சி புரிந்துள்ளார். அவர் 2000 க்கும் மேற்பட்ட பெண்களை புணருவதற்காக விலைக்கு வாங்கு வைத்து இருந்தார்.
4. மிகவும் அருமயான திட்டம் எப்படி செயல்படுத்துவது?
"சல்வா அல் முட்ரி"  இதற்கும் திட்டம் வைத்துள்ளார். எப்படி வீட்டு வேலைக்கு ஆட்கள் கொடுக்கும் நிறுவங்கள் உள்ளதோ, அதுபோல கண்ணியமான குவைத் ஆண்களுக்கு , வேறு நாட்டில் இருந்து பெண்களை புணருவதற்காக விற்பனை செய்யும் அலுவலகங்களை திறக்கலாம்.
5. இப்படிச் சொல்லும் "சல்வா அல் முட்ரி" அவர்களுக்கு மனித நேயம் உள்ளதா? ஒரு பெண்ணே இப்படிச் செய்யலாம?
என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? இப்படி விலைக்கு வாங்கப்படும் பெண்களுக்கு குறைந்தபட்ச வயதாக 15 இருக்க வேண்டும் என்று பெருந்தன்மையுடன் சொல்லியுள்ளார். அவரின் கருணையைப்பாருங்கள்.
**********
பொறுப்புத் துறப்பு:
இந்த தகவல் பெறப்பட்ட தளங்கள்

http://www.dailymail.co.uk/news/article-2000292/Men-allowed-sex-slaves-female-prisoners-job--WOMAN-politician-Kuwait.html
A Kuwaiti woman who once ran for parliament has called for sex slavery to be legalised - and suggested that non-Muslim prisoners from war-torn countries would make suitable concubines.

The political activist and TV host even suggested that it would be a better life for women in warring countries as the might die of starvation.

Mutairi claimed: 'There was no shame in it and it is not haram' (forbidden) under Islamic Sharia law.'
T'S OK TO HAVE SEX SLAVES! SAYS THE FEMALE POLITICIAN (KUWAIT)
http://www.youtube.com/watch?v=3jMf_KNrLpQ

Russian Blondes Wanted for Islamic Sexual Slavery
http://frontpagemag.com/2011/nonie-darwish/russian-blonds-wanted-for-islamic-sexual-slavery/
Ms. Mutairi who was nice enough to put the minimum age of 15 for slave girls, Christian Jews or other, to be sold. She demanded the immediate establishment of slave agencies just like agencies for maids, where the slave girls will earn a whopping 50 Kuwaiti Dinar monthly ..Wow, what a deal!



Thursday, July 05, 2012

ஈழத்தமிழர் பிரச்சனை: ஏன் கடிதங்கள் எழுதப்படுகிறது?

 

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள்:

தமிழ்நாடு: திமுக ஆட்சி
இந்தியா:  ஆட்சியில் திமுக பங்கெடுத்து நடத்தும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி

இந்தியாவால் ஏதாவது செய்யமுடியும் என்று முதல்வர் கருணாநிதி நினைத்து இருந்தால், அதைச் செய்யாத கூட்டணியில் இருந்திருக்கத்தேவையே இல்லை.

இந்தியாவால் ஏதும் செய்யமுடியாது என்று முதல்வர் கருணாநிதி நினைத்து இருந்தால் கடிதம் எழுதத் தேவை இல்லை.

அப்படி இருந்தும் எழுதிய கடிதங்கள் அவர் அவருக்கே எழுதிக்கொண்ட பொம்மைக் கடிதங்கள்.

இன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்:

தமிழ்நாடு: அதிமுக ஆட்சி
இந்தியா:  திமுக பங்கெடுத்து நடத்தும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி

இந்தியாவால் ஏதாவது செய்யமுடியும் என்று  முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் அதைச் செய்ய கடிதம் மட்டுமே எழுதமுடியும். உண்மையான அக்கறை இல்லாமல் இருந்தால்கூட , இந்த அரசியல் சூழ்நிலையில் , குறைந்தபட்சம் இவர் எழுதும் கடிதங்கள் இவரே இவருக்கு எழுதும் பொம்மைக்கடிதங்களாக பார்க்கப்படாது.

இந்தியாவால் ஏதும் செய்யமுடியாது என்று முதல்வர் ஜெயலலிதா நினைத்து இருந்தால் கடிதம் எழுதத்தேவையே இல்லை.

