Wednesday, July 11, 2007

Rs Vs $$$ யார் எக்கேடு கெட்டால் என்ன?

பெரும்பாலான NRI க்கள் இந்தியாவின் ரூபாய் எப்போது குறையும் என்றே காத்து இருப்பார்கள். சந்தையில் தனது நாட்டு நாணய மதிப்பு குறைந்தால் சந்தோசப்படும் வித்தியாசமான மனிதர்கள். இவர்கள் மட்டும் அல்ல, உள்நாட்டில் இருந்து கொண்டே ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பருப்புக்கடை முதலாளி தொடங்கி, பனியன் தயாரிப்பு ஓனர் முதல் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் கார்ப்புரேட் கம்பெனி வரை இந்தியாவின் நாணய மதிப்பு அதிகமானால் அதற்கு சாபம் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். Rs குறைந்து $$$ அதிகமானால் நல்லதே (யார் எக்கேடு கெட்டால் என்ன? )

பணவீக்கம் என்ற ஒன்று இந்தியாவில் வாழும் ஒரு சாதாண விவசாயியை,கூலித் தொழில் செய்பவனை எப்படி பாடாய் படுத்துகிறது என்று இவர்கள் யோசிப்பார்களா என்று தெரியவில்லை. சுயநலம் இருக்கலாம் ஆனால், அடுத்தவன் அழிவில் அது வரக்கூடாது . மற்றும் ஒரு தேசம் நாசமாய்ப் போகட்டும் என்று எண்ணுவது தவறு.

இந்தியாவின் பண மதிப்பு குறைய வேண்டும் என்று நினைக்கும் இந்தியர்களுக்கு குற்ற உணர்ச்சி இருப்பதும் ,இல்லாததும் அவர்களின் சுய மதிப்பீடு சார்ந்த விசயம். இந்தியாவின் ரூபாய் மதிப்பு எப்பொழுது குறையும் என்று காத்து இருப்பவர்களும்,வெளிநாட்டு வருமானத்திற்கு வரி இல்லை என்ற போதும் இன்னும் ஹவாலாவாக மாற்றிக் கொண்டு இருப்பவர்களும் அவரவரின் உணர்ச்சிகளை சுய மதிப்பீடு செய்து கொள்ளட்டும்.

அதிக மதிப்பை எட்டிய கரன்ஸிகளை உடைய நாடுகள் ஒன்றும் பிச்சைக்கார நாடுகள் இல்லை.அவர்களின் பண வீக்கம் கட்டுக்குள் உள்ளது. இன்னும் 1 cent ம் 10 fils ம் இன்னும் உபயோகத்தில் இருக்கிறது.பைசாதான் அழிந்துவிட்டது பணவீக்கத்தால்.

இந்தியாவின் பணவீக்கம் உயர்ந்தாலும் ரிசர்வ் வங்கி சும்மா இருக்க வேண்டும், அதை கட்டுப்படுத்தக்கூடாது அப்போதுதான் $$ ன் மதிப்பு ரூபாய்க்கு எதிராக உயரும் என்று நினைப்பது பச்சையான சுயநலம் இன்றி வேறு என்ன? பணவீக்கத்தால் பாதிக்கப்படுவது பங்குகளில் முதலீடு செய்யும் கனவான்கள் அல்ல. பணவீக்கம் எப்படி இருந்தாலும் இந்திய ரூபாய் சரிந்தால் சரி என்று எண்ணுபவர்களிடம் என்ன பேசுவது?

இந்திய பொருளாதாரம் இப்படி அல்லக்கையகவே இருக்கும் வரை.."ஒரு அளவுக்கு மேல் ரூபாய் உயர்வது இந்திய பொருளாதாரத்திற்கு கூட நல்லதில்லை... ஏனெனில் இந்திய ஏற்றுமதிக்கு பெரிய மதிப்பு இருக்காது" என்று சொல்லலாம். இப்படியே சிந்திப்பதால்தான் $$ கிடைக்கிறது என்று அரிசிக்குப் பதில் மூங்கில் போட விவசாயி தூண்டப்படுகிறான்…அவன் தின்பது எலிக்கறியாகவே இருந்தாலும்.


