Tuesday, October 12, 2010

கலாச்சாரமும் பிரபலபதிவர் என்ற கூமுட்டைகளும்

லாச்சாரம் என்றால் என்ன என்று ஒருமுறை ஒரு பேராசியருக்கு பாடம் எடுக்கப்போய் அவர் அதில் இருந்து என்னிடம் இருந்து விலகிப்போய்விட்டார். நான் சொல்லும் பேராசிரியர் தமிழர் அல்ல வட இந்தியர் ஒருவர். கலாச்சாரம் என்பது எப்போதும் இறந்தகாலத்தைக் குறிக்கும்.  இறந்தகாலம் அல்லது கடந்தகாலம் என்பது எல்லை இல்லாதது. கி.பி என்று ஆரம்பித்து கடந்தகாலத்தை நோக்கிச் சென்றால் கிறித்துவின் பிறப்பில் நின்று அந்தர்பல்டி அடுத்து கி.மு என்றாகி எல்லையில்லாமல் விரியும்.

கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று புலம்பும் பெரிசுகளிடம் "எந்த காலகட்டத்திற்கான கலாச்சாரம் இப்போது இந்த ஆண்டில் கெட்டுவிட்டது?" என்று கேட்கலாம்.  ஒரு பேச்சுக்கு கண்ணகி காலத்தில் இருந்ததே அக்மார்க் கலாச்சாரம் என்றால், எல்லா ஊரிலும் பரத்தையர்கள் பகிரங்கமாக வாழ அதே பெரிசுகள் ஒத்துக்கொள்வார்களா? இல்லை, குறைந்த பட்சம் "கட்டைவண்டியில் மட்டும்தான் பயணம் செய்வேன்" என்று வாழ்வார்களா?  டயர் வண்டி வந்த காலத்தில் கட்டைவண்டிக்காரர்களும், கட்டை வண்டிக்கு சக்கரம் செய்யும் தச்சர் மற்றும் மேல் இரும்புப்பட்டை பட்டை செய்யும் கொல்லரும் "இதெல்லாம் அழிவுக்கான அறிகுறி . டயர் வயக்காடில் போனா நல்லதா?" என்றுகூட அலுத்துக் கொண்டார்கள். ட்ராக்டரே போகும் காலம் வரவில்லையா?  கூமுட்டைகள் பேசும் கலாச்சாரம் என்பது தனக்குத் தெரிந்த வரலாற்றில் இருந்து  வசதிப்படி செலக்ட் செய்து கொள்வது.

இதுதான் டமிளனின் கலாச்சாரம் என்று ஏதேனும் ஒரு காலத்தை மட்டும் குறிக்க முடியாது. ஒவ்வொரு காலத்திலும் அந்த அந்த சூழலுக்கு ஏற்ப ஒருவித பழக்கங்கள் இருந்து இருக்கும். அடுத்து வரும் காலங்களில் அது மாறிவிடும். கண்ணகியின் பாட்டிகூட கண்ணகியிடம் "அந்தக்காலத்தில் இருந்த மாதிரியா இருக்கு? காலம் கெட்டுப்போச்சு. சூதானமா இரு புள்ள‌" என்று சொல்லி இருக்கக்கூடும். அந்தப்பாட்டிக்கு அவரின் காலம் நல்ல கலாசாரம். நமக்கு?

கலாச்சாரம் என்பது வரலாறு. மேலும் கலாச்சாரம் என்பது மற்றவர்களால் மதிப்பிடப்படும் ஒன்று. பண்பாடு, கலாச்சாரம் குறித்து விரிவாக எழுதும் போது நிறைய உரையாட வாய்ப்புண்டு.

மிழ்வலைப்பதிவை தமிழ்மணத்திற்கு முன் (த.மு) தமிழ்மணத்திற்குப் பின் (த.பி) என்று இரண்டுகாலங்களாகப் பிரிக்கலாம். எல்லாக் காலகட்டத்திலும் ஒரு வருடம் ஆனவர்கள் ஒருமாதம் ஆனவர்களைப் பார்த்து "எப்படி எழுதவேண்டும்  நாலேமுக்கால் விதிகள்" என்று சொம்பை எடுப்பது தொடரும் நிகழ்வு. 5 ஆண்டுகள் எழுதிய‌  பெரிசுகள் அனாதையாகி ரிடையராவதும் தொடரும் நிகழ்வு.