Friday, June 22, 2012

FeTNA காசிருந்தால் முன்னாள் உட்காரலாம். ஜிகினா சிரியுடன் சேர்ந்து சாப்பிடலாம்

முப்பால் கண்ட தமிழுக்கு அமலா பால் நான்காவது பால்

வாழ்க‌ வள்ளல்கள்!
வருக வள்ளல்கள் !
நன்கொடை தருக‌!
சினிமாக்கார ஜிகினா அருகில் அமர்க‌!


காசிருந்தால் முன்னாள் உட்காரலாம்!
வள்ளல் கொடை வள்ளல் எல்லாம் சினிமாக்கார ஜிகினாக்களிடம் சேர்ந்து சாப்பிட அருமையான வாய்ப்பு தவறவிடாதீர்கள். .
http://fetna.org/index.php/2011-12-22-17-02-18
  • Special Reception/Dinner with the invited artists and guests
  • Special badges and reserved front seats
அமெரிக்கா வந்தும் உங்கள் சாதியில் துள்ளியமாக வரன் பார்க்க , சாதி தழைத்திருக்க வருக ஃபெட்னாவிற்கு

உங்க சாதி என்ன? - FeTNA கேட்கிறது
http://etamil.blogspot.com/2012/06/fetna.html

கேள்விகள்:Federation of Tamil Sangams of North America (FeTNA)

கடுப்பைக் கிளப்பும் - FeTNA சேர்ந்தே டான்ஸ் பாக்கலாம் கவித வாசிக்கலாம் வாங்க ப்ளீஸ்
http://kalvetu.blogspot.com/2010/06/fetna.html

Monday, June 18, 2012

கனவு காணுவற்கு ஏற்ற பதவிதான் இந்திய குடியரசுத்தலைவர் பதவி

திமுக தலைவர் கலாமை ஆதரிக்காமல் இருக்க காரணம் அல்லது "கலாம் கலகம் கழகம்" என்று போடும் வெற்றுக்கூச்சல்கள் எல்லாம், அன்னை சோனியாவினை மகிழ்விக்கவே தவிர, எந்த ஒரு கொள்கை அடிப்படையிலும் கிடையாது என்பது உலகம் அறிந்த உண்மை.

அன்னை சோனியாவின் கடைக்கண் பார்வை கலாம்மீது பட்டுஇருந்தால் (ஒரு வேளை) இதே திமுக தலைவர் , "கலாம் காலம் கனி தமிழ்க்கனி" என்று எதையாவது சொல்லி அப்போதும் அன்னையின் ஆதரவைப்பெற கரகம் எடுத்து ஆடி இருப்பார்.

எந்த விசயத்திலும் இவரின் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பது குடும்பநலம் சார்ந்த எதோ ஒரு காரணத்தில் இருக்கும். ஆட்சி, சொத்து, ஜெயலலிதா பயம் என்று எப்படியோ ஒரு காரணம்.

***

கலாம்

இவர் ஏதோ உலகைக்காக்க வந்த இரட்சகன்போல் இந்த நடுநிலைவியாதிகள் கொண்டாடுவதன் காரணம் "நோகாமல் நொங்கு சாப்பிடும்" வர்க்கத்தின் முகமூடியாக இவர் இருப்பதாலே தவிர‌ வேறு ஒரு காரணமும் இல்லை. ஆரம்ப காலங்களின் இவர்மீது ஒரு மரியாதை இருந்தது. ஆனால் இப்போது இவர்மீது எந்தவிதமான ஈடுபாடும் இல்லை.

இப்போது இவர் நிற்கவில்லை என்று சொல்லிவிட்டார். மம்தா என்ன செய்யப்போகிறாரோ?

***

குடியரசுதலைவர் பதவி
தொங்கு பாரளுமன்றம் வந்தால் நம்ம ஆள் ஒருத்தர் இந்தவீட்டில் இருக்கவோனும் என்ற ஒரே நோக்கத்தை தவிர அரசியல் கட்சிகள் இந்த பதவிக்கு எந்த முக்கியத்துவத்தையிம் தருவது இல்லை.

சூப்பர் ஃச்டாரு முதல் பவர் ஃச்டாரு வரை கான் முதல் டோனி வரை யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.

