Tuesday, December 20, 2011

ட்வீட்டர் குருவி இனி என்ன செய்யும்?

image courtesy cnn.com
கே ப்டன் ஜி. ஆர். கோபிநாத் ஆரம்பித்த, டெக்கான் விமானப் போக்குவரத்து , அவரின் கனவுத்திட்டமான ( A dream inspired by just one statement. “I want every Indian to fly at least once in his/ her lifetime.” ) குறைந்த செலவில் விமானப் போக்குவரத்து என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. அது பொதுச்சந்தைக்கு வந்தபின்னால்,  சராயாவியாபாரி மல்லையா அவர்களால் ஆட்கொள்ளப்பட்டது. அதன் பிறகு அது ஜிம்பிளிக்கா ஜிங்கா என்று , கிரிக்கெட், சாராயம் வகையறாவுடன் சேர்ந்து பத்தோடு பதினொன்றாகி த‌னித்தன்மையை இழந்து மல்லையாத்தனமாகிவிட்டது.  மல்லையா அவர்கள் ஐடி கம்பெனி ஆரம்பித்தால் ஆண்களுக்கு வேலை கிடைக்குமா என்று தெரியாது. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் கொடுத்து (மல்லையாவிற்கு கொடுத்து) சேர கூட்டம் வந்தாலும் வரும். என்ன மாதிரியான தொழில் அதிபரோ இவர்?

எந்த ஒரு நிறுவனமும் ஏதோ ஒருவரின் கனவினால் ஆரம்பிக்கப்படுகிறது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் ஆரம்பிக்கப்படும் வட்டிக்கடை வகையறாக்களை ஒதுக்கிவிடவேண்டும். பணம் வருகிறது என்றால் முதலீட்டாளர்கள் ****னம் செய்து பொருளீட்டும் தொழிலில்கூட முதலீடு செய்வார்கள்.  அவர்களின் நோக்கம் பணம் செய்வது. எப்படிப் பணம் செய்யப்படுகிறது என்பது அல்ல.  இந்த அறத்தின் நீள, அகலங்கள் ஊருக்கு ஊரு மாறுபடும்.  Las Vegas சூதாட்ட கிளப்பின் பங்கு, ஏதோ ஒரு மாமியின் போர்ட்போலியோவில் இருந்தாலும் மாமிக்கு பிரச்சனை இல்லை. அது கெளரவமான முதலீடு. ஆனால், கொண்டையம்பட்டியில் மூணுசீட்டில் வயித்துப்பிழைப்பை ஓட்டும் ரங்குவை, போலிஸ் நையப்புடைத்துவிடும்.

மிகவும் என்னை பாதித்த ஒரு செய்தி ட்வீட்டர் சம்பந்தமானது.  ட்வீட்டரில் செளதி இளவரசர் 300 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளார். இத்தனைக்கும் அது இன்னும் பொதுச்சந்தைக்கு வரவில்லை. ட்வீட்டரின் ஆரம்பகால பங்குதாரர்களிடம் இருந்து இவருக்கு போய் உள்ளது.

Should Twitter fear Saudi prince?
http://www.cnn.com/2011/12/20/opinion/rushkoff-saudi-prince-twitter/index.html?hpt=hp_c3

இணைய உலகில் செளதியின் சென்சார் வேலைகள் உலகம் அறியும். சமீபத்தில் தமிழ்மணம் என்னும் திரட்டியையே சிலரால தடை செய்யமுடிந்தது. அதுதவிர, செளதியின் இறைக்கோட்பாடுகள், இறையச்சம் எல்லாம் உலகம் அறிந்ததே.
ட்வீட்டரில் மும்மது நபி பற்றி அவதூறு செய்து வந்தால், இளவரசர் என்ன செய்வார்?
ஒருவேளை அவருக்கு தெரியாமலேயே இருந்தாலும், மெக்கா புண்ணியபூமி இளவரசரின் பணம், அதே மெக்காவைத் தவறாகச் சொல்ல பயன்பட்டால், கடவுள் எப்படி எடுத்துக்கொள்வார்? 
 சமீப காலத்தில் நடந்த எகிப்து போராட்டங்களில் முக்கியப்பங்கு வகித்தது Twitter. இஸ்லாம் நாடுகளுக்கு எதிராக , இனிமேல் அப்படி ஒரு விசயம் Twitter ல் நடக்கப்போவது இல்லை. அப்படி நடந்தால் இளவரசர் என்ன செய்வார்?
பணமுதலைகளின் முடிவுகளுக்கு  முன்னால் சாதாரணப் பயனாளர்கள் ஒன்றும் செய்துவிடமுடியாது.  விக்கிலீக்கை முடக்க வைத்த அதிகாரமும், பணமும் அதிகார சாம்ராஜ்யங்களும், இணையத்தில் தகவல் பரப்பும் Blogger, Twitter , Facebook பேஸ்புக் போன்றவைகள் சிறைப்படுத்தினால் , சங்கெடுத்து முழங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

இவர் கூகிளில் இவர் முதலீடு செய்துள்ளாரா? ப்ளாக்கருக்கு ஆப்புவராமல் இருக்க வேண்டும்.

கேப்டன் கோபிநாத்தின் நிறுவனம் போல , ட்வீட்டரும் வருங்காலத்தில் ஊத்திக்கொள்ள‌ வாய்ப்பு உள்ளது.  Google Buzz போன நிலையில், Twitter ம் இப்படி அரசர்களின் கையில் போகும் நிலையில்,  இணையப் பொதுவெளி என்ற‌ சொல் அர்த்தமிழக்க வாய்ப்புள்ளது.

.