Wednesday, October 17, 2007

கடவுள் - கரண் தப்பார் - கனிமொழி

டவுள் இருக்கிறார் என்பதும் கடவுள் இல்லை என்பதும் இரண்டுவிதமான நம்பிக்கைகள். அறிவியலை ஒதுக்கிவிட்டு தட்டையாக நம்பிக்கை என்ற ரீதியில் மட்டும் ஆராய்ந்தால் , இதை இரண்டுவிதமான நம்பிக்கைகள் என்று சொல்லலாம்.

கடவுள் பற்றிய விமர்சனங்கள், எதிர் கருத்துக்கள் சொல்லப்படும் போதெல்லாம் கடவுளை நம்புபவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது என்ற கருத்துகள் அள்ளிவிடப்படும். "கடவுள் இருக்கிறார்" என்பது பலரின் நம்பிக்கை என்றால் அதே கடவுள் "இல்லை" என்பதும் சிலரின் நம்பிக்கையே.

அப்படி இருக்கையில் "கடவுள் இல்லை" எனறு நம்புபவர்களின் மனதை, "கடவுள் இருக்கிறார்", "பாலம் கட்டினார்" என்று சொல்லி நோகடிப்பது எந்த விதத்தில் சரி? இத்தைகைய செயல்கள் "இல்லை" என்பவர்களின் நம்பிக்கையை கேள்வி கேட்கும் செயல் அல்லவா? அதுவும் தவறுதானே? அவர்களுக்கும் வலிக்கும்தானே?

இருக்கிறார் என்பதும் நம்பிக்கை. இல்லை என்பதும் நம்பிக்கை. இரண்டையும் நம்பிக்கை சார்ந்த விசயங்களாக எடுத்துக் கொண்டால் ,யார் நம்பிக்கை உண்மை அல்லது உயர்ந்தது என்று எப்படி அளவிட முடியும்? இப்படி இருக்கையில், "இல்லை" என்று சொன்னால் மட்டும் ஒரு சாரருக்கு வலிக்கும் என்று அரசும் ஊடகங்களும் ஏன் புலம்புகின்றன?

"இருக்கு" என்று சொல்லி ஒருசாரர் அடிக்கும் கும்மி, மறுசாரருக்கு வலிக்கும் அல்லவா? இது ஏன் புரிந்து கொள்ளப்படவில்லை? இது எப்போதும் ஒருதலைப் பட்சமான புரிதலாக இருக்கிறது.

அதிக சதவீத மக்கள் "இருக்கு" என்று நம்புகிறார்கள் என்பதற்காக "இல்லை" என்று நம்பும் மக்களை கருத்துச் சொல்ல அனுமதிக்காமல் அல்லது அதன் பெயரில் பெரிய அரசியலையே கட்டமைக்க முயல்வது கேவலம்.

இரண்டுமே நம்பிக்கைகள். யாரும் யார் நம்பிக்கையையும் கேள்வி கேட்கக்கூடாது என்றால், அவரவர் அவரவர் கருத்தைச் சொல்லும் சுதந்திரம் இருக்க வேண்டும். கேள்வி கேட்பதால் மனது புண்படுகிறது என்றால் அது இரு நம்பிக்கையாளர்களுக்கும்தான்.

"இருக்கு" என்று நம்புபவர்களின் பேச்சுக்காளால் தினம் தினம் "இல்லை" என்று நம்புபவ்ர்களின் மனதும் புண்படுகிறது.


  • அவரவர் நம்பிக்கைகள் அவரவர்களுக்கு.
  • "இல்லை" என்று பேசவே கூடாது என்றால் "இருக்கு" என்றும் பேசக்கூடாது.

********
ரு முதல்வர் கடவுள் நம்பிக்கையாளர்களை புண்படுத்தும் வண்ணம் பேசலாமா? என்று கேட்கிறார் கரண் தப்பர். கரணின் கேள்வியே அபத்தமானது. ஸ்டிரியோடைப் என்று சொல்லப்படும் அதே "நம்பிக்கையாளர்கள் புண்படுவார்கள்" என்ற ரீதியில் கேட்கப்பட்ட தட்டையான கேள்விகள். அதே முதல்வர்தான் அந்த மாநிலத்தில் இருக்கும் மாற்று நம்பிக்கையாளர்களுக்கும் (கடவுள் இல்லை என்று நம்புபவர்களுக்கும்) முதல்வர்.

http://www.ibnlive.com/videos/50516/.html






கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ள இருள் நீக்கி சுப்பிரமணியில் இருந்து, காசுக்கு கலை சொல்லிக் கொடுக்கும் சிரி சிரி ரவி சங்கர பாபா முதல் , ஆன்மீக வாந்திகள் மைக் போட்டு கடவுள் இருக்கிறார் என்று கத்தும் போது , கடவுள் இல்லை என்று நம்பும் நம்பிக்கையாளர்களின் மனதும்தான் புண்படுகிறது.

தப்பாருக்கு அது புரியாது. இவர்களை உட்காரவைத்து கரண் தப்பார் "ஏன் நம்பிக்கையளர்களை (கடவுள் இல்லை என்று நம்பும்
நம்பிக்கையளர்கள்) படுத்துகிறீர்கள்" என்று கேட்பாரா?