இப்போது இருக்கும் மேதகு பிரதீபா அவர்களே இருக்கலாம். இவரைவிட இந்தப்பதவியைப் புரிந்தவர்கள் யாரும் இல்லை. எந்தவித சவடால்களும் இல்லாமல் பதவியைப் புரிந்துகொண்டு காலத்தை ஓட்டியவர்.

Tuesday, June 12, 2012

இங்கே காசுக்கு கொள்கை விற்கப்படும்

ப்படித்தான் வாழவேண்டும் என்று, எனக்கு இருக்கும் கொள்கைகள்,ஆசைகள்,எனக்கு நானே வகுத்துக்கொண்ட வாழும் முறை போன்றவைகளை நூறு சதவீதம் என்னால் கடைபிடிக்கமுடிவது இல்லை. சார்ந்து வாழும் உலகில், மிகச் சொற்ப அளவிலே என்னால் இதனைச் செய்ய முடிகிறது. உதாரணத்திற்கு ,ஆப்பிள் Apple Inc) நிறுவனம் அதன் பாகங்கள் தயாரிப்பிற்கு சீனாவில் இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கிறது. சீனா நிறுவனம் அதன் தொழிலார்களை வதைக்கிறது என்று நான் நம்பும் பட்சத்தில்...

நான் ஆப்பிள் தொழில்நுட்பங்களையோ அல்லது அவர்களின் பொருட்களையோ பயன்படுத்தக்கூடாது.



  • ஆப்பிளின் தொழில் நுட்பங்களை விலக்கிவிட்டு, நான் வேலை செய்யும் நிறுவனம் இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது. அல்லது ஆப்பிள் போனில் இருந்து வரும் நண்பர்களின் அழைப்புகளுக்கு பதில் சொல்ல முடியாது என்றும் இருக்க இயலாது.

  • எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஆப்பிள் போன் வாங்காமல் இருக்கலாம். ஆனால் வேலை பார்க்கும் இடத்தில் அதைச் செயல்படுத்த முடியாது.
  • நான் ஆப்பிள் பங்குகளை நேரடியாக வாங்காமல் இருக்கலாம் , ஆனால் நான் பணம் போட்டு வைத்திருக்கும் வங்கி, எனது ஆயுள் காப்பீடு, என்று எனது கட்டுப்பாட்டில் இல்லாத பரிவர்த்தனைகள் ஏதோ ஒரு புள்ளியில் பங்குவர்த்தகத்தில் ஈடுபட்டு அதன்மூலம் ஆப்பிளைத் தொடலாம்.

இப்படி பல உதாரணங்கள்...ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் உலகில் கறைபடாத வாழ்க்கை என்பது கானல்நீர். காட்டில் வாழ்ந்தாலும், காட்டில் உள்ள மிருகங்களின் விதிகளுக்கு உட்பட்டு வாழவேண்டும்.
சமரசங்கள் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் எதற்காக சமரசம் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.

எனது வேலை (பிழைத்திருக்க செய்யும் ஒரு வேலை) தாண்டி எனது தன்னார்வத்தில் செய்யும் (பங்கு கொள்ளும்) பணிகளில் நான் சமரசங்களை செய்துகொள்வது இல்லை.

மதுரையில் நான் ஒருங்கிணைத்த , ஒரு நிகழ்ச்சி தண்ணீர் விழிப்புணர்வு பற்றியது. அதற்காக யாரிடம் நன்கொடை பெறலாம் என்று கலந்தாய்வு செய்த போது, கோக் மற்றும் பெப்சி போன்ற நிறுவனங்களை அணுகுவது தவறு/கூடாது என்று உறுதியாக இருந்தேன். அப்படியே நடத்தி முடிக்கப்பட்டது.

**

லீனா மணிமேகலை....

இணையத்தில் பதிவெழுதும் பலரில் இவர் தனித்து நிற்பது இவரின் களப்பணிகளுக்காகவும், ஆவணப்படங்களில் இவருக்கு இருக்கும் ஆளுமைக்காகவுமே.

ஆனால்... டாடாவின் செயல்களுக்கு நியாயம் சேர்ப்பதுபோல ஆவணப்படம் எடுப்பது என்பது..... உயிர் பிழைத்திருக்க இவர் செய்யும் வேலைகளில் ஒன்றா?

அல்லது தெரிந்தே வேசம் போடுகிறாரா?