ரூபாயின் மதிப்பு கூடினால் பணவீக்கம் குறையும் என்பது உண்மையானால்,அதன் பயன்
சாமான்யனுக்கும் கிட்டும்.

பணவீக்கம் எக்கேடு கெட்டால் என்ன, ரூபாயின் மதிப்பு குறைந்தால் சரி என்றால்,
அதன் பயன் சாமான்யனுக்கு கிட்டாது.ரூபாயின் மதிப்பு உயர்ந்தால் பணவீக்கம் குறையும் என்பதே எனது புரிதல்.

உள்நாட்டுப்பிரச்சனை,பொருளாதாரம் மற்றும் சர்வதேச பிரச்சனைகளால் $ன் மதிப்பு அதுவாக குறையும் போது , அதனைக் கொண்டு அளக்கப்படும் மற்ற நாணயங்களின் மதிப்பு உயர்ந்து காணப்படுவது இயற்கை. இந்த நேரத்தில் நமது ரிசர்வ் வங்கி டாலரை வாங்குவதும், அதனால் டாலருக்கு தேவை ஏற்பட்டு டாலர் சரியாமலும், ரூபாய் அதிகம் உயராமல் இருக்கும்படி செய்து ,ரூபாய் உயர்வதை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தி வைத்திருப்பதும் என்ன வகை பொருளாதாரம் என்று இன்றுவரை புரிந்தது இல்லை.

எனக்கு புத்தகங்கள் சொல்லிக் கொடுக்கும் பொருளாதாரம் தெரியாது. ஆனால் பணவீக்கத்தால் அழியும் சில வாழ்க்கைகள் தெரியும் என்றே நினைக்கிறேன்.பொருளாதாரப் புலி மன்மோகனுக்கே இந்த விசயம் இப்போதுதான் புரிந்துள்ளது.

பண வீக்கம் குறைந்து ஒரு சாதாரண மனிதன் தான் வாங்கும் சம்பளத்தில்/வருமானத்தில் குறைந்த பட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டால் அது நல்லது என்று நினைக்கிறேன். அதற்கு ரூபாயின் மதிப்பு கூட வேண்டும்.

தொடர்புடைய பதிவு:

இந்தியாவிற்கு பணம் அனுப்பாமல் டாலர் உயரும் என காத்திருப்பவரா நீங்கள் ?
http://stockintamil.wordpress.com/2007/07/10/indian-rupee-appreciates-to-nine-year-high

தகவலுக்காக:
Manmohan: taming inflation main aim http://www.hindu.com/2007/03/01/stories/2007030105441200.htm

Inflation in India is now uncontrollable because of Indian Government’s greed for Western money – PM Manmohan really scared now!
http://www.indiadaily.com/editorial/15407.asp

மற்றவர்களின் பார்வைகள்:

நாணய மாற்று வீதமும் ஏற்றுமதியும்http://porulsey.blogspot.com/2007/07/blog-post.html

மூலிகை பயிரிடுபவர்கள் முட்டாள்களா?
http://ullal.blogspot.com/2007/06/blog-post_5067.html

விவசாயத்தின் பேரழிவும் - உயிர்ம எரிபொருளும்!
http://poar-parai.blogspot.com/2007/07/blog-post.html

Picture Courtesy
http://www.savedahorses.com/

12 comments:

 1. //இந்தியாவின் பணவீக்கம் உயர்ந்தாலும் ரிசர்வ் வங்கி சும்மா இருக்க வேண்டும், அதை கட்டுப்படுத்தக்கூடாது அப்போதுதான் $$ ன் மதிப்பு ரூபாய்க்கு எதிராக உயரும் என்று நினைப்பது பச்சையான சுயநலம் இன்றி வேறு என்ன? பணவீக்கத்தால் பாதிக்கப்படுவது பங்குகளில் முதலீடு செய்யும் கனவான்கள் அல்ல. பணவீக்கம் எப்படி இருந்தாலும் இந்திய ரூபாய் சரிந்தால் சரி என்று எண்ணுபவர்களிடம் என்ன பேசுவது?

