Monday, September 17, 2012

Innocence of Muslims திரைப்படம் சில எண்ணங்கள்

1.அமெரிக்காவில் திரைப்பட தணிக்கை என்பது அரசாங்கத்தால் செய்யப்படுவது அல்ல. அது ஒரு தனியார் அமைப்பு. திரைப்பட தயாரிப்பாளர்கள் ,தயாரிப்பு அரங்க உரிமையாளர்கள் என்ற பலர் சேர்ந்த கூட்டமைப்பு.
http://www.mpaa.org

2.ஒரு படம் நல்ல படமா அல்லது கெட்ட படமா என்று சொல்வது அவர்கள் வேலை அல்ல. ஆனால் அது எந்த வயது பார்வையாளர்களுக்கானது என்ற ஒன்றைச் சொல்லும் அமைப்பு.

3.அமெரிக்க காங்கிரஸ் சபை மற்றும் ஜனாதிபதி இதில் தலையிடமுடியாது. அமெரிக்க அரசின் திட்டங்கள் மற்றும் வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்களை கடுமையாக விமர்சித்து பல ஆவணப்படங்கள் இதே அமெரிக்காவில் வருகிறது. Michael Moore ன் படங்கள் ஒரு எடுத்துக்காட்டு. பேச்சு சுதந்திரம் உள்ள அமெரிக்காவில் இவை எல்லாம் தடை செய்ய இயலாதது.

4.இதன் காரணத்தாலேயே கூகுள் இன்னும் திரைப்பட முன்னோட்டத்தை அவர்களின் இணையத்தில் இருந்து எடுக்க முடியாது என்று அமெரிக்க அரசாங்கத்திற்கு சொல்லிவிட்டது. (வேண்டும் என்றால், கூகுளுடனான தொடர்பை அல்லது தேவைப்பட்டவர்கள் துண்டித்துக் கொள்ளலாம். அது ஒரு எதிர்ப்பாக இருக்கும்)

5.எனவே அமெரிக்க தூதரகங்களை தாக்குவது ஒரு அடையாள  எதிர்ப்பாக , உணர்விற்கு வடிகாலாக இருக்கலாமேதவிர , திருமா போல " ஒபாமா மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று சொல்வது எல்லாம் என்ன புரிதலில் என்று தெரியவில்லை.
http://tamil.oneindia.in/news/2012/09/17/tamilnadu-ban-the-controversial-anti-islam-movie-thirumavalavan-161612.html

படம் குறித்து
7.இந்தப்படம் ஆலன் இராபர்ட் என்பவரால் இயக்கப்பட்டாலும் அவரும் இதில் நடித்த மற்றவர்களும் , தயாரிப்பாளரின் சூழ்ச்சிக்குப் பழியானவர்கள் என்றே சொல்லி வருகிறார்கள்.

8.அமெரிக்காவில் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே இது திரையிடப்பட்டுள்ளது "Vine Theater, Hollywood CA.  அதுவும் 10 பேர் மட்டுமே முதல் காட்சிக்கு வந்துள்ளதாகச் செய்தி. அந்த ஒரு காட்சியைத் தவிர இதுவரை இது அமெரிக்காவில் எங்கும் திரையிடப்படவில்லை.

9.படத்தை தயாரித்த Sam Bacile என்பவர் வங்கி தொடர்பான குற்றங்களுக்காக சிறைதண்டனை பெற்றவர்.

மதங்களும் வன்முறையும்

குஜராத் இரயில் எரிப்பு, பாபர் மசூதி இடிப்பு, ஒரிசாவில் பாதிரி எரிப்பு என்று பல சம்பவங்கள் மட்டும் அல்லாமல் “War of the Cross,” or Crusade,
என்பவைகள்கூட மதத்தொடர்பு சண்டைகளே. இது அந்த அட்டவணையில் மற்ற ஒன்று.

எந்த மதமும் மற்ற ஒரு மதத்தின் இருப்பை அங்கீகரிக்காது.
மதங்களும் அதைப் பின்பற்றுபவர்களும் ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்வார்களே தவிர ஒரு போதும் "நான் நம்பும் கடவுள், நான் படிக்கும் மதப்புத்தகம்,  நான் நம்பும் தூதுவரைப் போல , உனது கடவுளும் , உனது தூதுவரும், உனது மதப்புத்தகமும் உயர்வானதே" என்று சொல்லாது.

யாரிடம் அதிக மக்கள் உள்ளார்கள் , யார் சொர்க்கத்திற்கு வழிகாட்டுவார்கள் யார் அக்மார்க் நல்லவர்கள் என்பதில் உள்ள போட்டியானது, தனியார் நிறுவன தொழிற்போட்டியைவிட அதிக வன்மம் கொண்டது.

One religion may tolerate the existence of other religion but never agree that all religion has equal value like the one they practice. If they believe so why they promote conversion from one to other?

மதங்கள் அற்ற உலகு என்பது பகல்கனவு என்றாலும், மதங்களைப் புரிந்துகொண்டு அதையும் தாண்டி பயணப்பட கற்றுக்கொள்ள வேண்டும். இந்த உலகத்தை அறிவியல் பார்வையாலும் , மனிதத்தை அன்பாலும் பார்க்க கற்றுக்கொள்வது அவசியம்.