Ogilvy Kolkata launches new campaign for Tata Steel
http://www.youtube.com/watch?v=2yM9fPdnA3k

Directors: Leena Manimekalai [Tejaswini Project],

Kalinga Nagar Attack
www.youtube.com/watch?v=iQNXxLaQt-o&feature=youtube

TATA STEEL Values Stronger Than Steel Tejaswani Project
http://www.youtube.com/watch?NR=1&feature=%20endscreen&v=-qYs62hTFpg

MADHYANTARA
http://www.youtube.com/samadrusti

Monday, June 11, 2012

எப்படி இவர்கள் மட்டும் இப்படி?


ங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கேயே மன நிறைவுடன் வைக்கப்படுகிறது.
 
ணையத்தில் 100 பதிவுகள் போட்டவுடன் , ஒருவித மோன நிலைக்கு சென்று எதையாவது எழுதி எப்படியோ ஒரு புத்தகமாக வெளியிட்டால் பித்தம் தெளியலாம் என்ற போதையில் எலுத்தாழ எலும்புகளாக தன்னை உயர்த்திக்கொள்ள நினைக்கும் பாக்கியவான்களிடம் இருந்து இவர்கள் தனித்து நிற்கிறார்கள்.

இணைய சுதந்திரத்தை சரியாகப் புரிந்துள்ளவர்கள்.

வாழ்த்துகள்

War of the Ring
http://www.karundhel.com/2012/06/war-of-ring.html

Pixar Story
https://docs.google.com/file/d/0B_fcNC8PWNURODk3ODZkZjYtNDYxNi00YmY4LWIyZTYtYzE3OTBlMTgyZmRk/edit?pli=1

Tuesday, May 29, 2012

நீயா? நாயா?

னது அம்மா- in - law வுடன் பேசுவதற்காக (மனைவியின் அம்மா.. தமிழில் சொல்வது என்றால் மாமியார்) கோலங்கள் தொடங்கி கோபிநாத்தின் அசட்டு நீயா நாயா வரை தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்வேன்.  சும்மா வெறுமனே சாப்டீங்களா? என்ன சாப்டீங்க என்பதைத்தாண்டி , அவருடன் உரையாடலைத் தொடர,  அவர் இரசிக்கும் செய்திகளைத் தொட்டு உரையாடலை வளர்த்து செல்வது அவருடன் என்னை தொடர்பில் வைத்திருக்க உதவுகிற‌து. உரையாடல் விவாதமானாலும் எங்களுக்குள் ஒரு நல்ல உறவை தக்க வைத்துக்கொள்ள இத்தகைய உரையாடல்களை நானே வலிந்து செய்வது வழக்கம்.

அந்தவகையில்தான் கோபிநாத்தின் அசட்டு நீயா நாயா வையும் அவ்வப்போது பார்த்து வைப்பது வழக்கம்.

சமீபத்தில் பேசப்படும் பவர்ஸ்டார் சீனிவாசன் என்பரை இணையத்தில் உலாவும் பல சுவரொட்டிகளில் (போஸ்டர்களில்) பார்த்துமட்டுமே இருக்கிறேன். அதைத்தாண்டி ஒன்றும் இல்லை.
சூப்பரு ஸ்டாரு, 
இளவட்ட தள , 
உண்மையான தல, 
வொலக டமிள் தலவைர் ,
கேப்டன் ஆப் சினிமா , 
வொலக நாயகன் ......
வரிசையில் இவரும் ஒரு அடைமொழி வைத்துக் கொள்கிறார்.

தனக்கென ஒரு அடையாளத்தை பிச்சாத்து டிவி சோவில் தக்கவைக்க பம்மாத்திற்காக (போலி அடையாளம் ) கோட்டு சூட்டு போட்டுக் கொல்லும் ஒருவர், அதைவிட பெரிய வெள்ளித்திரையில் , ஒருவர் அவருக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திகொள்ள‌ செய்யும் முயற்சிகளை கிண்டல்தொனியில் கேட்பது மொள்ளமாரித்தனம்.

உண்மையிலேயே சமுதாயத்தைப் புரட்டிப்போடும் நிகழ்ச்சிகளை செய்ய தில் வேண்டும். எங்கே நெஞ்சில் மாஞ்சா இருந்திருந்தால் பர்தா குறித்த விவாதத்தை ஒளிபரப்பி இருக்கலாம் அல்லது வொலக நாயகன்  எப்போது எப்படி யாரால் வொலக நாயக பட்டம் வாங்கினார் என்று கூப்பிட்டு கும்மி அடிக்கலாம்.