வலைப்பதிவுகளை பகிரங்கமாக சாடியவர்கள் அல்லது எப்படி எழுதவேண்டும் என்று 10 விதிகள் போட்ட பெரிசுகள் எல்லாம் இப்போது அதே பதிவர்களைக் கொண்டு கதைபுக் பிசினஸ் செய்கிறார்கள். வலைப்பதிவுகள் பெருகிய காலத்தில் "அச்சு ஊடகத்திற்கு இது இணையாகுமா?" , "இதில எழுதியெல்லாம் ஒன்னும் செய்யமுடியாது?" , "இணைய எழுத்துக்களில் இலக்கியப்புண்ணாக்கு இல்லை" என்று சலம்பிய இளக்கிய‌வியாதிகள் , வெளங்காவெட்டித்தனம் பேசிய டவுசர்கள் எல்லாம் இன்று ஆளுக்கொரு பதிவு என்று இணையத்தில் துண்டுபோட்டு எந்தவெக்கமும் இல்லாமல் வாழ்கிறார்கள்.

இது எப்படி என்றால் மாட்டுக்கறி  துன்னால் தீட்டு என்று சொல்லும் அதே அம்பிகள் , மாட்டின் தோல் பதமாக வந்தவுடன் "பேஷ் பேஷ் நன்னா இருக்கு" என்று சொல்லிக்கொண்டே மிருதங்கத்தில் வாரை இழுத்துக்கட்டுவது போன்றது. அறுவடையாகும் வரை நொள்ளை பேசிவிட்டு ஆட்டையப்போட்டுக்கொள்ளும் பார்ப்பனீயதனம். அம்பிகளும் மாமிகளும் தோல்பை , தோல் பர்ஸ், சிப்பியைக் கொன்று எடுக்கப்பட்ட முத்து (மாலை), பட்டுப்புழுவைக் கொன்று செய்யப்பட்ட பட்டுச்சேலை என்று எந்த வெக்கமும் இல்லாமல் வலம் வரும் அதே நேரத்தில் "உயிர்க்கொலை பாவம். நம்ம இருள்நீக்கு சுப்புடு சொல்ருக்கார்" என்று சொல்லித்திரிவார்கள்

கடந்த 10 ஆண்டுகளின் ஒவ்வொரு காலகட்டத்திலும், "யார் பிரபலபதிவர்?" என்று வலைப்பதிவுகளில் கலாச்சாரம் போலவே தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.  
 • இளைஞர்களால்தான் உலகம் இளமையாக இருக்கிறது.
 • எழுதுபவர்களால்தான் பதிவுகள் இயங்குகிறது.
 • ஒவ்வொருவரும் அன்றைய எழுதும் தினத்தில் புதிய பதிவர்.

நேற்றைய அடையாளங்களை குப்பையாகச் சேர்த்து முதுகில் கட்டிக்கொண்டு பிரபலபதிவர் , மூத்த பதிவர் என்று சொல்லிக்கொள்வது அல்லது அதன்பேரில் "எப்படி எழுதவேண்டும் ‍ நாலேமுக்கால் விதிகள்"  என்று சொம்பை எடுப்பது எல்லாம் இலக்கியவியாதி,எழுத்துவியாதி......என்பதுபோல அடையாளச்சிக்கல் உள்ளவர்களுக்கான பொம்மைக் கிரீடங்கள்.

நீ சொல்லும் விதிகளையே கடைபிடித்து இனிவருபவனும் எழுதினால் புதுமை எங்கே இருந்து வரும்? யாரையும் அவர்களாக இருக்கவிடுவதே நல்லது. பத்தி பத்தியாகதான் எழுத வேண்டும் என்றால் ட்விட்டர் வந்து இருக்காது. மாறுபட்ட சிந்தனைகளும் எழுதும் முறைகளும் நிறைய வரட்டும். சுவராசி**** இருக்கவேண்டும் என்ற கூத்திற்காக 10 விதிகள் டெம்பிளேட் எல்லாம் வேண்டாம்.

புதிய சிந்தனைகள் வளரவேண்டும்.


Picture courtesy
http://www.newzealand.com/travel/library

15 comments:

 1. நிச்சயம்..ஒவ்வொரு புது பதிவாளரும் அவர்தம் சொந்த நடையிலும் எந்த பதிவர் விதி (?!) க்கு ஆளாகாமல் இருந்தாலே டிரன்ட் பார்முலா போயி நல்ல ஆக்க பூர்வமான பதிவுகள் கிடைக்கலாம்..