  இந்திய பொருளாதாரம் இப்படி அல்லக்கையகவே இருக்கும் வரை.."ஒரு அளவுக்கு மேல் ரூபாய் உயர்வது இந்திய பொருளாதாரத்திற்கு கூட நல்லதில்லை... ஏனெனில் இந்திய ஏற்றுமதிக்கு பெரிய மதிப்பு இருக்காது" என்று சொல்லலாம். இப்படியே சிந்திப்பதால்தான் $$ கிடைக்கிறது என்று அரிசிக்குப் பதில் மூங்கில் போட விவசாயி தூண்டப்படுகிறான்…அவன் தின்பது எலிக்கறியாகவே இருந்தாலும்.
  ///


  அருந்ததி ராய் சொன்னது போல இன்றைக்கு புதுவிதமான காலனியாதிக்கம் நம்மை வரவேற்கிறது சொந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை காலனியாக்கி சுரண்டும் இது போன்ற நர மாமிச வக்கிர வெறியர்களை குறிப்பிட்டுத்தான் அருந்ததி ராய் அவ்வாறு சொல்லியிருப்பார்.

  பொருளாதாரம் குறித்து பெரிய அறிவெல்லாம் எனக்கு இல்லை. ஆயினும் பண வீக்கம் என்பதில் வெறுமே டாலருக்கு நிகரான மதிப்பு என்பது மட்டும் பாத்திரம் வகிப்பதாக நான் கருதவில்லை. அதை விட இன்னும் பல வழிகளில் இது பாதிக்கப்படுகீறது,

  குறிப்பாக அந்நிய மூலதனத்தின் வரத்து அதிகமாக அதிகமாக பண வீக்கம் உயர்ந்து உள்நாட்டு பொருளாதாரத்தை சிதைக்கிறது. சாதாரண மக்களின் அத்தியாவசிய தேவைகளின் விலை உயர்ந்து வயிற்றில் அடிக்கீறது. சென்செக்ஸ் 15000 மார்க்குகளை கடந்த போதுதான் பண வீக்கம் மீண்டும் உயர்ந்து 4% கடந்தது(போன முறையை விட கம்மி என்ற போதும்).

  இதே போல போன முறை பங்கு சந்தை புல்லிஸ் ஆன போதுதான் பண வீக்கம் வரலாற்றிலேயே இல்லாத அளவு உயர்ந்தது. இதில் உணவு தானிய கொள்முதலில் நேரடியாக பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்திருப்பது இன்னும் இன்னும் அதிகமாக சாதரண உழைக்கும் மக்களின் வாழ்வை கேள்வி குறியாக்கியுள்ளது.

  தனது சொந்த வயிறு, ஆசனவாயை தாண்டி சிந்திக்க தெரியாத இழி பிறவீகளுக்கு சாட்டையடியாக இந்த பதிவு உள்ளது. வாழ்த்துக்கள்.

  அசுரன்

  ReplyDelete
 2. சூப்பர் பதிவு சார்.

  நம்ம சுயநலம் எந்த அளவுக்கு போய்கிட்டு இருக்கறதுக்கு இது ஒரு நல்ல உதாரணம்.

  ReplyDelete
 3. தொடர்புடைய பதிவு மற்றும் மறுமொழிகள்.

  http://porulsey.blogspot.com/2007/04/economics-48.html

  ReplyDelete
 4. அசுரன்,
  எனக்கும் பொருளாதாரம் பற்றிய சரியான புரிதல் இல்லை. நான் பணவீக்கம் மற்றும் ரூபாயின் மதிப்பு என்ற இரண்டு காரணிகளைக் கொண்டுதான் இதை எழுதினேன்.

  பொருளாதாரம் எவ்வளவு சிக்கலாக இருந்தாலும் நீங்கள் சொன்னது போல் தனது சொந்த வயிறு தாண்டி மக்கள் சிந்திக்க வேண்டும் என்பதே எனது ஆதங்கமும்.

  ***

  வெங்கட்ராமன்,அனானி @ Wednesday, July 11, 2007 9:14:00 AM நன்றி.

  ReplyDelete
 5. பொருளாதாரம் புரியாமல் பேசுகிறேன் என்று சொல்பவர்களுக்கு...

