Monday, September 17, 2012

Innocence of Muslims திரைப்படம் சில எண்ணங்கள்

1.அமெரிக்காவில் திரைப்பட தணிக்கை என்பது அரசாங்கத்தால் செய்யப்படுவது அல்ல. அது ஒரு தனியார் அமைப்பு. திரைப்பட தயாரிப்பாளர்கள் ,தயாரிப்பு அரங்க உரிமையாளர்கள் என்ற பலர் சேர்ந்த கூட்டமைப்பு.
http://www.mpaa.org

2.ஒரு படம் நல்ல படமா அல்லது கெட்ட படமா என்று சொல்வது அவர்கள் வேலை அல்ல. ஆனால் அது எந்த வயது பார்வையாளர்களுக்கானது என்ற ஒன்றைச் சொல்லும் அமைப்பு.

3.அமெரிக்க காங்கிரஸ் சபை மற்றும் ஜனாதிபதி இதில் தலையிடமுடியாது. அமெரிக்க அரசின் திட்டங்கள் மற்றும் வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்களை கடுமையாக விமர்சித்து பல ஆவணப்படங்கள் இதே அமெரிக்காவில் வருகிறது. Michael Moore ன் படங்கள் ஒரு எடுத்துக்காட்டு. பேச்சு சுதந்திரம் உள்ள அமெரிக்காவில் இவை எல்லாம் தடை செய்ய இயலாதது.

4.இதன் காரணத்தாலேயே கூகுள் இன்னும் திரைப்பட முன்னோட்டத்தை அவர்களின் இணையத்தில் இருந்து எடுக்க முடியாது என்று அமெரிக்க அரசாங்கத்திற்கு சொல்லிவிட்டது. (வேண்டும் என்றால், கூகுளுடனான தொடர்பை அல்லது தேவைப்பட்டவர்கள் துண்டித்துக் கொள்ளலாம். அது ஒரு எதிர்ப்பாக இருக்கும்)

5.எனவே அமெரிக்க தூதரகங்களை தாக்குவது ஒரு அடையாள  எதிர்ப்பாக , உணர்விற்கு வடிகாலாக இருக்கலாமேதவிர , திருமா போல " ஒபாமா மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று சொல்வது எல்லாம் என்ன புரிதலில் என்று தெரியவில்லை.
http://tamil.oneindia.in/news/2012/09/17/tamilnadu-ban-the-controversial-anti-islam-movie-thirumavalavan-161612.html

படம் குறித்து
7.இந்தப்படம் ஆலன் இராபர்ட் என்பவரால் இயக்கப்பட்டாலும் அவரும் இதில் நடித்த மற்றவர்களும் , தயாரிப்பாளரின் சூழ்ச்சிக்குப் பழியானவர்கள் என்றே சொல்லி வருகிறார்கள்.

8.அமெரிக்காவில் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே இது திரையிடப்பட்டுள்ளது "Vine Theater, Hollywood CA.  அதுவும் 10 பேர் மட்டுமே முதல் காட்சிக்கு வந்துள்ளதாகச் செய்தி. அந்த ஒரு காட்சியைத் தவிர இதுவரை இது அமெரிக்காவில் எங்கும் திரையிடப்படவில்லை.

9.படத்தை தயாரித்த Sam Bacile என்பவர் வங்கி தொடர்பான குற்றங்களுக்காக சிறைதண்டனை பெற்றவர்.

மதங்களும் வன்முறையும்

குஜராத் இரயில் எரிப்பு, பாபர் மசூதி இடிப்பு, ஒரிசாவில் பாதிரி எரிப்பு என்று பல சம்பவங்கள் மட்டும் அல்லாமல் “War of the Cross,” or Crusade,
என்பவைகள்கூட மதத்தொடர்பு சண்டைகளே. இது அந்த அட்டவணையில் மற்ற ஒன்று.

எந்த மதமும் மற்ற ஒரு மதத்தின் இருப்பை அங்கீகரிக்காது.
மதங்களும் அதைப் பின்பற்றுபவர்களும் ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்வார்களே தவிர ஒரு போதும் "நான் நம்பும் கடவுள், நான் படிக்கும் மதப்புத்தகம்,  நான் நம்பும் தூதுவரைப் போல , உனது கடவுளும் , உனது தூதுவரும், உனது மதப்புத்தகமும் உயர்வானதே" என்று சொல்லாது.

யாரிடம் அதிக மக்கள் உள்ளார்கள் , யார் சொர்க்கத்திற்கு வழிகாட்டுவார்கள் யார் அக்மார்க் நல்லவர்கள் என்பதில் உள்ள போட்டியானது, தனியார் நிறுவன தொழிற்போட்டியைவிட அதிக வன்மம் கொண்டது.

One religion may tolerate the existence of other religion but never agree that all religion has equal value like the one they practice. If they believe so why they promote conversion from one to other?

மதங்கள் அற்ற உலகு என்பது பகல்கனவு என்றாலும், மதங்களைப் புரிந்துகொண்டு அதையும் தாண்டி பயணப்பட கற்றுக்கொள்ள வேண்டும். இந்த உலகத்தை அறிவியல் பார்வையாலும் , மனிதத்தை அன்பாலும் பார்க்க கற்றுக்கொள்வது அவசியம்.

லிபியா நாட்டில் அமெரிக்க தூதரகத்தில் இறந்த நால்வருக்கு எனது அஞ்சலி. நம்பிக்கைகள் மற்றும் அரசியல்சார்பு என்று எல்லாவற்றையும் தாண்டி மதத்தின் பெயரால் மனிதர்கள் கொல்லப்படுவது கடவுளுக்கே பிடிக்காது என்றே நினைக்கிறேன்.