  ReplyDelete
 2. /ஒவ்வொருவரும் அன்றைய எழுதும் தினத்தில் புதிய பதிவர்.//
  உண்மை! அருமை!

  ReplyDelete
 3. தற்போதுள்ள நடைமுறையில் கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று பேசுவது ஒரு ஃபேசனாகி விட்டது.

  ReplyDelete
 4. வலையுலகத்தில் பிரபல மற்றும் பிரபலமாகாத பதிவர் என்ற பிரிவே அபத்தமானது.
  அனுபவம் நிறைந்த பதிவர்கள் புதிய பதிவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

  ReplyDelete
 5. .

  கவிதா

  தனி காட்டு ராஜா

  ஆனந்தி

  எஸ்.கே

  இந்திரா

  வாசித்தமைக்கும் , வந்தமைக்கும் நன்றி!

  .

  ReplyDelete
 6. ஹா ஹா!

  அருமையான கருத்துகள் உள்ளடக்கிய பதிவு. மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
 7. சீரிய சிந்தனை, வரவேற்கிறேன்

  ReplyDelete
 8. நன்றாக எழுதியுள்ளீர்கள்.

  ""அந்தக்காலத்தில் இருந்த மாதிரியா இருக்கு? காலம் கெட்டுப்போச்சு. சூதானமா இரு புள்ள‌" என்று சொல்லி இருக்கக்கூடும்"

  நிச்சயமாக. ஒவ்வொரு தலைமுறையிலும் பாட்டி/தாத்தாக்கள் இப்படிச் சொல்வற்கு எவ்வளவோ இருக்கும்.

  என் வயதான காலத்தில் அந்தக்காலகட்டத்தில் இருக்கும் என்னவெல்லாம் நான் disapprove பண்ணுவேனோ? :)

  ReplyDelete
 9. நல்லா இருக்கு....... :) எந்த விதியும் காலத்தால் மாறும் என்பதே உண்மை :)

  ReplyDelete
 10. இந்தப் பதிவு நான் படிக்கல முன்னே தவற விட்டு இருக்கேன் போலவே!!

  இதெல்லாம் புரிஞ்சி விளையாட்டுக்கு வந்தா எங்கிருந்து வருது இத்தனை அடிதடியும், அடையாளச் சிக்கலும் - கத்துக்கத்தானே வந்திருக்கோம். மெதுவா வருவாய்ங்க அவனவன் கொள்ளளவிற்கு தகுந்த மாதிரி ;)

  ReplyDelete
 11. சொல்வதை மிக தெளிவாக அதே நேரம் கம்பீரமா , உறுதியா சொல்லி இருக்கிறீர்கள்... இதற்கு உங்களுக்கு ஒரு ராயல் சல்யுட்.

  //ஒவ்வொரு காலத்திலும் அந்த அந்த சூழலுக்கு ஏற்ப ஒருவித பழக்கங்கள் இருந்து இருக்கும். அடுத்து வரும் காலங்களில் அது மாறிவிடும்//

  புரிந்து கொண்டேன். நன்றி.

  //ஒவ்வொருவரும் அன்றைய எழுதும் தினத்தில் புதிய பதிவர்.//

  //நீ சொல்லும் விதிகளையே கடைபிடித்து இனிவருபவனும் எழுதினால் புதுமை எங்கே இருந்து வரும்? யாரையும் அவர்களாக இருக்கவிடுவதே நல்லது.//

  நல்ல சிந்தனை...! உண்மை.

  ReplyDelete
 12. :-) வணக்கமுங்க... நல்லாருக்கு..

  ReplyDelete
 13. அம்பிகளும் மாமிகளும் தோல்பை , தோல் பர்ஸ், சிப்பியைக் கொன்று எடுக்கப்பட்ட முத்து (மாலை), பட்டுப்புழுவைக் கொன்று செய்யப்பட்ட பட்டுச்சேலை என்று எந்த வெக்கமும் இல்லாமல் வலம் வரும் அதே நேரத்தில் "உயிர்க்கொலை பாவம். நம்ம இருள்நீக்கு சுப்புடு சொல்ருக்கார்" என்று சொல்லித்திரிவார்கள்//


  :))

  அதே

  ReplyDelete