**

கனிமொழி ???

நோ கமெண்ட்ஸ்.

அரசியலுக்கு இபோதுதான் வந்துள்ளார். இவரை அறிவாளி, சிந்தனையாளர், கவிதை சொல்லி என்று கொண்டாடியவர்களுக்கு வேண்டுமானால் இவரின் பேட்டி ஏமாற்றமாக இருக்கலாம். சராசரி அரசியல்வாதிக்கு உள்ள எல்லாத் தகுதிகளும் கொண்டவர் இவர் என்பதால் தனியாக விமர்சனங்கள் இப்போது தேவை இல்லை.


Picture courtesy
http://louisproyect.wordpress.com/category/religion/
1819 caricature by British George Cruikshank. Titled “The Radical’s Arms”, it depicts the infamous guillotine. “No God! No Religion! No King! No Constitution!” is written in the republican banner.

3 comments:

  1. "அது சரி! உங்க ஓட்டு யார் பக்கம்?" - இந்த கட்டுரை படித்து முடித்ததுமே இப்படித்தான் கேட்க தோன்றியது.

    கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது வெட்டி பேச்சு விசுவாசிகள் ஆராய வேண்டிய பட்டிமன்ற தலைப்பு மட்டுமே.

    கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது இப்போது பொதுஜன பிரச்சனையில்லை. ஆனால் கடவுள் இருக்கிறார் என்று கூறுபவர்கள், யாரை கடவுள் என்கிறார்கள்? அல்லது எதை கடவுள் என்கிறார்கள்? என்பது தான் பொதுஜனம் தெளிவு பெற வேண்டிய விசயம்.

    அப்படியே கடவுள் இல்லை என்று கூறுபவர்களிலும், பெரும்பான்மையினர் மனிதனின் திறமைக்கும் மேம்பட்ட ஒரு சக்தி இருப்பதாகவும், விஞ்ஞானத்தால் விளக்க முடியாத விசயங்கள் பல இருப்பதையும் ஒத்து கொள்கிறார்களே, அந்த சக்திக்கு (அடடா, ஆன்மீக வார்த்தையோ?) - அந்த Scientific Force -க்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள்? என்று விவாதித்தால் நன்றாக இருக்கும்.

    மனிதர்களின் சக்திக்கு அப்பால் ஒரு சக்தியே இல்லை, அனைத்தும் விஞ்ஞானத்திற்குள் அடக்கம் என்று கூறுவார்களேயானால், விஞ்ஞானம் என்பதற்கான இந்திய பாரம்பரிய வார்த்தை ஆன்மீகம் என்பதாக ஏன் கொள்ள கூடாது என்றே கேட்பேன்.

    ஆன்மீகம் என்பது ஒரு சமூக விஞ்ஞானம். அதை சரியாக வழி நடத்தி வகை தெரியாதவர்கள், அதை எதிர்க்க துணிந்திருக்கிறார்கள். விஞ்ஞானத்தால் கூட அதற்கு மாற்று விளக்கம் அளிக்க முடியாததால் தான், இன்னும் மக்களின் ஆன்மீக நம்பிக்கைகளைப் போக்கடிக்க முடியவில்லை.

    ReplyDelete
  2. //விஞ்ஞானம் என்பதற்கான இந்திய பாரம்பரிய வார்த்தை ஆன்மீகம் என்பதாக ஏன் கொள்ள கூடாது என்றே கேட்பேன்.
    //

    இந்தியாவில் அநேக பாரம்பரிய வார்த்தைகள் உள்ளது. நீங்கள் உங்கள் அகராதியில் விஞ்ஞானம் என்பதற்கு எந்த வார்த்தைகளும் போட்டுக் கொள்ளலாம். நம்பிக்கையாளர்களிடம் விவாதிக்க முடியாது. :-) அறிவியலில் விவாதம் உண்டு.

    ஒன்று மட்டும். அறிவியல் என்பது தொடர்ந்து தேடுதல். அதை சக்தி என்ரு இறுதிவடிவம் கொடுக்க முடியாது. தெரியாது என்று ஒத்துக் கொள்வதிலும் தேடத் தொடங்குவதுலும் அறிவியல் உள்ளது.

    "தெரியாத ஒன்றை இப்படி அழைத்துக்கொள். அதுவே போதும்" என்று அறிவியல் சொல்லாது. அதையும் தாண்டி தேடு என்பதுதான் அறிவியல்.

    எனது இந்தப் பதிவில் அறிவியல் குறித்த எனது பார்வையை பகிர்ந்துதுள்ளேன்.
    http://kalvetu.blogspot.com/2007/10/blog-post_26.html

    ReplyDelete
  3. It isn't hard at all to start making money online in the hush-hush world of [URL=http://www.www.blackhatmoneymaker.com]blackhat guide[/URL], It's not a big surprise if you have no clue about blackhat marketing. Blackhat marketing uses not-so-popular or not-so-known avenues to produce an income online.

    ReplyDelete