  1$ இன் மதிப்பு Rs 1000/- ஆக உயர்தால்கூட அதுவும் பத்தாது இன்னும் கொஞ்சம் காத்து இருக்கலாம் என்று நினைப்பது மனித இயல்பு. அதே சமய்த்தில் அடுத்த நாட்டில் ஏன் அவ்வாறு பண மதிப்பு குறைகிறது என்றும் பார்ப்பது நல்லது.

  பிணம் எப்போது விழும் என்று காத்து இருக்கும் மயான தொழிலாளியின் காத்திருப்பில் இருக்கும் “வயிற்றுப்பாட்டு நியாயம்” ஏற்றுக் கொள்ளத்தக்கது.

  இந்தியாவின் ரூபாய் எப்போது வீழ்ச்சி அடையும் என்று காத்திருப்பவர்களின் நியாயம் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை மன்னிக்க.

  ReplyDelete
 6. $1 40லேருந்து 20 ஆச்சுன்னா, மெத்த வருத்தப்படப் போகும் ஜீவ ராசிகளில் நானும் ஒருத்தன் :(

  ஊர விட்டு உறவ விட்டு, அசலூருக்கு வந்து சேத்ததுங்கோ, கொறஞ்சா வலிக்கத் தான் செய்யும்.

  ரூபா ஸ்ட்ராங்காகி, $1 40 லேருந்து, 20 ஆச்சுன்னா, 40 ரூபாய்க்கு கிடைக்க வேண்டிய பொருள், ஊர்ல 20க்கே கெடைக்கும்னுதான அர்த்தம்?
  அப்படின்னா, வலி கொஞ்சம் கொறயும் :)

  விவசாயி கஷ்டப் படுவதர்க்கும், என் ஸேவிங்ஸ் குறைவதனால் வரும் வலிக்கும், ஏன் முடிச்சு போடணும்?
  என் கஷ்டம் எனக்கு, அவன் கஷ்டம் அவனுக்கு.
  அவன் வாழ்க்கைய சரி பண்ணத் தானே, என் சம்பாத்யத்தை ஊர்ல இன்வெஸ்ட் பண்றேன்? அவன பத்தி அக்கர இல்லன்னா, இங்கயே இல்ல வச்சிருப்பேன் முழுசையும்?

  ReplyDelete
 7. // ஊர விட்டு உறவ விட்டு, அசலூருக்கு வந்து சேத்ததுங்கோ, கொறஞ்சா வலிக்கத் தான் செய்யும்.//

  அப்படியானால் இந்தியாவின் பொருளாதரம் சீர் குலைந்து 1$ = Rs 1000/- என்று ஆனால் நீங்கள் மிகவும் சந்தோசமடைவீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? :-)))

  உங்களின் சேமிப்பு அதிகமாகத் தெரிவதற்காக அடுத்த நாட்டு கரன்ஸி தாழ்ந்தே போய்க்கொண்டு இருக்க வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம். அதற்குப்பதில் பணவீக்கம் குறைந்தால் நல்லது என்று நினைக்கலாமே?

  வலுத்தவன் வாழ்வான் என்பது உண்மை. அதற்கு நீங்கள் மேலும் வலுவுள்ளவர்களாக உங்களை ஆக்கிக்கொள்ளலாம். அதைவிட்டுவிட்டு அடுத்தவன் தாழ்வதினால் தான் வலுவாகத் தெரிய வேண்டும் என்று நினைக்கக் கூடாது.


  நீங்கள் எந்த நாட்டில் இருகிறீர்களோ அந்த நாட்டின் பொருளாதாரத்தைப் பொருத்துத்தான் உங்களின் சேமிப்பை கணக்கிட வேண்டும்.அந்த நாட்டில் உங்களின் தகுதிக்கு குறைவாக சம்பளம் கிடைத்தால் அதற்காக வருத்தப்படலாம்.


