Monday, June 06, 2011

சாமியார்ப் பயல்களால் சமுதாய மாற்றம் வந்ததாய் வரலாறு இல்லை.


ந்தியாவில் 99 தே முக்கால் சதவீதம் மக்கள் ஏதோ ஒரு மதக் கம்பெனியில் உறுப்பினர்களாக உள்ளார்கள். அவர்கள் அந்த மதக் கம்பெனி சொல்லும் கடவுளை நம்புபவர்கள் அதன் வழி நடப்பதாய்ச் சொல்லிக் கொள்கிற‌வர்கள்.

இந்த 99 தே முக்கால் சதவீதம் மக்கள் லஞ்சம் வாங்காமலும் கொடுக்காமலும் இருந்தால் இந்த கறுப்புப்பணப் பிரச்சனையே வந்திருக்காது.

இலஞ்சம் மதக் கம்பெனிகளில் பக்தி என்ற பெயரில் ஆரம்பிக்கிறது.

"நான் ரொம்ப நல்லவன் , அதனால எனக்குச் சேரவேண்டிய நன்மைகளை (வரம் ???) நீயே வந்து நேரில் என் வீட்டில் கொடு"....... என்று கடவுளிடம்கூட நெஞ்சை நிமிர்த்தி நேர்மையாகப் பேச முடியாத காரணத்தினால்தான் உண்டியல், காணிக்கை, புனித பயணம் போன்ற லஞ்ச லாவண்யங்கள் மதக் கம்பெனிகளில் நடக்கிறது. அவரும் அச்வர்யாராய் வந்தால் சிறப்பு தரிசனம் கொடுக்கிறார்.
பாவம் பாபா .
ஏற்கனவே யோகாவால் நோய் குணமாகும் என்று ஜல்லியடித்து அன்புமணியால் அசிங்கப்பட்டவர் இன்று இப்படி. Ramadoss rubbishes yoga guru Ramdev's claims

உங்க கூட்டம் யோக்கியமாய் இருந்தாலே நாட்டில் பாதி இலஞ்ச லாவண்யம் குறையும் பாபா .

சின்னச் சின்ன செயல்கள் செய்யலாம். ட்ராபிக்கை மதித்தல். ரோட்டில் குப்பை போடாமை. சினிமாவிற்கு பிளாக்கில் டிக்கெட் வாங்காமை போன்றவை....

பாபா ராம்தேவின் உண்ணாவிரதம்: காமெடியா, அழுகாச்சி காவியமா?
http://www.vinavu.com/2011/06/06/ramdev-retches/
.
Thanks to http://freedigitalphotos.net
.