லிபியா நாட்டில் அமெரிக்க தூதரகத்தில் இறந்த நால்வருக்கு எனது அஞ்சலி. நம்பிக்கைகள் மற்றும் அரசியல்சார்பு என்று எல்லாவற்றையும் தாண்டி மதத்தின் பெயரால் மனிதர்கள் கொல்லப்படுவது கடவுளுக்கே பிடிக்காது என்றே நினைக்கிறேன்.

7 comments:

 1. நல்ல சிந்தனை.மனிதன் தன் சக உயிரை விட மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது வேடிக்கையான உண்மை.

  மதங்கள் மனிதனை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தான் தோன்றியிருக்க வேண்டும்.ஆனால் அதன் தற்போதைய நிலை....
  //மதங்களைப் புரிந்துகொண்டு அதையும் தாண்டி பயணப்பட கற்றுக்கொள்ள வேண்டும்//

  ReplyDelete
 2. நல்ல பதிவு சகோ,

  எனக்கென்னவோ படம் எடுத்தவர் இதை எதிர்பார்க்காமலா இருந்திருப்பார்? அவரின் நோக்கம் நிறைவேறிவிட்டதாகவே கருதுகிறேன்.

  இனியவன்...

  ReplyDelete
 3. உங்கள் கருத்துகளை முற்று முழுதாக வழிமொழிகின்றேன். படம் எடுத்த கிறீஸ்தவப் பாதிரியார், படத்தால் என்ன நடக்கும் என்று எதிர்பார்த்தாரோ அதுவே நடக்கிறதென நினைக்கிறேன். He is a fanatical Christian. இவரும் இதற்கு முதல் இதே reaction ஜ எதிர்பார்த்து குரானை எரித்த பாதிரியாரும் ஒரே வகையே. ஆனாலும் என்னதான் பிழையாகப் படம் எடுத்தாலும் அதற்காக வன்முறையின்றிப் போரட்டாம் நடத்திருக்கலாம். அமெரிக்க அரசாங்கம் என்னவாவது செய்ய முடிந்தாலும் கூட இத்தூதரகங்களில் வேலை செய்பவர்களுக்கும் அதற்குமோ இப்படத்தை எடுத்ததற்குமோ எந்த வித நேரடித் தொடர்பும் இல்லை. ஏன் மனிதரை சித்திரவதை செய்வதற்கு முன் சிந்திப்பதில்லையோ தெரியாது.

  நாம் வன்முறைக்கு மிகவும் பழக்கப்பட்டுக் கொண்டு வருகின்றோமோ எனப் பயமாக உள்ளது.நான் வாசித்த இன்னொரு விடயம். இன்னொரு தளத்தில் இவ்வாறு நபியை அவமானப்படுத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றதற்கு ஒருவர் " அப்போ 6 பேர் கொலை செய்யப்பட்டதையும் ஒருவர் (அமெரிக்கத் தூதர்) பாலியல் வன்புணர்வுக்குட்பட்டதையும் பற்றி உங்கள் கருத்து என்பதற்கு, shouldn't the first reactions be to oppose the acts strongly and to show empathy to the victims? ஆனால் அதற்குப் பதிலாக, " 6 பேரா, 4 பேர் தான் சரியா வாசியுங்கோ + பாலியல் வன்புணர்வுக்குட்பட்டது அமெரிக்கத் தூதுவர் என எங்கு சொல்லப்பட்டுள்ளது? லிங்க் தர முடியுமா?" உண்மையில் இந்தப் பதில் சொன்னவரின் மனதில் என்ன ஓடியதோ தெரியவில்லை. Is killing 4 people somehow BETTER than killing 6 people? or would the rape crime be any less of a crime if it had happened to a civilian? The answer to both questions should be a definite NO. ARGHHHHH!

  ReplyDelete
 4. நான் பிறந்தது ஒரு இந்து குடும்பத்தில், ஒரு காலத்தில் விழுந்து விழுந்து சாமி கும்பிட்டேன், பின்னர்தான் தெளிவு பிறந்தது. கண்ணால் கானாத கடவுளுக்காக இவர்களெல்லாம் கண்ணெதிரே இருக்கும் சக மனிதனை நேசிக்கத் தவறுவது வேடிக்கை. இங்கு நான் ஆத்திக, நாத்திக விவாதங்களுக்குள் நுழையத் தலைப்படவில்லை. அவரவர் நம்பிக்கைகள் அதை மதிக்காவிடனும், மிதிக்க வேண்டாமே. என் தாய் உயர்ந்தவள் எனும் போக்கு தவறு. எல்லா தாயும் போற்றத்தக்கவளே, எல்லா மதங்களும் அது சார்ந்த நம்பிக்கைகளும் மதிக்கப்படவேண்டியவையே. நமக்கு எல்லா ismமும் தெரியும் மாமியாரிஸம் என்ற ஒன்று வழி வழியாய் பின்பற்றப்பட்டு வருகிறது. மாமியாரிஸம் என்றால் மாப்பிள்ளை பெண்ணின் பேச்சை கேட்க வேண்டும் ஆனால் பையன் மருமகள் பேச்சை கேட்க்க் கூடாது. புரிந்ததா?!? எல்லோருமே மன மாற்றத்திறகான வழியில் பயணிக்கலாமே....
  --- பானு பிரான்ஸிஸ்

  ReplyDelete