பொது இடங்களில் அதாவது கற்றோர் (பெத்தப்படிப்பு படித்து அதன்மூலம் காசு சம்பாதிப்பவர்கள் என்று கொள்க) கூடியிருக்கும் இடங்கள் அல்லது ஏட்டுச் சுரைக்காய் மட்டும் புசித்து மூளைவீங்கிகள் இருக்கும் இடங்கள் போன்றவற்றில் முடிந்த அளவு மிக்சரை வாயில் திணித்துக்கொண்டு பராக்கு பார்த்துக்கொண்டு இருப்பதுபோல நேரத்தை ஓட்டிவிடுவேன். ஆனாலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் இப்படியான பொது இடங்களில் சில உண்மைகளைப் பேசவேண்டியதாகிவிடுகிறது. ஆம் இங்கே உண்மை என்பது நான் பட்டறிந்த உண்மைகள். அய்யோ பாவம், அந்த வாய்ப்பு உங்களுக்கு இல்லை என்றால் அது உங்களுக்கான உண்மையல்ல. ஏதாவது கதை பொக் படித்து செட்டிலாகிவிடுங்கள். உண்மை என்பது பக்கச் சார்பானதுதான். எனது உண்மையும் உங்களுடைய உண்மையும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ் நாட்டு அரசியல் வகைப்பேச்சுகள் ஏதாவது நடந்தால் பலர் எடுத்த எடுப்பிலேயே திமுக தலைமையைத் திட்டுவது என்பதை சம்பிரதாயமாக கொண்டுள்ளார்கள். இட ஒதுக்கீட்டை ஆதரித்தும் கிந்தியை எதிர்த்தும் கருணாநிதி அவர்கள் செய்த செயல்களால்தான் தமிழ்நாடு இப்படியாகிவிட்டது என்று பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். பல நேரம் பொத்திக்கொண்டு இருந்தாலும் சிலநேரங்களில் பத்திக்கொண்டுவிடுகிறது. நான் எந்த அரசியல் கட்சியின் அடிமைகிடையாது இருந்தாலும் இட ஒதுக்கீட்டு என்ற விசயத்தில் எனக்கான சில நிலைப்பாடுகள் உண்டு.
இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழ்நாட்டில் கல்வி பெற்று (கற்று) அம்பேரிக்காவிற்கு வந்து பெரிய சம்பளம் கொடுக்கும் வேலைகளில் இருக்கும் கணவான்கள் எல்லாம் இட ஒதுக்கீட்டை இன்று எதிர்க்கிறார்கள். ஆனால் அதே சமயம் அவர்களே சாதி இருக்க வேண்டும் என்றும் கொடிபிடிக்கிறார்கள். அப்படியான ஒரு உரையாடலில் சினிமா, அரசியல், இட ஒதுக்கீடு , கற்பு கருமாதி என்று தமிழர்களின் கிப்போகிரேட் மனநிலையை கோடிட்டுக்காட்டினேன். சில எதிரிகளை உருவாக்கி இருக்கக்கூடும் இருந்தாலும் சிலவற்றைச் சொல்வதில் தயக்கம் இருக்கக்கூடாது என்று இன்றும் நம்புகிறேன்.
இம்சை அரசன் அவர்களை நாட்டுக்கு தாரைவார்த்த இந்த உலகில் இருக்கும் ஒரே புண்ணிய பூமியான குசராத்தில் இன்று நடக்கும் இட ஒதுக்கீட்டு ஒலங்கள் பல "ராம பக்தர்களை" ஆச்சர்யப்படுத்தி உளளது. ஆம் இன்று இட ஒதுக்கீடு கேட்பவர்கள் எல்லாம் "கடவுள் இராமன் அவர்களின் நேரடி வாரிசு வழி பரம்பரையாளர்கள்".
http://indianexpress.com/article/india/india-others/hardik-patel-leads-obc-quota-protests-here-are-his-top-10-quotes/
// We are the descendants of Lord Ram… we are the descendants of Sardar Patel. //
மண்டல் கமிசன் காலங்களில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கொடிபிடித்த இந்த "கடவுள் இராமனின் பரம்பரையினர்" இன்று மகாபாரதம் படித்து ஞானியாகிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். இந்த சந்தில் , சிலர் கோட்டா என்றால் அறிவு கம்மி என்றும் சிந்து பாட ஆரம்பித்துவிட்டார்கள்.
Coming full circle on reservations: Here's why Patels' OBC status demand should worry India
http://www.firstpost.com/politics/coming-full-circle-on-reservations-patels-demand-for-obc-status-should-worry-india-2407116.html
பேசிப் பேசி அலுத்துப்போன விசயம் இருந்தாலும் பொணமாகும்வரை காலாட்டிக்கொண்டு இல்லாவிட்டால் இந்த அறிவாளிகள் நம்மையும் மிதித்துவிடுவார்கள் என்பதால் பழைய நினைவுகள்.
இட ஒதுக்கீடு பொருளாதர சமநிலைக்கல்ல
http://kalvetu.balloonmama.net/2012/12/blog-post.html
இட ஒதுக்கீடு: நாய்கள்தான் அப்படி நாமளுமா?
http://kalvetu.balloonmama.net/2006/05/blog-post_23.html
ஏன் வேண்டும் இடஒதுக்கீடு - கட்டுரைகளின் தொகுப்பு (குழலி)
http://kuzhali.blogspot.com/2007/03/blog-post_30.html
.
Picture courtesy: http://www.marieclaire.co.uk/