Friday, January 28, 2011

இந்த நாட்டில் மட்டும்தான் இது நடக்கும் #tnfisherman

ரானில் உளவு வேலை பார்த்ததாக அமெரிக்கர்களை ஈரான் கைது செய்து இன்றுவரை சிறையில் வைத்துள்ளது.American Hikers in Iran Accused of Espionage. ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இருக்கும் எதிர் நிலைகளில் ஈரான் நினைத்தால் அவர்களை உடனே சுட்டுக் கொன்று இருக்கலாம். ஆனால் அப்படிச் செய்ய முடியாது. எவ்வளவுதான் பிரச்சனைகள் இருந்தாலும், அமெரிக்கர் ஒருவரை மற்ற நாடுகள் கிள்ளுக்கீரையாக நடத்தவே முடியாது. அமெரிக்கா என்ற நாடு, அதன் மக்களுக்குத் தரும் அதிபட்ச காவல் இது. எங்கிருந்தாலும் 'அமெரிக்க சிட்டிசன்' என்றால் , அவர்கள் கொலைக்குற்றம் செய்து இருந்தாலும் கிள்ளுக்கீரையாக நடத்திவிடமுடியாது.

இந்தியா என்ற நாடு அதன் குடிமக்களுக்கு தரும் மரியாதை என்பது நாயைவிடக் கேவலமானது. பீபீ லுமாடா : இந்திய தூதரகத்தின் இரக்கமற்ற கொலை !!
//ஓமன் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்தவர் பீபீ லுமாடா , இவர் இந்தியாவுக்கு திரும்பும் வழியில் தோஹா விமானநிலையத்தின் தன் இந்தியப் பாஸ்போட்டைத் தொலைத்திருக்கிறார். இதனையடுத்து அப்பெண்ணை தோஹா விமான நிலைய அதிகாரிகள் அவரை இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்காமல் மஸ்கட்டுக்கே திருப்பி அனுப்பியிருந்தனர். கடவுச் சீட்டு இல்லாததனாலும், ஒமானுக்குள் மறுபடியும் நுழைவதற்கான விசா இல்லாததாலும் இவரை விமான நிலையத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்காமல் மஸ்கட் விமான நிலையத்திலேயே வைத்து விட்டு மஸ்கட்டில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்தியத் தூதரகப் பணியாளர்களோ அப்பெண்ணை விரைவில் தொடர்பு கொள்வோம் என்று சொன்னதோடு சரி, வந்து பார்க்கவும் இல்லை ஏன் என்று கேட்கவும் இல்லை. ஐந்து நாட்களாக லுமாடா தங்கிவதற்கு அறையோ தனக்கு ஒத்துக் கொள்ளும் உணவோ இன்றி வாடிய நிலையில், அச்சம் அவரை துவட்டி எடுக்க ஆறாவது நாள் காலையில் உறங்கிய நிலையிலேயே லுமாடாவின் உயிர் பிரிந்திருந்தது. அதுவரை நேரில் வந்தோ அள் அனுப்பியோ அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்றாத இந்திய தூதர் அனில் வாத்வா  ”பாஸ்போர்ட்டைத் தொலைத்திருந்த லுமாடாவுக்கு தற்காலிக பயண ஆவணங்களை தருவதற்குள்ளாக அவர் உயிரிழந்தது வருத்தம் அளிப்பதாக ” தெரிவித்திருக்கிறார். இப்போது லுமாடாவின் உடலை பத்திராமாக அவரது சொந்தங்களிடம் சேர்க்க முயர்சிக்கிறதாம் இந்தியாத் தூதரகம். ஆமாம் இந்த இந்தியா எப்போதும் ஏழைகளின் உடலை பத்திரமாக அனுப்புவதிலேயே குறியாக இருக்கும்.//
இந்தியா வல்லரசும் இல்லை நல்லரசும் இல்லை. ஒருவகையான கார்ப்பொரேட் கழிசடை அரசாகத்தான் உள்ளது. ஊழல் மலிந்த இந்த நாட்டில் ஒரு சாமான்யனின் உயிருக்கு மதிப்பே இல்லை. அம்பானி சாகோதரர்களின் சொத்துச் சண்டைக்கு கட்டப் பஞ்சாயத்துச் செய்ய பிரதமர் முதல் எல்லா அமைச்சர்களும் கரம் சிரம் பொத்தி காவல் செய்வார்கள். ஆனால் "லுமாடா" போன்ற பெண்களுக்கு ஒன்றும் நடக்காது. ஏன் இப்படி?