***

அவமானப்படுத்த வேண்டும் என்ற மறைமுக எண்ணத்தோடு கேட்ட எல்லாக் கேள்விகளுக்கும் சிரித்துக்கொண்டே பதில் சொன்ன பவர்ஸ்டார் என்ற ஒரு சராசரி மனிதன் உயர்ந்து நிற்கிறார் என் மனதில்.



Thursday, May 17, 2012

கதை விற்கும் டவுசர்களின் அட்டகாச வரலாற்று அறிவு மற்றும் சொம்பாய் மாறுதல்: செயமோகன் & மதன்


சுவராசியமாய் எழுதுவது, அழகாக ஓவியம் தீட்டுவது, பாடல் பாடுவது, ஆடுவது ..... எல்லாம் ஒரு கலை மற்றும் பயிற்சி.  விருந்து புத்தகத்தில் வேலை பார்ப்பவரும் உழைக்கிறார் , வாசிப்பவர்களை மயக்கும் ,கிரங்கடிக்கும் எழுத்தாற்றல் உண்டு அவர்களுக்கும். அதற்காக அவர்களை புனிதர்களாக ஆக்க முடியாது.

என்ன எழுதுகிறார்கள் என்பதுதான் முக்கியம். கதைபுக் ரைட்டர் எல்லாம் நல்லா கதை எழுதுகிறார்கள். பாராட்டுகள். வரலாற்றில் எதையாவது உருவி புனைவைச் சமைத்து உங்களின் இரசிகர் மன்றக் குஞ்சுகளுக்கு பரிமாறுங்கள். போகாத பொழுதுகளை உங்களின் கதைகளைப் படித்து போக்கிக்கொள்ளட்டும். மண்டகப்படி அமைத்து விச்சுணுபுரத்தில் தெருக்கள் எத்தனை அடி இருந்தது என்று மயிர்பிளக்க விவாதிக்கட்டும்.

வரலாற்றுத்திரிபுகள் எதற்கு?  வேண்டாம் விட்டுவிடுங்கள்.

http://www.jeyamohan.in/?p=27320

***

டிவியில் வேலை பார்ப்பதால் ஓனர் கோவிச்சுக்குவார் என்று, தனது மகத்தான அறிவியல் கேள்விக்கு ஏன் விகடன் அந்தப்படத்தைப் போட்டது? என்று வெகுண்டு எழுந்துள்ளார் மற்ற ஒரு வரலாற்று ஆய்வாளர்.

சார் இது ரொம்ப ஓவர். பரமசிவன் கழுத்த்தில் பல்லி இருந்தால் அது பாம்பாகக் கூட நடிக்குமாம். 

ஜெ. படம் விவகாரம்: விகடனிலிருந்து விலக்கப்பட்டார் மதன்!
http://tamil.oneindia.in/news/2012/05/17/tamilnadu-vikatan-terminates-cartoonist-madhan-154153.html

***
கொறிக்க....

பாஸ்போர்ட்' மருதன் வெளியிடாத பின்னூட்டம்
http://etamil.blogspot.com/2009/01/blog-post.html

ஹாய் மதனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் ..
http://www.varalaaru.com/Default.asp?articleid=482

ஆ.வி மதனின் சறுக்கல் : அறிவுக்கெட்டத்தனமான அறிவுக்கு விளக்கம்
http://tbcd-tbcd.blogspot.com/2007/12/blog-post_28.html

ஆய் மதனின் உளறல்கள்....அடவுலே இருக்க விட மாட்டாய்ங்க போலிருக்கே !!
http://tbcd-tbcd.blogspot.com/2009/03/blog-post_08.html

சாரு நிவேதிதாவுக்கு மறுப்பு
http://marudhang.blogspot.com/2010/07/blog-post_16.html