  //விவசாயி கஷ்டப் படுவதர்க்கும், என் ஸேவிங்ஸ் குறைவதனால் வரும் வலிக்கும், ஏன் முடிச்சு போடணும்?//

  ஏற்றுமதியால் அதிக $ கிடைக்கிறது. அதை ரூபாயில் மாற்றினால் அதிகமாக வருகிறது அதனால் மூங்கில் போடு என்று சொல்வது தவறு என்ற அளவிலேயே அதைச் சொன்னேன். மேலும் பணத்தின் மதிப்பு குறையே வேண்டும் என்றே எண்ணும் NRIக்களின் சிந்தனைகளை மாற்றுவது சிரமம்.

  மூலிகை பயிரிடுபவர்கள் முட்டாள்களா?
  http://ullal.blogspot.com/2007/06/blog-post_5067.html


  //அவன் வாழ்க்கைய சரி பண்ணத் தானே, என் சம்பாத்யத்தை ஊர்ல இன்வெஸ்ட் பண்றேன்? அவன பத்தி அக்கர இல்லன்னா, இங்கயே இல்ல வச்சிருப்பேன் முழுசையும்? //

  பெரும்பாலான NRI க்கள் நினைத்துக் கொண்டு இருக்கும் "சமுதாயத் தொண்டு" காமெடி இதுதான்.திருப்பதி உண்டியலில் பணத்தை போட்டுவிட்டு புண்ணியம் கிடைப்பதாக எண்ணுவது போன்றது இது.

  உதாரணம்...

  வீடே இல்லாதவன் ஒரு வீடு வாங்கினால் அது சரி.
  ஆனால் இன்வெஸ்ண்ட் என்ற ஒரே காரணத்துக்காக பல வீடுகளை போட்டி போட்டு வாங்கி , மாபெரும் சமுதயாக் குற்றத்தைச் செய்கிறார்கள்.

  நீங்கள் அமெரிக்காவில் இருபீர்களேயானால் ஒரு வீடுக்கு மேல் வைத்து இருக்கும் அமெரிக்கர்களின் விகிதம் எவ்வளவு என்று பாருங்கள்.அதே நேரத்தில் இன்வெஸ்ண்ட் என்ற பெயரில் பல வீடுகளை இந்தியாவில் வாங்கத் துடிக்கும் NRI விகிதத்தையும் பாருங்கள்.

  What is needed என்பதற்கும் What you want to have ? என்பதற்கும் உள்ள வித்தியாசம் புரிய வேண்டும்.
  சிலரின் wants அதிகமாக இருப்பதால் பலரின் needs பூர்த்தி செய்யப்படாமலேயே உள்ளது.


  பார்க்க..
  India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா ?
  http://kalvetu.blogspot.com/2007/02
  /india-inc-stinks-sez.html

  //ரூபா ஸ்ட்ராங்காகி, $1 40 லேருந்து, 20 ஆச்சுன்னா, 40 ரூபாய்க்கு கிடைக்க வேண்டிய பொருள், ஊர்ல 20க்கே கெடைக்கும்னுதான அர்த்தம்? அப்படின்னா, வலி கொஞ்சம் கொறயும் :)//

  எனது புரிதலும் அப்படியே. :-))
  அப்படி நடந்து நமது 1 பைசாவும் அமெரிக்க 1 Cent போல புழக்கத்தில் இருந்தால் நல்லதே. :-))

  ReplyDelete
 8. //அப்படியானால் இந்தியாவின் பொருளாதரம் சீர் குலைந்து 1$ = Rs 1000/- என்று ஆனால் நீங்கள் மிகவும் சந்தோசமடைவீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? :-)))//

  என்ன ஆனாலும், அப்படி, அப்பட்டமா நெனைக்க மாட்டோம். $ன் ஷக்தி ஜாஸ்தி ஆகணும்னு வேணா நினைப்போம்.