மன்மோகன் என்ற இப்போதைய பிரதமர் ஒரு குமாஸ்தாவாக இருக்க இலாயக்கு. அவர் ஒரு தேர்ந்த மக்கள் தலைவர் அல்ல. எந்தவிதமான‌ தொலைநோக்குப் பார்வையும் இல்லாத , சோனியா என்ற கோங்கிரஸ் கட்சித் தலைவரின் நலன்களுக்காக உழைக்கும் ஒருவர். இந்தியா இப்படி இருப்பது சாபக்கேடு. மும்பையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் "டாஜ்" ஓட்டலில் செத்தவர்களுக்கும் , இரயில் நிலையத்தில் செத்தவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. எல்லாம் உயிர்தான். ஆனால், அரசாங்கமும் ஊடக‌ங்களும் நடந்துகொண்டவிதம், பணம் இல்லாத பகட்டில்லாத பொதுசனம் செத்தால் என்ன , டாஜ்தான் முக்கியம் என்றே இருந்தது.

எல்லைப்புற மாநிலங்கள்

அருணாசலப்பிரதேசம் போன்ற தரைவழியில் அடுத்த நாட்டைத்தொடும் மாநிலமாகட்டும் , கடல்வழியில் இலங்கைக்கு அருகில் உள்ள தமிழ்நாடு போன்ற மாநிலமாகட்டும் மத்திய அரசிற்கு எந்தவிதமான தீர்க்கமான திட்டங்களும் இல்லை. சீனாவிற்கும் ,இலங்கைக்கும் சொம்பைத்தூக்க எப்போதும் தயாராகவே இருக்கிறது இந்தியா. ஒரு நல்ல அப்பா, அம்மா இல்லாத வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு எப்படி பாதுகாப்பு இல்லையோ, அதுபோல, நல்ல மத்திய மாநில அரசுகள் இல்லாத குடிமக்களுக்கு எந்தப்பாதுகாப்பும் இல்லை.

மீனவர் பிரச்சனை:

மீனவர்களுக்கு எல்லைக்கோடுபற்றிய புரிதல் இருக்க வேண்டும் என்று சொல்லும் கிந்து  Relations between India and Sri Lanka have never been better. போன்ற முட்டாள் நாளேடுகள் அடுத்த நாட்டிற்குப் போய்விடலாம். கிந்துக் கூட்டங்கள் இலங்கை அரசால் இலங்கா ரத்னா வாங்கியவர்கள் அவர்கள் குலைத்துத்தான் ஆக வேண்டும்.

தனது குடும்பம் மற்றும் அது சார்ந்த சுயநலங்களுக்காக மட்டும் ஆட்சி நடத்தும் தற்போதைய முதல்வருக்கு மக்கள் நலம் என்பது அவரின்குடும்ப நலன் மட்டுமே. பொது மக்கள் என்பவர்கள் அவர் பார்வையில் இலவச அடிமைகள். மக்களும் அப்படிதான் உள்ளார்கள். ஒரு முதலமைச்சரை மீறீ மத்திய அரசு நடக்கவே முடியாது. இவர் நினைத்தால் ஒரு மணிநேரத்தில் மத்திய அரசை மண்டியிடச் செய்யமுடியும். ஆனால் தனது குடும்பம் சிக்கியுள்ள பல பிரச்சனைகளுக்கு அடுத்த தேர்தலில் முதல்வராக இவர் வந்தே ஆகவேண்டிய சூழலில், காங்கிரசுக்கு அடிமையாய் இருக்க முடிவெடுத்து, மீனவரின் பிணங்களின்மீது தொகுதிப்பங்கீடு நடக்கிறது. எப்படி இப்படி? ஒரு தமிழ் உணர்வாளர் கடைசிக்காலத்தில் இப்படி மாறிப்போனார்?

http://tamilmakkalkural.blogspot.com/2010/08/karunanidhi-t-shirtiam-still-life-first.html