Sunday, May 13, 2012

நித்தி பிள்ளை இல்லை முதலி : இலக்கியவியாதி நெல்லை கண்ணன் கவலை

மிழ்நாட்டில் எந்த இலக்கியவியாதிகளும் சமூகப்பணிகளில் நேரடிப்பங்கு கொள்வது இல்லை. கதைப்புத்தகம் எழுதுவது, அம்புலிமாமா வாசக வட்டத்தின் சொம்புக்கூட்டங்களில் கலந்துகொண்டு மயிர்பிளக்க விவாதிப்பது போன்ற உலகமாகப் பணிகளில் மட்டுமே கலந்துகொள்வார்கள். சமூகப்பிரசனைகள் இவர்களுக்கு தேவை அற்றது. முடிந்தால் அதில் பட்டும்படாமல் எதையாவது உருவி கதை சமைக்கப் பார்ப்பார்கள் (சுசாதா பாணி பிரச்சனைக்குள் போகாமல் மொக்கை கருத்துகளை கதையாக்குவது.) அல்லது வாய்கிழியப் பேசிவிட்டு கர கர சங்காரா என்று கடைசிக்காலத்தில் மடப்பிரச்சாரவாதிப்போல சமஸ்கிரகத்திற்கு சொம்பெடுப்பது (செயகாந்தன் பாணி) என்று மாறிவிடுவார்கள்.

நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ்ப்பற்று குறித்துபேச ஒன்றும் இல்லை. நல்ல தமிழ் ஆர்வலர். ஆனால் இவர் எந்த சாதி எந்த மடத்திற்கு நல்லது என்று சண்டைபோட வந்துள்ளார்.

http://tamil.oneindia.in/news/2012/05/13/tamilnadu-nellai-kannan-seeks-jaya-help-save-madurai-aadheenam-153902.html

பின்னர் குழுத் தலைவர் நெல்லை கண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

"மதுரை ஆதீனமாக சைவ வேளாளரை நியமனம் செய்ய வேண்டும். ஆனால், அகமுடைய முதலியாரான நித்தியானந்தாவை, ஆதீனமாக நியமித்துள்ளது சைவத்திருமடங்களின் விதிகளுக்கும், மரபுகளுக்கும் புறம்பானது."

மடங்களுக்கு நல்ல மனிதர்கள் தேவை இல்லை. ஒருவேளை நித்தி சைவ வேளாளராக இருந்திருந்தால் பஞ்சாயத்து கண்ணன் ஒகே சொல்லியிருப்பார் என்றே நினைக்கிறேன்.

காஞ்சியாகட்டும் மதுரையாகட்டும் மடங்களுக்கு சாதிதான் முக்கியமே தவிர நல்ல மனிதர்கள் அல்ல. அதுக்கு சொம்பாக இப்படி இலக்கியவியாதிகளும் பேசுவது அதிர்ச்சியாக இல்லை........ஏன் என்றால் செயமோகனாகட்டும் செயகாந்தன் ஆகட்டும் சுசாதா ஆகட்டும் நெல்லை கண்ணன் ஆகட்டும் மதத்தில் திளைப்பவர்களே .அவர்களின் மதமே வர்ணாசிரம சாதியக் கட்டுமானம்தான் எனும்போது சொல்ல ஒன்றும் இல்லை.

நெல்லை கண்ணன் இனி பிள்ளை கண்ணன்.

தம்மைத்தாமே நக்கிக்கொள்ளும் நாய்கள்‍ யார் யார்? - விளக்கம் : கதைபுக் ரைட்டர் ஜெய‌காந்தன்
http://kalvetu.blogspot.com/2010/03/blog-post_31.html


"சைவம்" - என்பது மதம். அது "உணவுப் பழக்கம்" அல்ல‌
http://kalvetu.blogspot.com/2011/01/blog-post.html


Monday, April 23, 2012

Every tree and stone is undisputed

"Every tree and stone is undisputed - ஒட்டொரு மரமும் கல்லும் கூடத்தான் பிரச்னைக்கு" அப்பாற்பட்டதாக அமைதியாக இருக்கிறது.

"ஒரு மனிதன் செயலாற்றக்கூடிய சக்தி உடையவனாக இருந்தால், அவன் disputed ஆகத்தான் - பிரச்னைக்கு உரியவனாகத்தான் - இருக்க முடியுமே தவிர, undisputed ஆக,பிரச்னைக்கு அப்பாற்பட்டவனாக இருக்க முடியாது."

Disputed என்று வரும்பொழுதுதான் ஒரு மனிதன் செயலாற்றிக் கொண்டிருக்கிறான் என்று புரிந்து கொள்ள முடியும். செயலாற்றாமல் தூங்கி வழிகின்ற ஒருவனைத்தான் undisputed என்று சொல்ல முடியும்.

(கவிஞர் கண்ணதாசன் எழுதிய  நான் பார்த்த அரசியல்
http://nagainthu.blogspot.com/2012/04/blog-post_23.html)