  //நீங்கள் எந்த நாட்டில் இருகிறீர்களோ அந்த நாட்டின் பொருளாதாரத்தைப் பொருத்துத்தான் உங்களின் சேமிப்பை கணக்கிட வேண்டும்.அந்த நாட்டில் உங்களின் தகுதிக்கு குறைவாக சம்பளம் கிடைத்தால் அதற்காக வருத்தப்படலாம்.
  //

  நம்ம ஊர டோட்டலா மறந்துட்டு அமெரிக்கனா ஆகும் எண்ணம் இருந்தா, நீங்க சொல்றது ரெடி. நாங்க இன்னிக்கு திரும்பலமா நாளைக்குத் திரும்பலாமான்னு கணக்குப் போடும் கோஷ்டி :)

  //வீடே இல்லாதவன் ஒரு வீடு வாங்கினால் அது சரி.
  ஆனால் இன்வெஸ்ண்ட் என்ற ஒரே காரணத்துக்காக பல வீடுகளை போட்டி போட்டு வாங்கி , மாபெரும் சமுதயாக் குற்றத்தைச் செய்கிறார்கள்.//

  இது சொல்றது ஈஸியாதான் இருக்கு. நம்ம எல்லாரும் வேலை செய்யறொம். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு சம்பளம். மெட்ராஸ்ல எல்லாரோட சம்பளத்தையும் ஒரு பெரிய அண்டால போட்டு, தள்ளு வண்டிக் காரருக்கும், நமக்கும், நாராயண மூர்த்திக்கும் சரி சமமா பிரிச்சு மாசா மாசம் சம்பளம் குடுத்தா நல்லாதான் இருக்கும். ப்ரேக்டிக்கலா செய்ய முடியுமா?
  பொருள் சேர்ப்பது, மனித இயல்புதானே சார்? நம்ம எல்லாரும், சன்யாசி இல்லியே?

  //பெரும்பாலான NRI க்கள் நினைத்துக் கொண்டு இருக்கும் "சமுதாயத் தொண்டு" காமெடி இதுதான்.திருப்பதி உண்டியலில் பணத்தை போட்டுவிட்டு புண்ணியம் கிடைப்பதாக எண்ணுவது போன்றது இது.//

  $ஐ ரூபாயாக மாற்ற, பல விதங்களில் investment செய்வது நல்லது தானே? ஆனா என்ன, நீங்க சொல்ற மாதிரி, நிலங்களும், வீடுகளும் வாங்கி முடக்கினா ஒரு ப்ரயோஜனமும் கிடைக்கரதுல்ல. உள்ளே வரும் பணம் புழங்குவதர்க்கு பதில், கருப்பா, செட்டியார் வீட்டுப் பெட்டியில தூங்கிக்கிட்டு இருக்கும்.
  வங்கிகளில் வைத்திருக்கும், டெபாஸிட், ஊருக்கு ப்ரயோஜனமாதானே இருக்கு?

  //What is needed என்பதற்கும் What you want to have ? என்பதற்கும் உள்ள வித்தியாசம் புரிய வேண்டும்.
  சிலரின் wants அதிகமாக இருப்பதால் பலரின் needs பூர்த்தி செய்யப்படாமலேயே உள்ளது.//

  ஹ்ம். true. என்ன வழி இதுக்கு? செலவு பண்றத கொறச்சுக்கணுமா? நிலம் வீடு மாதிரி ஐட்டங்கள், தேவைக்கு அதிகமாக வாங்குவது தவறுதான்.
  ஆனா, ஏதாவது பொருள அதிகமா வாங்கினா (உ.ம், உடை, நகை, டி.வி, etc...) ,உழைப்பாளிக்கு நல்லது இல்லியா?

  //எனது புரிதலும் அப்படியே. :-))
  அப்படி நடந்து நமது 1 பைசாவும் அமெரிக்க 1 Cent போல புழக்கத்தில் இருந்தால் நல்லதே. :-)) //

  இதுவே என் விருப்பமும்.
  நம் ஊரை சொர்க பூமியாக பார்க்க நினைக்கும் சராசரி ஆள் தான் நானும்.
  NRI என்பதாலும், $ ஸ்ட்ராங்கா இருக்கணும்னு ஆசை படுவதாலும், தேசத் துரோகிகள் ஆகிவிடமாட்டோம் :)