  
ஒரு மாநிலமாகச் செய்ய வேண்டியது.
தமிழகம் ஒரு காலத்தில் இன உணர்வுடன் இருந்திருந்தாலும், தற்போதைய தமிழகம் உணர்வற்ற கூட்டங்களால் நிரம்பி உள்ளது. காசுக்கும் பதவிக்கும் மட்டுமே வாழும் தலைவர்கள், இலவசங்களை மட்டுமே பார்த்து ஓட்டுப்போடும் மக்கள். இந்த மக்கள் எதற்காகாவும் கோபப்படுவது இல்லை. எல்லாவற்றையும் சினிமா,கிரிக்கெட் என்று தின்று செரித்துவிடுகிறார்கள்.
1. கச்சத்தீவை மீட்டேயாகவேண்டும்
2. சேதுதிட்டம் நடந்தேயாகவேண்டும்
3. தமிழகத்தில் இருந்து இலங்கைத்தூதரகம் மற்றம் இலங்கை சார்ந்த எந்த அமைப்புகளும் இருக்கக்கூடாது.
4. இலங்கையுடன் ராஜாங்க உறவுகளை முறித்துக்கொள்ள மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.

மக்கள் செய்ய வேண்டியது:
1. தி.மு.க கட்சி மற்றும் அவர்கள் குடும்பம் சார்ந்த எல்லா வணிகப்பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும்.
2. இந்த தேர்தலில் நிச்சயம் தி.மு.க தோற்கடிக்கப்படவேண்டும்.
3. குறைந்தபட்சம் தொகுதியில் இருந்தே கட்சிசார்பர்று நல்லவர்களை தேர்ந்தெடுக்க முயற்சிக்க வேண்டும்.
4. கிரிக்கெட்டை முற்றிலுமாகப் புறக்கணியுங்கள். இலங்கை என்ற நாடு எதிர்ப்பைத் தாண்டி செய்ய வேண்டியது இது.ஒட்டுமொத்த இந்தியாவே இதற்கு கைதட்டுவதும் இவன்களைப் பார்ப்பதும்தான் தேசபக்தி என்ற அளவில் மந்தைக்கூட்டமாய் உள்ளது.
5. தமிழகம் தாண்டி , மற்ற மாநிலங்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்ளுங்கள். காஷ்மீர்,மணிப்பூர் கொடுமைகளுக்காகவும் குரல் கொடுங்கள். அப்போதுதான் மற்றவர்கள் உங்களுக்காக குரல் கொடுப்பார்கள்.
6.சினிமாவில் வெட்டி வசனம்பேசும் அட்டைக் கத்தி பயில்வான்களை , கூத்தாடி என்ற அளவிற்குமேல் பார்க்காதீர்கள்.
7. மீனவர் பிரச்சனைக்கு மீனவர் மட்டும் போராடுவது, விவசாயி பிரச்சனைக்கு விவசாயி மட்டும் போராடுவது, ஆசிரியர் பிரச்சனைக்கு ஆசிரியர் மட்டும் போராடுவது.... என்று இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் தோள்கொடுங்கள்.
8. சாதி, மத ,கட்சி வர்க்க பேதங்களைக் கலைந்து தமிழ் என்ற ஒரு இனமாக மட்டும் இருங்கள்.


http://www.savetnfisherman.org/

http://twitter.com/tnfishermen

http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671

#TNFisherman ட்விட்டரில் ஒரு உணர்வுத்தீ
http://allinall2010.blogspot.com/2011/01/tnfisherman.html

5 comments:

 1. தமிழகம் தாண்டி , மற்ற மாநிலங்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்ளுங்கள். காஷ்மீர்,மணிப்பூர் கொடுமைகளுக்காகவும் குரல் கொடுங்கள். அப்போதுதான் மற்றவர்கள் உங்களுக்காக குரல் கொடுப்பார்கள்.

  ReplyDelete
 2. நல்லா எழுதியிருக்கீங்க, கல்வெட்டு!

  ReplyDelete
 3. //மீனவர்களுக்கு எல்லைக்கோடுபற்றிய புரிதல் இருக்க வேண்டும் என்று சொல்லும் கிந்து Relations between India and Sri Lanka have never been better. //

  ஆம், இந்த வரிகளைப் படித்து நானும் கொதித்துப் போனேன்.

  நல்ல பதிவு, நன்றி.

  ReplyDelete
 4. குறைந்த பட்சம் கடற்கரை மாவட்டங்களில் .. சென்னை உட்பட மக்கள் இந்து வாங்வதை நிறுத்தினால்...

  தானாக .. சரியாக எழுதுவார்கள்...

  ReplyDelete
 5. கல்வெட்டாய் எழுத்துகள் கல்வெட்டு.

  ReplyDelete