  ReplyDelete
 9. ///குறிப்பாக அந்நிய மூலதனத்தின் வரத்து அதிகமாக அதிகமாக பண வீக்கம் உயர்ந்து உள்நாட்டு பொருளாதாரத்தை சிதைக்கிறது. சாதாரண மக்களின் அத்தியாவசிய தேவைகளின் விலை உயர்ந்து வயிற்றில் அடிக்கீறது. சென்செக்ஸ் 15000 மார்க்குகளை கடந்த போதுதான் பண வீக்கம் மீண்டும் உயர்ந்து 4% கடந்தது(போன முறையை விட கம்மி என்ற போதும்).////

  nonsense. all dollar flows are exchanged for rupees ; and the dollars are sold to importers. India is a net importer (esp of petro produts). but for the FII investements in stock markets and direct investments into industry,
  our dollar reseves would much much
  less, thereby making rupess weaker.
  (remember 1991 crisis).

  and inflation (panaveekam) is mainly due to too fast an increase in money supply to bridge the annual deifcts of govts. Pls see :
  http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_17.html for a tamil
  blog report on casues of inflation.

  and exporters will benefit from a strong rupee slowly, as imports (esp petroleum products, which are the life blood of modern economy)
  will become cheaper thereby reducing the cost of production.

  Arundhandhi Roy and other leftists live in maaya and cannot understand
  basic economic reality. Indian companies too are buying up MNCs.
  and entry of MNCs into India has
  created more employement than otherwise ; and they and their employess pay taxes which are used by the govts for welfare. Do these
  leftists want India to be in the conditions before 1980s where a govt job was only source of employment for the 'educated' and
  poverty was much acute and more widespread than now. Relative poverty (percentage of population below poverty line) is much much less now..

  K.R.Athiyaman, Chennai - 96
  nellikkani.blogspot.com
  athiyaman.blogspot.com

  ReplyDelete
 10. and i forgot to add this :

  Since 1991, when liberalisation began, we have built up a handsome
  foreign exhange reserve of some 160 billion and grwoing. Hence we need not beg and borrow from the much maligned IMF for USD for our much needed imports. Until then,
  our FM had to peridically 'beg' and
  borrow from the IMF. and incidently
  IMF is not a evil org aiming to
  expoit the thrid world countires and domicate them ; but for IMFs
  'help' intil 1990s, we would been bankrupt in foreign exchange front and unable to finance our imports.
  and our economy would have bankrupted. It is a very complex issue and much reading and understanding is needed...

  and for the first time since 1947 rupess is strengthening against USD. it is manily due to the new econimic polices since 1991. Can anyone dis proove this ?

  Pls read about the present condition of Kenya, which is in a severe economic stagnation with 1000 % inflation and more..
  all due to the "purathci" of Robert Muagabe who forcefully occupied the lands of the "white"
  and re-distributed to his cronies, who are supposed to be the poor.
  and he threw out the foreigners, like Idi Amin did. both the nations bankruted soon. and the poor are starving, while leftists are good in rhetoric but short on
  realistic solutions..

  ReplyDelete
 11. And the Chinese are strongly acting for the past many years to keep their currency Yuan from appreciating against USD. can it be called 'selfishness' ; no their govt strategy and economic boom is based mainly on exporting to the world markets. hence their currecy must be kept stable and low to keep thier export competitiveness..

  ReplyDelete
 12. //பொருள் சேர்ப்பது, மனித இயல்புதானே சார்? நம்ம எல்லாரும், சன்யாசி இல்லியே?// இது சரிதான். ஆனால் எப்படி சேர்க்கிறோம் என்பதிருக்கிறதே? நாம Javaல வேலை செய்தால் $5000 அதே Data warehousingல் வேலை செய்தால் $8000 கிடைக்குதுன்னு வச்சுகுங்க. நீங்க DWH கற்றுக்கொண்டு கூடுதலாக சம்பாதிக்க நினைத்தால் அது தப்பில்லை. ஆனா அதே $5000 நான் சம்பாதிப்பேன். ஆனால் அதோட மதிப்பு மட்டும் அதிகரிக்கணும் அதுவுமெப்படி என் தாய்நாட்டின் பொருளாதாரம் அடிவாங்கினாலும் பரவாயில்லை என் சேமிப்போட மதிப்பு மட்டும் கூடணும்னு நினைக்கறது கடைந்தெடுத்த சுயநலமில்லையா சர்வேசன்?

  ReplyDelete